Advertisement

ஸ்ரீயின் தாத்தாவும் அம்மாவும் உள்ளே வந்தவர்கள் சூர்யாவை பார்க்கவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவனை வரவேற்று பேச துவங்கியிருந்தனர்..
 
அங்கு பெங்களூரில் இருந்த கிஷோரோ எப்போது பாட்டியையும் மனைவியையும் ஏமாற்றிவிட்டு ஸ்ரீயை பார்க்க வருவோம் என நேரம் பார்த்து காத்திருந்தான்.. திருமணத்திற்கு முன்னரே அவன் பாட்டிக்கு அவன் குணம் தெரியவும்தான் நிச்சயதார்த்தம் அன்றே திருமணத்தை நடத்தியிருந்தார்..
 
அன்று சூர்யாவும் ஸ்ரீயும் பெங்களூருக்கு வந்தபோது அவனை சந்தித்தது மணமேடையில்தான்,அவ்வளவு கூட்டம் ஆடம்பரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.. தன்னிடம் ஏழ்மையானவன் எனக்கூறி இருந்தவன் இவ்வளவு பெரிய பணக்காரன் என தெரியவுமே பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்…
 
அதோடு சூர்யாவும் ஸ்ரீயும் கிஷோரோடு பேச முயலும்போது தடுத்த அவரது பாட்டி, எதுவாயிருந்தாலும் திருமணம் முடிந்துதான் என சொல்ல வாயே திறக்காமல் எதற்கும் சம்பந்தமில்லாதவன் போல இருந்தவன் ஸ்ரீயையும் தெரியாதவன் போலவே காட்டிக் கொண்டான்..
 
கூட்டிச் சென்ற சூர்யாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.. இவன் நம்மகிட்ட போன்ல சொன்னது என்ன..!!இங்க நடக்கிறது என்ன..!! இந்த பொண்ண லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டு இப்ப வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறானா இந்த பொண்ணுக்கு அவன் மேல எவ்வளவு லவ் இருந்தா கல்யாணத்தை வைச்சிக்கிட்டு இவன தேடி வந்திருக்கும்.. அவனோடு சண்டைபோட போனவனை தடுத்த ஸ்ரீ வேறு ஒன்றும் சொல்லாமல்,
 
 ப்ளிஸ் சீக்கிரமா என்னை வீட்ல கொண்டு போய் விட்டுருறிங்களா..??” என்ற ஒரு வார்த்தையோடு விறுவிறுவென காருக்கு வந்துவிட்டாள்… பாவி சாகப்போறேன்னு சொன்னான், ரொம்ப ஏழை கஷ்டப்படுற குடும்பம்னு சொன்னான் இப்ப இவ்வளவு வசதியோட இருக்கானே..!!
 
 நம்ம புத்தியை செருப்பாலே அடிக்கனும். கண்டவன் பேச்சையும் நம்பி எவன் செத்தா என்ன உயிரோட இருந்தா என்ன அங்க தாத்தாவும் அம்மாவும் என்னை காணாம எப்படி தவிக்கிறாங்களோ..??நானெல்லாம் படிச்சிருந்தும் முட்டாள்தான் யாரு எவருன்னு தெரியாமலே வந்திருக்கேன்னா அப்ப எவ்வளவு பெரிய முட்டாள்
 
தன்னுடைய முட்டாள் தனத்தை நினைத்து, தன்னை இத்தனை வருடம் தூக்கி வளர்த்த தாத்தாவை நினைத்து, தன் குடும்பத்தை நினைத்து அழுகை வந்திருந்தது.. ஒரே ஒரு சந்தோசம் அந்த கிஷோர் தொல்லை இனிமே இருக்காது என்பது மட்டும்தான்..வழி நெடுகிலும் அவளின் அழுகையை பார்த்தவனுக்கு கிஷோரை கொன்று போடும் அளவிற்கு வெறிவந்திருந்தது..
 
சூர்யாவோ கிஷோரை அதிகம் விரும்பியதால்தான் ஸ்ரீ அழுகிறாளோ என நினைத்து கொண்டான்.. இங்கு வரும்போதே மண்டபத்தில் ஒரே பிரச்சனை.. அங்கு கிஷோருக்கு அதிகாலை முகூர்த்தம் இங்கு பதினொரு மணிக்கு மேல்தான் முகூர்த்தம் குறித்திருந்தார்கள்..
 
ஸ்ரீயை காணவில்லை என்று ஆளாளுக்கு பேச பிரச்சனை பெரிதாகி சுபாவை ஹரிஷ்க்கு மணம்முடிக்க முடிவெடுத்திருந்தனர்.. சூர்யாவின் தாத்தாவிடம் அவர்களிடம் வேலைபார்க்கும் மேஸ்திரி நேற்று இரவு சூர்யாவும் ஒரு பெண்ணும் ஒன்றாக காரில் போனதாக காலையில் சைட்டுக்கு போன போது சொல்லியிருந்தார்….. நம்ப பேரன் ஒரு பொண்ணோட எப்படி யோசித்தவர் அந்த மேஸ்திரி ஏதோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார்..
 
ஆனால் காரிலிருந்து ஸ்ரீயோடு சூர்யாவையும் கண்டவருக்கு  நம்ம பேரனைத்தான் இந்த பொண்ணு விரும்பி ரெண்டு பேரும் ஒன்னா  வர்றாங்களா என  அவராகவே முடிவு செய்து கொண்டவர், ஸ்ரீயை அவர் தாத்தாவும் அம்மாவும் திட்டி அடிக்க வந்த போது தடுத்து தன் பேரனுக்கே ஸ்ரீயை கட்டி வைப்பதாக அனைவருக்கும் முன்னால் வாக்கு கொடுத்துவிட்டார்.. தன் பேரன்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அதனால அவன்தான் தாலி கட்டனும் என்ற முடிவெடுத்துவிட்டார்
 
சூர்யாவிடம் என்ன நடந்ததென்று ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை.. சூர்யாவோ ஒருத்தன மனதார விரும்பி அவனுக்காக தனியா வீட்டைவிட்டு கிளம்பி வந்த பொண்ண நாம எப்படி கல்யாணம் பண்ண முடியும். மனசில வேற ஒருத்தரை வைச்சிக்கிட்டு இந்த பொண்ணு நம்மகூட எப்படி குடும்பம் நடத்தும் என்ற எண்ணம் மேலோங்க தாத்தாவை தனியாக கூட்டிச் சென்றவன்,
 தாத்தா அவசரப்படாதிங்க, கொஞ்சம் பொறுமையா இருங்க நான் சொல்ல வர்றத முழுசா கேளுங்க..??”
கேட்கிறேன் சூர்யா..!! நான் கேட்கிற ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு அப்புறம் நான் முடிவு பண்றேன் நீ சொல்றத கேட்கலாமா வேண்டாமான்னு..??”
கேளுங்க தாத்தா..”
நைட்டெல்லாம் இந்த பொண்ணு உன்கூடத்தான் இருந்துச்சா..??”
ஆமா தாத்தா ஆனா அது ஒரு காரணமாத்தான் நான் கூட்டிட்டு போனேன்.. அத மட்டும் கொஞ்சம் கேளுங்க..??”
ஒன்னும் தேவையில்லை..!! நல்ல நேரம் முடிய இன்னும் பத்து நிமிசம்தான் இருக்கு.. நீ தாத்தா மேல உண்மையிலே அன்பு வைச்சிருந்தா மரியாதையா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு..மிச்சத்தையெல்லாம் நாம வீட்ல போய் பேசிக்குவோம்..!!” அவனை விட்டு ஸ்ரீயின் தாயிடமும் தாத்தாவிடமும் அருகே சென்று ஏதோ பேசியவர் அடுத்த பத்து நிமிடத்தில் ஸ்ரீநிதி சூர்யாவின் மனைவியாயிருந்தாள்…
 
ஸ்ரீயின் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு வாட்ச் மேனிடம் கிஷோர் நிறைய பணம்  கொடுத்து எப்போது ஸ்ரீ இங்கு வந்தாலும் தகவல் சொல்ல சொல்லியிருக்க பணத்திற்கு ஆசைப்பட்டவர் ஸ்ரீ இப்போது ஆடிக்கு வந்த விசயத்தை அவனுக்கு சொல்லியிருந்தார்..
 
அவள் தாய்வீட்டில் ஒரு மாதம் இருப்பாள் என தெரியவும் அவளை தன்னோடு அழைத்து வர இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது என்பதை புரிந்தவன்  அங்கிருந்து இங்கு வர சமயம் பார்த்திருந்தான்..
ஸ்ரீயின் குழந்தை மனத்தையும் இரக்க குணத்தையும் அறிந்திருந்தவன் அழுது அவள் மனது கரைவது போல பேசினால் அவளை ஈஸியாக தன் வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என முடிவு செய்து எதற்கும் இருக்கட்டும் என்று விசத்தையும் வாங்கி வைத்துக் கொண்டான்..
 இதை வைத்து அவளை மிரட்டினால் போதும் தன்னால அவ வழிக்கு வந்திருவா போன தரம் அந்த சூர்யாபய இருந்ததாலதான் ஸ்ரீய நம்ம வழிக்கு கொண்டு வர முடியல இந்த முறை எப்படியும் காரியத்தை சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான்…
 
இங்கு தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்த சூர்யாவையே  ஸ்ரீ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவள் முதுகில் தட்டிய அவள் அம்மா,” இது என்னடி டிரஸ் கலைகூத்தாடி மாதிரி..!!போடும் போதே சொன்னேன்தானே இத போடாதன்னு போ போய் டிரஸ மாத்து நல்ல சேலையா எடுத்துக்கட்டி பளிச்சுன்னு முகத்தை கழுவிட்டு வா.. இந்த தம்பி இத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்காரு உன்னை பார்க்க…!!! பாடாவதியா நிக்கிற டிரஸ்ஸும் தலையும் பாரு..
 
வீட்டுக்கு வந்தவருக்கு குடிக்கக்கூட ஒன்னும் கொடுக்க காணோம்.. இதெல்லாம் என்ன பொண்ணோ..!!பாவம் உன்னை வைச்சிக்கிட்டு அவரு என்ன பாடு படுறாறோ..” அவளை விரட்டியவர் குடிக்க மருமகனுக்கு ஜூஸ் கொடுத்துவிட்டு மதியம் சாப்பிட்டுவிட்டுதான் செல்லவேண்டும் என வற்புறுத்தியவர் வேகமாக சமையலை துவங்கியிருந்தார்…
 
ஸ்ரீ தலைக்கு குளித்து பளிச்சென பச்சை நிறத்தில் சேலை கட்டி வர அவளை பார்க்கவும்  தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தவனுக்கு தான் என்ன பேசினோம் என்பதே மறந்து விட்டிருந்தது.. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை.. தாத்தா மறுபடியும் கேட்க சுயநினைவுக்கு வந்தவன் அவளை சைட் அடித்தபடியே தன் பேச்சை தொடர்ந்தான்..
 
 சூர்யா வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை அவள் தலையில் வைத்துவிட்ட அவள் தாய் ,”சாப்பாடு எல்லாம் எடுத்து வைச்சிட்டேன் நீ போய் தம்பிக்கு சாப்பாடு போடு..? பக்கத்தில இருந்து பார்த்து பரிமாறு ..நான் பக்கத்து வீடுவரைக்கும் போய்ட்டு  வந்துருறேன்..??” அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து விலகிச் சென்றவருக்கு இப்போதுதான் மனம் நிறைந்திருந்தது…
 
சூர்யாவுக்கும் ஸ்ரீக்கும் ஏதோ பிரச்சனையோ என நினைத்து கவலை பட்டிருந்தவருக்கு  இப்போதுதான் நிம்மதியாக இருந்தது..
 
தாத்தாவையும் ஸ்ரீ சாப்பிட அழைக்க,” வெயில்ல போனது கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கும்மா நான் கொஞ்சம் படுக்கிறேன் நீ தம்பிக்கு சாப்பாடு போடு போங்க சூர்யா..”
 
ஒருமணி நேரத்தில் அப்பளம் பாயாசத்தோடு முறுங்கைக்காய் சாம்பார், ரசம், வாழைக்காய் வறுவல், புடலைங்காய் கூட்டு, வெண்டைக்காய் மண்டி, முட்டைகோஸ் துவட்டல் என அனைத்தும் செய்திருந்தார்..
 
இத்தனை மாதங்களில் இன்றுதான் தன் கணவனுக்கு பரிமாறுகிறாள்… தோட்டத்தில் இருந்து இலையை வெட்டி வந்தவள் அவனுக்கு சாப்பாட்டை பரிமாற சேரில் அமர்ந்தான்..
 முதல்வாயை எடுத்து தன் மனைவிக்கு ஊட்டிவிட்டவன் தனக்கும் ஊட்டிவிடச் சொல்ல வெட்கம் வந்து தடுத்தாலும் தன் கணவன்  என்ற உரிமை உணர்வும், இவன் தன்னவன், தனக்கு மட்டுமே சொந்தமானவன் நமக்கும் இனி எல்லாமே இவர்தான் என்பதும் தோன்ற சாதத்தை பிசைந்தவள் அவனுக்கு ஊட்டிவிட மிக மிக மெதுவாக வாங்கியவனும் அந்த நிமிடத்தை ரசித்தான்..
 
தன்னருகில் நின்றிருந்தவளை இன்னும் அருகில் இழுத்தவன் அவளை ரசித்துக் கொண்டே சாப்பாட்டையும் ரசித்து சாப்பிட்டான்.. அவளுக்கு ஊட்டிவிட்டபடியே சாப்பிட இருவரும் அந்த நேரத்தை மிகவும் ரசித்திருந்தனர்..
அவனை உரசதியபடியே நின்றவள்,” உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..??”
ம்ம் இதென்ன கேள்வி அதுக்கு உனக்குத்தான் உரிமை இருக்கு கேளு..??”
நம்ம வீட்டுக்கு போனாலும் மதியம் சாப்பிட வர்றிங்களா..??”
முடியும்னு என்னால சொல்ல முடியாது.. ஆனா எப்ப நேரம் கிடைச்சாலும் உன்னோட இப்படி சாப்பிட வீட்டுக்கு வந்திருவேன்… நீயும் கொஞ்சம் என்னை புரிஞ்சிக்கோ..??”
அவள் முகம் சற்றே மாறவும்,” இதுக்கு ஏன் பீஸ்போன பல்ப் மாதிரி முகத்தை வைச்சிருக்க சிரி..!!இப்பவே எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா..?? இருந்தாலும் உன்னை பார்க்காம இருக்க முடியாமத்தான் வந்தேன்.. சாப்பிட்டு முடித்திருந்தவன்,” நான் கிளம்பவா..??”
ம்ம்ம்ம்…” குரல் சற்று உள்ளே சென்றிருக்க,
இன்னும் ரெண்டு நாள்தான் தாலி பெருக்கி போடவும் நீ நம்ம வீட்டுக்கு வந்திரனும்.. நான் தாத்தாக்கிட்ட பேசுறேன்.. கிளம்பவா..??” அவளை நெருங்கியபடி கேட்க அவன் சட்டையில் இருந்த பட்டனை திருகி கொண்டிருந்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் இன்னும் சற்று நேரம் தன் கணவனின் அண்மையை ரசித்தாள்… இப்புடி இருக்கிறவளை எப்படி விட்டுட்டு போறது…!!!
 
                                                           இனி…………..???????

Advertisement