Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
அத்தியாயம்  –  8
 
சூர்யா தன் கையில் முத்தமிடுவான் என ஸ்ரீ எதிர்பார்க்கவே இல்லை…...தன் கையில் மருதாணி டிசைனைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நினைத்திருந்தவள் பச் என்ற சத்தத்தில் சூடான அவன் இதழ்களோடு மீசையும் குறுகுறுப்பு மூட்ட  சட்டென அவனிடமிருந்து கையை பறித்தவள் கண்கள் சாசர்போல விரிய அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்… கையை பறிக்கவும் சூர்யாக்குள் ஏமாற்றம் குமிழிட்டாலும் தன்னை அடக்கியவன்… ஆமாண்டா டைவர்ஸ் பேப்பரையும் நீட்டிட்டு கையில முத்தமும் குடு…… இவ வேற இப்படி முழிக்கிறாளே… என்னமாச்சும் சொல்லி சமாளி…  
 
எதுக்கு இப்படி முழிக்கிற சாதாரண முத்தம் அதுவும் கையிலதானே கொடுத்தேன்….??”
 
ஸ்ரீக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்தது…. முத்தத்தில் அது என்ன சாதாரண முத்தம் ஸ்பெசலான முத்தம் எல்லாம் முத்தம்தானே… சூர்யாவுக்கு முத்தமிடும் உரிமை இருக்கிறதுதான்… இருந்தாலும்…..
 
என்ன யோசிக்கிற… என்னடா படக்குன்னு முத்தம் குடுத்திட்டனேன்னா… அங்க ரிசப்சனுக்கு என்னோட பெங்களூர்ல படிச்ச பிரண்ட்ஸெல்லாம் வருவாங்க… அவங்க கொஞ்சம் ஜாலியானவங்க அவங்க முன்னாடி இப்படி ஏதாச்சும் நான் செய்யுற மாதிரி இருக்கும்…ஒருவேளை அப்படி நான் முத்தம் குடுக்கும்போது இப்பிடி முழிச்சு வைக்காத… எனக்கே கொஞ்சம் பயமா இருக்கு…. அவங்களெல்லாம் தெறிச்சு ஓடிறாம….??”
 
பயமா… அதுவும் இவங்களுக்கா…. எதுக்கு பயம் ????”அவனிடம் முக்கியமான கேள்வியை கேட்க…
 
ம்ம்ம் நீ முழிக்கிறத பார்த்தா அவங்க எல்லாரும் என்னடா புருசன்தானே முத்தம் கொடுத்தான் இந்த பொண்ணு என்னன்னா பேய் அடிச்சமாதிரி இப்படி நிக்குதுன்னு நினைச்சிருவாங்க …போவமா…??”கெத்தாக அவளை அழைக்க…. நல்லவேளை எந்த பேய் என அவன் சொல்லவில்லை… சூர்யாவுக்கு இவள்தான் மோகினிபிசாசு போல தெரிந்தாள்….அவளை ஒரு குழப்பு குழப்பிவிட்டவன் அவள் தோளில் கைபோட்டு அழைத்துவர….. தன் மகனையும் மருமகளையும் பார்த்த சுபத்ராவுக்கு கண் கலங்கியது இருவரும் அவ்வளவு பொருத்தமாக ஒருவருக்கென்றே ஒருவர் பிறந்தவர்கள் போல… இருவரும் கீழே இறங்கி வரும்வரை அவர்களை பார்த்திருந்தவர் சாமி அறைக்கு சென்று விளக்கேற்றி சாமிகும்பிடச் சொல்லி தாத்தா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொல்லியவர் அடுத்து அப்பத்தாவிடம் வாங்கச் சொல்ல அவர்  அவருடைய அறையில்தான் இருந்தார்…
 
காலில் லேசான வலியை காரணம் காட்டி வரவேற்புக்கு வரமாட்டேன் என சொல்லியவரை தாத்தாதான் கடுமையாக பேசி அவரை கிளப்பியிருந்தார்… வேண்டா வெறுப்பாக கிளம்பி கொண்டிருப்பவரிடம்  ஆசிர்வாதம் வாங்க   இருவரும் அறைக்குள் நுழைவதை பார்க்கவும் அவரே ஒருநிமிடம் அவர்கள் ஜோடிப் பொருத்தத்தில் அசந்து விட்டார்… ஸ்ரீயிடம் இவ்வளவு அழகை எதிர்பார்க்கவில்லை… வேண்டா வெறுப்பாகவே அவளை பார்த்திருந்தவர் முதல்முறையாக தன் பேரனுக்கு மனைவியாக… ஜோடியாக வைத்து பார்க்கும்போது அவரை அறியாமல் அவர் மனம்  பொருத்தமான ஜோடி என ஒத்துக் கொண்டது.. தன்னிடம் காலில் விழுந்து ஆசிர்வாதத்திற்காக காத்திருக்க… இருவரையும் வாழ்த்தி திறுநீறு பூசிவிட்டவரை அவரது இரு பேத்திகளும் அவர்களுக்கு பின்னால் நின்று முறைப்பது தெரிந்தது…. தன் பேத்திகள் இருவரும் அழகுதான்… ஆனாலும் கம்பீரத்தில் ராஜா போல இருந்தவனுக்கு இவள் பொருத்தமான ராணியைபோல அவர் கண்ணுக்குத் தெரிந்தாள்…
 
தங்கள் பெற்றோரிடமும் ஆசிர்வாதம் வாங்கியவர்கள் காரில் கிளம்ப சூர்யா ஸ்ரீயோடு ப்ரியா மட்டும் ஏறிக் கொள்ள… மற்றவர்கள் அனைவரும் வேறு காரில் வந்தனர்..டிரைவர் காரை ஓட்டிவர  ஸ்ரீ நடுவில் அமர்ந்திருக்க அவளுக்கு இருபுறமும் கணவனும் ப்ரியாவும் அமர்ந்திருந்தனர்…
 
ஸ்ரீ ப்ரியா இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்கு…??”
நல்லா இருக்கா அண்ணி…ரொம்ப கிராண்டா இருக்கோ…??”
 
ச்சே…ச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு என்றபடி அவள் தாவணிக்குள் மறைந்துகிடந்த நெக்லஸை வெளியில் எடுத்துவிட… ப்ரியா தன் அண்ணியின் கையை ஆசையாக பிடித்துக் கொண்டவள்
 
நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க அண்ணி… சூர்யாவை பார்த்தவள் அண்ணா அண்ணி ரொம்ப அழகுதானேண்ணா…??”
 
அப்படியா… இரு நல்லா பார்த்து சொல்றேன்??” சீட்டில் சாய்ந்து அமர்ந்தவன் அவள் தோளில் கைபோட்டு அவளை மறுபடி பார்வையிட…
 
சூர்யாவின் லேசர்  பார்வை அவளுக்குள் ஒரு வெட்கத்தை கொடுத்தாலும் அதை மறைத்து ப்ரியாவோடு பேசியபடி வந்தாள்…ப்ரியாவும் இடையிடையே தன் அண்ணனோடும் பேசிக் கொண்டு வர சூர்யா அவளுக்கு பதில் சொல்லியபடியே ஸ்ரீயை நெருங்கி அமர்ந்திருந்தான்… தோளில் வைத்திருந்த கை அவ்வப்போது அவள் முதுகுக்கும் பிளவுஸுக்கும் இடையில் இருந்த வெற்று முதுகை தொட்டுச் செல்ல தன் முகத்தில் வந்துபோன உணர்வுகளை ப்ரியாவிடம் மறைப்பதே அவளுக்கு பெரிதாய் இருந்தது ப்ரியா இருந்ததால் அவனிடம் ஒன்றும் சொல்லவும் முடியாமல் தன் வெட்கத்தை….மறைத்தபடி  இவங்க என்ன இப்படி பண்ணுறாங்க….கடவுளே எப்பதான் மண்டபம் வருமோ  அடுத்து பத்து நிமிடத்தில் மண்டபம் வந்திருந்தது… இவர்கள் அங்கு வரும்போது மாலை ஆறு…. அப்போதே முக்கால்வாசி கூட்டம் வந்திருக்க இருவரும் மண மேடைக்கு சென்றவர்கள் அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு அங்கு அவர்களுக்கென போடப்பட்டிருந்த  அந்த அலங்கரிக்கப்பட்ட சிவப்பு வண்ண சோபாவில் அமர்ந்தனர்…
 
சுபத்ரா அவர்கள் இருவருக்கும் மாலையை கொண்டுவந்து கொடுத்து இருவரையும் மாற்றச் சொல்ல மேடையில் ப்ரியா, தருண், சுபா ,ஹரிஷ், அஜய், கமலி, சிந்தியா அனைவரும் நின்றிருந்தனர் முதலில் சூர்யா அவளுக்கு மாலையை போட்டு விட… அடுத்து ஸ்ரீ அவனுக்கு மாலையை போட வர அவன் உயரத்திற்கு அவளால் சற்று எக்கித்தான் போடவேண்டும்… ஆனால் இவள் போடவரும்போது அவன் தன் தலையை சற்று தள்ளி பின்னால் கொண்டு செல்ல… இவளால் போட முடியவில்லை… லேசாக எக்கி பார்த்தவள் முடியாமல் அப்படியே பேசாமல் நிற்க… மற்றவர்கள் அனைவரும் ஓஓஓஓவென சத்தம் எழுப்பவும்….ஸ்ரீக்குதான் வெட்கம் வந்து இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை…
 
அவனையே பார்த்தவள் ப்ளிஸ் ???”என கண்ணைச்சுருக்கி வாயை மட்டும் அசைக்க… அவள் முகமாவனையில் அவன் மனம் சிக்கிக் கொண்டது…. இவ கண்ணுக்குள்ள என்னமோ இருக்கு இந்த வசியம் வசியம்னு சொல்லுறாங்களே அதை இவ கண்ணுக்குள்ள வைச்சிருக்காளோ… ப்பா…செம….தான் இருக்கும் சூழ்நிலையை சற்று உணர்ந்தவன்…. அடிப்பாவி இவ அழகுல நான் மயங்கி இங்கேயே விழுந்துருவேன் போல…சூர்யா ஸ்டடி…ஸ்டடி… நீ பார்க்காத பொண்ணா எவ்வளவு பொண்ணுக உன்கிட்ட வந்து லவ்வ சொல்லியிருக்குக அப்பல்லாம் என்னமோ புடிக்கலைன்னு சொல்லிட்டு இவகிட்ட இப்படி தலைகுப்புற விழுந்து கிடக்கிற….நல்லபிள்ளை போல தலை குனிய அவள் சட்டென அவன் கழுத்தில் மாலையை போட்டுவிட்டாள்….
 
அடுத்தடுத்து அவன் தாத்தாவும் அப்பாவும் உறவினர்கள் தெரிந்தவர்களோடு மேடையேற எழுந்து நின்றவர்கள் அவர்களை வரவேற்று அவர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டு சூர்யாவுக்கும் அவர்களை தெரியும் என்பதால் இரண்டு வார்த்தை பேசிக் கொண்டிருந்தான்… கூட்டம் வரவர… ஸ்ரீக்கு அவன் அறிமுகப் படுத்தியவர்களை நியாபகப்படுத்திக் கொள்ளவே முடியாது போல இருந்தது… அந்த அளவுக்கு கூட்டம் பாதி காரைக்குடியே வந்திருக்கும் போல….. அனைவரும் பெரிய பெரிய தொழில் அதிபர்கள்…கட்சிக்காரர்கள்,…தனியார் பள்ளி….. கல்லூரி வைத்திருப்பவர்கள் என அந்த அளவுக்கு கூட்டம் ஸ்ரீக்கே இப்போதுதான் இவர்களின் தரம் தெரிந்தது… முதலில் சாதாரணமாக அவனை ஏதோ ஒரு இன்ஜினியர் என நினைத்திருக்க.. வந்தவர்களை அறிமுகப்படுத்தியபோது இவங்களுக்கு நம்ம தான் அபார்ட்மெண்ட் கட்டிக் கொடுத்தோம்..  .காலேஜ்…… ஹோட்டல்… காம்பளக்ஸ் கட்டிக் கொடுத்தோம் என சொல்ல சொல்ல அவன் சொன்ன சில இடங்கள் அவளுக்கும் தெரியும் அனைத்தும் சாதாரண கட்டிடங்கள் அல்ல…. பணத்தாலே இழைத்திருந்தார்கள்… .அந்த அளவுக்கு பணம் அதில் விளையாடி இருக்கும்… அவர்களோடு கூட வந்திருக்கும் அவர்களின் மனைவிகளும் நகைக்கடை விளம்பரங்களில் வருவதுபோல அவ்வளவு நகைகளை அள்ளிப்போட்டு … இவள் கட்டியிருந்த பட்டுப்புடவையை விட விலை உயர்ந்ததாய் கட்டியிருந்தார்கள்..
 
அத்தைகள் இருவரும் தத்தம் கணவரோடு யாரோ போல வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சென்றார்கள்… அதுவும் சூர்யாவுடனான தொழிலுக்காகத்தான்…. காமாட்சியும் சுபத்ராவும் உறவினர்கள் சிலபேரோடு மேடைக்கு வந்து சென்றார்கள்…. வந்திருந்த உறவினர்கள் அனைவரும் ஒன்று போல சொன்னது சூர்யாவுக்கு பொருத்தமான பொண்ணைப்பார்த்து முடிச்சிட்டிங்க….
 
அப்பத்தாவிடம் அவரை ஒத்த அப்பத்தாக்கள்…. நாங்களெல்லாம் நினைச்சோம் உன் பேத்திகள்ல இருந்துதான் ஒருத்திய கட்டுவன்னு ஆனா பரவாயில்ல காமாட்சி பேரன்னு அவங்களவிட ஒரு நல்ல பொண்ணா பார்த்து முடிச்சிருக்க… அவங்க குடும்பமே பரம்பரை பரம்பரையா எவ்வளவு அந்தஸ்தான குடும்பம்…. அந்த காலத்திலயே அவங்க அப்பத்தாவுக்கு 200 பவுன் நகை போட்டு கட்டி கொடுத்தாங்க… அவுகளுக்கும் ரொம்ப நல்ல மனசு….. அவங்க தாத்தா ரொம்ப தரமான மனுசன்… எவ்வளவு பேருக்கு எவ்வளவு உதவிக செஞ்சிருக்காங்க தெரியுமா வலது கை செய்யிறத இடது கைக்கு தெரியாம பார்த்துக்குவாங்கன்னு சொல்ற மாதிரி வாழ்ந்தவங்க… எங்க வீட்டுக்காரங்களுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்பட்டாங்க அந்த வீட்ல கல்யாண வயசில பொண்ணுங்க இருக்கிறது இப்படி தெரியாம போச்சேன்னு…ஒருபொண்ணுக்கு ரெண்டு பொண்ணு இப்படி தங்க விக்கிரகங்க மாதிரி இருந்திருக்குங்க..பார்க்காம விட்டுட்டோமேன்னு அங்கன பாருங்க எல்லாரும் கூடி கூடி பேசுறத…..  
 
ஏதோ அண்ணனும் அவங்களும் ரொம்ப சினேகிதமாமே… அதான் லட்டு மாதிரி பொண்ண புடிச்சிட்டிங்க…எங்க பேரன்களுக்கும்தான் பொண்ணு பார்க்கிறோம்… இம்புட்டு அழகோட இந்த மாதிரி பொண்ணு வாய்க்குமா…..ம்ம்ம்…பொறாமையில் பொங்கியவர்கள்….. பெருமூச்சுடன் அந்த இடத்தைவிட்டு நகர…அதுவரை தன் பேரன்தான் அந்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறான் என்று எண்ணியிருந்தவர் மற்றவர்கள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கேட்கவும்தான் அவர்களின் தரமும் தெரிந்தது… காசு பணம் மட்டுமே வைத்து ஒருத்தரை எடை போடக்கூடாதோ…. இப்போது பேசிச் சென்ற அனைவரும் அவர்களை விட வசதி உள்ளவர்கள் நமக்கே அது இடையிலதானே வந்தது… முதல் முறையாக வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர ஆரம்பித்தார்…..
 
அவர்கள் சொன்னது போல ஸ்ரீயின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அடுத்தவர்களுக்கு  உதவி செய்தவர்கள் படிப்பு, திருமணம்… ஏதாவது பள்ளி கல்லூரி கட்ட..திருவிழா நடத்த என எதற்காக என்றாலும் உடனே உதவி செய்வார்கள்…. ஸ்ரீயின் அப்பத்தாவும் அப்பாவும் அடுத்தடுத்து இறக்கவும்தான் அவர் தாத்தா இடிந்து போனார்… அப்போது ஸ்ரீக்கு ஏழு வயது சுபாவுக்கு ஆறு…. தருணுக்கு நான்கு வயது…. அதுவரை தன் பேரன் பேத்திகளோடு சந்தோசமாக இருந்தவர்….உலகம் இருண்டது போல இருக்க மனைவி இறந்ததிலேயே தன் பாதி பலத்தை இழந்திருந்தவர்… மகனும் இறக்க மீதி பலத்தை இழந்தார்… ஸ்ரீயின் அம்மாவுக்கும் அதே நிலைமைதான் திருமணம் ஆகி வந்ததிலிருந்து மாமியார் குடும்ப பொறுப்பு அனைத்தையும் பார்த்துக் கொள்ள கணவரோடு மகிழ்ச்சியாக இருந்தவருக்கு அடுத்தடுத்து குழந்தைகளும் வர அவர்களை வளர்ப்பதிலேயே அவர் கவனம் சென்றிருந்தது… மாமியார் திடிரென கேன்சரில் இறக்கவும்…கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது…. அவர் கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள அடுத்த வருடத்திலேயே அவர் கணவர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில்…. அவர் குற்றுயிரும் குலையுயிருமாக மாறியிருந்தார்…
 
பிள்ளைகள் மூவருக்கும் உலகம் தெரியவில்லை…குடும்ப சூழ்நிலை புரியவில்லை… குந்தி தின்றால் குன்றும் குறையும் என்பது போல இவர்களை வளர்ப்பதில் பாதிச் சொத்தும் போயிருக்க… இவர்கள் குடும்ப சூழ்நிலை தெரியாமல் உதவி கேட்பவர்களிடம் தாத்தாவும் தன் சக்திக்கு மீறி உதவி செய்திருந்தார்… கேட்டவருக்கு இல்லை என சொன்னது இல்லை… எல்லாம் போக மீதி இருந்தது ஒரு அறுபது எழுபது பவுன் நகைகளும் அந்த இரண்டு பெரிய வீடுகளும்தான்… அதில் ஒரு வீட்டை பராமரிக்க முடியாமல்தான் சூர்யாவிடம் சொல்லி இடிக்க சொல்லியிருந்தார் அவர்கள் இப்போது வேறு வீட்டில் இருந்தனர்   அவர்களுக்கு இருந்த சந்தோசம் இவர்களின் சிரிப்புதான் மூவரும் அடிக்கும் லூட்டியை பார்க்கும்போது இவர்களுக்கும் மகிழ்ச்சிதான் வரும்… அவர்கள் தாத்தாவும் எதற்கெடுத்தாலும் கோபமெல்லாம் படமாட்டார் …. அவர் கோபப்பட்டது என்று பார்த்தால் ஸ்ரீ திருமணத்தின் போதுதான்…. ஸ்ரீயோடு பேசவே மாட்டேன் என சொல்லி அமைதியாக அமர்ந்திருந்தார்…
 
அங்கு மேடையில் நின்று அனைவருக்கும் வணக்கம் சொல்லியே ஸ்ரீக்கு கை வலித்தது… பாதி பேர் மேடைக்கு வந்து சென்றிருக்க… நேரம் ஏழரையை கடந்திருந்தது….ஹரிஷின் பெற்றோரும் வந்திருக்க அவர்களிடம் முறைப்படி பேசி சேர்ந்து போட்டோ எடுத்து கொள்ளலாம் என சொல்லியவன் ஹரிஷையும்  அழைக்க… அதுவரை சுபா…. ஸ்ரீயோடு நின்றிருந்தவள் இப்போதுதான் தன் கணவனின் அருகில் வந்திருந்தாள்…ஹரிஷ்… சுபாவின் தோளில் கைபோட்டு தன் அருகில் நிறுத்தியிருந்தான்.
.அவன் தோளில் கைபோடவும்….ச்சு என்னங்க…??”
 
ம்ம் என்ன என்னங்க என்னடி வந்ததில இருந்து அந்த பக்கமே நிற்குற… என் பக்கம் வராம…??”
ம்ம்ம் இங்க அவங்களுக்குத்தான் ரிசப்சன் நமக்கில்ல…??”
 
அது எனக்கு தெரியுது… எனக்கு இப்பதான் ஒரு யோசனை ஓடுது நாமளும் ரிசப்சனை அன்னைக்கு சாயங்காலமே வைக்காம ஒருவாரம் தள்ளி வைச்சிருந்திருக்கலாம்னு….??”
 
களுக் என சிரித்தவள்…. ஏன்…??”
 
அதுவா அன்னைக்கு இருந்த மூட்ல உன்னைநான் நல்லா கவனிக்கவே இல்ல.. அந்த ரிசப்சனை என்ஜாய் பண்ணவும் இல்லை…. ஆனா இப்ப உன்னை பார்த்தா அப்படியே அதிரசம் மாதிரி இருக்கடி இந்த சேலையை நான் வாங்கும்போதுக்கூட உனக்கு இவ்வளவு பொருத்தமா இருக்குமுன்னு நினைக்கவே இல்லை… அப்படியே தகதகன்னு மின்னுற… இனிமே உன்னை அதிரசம்னு தான் கூப்பிடப்போறேன்…..??”
 
ம்கூம் சினுங்கியவள் அதென்னங்க அதிரசம் ம்ம்ம்…..பேர் நல்லாவே இல்லை….??”
 
ஏய் யாரு சொன்னா…. எங்க அம்மா செய்வாங்க பாரு அதிரசம் வெல்லத்துல பாகுகாய்ச்சி ஊத்தி நெய்யெல்லாம் ஊத்தி அப்படியெ பொலபொலன்னு இருக்கும் வாய்ல போட்டா கரைஞ்சிறும்…. போட்டதுதான் நியாபகத்துல இருக்கும் அவ்வளவு ருசி அதே மாதிரிதாண்டி நீயும் இருக்க….அப்படியே நான் முத்தம் கொடுத்தா உனக்குள்ளயே கரைஞ்சிருவேன் போல…. அப்படி இருக்கடி…நீ..இன்னும் இன்னும் வேணும் போல இருக்கு….உனக்கு அதிரசம்ங்கிற பேர் புடிக்கலைனா… வெல்லக்கட்டின்னு வைச்சிக்குவோமா??”
 
ஐயோ கடவுளே நீங்க எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்கோங்க… இப்படி மட்டும் பேசாதிங்க… எனக்கு என்னமோ மாதிரி இருக்கு??” அவள் கன்னமெல்லாம் ரோஸ் கலரில் சிவந்திருக்க… வெட்கத்தில் தலையை குனிந்திருந்தாள்… இருவரும் தங்களுக்குள்ளேயே குசுகுசுவென பேசிக் கொண்டிருப்பதை கண்ட சூர்யா…
 
என்ன ஹரிஷ் ரொம்ப நேரமா பேசுறிங்க என்ன சொல்றாங்க சுபா…??”
 
ம்ம்ம் எங்க சூர்யா அவளும் பேச மாட்டேங்கிறா என்னையும் பேசாம இருக்கச் சொல்றா… அது முடியுமா என்னால….??”
 
ஹா…ஹா….ஹா… என சிரித்தவன் போட்டோ எடுத்து முடியவும் தருணை வரச் சொல்லி ஹரிஷ் பெற்றோரை சாப்பிட அழைத்துச் செல்ல சொல்லவும் ஹரிஷும் சுபாவும் தன் பெற்றோருடன் கூடவே சென்றிருந்தனர்….
 
அவர்கள் இறங்கவும் ஸ்ரீயின் முகத்தை பார்த்தவன் அதில் களைப்பு தெரியவும்… என்னாச்சு….ரொம்ப டயர்டா இருக்க குடிக்க ஜீஸ் கொண்டுவரச் சொல்லவா…??” மெதுவாக அவள் கையை பிடித்தவன் அவள் விரல்களோடு தன் விரல்களை கோர்க்க
 
ஸ்ஸ்ஸ்…. இன்னும் ஆளுங்க வருவாங்களா இல்ல அவ்வளவுதானாங்க…??”
 
முடிஞ்சிச்சு இன்னும் கொஞ்சபேர்தான்..??”
 
 போட்டோகிராபர் மேடையில் ஏறியவர் ஸார் உங்க ரெண்டுபேரையும் கொஞ்சம் தனியா போட்டோ எடுத்துக்கவா…??”
 
சூர்யா ஸ்ரீயை பார்க்க அவள் தலையை ஆட்டவும் அவர் தன் வேலையை ஆரம்பித்திருந்தார்… ஆரம்பத்தில் சாதாரணமாக நிற்க வைத்து எடுத்தவர் போக போக தோளில் கைவைத்து, பின்புறமாக நின்று அவளை அணைத்து பிடித்தாற்போல… இடுப்பில் கைவைத்து அணைத்து என எடுக்க சூர்யாவுக்குள் உற்சாகம் குமிழிட்டதென்றால் ஸ்ரீக்கு கூச்சமும் வெட்கமும் தாளவில்லை… சூர்யாவும் கிடைத்த சான்ஸை மிஸ்பண்ணவில்லை… அவர் சொன்னதோடு கூடுதலாகவே போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்…அடுத்து கன்னத்தோடு கன்னம் வைக்கச் சொல்ல….. இவ்வளவு பேர் முன்னாடியா…. மெதுவாக அங்கு அமர்ந்திருப்பவர்களை பார்க்க கை அவன் கையை இறுக பிடித்திருந்தது…
 
அவள் கையின் இறுக்கத்தை கண்டவன் அவளை நிமிர்ந்து பார்க்க அவள் பார்வை ஓரிடத்தில் நிலைத்திருக்கவும் அவனும் பார்க்க கடைசி வரிசையில் கிஷோர் அமர்ந்து இவர்களைதான் பார்த்துக் கொண்டிருந்தான்…..இதுவரை உற்சாகத்தோடும்…. உல்லாசத்தோடும் … மகிழ்ச்சியோடும் இருந்த சூர்யாவும்….கலகலவென சிரிப்போடும் சூர்யாவின் அண்மையால் ஏற்பட்ட வெட்கத்தோடு நின்றிருந்த ஸ்ரீநிதியும்……….அப்படியே முகம் மாறினார்கள்…..!!!!!!!!
 
                             இனி………..????????

Advertisement