Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
  அத்தியாயம்  –   4     
 
சூர்யாவும் ஸ்ரீயும் மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்போதே அவன் அப்பத்தாவின் கோபக்குரல் சத்தமாக கேட்டது… ஸ்ரீயின் தாத்தாவும் அம்மாவும் அவருக்கு எதிரில் நின்று கொண்டிருக்க சுபத்ரா ஒரு ஓரமாக கையை பிசைந்துகொண்டிருந்தார்.. அப்பத்தாவோ அவர்களோடு சண்டைப்போட்டு கொண்டிருக்கவும் அதை பார்த்த  ஸ்ரீக்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது…..தன்னால்தான் அவர்கள் பேச்சுவாங்க நேரிடுகிறது என்பதை  அறிந்தவள் சூர்யாவிடம் இருந்து விடுபட்டு அவர்களிடம் ஓட கால்வைக்க அவள் கையை பிடித்தவன் அவளை தன்னை நோக்கி இழுக்கவும் ஸ்ரீ அழுகவே ஆரம்பித்துவிட்டாள்…..
 
 அப்பத்தாவோ… ஊருக்குள்ள எவன்டா இளிச்சவாயன்னு காத்து கிடந்திங்களோ அதான் ஒருத்தன் மாட்டவும் அவனுக்கு உங்க பேத்தியை பத்துகாசு செலவில்லாம கட்டி வைச்சிட்டிங்க… ம்ம்ம் என் பேரன் படிச்ச படிப்பென்ன … எங்க அந்தஸ்து என்ன.. அவனுக்கு என் மகள்களே ஆளாளுக்கு 200 பவுன் நகைப்போட்டு கட்டிக் கொடுக்க ரெடியா இருந்தாளுக…  ஒன்னுமில்லாத பிச்சைகார சம்பந்தம் பண்ணனும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்தா… வந்தது வந்திட்டிங்க உங்க பேத்திய உங்களோட கூட்டிட்டு போயிருங்க…??”
 
அப்பத்தாதாதாதா……….??????? சூர்யாவின் கோபக்குரலில் சட்டென வாயை மூடியவர்…திரும்பி தன் பேரனை பார்க்க…வேகமாக இறங்கி வந்தவன்… வாங்க உங்ககிட்ட தனியா பேசனும்…??”
வாங்க தாத்தா……வாங்க…… தன் மாமியாரை அத்தை என உரிமையாக கூப்பிட முடியாமல் வாங்க என மட்டும் சொன்னவன்…. உட்காருங்க.. 
 
ஸ்ரீயிடம் “ அவங்களுக்கு குடிக்க ஏதாவது வள்ளி அக்காட்ட வாங்கிட்டு வந்து குடு…??”
 நீங்க ஏம்மா அங்க நிற்கிறிங்க நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்தா நீங்கதானே அவங்களை வரவேற்கனும்… இப்படி ஒதுங்கி நின்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க…தன் தாயிடம் சென்றவன் அவர் கையை பிடித்து இழுத்து வந்து ஸ்ரீயின் தாய்க்கு அருகில் அமர வைத்தவன் ம்ம் பேசிக்கிட்டு இருங்கம்மா… ??”
அப்பத்தா வாங்க ??”பக்கத்தில் இருந்த அறைக்கு கூப்பிட…
 
நான் எதுக்கு வரணும் முதல்ல அவங்கள வெளிய போகச் சொல்லு ….??”
 
ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தவன் தன் கோபத்தையும் அதனால் சிதறப்போகும் வார்த்தையையும் கட்டுப்படுத்தி….மற்றவர்கள் முன்னால தன் அப்பத்தாவை ஏதாவது கோபமாக பேசவும் தயங்கியவன் … பல்லை கடித்தபடி வாங்க……??” என கையை பிடித்து இழுத்துச் சென்றான்….
 
அங்கு வாசலில் அவன் தாத்தாவும் தந்தையும் நின்றிருந்தார்கள்.. ஸ்ரீயின் தாத்தா போன் செய்து இங்கே வருவதாக சொல்லவும் ஒரு சைட்டில் வேலை நடப்பதை பார்வையிட சென்றிருந்த இருவரும் வீட்டிற்கு வருவதற்குள் காமாட்சி தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தார்…. அவர் கோபமாக சண்டையிடும் போதே வந்திருந்தவர்கள் வீட்டிற்குள் வருவதற்குள் மாடியிலிருந்து இறங்கி வந்த சூர்யாவை பார்க்கவும் அவன் தாத்தா தன் மகன் கையை பிடித்து தடுத்திருந்தார்… இருவரும் ஒதுங்கி நின்று சூர்யாவையே பார்த்துக் கொண்டிருக்க….
 
அப்பா….???” என இழுத்த தன் மகனை
 
பரவாயில்லப்பா உன் பையன் இனி குடும்பத்தையும் நல்லா பார்த்துக்குவான்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு??” அவர் தோளை தட்டிக் கொடுத்தபடி இருவரும் வீட்டிற்குள் நுழையவும் தேவேந்திரன் நேராக ஸ்ரீயின் தாத்தாவிடம் சென்று அவரை கட்டி தழுவியவர் ஸ்ரீயின் தாயையும் கைகூப்பி வரவேற்றார்…
 
அங்கு அறைக்குள் நுழைந்த காமாட்சியோ…தன் பேரனை பார்த்து நீ என்னை இப்படி அடுத்தவங்க முன்னாடி அசிங்கப்படுத்துவேன்னு நினைக்கலை சூர்யா..??”
 
நான்கூடத்தான் அப்பத்தா  உங்க வாயில இருந்து இந்த மாதிரி வார்த்தைகளை எதிர்பார்க்கலை… எப்பவும் தங்கம் ,ராஜா, செல்லம் சொல்லுற வாயா மத்தவங்கள இப்படி பேசுது…. இந்த மாதிரி நீங்க பேசுவிங்களா.. உங்களுக்கு இப்படியெல்லாம் அடுத்தவங்க மனச புண்படுத்த தெரியுமா… நம்பவே முடியலப்பத்தா.??”
 
காமாட்சி தன் பேரனின் குற்றச்சாட்டில் வாயடைத்து போயிருக்க… இதுவரை தன் பேரன் இருக்கும்போது அவனிடம் வேறு முகத்தை காட்டியிருக்க… இன்று அதன் பிம்பம் உடையவும் என்ன சொல்ல என யோசித்தவர்… உனக்காகத்தானே பேசினேன்.. நான் சொன்னதில என்ன குத்தம் கண்ட… என் பொண்ணுங்க நாம கேட்கிறத விட நகை போட ரெடியாத்தானே இருக்காங்க… இவங்கள மாதிரி பிச்சைக்கார குடும்பம் இல்ல… அவன் பேரனை வருடியவர் எல்லாம் உன் நன்மைக்குத்தான் செய்யுறேன்பா…??”
 
அவரை அணைத்து சமாதானப்படுத்தியவன்… இங்கதான் அப்பத்தா நீங்க யோசிக்க மறந்திட்டிங்க… அப்பாவும் அத்தைகளும் சின்ன வயசா இருக்கும் போது நாம இவ்வளவு வசதியில்லையாமே…ரொம்பவும் வசதி குறைவுதானே…??”
 
இல்லைதான் ஆனா உங்க தாத்தா சம்பாரிச்சுதான்…….???”
 
அவரை பேசவிடாமல் தடுத்தவன் இல்லப்பத்தா தாத்தா சம்பாரிக்க ஆரம்பிக்கிறதுக்கு முதலீடே ஸ்ரீயோட தாத்தா கொடுத்த காசுதானாம்… நம்ம தேரடி வீதியில ஒரு பெரிய வீடு இருக்கு பாருங்க அந்த வீட்டை வாங்க வைச்சிருந்த காசத்தான் அவங்க நம்ம தாத்தாக்கிட்ட குடுத்திருக்காங்க… யாருக்கு இப்படி ஒரு மனசு வரும்….அவங்க நம்ம தாத்தாமேல வைச்ச நட்பு.. நாம அந்த காச  வைச்சுத்தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம்… அவங்க பையனும் இன்னைக்கு உயிரோட இருந்திருந்தா அவங்ககிட்ட நாம நெருங்கக்கூட முடியாது . ஆனா திடிருன்னு கொஞ்ச வயசிலேயே ஸ்ரீயோட அப்பா இறக்கவும் அவங்க தாத்தா மனசு உடைஞ்சு போயிட்டாரு.. தன்னோட தொழிலையும் கவனிக்காம விட்டுட்டாரு… அதான் அவங்க நொடிச்சு போயிட்டாங்க…
 
 நம்ம தாத்தா பலமுறை போய் உதவி செய்யிறேன்னு கேட்டப்பவும் அவங்க அத வாங்கிக்கவே இல்லை….கொடுத்த பணத்தையாச்சும் வாங்கிக்க சொன்னப்ப  அவர் நான் உதவிதான் செஞ்சேன் கடன் கொடுக்கலைனு வாங்க மறுத்திட்டாரு… நான் இங்க பிசினஸை கவனிக்க வந்ததுமே தாத்தா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாங்க..
 
 அப்புறம் ஒரு முக்கியமான விசயம் நேத்து அந்த கல்யாணம் நின்னப்பக்கூட நம்ம தாத்தாத்தான் என்னை ஸ்ரீயை கட்டிக்க சொன்னாங்க அவங்க வாயை திறக்கவே இல்லைபோதுமா… அவங்க ஒன்னும் அந்த பொண்ணை என் தலையில கட்டலை நம்ம தாத்தாத்தான்  இந்த கல்யாணத்தை பண்ணி வைச்சாங்க…உங்களால ஏத்துக்க முடிஞ்சா அவங்களோட வந்து ஒருவார்த்தை பேசுங்க இல்லையா ஒதுங்கி போயிருங்க… அவங்க மனச சங்கடப்படுத்தாதிங்க. …அப்புறம் நகையை பத்தி இனி பேசாதிங்க… நான் சம்பாரிக்கிறேன்… என்ன வேணுமோ என் மனைவிக்கு வாங்கி கொடுக்கிற அளவுக்கு தெம்பிருக்கு… 200 பவுன் போட்டா அத கேட்குற மாப்பிள்ளைக்கு உங்க பேத்திகளை கட்டச் சொல்லுங்க …நீங்க எப்பவும் ரொம்பவும் நல்லவங்க… ரொம்ப நல்ல மனசு உள்ளவங்க அடுத்தவங்கள நோகடிக்க தெரியாதவங்க..நாம எப்பவும் கடந்துவந்த பாதையை மறக்கக்கூடாதுதானே.???” அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவன்… அவரை யோசிக்கட்டும் என வெளியில் வர அவனை பார்க்கவும் ஸ்ரீயின் தாய் எழுந்து நின்றிருந்தார்…
 
நீங்க உட்காருங்க…??”
 
பரவாயில்ல தம்பி நான் நிற்கிறேன்…??”
இல்ல உட்காருங்க??” அவரை வற்புறுத்தி அமரவைத்தவன்.
 
ஸ்ரீயின் தாத்தாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு ஸாரி தாத்தா அப்பத்தா அப்படி பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்… அவங்க என் மேல உள்ள பாசத்துல திடிருன்னு கல்யாணம் நடந்ததை ஏத்துக்க முடியல அதான்.. நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதிங்க தாத்தா….??”
 
ஐயோ தம்பி…. விடுங்க அவங்க மனசுல உள்ளதைதான் பேசினாங்க… நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கலை… இந்தாங்க தம்பி ??”என்றவர் தன் கையிலிருந்த பையை அவரிடம் கொடுக்க…
 
என்ன தாத்தா இது… ??”
20 பவுன் நகைப்பா மொத்தமா 40 பவுன் நகை போடலாம்னு இருந்தோம் திடிருன்னு அவ தங்கச்சிக்கும் கல்யாணம் நடந்ததால அதை பிரிச்சு போடுற மாதிரி ஆயிருச்சு இன்னும் ஒரு வருசம் டயம் கொடுங்க எப்படியும் 20 பவுன் நகை போட்டுருறோம்…??”
 
அவரையே பார்த்தவன்… இல்ல தாத்தா இத நீங்களே வைச்சிக்கோங்க… என் மனைவிக்கு நான் வாங்கி கொடுப்பேன்…??”
 
சூர்யாவை அவன் தாத்தாவும் தந்தையும் பெருமையாக பார்க்க…
 
இல்லைப்பா அது முறையா இருக்காது… எனக்கு ரெண்டுபேரும் சமம்தான்… இது இவளுக்கு சேரவேண்டியது நீங்க கண்டிப்பா வாங்கிக்கத்தான் வேணும்??”
 
இல்ல தாத்தா…
இல்லப்பா என்னை மேலும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதிங்க… அவ அப்பா இருந்தா இன்னும் சீரும் சிறப்புமா நடத்தி வைச்சிருப்பான்… ஏதோ என்னாலையும் என் மருமகளாலையும் முடிஞ்சது…. கண்டிப்பா மறுக்கவே கூடாது .. ??”
 
இல்ல தாத்தா நானும் உங்க பேரன் மாதிரிதானே… நீங்க இந்த நகையை ஸ்ரீயோட தங்கச்சிக்கு குடுங்க…??” அதை வாங்கவே மாட்டேன் என மறுத்தவன் அதை அவரிடமே ஒப்படைத்தான்… தன் அருகில் இருந்த ஸ்ரீயை பார்க்க அவளோ வந்ததிலிருந்து அவள் தாத்தா ஒருவார்த்தைகூட அவளிடம் பேசவில்லை… பேசமுயன்றாலும் முகத்தை திருப்பிக் கொண்டார் அதை தாங்கமாட்டாமல் அழுது கொண்டிருக்க… மற்றவர்களை பார்த்தவன் அவர்கள் தங்களுக்குள் அடுத்து என்ன என்று பேசத்துவங்க மெதுவாக ஸ்ரீயின் கையை பிடித்தபடி கிச்சனுக்குள் சென்றவன் அங்கிருந்த வேலையாள்களை சற்று வெளியில் இருக்கச் சொல்லி…
 
இப்ப எதுக்கு அழுகுற அன்னைக்கு கொஞ்சம் யோசிச்சு பார்த்திருந்தா இப்ப இந்த அழுகைக்கே வேலையிருந்திருக்காது…??” அவள் இன்னும் இன்னும் அழுகவும் முகம் தக்காளிபோல சிவந்திருந்தது…பார்க்கவே பாவம் போல இருக்க அவளை தன்புறம் இழுத்தவன் அவள் முகத்தை தன் நெஞ்சில் சாய்த்து முதுகை தடவி ஆறுதல் படுத்த துவங்கினான்… அவளுக்கு இன்னும் இன்னும் அழுகைதான் கூடியது…
 
சற்று நேரம் பேசாமல் இருந்தவன் இப்ப எதுக்கு மூசுமூசுன்னு இப்படி அழற….??”
 
ம்ம்ம்….. எ… எங்க தாத்தா என்கூட பேச மாட்டேங்கிறாங்க…??” சிறு குழந்தை போல தேம்பி தேம்பி அழ அவளின் சிறுபிள்ளைத்தனத்தில் இவன் குப்புற விழுந்தான்…  அவளின் அழுகையை ரசித்து பார்த்தவன் ஒருத்தங்க இவகூட பேசலைன்னா இவ இப்படி அழுவாளா.. அப்ப நாம பேசாம இருந்தா…. அவளின் தேம்பல் ஒலி அதிகமாகவும்….
 
ஆனால் என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது இது தாத்தாவுக்கும் இவளுக்கும் உள்ளது தான் தலையிட முடியாது  என்பதை உணர்ந்தவன்…. கொஞ்சநாள் பேசாம இருப்பாங்க அப்புறம் பேசிருவாங்க இப்ப நீ அழாத இங்க பாரு என்னோட லைட் ப்ளு கலர் சட்டை உன் கண்மைப்பட்டு இந்த கலர்ல மாறிருச்சு..??”ஆங்காங்கே கருப்பாக இருப்பதை காட்ட…. ஸ்ரீ இப்போதுதான் உணர்ந்தாள் தான் அவன் மார்பில்  சாய்ந்திருப்பதை… படக்கென்று இரண்டெட்டு பின்னால் நகர்ந்தவள்…..
 
ஸாரி தெரியாமல் பண்ணிட்டேன்…. வேணும்னா நானே துவைச்சு தந்துருறேன்…??”
 
ம்ம்…. அப்ப சரி அப்ப இன்னும் கொஞ்சம் சாஞ்சு அழுக்காக்கிக்க…??”
 
ச்சு போங்க… தன் கண்களை சுடிதார் ஷாலால் துடைத்தவள் அப்புறம் நான் ஒன்னு உங்ககிட்ட கேட்கவா…??”
 
ம்ம்ம் கேளு…??” அவளுடம் வார்த்தையாட ஆவனுக்கு மிகவும் பிடித்திருந்தது… முதல்முதலாக தானாக ஒரு பெண்ணிடம் விரும்பி பேச…
 
நீங்க நாம டைவர்ஸ் வாங்க போறதாலதான நகையை வாங்க மாட்டேன்னு சொல்லி என்னோட தங்கச்சிக்கிட்ட கொடுக்கச் சொன்னிங்க…??”
 
அவளையே குறுகுறுவென பார்த்தவன் ஏன் அப்படி சொல்லுற…??”
 
அவள் கோலிக்குண்டு கண்களை உருட்டியபடி… அது எப்படியும் என் தங்கச்சிக்கு நாற்பது பவுன் போடனும் இப்பவே அத கொடுத்திட்டா பிரச்சனை முடிஞ்சிரும்… அத நாம வாங்கினா மறுபடியும் தாத்தா அவங்களுக்கு கொடுக்க நகை ஏற்பாடு செய்யனும் அதானே… பத்திங்களா நீங்க சொல்லாமலே நான் கண்டுபிடிச்சிட்டேன்….??”
 
ஆமா பெரிய கண்டுபிடிப்பு… அப்ப நான் கல்யாணம் பண்ணுற பொண்ணுக்கிட்ட வரதட்சணை வாங்குவேன்னு நினைக்கிறியா…??”
 
நீங்க ஏன் வாங்கனும் அதான் அவங்களே உங்களுக்கு 200 பவுன் போடுவாங்கன்னு உங்க அப்பத்தா சொன்னாங்களே..??”
 
இவன் அவளுக்கு பதில் பேச வாய்திறக்க போக அவன் அம்மா அழைக்கும் குரல் கேட்டு வெளியில் வந்திருந்தான்…
சூர்யா இவங்க மறுவீட்டுக்கு உங்களை வரச் சொல்றாங்க…??”
 
எனக்கு கொஞ்சம் வேலையிருக்கே தாத்தா…
 
அதுதான்பா நானும் சொன்னேன் அவங்க இப்ப ஸ்ரீயை கூட்டிட்டு போறாங்களாம் நீ வேலை முடியவும் அங்க போய்ட்டு வந்திரு…சரியா…??”
 
அதற்குள் ஸ்ரீ அத்தை… ப்ரியாவுக்கும் லீவுதானே அவளையும் கூட்டிட்டு போகட்டா…. ப்ளிஸ்… அத்தை…??” தாத்தாவையும் மாமாவையும் பார்க்க…. சிரித்தவர்கள்..
ம்ம்ம்…கூட்டிட்டு போம்மா…
 
வேகமாக ஸ்ரீ மாடிக்கு ப்ரியாவை கிளப்ப ஓட…. தேவேந்திரன் ஸ்ரீயின் தாத்தாவிடம் கண்ஜாடை காட்டிக்கொண்டிருக்க…. தம்பி அப்புறம் ஒரு சின்ன விசயம்பா…??”
 
சொல்லுங்க தாத்தா…??”
 
இல்ல உங்க கல்யாணம் திடிருன்னு நடந்துருச்சு உங்க சொந்தபந்தங்களுக்கு தெரியாது நீங்க எல்லாரையும் கூட்டி ஒரு விருந்துமாதிரி வைக்கலாம் தானே??”
 
தன் தாத்தாவையே பார்த்தவன்..” பார்ப்போம் தாத்தா….ரெண்டுமூனு சைட்ல வேலை நடக்குது ஒரு பெரிய காம்பளக்ஸ் கட்டிக்கிட்டு இருக்கோம் அந்த வேலையெல்லாம் முடியட்டுமே….??”
 
ஏன் தம்பி வேலைபாட்டுக்கு நடக்கட்டும் ஒரு சின்ன விருந்து மட்டும் வைங்களேன் நானும் உங்களுக்குதான் என் பேத்திய கட்டிக் கொடுத்திருக்கேன்னு ஊருல நாலுபேரு தெரிஞ்சுக்கட்டும்…??”
 
ம்ம்ம் பெருமூச்சு விட்டவன் நான் வீட்ல கலந்துட்டு எப்பன்னு ஒரு நாள் பார்க்க சொல்றேன் தாத்தா….??”
 
அதற்குள் தேவேந்திரனோ ஏன் இந்த ஞாயிற்று கிழமையே நாள் நல்லாத்தான் இருக்கு அன்னைக்கே வைச்சிக்குவோம்…. நாங்க எல்லா ஏற்பாட்டையும் பண்றோம் சூர்யா நீ ஒன்னும் பண்ண வேண்டாம் நீ சைட்ல நடக்கிற வேலையை மட்டும் பாரு…??” காலையில் இங்குள்ள பெரிய மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டுதான் அவர் வேறு வேலைக்கே சென்றது… ஸ்ரீயை ஊரறிய சூர்யாவின் மனைவி என்று சொல்ல வைக்க வேண்டும் என நினைத்தார்…
 
தன் தாத்தாவின் மனதில் ஓடுவதை கண்டறிந்தவன் பேசாமல் தலையை ஆட்டிவிட்டு வேறு சட்டையை மாற்றுவதற்காக மாடிக்குச் சென்றான்….
 
சூர்யா சைட்டுக்கு சென்று வேலை முடியவே மணி ஆறு ஆயிற்று லேசாக இருட்டியிருக்க வீட்டுக்கு சென்றவன் குளித்து கிளம்பி வர மணி ஏழாயிற்று… ஸ்ரீயின் வீட்டை அடைந்தவன் தன் காரில் இருந்து இறங்கி கேட்டை திறக்க கேட்டுக்கு அருகில் இருந்த மாமரத்தோடு ஒன்றிப்போய் ஸ்ரீ நின்று கொண்டிருக்கவும் என்னவாக இருக்கும் என யோசித்தவன் ஒன்றும் தோன்றாமல் அவள் அருகில் சென்று அவளை கூப்பிட  அவனை திரும்பி பார்த்தவள் வேகமாக தன்னை நோக்கி இழுத்து அந்த மரத்திற்கு பின்னால் கூட்டிச் சென்றாள்….
 
ஏய் என்னாச்சு ???”அவன் சத்தமாக கேட்கவும் எட்டி அவன் வாயை அடைத்தவள்…
 
ச்சூ சத்தம் போடாதிங்க.. ஒளிஞ்சுபுடிச்சு விளையாடுறோம்… இப்ப ப்ரியாதான் பிடிக்கனும் எல்லாரையும் பிடிச்சிட்டா நான் மட்டும்தான் அவகிட்ட இன்னும் மாட்டலை…??” இன்னும் அவனோடு நெருங்கி நிற்க இவனுக்குத்தான் அவஸ்தையாக இருந்தது….அவள் உடல் அவன் உடலோடு ஒட்டி இருக்க இருவரின் மூச்சுக்காற்றும் அடுத்தவர் மேல்… ஸ்ரீ வெளியே மெதுவாக எட்டி எட்டி பார்க்க ஒவ்வொரு முறையும் அவன் உடலோடு ஒட்டி விலகியது. அவளின் மென்மை அவனின் வன்மையான உடலை ஏதோ செய்வது போலிருக்க….சட்டென அவளை விட்டு விலகியவன்…அவளை பார்த்து
 
 உனக்கு எத்தனை மாசமா அந்த கிஷோர் பழக்கம்….??”
 
ஸ்ரீயோ அவன் கேள்வியில் கண்கள் விரிய நிற்க அதற்குள் அங்கு வந்திருந்த ப்ரியா வேகமாக அவளிடம் ஓடிவந்து ஸ்ரீயை பிடித்தவள்….அண்ணி நீங்க அவுட்ட்ட்……??”. என கத்தியபடி அவள் கையை பிடித்து சுற்றத்துவங்கினாள்…..
 
                                            இனி…………??????? 

Advertisement