Advertisement

மாலினி ஏதோ சொல்லவரவும் ஸ்ரீராமன் அவசரமாக, “காலேஜில் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்னை உன் பிரெண்ட் டா…………..”
“**********” மாலினி எண்னை சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நந்தினியுடன் சென்றாள்.
ஸ்ரீராமன் விண்ணைத் தொட்ட உணர்வுடன் குதித்துக் கொண்டு சென்றான்.
ஸ்ரீராமன் சந்தோசத்தின் உச்சியில் வருவதை பார்த்த சிவகுருவுக்கும் ராஜசேகருக்கும் கடுப்பும் கோபமும் வந்தது. இருவரும் அவனை முறைத்துக் கொண்டு நிற்க, அவர்களை பார்த்த ஸ்ரீராமன் கர்வத்துடன் அவர்களை நோக்கி சென்றான்.
தன் கைபேசியை ஒரு நொடி அவர்களிடம் காட்டினான், “இது யாரு நம்பர் தெரியுமா? மாலினி நம்பர்”
சிவகுருவும் ராஜசேகரும் சிறு அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
ஸ்ரீராமன், “இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி! நம்பர் குடுத்ததே என் மாலு தான்” என்று சிரித்தான்.  
அவன் சொன்ன செய்தியை விட அவன் ‘என் மாலு’ என்று சொன்னது தான் ராஜசேகரால் ஜீரணிக்க முடியவில்லை. சிவகுரு ராஜசேகரின் கையை அழுத்தமாக பிடித்து அவனது கோபத்தை குறைக்க முயற்சித்து, ஸ்ரீராமனிடம் நக்கலாக, “பார்த்து டா இப்படி சொல்லி திரிந்த அந்த சீனியர் கிருஷ்ணன் நிலைமை உனக்கும் வந்துற போகுது” 
ஸ்ரீராமன் மனம் சிறிது பயத்தில் கலங்கியது, அதை மறைத்து, “போடா.. உனக்கு பொறாமை”
சிவகுரு நக்கலாக சிரிக்கவும், ஸ்ரீராமன், “பொறாமை தான்.. ரெண்டு வருஷம் ஒன்னா ஸ்கூல் ல படிச்சும் அவ நம்பர் உனக்கு தெரியாது.. பட் எனக்கு இவளோ சீக்கிரம் குடுதுட்டாளே னு பொறாமை”
ராஜசேகர், “குரு அவனை போக சொல்லு”
ஸ்ரீராமன், “என்னடா உடம்பெல்லாம் பொறாமையில் எரியுதா.. ஐயோ ஐயோ” என்று பலமாக சிரித்தான். 
ராஜசேகர், “சிஸ்டரை கேவல படுத்தாத.. இன்னொரு தடவ ‘என் மாலு’ னு சொன்ன!” என்று மிரட்ட, 
ஸ்ரீராமன், “என்னடா செய்வ.. அவ என் மாலு தான்..”
ரஜெசெகர், “டேய்…”
ஸ்ரீராமன், “நிறுத்துடா.. நீ சிஸ்டர் னு சொல்லி சிரிச்சு பேசுறதெல்லாம் பின்னாடி  அவளுக்கு ரூட் விட தானே! நீ……………” பொறுக்கமுடியாமல் சிவகுரு ராஜசேகரின் கையை விட்டுவிட்டான், அடுத்த நொடி அது ஸ்ரீராமனை தாக்கியது. அதை சற்றும் எதிர்பார்த்திராத ஸ்ரீராமன் தரையில் விழுந்தான். 
ஸ்ரீராமன், “போடா.. என் மாலு ஒன்னும் பசங்களை ஏத்தி விட்டு சுகம் காணும் ஜெனிஷா இல்லை.. என் மாலு…………..” அவன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ராஜசேகர் வாயிலேயே ஒரு குத்து விட்டான். நாலு உதய் உதைத்தான். ராஜசேகரின் கோபத்தை பார்த்த சிவகுருவே அரண்டு போனான். ராஜசேகரின் கண்ணில் கொலைவெறி தெரியவும் கஷ்டப்பட்டு அவனை இழுத்துக் கொண்டு இடத்தை விட்டு அகன்றான்.
ஸ்ரீராமன் போராடி தள்ளாடியபடி எழுந்தான். கஷ்டப்பட்டு தன் மிதிவண்டியை உருட்டிக் கொண்டு சென்றான்.
கேன்டீனில் நந்தினி, “மாலு………..”
மாலினி புன்னகையுடன், “எனக்கும் அவனை பற்றி தெரியும் நந்து”
“இல்லை நான் எதுக்கு சொல்…………..”
“அவனை டீல் பண்ண எனக்கு தெரியும், நீ…………………..”
“என்ன இருந்தாலும் ஒரு பையன் கேட்டதும் நம்பர் குடுத்தது தப்பு”
“நான் குடுத்த…………(மாலினி அவசரமாக பேச்சை நிறுத்தி) பிருந்தா, மோகனா, ஆர்லி வராங்க.. இதை பேச வேண்டாம்.. முக்கியமா பிருந்தா கிட்ட இதை  பத்தி  மூச்சுவிடாதே”
நந்தினி ஆச்சரியமாக மாலினியை பார்க்கவும், மாலினி, “ப்ளீஸ் நந்து.. நான் போனில் விவரமா சொல்றேன்”
பிருந்தா, ஆர்லி, மோகனா வந்து அமர்ந்தனர். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நேரம் கழிந்தது. ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு சிந்தனை. எப்பொழுதும் கேன்டீன் வந்ததும் சிற்றுண்டிகளை வெளுத்துக் கட்டும் பிருந்தா ஏதும் வேண்டாம் என்றாள். மாலினியை தவிர மற்றவர்களிடம் ஏதோ பேசினாள். நந்தி பிருந்தாவையும் மாலினியையும் கவனித்துக் கொண்டே இருந்தாள். அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று யூகித்தாள், ஸ்ரீராம் விஷயமாக பிரச்சனையோ என்று யோசித்தாள் ஆனால் என்ன பிரச்சனை என்று சரியாக விளங்கவில்லை.
மோகனாவோ பயம் கலந்த பெரும் குழப்பத்தில் இருந்தாள். ஆர்லி மோகனாவின் செயல்களையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
மாலினி H.O.Dயின் நோக்கமென்ன? ஸ்ரீராமனை எப்படி சமாளிப்பது? செல்வராஜை எப்படி சமாளிப்பது? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 
என்னதான் மாலினியின் மனம் தன் பிரச்சனையில் சுழன்றாலும் மோகனாவின் அமைதியை கவனிக்க தவறவில்லை.
மாலினி, “என்ன மோனி அமைதியா இருக்க?”
மோகனா திருதிருவென்று முழிக்கவும் மாலினிக்கு மதிய இடைவெளியில் மோகனா எதற்கோ பயந்தாளே என்று நினைவிற்கு வரவும், “என்ன மோனி.. என்னாச்சு?” என்று வினவினாள்.
மாலினியின் கரிசனத்தில் மோகனாவின் கண்கள் லேசாக கலங்க ஆர்லி அவசரமாக, “தலை வலிக்குதுன்னு சொன்னா மாலு” என்றாள்.
மாலினி “என்னாச்சு  மோனி?” என்று கேட்டபடியே, மோகனாவின் தலையில் கைவைத்து பார்க்க லேசாக ஜுரம் இருப்பது போல் இருந்தது.
மாலினி, “பிவர் இருக்கிறது போல் இருக்கே..” என்று சிறிது யோசித்தவள் நந்தினி பக்கம் திரும்ப, நந்தினி, “நான் மோனியை ட்ராப் பண்ணிடுறேன்.. பிருந்து……………..”
பிருந்தா, “நான் பஸ்ஸில்  போய்க்கிறேன்” என்றாள்.
மாலினி, நந்தினி மற்றும் பிருந்தா மனதில் எழுந்த கேள்விகளை மறந்து மோகனாவின் உடல்நிலையை பற்றி யோசிக்க, ஆர்லியோ மோகனாவின் ஜுரத்திற்கு தான் தான் காரணம் என்ற சிறு குற்றஉணர்ச்சியுமின்றி, ‘அப்ப்பா மோனி மாலினி கிட்ட இப்பதைக்கு உளற மாட்டா.. இந்த பிவர் இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்து காலேஜுக்கு வரலைனா இன்னும் நல்லா இருக்கும்’ என்று சுயநலமாக நினைத்தாள்.
H.O.D அறை-
சைக்கோ, ரவி சார், ஜிண்டா, பிரகாஷ் சார்,  இன்னும் சில  ஆசிரியர்கள்  தீவிர  யோசனையில் இருந்தனர்.
ரவி சார், “என்ன சார் இந்த பொடி பசங்களிடம் தோற்பதா?”
சைக்கோ, “அப்படி  இல்லை  ரவி.. நமக்கு எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை.. கொஞ்ச  நாள் ஆற போடுவோம்……………”
ரவி சார், “சார்.. ஆற போட்டா.. போட்டது தான்…”
ரத்னவேல், “ரவி சொல்றது  கரெக்ட்  சார்.. அவன்க  சும்மாவே  ஆடுவானுங்க (மனகண்ணில் சிவகுரு வந்து போனான்).. இப்ப ஜெயிச்சா அவன்க…………..”
ஆழ்ந்த யோசனையில் இருந்த சைக்கோ, “ஹ்ம்ம்.. IT CSE னு பிரிச்சுடலாம்”
“ப்ரின்சி ஓகே சொல்லணுமே..”, 
“சுவாமி சார் எப்படி…”,
“நம்ம சிங்கம்-எலி கேட்கிற குவெஸ்டீன்ஸ்..” என்று பல குரல்கள் ஒருங்கே வந்தது.
சைக்கோ, “அதை நான் பார்த்துக்கிறேன்”
ஒருவழியாக  மீட்டிங்யின்  முடிவில்  இந்த  பிரச்சனையை சிறிது காலம் மறக்கலாம் என்றும், CSE -IT மாணவர்களை தனியாக பிரிக்க வேண்டும் என்றும் முடிவானது. 
மீட்டிங் முடிந்து இறுதியாக வெளியே சென்ற ரவி சார் அறை வாயலில் நின்று திரும்பி, “ஸ்டுடென்ட்ஸ் ஒற்றுமையை உடைக்க பிரிக்கணும் னு சொல்றீங்களா?”
சைக்கோ புன்னகைத்தார். பிறகு, “இப்பவே இப்படி இருக்கானுங்க.. இப்ப பிரிக்கலைனா IT CSE பிரிஞ்சாலும் அவங்க ரெண்டு கிளாஸ் ஆ இல்லாம ஒரே கிளாஸ் ஆ தான் செயல் படுவான்க..”
“நம்ம சிங்கம்-எலி சாரி ப்ரின்சியிடம்(சைக்கோ புன்னகைத்தார்) என்ன சொல்ல போறீங்க?”
“யோசிக்கணும்”
“ஓகே சார்” என்று கூறி கிளம்பினார்.
ராஜசேகர் கோபமாக வீட்டில் தன் அறையில் இருந்தான். கோபத்தின்  உச்சத்தில் இருந்த ராஜசேகரை தனியே விட மனமின்றி சிவகுரு அவனுடன் சென்றிருந்தான்.
சிவகுரு, “சேகர் விடுடா…”
ராஜசேகர் கோபமாக, “எப்படி டா? எப்படி விடுறது.. அவன் சிஸ்டரை பேசினது மட்டும் இல்லாம…………”
“உன்னை வெறுப்பேத்த………”
“அவனை” என்று கோபமாக சுவற்றில் குத்தினான்.
சிறிது நேரம் கழித்து சிவகுரு தயங்கி மெல்ல, “இதுக்கு தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்”
ராஜசேகர் சிவகுருவை முறைத்தான். சிவகுரு அசராமல், “என்னை முறைத்து பிரயோஜனம் இல்லை.. இந்த எச்ச பையன்லாம் உன்னை கேவலபடு………………..”
“குரு.. வேணாம்”
“கோபப்படாம யோசி.. அப்ப சொன்னதை தான் இப்போதும் சொல்றேன்.. ஜெனிஷா உனக்கு ஒத்துவர மாட்டா”
“டேய்………..”
“இரு நான் சொல்லி முடிச்சசிறேன்.. உங்க பாமிலி ஆர்த்ரோடாக்ஸ் பாமிலி.. அதுக்கு………………”
ராஜசேகர் கையை உயர்த்தி தடுத்தான்.
“வேணாம் குரு.. நீ எனக்கு நல்ல நண்பன்……………..”
“அதுனால தான் அட்வைஸ் பண்றேன்”
“வேணாம் குரு.. என் நிஷா பத்தி எனக்கு தெரியும்..”
“நீ பத்து நாள் தான் பழகி இருக்க”
“நீ மட்டும்?”
“நானும் பழகலை தான் பட் எனக்கு அவளை பத்தி தெரியும்.. நான் சொல்……………..”
“வேணாம் குரு.. இதை பத்தி பேச வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது ராஜசேகரின் அம்மா வந்தார்.
“ராஜா.. உன்னை பார்க்க பிருந்தா வந்திருக்கா?”
ராஜசேகரும் சிவகுருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எழுந்து சென்றனர்.
ராஜசேகரின் அம்மா, “பேசிட்டு இருங்க பா.. நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்”
பிருந்தா, “இல்லா மா……………”
ராஜசேகரின் அம்மா, “இல்ல என்ற பேச்சுக்கே இடமில்லை.. பேசிட்டு இருங்க” என்று அன்பு கட்டளையுடன் உள்ளே சென்றார்.
ராஜசேகர், “சிஸ்டர் மேல் எந்த தப்பும் இல்லை னு எங்களுக்கு தெரியும்.. நீ…………”
பிருந்தா, “நான் அதுக்காக வரலை..”
ராஜசேகரும் சிவகுருவும் புருவம் உயர்த்தினர்.
பிருந்தா, “செல்வா, ராகேஷ், சிவா பெயறை சொன்னது யாரு னு எனக்கு தெரியும்”
சிவகுரு, “ஸ்ரீராம் ஆ?”
பிருந்தா ஆச்சரியமாக பார்க்க, சிவகுரு, “ஒரு யூகம் தான்.. உனக்கு எப்படி தெரியும்”
பிருந்தா, “மாலினி அந்த ரப்பர் தலையன் கிட்ட, ‘நீ வொர்க்-ஷாப் போனது எனக்கு தெரியும்’ னு சொன்னா”
ராஜசேகர், “சிஸ்டருக்கு தெரியுமா?”
பிருந்தா கோபமாக, “அமா.. தெரிஞ்சும் அந்த நாதாரியை எதுக்கு காப்பாத்துறா னு தான் எனக்கு தெரியலை”
ராஜசேகரும் சிவகுருவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அந்த பார்வை, ‘இதை வச்சு தான் ‘என் மாலு’ னு சொல்றானா” என்று பேசியது.
பிருந்தா, “நீ செல்வா கிட்ட பேசு சேகர்”
ராஜசேகர், “இல்ல பிருந்தா.. சிஸ்டர் எதுக்காக உண்மையை சொல்லலை னு தெரிஞ்சுக்காம நாம…………….”
பிருந்தா கோபமாக, “அவ தான் லூசு தனமா பண்றானா நீயும்..”
ராஜசேகர், “ஓகே.. ஓகே.. நான் சிஸ்டரிடம் பேசுறேன்.. நம்பர்” என்று இழுக்கவும் பிருந்தா சிறிது முழித்தாள்.
ராஜசேகர் சிறு புன்னகையுடன், “சிஸ்டரிடம் கேட்டுட்டே குடு.. இல்லை நீ காள் பண்ணு, உன் செல்லில் இருந்தே பேசுறேன்”
பிருந்தாவின் முகத்தில் சங்கடம் விலகி தெளிவு தெரிந்தது.
பிருந்தாவின் வருகைக்கு முன், ராஜசேகர் சிவகுரு பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஸ்ரீராமன் வீடு –
ஸ்ரீராமன் உள்ளே சென்றதும் அவனது அன்னை பதறலுடன், “ராம்.. என்னடா ஆச்சு”
“ஒன்னும் இல்ல மா. கீழ விழுந்துட்டேன்”
“இதுக்கு தான் சைக்கிளில் போக வேண்டாம் னு சொன்னா கேட்குறியா?”
ராஜசேகரின் மேல் இருந்த கோபமும் சேர்ந்து அன்னையிடம் கோபமும் எரிச்சலுமாக, “அப்போ நடந்து போக சொல்றியா?”
“பஸ்ஸில்………..”
“அதானே.. பைக் வாங்கி தரேன் னு சொல்லிட மாட்டியே”
(பேச்சு பேச்சாக இருக்க அன்னை அவன் காயத்திற்கு மருந்து தடவினார்)
“அஹ… சைக்கிளுக்கே இந்த நிலைமை.. பைக் னா”
“அம்மாமா… சைக்கிள் என்பதால் தான் இந்த நிலைமை.. பைக் னா நோ ப்ராப்ளம்….”
“என்னமோ போ.. நான் சொல்றதை இந்த வீட்டில் யார் தான் கேட்குறீங்க..” என்று கூறி உள்ளே சென்றார்.
அன்னை சென்றதும் ஸ்ரீராமனின் தமக்கை, “டேய் உண்மையை சொல்லு.. எந்த பொண்ணு கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லி இப்படி அடி வாங்கிட்டு வந்த?”
“சும்மா எதாச்சும் உளறி வைக்காத.. இதை வச்சே நான் பைக் வாங்குற பிளானில் இருக்கிறேன்”
“நீ வாங்குனாலும் வாங்குவ டா.. பட் இது உறுதியா கீழ விழுந்து ஏற்பட்ட அடி இல்லை”
“அது.. அதுலாம்.. ஒன்னும் இல்ல” என்று தன் அறைக்கு சென்று கதவை மூடினான்.
அவசர அவசரமாக சிறு சிரமத்துடன் உடையை மாற்றி முகம் கழுவி பவுடர் போட்டு கிளம்பினான் (எதுக்குன்னு யோசிக்குறீங்களா! இந்த அலங்காரம் எல்லாம் மாலினியிடம் போன் பேச தான்.. போனில் என்ன முகமா தெரிய போகுது னு நீங்க கேட்கலாம் பட் இந்த உண்மை அந்த மரமண்டை சாரி சாரி ரப்பர் மண்டையனுக்கு தெரியலையே!)
ஜோரா கிளம்பி பெரும் எதிர்பார்ப்புடன் மாலினி கொடுத்த எண்ணிற்கு தன் கைபேசியில் இருந்து அழைத்தான். அந்த பக்கம் போன் எடுக்கப் பட்டது….
ஸ்ரீராமன் குலைவான குரலில், “ஹலோ” என்றான்.
அந்த பக்கமும் ‘ஹலோ’ என்று பதில் வந்தது, ஆனால் அது மாலினியின் குரல் இல்லை, ஒரு ஆணின் குரல்.
மழை தொடரும்….

Advertisement