Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
  அத்தியாயம்  –  10
 
ஸ்ரீ தன் சட்டையை பிடித்து உலுக்கவுமே அதுவரை ஸ்ரீயோடு ஒன்றி வேறு உலகில் இருந்தவன் தன் சுயநினைவுக்கு வந்துவிட்டான்…  இப்போதுதான் தான் சொன்ன வார்த்தையின் தவறை உணர்ந்தவன், ஸ்ரீ அவனை ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன் அதுவும் தன்னோடு சென்ற போதுதான் என்ற சொன்னவுடனேயே தவறு ஒரு சதவீதம்கூட ஸ்ரீமேல் இல்லை என்பதை புரிந்து கொண்டான்…
 
மெதுவாக சோபாவை விட்டு எழுந்து ஸாரி ஸ்ரீ ஏதோ கோபத்துல பேசிட்டேன் ??” அவள் கையை பிடிக்க வர,
 
அதை தடுத்தவள், கோபம் வந்தா எதுவேணா பேசிடுவிங்களா ??”அவளுக்கு அழுகை வரத்தயாராகியது…  நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுதான் சொன்னிங்களா. அவன வரச் சொல்லி அவனோட போக போறேன்னு சொல்லுறிங்க. அப்படி நான் ஒரு ஒழுக்கம் கெட்டவளா…??”
 
சூர்யா அப்படியே அதிர்ச்சியாகிவிட்டான்!  நாம சொன்னதோட அர்த்தம் இப்படி வருதா.. அப்படி நினைச்சு நான் சொல்ல வரலை ஸ்ரீ, நீ புரிஞ்சுக்க…??”
 
அப்ப வேற என்ன அர்த்தம் வருது நீங்களே சொல்லுங்க… நான் ஒரு தப்பு செஞ்சேன்தான், அதுவும் அவன்  நீ என்னை கல்யாணம் பண்ணிக்காட்டா சாகப்போறேன் சொன்னான் அதுனாலதான் நான் அங்க போனேன்
அதுவும் அவன கல்யாணம் பண்ணப்போகலை அவன் பண்றது தப்புன்னு சொல்லத்தான் போனேன் போய் பார்த்தா அவனும் பொய் சொல்லி என்னை ஏமாத்தியிருக்கான்னு புரிஞ்சிச்சு…ஆம்பளைங்க எல்லாமே ஏமாத்துக்காரங்க தான்…??”
 
சூர்யா அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்!! நாம பேசி பேசி பிரச்சனையை பெருசாக்குறோம் போல அந்த லூசுபய என்னன்னமோ பொய்யா சொல்லி இவள ஏமாத்தியிருக்கான்… இப்ப என்ன பண்ணுறது
 
அவள் கட்டிலில் அமர்ந்து முகத்தை கைகளால் மூடி அழுது கொண்டிருந்தாள்… அவள் அருகில் சென்றவன் அவளை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அவனுக்குள் நாம கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோ  என்ற எண்ணம்… மெதுவாக அவள் தலையை தடவிக் கொடுக்க,
 
அவன் கையை தட்டிவிட்டவள் இன்னைக்குக்கூடத்தான் உங்ககூட படிச்சவங்க உங்களை லவ் பண்றேன்னு என்கிட்டயே சொன்னாங்க… நான் ஏதாச்சும் சந்தேகப்பட்டு உங்ககிட்ட கேட்டனா…இப்ப நீங்களும் பேட்தான்…? என்னல்லாம் என்ன திட்டிட்டிங்க! என்கூட பேசாதிங்க…??” அவனுக்கு முதுகை காட்டி அமர்ந்துவிட்டாள்
 
சூர்யாவுக்கு அவள் கோபத்தை பார்த்து லேசான புன்னகையும் வந்தது.. நாமதான் ரொம்ப கோபக்காரன்னு நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த முண்டக்கண்ணி நம்மள விட ரொம்ப கோபக்காரியா இருப்பா போலவே!!
 
கிஷோர் இப்போது தன் வாழ்க்கையில் எந்த இடத்திலும் இல்லை என தெரிந்ததும் அவன் மனம் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை… அவன் கோபம் போன இடம் தெரியவில்லை…
 
அவள் மறுபுறம் வந்து அமர்ந்தவன் அவள் கையை மீண்டும் பிடிக்க தட்டி  விடப்போனவளின் அந்த கையையும் பிடித்துக் கொண்டான்… என்னோட பிரண்ட்ஸ் நாம ரெண்டுபேரும் இருக்கும்போதுதானே என்னை லவ் பண்ணேன்னு சொன்னாங்க. அப்புறம் அவங்களே சும்மான்னு சொல்லிட்டாங்க தானே  ஆனா யோசிச்சு பாரு! அவன் உன்கிட்ட மட்டும் தனியா ரூம்ல பேசுறான்? அதோட ரிசப்ஷன பத்தி நான் சொல்லவே இல்லை…
 
நீதான் சொல்லிட்டியோன்னு நினைச்சுட்டேன்… அப்புறம் என் கண்முன்னாடியே வா வான்னு உன்னை கூப்பிட்டான்தானே? அதான் கொஞ்சம் கோபமாயிட்டேன்!! ஸாரி ப்ளிஸ்..??” அவளை போலவே கண்ணைச்சுருக்கி கெஞ்சுவது போல கேட்க,
 
அவளும் அவனை போலவே அவனுடைய பாவனையில் விழுந்தாள்…பாவமாத்தான் இருக்கு ஆனா இவங்க ரொம்ப திட்டினாங்கதானே ஒன்னும் தேவையில்ல? உங்கக்கூட சண்டைனா சண்டைதான்…??” ஸ்ரீக்கு கோபமோ, அழுகையோ, சண்டையோ ரொம்ப நேரம் நீடிக்காது சற்று நேரத்தில் மறந்து விடுவாள்
 
எல்லாம்  என் நேரம்டி காலேஜ்ல என் பின்னாடி ஒரு குரூப்பே லவ் பண்றேன்னு சுத்துச்சுக..நான்தான் வேண்டாம்ன்னு கெத்தா திரிஞ்சேன்.!! நீ என்னன்னா என்னோட சண்டைன்னு சொல்றியா ஆனா என்னால உன்னோட சண்டைபோட முடியாது  அப்பப்போ சண்டை வந்தாலும் உடனே பேசிருவேன்  மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தான்..
 
இருந்தாலும் நாம இன்னைக்கு இவ்வளவு அவசரப்பட்டு பேசியிருக்கக்கூடாது. கல்யாணத்துக்கு அடிப்படையே நம்பிக்கை தானே அந்த கிஷோர் என்ன சொல்லியிருந்தாலும் நாம நம்பியிருக்க கூடாது . நான் நினைச்ச அளவுக்கு அந்த கிஷோர் கோழை இல்லையோ…???
 
நம்மகிட்ட நல்லவன் மாதிரி பேசித்தானே ஸ்ரீயை கல்யாணத்திற்கு முதல்நாள்  அங்க கூட்டிட்டு வர்ற மாதிரி பண்ணினான்…  நண்பர்களாக அவ்வப்போது போனில் பேசிக் கொள்வார்கள் இவர்கள் திருமணத்திற்கு முதல்நாள் கிஷோரிடம் இருந்து போன் வந்தது
 
ஹலோ சூர்யா நான்தான் கிஷோர்டா…?”
ஹாய் கிஷோர் சொல்லு நல்லாயிருக்கியா?? என்ன ரொம்ப நாளா போனே பேசல?? பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா??”
நல்லா போகுது … எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே சூர்யா…?’
சொல்லு முடிஞ்சா பண்றேன்…
உன்னால கண்டிப்பா முடியும் சூர்யா உன்னை நம்பித்தான் இருக்கேன்…??”
என்னடா பில்டப்பெல்லாம் பெரிசா இருக்கு? என்ன விசயம்…?”
அது வந்து நான் ஒரு பெண்ணை ரொம்ப சின்சியரா விரும்புறேன்டா…!!”
ரொம்ப நல்லவிசயம்தான் அதுக்கு நான் என்னடா ஹெல்ப் பண்ண…??”
அது உங்க ஊரு பொண்ணுடா…?”
எங்க ஊரா…!!! யார்டா…??”
அதெல்லாம் சொல்றேன்… ஆனா அந்த பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம் வைச்சிட்டாங்க.. நான் கிளம்பி வர்றதா இருந்தா இங்க என்னோட பாட்டியை பத்தி  உனக்கே நல்லா தெரியும்தானே ரெண்டுபேர் என் பின்னாடியே வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க என்னால அங்க இங்க அசைய முடியல…??”
அதோட நான் லவ் பண்றது தெரிஞ்சு வேற பொண்ணுகூட எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க நாளைக்கு நிச்சயதார்த்தம்…??”
அதுக்கு நான் என்னடா பண்றது…??”
நீ ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணு? அந்த பொண்ணு என்மேல உயிரே வைச்சிருக்கு. நான் இல்லைனா செத்துரும்.  நீ அந்த பொண்ண மட்டும் இங்க கூட்டிட்டு வந்து நான் சொல்ற இடத்துல விட்டுருடா…??”
 
டேய் அதெல்லாம் என்னால முடியாது … எங்க ஊரு பொண்ணுனா நான் அங்க கூட்டிட்டு வந்தா அது எனக்கு பெரிய பிரச்சனையாயிரும் அது சரிவராது நீ வேற ஆள பார்த்துக்க… ??”
 
ப்ளிஸ் சூர்யா ப்ளிஸ் ப்ளிஸ் எனக்கு உன்னைவிட்டா வேற யார்டா ஹெல்ப் பண்ணுவா இன்னைக்கு மட்டும் நீ கூட்டிட்டு வரலைனா அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிரும், அப்புறம் நான் மட்டும் உயிரோடவா இருக்கப் போறேன். நானும் செத்துருவேன் ப்ளிஸ் சூர்யா கொஞ்சம் மனசு வைடா…??”
 
ஏதேதோ பேசி அவனிடம் ரொம்ப கெஞ்சவும்..
சரி ஆனா நானெல்லாம் போய் அந்த பொண்ணக்கூட்டிட்டு வரமாட்டேன் அந்த பொண்ண நான் சொல்ற இடத்துக்கு வரச் சொல்லு ஆமா நீ அங்க இருந்துட்டு இங்க எப்படி லவ் பண்ணின…??”
 
அதெல்லாம் நேரா பார்க்கும் போது சொல்றேன்டா ?? இங்க வேற யாரோ வர்ற மாதிரி இருக்கு??”ஸ்ரீயின் போன் நம்பரை கொடுத்தவன் அந்த பொண்ணு நீ சொல்ற இடத்துக்கு வந்துரும்டா இந்த நம்பர்ருக்கு கேட்டுக்கோ… ??”
ஆனால் அந்த பெண் ஸ்ரீயாக இருக்கும் என்று சூர்யா சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை…
 
தன்னை போனில் அழைத்து பேசியவள் சொன்ன இடத்திற்கு வந்திருந்தாள்… மண்டபத்தில் இருந்து வந்ததால் சேலை அணிந்திருந்தாள்… ஸ்ரீயை பார்க்கவும் சூர்யாவுக்கு வந்த உணர்வு என்னவென்று அவனுக்கே தெரியவில்லை கோபமா, எரிச்சலா, பொறாமையா, ஏமாற்றமா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காரில் பின்புறம் ஏறியவள் அவனிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவே இல்லை.
 
இவனுக்குத்தான் சந்தேகம் இந்த பொண்ணத்தான் வரச் சொன்னானா !!
ஸ்ரீயை பார்த்தவன்,” நீ கிஷோர் சொல்லித்தான் வர்றியா??”
ஆமா.. ஆனா நீங்க கொஞ்சம் சீக்கிரமா போங்க??” அவ்வளவுதான் அவள் பேசிய வார்த்தை !!
ஸ்ரீ அன்று சூர்யாவின் முகத்தை நன்கு பார்க்கவே இல்லை…  முதலில் அது கிஷோர் தான் வந்து திரும்புவதற்காக அனுப்பியிருந்த கார் என்றே நினைத்தாள்
 
இப்போது சூர்யா ஸ்ரீயை திரும்பி பார்க்க, அவள் சோபாவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்
 
அவளுக்கும் மனதில் ஒரு கேள்விதான் ஓடிக் கொண்டிருந்தது, அந்த கிஷோர் பய என்ன லூசா ,கிறுக்கா , மெண்டலா, விளங்காதவன் என்ன மாதிரி வேலை பார்க்க நினைச்சிருக்கான் …புத்திக் கெட்டவன்??” சத்தமாக சொல்லியிருக்க,
 
கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்திருந்த சூர்யா அதான் ஸாரி சொல்லிட்டனே அப்புறமும் ஏன் என்னை திட்டிக்கிட்டு இருக்க…??”
 
ச்சு உங்கள இல்லை அந்த விளங்காதவனத்தான் எனக்கு ஒரு டவுட்? ரிசப்ஷன்னு நீங்களும் சொல்லல? நானும் சொல்லல ? அப்புறம் ஏப்படி தெரிஞ்சிருக்கும்…??”
 
 இதென்ன யாருக்கும் தெரியாம ரகசியமாவா நடந்துச்சு!! என்னோட பிரண்ட்ஸ் யாராச்சும் சொல்லியிருப்பாங்க.. உனக்கு இப்ப தூக்கம் வருதா…?”
 
ம்கூம் … இல்ல ஏன் கேட்கிறிங்க…?”
அப்ப பால்கனிக்கு வா, எனக்கு கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசனும்…??”
 
அச்சோ!! நான்தான் உங்களோட சண்டையாச்சே அப்புறம் எப்படி நாம ரெண்டுபேரும் பேசமுடியும்??”
 
ஆமா நீ இந்தியா? நான் பாகிஸ்தான் ?ரெண்டுபேரும் சண்டைப்போட்டுக்கிட்டோம் பேசாம இருக்க,வாடி??”
 
என்னது வாடியா…!! ஹலோஓஓஓஓ !!! என்ன வாடி போடின்னு…??  மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்க…??”
 
அப்படியா மேடம் கொஞ்சம் வாங்க மேடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்…??”
அது…??” அவள் கெத்தாக எழுந்து வர,
சூர்யாவுக்கும் இவளுடன் வாயாட மிகவும் பிடித்திருந்தது .அவள் பால்கனிக்கு செல்லவும், இவன் கிச்சனுக்கு சென்று இருவருக்கும் பால் எடுத்து வந்தவன் அவளுக்கு ஒரு கிளாஸை கொடுக்க,
அவனை ஆச்சர்யமாக பார்த்தபடி ,”உங்களுக்கு பால்காய்ச்சவெல்லாம் தெரியுமா…?”
 
ஆமா ரொம்ப கஷ்டமான வேலையாச்சே! ஒரு ரெண்டுவருசம் டிரைனிங்க எடுத்து கத்துக்கிட்டேன்..!!”
 
ஓஓஓஐசி… ஒத்துக் கொண்டவள் அவனை பார்த்து முறைத்து என்ன என்னை கேலி பண்றிங்களா…??”
ஹாஹாஹா…” என சிரித்தவன் அவளிடம் நெருங்கி அந்த ஊஞ்சலில் அமர அவன் சிரிப்பை ஆச்சர்யமாக பார்த்தவள்,
உங்களுக்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா…??”
ஏய் நானென்ன வேற்று கிரகவாசியா மனுசபிறவிதான்…!!” அவளை இன்னும் நெருங்கியவன் அவள் உள்ளங்கையில் முத்தமிட,
 
கையை அவனிடம் இருந்து பறித்தவள்,” இதென்ன ஆனாவுனான்னா முத்தம் கொடுக்கிறிங்க…??”
ஏய் நான் உன் புருசன் முத்தம் கொடுக்கலாம்!! அவளை இறுக்கி அணைத்தவன் கட்டி பிடிக்கலாம்!!இன்னும் என்னன்னமோ செய்யலாம்…??”
 
அவனை நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் ஹலோ அது வீட்ல பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கள்ள அவங்களும் லவ்பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறவங்களும்தான் இப்படியெல்லாம் முத்தம் கொடுக்கலாம், கட்டிப்பிடிக்கலாம்.. உங்கள மாதிரி மூஞ்ச தூக்கிவைச்சிட்டு தாலி கட்டிட்டு அப்புறம் கூட வாராலா இல்லையான்னு திரும்பிக்கூட பார்க்காம விட்டுட்டு வந்தவங்க செய்யக்கூடாது…”
 
ஹப்பா என்னமா பாயிண்ட் பாயிண்டா பேசுறா!! அவன் அவள் பேச்சைவிட அவள் இதழையும் பேசும்போது அவனை மிரட்டுவதுபோல முழிக்கும் அந்த கண்களையும்தான் ரசித்துக் கொண்டிருந்தான்
 
அப்புறம் இன்னொரு முக்கியமான பாயிண்டை விட்டுட்டனே முதல்நாள் அன்னைக்கே டைவர்ஸ் வாங்கலாம்னு கேட்டவங்கலெல்லாம் முத்தம் கொடுக்கவே கூடாது தெரியுமா ??”அவள் மூச்சு வாங்கி நிற்க ,
 
அவன் பார்வை தன்னை அறியாமல் முகத்திலிருந்து கீழிறங்கி அவள் மூச்சுவாங்குவதை ரசித்தவன், இவ சொன்னா நான் தொடாம இருப்பனா!’ டேய் சூர்யா இன்னும் இவளுக்கு உன்னை பத்தி தெரியலைன்னு  நினைக்கிறேன்…’
 
ம்ம்ம் பேசி முடிச்சிட்டியா இப்ப என்ன சொன்ன டைவர்ஸ் வாங்கலாம்னுதானே சொன்னேன், இன்னும் வாங்கலதானே அதுவரைக்கும் நீ என்னோட மனைவிதான் அதனால கட்டிப்பிடிக்கலாம், முத்தம் கொடுக்கலாம் அப்புறம் என்ன வேணா செய்யலாம்… ??” அவளை நெருங்கி இன்னும் இன்னும் நெருங்கி அணைத்தான்
 
அவள் ஏதோ பேசவர அவள் வாயை அடைத்தவன் ,”ஆனா நான் இத பேச உன்னை வரச் சொல்லல. ஸாரி கேட்கத்தான் வரச் சொன்னேன் உண்மையிலேயே நான் ஏதோ கோபத்திலதான் அப்படி பேசிட்டேன்  நீ நினைச்ச மாதிரி நான் பேசல. நான் ஏதோ பேசப்போய் கோபத்துல இந்த மாதிரி வார்த்தை வந்திருச்சு என்னை மன்னிச்சிக்கோ. நான் அப்படி பேசியிருக்க கூடாது… அதிலயும் இந்த பத்து நாளா உன்னை கிட்ட இருந்து பார்த்திட்டு உன்னை பத்தி தவறா ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாது…
 
 அந்த கிஷோர நான் கொஞ்சம் கொறைச்சு எடைபோட்டுட்டேன் போல, கூடா நட்பு கேடாய் முடியும்னு சொல்வாங்க. அந்த மாதிரிதான் நான் அந்த கிஷோரோட வைச்ச நட்புன்னு நினைக்கிறேன்…!!
 
நட்புல அந்தஸ்து பேதம் பார்க்கக்கூடாதுன்னு நினைப்பேன். நட்புக்காகத்தான் அன்னைக்கு அவன் உன்னை அங்க கூட்டிட்டு வரச் சொன்னப்பக்கூட ஒருவார்த்தை அவனபத்தி தப்பா நினைக்காம உன்னை அங்க கூட்டிட்டு போயிட்டேன்? ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பநான் உணர்றேன்…??”
 
ஸ்ரீயோ ஆமாங்க அதனாலதானே பிடிக்காத என்னையும் கட்டிக்கிற மாதிரி ஆயிருச்சு இல்லைனா 200 பவுன் போட்டு உங்க அத்தை பொண்ண கட்டியிருப்பிங்க தானே…?”
 
ம்கூம் இவ நம்ம சொல்ல வர்றத புரிஞ்சுக்காம வேற டாப்பிக்குக்கு போயிருவா??’   அவள் மண்டையில் ஒரு கொட்டுவைத்தவன் ,”ஏய் நான் சொல்ல வர்றதை முழுசா கேளுடி…??”
 
ம்கூம் இப்பதானே சொன்னேன் டி போட்டு பேசாதிங்கன்னு…??”அவள் தலையை தடவிக் கொண்டிருக்கவும்
 போடி லூசு நான் அப்படித்தான் கூப்பிடுவேன்…!! சட்டென அவள் மடியில் தலைவைத்து படுக்க,அவனை முறைத்தபடி தன் மடியில் இருந்த அவன் தலையை எடுத்து எடுத்து பார்க்க முடியாமல்  என்ன செய்ய என்று அவனை பார்த்து முழித்தவளின் கையை பிடித்து தன் தலையில் வைத்து கோத சொன்னவன் , உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கவா…??”
 
அவளை அறியாமல் அவன் தலையை கோதியவள்,” ம்ம்ம் கேளுங்க ஆனா கொஞ்சம் ஈஸியான கேள்வியா கேளுங்க? ஒன்வேர்ட் கேள்வினா பரவாயில்ல கஷ்டமாயிருந்தா நான் சாய்ஸ்ல விட்டுருவேன் சொல்லிட்டேன்…??”
 
அவன் முகமெல்லாம் புன்னகை என்னை எப்பவாச்சும் நீ பார்த்திருக்கியா…??”
இதோ இப்ப பார்க்கிறேனே…!”
அவள் மடியில் படுத்தபடியே அவள் கன்னத்தை கிள்ளியவன்,” ப்பா..செமடி உன்னை மாதிரி ஒருத்திய பார்க்கவே முடியாது …. என்ன அருமையான கண்டுபிடிப்பு உன்னையெல்லாம் வைச்சிக்கிட்டு… என்னத்த சொல்ல…??”
 
ஏங்க…??”
நான் சொல்ல வந்ததை அப்புறம் சொல்றேன், முதல்ல நீ காலேஜ்ல படிச்ச தானே!!”
ஆமா..”
அப்ப உன்னை எப்படி கூப்பிடுவாங்க…??”
ஸ்ரீன்னுதான் …!!!”
பொய் சொல்லாத…??”
சொல்லுவேன் ஆனா கோவிச்சுக்ககூடாது..?”
அவன் கண்ணை தன் கைகளால் மூடியவள்… ம்ம்ம் அது வந்து வந்து…”
ம்ம் உன் சீனியர்ஸ் உன்னை தயிர்சாதம்னு தானே கூப்பிடுவாங்க…??”
அது எப்படி உங்களுக்கு தெரியும்..!!” அவள் அவனை ஆச்சர்யமாக பார்க்க,
 
அடிப்பாவி அப்ப நான் உங்க காலேஜ்ல பார்த்தது உண்மைதானா!! உன் சீனியர்ஸ் உன்னைத்தான் தயிர்சாதம்னு கூப்பிட்டாங்களா…??” இவன் வயிற்றை பிடித்துக் கொண்டு ஹா..ஹா..ஹா.. என சத்தமாக சிரிக்க,
 
அவன் சத்தத்தை கேட்டு தன் மடியில் படுத்திருந்தவனின் வாயை சிரிக்கவிடாமல் தன் கையால் மூடவும் அவள் முகத்தை தன் முகத்தை நோக்கி இழுத்திருந்தான்… !!!
 
                                                                                                                              இனி…………?????

Advertisement