Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ

      அத்தியாயம்   –  7

 

ஸ்ரீ கையெழுத்து போட்டிருந்த டைவர்ஸ் பேப்பரை பார்க்கவும் சூர்யாவுக்கு ச்சே…. என்றானது.. இது இவ கைக்கு எப்படி போச்சு…போனா அவ கையெழுத்து போடலாமா….. அவனுக்கு புஸ்புஸ்ஸென்று கோபம் பெருக அவன் ஒரு மனமோ டேய் நீ வக்கில்கிட்ட பேசி டைவர்ஸ் பேப்பர ரெடி பண்ணினது தப்பு இல்லை… அவ அதை பார்த்தது தப்புன்னு நினைக்கிறியா அப்படியே கட்டிலில் அமர்ந்தவன்… முடியாது என்னால இவள டைவர்ஸ் பண்ண முடியாது… அத போய் இப்ப சொன்னா இவ நம்புவாளா …முதல்லயே வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கனும் கோபம் வந்தா என்ன பேசுறோம்னு தெரியாம வாயவிட்டு டைவர்ஸ்ன்னு அவகிட்ட முந்திரி கொட்டை மாதிரி சொன்னதும் இல்லாம அப்பவே போன பண்ணி வக்கில் கிட்டயும் பேசின…  அந்த வக்கிலும் உடனேவா அத ரெடி பண்ணி என் கையில கொடுக்கனும்… ஏன்தான் டைவர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணச் சொன்னமோ…. தன்னையே நொந்து கொண்டவன்

 

எழுந்து பால்கனிக்கு செல்ல அங்கிருந்த சேரில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீ…. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்….??”

 

அவனை நிமிர்ந்து பார்க்க கண்கள் கலங்கி போய் இருந்தது… நேற்று இரவெல்லாம் சிரித்து கும்மாளமிட்டு குழந்தைதனமாய் இருந்தவள் இப்போது இப்படி… அவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது..காலையில் தான் முத்தமிட்டபோது தனக்கிருந்த மனநிலையை நினைத்து பார்த்தவன்….ச்சே…அந்த பேப்பர பேசாம கார்க்குள்ளயே வைச்சிருக்கலாம்…

 

ஸ்ரீயோ நான்தான் ஒன்னுமே சொல்லாம கையெழுத்து போட்டுக் கொடுத்திட்டனே… இப்பவே என்னை அங்க வீட்ல விட்டுருவிங்களா…??”அதைத்தான் தன் வீடு என்று சொன்னவள்தான் இந்த வார்த்தையை கேட்டாள்…. கேட்கும்போதே கண்ணில் நீர் பெருகியது அவனுக்கு தெரியாமல் வேறுபக்கம் திரும்பி அதை மறைத்தவள் அந்த லவ் பேர்ட்ஸை பார்ப்பது போல திரும்பி நின்று கொள்ள….

 

அவள் குரலில் வேறுபாட்டை உணர்ந்தவன்...நீ நினைக்கிறது மாதிரி டைவர்ஸ் உடனே கொடுக்க மாட்டாங்க …கல்யாணம் பண்ணி ஒருவருசமாவது நாம ஒன்னா இருக்கனுமாம் அப்பதான் டைவர்ஸ் கிடைக்கும்னு வக்கில் சொன்னார்… அதுனால இந்த ஒருவருசமும் நாம ரெண்டுபேரும் ஒன்னா இருந்து பார்ப்போம்….அதோட…. அவன் இழுத்தவன் உள்ள வா??” கட்டிலில் அமர்ந்தவன் அவளை தன் அருகில் அமர சொல்ல… சற்று தள்ளி அமர்ந்தவள் தன் கைவிரல்களை பார்த்துக் கொண்டிருக்க…

 

உங்க தாத்தா கல்யாணம் பண்ணி மூனே நாளுல அங்க போனா உன்னை சேர்த்துக்குவாங்களா…??”

 

தன் கைகளில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்தாள்… கண்டிப்பா தாத்தா ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க… நேத்துதான் ரெண்டு வார்த்தை நம்மகிட்ட பேசினாங்க.. இன்னைக்கு காலையில கூட என்னன்ன சொன்னாங்க இவங்களுக்கும் இவங்க குடும்பத்துக்கும் நம்மளால எந்த பிரச்சனையும் வரக்கூடாது… அவங்க சொல்றத கேட்டு நடக்கனும்தானே சொன்னாங்க… அவள் இன்னும் இன்னும் அழ…

 

அவள் அருகில் இன்னும் நெருங்கியவன்… அவளை தன் மார்போடு அணைத்து கொள்ள… அவளுக்கும் இந்த அணைப்பு தேவையாய் இருந்தது… நேற்றிலிருந்து தன் தாயும் தாத்தாவும் இவர்தான் இனி உனக்கு எல்லாமே என ஒரு நூறு முறையாவது சொல்லியிருந்தார்கள்….அதனால் இவன் தன்னவன் என்ற எண்ணம் அவள் மனதிற்குள் இப்போதுதான் வேரூன்ற ஆரம்பித்திருந்தது…

 

சூர்யாவோ அவள் முதுகை தடவி கொடுத்தவன்… இதோ பார் அழாத எல்லாத்தையும் இன்னும் ஒருவருசத்துக்கு அப்புறமா பார்த்துக்கலாம்… கல்யாணம்ங்கிறது சாதாரண விசயம் இல்ல… இப்ப எதையும் நினைக்காத… நீ நீயாவே இரு… இப்படி அழு மூஞ்சியா இல்லாம சிரிச்சிக்கிட்டே இருக்கனும்… அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன்…சாயங்காலம் கிளம்பி தயாரா இரு… ரிசப்சனுக்கு டிரஸ் வாங்க போகனும்..??”

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. கண்ணைத்துடைத்தபடியே…. தன் கோலிக்குண்டு கண்ணை வைத்து உருட்டியபடி ….. நமக்குதான் டைவர்ஸ் ஆக போகுதே அப்புறம் எதுக்கு ரிசப்சன்… அத வேணா நீங்க வேற பொண்ண கட்டினதுக்கு அப்புறமா  வைச்சிக்கோங்க… இப்ப ஏன் தேவையில்லாத செலவு…??”தன் சந்தேகத்தை கேட்க…

 

அவளை முறைத்து…போடி முண்டக்கண்ணி என மனதால் நினைத்தவன்….செலவு பத்தி நீ ஒன்னும் கவலை படவேண்டாம்… டைவர்ஸ பத்தி இப்பதானே பேச வேண்டாம்னு சொன்னேன்… அது ஒருவருசத்துக்கு அப்புறம்தான் …அதுவரைக்கும் எனக்கு நீ உனக்கு நான் மட்டும்தான்… அப்புறம் நான் வேற கல்யாணம் பண்ணப்போறனோ இல்லையோ…. அதனால இந்த ரிசப்சன நாம நல்லா கிராண்டா பண்ணிருவோம்… நீ இத பத்தி யோசிச்சு உன்னோட சின்ன மூளைக்கு வேலை கொடுக்காம ரிசப்சனுக்கு என்ன மாதிரி டிரஸ் பண்ணலாம்…என்ன மேக்கப் போடலாம்னு முடிவு பண்ணு……சரியா…??”

 

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி பேசிக் கொண்டிருந்தவர்கள் ஸ்ரீ…. மெல்ல தன் சுயநினைவுக்கு வந்து… அவனை விட்டு விலகிச் செல்ல பார்க்க…அவள் உச்சியில் தலை பதித்திருந்தவன் அவள் கன்னத்தை தட்டிவிட்டு விலகிச் சென்றான்…. அவன் தொட்ட இடம் இவளுக்கு குறுகுறுவென இருந்தது…

 

அன்று மாலையே தன் குடும்பத்தை ஹரிஷின் துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவன் முதலிலேயே தகவல் சொல்லியிருந்ததால் சுபாவும் ஹரிஷும் அங்குதான் இருந்தனர்… ஏற்கனவே அடிக்கடி இந்த கடைக்கு வந்துள்ளதால் எங்கெங்கு என்ன கிடைக்கும் என ஸ்ரீக்கும் சுபாவுக்கும் தெரியும்…ஹரிஷ் கூடவே  ஒவ்வொரு செக்சனுக்கும் அழைத்து சென்றான்… முதலாளியே அவர்களோடு வரவும் கடை ஊழியர்களும் பணிவோடு அவர்களுக்கு அனைத்தையும் விரித்து காட்ட ஆரம்பித்தனர்… முதலில் பட்டுச் சேலை பிரிவுக்கு சென்றவர்கள் சூர்யா ஸ்ரீயை வேண்டியதை பார்த்து எடுக்கச் சொல்ல… அவள் அந்த பொறுப்பை சுபத்ராவிடம் ஒப்படைத்தாள்

 

சுபத்ரா தன் மருமகளுக்காக நாலைந்து விலை உயர்ந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை தேர்வு செய்ய சுபாவும் அதை ஆவலுடன் பார்ப்பதை கண்ட ஹரிஷ் அவள் காதருகில் குனிந்தவன்…

 உனக்கும் பிடிச்ச சேலையை எடுத்துக்கோடி…??”

 

அவனை பாவமாக பார்த்தவள் மாமா எனக்கும் பட்டுச் சேலையெல்லாம் பார்த்து எடுக்கத் தெரியாதே…??”

 

 

 மற்றவர்கள் பார்வை துணிகள் மேல் இருப்பதை பார்த்தவன்…. அவள் கையோடு தன் கையை வைத்து அழுத்தி… இப்படி பார்க்காதடி மாமா இங்கேயே பிளாட் ஆயிருவேன் போல….உனக்கு தெரியாட்டா என்ன மாமாவுக்கு தெரியும்ல என் பொண்டாட்டிக்கு எப்படி பட்ட சேலையை எடுத்து கொடுக்கனும்னு…??”அவள் தோளில் கைபோட்டு தன் பக்கம் இழுத்தவன் போன்வர… அவன் தந்தைதான் அழைத்திருந்தார்.

.. ம்ம்ம் சொல்லுங்கப்பா…??”

 

டேய் நல்லவனே நீ அங்க என் மருமகளோடு ரொமான்ஸ் பண்றதெல்லாம் இங்க கேமராவுல தெரியுதுடா…..??”

 

ஹா….ஹா…ஹா… என சிரித்தவன்… அதெல்லாம் நீங்க ஏன்பா பார்க்கிறிங்க… வேற செக்சன்ல இருக்க கேமராவ வாட்ச் பண்ணுங்க இந்த செக்சன்ல நாங்க மட்டும்தான் இருக்கோம் யாரும் எதையும் எடுத்துர மாட்டாங்க… நீங்க வந்ததுக்கு உங்க வேலையை மட்டும் பாருங்க…வீட்ல இருந்து ரெஸ்ட் எடுங்கன்னா கேட்க மாட்டேன்னு அம்மா சொன்னாங்கன்னு இங்க வந்து என்னை வாட்ச் பண்ணுறிங்களா… இதெல்லாம் பேட் டாடி… அவரிடம் அரட்டை அடிக்க அவரின் சிரிப்பு குரலும் போன் வழியே கேட்டது… அவர்களின் குடும்பமே அப்படித்தான் எப்போதும் மகிழ்ச்சியாக, எளிமையாக, அடுத்தவர்களை பார்த்து பொறாமை படாமல், அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் எது வந்தாலும் ஏற்று கொள்ளும் பக்குவத்தில்தான் இருப்பார்கள்… அதனால்தான் சுபாவை ஹரிஷால் உடனே மனதார ஏற்றுக் கொள்ள முடிந்தது…

 

 சூர்யாவும் இதை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஹரிஷ் தன் மனைவிக்கு சேலையை எடுத்து போட சொல்ல அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவன் சொன்ன ரகங்களையும் பார்வையிட்டபடிதான் இருந்தான்…. ஹரிஷ் மெரூன் நிறத்தில் அடர்ந்த குங்குமநிற பார்டர் வைத்த ஒரு சேலையை எடுத்து சுபாவுக்கு தோளில் வைத்து அழகு பார்த்து அந்த நிறம் அவளுக்கு பொருத்தமாக இருக்கவும் அதையே தேர்வு செய்து தனியாக எடுத்து வைத்தவன்…. அடுத்து அவளை சுடிதார் பிரிவிற்கு அழைத்துச் செல்ல மற்றவர்களை பார்த்த சூர்யா அவர்கள் அனைவரும் ஹரிஷோடு வேறு பிரிவுக்குள் நுழையவும் ஹரிஷ் அள்ளிப் போட சொன்ன பட்டுச் சேலைகளில் இருந்து நல்ல தளிர் பச்சை நிறத்தில் தங்க புட்டா போட்ட பட்டுச் சேலையை தேர்ந்தெடுத்து அதை மனதால் ஸ்ரீக்கு வைத்து பார்க்க பொருத்தமாக இருப்பதாக தோன்றவும் தனியாக பில்போட எடுத்து வைத்துவிட்டு அவர்களை தேடி போனான்….

 

அடுத்து ப்ரியாவுக்கு டிசைனர் பாவாடை தாவணி எடுத்துவிட்டு சுடிதார் செக்சனுக்கு  சென்றவர்கள் சுடிதார்களை தேர்வு செய்ய ஹரிஷம் தன் மனைவிக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றுவதை அவளுக்கு எடுத்துக் கொடுத்தான்… குடும்பத்தில் அனைவருக்கும் எடுத்தவர்கள் பில்போட செல்ல… பெண்கள் அனைவரும் கூல்டிரிங் குடித்தபடி ஓய்வாக அமர்ந்தார்கள்… மற்றவர்கள் கவனத்தை கவராமல்  தன் கணவனிடம் சென்ற ஸ்ரீ  அவன் பின்புறம் சென்று மெதுவாக அவன் கையை பிடித்து

எங்களுக்கு இவ்வளவு வாங்கியிருக்கிங்க… உங்களுக்கு ஒன்னும் எடுக்கலையே…??”

 

அவள் கேள்வி அவன் மனதிற்குள் ஜிவ்வென இறங்க….அவள் கையை அழுத்தி பிடித்தவன்…. இல்ல நான் அப்புறமா எடுத்துக்குறேன்…??”

 

ஏங்க காசு பத்தலையா… எனக்கு இத்தனை சேலை தேவையில்லை… ஒன்னு மட்டும் எடுத்துட்டு நீங்க உங்களுக்கு எடுத்துக்கோங்க… என்னோட சேலைதான் ஒவ்வொன்னும் 80000…..90000 ம்னு எடுத்து இருக்கிங்க தேவையா இவ்வளவு விலைக்கு…ப்ளிஸ்ங்க… உங்களுக்கும் எடுப்போம்…??”

 

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹரிஷ் ஹா..ஹா…ஹா… வென சத்தமாக சிரித்தவன்… என்ன ஸ்ரீ இப்படி இருக்கிங்க…பணம் இல்லையா அதுவும் உங்க வீட்டுக்காரர்கிட்டயா… ஏன் சூர்யா உங்க பணவசதியைப் பத்தி அவங்களுக்கு தெரியாதா… இதுக்காக நீங்க எடுத்த சேலையை கொடுக்கனுமா இந்தா இந்த மேடமும் இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கா ஏன் இவ்வளவு டிரஸ் எடுத்திங்க செலவு வைச்சிட்டேன்னு…ரெண்டுபேரும் முதல்ல தெரிஞ்சுக்கோங்க அவங்க அவங்க வீட்டுக்காரரை பத்தி… நான்தான் சொன்னேனே சூர்யா உங்களுக்கும் பாருங்கன்னு… நீங்கதான் நிறைய இருக்கு அப்புறமா பார்த்துக்கிறேன்னு சொன்னிங்க…ஒருவேளை உங்க மனைவி உங்களை கவனிச்சு கேட்கனும்னு இருந்திங்களா…சரி வாங்க நானும் கூட வர்றேன்….??”

 

பரவாயில்ல ஹரிஷ் நானே போய் பார்க்கிறேன்….இவ்வளவு நேரம் எங்களுக்காக அலைஞ்சது பத்தாதா… நீங்க சுபாவோட இருங்க … ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க ஹரிஷ் நீங்க எல்லாத்துக்கும் பில்போட்டு வைக்கச் சொல்லுங்க… நாங்க இப்ப வந்துர்றோம்… வா???” என தன் மனைவியை அழைத்தவன் லிப்டிற்குள் நுழைய அவர்களை அடுத்தாற்போல நான்கைந்து பேர் சேர்ந்து ஏறினார்கள்… சூர்யாவும்  ஸ்ரீயும் தள்ளி தள்ளி நிற்பதை பார்த்த இரு இளைஞர்கள் அவளை ஒட்டினாற்போல நிற்க செல்ல அவர்கள் இருவரையும் பார்த்தவள் ஒரே எட்டில் சூர்யாவின் அருகில் வந்திருந்தாள்…

அவர்கள் அவள் பக்கம் திரும்பி  பார்த்து அவள் அருகில் செல்ல போக சூர்யா ஸ்ரீயின் தோளில் கைப்போட்டு தன் அருகில் இழுத்தவன் அவர்களை பார்த்து முறைக்கவும் இருவரும் வேறுபக்கம் திரும்பிவிட்டனர்… அவர்கள் அனைவரும் மூன்றாம் தளத்தில் இறங்க இவர்கள் அடுத்த தளத்திற்கு செல்லும்போதும் ஸ்ரீயின் தோளில் இருந்து அவன் கையை எடுக்கவில்லை…. முதல்முறையாக ஒரு பாதுகாப்பு உணர்வை … இவன் தன் நலம் விரும்பி என்பதை ஸ்ரீ உணர்ந்தாள்…..

 

Advertisement