Advertisement

மழை 10:
ஆங்கில வகுப்பு முடிந்ததும் தேநீர் இடைவேளை வந்தது. ஆங்கில வகுப்பு முடியும் தருவாயில் H.O.Dயை பார்க்க சென்ற மாலினி இன்னும் வராத நிலையில் மோகனா H.O.D அறை அருகே இருந்த படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது “மோகனா” என்று யாரோ பின்னால் இருந்து அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவள் அழைத்தவனை பார்த்ததும் மேலும் பயந்தாள்.
(இதில் இருந்தே உங்களுக்கு தெரிந்திருக்குமே அழைத்தது ஷங்கர் என்று)

மோகனாவின் பயந்த விழிகளை பார்த்த ஷங்கரின் இதயத்தில் பெரும் வலி ஏற்பட்டது.

மோகனா, “நீ…. நீ….”

ஷங்கர் சுற்றுபுறத்தை நோட்டம் விட்டுவிட்டு தாழ்ந்த குரலில் இதமாக பேசினான்.
“ப்ளீஸ்.. பயப்படாத மோகனா.. அம் வெரி வெரி சாரி.. நான் வேணும் னு அப்படி பண்ணலை.. உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறது………….”

“எனக்கு புரியும்..” என்று சிறு பயமும் வீராப்பும் கலந்த குரலில் மோகனா கூறியதை அந்த நிலையிலும் ரசித்தான் ஷங்கர். அவனது இதழில் சிறு புன்னகை பூத்தது.

மோகனா, “ஏன் சிரிக்கிற?”

“ஒன்னுமில்லை”

“கிண்டல் பண்றியா?”

‘இல்லை’ என்று தலையை ஆட்டினான்.

“நீ.. நீ.. ஏன் அப்படி பண்ண?” என்று அழமாட்டாத குறையாக கேட்டவளுக்கு என்ன விளக்கம் சொல்வது என்று புரியாமல் தவித்தான் ஷங்கர்.

குழந்தை தன்மையுடன் கலக்கம், குழப்பம் என்ற உணர்ச்சிகளை தேக்கிய விழிகளுடன் தன் பதிலுக்காக காத்திருப்பவளை பார்க்கும் போது ஷங்கருக்கு தன்னவளின் மேல் மயக்கம் தான் வந்தது, அவளை கையணைப்பில் வைத்து ‘நான் உன்னை காதலிக்குறேன் டி செல்லம்’ என்று கூற வேண்டும் போல் இருந்தது.

மோகனா, “சொல்லு.. ஏன் அப்படி பண்ண?”
(மோகனா தன் பயத்தை பொருட் படுத்தாமல் கேள்வி கேட்பது இது தான் முதல் முறை.. மாலினி கேட்காமலேயே தன் பயத்தின் காரணத்தை அவளிடம் தெரிவிக்கும் மோகனா ஏனோ ஷங்கரின் செய்கையை பற்றி கூறவில்லை, மாறாக ‘பயமாக இருக்குது மாலு’ என்று மட்டும் தான் கூறினாள். இது அவளுக்கு முதல் அனுபவம்.. 
பாவம் இந்த குழந்தை மனம் கொண்ட குமரிக்கு ‘ஏன் தன் மனதில் பயம் எழுகிறது’ என்பது புரியவில்லை.. அத்தோடு ‘ஏன் ஷங்கரை பற்றி மாலினியிடம் சொல்லாமல் விட்டேன்’ என்ற கேள்வி கூட அவள் மனதில் எழவில்லை. 
இதை எல்லாம் ஆராயும் பக்குவம் அவளுக்கு வரவில்லையே!!!)

மோகனாவின் கேள்வியில் தன்னை சுதாரித்துக் கொண்ட ஷங்கர் மனதினுள்,
‘ஒரு தடவ தெரியாம லேசா இதழை அசைத்ததுக்கே இந்த பாடு.. வேணாம் ஷங்கர் இவளை மேலும் பயப்படுத்திறாத’ என்று சொல்லிக் கொண்டான்.

“தெரியாம அப்படி செஞ்சுட்டேன் மோகனா.. அம் ரியல்லி வெரி சாரி.. ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

மோகனா இன்னமும் கலக்கம் மற்றும் குழப்பத்துடன் “ஏன் அப்படி………………” என்று இழுக்க,
ஷங்கர், “ப்ளீஸ் மோகனா.. நான் தான் சாரி சொல்றேனே.. விட்டுறேன்.. அதை மறந்துரு.. ப்ளீஸ்”

ஷங்கரின் முகத்தை பார்த்து பாவமாக இருந்ததோ என்னவோ மோகனா எழும்பாத குரலில், “ஹ்ம்ம்” என்றாள் பிறகு, “இனி இப்படி பண்ணாத”

“sure..” என்று அவசரமாக சொன்னவன் மெல்லிய குரலில், “மோகனா” என்று அழைத்தான்.

மோகனா அவன் முகத்தை பார்த்தாள்.

“என்னை மன்னிச்சிட்டியா?”

ஷங்கரின் முகம் வாடுவதை பொறுக்க முடியாமல் ‘ஆம்’ என்பதை போல் தலையை ஆட்டினாள். ஷங்கரின் முகம் மலர்ந்தது. மோகனாவின் முகமும் மலர்ந்தது.

ஷங்கர், “தன்க் யூ மோகனா” 
மோகனா புன்னகைத்தாள். ஷங்கர் புன்னகையுடன் விடைபெற்று சென்றான்.


ஷங்கர் சென்றதும் அங்கு வந்த ஆர்லி, “என்ன சொன்னான் மோனி?”

“…”
(ஏனோ மோகனாவிற்கு ஷங்கருடன் நிகழ்ந்த உரையாலாடை பற்றி ஆர்லியிடம் கூற மனம் வரவில்லை)

‘உன்னை போய் அப்பாவி னு நினைத்தேனே.. பார்த்த என்னிடமே மறைக்குறியே! நீ மறைச்சா நான் விட்டுருவேனா’ என்று மனதினுள் கூறிக் கொண்ட ஆர்லி, “செஞ்சதுக்கு சாரி சொன்னானா?”

மோகனா அதிர்ச்சியுடன் ஆர்லியை பார்க்கவும் ஆர்லி கேலி புன்னகையுடன், “இது மட்டுமில்லை அவன் என்ன பண்ணான்னும் தெரியும்”

பயம் மீண்டும் மோகனாவை தொற்றிக் கொண்டது.

ஆர்லி, “அவன் சாரி கேட்டுருப்பான்.. நீ உடனே.. ‘ஓகே’ சொல்லிருபியே”

மோகனா அவளையும் அறியாமல் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.

ஆர்லி, ‘நான் நினைத்து சரியா போச்சே.. அவனை பற்றி தப்பான அவிப்பிராயத்தை இவளுக்குள் ஏற்படுத்துறதுக்குள்…..’ என்று மனதினுள் பொருமியவள் அடுத்த நொடியே, ‘இப்ப என்ன கெட்டு போச்சு ஆர்லி.. உன்னால் முடியாதது உண்டா என்ன! விடாத..’ என்றாள்.

ஆர்லி பரிதாபக் குரலில், “என்ன மோனி இப்படி குழந்தையாவே இருக்க?”

ஷங்கரிடம் வீராப்பாக பேசியதை போல் ‘நான் குழந்தை இல்லை’ என்று சொல்ல முடியாமல், “ஏன் ஆர்லி?” என்று கேட்டாள்.

“பின்ன பசங்களை என்ன நினைச்ச.. அவன் சாரி கேட்டதும் நீ ஓகே சொல்லிட்ட.. அடுத்து அவன் என்ன செய்வான் தெரியுமா?”

“என்ன.. என்ன செய்வான்?”

“ஹ்ம்ம்.. உன் கன்னத்தில் முத்தம் குடுத்துட்டு.. ஈஸி யா சாரி கேட்பான்.. அதுக்கும் நீ ஓகே சொல்லி மன்னிப்ப.. அப்பறம் அவன்…………” என்று பேசிக்கொண்டே போனவள் சிலை போல் நின்றிருந்த மோகனாவின் கையை பிடித்து,
“மோனி” என்று அழைத்தாள்.

சுய உணர்வு பெற்ற மோகனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
மோகனாவின் இந்த நிலையை பார்த்த ஆர்லியின் மனம் ‘ரொம்ப பயம்புடுத்திட்டோமோ!’ என்று வருந்தும் போதே அவளது மற்றொரு மனம், 
‘ஹ்ம்ம்.. இப்ப விட்டா உனக்கு ஷங்கர் கிடைக்க மாட்டான்.. உனக்கு ஷங்கர் முக்கியமா மோகனா முக்கியமா?’ என்ற கேள்வியை எழுப்பவும் மோகனா மேல் எழுந்த இரக்கம் மறைந்து, அதட்டும் குரலில், “ஏய்.. இப்போ எதுக்கு அழுற?”

ஆர்லியின் அதட்டலில் மோகனாவின் பயம் கூடியது, அந்த பயத்தின் அதிர்ச்சியில் கண்ணீர் நின்றது, ஆபத்தில் மாட்டிக் கொண்ட மான் குட்டி தாயை தேடுவது போல் அவளது உள்ளம் மாலினியை தேடியது.

ஆர்லி, “ஓகே.. ஓகே.. பயப்படாத.. இனி நீ அவனிடம் பேசலைனா எல்லாம் சரியாகிடும்”

“..”

“என்ன புரியுதா?”

மோகனா தலையை ஆட்டினாள்.

“என்ன புரிஞ்சுது.. சொல்லு”

மோகனா எழும்பாத குரலில், “நான் ஷங்கர் கூட பேசக் கூடாது”

ஆர்லி மனதினுள், ‘அப்பாபாபா புரிஞ்சுதே.. இது தான் எனக்கு வேணும்’

மோகனா தயக்கத்துடன்,. “ஆர்லி.” என்று அழைக்கவும், ஆர்லி, “என்ன?” 

“அவனே வந்து பேசினா என்ன பண்றது?”

“என் கூட பேசாதே னு சொல்லு”

மோகனாவின் மனக்கண்ணில் சிரித்த முகத்துடன் ஷங்கர் தோன்றினான். ஏனோ அவளுக்கு ஆர்லி சொன்ன பதிலை சொல்ல மனம் வரவில்லை. மீண்டும் தயக்கத்துடன், “எப்படி சொல்றது?”

“ஹ்ம்ம்.. வாயால தான்”

“…”

ஆர்லி சிறு எரிச்சலுடன், “என்ன மோனி?”

“எனக்கு அப்படி பேசி பழக்கமில்லையே”
ஆர்லி அலச்சிய குரலில், “அப்போ அவன் முத்தம் குடுத்தா வாங்கிக்கோ”

மோகனா அழும் குரலில், “ப்ளீஸ் ஆர்லி இப்படிலாம் பேசாத”

ஆர்லி இப்பொழுது குரலை தாழ்த்தி பேசினாள். அக்கறை மிகுந்த குரலில், “நான் உனக்காக தான் சொல்றேன் மோனி.. புரிஞ்சுகோ.. ‘பேசாத’ என்ற ஒரு வார்த்தையை சொல்ல கஷ்டபட்டேனா பின்னாடி நீ ரொம்ப கஷ்டபடுவ”

மோகனாவின் மனதை குழப்பமும் பயமும் சூழ்ந்தது. அதை புரிந்துக் கொண்ட ஆர்லி, “என்ன நான் சொன்னது போல் பேசுவியா?”

மோகனா ‘மாலு கிட்ட கேட்டுக்கலாம்’ என்ற நினைப்பில் அரை மனதுடன் தலையை ஆட்ட அந்த நினைப்பையும் ஆட்டம் காண செய்தாள் ஆர்லி.

“அப்பறம் மோனி.. இதை பற்றிலாம் மாலினியிடம் சொல்லாத?”

“ஏன் சொல்ல கூடாது.. நான் மாலினியிடம் எதையும் மறைக்க மாட்டேன்.. நான் கண்டிப்பா சொல்வேன்” என்ற மோகனாவின் குரலில் இப்போது உறுதி இருந்தது.

மோகனாவின் குரலில் தெரிந்த உறுதியை உணர்ந்த ஆர்லி மனதினுள்,
‘இவளோ நேரம் நான் பேசினதுலாம் வேஸ்ட்டா போச்சே.. இவ மாலினி கிட்ட சொன்னா அவ நேரில் ஷங்கரிடம் போய் கத்துவா.. அவன் இந்த லூச லவ் பண்றேன் னு சொல்லிட்டா.. மாலினி அதுக்கு சப்போர்ட் பண்ணிட்டா?
விடாத ஆர்லி.. ஏதாவது யோசி….’ நொடி பொழுதில் ஆர்லியின் மனதில் மோகனாவை அடக்கும் வழி கிடைத்தது.

ஆர்லி, “போய் சொல்லு.. அப்பறம் மாலினிக்கு தான் பிரச்சனை”
“ஐயோ! என்ன சொல்ற ஆர்லி?”

“ஹ்ம்ம்.. நீ மாலினியிடம் சொல்வ, அவ ஷங்கரை திட்டுவா.. அவன் சண்டை போடுவான்.. ஏற்கனவே செல்வாக்கு மாலினியை பிடிக்காது.. இது தான் சாக்குன்னு மாலினியை அடிச்சாலும் அடிப்பான்”
[எப்பா!!! எங்கிருந்து எங்கு லிங்க் குடுக்குறா இந்த ஆர்லி]

அவ்வளவு தான் ஆர்லியின் இந்த பேச்சை கேட்ட மறு நொடியே மோகனா, “ஐயோ.. நான் கண்டிப்பா மாலினி கிட்ட சொல்ல மாட்டேன்.. நீயும் சொல்லிடாத ஆர்லி.. ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
ஆர்லியின் உள்ளம் குளிர்ந்து.

மோகனா, “மாலினி கேட்டா என்ன சொல்றது?”

“அவளுக்கு தான் தெரியாதே”

“இல்ல.. ஷங்கர் அப்படி செஞ்சதும்.. நான்…”

“நீ” (‘என்ன செஞ்சு தொலைச்சாளோ!’ என்று ஆர்லியின் இதயம் அடித்துக் கொண்டது)

“நான் மாலினி கையை அழுத்தி பிடிச்சுகிட்டேனா.. அவ என்ன னு கேட்டா.. நான் பயமா இருக்கு னு சொன்னேன்.. அதான்..”

‘இவ எனக்கு பெரிய வில்லியா இருப்பா போல இருக்கே.. சை’ என்று மனதினுள் மோகனாவை திட்டிய ஆர்லி வெளியே, “மாலினி ‘ஏன் பயந்த?’ னு கேட்டா.. வேற ஏதாவது சொல்லி சமாளி”

“பொய் சொல்றது அம்மாக்கு பிடிக்காது”

“அப்போ மாலினி அடி வாங்குவா.. ஓகே வா”

“ஐயோ.. வேணாம்”

“அப்போ பொய் சொல்லி தான் ஆகணும்”

“..”

“என்ன?”

“கோபப் படாத ஆர்லி..”

“ஹ்ம்ம்.. என்ன னு சொல்லு”

“நீயே அதையும் சொல்லேன்”

“ஹ்ம்ம்.. என்ன சொல்லலாம்?” என்று யோசித்த ஆர்லி, “ஹ்ம்ம்.. இப்படி சொல்லு.. வெளியே செல்வா நின்றதை பார்த்தேன்.. பயமா இருந்துது னு சொல்லு”

மோகனா மீண்டும் அரை மனதுடன் தலையை ஆட்டினாள். ஆர்லி மோகனாவை வகுப்பறைக்கு அழைத்து சென்றாள்.
செல்லும் வழியில் மோகனா மனதினுள் மாலினியுடன் பேசினாள்.
‘மாலு..  எனக்கு ரொம்ப பயமா இருக்குது மாலு.. உன்னிடம் தானே சொல்வேன்.. இப்ப உன்னிடம் சொல்ல கூடாதுனா! நான் யார் கிட்ட சொல்வேன்..  அழுகையா வருது மாலு..  ரொம்ப கஷ்டமா இருக்கு மாலு.. என்ன பண்றது மாலு’ என்று மோகனா மனதினுள் அழுதாள்.


மோகனாவின் நிலைமையை பற்றி அறியாத மாலினி H.O.Dயின் கேள்விகளுக்கு அசராமல் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

மாலினி உள்ளே நுழைந்ததும் ராமலிங்கம், “இங்கே எதற்கு வந்திருக்கிறன்னு தெரியுமா?”

“நோ சார்”

“ஆரம்பமே பொய்யா?”

“நோ சார்”

“நான் எதுக்கு கூப்டேன்னு தெரியாது?”

“தெரியாது சார்”

“மாலினி”

“எஸ் சார்”

“இப்ப எதுக்கு எஸ் சொல்ற?”

“நீங்க கூப்டீங்களே சார்.. அதான்..”

ராமலிங்கம் மாலினியை முறைத்தார். மாலினி சலனமே இல்லாமல் அந்த முறைப்பை பெற்றுக் கொண்டாள்.

“ஓகே.. நான் நேரிடையா விஷயத்திற்கு வரேன்..” என்று கூறி மாலினியின் முகத்தை பார்த்தார். இப்பொழுதும் அவளது முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை.

“யாரு பிரியா மேம்மை திட்டினது?”

“எனக்கு தெரியாது சார்”

“உனக்கு தெரியும் னு எனக்கு தெரியும்”

“எனக்கு தெரியாது சார்”

“ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்லாதே”

“சார்.. நிஜமாவே எனக்கு தெரியாது”

“உனக்கு தெரியாது னா, நீ என்குவரி முடிஞ்சு போனதும் ஏன் ஸ்ரீராம் ‘என்ன சொன்ன’ னு கேட்டான்?”

“ஆஷா அமுதாவையும் தான் கேட்டாங்க”

“யார் கேட்டா?”

“பாய்ஸ்”

“எந்த பாய்ஸ்?”

“தெரியாது சார்”

“பொய் சொல்லாதே”

“நான் பொய் சொல்லலை சார்.. ஆஷா அமுதாவை பாய்ஸ் கேட்ட போது நான் கிளாஸ்ஸில் இல்லை”

“அப்பறம் எப்படி உனக்கு தெரியும்?”

“கேள்வி பட்டேன்”

“யாரு சொன்னா?”

“குறிப்பிட்டு யாருமில்லை.. கேர்ள்ஸ் இதை பத்தி பேசிகிட்டாங்க”

ராமலிங்கம் களைத்துப் போனார். இரண்டு நொடிகள் இடைவெளிவிட்டு,
“ஓகே.. ஸ்ரீராம் ஏன் உன்னை மட்டும் திரும்ப திரும்ப கேட்டான்?”

“நான் அவனிடம் எதையும் சொல்லலை அதான் கேட்டான்”

“பட் அவன் உனக்கு உண்மை தெரியும் னு சொல்றானே!”
[இது தான் ராமலிங்கத்தின் நோக்கம்.. மாலினிக்கு தெரியுமோ என்று ரவி சந்தேகப் பட்டார்.. அதே நேரத்தில் பசங்களிடம் மாலினி விசாரணை பற்றி கூறவில்லை என்றும் சொன்னார்.. இந்த நிலையில் மாலினிக்கு மன-அழுத்தம் கொடுத்து, பசங்க மேல் கோபம் ஏற்பட செய்தால், ஒருவேளை அவளுக்கு உண்மை தெரிந்திருந்தால் அதை சொல்லிவிடுவாள், அதே நேரத்தில் மாணவர்களிடையே இருக்கும் ஒற்றுமையும் உடைக்கப்படும்]
“எனக்கு தெரியாது சார்”

“உனக்கு தெரியாது னா அவன் ஏன் உன் பெயரை சொன்னான்?”

“அதை நீங்க அவனிடம் தான் சார் கேட்கணும்”

“எனக்கே அட்வைஸ் பண்றியா?”

“நோ சார்.. நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்” 

“மாலினி டோன்ட் ட்ரை டு சேவ் ஹிம்?”

“யாரை சார்?”
ராமலிங்கம் மாலினியை முறைத்தார்.

“லுக் மாலினி.. தப்பு செஞ்சவங்களை சப்போர்ட் பண்ணா உனக்கும் தண்டனை கிடைக்கும்.. நீ நல்லா படிக்கிற பொண்ணு.. டோன்ட் ஸ்பாயில் யுவர் நேம்.. இந்த விஷயம் இத்தோட முடியாது.. நீ இப்படியே பொய் சொல்லிட்டு இருந்த யூ ஹவ் டு மீட் சேர்மன் வித் யுவர் பரென்ட்ஸ்”

“..”

“என்ன உண்மையை சொல்றியா?”

“யார் சொன்னது னு எனக்கு தெரியாது சார்.. அம் ரெடி டு மீட் சேர்மன் வித் மை பரென்ட்ஸ்” 

மாலினியின் உறுதியான பதிலில் ராமலிங்கம் குழம்பினார்.
‘இவளுக்கு உண்மையிலேயே தெரியாதோ!’ என்று யோசிக்கத் தொடங்கினார்.
மதிய தேநீர் இடைவேளை முடியும் தருவாயில் தான் H.O.D மாலினியை விட்டார். மாலினி வகுப்பறையினுள் நுழைந்த அதே நேரத்தில் உள்ளே வந்த செல்வராஜ் மாலினியை கடுமையாக முறைத்தான். மாலினி அதை கண்டும் காணாமல் தன் இடத்திற்கு சென்றாள்.
பிருந்தா கோபமாக, “எதுக்கு டி அந்த ரப்பர் தலையனை காப்பாத்துற?”
“இப்ப பேச வேண்டாம்”
“இப்படியே சொல்லு”
“…”
“எதுக்குடி அவனை காப்பாத்துற? அவன் என்ன……….”
மாலினி அழுத்தமான குரலில், “பிருந்து இந்த பேச்சை விடு”
பிருந்தா எரிச்சலும் கோபமுமாக அமைதியானாள்.
அதே நேரத்தில் செல்வராஜ் சிவகுரு மற்றும் ராஜசேகரிடம், “என்னமோ வக்காலத்து வாங்குனீங்களே! இப்ப அவ சாயம் வெளுத்திருச்சே!”
சிவகுருவும் ராஜசேகரும் சொல்வதறியாது அமைதியாக இருக்க, ராகேஷ் ஏதோ சொல்ல வரவும், செல்வராஜ் கையை உயர்த்தி, “வேண்டாம் ராகேஷ்.. நீயும் அந்த ——— வக்காலத்து வாங்கி உன் தகுதியை தாழ்த்திக்காத.. அந்த ——– நான் பார்த்துக்குறேன்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஆசிரியர் வகுப்பறையினுள்ளே வரவும் செல்வராஜ் அமைதியானான்.
ஆர்லி சொன்னதை மீறி மாலினியிடம் இரண்டு முறை பேச நினைத்த மோகனாவின் கவனத்தை மாற்றும்படி மாலினியுடன் பேச்சை வளர்த்தாள் ஆர்லி.
மாலை வகுப்புகள் முடிந்த பிறகு, ஆர்லி, “ரெஸ்ட்ரூம் போகணும்.. என் கூட நீ வரியா மோனி?” என்று கேட்கவும், 
பிருந்தா, “நான் வரேன் ஆர்லி” என்றாள்.
“மோனி வரேன் சொன்னாளே.. என்ன மோனி” என்று ஆர்லி மோகனாவை பார்க்கவும் மோகனா தலையை ‘ஆம்’ என்பது போல் ஆட்டினாள்.
ஆர்லியும் மோகனாவும் ரெஸ்ட்ரூம் பக்கம் செல்ல அவர்கள் பின்னாலே பிருந்தாவும் வரவும் ஆர்லி தன் எரிச்சலை மறைத்து, “என்ன பிருந்தா?” என்றாள்.
பிருந்தா எரிச்சலுடன், “ஹ்ம்ம்.. நீ எதுக்கு ரெஸ்ட்ரூம் போற?”
ஆர்லி ஒரு நொடி பயந்தாள், ‘எங்கே தான் மோகனாவை மிரட்டுவது இவளுக்கு தெரிந்து விட்டதோ’ என்று பயந்தாள். ஆனால் அது ஒரே ஒரு நொடி தான், பிறகு தன்னை சமாளித்து, “இது என்ன கேள்வி பிருந்து?”
“நீ கேட்டதும் இப்படி தான் அபத்தமா இருந்துது”
“..”
“என்ன முழிக்கிற.. நீ எதுக்கு ரெஸ்ட்ரூம் போறியோ அதுக்கு தான் நானும் போறேன்.. வா போலாம்” என்று எரிச்சலுடன் முன்னே சென்றாள்.
ஆர்லி, ‘இவ ஏன் கோபமா இருக்கா?’ என்று தன் மனதினுள் கேட்டுக் கொண்டாள்.
மாலினி, “நானும் நந்துவும் கேன்டீனில் வெயிட் பண்றோம்”  என்று கூறி நந்தினியுடன் சென்றாள்.
பிருந்தாவிற்கும் தங்களுக்கும் சிறு இடைவெளி விட்டு சென்ற ஆர்லி தாழ்ந்த குரலில், “ஏன் மோனி.. உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?” என்று கோபமாகவே கேட்டாள்.
மோகனா முழிக்கவும் ஆர்லி, “என்ன முழிக்கிற? நான் அவ்ளோ சொல்லியும் நீ மாலினி கிட்ட அந்த விஷயத்தை பத்தி பேச ட்ரை பண்ற”
“இல்ல ஆர்லி.. நா…………”
“உனக்கு தான் அறிவில்லை.. அட்லீஸ்ட் அடுத்தவங்க சொல்றதையாது கேட்கலாம் தானே!”
[மோகனாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. மாலினி எத்தனை முறை அவளை திட்டினாலும் அவளை குறைவாக பேசியதில்லை.. ஆனால் ஆர்லியோ வார்த்தைக்கு வார்த்தை தன்னை தாழ்த்தி பேசவும் மனதினுள் மிகுந்த வருத்தம் எழுந்தது. அவளை மீறி மாலினியிடம் பேசவும் பயமாக இருந்தது]  
பிருந்தா, “ஏய் என்னடி இப்படி ஸ்லொ வா வரீங்க?”
ஆர்லி, “நீ ஏன் இப்ப தேவை இல்லாம கோபப் படுற.. நீ போ.. நாங்க பின்னாடியே வரோம்”
பிருந்தா, “என்னவும் பண்ணி தொலைங்க” என்ற முணுமுணுப்புடன் சென்றாள்.
ஆர்லி, “இதோ பார் மோனி.. நான் சொல்றதை நல்ல கவனிச்சுக்கோ.. நீ உண்மையாவே மாலினியை உன் பிரெண்ட் டா நினைச்சனா ஷங்கர் விஷயத்தை அவ கிட்ட எதுவும் சொல்லாத.. அது தான் மாலினிக்கு நல்லது..”
மோகனா ஒருவிதமாக தலையை ஆட்டினாள்.
மாலினியும் நந்தினியும் கேன்டீன் செல்லும் போது, அவர்களுக்கு பின்னால் இருந்து,
“மாலு.. நான் ஸ்ரீராம்.. திரும்பி பார்க்காம பேசு”
மாலினி பல்லைக் கடித்துக் கொண்டு, “என் பெயரை சுருக்கி கூப்பிடாதே”
“ஓகே.. ஓகே.. எனக்கு உன் செல் நம்பர் வேண்டும்”
மாலினி சட்டென்று திரும்பி அவனை முறைத்தாள். ஸ்ரீராம் அவசரமாக, “என்குவரி விஷயமா தனியா பேசணும்”

Advertisement