Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
அத்தியாயம் –  5
 
ப்ரியா ஸ்ரீயை சுற்றி அண்ணி அவுட்ட்ட்…..????” என்று சத்தமிட்டதில் குடும்பமே வெளியில் வந்திருந்தது ..தாத்தாவை மட்டும் காணவில்லை.. ஸ்ரீயின் தங்கை சுபஸ்ரீ… அவள் கணவன் ஹரிஷ்… ஸ்ரீயின் தம்பி தருண் … இன்னொரு பையனும் நிற்க ஸ்ரீயின் தாய் சூர்யாவை வரவேற்றார்… சூர்யாவும் இவர்கள் அனைவரையும் பார்த்தவன் ஸ்ரீயிடம் கேட்ட கேள்விக்கு பதிலை பெறாமலே வீட்டிற்குள் நுழைந்திருந்தான்… வீட்டிற்குள் சென்று அமர சுபா பலகார தட்டோடு வந்திருந்தாள்.. ஸ்ரீயின் தாய் காப்பி போட்டு ஸ்ரீயிடம் கொடுத்தனுப்ப அவள் மாப்பிள்ளைகள் இருவருக்கும் அதை கொடுத்துவிட்டு சென்றாள்… சற்று நேரம் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருந்தவர்கள்…. தாத்தாவை கேட்க அவர் கோவிலுக்கு போயிருப்பதாக சொல்லவும் மாப்பிள்ளைகள் இருவரும் பேசியபடி வாசலுக்கு வந்திருந்தனர்…
 
ஹரிஷ் காரைக்குடியில் இருக்கும் மிகப்பெரிய துணிக்கடையின் வாரிசு… இருவரும் ஏற்கனவே ஓரிருமுறை பார்த்திருக்கிறார்கள்… ஆனால் அதிகம் பேசியதில்லை இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்தபடி பேச்சை ஆரம்பிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்தது….
 
மற்றவர்கள் அனைவரும் உள்ளே சென்றிருக்க இவர்கள் மட்டும் காற்றாட வெளியில் போடப்பட்டிருந்த பெரிய சிமெண்ட் திண்ணையில் அமர்ந்தார்கள்…
சூர்யா… நீங்க எப்ப வந்திங்க ஹரிஷ்…??”
 
இப்பதான் ஒரு அஞ்சுநிமிசம் இருக்கும் சூர்யா…
 
உங்கள வைச்சிக்கிட்டா இவங்க இப்படி விளையாடிக்கிட்டு இருந்தாங்க…??”
 
ஹா…ஹா…ஹா… என சிரித்தவன்… பாதிநேரம் என் மனைவி என் முதுகுக்கு பின்னாடிதான் ஒளிஞ்சிருந்தா….என்னை அங்கிட்டும் இங்கிட்டும் அசையவிடல…??”
 
சூர்யாவும் கலகலவென சிரித்தவன்… அப்ப அத்தை ஒன்னும் சொல்லலையா…??”
 
ம்ம் சொல்றத இவங்க காதுல கேட்டாத்தானே…. அவங்க சொல்லி பார்த்துட்டு என்னை பார்க்க சங்கடப்பட்டு உள்ள போயிட்டாங்க… நானும் விளையாட்ட ரசிச்சுதான் பார்த்துக்கிட்டு இருந்தேன்…சின்ன வயசில விளையாடியது…??”.தன் முதுகுக்கு பின்னால் ஒளியும் போது சுபாவின் மேலிருந்து வந்த அந்த பூ வாசத்திலும் அவளின் மென்மையிலும் மனம் கிறங்கி வேறு உலகத்திற்கு சென்றிருந்தான்…
 
அவன் தோளில் கைபோட்ட சூர்யா… ஸாரி ஹரிஷ் கடைசி நேரத்துல பொண்ணு மாறவும் உங்க சைடுல கொஞ்சம் பிரச்சனை ஆயிருச்சோ…??”
 
சுயநினைவுக்கு வந்தவன்…..கொஞ்சம் பிரச்சனைதான் சூர்யா…ஆனா அது எல்லாம் நேத்து காலையில மட்டும்தான் மதியத்துக்கு மேல சுபா பேச ஆரம்பிக்கவுமே சந்தோசமா மாறிருச்சு.. நான் உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லவா… நான் இவங்க வீட்டுக்கெல்லாம் வந்து பொண்ணு பார்க்கலை.. ஒரு கல்யாணத்துல வைச்சுத்தான் பொண்ணக்காட்டினாங்க… அங்க அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் போட்டிருந்தாங்களா நான் முதல்ல சுபாவைத்தான் பொண்ணுன்னு நினைச்சு பார்த்தேன்.
 
ஏதோ நினைத்து சிரித்தவன் கடைசில அவ என்கிட்ட வந்து எங்க அக்காவ உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டாளா… அப்பத்தான் நான் அவங்கள திரும்பி பார்த்தேன்… ஏதோ நல்ல நேரம் போல அவங்க போன் பேசிக்கிட்டு அந்த பக்கம் திரும்பி இருந்தாங்க நான் முகத்தையும் பார்க்கலை… சுபா வந்து கேட்கிறதுக்கு முன்னாடியே நான் சுபாதான் பொண்ணுன்னு நினைச்சு வீட்ல சம்மதம் சொல்லிட்டேன்…..அதுக்கப்பறம் அவங்கள பார்த்தது நேத்து உங்களோடதான்….  அதுனால பொண்ணு மாறினதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை… அவங்க உங்ககிட்டதான் போன்ல பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்…. நேத்து மட்டும்தான் பிரச்சனை இன்னைக்கு எங்க வீட்ல இவள இங்க விடவே இல்லை… அந்த அளவுக்கு மேடம் அங்க எல்லார் மனசிலயும் இடம்பிடிச்சிட்டா…..
 
ஹா….ஹா…ஹா… என சிரித்தவன்…. உங்க வீட்ல உள்ளவங்க மனசில மட்டும்தானா… உங்களுக்கு பிடிக்கலையா….??”
 
ஹரிஷ் அழகாக வெட்கப்பட்டவன்…. தன் தலையை கோதியபடி...போங்க சூர்யா நான் வேற என்னோட வாயால சொல்லனும் அவளோட பார்வைக்கே நான் பிளாட் அப்படியே…கோலிக்குண்ணு கண்ண வைச்சு நம்மள மயக்கிருவா போல…. என்ன ரொம்ப வெகுளியா இருக்கா…??”
 
அப்ப அக்கா தங்கச்சிங்க ரெண்டும் அப்படித்தானா… என நினைத்துக் கொண்டிருக்க…
 
தாத்தா சொன்னாங்க வர்ற ஞாயிற்றுகிழமை உங்களுக்கு ரிசப்சன் வைச்சிருக்காங்கன்னு… அப்ப அதுமுடிஞ்சுதான் ஹனிமூன் போறிங்களா….சூர்யா??”
 
ஹனிமூனா என முழித்தபடி ஆமா என்னோட கல்யாணத்துக்கு அது ஒன்னுதான் குறைச்சல் என நினைத்தவன்… அதை அப்படியே மறைத்து… இங்க ரெண்டு மூனு சைட்ல உடனே வேலை முடிச்சு கொடுக்க வேண்டியது இருக்கு ஹரிஷ்… அது முதல்ல முடியட்டும் மத்ததை அப்புறமா பார்க்கனும்… ஆமா நீங்க…. எப்ப கிளம்புறிங்க…??”
 
ஹா….ஹா…ஹா… நாங்களா இவளுக்கு இன்னும் ஆறுமாசம் காலேஜ் இருக்கு … அப்புறம்தான் பார்க்கனும்… ஆனா ஒன்னு இப்ப கூட்டிட்டு போனாலும் ஒன்னும் யூஸ் இல்லைன்னு நினைக்கிறேன்… அந்த அளவுக்கு மக்கா இருக்கா…???” தனக்குள்ளேயே சிரித்து கொண்டிருந்தான்…நேற்று முதலிரவு அறையில் நடந்ததை நினைத்து பார்த்து.. ஒரு மணி நேரம் பாடம் நடத்தியபிறகுதான் முத்தமே கொடுக்க முடிந்ததை…..
 
ஹரிஷ் முகத்தில் வந்துபோன பாவத்தை பார்த்து ரசித்த சூர்யா என்ன ஹரிஷ் ரொம்ப சந்தோசமா இருக்கிறமாதிரி இருக்கு சுபாவை ரொம்ப பிடிச்சிருக்கோ….??”
 
கண்டிப்பா சூர்யா நான் கல்யாணத்துக்கு முதல்ல ஒத்துக்கவே இல்லை… ஒரு பொண்ண கல்யாணம் பண்ணினா இந்த டிவி சீரியல்ல வர்ற மாதிரி நம்மள போட்டு பாடு படுத்துவாங்க … நம்ம குடும்பத்தை விட்டு பிரிச்சிருவாங்க… அடிக்கடி சண்டை போட்டு நம்ம நிம்மதியை கெடுத்துருவாங்கன்னு… அதான் பொண்ணு மாறிப் போனப்பக்கூட நான்  அவங்கள பார்க்க பிரியப்படல…நடக்கிறது நடக்கட்டும்னு விட்டுட்டேன்…  ஆனா சுபா மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மனைவியா வர நான் ரொம்ப கொடுத்துவைச்சிருக்கனும் …. இன்னைக்குகூட பாருங்க மறுவீட்டுக்கு என்னோட தம்பியையும் கூடவே கூட்டிட்டு வந்திட்டா… அவனுக்கும் ரொம்ப சந்தோசம்… நானே ரொம்ப பயந்துபோயிருந்தேன் இருக்கிறது நானும் அவனும் மட்டும்தான்… அவனும் சின்ன பையன்..கொஞ்சம் வாயடிப்பான்… அதுனால ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு… ஆனா கண்டிப்பா இவ அப்படி செய்ய மாட்டான்னு எனக்கு ரொம்ப நம்பிக்கை வந்திருச்சு… அப்படியே அவங்க ரெண்டுபேரும் சண்டை போட்டாலும் அது அக்கா தம்பி போடுற மாதிரிதான் எனக்கு தெரியும் சூர்யா..
 
 
எங்க வீட்ல பெண் குழந்தை இல்லையா அம்மா அதுக்காக ரொம்ப ஏங்கி போயிருந்தாங்க… ஆனா இவ என்னைவிட எங்க அம்மா அப்பா மேல ரொம்ப பாசம் வைச்சிருக்கா… எனக்கு இவள ரொம்ப பிடிச்சிருக்கு … இப்பக்கூட பாருங்க கடையில  நல்ல கூட்டசமயம் நான் அங்கதான் கிளம்பினேன்…… அங்க போகாம இவள பார்க்க இங்க வந்து நிற்கிறேன்…  அந்த அளவுக்கு என்னை ஒரே நாளுல மயக்கிட்டா… ஆனா உங்க குடும்பம் ரொம்ப நாளா இவங்களுக்கு தெரியுமாமே… உங்க தாத்தாவும் இவங்க தாத்தாவும் ரொம்ப பிரண்ட்னு சொன்னா… அப்ப உங்களுக்கு ??????”ஸ்ரீயை எப்படி கூப்பிடுவது என தடுமாற….
 
சும்மா ஸ்ரீன்னே கூப்பிடுங்க??”
 
ஸ்ரீயை ரொம்ப பிடிச்சிருக்கும்தானே…. சுபா சொன்னா அவ அக்காவும் அவள மாதிரியேன்னு… நீங்களும் என்ன மாதிரி ஸ்ரீயோட வெகுளி தனத்துலதான் விழுந்திட்டிங்களோ…. ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க  பொண்ணுகள…ஒரு சின்ன சாக்லேட் கொடுத்தாக்கூட அத தம்பிக்கிட்டயும் அம்மாக்கிட்டயும் பங்கு போட்டு குடுத்திட்டுத்தான் சாப்பிடுறா…??” ஹரிஷ் தன் மனதில் உள்ளதை சொல்லிக் கொண்டிருக்க சூர்யாவும் ஸ்ரீயைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்… உள்ளே அவர்களின் சந்தோச குரல் இவர்கள் காதிலும் விழுந்து தன்னை அறியாமல் முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது….
 
சூர்யாவுக்கு ஹரிஷை நினைத்து பெருமையாக இருந்தது…கடைசி நேரத்துல பொண்ணு மாறி நிறைய பிரச்சனை நடந்து சுபா மனைவியா மாறினாலும் அவ குடும்பத்தாலதான் பிரச்சனைனு அவள காயப்படுத்தாம புரிஞ்சிக்க நினைக்கிறான்… அவகிட்ட இருக்கிற நல்லதை ஏற்று சந்தோசமா இருக்கான்… நம்மளால ஏன் அது முடியல எது தடுக்குது… இப்ப ரெண்டுபேருமே ஒரே நிலைமையிலதானே இருக்கோம்… அப்ப நம்மகிட்ட பரந்த மனப்பான்மை இல்லையோ… இவ முன்னாடி எப்படியிருந்தாலும் தாலி கட்டினதுக்கு அப்புறம் அவளோட நல்லது கெட்டது எல்லாத்திலயும் எனக்கு பங்கு இருக்குதானே நான் டைவர்ஸ்ன்னு ஒன்னு கொடுத்து அதுல இருந்து தப்பிச்சுக்க முயற்சி பண்றனோ… முதல்ல அந்த கிஷோரை பத்தி தெரிஞ்சுக்கனும்… அப்புறம்தான் நாம ஒரு முடிவுக்கு வர முடியும்… அதோடு தன் காரில் இருக்கும் டைவர்ஸ் பேப்பரில் ஸ்ரீயிடம் கையெழுத்து வாங்குவோமா… இல்லை வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தவன்….  தன்னை பற்றிய சுய ஆராய்ச்சியிலும் ஈடுபட…
 
 ஸ்ரீயின் தாத்தாவும் கோவிலில் இருந்து வந்தவர் முறைப்படி இருவரையும் வரவேற்று வீட்டிற்குள் வர வீடே கப்சிப்பென்று இருந்தது… அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்…
 

Advertisement