Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ

       அத்தியாயம் –  1

 

 கீகீகீ…..கீக்…….கீகீகீகீ…………………என விடாமல் கேட்டுக் கொண்டிருந்த…. காரின் ஹாரன் சத்தத்தை கேட்டுதோட்டகாரனோடு பேசிக் கொண்டிருந்த காவலாளி ஓடிவந்து  பதட்டத்துடன்  கதவை திறக்க காவலாளியை முறைத்துவிட்டு அவ்வளவு வேகத்தில் தன் சியல்லோவை கொண்டுவந்து போர்டிக்கோவில் நிறுத்தியவன் கதவை திறக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாசலில் நிற்பதை பார்த்தாலும் அவர்களிடம் ஒருவார்த்தைகூட பேசாமல் வேகமாக உள்ளே நுழைய கையில் ஆரத்தி தட்டோடு வேலைக்கார பெண் தன்னை நோக்கி வருவதை பார்த்தவன் அதை ஒரேதட்டாக தட்டிவிட்டபடி வீட்டிற்குள் நுழைந்தான்…..

அந்த வீட்டின் முடிசூடா இளவரசன் சூர்யபிரகாஷ்… அந்த தாம்பாளத்தட்டு மேலேபறந்து படார் என தரையில் விழுந்து டொய்ங்ங்ங்…….என சத்தம் எழுப்பியது….அனைவரும் அதிர்ச்சியாக பார்த்து நிற்க.. அந்த வேலைக்கார பெண்ணும் கை காலெல்லாம் நடுநடுங்கியபடி தன் எசமானி அம்மாளை பார்த்தாள்…

 

சூர்யாவின் அம்மா சுபத்ரா … அந்த இடத்தை சுத்தம் பண்ணுங்க வள்ளி…??”

 

அடுத்து ஒரு கார் உள்ளே நுழைந்தது….. காரின் முன்பகுதியில் இருந்து அந்த வீட்டின் குடும்ப தலைவர்  தேவேந்திரனும் அவரது மகன் சிவசந்திரனும் இறங்கி வந்தவர்கள் தங்கள் காரின் பின்கதவை திறந்து… ம்ம்ம்ம் இறங்கும்மா…

 

மலங்க மலங்க விழித்தபடி மெதுவாக உள்ளிருந்து ஒரு பெண் இறங்க சுபத்ராவை தவிர மற்றவர்கள் அனைவரும் அவளை முறைத்தபடி நிற்க…. அவர்களை நிமிர்ந்து பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பயப்பந்து அவள் நெஞ்சை அடைத்தது… கழுத்தில் அப்போதுதான் சூர்யா கட்டியிருந்த தாலி அவள் கழுத்தில் தொங்கியது…. காரில் இருந்து வாசலுக்கு வரும்வரை பொறுத்திருந்த அந்த வீட்டின் எஜமானி காமாட்சி…

.என்னங்க நடக்குது இங்க..??”

 

ஒன்றும் பேசாமல் தன்னை சுற்றிப்பார்த்த தேவேந்திரன் காவலாளி… தோட்டக்காரர் வேலைக்காரர்கள் அனைவரும் நிற்பதை பார்த்து அவரவர் வேலையை பார்க்கச் சொன்னவர்….குடும்பத்தினரை திரும்பி பார்க்க அனைவரின் முகத்திலும் கோபமும் வெறுப்பும்  அழுகையும் அதிலும் தன் அருகில் நின்ற அந்த பெண்மேல் குரோதத்தையும் கண்டவர்….தன் மருமகளை பார்த்து 

என்னம்மா ஆரத்தி ரெடிபண்ணி வைக்கச் சொல்லி போன்ல சொல்லியிருந்தேன் தானே….??”

 சுபத்ரா கையை பிசைந்தபடி… மாமா… அதுவந்து….???”

 

அங்கே கீழே சிந்தியிருந்த மஞ்சள் நீரை பார்த்தவருக்கு என்ன நடந்திருக்குமென தெரிந்தது… போம்மா போய் மறுபடியும் ஆரத்தி ரெடிபண்ணி கொண்டு வா… அப்படியே சூர்யாவை நான் வரச் சொன்னேன்னு சொல்லு…??”

 

சூர்யாவின் கோபத்தை பற்றி அவன் தாய்க்கு தெரியும்… இப்ப என்ன செய்ய…யோசித்தவர் தன் கணவனை பாவமாக பார்க்க… அவரை கண்ணால் சமாதானப்படுத்தியவர் உள்ளே சென்று ஒரு பத்து நிமிடங்கள் கழித்து சூர்யாவோடு வர அவன் முகம் இறுகிபோய் கிடந்தது…

 

ஒரு ராஜாவின் கம்பீரத்தையும் ஆளுமை திறனையும் கொண்ட தன் பேரனின் திருமணத்தை பற்றி தான் ஏதேதோ கனவு கண்டிருக்க திடிரென இப்படி நடந்ததை தாங்கி கொள்ள முடியாமல்… முதல் ஆளாக வீட்டிற்குள் நுழைந்திருந்தார் அந்த வீட்டின் தலைவி காமாட்சி…

அவரை தொடர்ந்து அவரது இரண்டு மகள்கள் காஞ்சனாவும் கலையரசியும்..தன் அண்ணன் மகனை தங்கள் மருமகனாக்க வேண்டும் என நினைத்திருக்க இன்று அது நடக்காமல் வேறு ஒருத்தியை அந்த இடத்தில் வைத்து பார்க்க அவர்களால் முடியவில்லை….

இவ்வளவு நாள் தங்கள் இருவருள் ஒருவருக்குத்தான் தன் மாமா மகன் என எண்ணியிருந்த கமலியும் சிந்தியாவும் அங்கு சூர்யாவுக்கு அருகில் நின்றிருந்த ஸ்ரீநிதியை முறைத்தபடி தங்கள் பாட்டியை பின் தொடர்ந்திருந்தனர்… அவர்களுக்கு அழுகையும் ஆற்றாமையும் அதைவிட ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கள் பாட்டியை நோக்கிச் சென்றனர்…

 

சூர்யாவின் தங்கை ப்ரியாவுக்கு இப்போது அம்மாவோடு இருப்பதா இல்லை உள்ளே செல்வதா என குழப்பமாக இருக்க தாயின் கண்ணசைவில் அவர் அருகில் நெருங்கியிருந்தாள்.. சுபத்ரா மாப்பிள்ளை பெண்ணுக்கு  ஆரத்தி சுற்ற வலதுகாலை எடுத்துவைச்சு உள்ள போம்மா..??”.

 

ஸ்ரீநிதி வலதுகாலை எடுத்துவைத்து உள்ளே வர தேவேந்திரன் அவளை சாமி அறைக்கு கூட்டிச் சென்று விளக்கேற்ற சொன்னவர்… அவளை அழைத்துவந்து சோபாவில் அமரவைத்து அனைவரையும் நிமிர்ந்து பார்க்க…. சூர்யாவை காணவில்லை… அவன் எப்போதோ மாடிக்கு சென்றிருந்தான்…

 

ம்ம்ம் இப்ப சொல்லுங்க??”

 

காமாட்சி என்ன சொல்ல சொல்லுறிங்க யாரக்கேட்டு இப்ப நம்ம சூர்யாவுக்கு கல்யாணம் பண்ணுனிங்க…. ??”

 

காஞ்சனாவும் கலையரசியும் அழுது கொண்டே இப்படி எங்கள ஏமாத்தக்கூடாதுப்பா எங்க பொண்ணுகள்ல ஒருத்தியத்தானே அவனுக்கு கட்டி வைக்கிறதா பேச்சு… இப்ப என்னன்னா ஒரு பிச்சைகாரிய கல்யாணம்  பண்ணி கூட்டிட்டு வந்திருக்கிங்க..??” ஸ்ரீயை முறைத்தபடி சொல்ல….

 

அவளுக்கோ நேற்றிலிருந்து தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை… ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது தான் செய்த தவறால் இவருக்கு கெட்டபேர்… இந்த கல்யாணம் எல்லாம் …. இவர்கள் வசதிக்கு தான் எந்த வகையிலும் பொருத்தமில்லை என்பது போட்டிருந்த உடையிலேயே தெரிந்தது… அவர்கள் அனைவரும் சாதாரணமாகவே விலை உயர்ந்த ஆடைகளும்… வைரமுமாக அணிந்திருக்க… இவளோ சாதாரண பட்டுச்சேலையில் தங்க நகைகள் அணிந்திருந்தாள்….

 

எல்லாரும் கொஞ்சநேரம் பேசாம இருங்க… அதட்டியவர் யார் யாருக்கு என்ன எண்ணம் இருந்தாலும் கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான் நடக்கும்..??” 

இன்று நடந்ததை யோசித்து பார்த்தபடி…. முழுவதையும் சொல்லாமல்… நான் இன்னைக்கு என் சினேகிதனோட பேத்தி கல்யாணத்துக்கு போறேன்னு சொல்லிட்டுதானே போனேன்… அவரோட பேத்திதான் இந்த பொண்ணு சில பிரச்சனையால அந்த கல்யாணம் நின்னு போச்சு… நாம இன்னைக்கு இருக்கிற வசதி அந்தஸ்து… சொத்து எல்லாத்துக்கும் காரணம் இவங்க தாத்தாதான்…

அவன் சின்ன வயசில செஞ்ச உதவி… அவன் எதையும் எதிர்பார்க்கலை… இப்ப நொடிச்சு போயிருந்தாலும் நான் உதவி செய்யிறேன்னு சொன்னப்ப வாங்கிக்கவே இல்லை… இன்னைக்கு அவனுக்கு ஒரு பிரச்சனையான நேரத்துல நம்ம சூர்யாவ கொஞ்சம் கட்டாயப்படுத்தி இந்த பொண்ண கல்யாணம் பண்ணி வேச்சிட்டேன்…

அதான் அவன் என் மேல கொஞ்சம் கோபமா இருக்கான்….தன் மகள்களை பார்த்தவர் ரெண்டுபேருல ஒருத்தரோட பொண்ண கல்யாணம் பண்ணுனா ஒருத்தர் விட்டுக்கொடுக்கிற மாதிரிதானே வரும்… இப்ப நீங்க ரெண்டுபேரும் விட்டுக் கொடுத்ததா நினைச்சுக்கோங்க… இந்த பிரச்சனையை இதோட முடிங்க…. எழுந்தவர்….ப்ரியா அண்ணிய கூட்டிட்டு போய் உன்னோட டிரஸ்ல புதுசா இருந்தா எடுத்துக்குடு அப்புறமா கடைக்கு போய் வேற வாங்கி குடுக்கலாம்??”

 

தலை குனிந்து அமர்ந்திருந்த ஸ்ரீநிதிக்கு  தெரியும் தாத்தா இந்த திருமணத்தை பற்றி சொன்னதில் பாதிக்கு மேல் பொய்யென்று…அவளுக்கு குற்ற உணர்ச்சி தாங்கவில்லை… அதைவிட சூர்யாவை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் அவளுக்கு இருக்கும் மிகப்பெரிய பயமே….

 

ப்ரியாவுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது எங்க அண்ணன் இந்த அத்தை பொண்ணுக ரெண்டு பிசாசுகள்ல இருந்து ஏதாச்சும் ஒண்ணக் கட்டிக்க போகுதோன்னு.. கல்யாணம் நடக்கிறதுக்குள்ளயே அவங்களும் அத்தையும் பண்ணுறது தாங்க முடியலை..

இதுல நமக்கு அண்ணியா வந்தா என்ன பண்ணுறது…பரவாயில்ல அண்ணா தப்பிச்சிட்டாங்க ப்ரியாவுக்கு அவள் அண்ணன் என்றால் உயிர்… அவன்தான் அவளுக்கு எல்லாம்…  காலேஜில்கூட அண்ணனை பற்றித்தான் பெருமையாக பேசுவாள்…

அவன்தான் அவளுக்கு ரோல்மாடல் சூர்யாவுக்கும் தங்கை என்றால் உயிர்… ஒரு நண்பனை போலவே பழகுவான் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றாலோ…. அல்லது பொருள் வேண்டும் என்றாலோ அவனிடம்தான் செல்வாள்.. சூர்யாவுக்கும் ப்ரியாவுக்கும் ஒன்பது ஆண்டுகள் இடைவெளி அதனால் சூர்யாவுக்கு அவள் ஒரு குட்டி தேவதை….

 அண்ணா அழகான அண்ணியத்தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்காங்க…பேருகூட சூப்பரா இருக்கு ஸ்ரீநிதி… ஸ்ரீயை நிமிர்ந்து பார்க்க அவள் சுற்றுப்புறம் மறந்து வேறு சிந்தனையில் இருந்தாள்….

மாசுமறுவற்ற முகம்…கோலிக்குண்டு கண்கள் அழகான உருண்டை முகம் நல்ல சிவந்த நிறம் அடர்த்தியான முடியை பின்னி பூ வைத்திருக்க…மெரூன்நிற பட்டுக்கட்டியிருந்தாள் முகம் பொலிவில்லாமல் காணப்பட்டது மெலிதான தேகம்…  இவங்க அண்ணா உயரத்துக்கு கரெக்டா இருப்பாங்களா என்ற சந்தேகம்வர ஸ்ரீயின் கையை பிடித்தவள்

 

வாங்க அண்ணி ரூமுக்கு போவோம்… கமலியும்… சிந்தியாவும் முறைப்பதை பொருட்படுத்தாமல் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்…

 

சூர்யாவின் குடும்பம் மூன்று தலைமுறையாக கட்டுமானத்தொழிலில் இருக்கிறார்கள்… காரைக்குடியில் இருக்கும் பெரிய பெரிய பழமைவாய்ந்த வீடுகள் அனைத்தும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான்… வீட்டின் A to Z  எந்த வேலையாய் இருந்தாலும் இவர்களை அனுகினால் செய்து முடிப்பார்கள் ..

வேலையில் சிறுவேலை பெரியவேலை என எதையும் கணக்கில் கொள்ளாமல் கச்சிதமாக செய்து முடிப்பார்கள்…. சூர்யா தலையெடுத்த பின்னர் இன்னும் புது புது உத்திகளோடு பழமை மாறாமல் கட்டிக் கொடுத்தான்… அதோடு புதிதாக இப்போது ஒரு மரக்கடையும் ஆரம்பித்திருந்தான்…

பெரிய பெரிய வீடுகளை பராமரிக்க முடியாமல் ஓட்டுவீடுகளாய் இருந்ததை இந்த காலத்திற்கு ஏற்றாற்போல மாற்ற வேண்டி அதை இடித்துவிட்டு புது வீடுகளை கட்டிக் கொடுக்கச் சொல்ல… அந்த வீடுகளின்… பழமைவாய்ந்த ஓடுகள் … கைமரங்கள்… தேக்கு கதவுகள் அனைத்து தேக்கும் அவ்வளவு வேலைபாடுகளுடன் இருப்பதை கண்டவன் அதையும் புதிது செய்து தன் கட்டுமானத்தொழிலில் பயன்படுத்தி  இவனுக்கென்று தனி முத்திரையை பதித்திருந்தான்…

இவன் தாத்தா அப்பாவை விட பேர் எடுத்திருந்தான்… தாங்கள் இருக்கும் வீடே அதற்கு ஒரு அத்தாட்சி… முற்றம் தாழ்வாரம்… மச்சு என பழமை மாறாமலும் போர்டிக்கோ…. கிரானைட்…பெரிய ஹால் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி பால்கனி என புதுஉத்திகளும் செய்து மாற்றியிருந்தான்…. அவன் வீட்டிற்கு ஒருமுறை வருபவர்கள் வீடு கட்டலாம் என முடிவெடுத்தால் முதலில் நாடுவது சூர்யாவைத்தான் அந்த அளவுக்கு பெயரெடுத்திருந்தான்….

 

அங்கு மாடியில் சூர்யா அவன் அறையில் இருந்த பால்கனியில் போடப்பட்டிருந்த அழகிய வேலைபாடமைந்த மரஊஞ்சலில் அமர்ந்து  தன் டென்சனை குறைக்க சிகரெட் பிடித்தபடி அமர்ந்திருக்க…முகம் இறுகி போய் இருந்தது…

இத்தனை வருசம் வைச்சிருந்த நம்பிக்கையை இன்னைக்கு எப்படி இவங்களால மாத்த முடிஞ்சது…இன்று நடந்ததையே மீண்டும் மீண்டும் யோசித்து பார்க்க… .இயல்பாகவே கோபக்காரனான அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை…. தாத்தா கதவை தட்டிவிட்டு உள்ளேவர சிகரெட்டை கீழே போட்டவன் கட்டிலில் சென்று அமர்ந்தான்… அவரிடம் ஒருவார்த்தைகூட பேசவில்லை…

 

அவன் எதிரில் இருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவர்… தன் பேரனை பார்த்து இப்ப சொல்லு சூர்யா உன்னோட நியாயத்தை நான் கேட்கிறேன்??”

 

இவனும் தன் தாத்தாவை பார்த்தவன்… அவரை கெத்தாக ஒரு பார்வை பார்த்தபடி நியாயமா… அதுவும் உங்ககிட்டயா… அதுதான் கிடைக்காதுன்னு தெரிஞ்சிருச்சே நீங்க உங்க நண்பரை பார்த்த அளவுக்கு என்னைய நினைச்சு பார்க்கலைன்னு நினைக்கிறேன்… முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் இனி என் வாழ்க்கையில தலையிடுற சந்தர்ப்பத்தை நான் யாருக்கும் குடுக்கிறதா இல்லை… எனக்கு தெரியும் என்ன செய்யனும்னு நான் பார்த்துக்கிறேன்… இனி என்விசயத்துல யாரும் தலையிடக்கூடாது…..??”

 

அப்ப நான் கண்ணால பார்த்தது உண்மைதானே…??”

 

கண்ணால பார்த்தத மட்டும் நம்பக்கூடாது தாத்தா… என்னன்னு என்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டிருக்கனும்…??”

 

பெருமூச்சு விட்டவர்…. நடந்ததை விடு இப்ப உன்னை நம்பி அந்த பொண்ணு வந்திருக்கு அத கண்கலங்காம பார்த்துக்க….??”

 

அவரை பார்த்து முறைத்தவன் தாலிமட்டும்தான் உங்களால கட்டவைக்க முடியும் அந்த பொண்ணோட வாழ்றதா வேணாமான்னு நான்தான் முடிவு பண்ணனும்…??”

 

அந்த நேரத்திலும் தன் பேரனின் கோபத்தை ரசித்தவர் கம்பீரம் கொஞ்சம்கூட குறையாமல் நெஞ்சை நிமிர்த்தி தன்னிடம் பேசுபவனை கண்டு.. அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க… தன் பேரனை என்ன செய்து வழிக்கு கொண்டுவருவது என்று தெரியவில்லை…. தன் மகனிடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என ரூமை விட்டு வெளியே வந்தார்….

 

அங்கு காமாட்சியோடு அவரின் மகள்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்…. அம்மா இப்ப எங்க வீட்டுக்காரங்க ரெண்டு பேரும் இங்க வரப்போறாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறிங்க… முதல்ல அவளை வீட்டவிட்டு அடிச்சு விரட்டுங்க… நீங்க அவ வந்தவுடன வீட்டுக்குள்ளயே சேர்க்க மாட்டிங்கன்னு நினைச்சேன்.. ஆனா இப்ப பேசாம இருக்கிறத பார்த்தா உங்களுக்கு அவளை பிடிச்சிருக்கும் போல…??”

 

ஏய் கொஞ்சநேரம் பேசாம இருங்கடி… தன் மகள்களை அதட்டியவர்…..தன் மடியில் அழுதுகொண்டு படுத்திருந்த பேத்திகளின் தலையை தடவிவிட்டபடி… உங்களை மாதிரி எனக்கும் இது அதிர்ச்சிதான் உங்க அப்பா இப்படி செய்வார்ன்னு நானும் எதிர்பார்க்கலை…..

இப்ப உங்களுக்கு என்ன இவங்க ரெண்டுபேருல ஒருத்திய என் பேரனுக்கு கட்டி வைக்கனும் அதானே.. சூர்யாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை போல பார்த்திங்கதானே அவனோட கோபத்தை… அமைதியா இருங்க ..

எல்லா விசயத்துலயும் தலைய தலைய ஆட்டுற உங்க அப்பா  உங்க அண்ணன் கல்யாணத்துலயும் இப்படிதான் ஒரு பிச்சைக்காரிய அவனுக்கு கட்டிவைச்சாரு.. அதுல அவனும் அவள பிடிச்சிருக்குன்னு சொன்னதால நம்மளால ஒன்னும் பண்ண முடியல.. ஆனா இந்த முறை அப்படி ஒன்னும் இல்லை என்பேரன் நான் என்ன சொன்னாலும் கேட்பான்…

கொஞ்சம் பொறுங்க நான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்.. நீங்க ரெண்டுபேரும் அழாம போய் சாப்பிடுங்க??” தங்கள் பேத்திகளை சமாதானப்படுத்தியவர் ஸ்ரீநிதியை சூர்யாவின் வாழ்க்கையில் இருந்து எப்படி விரட்டுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்…

 

தேவேந்திரனும் தன் அறையில் அமர்ந்து சூர்யாவோடு ஸ்ரீயை  வாழ்க்கையில ஒன்று சேர்ப்பதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தார்…இருவரும் யோசிக்க மறந்தது சூர்யா… ஸ்ரீ… என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை..??

 

                                                           இனி……………??????

Advertisement