Advertisement

உங்க பேபியும் உங்கள கூப்பிடுதுங்க..” அவள் வயிற்றில் இருந்த குழந்தையோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மீண்டும் ஒருமுறை ப்ரியா வந்து கதவை தட்டவும்தான் குளிக்கவே கிளம்பியிருந்தாள்… பட்டு சேலைகட்டி மடிப்பு வைக்க சிரமப்பட்டவளுக்கு கீழே அமர்ந்து மடிப்பை சரிபடுத்தியவன் தன் கையாலே நகைகளை எடுத்து போட்டுவிட்டு தலையில் பூ வைத்துவிட்டவன் அவள் அலங்காரத்தில் திருப்தி அடைந்து கீழே அழைத்துவந்தான்..
 
தங்கள் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருக்க சுபாவின் குடும்பமும் வந்திருந்தது சுபாவுக்கு இப்போது ஐந்தாம் மாதம்.. அனைவரோடும் அன்போடு பேசி பூந்தேர் போல அசைந்தாடி வந்தவளை மனையில் அமரவைத்தவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை ஆரம்பிக்க ஒவ்வொருவராக வந்து வளையல் அணிவித்து வாழ்த்தி செல்ல கடைசியில் சூர்யா வைர வளையலை அணிவித்தவன் கன்னத்தில் சந்தனம் பூசி குங்குமத்தை வைத்து மனையை விட்டு எழுப்பி சாமி அறைக்கு அழைத்துச் சென்றான்..
 
இருவரும் தம்பதிகளாக கடவுளை வணங்கியவர்களுக்கு அப்பத்தாவும் தாத்தாவும் வந்து திருநீறு பூசி வாழ்த்த ஸ்ரீ நல்ல நேரம் பார்த்து தன்தாய் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.. அதுவரை தன் மனைவியை விடாமல் அடைகாத்தவன் ஸ்ரீ காரில் ஏற ஆளுக்கு முன்னால் இவன் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான்..!!!
 
ஐந்து வருடங்கள் கழித்து…,
 
ஸ்ரீ பரபரவென அந்த வீட்டின் மருமகளாய் வந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்க இன்று ப்ரியாவுக்கும் அவள் பெரியத்தை மகனுக்கும் கல்யாணம்.. சூர்யா நல்ல படித்த வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளை கமலி, சிந்தியாவுக்கு சொல்லியிருக்க அவர்களின் அந்தஸ்தை அறிந்தவர்கள் இப்போதுதான் மனமிறங்கி அடிக்கடி தன் தாய்வீட்டிற்கும் வர ஆரம்பித்திருந்தனர்..
 
இப்போது அப்பத்தா தன் மகன் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மகள்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்ய கற்றுக் கொண்டார்.. இதில் அவர் பெரிய மகளின் மகன் ப்ரியாவை விரும்பி பெண்கேட்க அனைவருக்கும் அதில் சந்தோசம்.. அவனும் நன்கு படித்து வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு இப்போது இங்கேயே சூர்யாவோடு சேர்ந்து சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்திருந்தான்..
 
ப்ரியாவின் சம்மதத்தை கேட்டப்பிறகே அனைவரும் சம்மதம் சொல்ல, ஸ்ரீ தனக்கு பிடித்த செல்ல நாத்தனாருக்கு எல்லா வேலையையும் பார்த்து பார்த்து செய்தாள்.. தான் திருமணம் முடிந்து இங்கு வந்த நாளிலிருந்து தன்னோடு ஒரு குட்டித்தங்கை போல பழகுபவளை எப்போதுமே அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. அவள் விரும்பியதை கேட்டு கேட்டு வாங்கி கொடுத்தாள்..
 
 அதோடு இப்போது சூர்யாவின் தொழில் கணக்கு வழக்குகளையும் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.. அதிலிருந்துதான் அவன் செய்யும் வேலைபளு  கொஞ்சம் கொஞ்சமாக புரிய இவளும் அவனுக்கு ஏற்றவாரு கொஞ்சம் கொஞ்சமாக உதவிகள் செய்ய ஆரம்பித்துவிட்டாள்…
 
சூர்யாவும் ஸ்ரீயும் பம்பரமாக சுழல காமாட்சிக்கு தன் பேரனையும் அவன் மனைவியையும் பார்த்து பெருமை தாங்கவில்லை.. இதில் ஸ்ரீயின் பெண் ஐஸ்வர்யாவும் சுபாவின் மகள் தன்யாவும் பட்டுப்பாவாடை நகையெல்லாம்  போட்டு குட்டி தேவதைபோல இருந்தவர்கள் ஸ்ரீயின் தாயிடம் இருக்க அவர்களின் ஆட்டத்தை தாங்க முடியாமல் தன் மகனிடம் அவர்களை பார்த்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்..
 
சுபா தன் ஆறுமாத கைக்குழந்தையோடு அமர்ந்திருக்க ஹரிஷும் அவன் தம்பியும் அடுத்து ஒரு கடைத்திறப்பதற்கான வேலைகளில் இருந்தனர்.. இரவுதான் புதுக்கடைக்கு சரக்கு வந்தது.. இரவு இரண்டு மணிவரை வேலை பார்த்துவிட்டு விடியற்காலையில்தான் வீட்டிற்கு வந்ததால் சுபா அவர்களை கொஞ்சம் லேட்டாக வரச் சொல்லிவிட்டு தன் மாமியாரோடு வந்திருந்தார்..
ஆனால் தன் குழந்தையை வைத்து கொண்டு சிரமப்படுவாள் என நினைத்து ஹரிஷும் வேகமாக கிளம்பி வர அவன் தம்பி தருணும் தயாராக நின்றிருந்தான்..
என்னடா கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரலாம்தானே..?”
இல்லண்ணா அஜய் எனக்காக வெயிட் பண்றான்..
அவனை பார்த்து சிரித்தபடி,” அஜய் வெயிட் பண்றானா இல்லை அங்க கல்யாணத்துக்கு வர்ற பொண்ணுகளை சைட்டடிக்க வரச் சொன்னானா..??”
 
எங்கண்ணா எந்த பொண்ணும் எங்களுக்கு செட்டாக மாட்டேங்கிது..!!” இருவரும் அரட்டை அடித்தபடி மண்டபத்திற்கு வர வாசலிலேயே அஜய் தன் இரு அக்கா மகள்களோடும் நின்றிருந்தான்..
அவனை பார்க்கவும் தருண் அங்கேயே நின்றுகொள்ள ஹரிஷ் தன் மனைவியை தேடி போனவன் தன்னை பார்க்கவும் பளிச்சிட்ட அவள் முகத்தை பார்த்தபடியே குழந்தையை வாங்கி கொண்டான்.. அவனை பார்க்கவும் சூர்யாவும் ஸ்ரீயும் முறையாக வரவேற்க, சற்று நேரம் குழந்தையை வைத்திருந்து விட்டு சூர்யாவோடு சென்று வீட்டு ஆளாக அவனுக்கு உதவிகள் செய்ய துவங்கினான்..
 
தருணை பார்க்கவும்,” சித்தப்பா..” என தன்னிடம் தாவிய ஐஸ்ஸுவையும் தனுவையும் இருகைகளில் ஏந்தி முத்தமிட இவர்களும் அவனுக்கு பதில் முத்தம் கொடுத்தனர்..
 
அதை பார்த்து காண்டான அஜய்.. ஏண்டி மாமாவுக்கு அப்பதில இருந்து ஒரு கிஸ் கொடுங்கன்னு சொன்னதுக்கு ரெண்டுபேரம் கடையில இருக்கிற ஐஸ்கிரிம், பைஸ்டார், லாலிபாப் எல்லாம் வாங்கி கொடுன்னு சொல்லி தின்னுட்டு இப்ப உங்க சித்தப்பாவ பார்க்கவும் முத்தம் கொடுக்கிறிங்களா உங்கள..!!” அவர்களை அடிப்பது போல பாவலா செய்தவனை தருணின் தோளில் இருந்தபடியே அஜய் தோளில் சாய்ந்தவர்கள் அவன் கன்னத்தில் முத்தமிட, அந்த மழலைகளின் முத்தத்திற்கு ஈடு இணையே இல்லை என்பதை உணர்ந்தவன் அவர்கள் இருவரையும் சேர்த்து தூக்கி தன் இரு தோளிலும் வைத்துக் கொண்டான்..
 
அஜயும் இப்போது படிப்பை முடித்துவிட்டு சூர்யாவோடு இணைந்திருந்தான்.. அவனுக்கும் கட்டிடகலையில் இருந்த ஆர்வத்தை கண்ட சூர்யா தன்னோடு இணைத்துக் கொண்டான்.. சூர்யாவும் ஹரிஷும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீயின் தாத்தாவை பார்த்து வருவார்கள்..
 
 கல்யாணவீட்டில் சூர்யாவின் ஒன்றரை வயது மகன் தேவேந்திரன் என்ற ஸ்ரீஜன்னை சூர்யாவின் அப்பத்தா தூக்கிகொண்டு அலைந்தார்.. அவனோ அப்பத்தாவின் நகைகளை பிடித்து பார்ப்பது வாயில் வைப்பது.. சேலையை இழுப்பது என சின்ன கண்ணன் போல முழித்து கொண்டு தன் சிரிப்பால் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தான்.. அவன் உருவத்தில் தந்தையை போல இருந்தாலும் கண் அப்படியே தாயின் கண்ணைப் போலவே இருக்கும்..
 
திருமணம் நல்லபடியாக முடிந்து பெண் மாப்பிள்ளையை அவர்கள் வீட்டில் விட்டு பெண் வீட்டு சார்பாக சூர்யாவும் ஸ்ரீயும் அங்கு இருந்து முதலிரவு அறை தயார் செய்து  அவர்களை அறைக்குள் அனுப்பி வைத்து வீட்டிற்கு வர மணி ஒன்பதாயிற்று.. பிள்ளைகள் இரண்டும் வீட்டில் இருந்ததால்  கொஞ்சம கவலையில்லாமல் வந்தவர்கள் வீட்டிற்கு வரவும் ஸ்ரீக்கு அங்கிருந்த விருந்தாளிகளை கவனிக்க அவர்களுக்கு அறை ஒதுக்கிக் கொடுக்கவென வேலை வரிசைக்கட்டி நின்றது…
 
வேலைக்காரர்களோடு வீட்டு ஆளாக நின்று சாப்பாடு பரிமாறியவளின் களைத்த முகத்தை பார்த்தவன் காலையில் கட்டிய பட்டுச் சேலையை கூட மாற்ற நேரமில்லாமல் பூவெல்லாம் காய்ந்து போய் வாடிய பூ போல இருந்தவளை சாப்பிட்டச் சொல்லி குழந்தைகளோடு மாடிக்கு அனுப்பி வைத்தான்..
 
 மாடியில் கால் வைத்தவர்களை தன் அறைக்கு அழைத்த அப்பத்தா தன் பேரனையும் பேரன் குடும்பத்தையும சேர்த்து திருஷ்டி சுற்றிய பின்னரே மாடிக்கு அனுப்பி வைத்தார்… வந்தவர்களில் பாதிபேர் கண் சூர்யா, ஸ்ரீ மேல் இருந்ததை கவனித்தபடிதான் இருந்தார்… தன் மருமகளிடமும் ,”இன்னும் கொஞ்ச நாளைக்கு இவங்க எல்லாருக்கும் தினமும் திருஷ்டி சுத்திரு சுபத்ரா..” என ஆணையிட்டிருந்தார்..
 
அன்று முழுவதும் நல்ல ஆட்டம் போட்டதில் அலுப்பாய் இருந்த குழந்தைகள் இருவரையும் குளிக்க வைத்தவன் அவர்களோடு சேர்ந்து தானும் அலுப்புதீர குளித்து அவர்களுக்கு வேறு உடைகளை மாற்றி குடிக்க பால் கொடுக்கவுமே இருவரும் சாமி ஆடத்துவங்கினர்..
 
அவர்களை படுக்கவைத்து போர்வையை போர்த்திவிட்டவன் அவர்கள் நெற்றியில் முத்தமிட்டு கன்னத்தை வருட அவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவும் தன் மனைவியை தேடிவந்தான்..
 
வேறு குளியல் அறையில் குளித்திருந்தவள், தன் தலையை காயவைத்தபடி எப்போதும் போல பால்கனியில் அமர்ந்திருந்தாள்… லாப்டாப்பில் வரவு செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தவளை கதவு நிலையில் சாய்ந்து அவள் அழகை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தவன் எப்போதும் போல ஊஞ்சலை ஆட்டிவிட்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்… லேப்டாப்பை அவளிடமிருந்து வாங்கி கீழே வைத்துவிட்டு அவள் மடியில் படுக்க,
ஏங்க ப்ளிஸ் ஒரு பத்துநிமிச வேலை  அதை முடிச்சிருறேனே…!!”
 
அவளை பார்த்தவன்,” ரொம்ப பண்ணாத பேபி நீ வேலை கத்துக்கிட்டதும் போதும் என்னை மறந்திட்டு எப்ப பார்த்தாலும் லாப்டாப்பையே கட்டிக்கிற ..!! எனக்கு அந்த லாப்டாப்மேல ரொம்ப பொறாமையா இருக்கு.. ஒன்னு நம்ம பசங்க, இல்லை இந்த லாப்டாப் அப்ப எப்பதாண்டி என்னை கட்டிக்குவ..”
 
உங்கள கட்டிக்காமலா உங்க ரெண்டு பசங்களும் பிறந்தாங்க.. !!”
அது நான் உன்னை கட்டிக்கிட்டதால பிறந்தவங்கடி..!!”
தன் மடியில் படுத்திருந்தவன் கன்னத்தை செல்லமாக வருடி,” பிராடு…என முணுமுணுத்தவள், அவன் ரெஸ்ட் இல்லாமல் தொழில், தங்கை கல்யாணம் என அலைந்தவனை பார்த்தவளுக்கு அவன் வேலை பளுவும் தெரிந்தது.. ஊட்டிக்கு போய் பத்துநாள் இருந்திட்டு வருவோமா மாமா அவன் தலையை கோத,
 
ம்ம்ம் போனா பரவாயில்லடி ரிலாக்ஸே இல்லாம போச்சு பார்க்கிறேன் எப்ப தோதுன்னு அது போறப்ப போவோம்.. இப்ப நீ மாமன கவனி..!!”
எப்படி மாமா கவனிக்க இப்படியா அடிக்க கை ஓங்கியவள் இல்ல இப்படியா ..” அவன் நெற்றியில் முத்தமிட
உன்னிஷ்டம் போல கவனிடி அது உன்னோட சாய்ஸ் ..”அவளை நோக்கி கண்ணை சிமிட்டியவன், அவளை தூக்கியபடி தங்கள் அறைக்குள் நுழைய, அவன் கையில் இருந்தபடியே அவன் முகத்தை தன்னை நோக்கி இழுத்து நெற்றி, கன்னம் என முத்தமிட்டவள் இறுதியில் அவன் இதழில் மையம் கொண்டிருந்தாள்… மழைச்சாரலாய் அவனுள்ளே அந்த முத்தம் இறங்கி கொண்டிருக்க தன்னை அவளுக்கு ஒப்புக் கொடுத்தவன் அந்த சாரலை அனுபவிக்க ஆரம்பித்தான்….
        
                   வாழ்க வளமுடன்
                              முற்றும்

Advertisement