Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ

            அத்தியாயம்   –  9

 

கிஷோர் முதல்நாளே ஊருக்கு வந்திருந்தவன் பெரிய ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிவிட்டு, மறுநாள் பகல் பொழுதை நெட்டி தள்ளிவிட்டு மாலை ஐந்துமணிக்கே மண்டபத்துக்கு வந்துவிட்டான்.தான்தான் மிகப்பெரிய பணக்காரன் என நினைத்திருந்த கிஷோருக்கு இங்கு வந்த பிறகுதான் சூர்யாவும் இவ்வளவு பெரிய வசதியுள்ளவன் என்பது தெரிந்தது..

 

தன்னுடன் படிக்கும் காலத்தில் இருந்து சூர்யா எப்போதும் எளிமையாகத்தான் இருப்பான்..ஆளின் தரத்தை பார்க்காமல் நட்பை மட்டுமே பார்ப்பவன்,அதனால் அவனுக்கு நட்பு வட்டம் எப்போதும் அதிகம்...

 

ஆறு மாதத்திற்கு முன் கிஷோர் இங்கு வந்த போதும் சூர்யா வீட்டிற்கெல்லாம் செல்லவில்லை.. ஹோட்டலிலே ரூம் போட்டிருந்தவன் சூர்யா வீட்டிற்கு அழைத்த போதும் அங்கு இவனுக்கு வசதியாக இருக்காது என நினைத்தான்

ஏதோ வந்துவிட்டோம் ஒரு முறை அவனை பார்த்துவிட்டு செல்லலாம் என நினைத்துதான் அவன் போனில் சொன்ன இடத்திற்கு சென்றான்…

 

அங்கு சூர்யாவிடம் வேலை செய்யும் ஆட்கள் ஒரு வீட்டை இடித்துக் கொண்டிருந்ததை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்… இவனை பார்க்கவும் இருவரும் சற்று நேரம் பழைய கதையை பேசிக் கொண்டிருந்தார்கள்..

வேலையாட்கள் அந்த பெரிய ராஜநிலையை தனியாக எடுப்பதை பார்த்ததும் சூர்யா வேகமாக அவர்களிடம் சென்று கவனமாக அந்த கதவுக்கு சேதமில்லாமல் பார்த்து எடுக்கச் சொல்லி அவர்கள் அருகிலேயே நின்று கொண்டான்.

 

கிஷோரோ அதில் நாட்டமில்லாமல் தன் சுற்றுப்புறத்தை பார்வையிட்டபடி இருந்தவன் அப்போதுதான் முதல் முதலில் ஸ்ரீயையும் அவள் தங்கை தம்பிகளையும் பார்த்தான்… ஸ்ரீயை பார்த்தவன் பார்த்தபடியே நின்றுவிட்டான் இவ்வளவு அழகா!!! தான் பெங்களூரில் எத்தனையோ பெண்களை பார்த்திருந்தாலும் இவளின் ஹோம்லியான முகம் அவனை மிகவும் கவர்ந்தது போல இருந்தது…

 ஸ்ரீயை பார்த்தவுடனேயே அவன் மனதிற்குள் வந்துவிட்டாள்… அதிலும் அவள் போட்டிருந்த உடை வித்தியாசமாகபெண்களை புடவையிலேயே பார்த்திருந்தவன் பாவாடை தாவணியில் பார்த்ததில்லை…

 

சாதாரண பாவாடை தாவணியில் அவ்வளவு நளினமாக ஒரு ஓவியம்போல தெரிந்தாள்…  எலுமிச்சை நிறத்தில் திருத்தமான முகம் அதிலிருந்த கோலிக்குண்டு கண்கள்தான் அவளுக்கு பிளஸ்பாயிண்ட் போல தெரிந்தது

அவளை வெறித்து பார்த்தவனுக்கு அவள் அழகு பித்தம் கொள்ள வைக்க அவளை பற்றி தெரிந்து கொள்ள என்ன வழி என யோசித்து அவளை பற்றி சூர்யாவிடம் விசாரிக்கலாம் என முடிவு செய்தான்…

 

சூர்யாவின் பார்வையும் ஸ்ரீயை இரண்டு மூன்று தரம் பார்த்தது போல தெரிய, ஒருவேளை அவனுக்கு தெரிஞ்ச பெண்ணாயிருக்குமோ என நினைத்து சூர்யாவிடம் ஸ்ரீயை பற்றி கேட்கவுமே சூர்யா சரேலென திரும்பி கிஷோரை ஒரு பார்வை பார்த்தான்… நெஞ்சை கத்தி போல ஊடுருவும் பார்வை அப்படியே சொடக்கு போடும் நேரத்தில் சூர்யாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது…

 

என்ன கிஷோர்…?? இது உனக்கு தேவையில்லாத வேலை…?? இங்க சும்மா சுத்தி பார்க்கத்தானே வந்தேன்னு சொன்ன அதமட்டும் பாரு?தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்காதா…?”  கோபத்தை அடக்கி கர்ஜித்தவன் அவனை விட்டு விலகி அப்போதே ஸ்ரீயின் தாத்தாவை பார்த்து அவரிடம் சென்று ஏதோ சொல்ல அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்ரீ வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்…

 

இதிலிருந்து கிஷோருக்கு ஒன்று தெரிந்தது… நாம இந்த பொண்ணப்பத்தி தெரிஞ்சிக்கிறத இவன் விரும்பலையோ, சற்று யோசித்தவன் சூர்யாவிடம் சென்று ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும் சூர்யா பேச்சுக்கு கூட அவனை இருக்கச் சொல்லவில்லை சரி என்று தலையாட்டி விட்டான்…

 

 ஆனால் அவன் அறியாத ஒன்று கிஷோர் ஊருக்கு போகாமல் அடுத்த ஒரு வாரமும் அங்கிருந்து ஸ்ரீயை பற்றி நன்கு தெரிந்து கொண்டான்… விசாரித்த அளவில் அவளை விட முடியாதென்றே அவனுக்கு தெரிந்தது.. அவ்வளவு வெகுளியாக தெரிந்தாள்அதுவே அவள் அழகோடு சேர்த்து அவனை பித்தாக்கி இருந்தது… ஸ்ரீ அறியாமல் ஒருவாரம் அவளை பின் தொடர்ந்தவனுக்குள்  ஒரு வெறியே வந்திருந்தது…  முடியாது யாரு தடுத்தாலும் இந்த பொண்ண நாம கல்யாணம் செஞ்சிக்கனும் ஸ்ரீயை தனியாக சந்திக்க என்ன வழியென்று யோசித்தான்…

 

மேடையில் நின்றிருந்த சூர்யா கிஷோரை பார்க்கவுமே இவன் எப்படி இங்க இவனுக்கு நாம ரிசர்ஷன் சொல்லவே இல்லையே எப்படி வந்திருப்பான் என யோசிக்க துவங்கியிருந்தான்…சொல்லாத ஒரு இடத்துக்கு இவன் வர மாட்டானே என்னவாயிருக்கும்…

 

சாதாரண உடையில் பார்க்கும் போதே ஸ்ரீ மேல் பித்தாகி இருந்த கிஷோர் இந்த திருமண உடையில் அப்படியே வயிறெறிந்து போயிருந்தான்…தான் அணுஅணுவாக ரசிக்க வேண்டிய அழகு வேறொருவன் கைக்கு போயிருச்சு அதுவும் இந்த சூர்யா கைக்கு அவனால் தாங்க முடியவில்லை…

 

பார்க்க அழகாக செவசெவவென இருக்கும் தன்னைவிட அவன் எந்த விதத்தில் உயர்ந்தவன்… கிஷோரின் பார்வை ஸ்ரீயை ஊடுருவுவதை கண்ட சூர்யாவுக்கு அவனை கொல்லும் வெறியே வந்திருந்தது… ஒரு பொண்ணை எப்படி பார்க்க கூடாதுன்னு இவனுக்கு தெரியாதா…??

 

அதுவரை இருந்த உல்லாச மனநிலை இருவருக்கும் மாற, ஸ்ரீக்கு தன் திருமணத்திற்கு முதல்நாள் தான் கிஷோரின் பேச்சை நம்பி செய்த முட்டாள் தனமும் அதனால் தாத்தா அவளிடம் கோவித்து கொண்டு பேசாமல் இருந்ததும் நியாபகத்திற்கு வந்தது…

 

ஸ்ரீயின் தோளில் கைபோட்டிருந்த சூர்யா போட்டோ எடுக்கும் போது தன்னோடு இருந்த இணக்கம் மாறியதை உணர்ந்த உடனேயே போட்டோ கிராபரை  அழைத்து,

இன்னும் போட்டோஸ் வேணும்னா அப்புறம் ஒரு நாள் தனியா வீட்ல வந்து எடுத்துக் கோங்க…??” சொல்லி முடிக்கவில்லை பத்து பதினைந்து இளைஞர் இளைஞிகள் கலகலவென பேசியபடி  சூர்யாவை நோக்கி வர இப்போது அந்த கூட்டத்தோடு கிஷோரும் இணைந்திருந்தான்…

 

ஸ்ரீயின் காதருகே குனிந்தவன்,  நான் சொன்னேன்ல என்னோட காலேஜ் பிரண்ட்ஸ்  அவங்கதான் வர்றாங்க…??”

 

அனைவரும் ஆர்ப்பாட்டமாக மேடை ஏறியவர்கள் சூர்யா கட்டி அணைத்து ஓஓஓ….வென கத்தியபடி சுற்ற அந்த இடமே சலசலவென ஆயிற்று…. கிஷோர் அப்படியே ஒதுங்கி நிற்க மற்ற ஆண்கள் ஸ்ரீயை பார்த்துவிட்டு அவன் காதிற்குள்,

 நீ ஏன் பெங்களூர்ல உன்கிட்ட லவ் சொன்ன பொண்ணுகள வேண்டான்னு சொன்னன்னு இப்ப புரியுடா…??”

அவர்களை கேள்வியாக பார்த்தவனிடம் சிஸ்டர் அவ்வளவு அழகா இருக்காங்க…”

 

பெண்களோ அடப்பாவி சூர்யா எங்கள இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது…?லவ் பண்ணிட்டு இருந்த எங்கள இப்படி அம்போன்னு விட்டுட்டு வேற பொண்ணக் கட்டிக்கலாமா…??”

ஸ்ரீ அப்படியே முழித்து போய் நின்றாள் பத்து பொண்ணுகளாச்சும் இருக்குமே இத்தனை பேரையுமா லவ் பண்ணினாங்க...

 

அவள் முழிப்பதை பார்த்தவுடனேயே அவள் மனதில் ஓடுவதை கண்டு கொண்ட சூர்யா ஓரமாக நின்ற ஸ்ரீயை நடுவில் இழுத்து, ஏய் போங்கடி வந்த உடனேயே உங்க வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டிங்களா??.அவங்களெல்லாம் சும்மா விளையாடுறாங்க!.இவ ஒன்னும் உங்களை மாதிரி அடாவடி இல்ல!!உலகம் தெரியாதவ…??’

 

யாகூ…??” என்று கூச்சலிட்டவர்கள்,” பார்டா இப்பவே பொண்டாட்டிக்கு சப்போர்ட்ட..??ஸ்ரீயை பார்த்து பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணா இருக்க உனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையாம்மா… இவனை போய் கட்டியிருக்கிற…??”

 

ஸ்ரீக்கு அங்கு அழுகைவர தயாராகியது… கண்கள் கலங்கவும் சூர்யாவின் கையை பிடித்திருந்த ஒரு பெண் ஸ்ரீயை எட்டி கன்னத்தில் முத்தமிட்டு,

ஹாய் ஸ்விட்டி அழுதுராத நாங்க சும்மா சொன்னோம்.. பையன் ரொம்ப நல்லவன்…நாங்கல்லாம் லவ்வ சொல்லியும் ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டான்..அதுனால பொழைச்சு போறான் ஏத்துக்க…

 

அதற்குள் பெரிய கேக் ஒன்றை மேடையில் வைத்த அவன் நண்பர்கள் சூர்யாவையும் ஸ்ரீயையும் கேக் வெட்டச் சொல்லி கைதட்டி விசிலடித்து அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்…கண்ணாலேயே ஸ்ரீயை தன்னருகில் அழைத்தவன் அவள் கையில் கத்தியை கொடுத்து அவள் கையை பிடித்தபடி கேக்கை வெட்ட, படபடவென கைதட்டல் ஓசையும் அவர்களின் கூச்சலும் காதை பிளந்தது…  சூர்யா ஒரு பீஸை எடுத்து அவளுக்கு ஊட்டிவிடப்போக அவள் வெட்கப்பட்டு தலையை குனிந்து நிமிரவே இல்லை…

 

அவள் வெட்கத்தை பார்த்து பெண்கள் அனைவரும் கைதட்டி சிரித்து டேய் சூர்யா இந்த வெட்கமெல்லாம் எங்களுக்கு சுட்டுபோட்டாலும் வராதுடா..?. அதனால போனா போகுதுன்னு இந்த பொண்ணுக்கே உன்னை விட்டுக் குடுத்திட்டோம்… சூர்யாவும் சிரித்தபடி தலை நிமிர்ந்தவன் அப்போதுதான் கவனித்தான் கிஷோர் ஸ்ரீயையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தால் சாதாரண பார்வை போல தெரியவில்லை…

 

 ஸ்ரீயை பார்க்க அவள் குனிந்த தலையை நிமிரவே இல்லை … தன் மனைவி அருகில் நெருங்கியவன் அவள் தோளில் கைப்போட்டு நெருங்கி தன் கையில் இருந்த கேக்துண்டை அவளுக்கு ஊட்டி விட்டு,அவள் கையில் ஒரு பீஸை கொடுத்து தன் வாயில் வாங்கிக் கொண்டான்…

 

அடுத்து நண்பர்கள் பாட்டை போட்டு டான்ஸ் ஆடத்துவங்கியவர்கள் இவர்களை ஆட அழைத்தார்கள்… ஸ்ரீ ஆடவே மாட்டேன் என மறுத்தவளை வம்பு செய்து சூர்யாவோடு தள்ளி விட… அவர்கள் பின்னாலிருந்து சூர்யாவுக்கு மிகவும் பிடித்தமான பாடல் …

 

          ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
                காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
           கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே
                பாறை கல்ல ஒரு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே
           ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
                   வாடி நெருங்கி பாப்போம் பழகி

          உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
              கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
           உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
               அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே……

சூர்யா படிக்கும் காலத்திலிருந்தே நன்றாக நடனமாடுவான்…  ஆடத்தயங்கியவளை  தன் கைகளுக்குள் கொண்டு இரண்டு ஸ்டெப் ஆட, இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி சூர்யா அவள் இடுப்பில் கைகொடுத்திருக்க அவள் அவன் முதுகை அணைத்திருந்தாள்…

ஆடி முடித்தவுடன் அவர்கள் வேறு பாட்டை பிளே செய்ய அதை நிறுத்தியவன் டேய் போங்கடா…? போய் சாப்பிடுங்க …??”பெண்களை பார்த்தவன் தன் தந்தையை அழைத்து அவர்களை சாப்பிட அழைத்துச் செல்ல சில ஆண்கள் பார்ட்டி கேட்டு கொண்டிருந்தார்கள்…

 

Advertisement