Advertisement

 ஸ்ரீயையும் சுபாவையும் ஒரு பார்வை பார்த்தவர்...இவங்களுக்கு கைகழுவ தண்ணியெடுத்து கொடுங்க… சாப்பாடு எடுத்து வைங்க..??” உத்தரவிட…ஸ்ரீக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை…தாத்தா நம்மகிட்ட பேசிட்டாரா….உற்சாகமாக சூர்யாவை அழைத்துக் கொண்டு கிணற்றடிக்கு செல்ல…
 
ஹரிஷோ தன் மனைவியின் ஒரு அணைப்புக்காக அவளை உள் அறைக்குள் கூட்டிச் சென்றான்… இருவரும்  சேலை அணிந்து தலை நிறைய மல்லிகை பூ வைத்திருந்தனர்.. .ஹரிஷ்க்கு தன் மனைவி மீது ஆசையும் மோகமும் பொங்க தான் செய்யவிருந்த வேலையை விட்டுவிட்டு வந்திருந்தவன் தன் மனைவியிடம் அந்த வேலையை காட்டத்துவங்கியிருந்தான்….
 
கிணற்றடிக்கு சென்ற ஸ்ரீ தண்ணீர் இறைத்து கொடுக்க…. சூர்யாவின் முகம் யோசனையில் இருந்தது..அவனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை…முகத்தை கழுவியவன்… துண்டால் தன் முகத்தை துடைத்தபடி ஸ்ரீயை பார்க்க அவள் இவனிடம் ஏதோ கேட்க வாயெடுத்து பின் அமைதியாக இருப்பது போல தோன்றவும்…
 
என்ன… என்கிட்ட எதுவும் கேட்கனுமா..??”.
ஆமா… சாப்பிடவும் அங்க போகனுமா…??”
எங்க…??”
உங்க வீட்டுக்கு…??”
அப்ப அது உன்வீடு இல்லையா…??”
ம்கூம்… இதுதான் என்னோட வீடு….டைவர்ஸ் வாங்குறவரைக்கும்தானே அந்த வீட்ல இருப்பேன்….??”
அவளையே முறைத்துக் கொண்டிருந்தவனை கண்டு கொள்ளாமல்… நானும் ப்ரியாவும் நைட்டு இங்க இருந்துட்டு காலையில அந்த வீட்டுக்கு வரவா….??”
 
அவளுக்கு பதில் சொல்லாமல் முகத்தை துடைத்தபடி வீட்டிற்குள் நுழைய போக அவன் பின்னாலே வந்தவள்…. அவன் கையை பிடித்தபடி என்ன ஒன்னும் சொல்லாம போறிங்க…??”
 
அங்கு வந்த ஹரிஷ்….. இருவரையும் பார்வையிட்டபடி…. ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க??”
 பின்னாலேயே சுபா வரவும் அவளுக்கு வழியை விட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தனர்… அனைவரும் சாப்பிட அமர தாத்தா மட்டும் வெளித்திண்ணையில் வந்து படுத்திருந்தார்…. அனைவரையும் அமரைவைத்து ஸ்ரீயின் தாய் சாப்பாட்டை பார்த்து பார்த்து பறிமாறினார்….சந்தோசமாக கலகலவென சிரித்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்…..
 
சாப்பிட்டு முடிக்கவும் வெளியில் வந்த ஹரிஷ் அங்கு படுத்திருந்த தாத்தாவை பார்க்க… இவனுக்கு பாவமாக இருந்தது இந்த வயதில் குடும்ப சுமையை சுமப்பது… எவ்வளவு கஷ்டமாக இருக்கும்…அவர் பக்கத்தில் அமர்ந்து தாத்தா…??” என மெதுவாக அழைக்கவும்… அதுவரை சும்மா கண்ணை மூடிப்படுத்திருந்தவர்…
 
தம்பி சாப்பிடிங்களா…??”
 
சாப்பிட்டேன் தாத்தா நீங்க..??”
எனக்கு சுகர் இருக்கிறதால கோதுமை தோசைதாம்பா… கொஞ்ச நேரம் ஆகட்டும்…??”
இந்தாங்க தாத்தா??” என்றபடி மஞ்சள் பையை கொடுக்க…
தம்பி இது நாங்க சுபாவுக்கு போடவேண்டிய நகை… அதான் கொடுத்தேன்…
அவர் கையை பிடித்தவன்...தாத்தா… எங்க சின்ன வயசிலயே எங்க தாத்தா இறந்து போயிட்டாங்க… நான் உங்கள என்னோட தாத்தாவாத்தான் பார்க்கிறேன்…. இந்த நகை போட்டுத்தான் உங்க பேத்தியை எனக்கு கட்டிக் கொடுக்கனும்னு இல்ல தாத்தா… நீங்க சும்மாவே ஒரு தங்கத்தைதான் எனக்கு கட்டிக் கொடுத்திருக்கிங்க… அப்புறம் நகை வேற எதுக்கு… நீங்க என்னை பேரனா நினைக்கிறது உண்மைனா இத வாங்கிக்குங்க.. உங்க அன்பும் , பாசமும் , அறிவுரை மட்டும் எனக்கு போதும் தாத்தா… வேற எதுவும் வேண்டாம்…..அவர் கையில் நகையை வைக்க அவருக்கு மனது நிறைந்தது….  தன் கணவனை தேடி வந்த சுபா இந்த காட்சியை பார்த்து அப்படியே நின்றிருந்தாள்… இவர்கள் பேசும்போதே வந்திருந்தாள்… அனைத்தையும் கேட்டவளுக்கு தன் கணவன் மேல் கடலளவு காதல் வர… அவனை நோக்கி வந்திருந்தாள்… தாத்தாவின் மறுபுறம் அமர்ந்தவள் அவர் தோளில் சாய்ந்து கொள்ள…..
 
இருவரையும் சேர்த்து அணைத்தவருக்கு தன் மகன் இறந்ததில் இருந்து இந்த பெண்களை எப்படி நல்லஇடத்தில் திருமணம் செய்து கொடுப்போம் என்று எப்போதும் ஒரு கவலையில் இருந்தவர்…. மருமகளும் உலகமறியா…. வீட்டை மட்டும் பார்த்துக் கொள்ளும் ஒரு பெண்ணாக இருக்க இடையில் திருமணத்திற்கு முதல்நாள் ஸ்ரீ செய்து வைத்த செயலால் மனம் உடைந்து போயிருந்தார்… காலையில் சூர்யாவின் பேச்சிலும் இப்போது ஹரிஷின் பேச்சிலும் மனம் நிறைந்து போயிருந்தார்…தன் பேத்திக்கு சில அறிவுரைகளை சொன்னவர்…..
 
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஹரிஷ் சுபாவோடு வீட்டுக்கு கிளம்புவதாக சொல்லவும்…தாத்தாவோ தன் ஆசைக்கு இன்று இரவு இங்கேயே தங்கச் சொல்லிகேட்க சுபாவின் முகத்தை பார்த்தவன் அதில் இருந்த ஆசையை பார்க்கவும் தலையை ஆட்டியிருந்தான்…
 
சுபா உள்ள ரூமுக்கு கூட்டிட்டு போய் அங்க அலமாரியில புது வேட்டி துண்டு வைச்சிருக்கேன் எடுத்து குடு…??”
 
சரி தாத்தா உற்சாகமாக தலையை ஆட்டியவள்… ஹரிஷின் கையை பிடித்து தன் அறைக்கு கூட்டிச் சென்றாள்….
 
அங்கு உள்ளே ப்ரியாவை அதட்டி வீட்டிற்கு கிளப்பி கொண்டிருந்தான் சூர்யா… ஸ்ரீயை ஒன்றும் சொல்லவில்லை… அவள் இதை தன்வீடு என்று சொன்ன கோபத்தில் அவளை பற்றி நினைக்காமல் தங்கையை மட்டும் கிளப்புவதில் குறியாக இருந்தான்… ப்ரியாவுக்கு மனது நிறைய ஆசையிருந்தது தங்கள் வீட்டில் எப்போதும் தனிமையிலேயே இருப்பவள் இன்று இவர்கள் அனைவரையும் பார்க்கவும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை… ஏற்கனவே இன்று இரவு அனைவரும் மாடியில் படுக்கலாம், அரட்டை அடிக்கலாம் என ப்ளான் போட்டிருக்க இப்போது அண்ணன் கூப்பிடவும் முழித்து கொண்டிருந்தாள்… ஸ்ரீ எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை..
 
நேரம் ஆக ஆக ஸ்ரீக்கு கோபம் வர ஆரம்பித்தது… ஒருநாள்தானே இருக்கச் சொல்றோம்.. இவங்க ரொம்ப பண்ணுறாங்க என யோசித்தவள்… நாங்க ரெண்டுபேரும் ஒண்ணாத்தானே வந்தோம்…காலையில ரெண்டுபேரும் ஒண்ணாவே அங்க வர்றோம்… நீங்க போறதுனா போங்க??”
 
ப்ரியா… அப்படியே ஆச்சரயமாக அவளை பார்த்திருந்தாள்… அண்ணாவுக்கு யாராச்சும் அவன் சொல்றத கேட்கலைனா கோபம் ரொம்ப வருமே..போச்சு. நமக்காக பேசப்போய் அண்ணி திட்டுவாங்க போறாங்களே….
 
ஸ்ரீயை ஒரு முறை முறைத்தவன்… ப்ரியாவுக்கு கண்ணைக்காட்டி சற்று வெளியில் இருக்கச் சொல்ல..இல்லைண்ணா… இப்ப கிளம்புறேன்??”
 
நீ போய் கிளம்பு……??” ப்ரியா வெளியில் செல்லவும் அவளை நோக்கி முன்னேறியவன்….  அவள் கன்னத்தை தன் விரல்களால் அழுத்தி பிடித்து….
 
இப்ப நீ என்ன சொல்ல வர்ற…??” அவனுக்கு அவர்கள் இருவரும் மட்டும் சேர்ந்து கொண்டு தன்னை பிரித்து வைக்கிறார்கள் என்ற கோபம்தான் முன்னின்றது……
 
விரல் அழுத்ததில் அவள் கன்னம் வலிக்கவும் தலையை ஆட்டி அவன் கையை எடுக்க முயன்றவள் முடியாமல் கையால் அவன் கையை எடுக்க முயல… ம்கூம்… ஒரு இன்ச் அளவுக்கு கூட நகர்த்த முடியவில்லை….
 
நேற்றிலிருந்து அவனை இம்சித்த முகம்…. அவள் கண்களை உருட்டி தன்னை முறைப்பது போல பார்க்க… உர்ரென்ற முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தாலும் அவன் விரல்கள் அவன் பேச்சை கேட்காமல் உதட்டை கோலமிட முயல… மற்றவிரலால் கன்னத்தை பிடித்தவன் கட்டைவிரலால் அவள் இதழை வருடி பார்க்க ரோஜா இதழை வருடியது போல இருந்தது… அவள் முகத்தை முன்னால் இழுக்க தன் பின்னால் மாமா….” என்ற குரல் கேட்கவும்… அவளை மறைத்தாற் போல நின்றிருந்தவன் அவள் கன்னத்தை ஒரு அழுத்தி அழுத்தி… விடுவித்து …. அறைக்கு வெளியில் நின்றிருந்த தருண் அருகில் சென்றான்…
மாமா தாத்தா உங்களை வரச் சொல்றாங்க….??” அவனோடு தாத்தாவை பார்க்கச் செல்ல…..
 
அங்கு பெங்களுரில் கிஷோரும் தன் செல்போனில் புகைப்படமாய் இருந்த ஸ்ரீயின் கன்னத்தை வருடியபடி இருந்தான்… மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் சிலபேருக்குத்தான் அந்த வரம் வரமாக அமைகிறது…. பலபேருக்கு சாபமாக மாறிவிடுகிறது… அந்த வகையில் ஒரு பாவப்பட்டவனாக இருந்தான் கிஷோர்…பெற்றவர்களும் சரியில்லாமல் கட்டிய மனைவியும் சரியில்லாமல் இருக்க குரங்கை போல இவன் மனம் மீண்டும் மீண்டும் ஸ்ரீநிதியையே நினைக்க ஆரம்பித்தது… இவன் மனைவி இவனுக்கு காதலை பரிசாக கொடுத்திருந்தால் இவனும் ஸ்ரீயை மறந்து மனைவியோடு ஒன்றியிருப்பானோ என்னவோ….
 
அவன் மனைவியோ நேற்று திருமணம் முடிந்து இன்று காலையிலே பிறந்த வீட்டிற்கு அவனிடம் ஒருவார்த்தை கூட சொல்லாமல் கிளம்பியிருந்தாள்… காலையில் இருந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்… எழுந்ததே ஒன்பது மணி இருக்கும் குளித்து மேக்கப் போட்டு முடித்துவர 11 மணியாயிற்று உடலை கவ்வி பிடித்தாப்போல ஒரு உடை அதிலும் பாதிக்குமேல் வெளியில் தெரிந்தது உதட்டில் நல்ல அடர்ந்த நிறத்தில் லிப்ஸ்டிக்..உடலெங்கும் வைரம் மின்னியது… அவனிடம் ஒருவார்த்தைகூட பேசாமல் அவன் சாப்பிட்டானா இல்லையா என்பதை கண்டு கொள்ளாமல் வேலைக்காரர்களை  அதட்டி உருட்டி டிபன் சாப்பிட்டவள் அவள் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்….
 
அவன் பாட்டியோ தனக்கு வயதாகிவிட்டது…. இனி எல்லாம் அவன் மனைவியின் பொறுப்பு என நினைத்து அவள் சொல்லதை கேட்கச் சொல்லி சொல்லியிருந்தார்… முன்புபோல அவரால் எதையும் சரிவர கவனிக்க முடியாமல் …தன் பேரனையும் கவனிக்க வில்லை…. ஆனால் காலையிலிருந்து ஒரே அறைக்குள் அடைந்துகிடந்த கிஷோர்… நல்ல நண்பர்கள் இல்லாமல் வழிகாட்டி இல்லாமல்…… பாசம் கிடைக்காமல் அவன் முழுதாய் நம்பியிருந்த காதலும் கிடைக்காமல்… ஒரு பைத்தியம்போல கிடந்தான்….நேரம் ஆக ஆக அவனுக்கு சூர்யாமேல் கோபமும், பொறாமையும், வெறுப்பும் வர ஆரம்பித்தது…. இவன் அவள் அழகில்தான் மயங்கி திருமணம் செஞ்சிருப்பான்… இல்லைனா காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க வந்து இவன்கிட்ட லவ்வ சொன்னாங்க… அப்பல்லாம் எனக்கு இதுல இஷ்டமில்லைனு சொல்லிட்டு ஸ்ரீயை பார்த்தவுடன கல்யாணம் பண்ணிக்கிட்டானா….
 
தன்னுடைய கோழை தனத்தை எண்ணிப்பார்க்காமல் அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் நினைத்து பார்க்காமல் என்னவோ அனைத்திற்கும் காரணம் சூர்யாதான் சூர்யா மட்டும்தான் என முடிவுக்கு வந்தவன்  எப்படியாவது போய் ஸ்ரீயை தனியாக சந்தித்து பேசி முடிந்தால் அவளை அழைத்துவரவேண்டும் என முடிவு செய்தவன்… பாட்டிக்கும் அவன் மனைவிக்கு தெரியாமல் எப்படி ஊருக்கு போவது என பிளான் செய்ய ஆரம்பித்தான்…
 
இங்கு சூர்யாவை இரவு இங்கேயே தங்கிவிட்டு செல்ல தாத்தா வற்புறுத்த அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை… கடைசியில் இவன்தான் இறங்கி வரும்படி ஆயிற்று….
 
அங்கு மற்றவர்கள் அனைவரும் பாய்,தலகாணியோடு மாடிக்கு சென்றிருக்க… அறைக்குள் வந்த சூர்யா பார்த்தது கட்டிலில் எடுத்து வைக்கப்பட்டிருந்த புதுவேட்டி துண்டை மட்டும்தான் ஸ்ரீயை காணவில்லை…கடங்காரி நினைச்சதை சாதிச்சிட்டாளே…….. உடையை மாற்றியவன் தானும் மொட்டை மாடிக்கு சென்று பார்க்க…. அங்கு மாடியில் அவர்கள் அனைவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஹரிஷ் தன் மனைவியின் அருகில் அமர்ந்து அவளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க…தருணும் ஹரிஷின் தம்பி அஜயும் தனி தனியாக விளையாட ஸ்ரீயும் ப்ரியாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுத்தபடி விளையாடிக் கொண்டிருந்தனர்… இவன் சென்று ப்ரியாவுக்கும் ஸ்ரீக்கும் நடுவில் அமர யார்டா அவன் என்பதுபோல அவனை முறைத்தவள்… அவனை கண்டுகொள்ளாமல் ப்ரியாவோடு பேச ஆரம்பித்தாள்…
 
 சுபா ஒவ்வொரு சீட்டை போடும் முன்பும் ஹரிஷோடு பேச்சுவார்த்தை நடத்தி அவனிடம் கேட்டே போட இருவரும் நெருங்கி அமர்ந்திருந்தனர்… ஒவ்வொரு முறையும் சுபா அணியே வெற்றிபெற…. தருணும் அஜயும் கத்திக் கொண்டிருந்தனர்… சூர்யாவும் தன்னை அறியாமல் அவர்களோடு ஒன்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க இப்போது இவர்கள் மூவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர்… அடுத்தடுத்து இவர்கள் கூட்டணி ஜெயிக்க ஆரம்பிக்க… ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும்…தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கவும் அருணும் , அஜயும் ஆட்டத்தை விளையாடவிடாமல் கலைத்துவிட சுபா அவர்களோடு சண்டைபோட ஆரம்பித்தாள்…
 
 இப்போதுதான் சூர்யா சுயநினைவுக்கு வந்தவன் தன்னைச் சுற்றி பார்க்க ஆட்ட ஸ்வாரஸ்யத்தில் ஹரிஷ் சுபாவின் மடியில் படுத்திருக்க சுபாவுக்கு வாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் கை அவன் தலையை கோதி கொண்டிருந்தது… இங்கு தன் ஒரு மடியில் தலைவைத்து ப்ரியா படுத்து அங்கு நடந்துகொண்டிருந்த சண்டையை சிரித்தபடி வேடிக்கை பார்க்க ஸ்ரீயோ அவன் மறுகாலில் கையை முட்டு கொடுத்து சுபாவுக்கு சண்டை போட பாயிண்டை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தாள்… இருவரும் தங்களை அறியாமல் அவனை நெருங்கி அமர்ந்திருந்தனர்..சூர்யா தன் தங்கையின் கைமேல் ஒரு கையை வைத்திருந்தவன் மறுகையை ஸ்ரீயின் இடுப்பில் வைத்து அணைத்துப் பிடித்திருந்தான்…. இருவரையும் பார்த்தவனுக்கு தன்னை அறியாமல் புன்னகை வர இந்த நிகழ்வு எப்போதும் இந்த இருவரின் பொறுப்பு தன்னைச் சேர்ந்தது என்பது போல இருந்தது…….
 
                                                       இனி………..????????

Advertisement