Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ

     அத்தியாயம்  –  6

 

 

சுபாவும் தருணும் வாயால் சண்டைப்போட்டவர்கள்… கொஞ்சநேரத்தில் அந்த சண்டை அடிதடியாக மாறியது… தலகாணியை எடுத்து இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்ள அந்த கூட்டணியோடு இப்போது ஸ்ரீயும் சேர்ந்து கொண்டாள்.. ஹரிஷோ அவள் சண்டை போடும்போதெல்லாம் அவன் முகத்தில் படிந்து படிந்து மீண்ட அவள் வயிற்றன் மென்மையை உணர்ந்தபடி அதில் கிறங்கி போயிருந்தான்.. சுபாவை அடக்கவெல்லாம் முயற்சி பண்ணவேயில்லை.. ஸ்ரீயும் எழுந்து அமர்ந்து அவனை அடிக்க ஆரம்பிக்க… அஜய் தருணையும் ப்ரியா ஸ்ரீயையும் சமாதானப்படுத்த முயன்றார்கள்..சுபாவோ கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி தன் தம்பியோடு சண்டைப்போட்டாள்…திடிரென  தன் வயிற்றில் ஹரிஷின் ஈர உதடுகளை உணர்ந்து அப்படியே ஷாக் அடித்தாற்போல ஆனவள்…. இப்போதுதான் உணர்ந்தாள் தன் கணவன் செய்யும் வேலையை…மற்றவர்களை நிமிர்ந்து பார்க்க அவர்கள் கவனம் அந்த சண்டையில் இருக்கவும் யாரும் அறியாமல் ஹரிஷின் முகத்தை திருப்பியவள்….

 

என்ன பண்றிங்க… எழுந்து உட்கார்ந்துக்கோங்க..??”.

 

ஏய் போடி எனக்கு செமயா தூக்கம் வருது…??”மீண்டும் தன் முகத்தை அவள் வயிற்றுப்பக்கம் திருப்பப்போக….

 

ஏங்க தூக்கம் வர்றவங்க செய்யுற வேலையா இது…??”

 

இப்படி படுத்தாதாண்டி நல்லா தூக்கம் வருது…??” அங்கு தருண் ஸ்ரீயை போட்டு இன்னும் வெளுக்க ஆரம்பிக்க… இப்போது சூர்யாதான் இடைபுகுந்து ஸ்ரீயை தன்பக்கம் இழுத்திருந்தான்… அவள் இடுப்போடு கைபோட்டு இழுத்தவன்…

 ஏய் விடுடி எருமைமாடு வயசாகுது சின்ன புள்ள மாதிரி சண்டைப்போடுறிங்க…??”

 

ச்சு விடுங்க நான் எண்ணி பார்த்தேன் அவன் என்னை பத்து அடி அடிச்சிட்டான் நான் ஏழுதான் அடிச்சிருக்கேன்…… இன்னும் மூனு பாக்கி இருக்கு…

 

அடச்சீ விடு நீயும் உன்தங்கச்சியும் போட்டு அவன நல்லா மொத்திட்டு இப்ப எண்ணிக்கை விட்டுப் போச்சாம்…??”

 

அங்கு அஜயும் அவனை சமாதானப்படுத்தி இழுத்துச் நிறுத்த மூவரும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவர்கள்..தங்களை குனிந்து பார்க்க… பெண்கள் இருவருக்கும் தலையில் இருந்த பூவின் நார் மட்டுமே இருந்தது… சேலையெல்லாம் பின் எடுத்து மொத்தமாக சண்டைக்கு தோதாக இடுப்பில் சொருகி வைத்திருந்தனர்… தருண் தன்னை குனிந்து பார்க்க சட்டையில் இரண்டு பட்டனை காணவில்லை… அவன் சட்டையை பார்க்கவும் ஸ்ரீ எழுந்து பார்க்க அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அந்த பட்டன் கிடக்கவும் கையில் எடுத்து

 

டேய்…. தருணு…34 வது பட்டன்டா… ??”அதை சுபா கையில் கொடுத்தவள் ஏய் இது இப்ப நீதாண்டி தைச்சுக்குடுக்கனும்…போன தரம் நான் தைச்சு குடுத்திட்டேன்…??”இது இவர்களின் வாடிக்கை என்பதை போல பேசிக் கொண்டிருக்க

 

சுபாகிட்டயே குடுக்கா நான் போய் தாத்தா தூங்கிட்டாங்களான்னு பார்த்துட்டு… ஊசி நூலும் தலைசீவ சீப்பும் எடுத்துட்டு வர்றேன்…??” மறுநிமிடத்தில் மூவரும் ஒன்றுகூடி பேச ஆரம்பிக்க மற்றவர்கள்தான் ஙே… என்று முழிக்கும்படியாயிற்று.. கொஞ்சம் முன்னாடி சண்டைப்போட்டவங்க இவங்களா….. அடப்பாவிங்களா. ப்ரியாவுக்கும் அஜய்க்கும் இந்த நிமிடம் மிகவும் பிடித்தமாய் இருந்தது..

 

சூர்யாவுக்கும் ப்ரியாவுக்கும் வயது இடைவெளி எட்டுவருடங்களாக இருந்ததால் அவளை எப்போதும் சிறுகுழந்தை போலவே நடத்துவான்… அஜயும் அண்ணன் படிப்பு அடுத்து தொழில் என இருக்கவும் இந்த அளவு நெருக்கமாக இருந்ததில்லை… இவர்கள் இருவருக்கும் இந்த மூவரின் கூட்டணி மிகவும் பிடித்தது… இதற்காகவே அடிக்கடி அனைவரும் ஒன்று சேரவேண்டும் போல இருந்தது… கீழே சென்று மறுபடி மேலே வந்த தருண்.

“ அக்கா தாத்தா எல்லாரையும் படுக்கச் சொல்றாங்க…..??”

 

ஸ்ரீ சூர்யாவை பார்த்து நீங்க ரூம்ல படுக்கிறிங்களா…??”

நீங்களெல்லாம்….???”

 

நாங்க எல்லாரும் இங்கதான்……??” பாயை விரித்து தலகாணியை போட்டு வைத்தவர்கள் இங்கேயே படுக்க போக  தருணும் அஜயும் அடுத்தடுத்த பாயில் படுத்திருக்க அவர்கள் அருகில் படுத்தான் ஹரிஷ்..அவனுக்கு கொஞ்சம் இடைவெளிவிட்டு சுபா படுக்க.. சூர்யாவுக்கு இது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது… அவன் அறிந்த வரையில் ஹரிஷின் குடும்பமும் நல்ல வசதி ஹரிஷ் தன்னுடைய மேல் படிப்பை லண்டனில் படித்திருந்தாலும் இவ்வளவு எளிமையாக இவர்களோடு பழகுவது, சாதாரணமாக தரையில் பாயை விரித்து படுப்பது என எளிமையாகவே இருந்தான்… கீழே வந்திருந்த சூர்யா கட்டிலில் படுக்க…தூக்கம் வரவில்லை… இன்னும் மேலிருந்து பேச்சுக்குரல் கேட்டுக் கொண்டுதான் இருந்ததுகூடவே சிரிப்பு சத்தமும்….

 

ஒரு அரைமணி நேரம் கழிந்திருக்கும் சூர்யாவுக்கு தூக்கமே வரவில்லை… உருண்டு கொண்டே இருந்தவன் புது இடமா இருக்கிறதால தூக்கம் வரலையோ என நினைத்து எழுந்து கொஞ்சநேரம் அமர்ந்திருந்தவன் தன்னை அறியாமல் மாடிக்கு செல்ல அங்கு அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்…

 

ப்ரியாவும் ஸ்ரீயும் ஒருவர் மேல் ஒருவர் கை போட்டு படுத்திருக்க… அடுத்து ஹரிஷ் சுபாவை அணைத்தாற் போல நல்ல உறக்கத்தில் இருந்தான்,,,தருணும் அஜயும் இரண்டு பாய்களை ஆக்ரமித்து படுத்திருக்க இவர்களோடு படுக்க சூர்யாவுக்கும் ஆசை எழுந்தது. ஸ்ரீயும் ப்ரியாவும் இரண்டு பாயை விரித்து போட்டு அவர்கள் இருவரும் ஒரே பாயில் படுத்திருக்க மற்றொரு பாய் சும்மா இருக்கவும் அதில் படுத்துவிட்டான்… பக்கத்தில் இருந்த மாமரத்தில் இருந்து சிலுசிலுவென காற்று வீச லேசாக குளிரவும் செய்தது..இயற்கை காற்றிற்கு ஈடு இணையே இல்லை என்பதை உணர்ந்தவன். படுத்த ஐந்து நிமிடங்களில் தன்னை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றான்….

 

விடிகாலை ஐந்து மணியிருக்கும் தூக்கம் கலைந்த சூர்யா தன் மார்பில் சூடான மூச்சுக்காற்றை உணர்ந்தவன் குனிந்து பார்க்க…குளிருக்கு இதமாக ஸ்ரீ சூர்யாவின் மார்பு சூட்டில் முகம் புதைந்திருக்க அவன் கையும் அவளை அணைத்துத்தான் பிடித்திருந்தது… இப்போதுதான் ஒன்றை உணர்ந்தான்..குளிரால் ப்ரியா ஸ்ரீயின் சேலை இழுத்து போர்த்தியிருக்க இவள் முந்தானை அவளுக்கு போர்வையாகியிருந்தது…பாதி சேலை அவளுக்கு போர்வையாயிருக்க வெறும் பிளவுஸோடும் மீதி சேலையோடும் இவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள்… மற்றவர்களை பார்த்தவன் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும் மெதுவாக எழுந்து ப்ரியாவிடம் இருந்து ஸ்ரீயின் சேலையை எடுத்து இவளுக்கு போர்த்திவிட போக இவள் இன்னும் அவளை நெருங்கி படுத்தாள்… முதல் முறையாக ஒரு பெண்ணை இவ்வளவு நெருக்கதில் பார்க்கிறான்… படிக்கும் போதிருந்தே அவனுக்கு என்னமோ பெண்களிடம் நாட்டம் செல்லவில்லை… அடுத்து தொழிலிலுக்கு வந்தவுடன் அவனிடம வேலை பார்க்கும் பெண்களை பார்ப்பவனுக்கு அவர்களுக்கு என்ன பிரச்சனையோ இந்த வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட என்றுதான் நினைப்பான்…

 

இன்று இவ்வளவு நெருக்கத்தில் ஏற்கனவே அவளின் குழந்தை தனத்தில் மனதை பறிகொடுத்திருந்தவனுக்கு… இப்போது ஸ்ரீயை பார்க்க தன் மனைவி என்ற உரிமை உணர்வும் வந்திருந்தது…தன் மார்பில் இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் இடுப்பில் கை வைத்து அணைத்து இன்னும் நெருங்கியவன் அவள் உதட்டிற்கு நேராக  தன் உதட்டை கொண்டுபோய் அதில் மென்மையாக புதைத்திருந்தான்…. அதன் மென்மையில் அப்படியே மயங்கி போய் இருக்க..முதல்முதலாக அதுவும் நேரடியாக உதட்டிலேயே.. அவனுக்கு அவளுள் இன்னும் இன்னும் நெருங்க வேண்டும் போல இருக்க…..ஸ்ரீயோ தூக்கக்கலக்கத்தில் தன்னை அறியாமல் அவனை விலக்கியவள் மறுபுறம் திரும்பி படுத்து ப்ரியாவை அணைத்தபடி படுத்தாள்..தன் கையில் இருந்த ஸ்ரீயின் சேலையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவனுக்குள் ஏமாற்றம் பெருகியது… அடிப்பாவி இப்படி பண்ணிட்டாளே……இன்னும் கொஞ்ச நேரம் இந்த பக்கம் திரும்பி படுத்தா என்ன… அவ வராட்டா என்ன நாம அவகிட்ட போவமா… யோசனையிலேயே கழித்தவன் பக்கத்தில் நெருங்க போக தருண் எழுவது போல தெரியவும் அப்படியே கண்மூடி படுத்தான்…

 

அவர்கள் காலை டிபனை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப…ஹரிஷும் தன் மனைவி தம்பியோடு கிளம்பியிருந்தான்.. அவர்களுக்கு நேரில் வந்து தங்கள் ரிசப்சனுக்கு அழைப்பு விடுவதாக சொன்னவன் அவர்கள் கடையிலேயே துணி எடுக்க தாத்தாவுடன் கலந்து கொண்டு  வருவதாக சொல்லி விடைபெற…சுபாவும் தங்கள் வீட்டிற்கு தன் அக்காவை வரச் சொல்லி அழைப்பு விடுத்தாள்…சுபா தன் அக்காவை கட்டிக் கொண்டு அழ ஸ்ரீயும் அழ ஆரம்பித்தாள்…இவர்கள் இருவரை விட தருண்தான் அதிகம் அழுதான்… மூவரும் ஒரே கூட்டில் இருந்துவிட்டு இன்று ஆளுக்கு ஒரு திசையாய் பறந்து செல்வது அவனால் தாங்கமுடியவில்லை….

 

ஒருவாறு சமாதானப்படுத்தி இருவர் குடும்பமும் தத்தம் காரில் கிளம்ப சூர்யா காரை ஓட்ட ஸ்ரீயும் ப்ரியாவும் பின்னால் அமர்ந்திருந்தார்கள் இருவரும் சலசலவென பேசிக் கொண்டு வர மறுபடி சூர்யாவின் மனதிற்குள் கிஷோர் வந்தான்… அவனை பற்றி இன்னும் விசாரிக்கவே இல்லையே… இன்னைக்கு எப்படியும் பேசிரனும் என்ற முடிவுக்கு வந்தவன்..காரின் வேகத்தை அதிகப்படுத்த அடுத்த பத்து நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர்…

 

 காரை உள்ளே செலுத்தும்போதே அவர்களின் மாமா இருவரும் வந்திருப்பது தெரிந்தது… இருவரின் காரையும் பார்த்தவன்… வீட்டிற்குள் காலெடுத்து வைக்க அவர்கள் இருவரும் தாத்தாவோடும் தந்தையோடும் சண்டைபோடும் குரல் சத்தமாக கேட்டது… மூவரும் உள்ளே வர அனைவரும் பேச்சை நிறுத்திவிட்டு இவர்களை பார்க்கவும் சூர்யாவும் ப்ரியாவும் அவர்களை மாமா என அழைக்க ஸ்ரீக்கு யாரென்று தெரியாததால் வாங்க என்று மட்டும் சொன்னாள்… இவர்கள் இருவரும் ஸ்ரீயை முறைப்பது நன்றாக தெரிந்தது…

 

ப்ரியாவும் ஸ்ரீயும் மாடிக்கு செல்லப்போக தன் கையில் இருந்த பைலை ப்ரியா கையில் கொடுத்தவன்இதை என்னோட ரூம்ல வைச்சிருடா….அவர்கள் இருவரும் மாடிக்கு செல்லவும்…..

 

அங்கிருந்த சோபாவில் தாத்தாவுக்கு அருகில் அமர்ந்தவன்… என்ன மாமா உங்க ரெண்டுபேர் குரலும் கேட்டுக்கு வெளியே கேட்டுச்சு??”

 

காமாட்சி… உங்க மாமா ரெண்டுபேருக்கும் எல்லா உரிமையும் இருக்கு சூர்யா அவங்க என்ன வேணும்னாலும் கேப்பாங்க… அவங்க கேட்டதுக்கு பதிலை சொல்லுங்க…??”

 

இவதான் அவங்கள உடனே போன போட்டு கிளம்பி வரச் சொன்னா போல அதான் வந்ததில இருந்து அவங்களுக்கே ஜால்ரா போட்டுக்கிட்டு இருக்கா… அது என்ன மகனைவிட மகளும் மருமகனும் பெருசாகிட்டாங்க…. தாத்தா தன் மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தவர்…. சூர்யாவை கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி சொல்ல…

 

அவர்கள் இருவரும் நாங்க இந்த வீட்டுமாப்பிள்ளைங்கன்னு உங்களுக்கு நியாபகம் இருந்தா இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணத்தை நடத்தியிருப்பிங்களா…ஒரு மரியாதை வேணாம்…மரியாதையா இந்த பொண்ண அவங்க வீட்ல கொண்டுபோய் விட்டுட்டு எங்க பொண்ணுங்கள்ல ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க. தாலிக்கட்டின பாவத்துக்கு அந்த பொண்ணுக்கு ஒரு லட்சமோ இல்ல ரெண்டு லட்சமோ சொல்லுங்க அத நாங்களே கொடுத்துருறோம்….

 

தேவையில்லாம எல்லாருக்கும் சொல்லி ரிசப்சன் வேற வைக்கப் போறிங்களாம்ல… அதெல்லாம் தேவையில்லை… நிப்பாட்டுங்க…. இன்னைக்கே டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணச் சொல்லுங்க… எனக்கு தெரிஞ்ச வக்கில் ஒருத்தர் இருக்காரு அவர் மூலமா உடனே விவாகரத்து வாங்கி தர ஏற்பாடு பண்ணுறோம்…??”.

 

நிப்பாட்டுங்க…???” என்ற கர்ஜனை குரலில் அவர்கள் இருவரும் பேச்சை நிறுத்த….

 

Advertisement