Advertisement

அங்கு மாடிக்கு சென்ற ஸ்ரீ அறைக்குள் நுழைய போக ப்ரியா இந்தாங்க அண்ணி இத அண்ணா பீரோவுல வைங்க…??”கையில் இருந்த பைலை கொடுக்கவும்… அதை வாங்கி சென்றவள் கட்டிலில் வைத்துவிட்டு பாத்ரூம் சென்றுவிட்டு திரும்ப பேப்பர் சில சிதறி கிடக்கவும்
 
 அடச்சே காத்துல பறந்திருச்சா??” என்றபடி கீழே குனிந்து அந்த பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க… ஒரு பேப்பர் கட்டிலுக்கு கீழே கிடக்கவும் மெதுவாக குனிந்து எடுத்தவள் அதை படித்து பார்க்க சூர்யாவுக்கும் இவளுக்குமான டைவர்ஸ் பேப்பர்……பார்த்தவளுக்கு கண்ணீர் மளுக்கென்று  உடைந்தது…..
 
நேற்று தன் தாய்வீட்டுக்கு சென்றதிலிருந்து இப்போதுவரை இருந்த அந்த இதமான நிலை மாறியது போல இருந்தது… தன்னை அறியாமல் தன் மனதிற்குள் அடியெடுத்து வைத்திருந்தவன்….. இப்போது டைவர்ஸ் பேப்பரையும் உடனே வாங்கி வைத்திருப்பான் என நினைத்து பார்க்கவில்லை… முதலிலேயே சொன்னான்தான் என்றாலும் இப்போது இவள் மனம் முரண்டியது… அப்படியே சற்றுநேரம் அழுதவள் எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் அழுதாள்….
 
அங்கு சூர்யாவின் அதட்டலில் அனைவரும் ஒருநிமிடம் வாயடைத்து இருக்க… என்னோட கல்யாணத்தை பத்தி பேசவோ… அது வேணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கிற உரிமையையோ நான் யாருக்கும் கொடுக்கலை… மாமாங்கிற மரியாதை எப்பவும் எனக்கு உங்க மேல இருக்கு… என்னோட கல்யாணம் தாத்தா சொல்லித்தான் நடந்துச்சு…  எங்க அம்மாக்கூட என் கல்யாணத்தை பார்க்கலை… அவங்ககிட்டக்கூட ஒருவார்த்தை சொல்லலை அவங்களே அவள மருமகளா ஏத்துக்கிட்டாங்க… நீங்க ஏத்துக்கிட்டா என்ன ஏத்துக்கலைன்னா என்ன…??”
 
காமாட்சி… ஆங்காரமாக… டேய் அவளே ஒரு பிச்சைக்காரி குடும்பத்துல இருந்து வந்தவ… இவங்களவிட அவ ஒன்னும் முக்கியமில்ல… இவங்க எல்லாரும் சொல்றத கேளு…??”
 
அப்பத்தா….????” ஓங்கி சத்தமிட்டவன்… யாரப்பார்த்து என்ன சொல்றிங்க…??”
 தன் தாயை பார்த்தவன் அவர் கண்கள் கலங்கிபோய் ஓரத்தில் நிற்க அவர் தோளில் கைப்போட்டபடி….எங்கம்மா பிச்சைக்காரியா…. அவங்க மகன் சம்பாரிக்கிறது எல்லாமே அவங்களோடதுதான்… அப்பா நீங்க பார்த்துக்கிட்டுதான் இருக்கிங்களா இவங்க  அம்மாவை என்ன வேணும்னாலும் சொல்வாங்க நீங்க பேசாம இருப்பிங்களா …போங்கப்பா இத நான் உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கலை…??”
 
இனிமே யாராச்சும் எங்க அம்மாவை ஒருவார்த்தை சொல்றத கேட்டேன்… அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்..தாத்தா……. சொல்லிவைங்க அப்பத்தாகிட்ட… அப்புறம் நான் எங்க அம்மாவோட வேற வீட்டுக்கு போற மாதிரி ஆகிடும் நீங்களும் உங்க பையனும் உங்க மனைவியோட இருந்துக்கோங்க…??”
 
சூர்யாவின் தந்தைக்கு தன் மகன் மேல் ஒரு மரியாதை வந்தது …இத்தனை வருசமா நாம நம்ம அம்மா பேசும்போது சும்மா இருந்துட்டு ரூம்ல போய்தான் சமாதானப்படுத்துவோம்…. இப்படி பேச தைரியம் இல்லையே அம்மா என்ன நினைச்சுருவாங்களோ தங்கச்சியும் தங்கச்சி மாப்பிள்ளைங்க என்னமும் நினைச்சுருவாங்களோன்னு அமைதியா இருந்தோம் தன் மனைவியை பார்த்தவர் சுபத்ரா முகத்தில் ஒரு பிரகாசத்தை காணவும் தனக்காக தன் மகன் பேசுகிறான் என்ற பெருமையும் தெரிந்தது…. போற போக்க பார்த்தா நாம இவன் மனைவியோட சந்தோசமா இருக்கட்டும்னு நினைச்சா இந்த பய நம்மள நம்ம பொண்டாட்டிக்கிட்ட இருந்து பிரிச்சிருவான் போலவே… அவர் முகத்தில் புன்னகையும் தெரிந்தது…தன் தந்தையை பார்த்தவன் அவர் முகத்தில் ஓடும் புன்னகையை கண்டவனுக்கு அவர் மனதில் ஓடுவதும் தெரிந்தது….
 
தன் மாமாக்களிடம் திரும்பியவன் என் மனைவியை இங்க வைச்சுக்கனுமா இல்ல… இல்ல அவங்க வீட்டுக்கு அனுப்பனுமான்னு நான்தான் முடிவு பண்ணனும்… இத சொல்ற உரிமை உங்களுக்கு இல்லை…  அப்புறம் என்ன சொன்னிங்க ஒரு லட்சமோ இல்ல ரெண்டு லட்சமோ நீங்க கொடுக்குறிங்களா…யாருக்கு பணம் யாரு கொடுக்கிறது…. மாமா ரெண்டு பேரும் நல்லா யோசிச்சு பாருங்க நாங்க இத சொல்லக்கூடாது இருந்தாலும் எனக்கு வேற வழியில்லை…. முதல்ல இருந்த நிலைமையும் நீங்க இப்ப இருக்கிற நிலைமைக்கும் யாரு காரணம்னு…. நீங்க என் மனைவிக்கே பணம் கொடுப்பிங்களோ… விரும்பி கட்டினாலும் விரும்பாம கட்டினாலும் நான் அவளுக்குத்தான் தாலி கட்டியிருக்கேன்… அவதான் என்னோட மனைவி….. அவள தரக்குறைவா பேசுறதோ இல்லை நடத்துறதோ கூடாது…. அப்படி ஏதாவது நடந்து என்னோட காதுக்கு வந்தா அப்புறம் நீங்க வேற சூர்யாவை பார்க்க வேண்டியிருக்கும் … எங்க அப்பா வேணும்னா…அவங்க தங்கச்சிகளுக்காக நீங்க பேசுறத பொறுத்துக்கிட்டு இருக்கலாம் எனக்கு எந்த அவசியமும் இல்லை….??”
 
அவன் அத்தைகள் இருவரும் ஓவென சத்தமிட்டு அழ ஆரம்பிக்க தாத்தாவோ சூர்யாவை சமாதானப்படுத்தி அமர வைத்தார் … அப்போது கூட தன் மகள்களை சமாதானப்படுத்தவில்லை… ஏனென்றால் வந்ததிலிருந்து அவர்களின் கணவர்கள் பேசிய பேச்சு அப்படி… மருமகன்கள் என்று எவ்வளவு நேரம்தான் பொறுத்து கொண்டு இருப்பது…..
 
காமாட்சி தன் மகள்களை சமாதானப்படுத்த… ஏம்மா சின்ன பையன பேசவிட்டு எல்லாரும் வேடிக்கை பார்க்கிறிங்களா…..??”
 
சூர்யாவின் அப்பா ஏதோ பேச வாய்திறக்க போக அவர் கையை பிடித்த அவர் தந்தை… கண்ணால் சமாதானப்படுத்த…
 
காமாட்சியோ… எப்ப இந்த வீட்டுக்குள்ள அவ கால எடுத்து வைச்சாலோ அப்பயிருந்து இந்த மாதிரிதான் நடக்குது…நேத்துக்கூட பாரு நான் அவங்கள வெளியே போகச் சொல்றேன் இவன் என்னை பேசவிடாம ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் அவங்க அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லிக்கிட்டு இருக்கான்…காசு பணம் கொடுத்து உதவியிருந்தாங்கன்னா நாம வட்டிபோட்டு அந்த பணத்தை கொடுக்கிறத விட்டுட்டு அவங்க வீட்டுப் பொண்ணக்கட்டலாமா… பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தாலே அவளுக முந்தானையில முடிஞ்சு வைச்சிக்கிராளுக..??”. மீண்டும் சண்டையை ஆரம்பிக்க…
 
பெருமூச்சு விட்டவன்...தாத்தா அப்பா வாங்க நாம ரூமுக்கு போவோம்…. ரிசப்சனுக்கு யாருக்கெல்லாம் சொல்லனும்னு லிஸ்ட் போடனும் … அம்மா எனக்கு தலை வலிக்கிது கொஞ்சம் டீ போட்டு குடுத்து விடுங்கம்மா… மாமா, அத்தை உங்களுக்கும் வீட்ல வந்து முறைப்படி அழைப்பு தர்றோம் நீங்க எல்லாரும் குடும்பமா வந்துருங்க…??”
 
வரலைனா… என்ன உறவ முறிச்சுக்கிருவிங்களா…???” மாமாக்கள் இருவரும் ஆங்காரமாய் அவனை பார்த்து கேட்க …. இந்த வயசில இவனுக்கு எவ்வளவு திமிரு…. அவன் அப்பா , தாத்தாவே நாம பேசும்போது வாய முடிக்கிட்டு இருக்காங்க இவன் என்ன பேச்சு பேசுறான்… இல்ல இவன பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாங்களா..
 
மீண்டும் சோபாவில் அமர்ந்தவன்... எங்களோட உறவை வைச்சிக்கிறதும் வேண்டாம்னு முறிச்சிக்கிறதும் உங்களோட விருப்பம்….நீங்களே முடிவு பண்ணிட்டு சொல்லுங்க உறவை மட்டுமா இல்லை வியாபாரத்தையுமான்னு வாங்க தாத்தா…. அப்பா நீங்களும் வாங்க??” அவர்களோடு தாத்தாவின் அறைக்கு செல்ல…
 
அவர்கள் வீட்டு மருமகன்களோ அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள்… உறவை வேண்டாம்னு ஈஸியா முடிச்சிக்கலாம்… ஆனா வியாபாரத்தை கண்டிப்பா முடியாது இவர்கள் மூலம்தான் முக்கால்வாசி வியாபாரமே நடக்குது… அது போனா கடகடன்னு திரும்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரணும்… படுபாவி பய எப்படி பேசிட்டு போறான் பாரு… எப்படியும் நம்ம பொண்ண கட்டி இவன் சொத்து எல்லாத்தையும் ஆட்டைய போடலாம்னு பார்த்தோம்… அது நடக்காது போலவே இருவரும் ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்ப…
 
என்ன மாப்புள்ள ஒன்னும் சொல்லாம போறிங்க….??”
 
என்னத்தை சொல்ல சொல்றிங்க உங்க பேரன் மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்னு நாங்களும் பேச முடியுமா…. இவ்வளவுநாள் உங்க பொண்ணுகளை தங்கத்தட்டுல வைச்சு தாங்கினோம்… இப்ப உறவை முறிச்சா உங்க பொண்ணுங்க தாங்குவாங்களா அவங்க அழுதா எங்க மனசுதான் தாங்குமா….??”
 
காமாட்சி… உங்க அருமை இந்த பயலுக்கு தெரியலையேப்பா… நீங்க வேணா போங்க மாப்பிள்ள பேத்திக ரெண்டும் இங்கேயே இருக்கட்டும் பார்க்கிறேன் நானா அவளான்னு….??” எப்படியும் ஸ்ரீயை அவன் வாழ்க்கையில் இருந்து விலக்க வேண்டும் என்ற வன்மம் அவர் மனதிற்குள் ஆழமாக விழ……
 
ஒரு அரைமணி நேரம் சென்றிருக்கும் உள்ளே எல்லாவற்றையும் லிஸ்ட் போட்டவர்கள்… யார் யாருக்கு என்ன வேலை என பிரித்து கொடுக்கப்பட சூர்யா ஹரிஷை பற்றி சொல்லி அவன் கடையிலேயே துணிகள் எடுத்து கொள்ளலாம் என சொல்ல… அதற்கான நாளையும் பார்க்கச் சொன்னான்…தாத்தாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது தன் பேரனை நினைத்து தங்கள் மருமகன்களை அவன் பேசியதெல்லாம் இவருக்கு பெரிதாகவே தோன்றவில்லை… ஏனென்றால் அவர்களும் ஒரு நாள்கூட மாமனார் ,மச்சினர் என்று மரியாதையோடு நடந்து கொள்வதில்லை… எதையும் நேரடியாக பேசாமல் தங்கள் மனைவி மூலமே கேட்டு வாங்கி கொண்டார்கள்… ஒருமுறை மறுத்தால்கூட காமாட்சி அழுது ஒப்பாரி வைத்து அவர்களோடு சண்டைபோட்டு எப்படியும் வாங்கி கொடுத்துவிடுவார்….
 
இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர் மனம் நிறைந்து போயிருந்தது… தன் பேரன் வளர்ந்துவிட்டான்…குடும்பத்தையும் அவன் தாயையும் இனி அவன் பார்த்துக் கொள்வான் அதோடு தன் நண்பனுடைய பேத்தியையும் நல்ல முறையில் வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் வந்திருந்தது….
 
எல்லாம் பேசி முடித்து அப்பா நான் அந்த பெரியார்சிலையில வேலை நடக்கிற காம்பளக்ஸ்க்கு போறேன்… இன்னைக்கு டயல்ஸ் பார்த்து செலக்ட் பண்ணலாம்னு  இருக்கேன்… நீங்க மத்த வேலையை பாருங்கப்பா ரொம்ப அலையாதிங்க… நீங்களும் தாத்தாவும் என்னன்னாலும் போன்லயே சொல்லுங்க வேலைக்கு வேணா ஆள அனுப்புறேன்ப்பா… அங்கு நின்று கொண்டிருந்த தன் தாயின் தோள்மேல் கைபோட்டவன் அம்மா நீங்க உங்களுக்கு என்ன கலர் பட்டுப்புடவைன்னு முடிவு பண்ணிக்கோங்க நாம சாயங்காலமா கடைக்கு போகலாம்… என்ன கலர்மா முடிவு பண்ணியிருக்கிங்க….??” அவரோடு பேசியபடி ரூமை விட்டு வெளியில் வர அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள்….
 
 தாத்தா தன் மகனை கட்டி அணைத்தவர்….. நம்ம சூர்யா வளர்த்திட்டான்பா…. நீ கவலையே படாத… எல்லாத்துக்கும் அவன் இருக்கான்??” இருவருக்கும் கண்ணீர் துளிர்த்தது….
 
தன் அறைக்கு வந்த சூர்யா அறைக்குள் ஸ்ரீயை காணாமல் எங்க போயிட்டா ஒருவேளை ப்ரியாவை பார்க்க போயிட்டாளா…  பாத்ரூம் கதவை திறக்க கையை வைத்து தள்ள அவளும் உள்ளிருந்து அதை இழுக்க இழுத்த வேகத்தில் பின்னால் விழப்போனவளை எட்டி தாங்கிப்பிடித்தவன் அவளை தன்னை நோக்கி இழுக்க கீழே சண்டைபோட்ட போது  சொன்ன தன் மனைவி என்ற உரிமை உணர்வு தன்னால் வந்திருந்தது… அவள் கையை சுண்டி இழுக்க அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து புதைந்திருந்தாள்… சட்டையை கழட்டிவிட்டு வெறும் பனியனோடு நின்றிருந்தவன்… மார்பில் இருந்து முகத்தை சட்டென எடுத்தவள் அவனை ஒரு பார்வை பார்க்க…
 
சூர்யாவுக்கு இந்த பார்வை வித்தியாசமாக இருந்தது இவளுக்கு என்னாச்சு.. யோசனையோடு நின்றவளை இவனும் பார்க்க…சட்டென அவனை விட்டு விலகியவள் வெளியில் வந்திருந்தாள்… அவன் பாத்ரூம் கதவை அடைத்தவன்…. வெளியில் வந்து வேறு சட்டையை மாற்றிவிட்டு கிளம்பி வாசல் பக்கம் கால் வைக்க …..
 
ஒருநிமிசம் நில்லுங்க…??”
என்ன என்பது போல அவளை பார்த்துக் கொண்டிருக்கவும்
அலமாரியில் இருந்து அந்த டைவர்ஸ் பேப்பரை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தவள்… அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் பால்கனிக்கு சென்றிருந்தாள்….
 
அதை வாங்கி பார்த்தவன்… அவள் பெயருக்கு கீழே கையெழுத்து போட வேண்டிய இடத்தில் அவள் கையெழுத்திட்டிருந்தாள்…. அதை பார்த்து சட்டென அந்த பேப்பரை தவற விட…. அது காற்றிற்கு சுழன்று வந்து அவன் காலடியில் கிடந்தது….
 
                                              இனி…………………????????

Advertisement