Advertisement

சூர்யா தனக்கு ரிசப்சனுக்கு போடுவதற்கென கோர்ட்டை செலக்ட் செய்து கொண்டே அவளை பார்வையிட அவளும் அடுத்தடுத்து அவர்கள் எடுத்துப் போட்டதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்… அதில் ஒன்று அவளுக்கு மிகவும்பிடித்து போக அதையே எடுக்க சொல்வோமா என நினைத்து அவள் சூர்யாவை பார்க்க அவன் வேறொன்றை கையில் வைத்திருக்கவும் எதுவும் சொல்லாமல் கீழே வைத்து விட்டாள்…தான் கையில் வைத்திருந்ததை காட்டியவன் இது நல்லாயிருக்கா??” என கேட்க அவள் தலையை தலையை ஆட்டிவிட்டு சற்று நகர்ந்து அங்கு சுவற்றில் ஒட்டியிருந்த மாடல்களை பார்வையிட ஆரம்பித்தாள்.. ஒருவாறு துணிகளை எடுத்தவர்கள் தங்கள் வீட்டிற்கு கிளம்ப வழியிலேயே சூர்யா தன் குடும்பத்தை ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்று சாப்பிட வைத்துதான் வீட்டிற்கு அழைத்து வந்தான்… அவன் அப்பாவும் தாத்தாவும் முக்கியமானவர்களை நேரிலேயே அழைக்கச் சென்றிருந்தனர்…

 

 

 அப்பத்தாவோ தான் கடைக்கு வர முடியாது என கோபமாக சொல்லிவிட்டதால் கமலியும் சிந்தியாவும் வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்கள் கடைக்கு வந்திருந்தார்கள்… அவர்களுக்கும் கடைக்கு வர ஆசையிருந்தாலும் அப்பத்தா வந்தால்தான் இவர்கள் ஆட்டம் அங்கு செல்லுபடியாகும் … அதோடு காலையில் தங்கள் அப்பாவையே அவ்வளவு தூரம் சூர்யா எதிர்த்து பேசியதால் அவன் மேல் ஒரு கோபத்தோடுதான் இருந்தார்கள்…  அவர்கள் இருவரும் ஒருநாளும் சூர்யாவை விரும்பியதில்லை… படிக்கும் காலத்தில் அவன் ஹாஸ்டலில் இருந்து லீவுக்கு இங்கு வரும்போது அவனிடம் வழிய பேச சென்றாலும் அவன் ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்திவிடுவான்… ஆர்வமாக ஒரு பார்வையோ பேச்சோ இருக்காது.. அதனால் இவர்களுக்கும் அவன் மேல் ஆர்வம் குறைந்தது..இவ்வளவு அழகோடு இருவரும் அவன் பார்வையில் அடிக்கடி பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களை ஒரு ஜடப்பொருளை போல பார்ப்பவன்மேல் அவர்களுக்கு காண்டாக இருக்கும்….

 

படிப்பு முடிந்து சூர்யா தொழிலை கையிலெடுத்தபின் அவனின் அசுர வளர்ச்சியில் வாய்பிளந்த அவனுடைய அத்தை மாமாவுக்குதான் சூர்யாவை வளைத்துபோடும் எண்ணம் வந்து தங்கள் மகள்களை அடிக்கடி தன் தாய்வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்…ஆனால் இவர்கள் இருவரும் வரும்போது பெரும்பாலும் சூர்யா வீட்டிலேயே இருந்ததில்லை… அப்படியே வீட்டில் இருந்தாலும் ப்ரியாவோடு பேசிக் கொண்டிருப்பான் இல்லையென்றால் லாப்டாப்பிற்குள் தலையை கொடுத்தபடி உட்கார்ந்திருப்பான்… தன் அன்னையிடம் ஏற்கனவே பேசி முடிவு செய்திருந்ததால் அனைவரும் தைரியமாகதான் இருந்தார்கள்…எப்படியும் இருவருள் ஒருவருக்குத்தான் சூர்யா என்று ஆனால் அவர்கள் ஆசை நிராசையாயிற்று…

 

இன்று அனைவரும் துணிக்கடைக்குச் சென்றவுடன் காமாட்சி தன் பேத்திகள் இருவரையும் வறுத்தெடுத்து விட்டார்….. ஒன்னுக்கு ரெண்டுபேர் இருக்கிங்க ஒத்த மாமன் மகன உங்கள கட்டிக்க சொல்ல துப்பில்லை….  அவன் கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனைதரம் வீட்டுக்கு வந்திங்க… நல்லா சாப்பிட்டு அந்த ப்ரியா கழுதையோடயும் அவ அம்மாக்கூடவும் சண்டை போட மட்டும் தெரிஞ்சிச்சு இப்ப பாருங்க எவளோ ஒருத்தி வந்து என்பேரனை அவ கைக்குள்ள வைச்சிக்கிட்டா… நீங்களெல்லாம் இருக்கிங்களே…. எதுக்கும் லாயக்கில்லாம ஒன்னு மட்டும் நினைச்சுக்கோங்க அவங்க எல்லாரும் சொல்லுற மாதிரி ஊரைக்கூட்டி வரவேற்பு வைச்சிட்டா அப்புறமா அவதான்  இந்த வீட்ல நிரந்தரமா இருப்பா நீங்க…. இப்படியே  விருந்தாளி மாதிரி இருக்க வேண்டியதுதான்… அதுவும் நான் உசிரோட இருக்கிறவரைக்கும்தான் அப்புறம் இப்ப வந்திருக்கிறவ உங்களை இங்க வாசப்படியில காலவைக்க விடுறாளோ என்னமோ…. போங்க போய் அந்த வரவேற்பை நிப்பாட்ட ஏதாச்சும் வழியிருக்கான்னு பாருங்க இல்லை என்ன வேணா செஞ்சு அவள அதுல கலந்துக்காம இருக்கவைக்க பாருங்க.. போங்க … போங்க??” அவர் திட்டவும் இருவரும் வெளியில் இருந்த சோபாவில் அமர்ந்து ஸ்ரீயை என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்கள்….

 

வரவேற்பிற்கான எல்லா வேலையும் ஜரூராக நடந்து கொண்டிருக்க சூர்யாவும் தன் நண்பர்களுக்கு வரவேற்பில் கலந்து கொள்ளச்சொல்லி வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்திருந்தான்… கிஷோருக்கு தகவல் சொல்லவே இல்லை…. ஆனால் இங்கே வருவதற்கு என்ன வழி என்று யோசித்து கொண்டிருந்த கிஷோருக்கு அங்கிருந்த வேறு நண்பர்கள் மூலம்  இந்த வரவேற்ப்பை பற்றி தெரியவுமே இங்கே வர முடிவு செய்துவிட்டான்… ஸ்ரீயை பார்த்து பேசி அவளை எப்படியாவது இங்கே அழைத்து வந்துவிடவேண்டும் என நினைத்தான்….

 

துணிக்கடைக்கு ஒன்றாக சென்றுவந்த பிறகு சூர்யாவை ஸ்ரீ பார்க்கவே முடியவில்லை… அவனுக்கு தன் தொழிலோடு இந்த ரிசப்சன் வேலையும் சேர்ந்து கொள்ள இரவு பத்துமணிக்குதான் வீட்டிற்கே வருவான் அதற்குள் ஸ்ரீ சோபாவில் படுத்து தூங்கியிருப்பாள் அவளிடம் கிஷோரை பற்றி பேச நினைத்தாலும் தூங்கும் அவளை எழுப்ப மனதிருக்காது… அவள் போட்டுக்கொள்ள நகைகளை ஆசாரியை வீட்டிற்கே வரச் சொல்லி அவன் தாத்தாவும் அப்பாவும் சுபத்ராவை வைத்து  தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தனர்…. இன்னும் இரண்டுநாளே இருந்தது வரவேற்பிற்கு…. அன்று காலை தூங்கி எழுந்த ஸ்ரீ பால்கனிக்கு வந்து அந்த லவ்பேட்ஸோடு சற்றுநேரம் செலவிட்டவள் அவற்றிற்கு இரைகளை எடுத்து போட்டு உள்ளே வர எப்போதும் போல சூர்யாவை காணவில்லை… இவங்க எப்பவுமே வீட்ல இருக்க மாட்டாங்களா… தன் போக்கில் குளித்து உடைமாற்றியவள் கீழே இறங்கிவர…ஹாலில் யாரையும் காணவில்லை அத்தை உள்ள கிச்சன்ல இருக்காங்களோ…. வேகமாக படிகளில் இறங்கிவந்தவள் கீழ்படியிலிருந்து தரையில் கால்வைத்ததுதான் தெரியும் கால் வழுக்கிக் கொண்டு செல்ல…..போச்சு இன்னைக்கு மண்டை உடையறது நிச்சயம் என நினைத்தவள் தலை கீழே தொடும்முன் சூர்யாவின் ஒரு கை அவளை அணைத்து பிடித்திருந்தது…

 

கை காலெல்லாம் வெடவெடவேன நடுங்க கண்ணை நறுக்கென மூடியிருந்தவளை இடுப்போடு கைகொடுத்து தூக்கியவன் அங்கு ஹாலில் இருந்த சோபாவில் அமர வைக்க… ஏன் இப்படி வேகமா ஓடிவர்ற…மெதுவாவே நடக்கத் தெரியாதா… அவள் கன்னத்தை தட்டியவன்….ஏய் என்னாச்சு…??”

 

படபடவென அடித்த மனது லேசாக சமநிலைக்கு வரவும்….. மூச்சை இழுத்து விட்டவள்…இல்லையே நாம அவ்வளவு வேகமா ஓடிவரலையே கொஞ்சமாத்தானே வேகமா வந்தேன்… அதற்குள் கிச்சனில் இருந்து சுபத்ரா குரல்கேட்டு வெளியில் வர ப்ரியாவும் தோட்டத்தில் இருந்து உள்ளே வந்திருந்தாள்….என்ன சூர்யா என்னாச்சு ??” வேகமாக தன் மருமகளை நோக்கி வர…

 

ம்ம்ம் இப்ப மட்டும் நான் வரலைனா உங்க மருமக தரையில விழுந்து புதையல் எடுத்திருப்பாமா…??”தரையில் அமர்ந்தவன் அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்து அதை சோதித்து பார்க்க…அதிர்ச்சியானவள் தன் காலை அவன் மடியிலிருந்து  எடுக்க முயற்சித்தவளை… ஒரு முறை முறைத்தவன் அவளுக்கு அடிப்பட்டிருக்கிறதா என பார்த்தபிறகே விட்டான்… இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது… இது இவங்கதானா…. அவன் கைதொட்ட இடம் அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்த முகம் ஜிவ்வென சிவந்திருந்தது… அவள் காலைத்தொட்ட அவனுக்கும் அதே நிலைதான்….சோதித்து பார்த்ததோடு மட்டும் நிறுத்த மனமில்லாமல் வேறு எங்கோ சென்ற மனதை அடக்கி அவள் காலை விட்டவன் எழுந்து ஸ்ரீக்கு அருகில் சோபாவில் அமர்ந்து தன்னையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த  தாயையும் தன் அருகில் அமர வைத்து...வள்ளி அக்கா எங்க எல்லாருக்கும் காப்பி ??”உள்ளே கிச்சனை பார்த்து குரல் கொடுக்க…

 

அவர்களுக்கு பின்னால் இருந்து ஐயோ அம்மா ??”என்ற அலறல் கேட்டது காமாட்சியும் வழுக்கி கீழே விழுந்திருந்தார்…  அனைவரும் பதறிபோய் ஓட அவரால் எழுந்து நிற்க முடியவில்லை… இப்போதுதான் பார்த்தார்கள் கீழே எண்ணெய்போல ஏதோ சிந்தியிருப்பதை…. ஸ்ரீயோ அதானே பார்த்தேன் நம்ம எப்பவுமே ஓடித்தானே வருவோம்… இன்னைக்கு நடந்துவந்தும் கீழ விழுந்துட்டமேன்னு நினைச்சோம்…அப்ப தப்பு நம்ம மேல இல்ல அந்த எண்ணெய் மேல… சூர்யா அப்பத்தாவை தூக்கியவன் அவர் அறைக்கு கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்து தன் குடும்ப மருத்துவருக்கு போன் செய்து அவரை உடனே வரவழைத்தான்….அவரோ கையையும் நீட்ட முடியாமல் வேதனையில் அனத்திக் கொண்டிருந்தார்..டாக்டர் வந்து சோதனை செய்து பார்த்துவிட்டு

நல்லவேளை எலும்பு முறியலைன்னு நினைக்கிறேன்….  சூர்யா இவங்கள ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வாங்க எக்ஸ்ரே எடுத்து பார்த்துட்டு அடுத்து என்னன்னு நான் சொல்றேன்??”

 

அவன் டாக்டரோடு பேசிக் கொண்டே வெளியில் செல்லவும் காமாட்சி வலி வேதனையில் கண்ணை மூடி படுத்திருந்தார்…. ஸாரி பாட்டி??” கோரஸாக தன் பேத்திகள் இருவரின் குரலை கேட்கவும் கண்ணைத்திறந்து பார்த்தவர்…

 நீங்க என்ன பண்ணுவிங்க நான்தான் பார்க்காம கீழ சிந்தியிருந்த எண்ணெய்மேல கால வைச்சிட்டேன்… ஆனா அங்க எப்படி எண்ணெய்???” அவர் சிந்திக்க ஆரம்பிக்க.

 

நாங்கதான் பாட்டி அங்க எண்ணெய ஊத்தினோம்…??”

என்னது நீங்களா.. ??”அவர்களை பார்த்து முறைக்க…

 

நீங்க ஏன் பாட்டி அங்க வந்திங்க… நாங்க அந்த ஸ்ரீ கீழ விழட்டும்னு தானே ஊத்திவைச்சோம்??”

 

ம்ம்ம் அந்த கர்மத்தை நான் என்னத்தடி கண்டேன்… குடும்பமே உட்கார்ந்து கூத்தடிக்குதுகளே என்னவாயிருக்கும்னு வேகமா பார்க்க வந்தேன்… அதுதான் இப்ப எனக்கு வினையாப்போச்சு…??”அதற்குள் சூர்யா அறைக்குள் வர அவனோடு ஹாஸ்பிட்டலுக்கு சென்றவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரச்சனை இல்லையென்பதால் வலி வேதனைக்கு மருந்து மாத்திரைகளோடு இரண்டு மூன்று நாட்களுக்கு அதிகம் நடக்கவேண்டாம் என்ற டாக்டரின் அறிவுரையோடு வீட்டிற்கு வந்திருந்தார்…

 

நாட்கள் வேகமாக விரைந்து அவர்கள் வரவேற்பு தினமும் விடிய… அங்கு கிஷோர் நேற்றே இங்கு வந்து ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்தான்…மாலையில்தான் வரவேற்பு ஸ்ரீயின் அம்மாவும் தாத்தாவும் நேரடியாக மண்டபத்திற்கே வருவதாக சொல்லி இருக்க…கமலியும் சிந்தியாவும் ஏதாவது ஒரு சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ஸ்ரீயை பழிவாங்க….. அப்பத்தாவிற்கு இருந்த கால்வலி மற்ற அனைத்தையும் பின் தள்ளி இருந்தது…

 

பியூட்டி பார்லரில் இருந்து வந்த இரு பெண்கள் ஸ்ரீக்கும் ப்ரியாவும் மேக்கப் போட்டுவிட்டு சேலையை கட்டிவிட்டு செல்ல ப்ரியாவும் பாவாடை தாவணியில் ஜொலித்தாள்… கீழே தன் தாயின் குரல் கேட்க…

அண்ணி அம்மா கூப்பிடுறாங்க இதோ வந்துருறேன்??” பூவை சரி செய்தபடி கீழே இறங்கி செல்ல

 

சூர்யா இன்னும் கிளம்பவில்லையே என்ற யோசனையில் தன் அறைக்குள் நுழைந்த ஸ்ரீ அப்படியே நின்றுவிட்டாள்… அங்கு சூர்யா அன்று அவள் கையில் வைத்திருந்த கோர்ட்டை போட்டு ஒரு ராஜகுமாரனை போல நின்று கொண்டிருக்க… இவளும் அவன் எடுத்திருந்த அந்த பச்சை பட்டில் தான் ஜொலித்தாள்.. தேவதை போலிருந்தவளை நெருங்கியவன் பார்வை அவளை அங்குலம் அங்குலமாக பார்வையிட்டது உச்சியிலிருந்து பாதம் வரை பார்வையிட்டவன் மெதுவாக அவள் கையை பிடிக்க….. அவனின் ஆளுமையில். கம்பீரத்தில்,தோற்றத்தில் அதிலும் அவன் பார்வை மாற்றத்தில் அவனை  நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்திருந்தவள் தன் கையோடு இணைந்திருந்த அவன் கையை பார்க்க அவன் முரட்டு கைக்குள் அவள் கை பாந்தமாக அடங்கியிருந்தது… அவள் மேலிருந்து வந்த பூவோடு கலந்த அவளின் மனம் அவனை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசம் இழக்க வைக்க.. தான் பிடித்திருந்த  அவள் கையை மெதுவாக விரித்து பார்க்க அவள் போட்டிருந்த மருதாணி டிசைன் அவள் முழங்கை வரைக்கும் சிவந்திருந்தது…. அவள் எலுமிச்சை நிறத்திற்கு அந்த அடர்ந்த சிவப்பு நிறம் ரொம்ப எடுப்பாக இருந்தது… விரலில் அவன் வாங்கி கொடுத்திருந்த ஒற்றை வைரம் பதித்த மோதிரம் ஜொலிக்கவும் அதை பார்த்தவனுக்கு முத்தமிட தோன்ற தன் உதட்டின் அருகே அவள் கையை கொண்டுச் சென்று அவள் இரு உள்ளங்கையிலும் தன் முத்தத்தை பதித்திருந்தான்…..

 

                                                                       இனி……………….?????

 

Advertisement