Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
 அத்தியாயம்  –  14
 
சூர்யா இங்கு வருவான் என ஸ்ரீ நினைத்தே பார்க்கவில்லை. இன்று காலையில்தான் அவள் தாய் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து விட்டார், ” நீயும் உன் வீட்டுக்காரும் பேசிக்கிறிங்களா இல்லையா..? அன்பா அனுசரனையா இருக்கிங்களா இல்லை எப்பவும் சண்டைப்போட்டுக்கிட்டு இருக்கியா ..??” என ,
 
இல்லம்மா ஒன்னும் பிரச்சனை இல்ல.. நல்லாத்தான் இருக்கோம் ..டெய்லியும் போன்ல பேசுறாங்க..!!”
 
ஏண்டி நீ என்ன வெளியூர்லயா இருக்க பஸ் ஏறிவந்து உன்னை பார்க்க..! உள்ளூர்ல இருக்கோம் அதுவும் அவர் கையில கார் இருக்கு ஒரு நேரம் வந்து உன்னை பார்த்திட்டு போனா என்ன..?? உங்க அத்தையும் ப்ரியாவும் ரெண்டுதரம் வந்தாங்கள்ல … உங்க வீட்டுக்காரர் ஒருதரம் கூட வரலை..!!”
 
அம்மா அவங்களுக்கு வேலை அதிகம்மா.. வீட்டுக்கு கூட நேரத்துக்கு வர முடியாது… ராத்திரிக்கும் வேலை முடிஞ்சு லேட்டாத்தான் வருவாங்க..
 
ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க நாமதான் அவங்கள பார்த்துக்கனும்.. அந்த தம்பி வேலை வேலைன்னு திரிஞ்சா நீ கண்டுக்காம இருந்திருக்க.. நேரத்துக்கு சாப்பிட சொல்லனும் ..
 
சுவர வைச்சித்தான் சித்திரம் வரைய முடியும்..நேரத்துக்கு சாப்பிடாம தூங்காம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.. இதகூட சரியா கவனிக்காம பொண்டாட்டின்னு நீ எதுக்கு இருக்க ..?இன்னும் நீ விளையாட்டு பிள்ளை இல்லை ஸ்ரீ ஒரு வீட்டுக்கு மருமகளா போயிட்ட..!!” அவர் ஆரம்பித்து ஸ்ரீக்கு அரைமணி நேரம் உபதேசம் செய்துவிட்டார்..
 
ஏற்கனவே சூர்யா வந்து தன்னை பார்க்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்தவள் தன் தாய் வேறு தன்னையே குற்றம் சொல்லவும் அழுகையே வந்துவிட்டது… தாத்தாவும் அம்மாவும் கடைக்கு கிளம்பவும் கதவை அடைத்தவளுக்கு சூர்யாவை காணமுடியாத ஏக்கமும், தன் மேல் அவங்களுக்கு உண்மையிலே அன்பில்லையோ, நாம ஒரு ஒழுங்கான மனைவியா இல்லையோ என ஏதேதோ நினைத்து அழுகையாக வந்திருந்தது..
 
 இப்போது சூர்யாவை பார்க்கவும் அவளுக்கு அதிர்ச்சி, கோபம் ,சிரிப்பு, அழுகை என எல்லா உணர்ச்சியும் ஒட்டு மொத்தமாக வர அதை அழுகை மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டது..
 
தன்னை ஓடி வந்து கட்டிபிடிக்கவும் இதை எதிர்பார்க்காதவன் அவளின் வேகத்திற்கு தடுமாறி அவளோடு திறந்திருந்த கதவில் சாய்ந்திருந்தான்… அவள் அவனை இறுக கட்டிக்கொண்டு அழ அவனும் அவளை தன் பொக்கிஷமென தன்னுள் புதைத்திருந்தான்.. அழுகையால் அவள் முதுகு குலுங்கி கொண்டிருக்க அவளை சமாதானப்படுத்தியபடி,
 
ஏய் விடுடி, அதான் வந்திட்டேன்ல் அப்புறம் எதுக்கு இப்படி அழுகுற..??”
அழுதபடியே அவனை நிமிர்ந்து பார்த்தவள், என்….என்ன.. பார்க்க.. வர.. உ..உங்களுக்கு இத்தனை நாளா..??” அவள் தேம்பிக் கொண்டே அவன் மார்பில் தன் கையால் குத்த,
 
தன்னை போலவே அவளும் அவனை தேடியிருப்பதை உணர்ந்தவன் அவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான்… அவளை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன் மடியில் அவளை அமர்த்திக் கொள்ள அவள் அழுகை இன்னும் முடிந்த பாடில்லை..
 
ச்சே ச்சே நான் இந்த அழுமூஞ்சி பார்க்கவா இத்தனை நாள் கழிச்சு வந்தேன்.. போ நான் கிளம்பி போறேன்..??” அவன் அவளை விட்டு எழப்போக,
 
கோபத்துடன் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு முதுகை காட்டி நின்றாள்..
அவளை பின்னால் இருந்து கட்டி அணைத்தவன்,” இது யாரு ஸ்ரீயா எனக்கு என்னமோ வேற குட்டி பேபி மாதிரி தெரியுது. என்னோட ஸ்ரீன்னா மூச்சுக்கு முன்னூறு வார்த்தை பேசுவா இப்படி உம்முனா மூஞ்சியா இருக்க மாட்டாளே நீ அவளோட ரெண்டாவது தங்கச்சியா..!!”
அவனை கேள்வியாக பார்த்தவளை,
உன்ன பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோனுது .சுபாவுக்கு அடுத்த குட்டி பேபி மாதிரி..!!இப்படியா ஆளு மெலிவாங்க . நீயும் நீ போட்டிருக்கிற டிரஸ்ஸும்..!!”  வாய்தான் அவளை திட்டுவது போல பேச அவளை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தான்..
 
முக்கால் காலுக்கு பேன்டும் இறுக்கி பிடித்த டிசர்ட் தலையை கீரைகட்டு போல அள்ளி மேலே மொத்தமாக கிளிப் போட்டிருந்தாள்.. அதில் அடங்காமல் கொஞ்சம் முடிகள் முன்னால் வந்து அதுவும் அவளுக்கு அழகு சேர்த்தது..
முழங்காலுக்கு கீழே சிவந்த நிற வாழைத்தண்டு கால்கள் பளிச்சென தெரிய மெல்லிய கொலுசோடு மிஞ்சியும் காலுக்கு மருதாணி வைத்திருந்தாள்… பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..
 இறுக்கி பிடித்த டிசர்ட்டில் அவள் அழகு அப்படியே தெரிய டிசர்ட்டுக்கும் பேண்ட்டிற்கும் இடையில் மெல்லிய கீற்றாக அவள் இடை பளிச்சென தெரிந்தது…
காதில் ஒரு வளையம் கையில் இரு கண்ணாடி வளையல்கள் கழுத்தில் அவன் கட்டிய தாலிகயிறு நெற்றியில் சிறு மெரூன் நிற பொட்டு வேறு எந்த அலங்காரமும் இல்லை…அழுததால் முகம் தக்காளி போல சிவந்திருந்தது.
 
இத்தனை நாள் பார்த்ததைவிட இன்னும் இன்னும் அவனை ஈர்க்க அவளை உச்சி முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாக ரசித்தவனின் ஊடுருவும் பார்வையில் இப்போதுதான் உணர்ந்தாள் தான் என்ன மாதிரி ஆடையில் அவன்முன் நிற்கிறோம் என்பதை தன் நாக்கை கடித்து மறுபக்கம் திரும்பி நின்றவள்,
 ஒரு நிமிசம் இருங்க நான் டிரஸ் மாத்திட்டு வந்திருறேன் ..??”
உள்ளே ஓடப்போனவளை எட்டி பிடித்தவன்,” எங்க ஓடுற..? சேலை ,சுடிதார், நைட்டியவிட இந்த டிரஸ்தான் உனக்கு செமயா இருக்கு..!! இந்த டிரஸ் எப்ப வாங்கினது எட்டாவது படிக்கும்போதா..!!!”
 
ச்சு போங்க ..” வந்ததிலிருந்து ஹரிஷ் அடிக்கடி வீட்டிற்கு வருவதால் அவள் தாய் சேலையே கட்டிக் கொள்ளச் சொல்ல இன்று ஒருவரும் இல்லை என்பதால் தன் பழைய உடையை எடுத்துப் போட்டிருந்தாள்..
 
எங்க போறது இப்பதான் பதினைஞ்சு நாளைக்கு அப்புறமா உன்னை பார்க்கிறேன். அதுக்குள்ள போக சொல்ற ..??ஆமா தாத்தா அத்தை எல்லாம் எங்க வீடே அமைதியா இருக்கு..”
 
அவங்க வீட்ல இல்லை ரெண்டு பேரும் கடைக்கு போயிருக்காங்க…”
 
ஹேய்ய்ய்ய்ய்… சூப்பர் அப்ப நான் பர்பெக்ட் டயமிங்க்லதான் வந்திருக்கேன் சொல்லு..!!!” அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்தவனை தள்ளிவிட்டவள்,
 
அவனை முறைத்தபடி தன் இடுப்பில் கைவைத்து ,” இத்தனை நாளா என்னை பார்க்க வராம இருந்துட்டு பேச்ச பாருங்க இப்ப மட்டும் எதுக்கு வந்திங்களாம்..??”
 
அவள் கைகளுக்கு சொடக்கெடுத்துவிட்டவன்,” உண்மையை சொல்லவா பொய் சொல்லவா ..??”
உண்மையே சொல்லுங்க..?”
சொல்லுவேன் அப்புறமா கோவிச்சக்கூடாது… இங்கயிருந்து மூனுவீடுதள்ளி காலி இடம் கிடக்குதானே இந்த இடத்துக்காரங்க வீடுகட்டி தரச்சொன்னாங்க … அதான் அந்த இடத்தை பார்க்க வந்தேன்..
 
சொல்லி முடிக்கவில்லை மளுக்கென்று அவளுக்கு கண்ணீர் வழிந்திருந்த்து.. அப்ப இப்பவும் என்ன பார்க்க வரலையா..??”
 
ஏய் லூசு அது ஒரு காரணம் தான்.. உன்னை பார்க்கவர அதை காரணமா வைச்சிக்கிட்டேன்…அவளை அணைத்து நெருக்கியிருந்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு,” என்னால முடியலடி உன்னைவிட்டு பிரிஞ்சிருக்க முடியல..வேலையில கவனம் செலுத்தமுடியல.. அங்க நம்ம ரூமுக்குள்ள நுழைய முடியல ப்ளிஸ் சீக்கிரமா வந்துருடி..!!” மறுகன்னத்திலும் முத்தமிட,
 
இவ்வளவு பேசுறவங்க ஏன் என்னை பார்க்க வரலையாம் சுபா வீட்டுக்காரர் ஒரு நாளைக்கு எத்தனை தரம் பார்க்க வராங்க தெரியுமா..??”
 
ஏய் ஹரிஷ் துணிக்கடை வைச்சிருக்காரு. காலையில ஒன்பது மணி பத்து மணிக்கு கடை திறந்தா போதும்.. ஆனா எனக்கு பில்டிங் கட்டுற வேலை பல இடத்துக்கு போகனும்.. அதுக்கு நேரம்காலம் கிடையாதுடி.. பார்க்க வரலைன்னா எனக்கு உன்மேல அன்பு இல்லைன்னு அர்த்தமா..
முன்னாடி எவ்வளவுக்கெவ்வளவு வேலை வேலைன்னு திரிஞ்சனோ நீ இங்க வந்ததிலிருந்து எந்த வேலையும் ஓடல … நான் எப்பவும் இப்படி இருந்ததில்லை சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல, எத பார்த்தாலும் உன் நினைப்புதான் நீ வீட்டுக்கு வந்துரு…
அம்மா சொன்னாங்க நேத்துதான் பரிகார பூஜை நடத்தினதா.. அதுக்கு வர எவ்வளவோ முயற்சி பண்ணினேன் முடியல ஸாரி ரொம்ப எதிர்பார்த்திருந்தியோ.. தாலி பெருக்கி போட்டவுடன அங்க வந்திரு இந்த மாசம் முடியிறவரைக்கும் இங்க இருக்க வேண்டாம் புரியுதா..!!!”
 
அவன் பேசிக் கொண்டிருக்க ஸ்ரீயோ அவன் அண்மையை, பேச்சை, ரசித்தபடி அவன் இதயத்துடிப்பை கேட்டபடி அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள்… இத்தனை நாள் தன் மனதை அடைத்திருந்த பெரும் பாரம் குறைந்தது போல இருந்தது…
 
தன்னாலும் இனி ஒருநிமிடம்கூட கணவனை விட்டு பிரிந்திருக்க முடியாது என்பதை  உணர்ந்திருந்தாள் .. பேச்சு குறையவும் அவள் முகத்தை பார்த்தவன் கண்ணை மூடி தன் அண்மையை ரசிப்பவளை ரசித்தவன் மூடியிருந்த கண்ணில் தன் இதழை அழுத்தமாக பதித்திருந்தான்..
 
சிவந்திருந்த கன்னம் இரண்டிலும் முத்தத்தை பதித்து இதழை தன் விரலால் வருட ஸ்ரீயும் தன்னை மறந்து கொண்டிருந்தாள்.. அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருக்க தன் விரல் செய்த வேலையை தன் இதழ்களால் செய்யத்துவங்கினான் .. மென்மையாக இதழை தீண்ட ஆரம்பித்த அவன் செயல் நேரம் ஆக ஆக வன்மையாக மாறத்துவங்கியிருந்தது..
 
ரோஜாபூ போல இருந்த இதழில் தேனை எடுத்துக் கொண்டிருந்தவன் கை அவள் டிசர்ட்டின் உள்ளிருந்த வெற்றிடையை சோதிக்கச் துவங்கியிருந்தது.. இதுவரை எந்த பெண்ணையும் மனதாலும் உடலாலும் தீண்டாமல் இருந்தவன் இப்போது இரண்டாலும் தீண்டிக் கொண்டிருந்தான்..
நொடியோ நிமிடமோ இருவரும் இந்த உலகத்திலேயே இல்லை… மூச்சுக்காக ஏங்கவும் அவள் இதழை விட்டவன் தன் இதழை அவள் கழுத்தில் புதைக்க அவன் கட்டிய மஞ்சள் கயிற்றோடு சேர்த்து அவள் வாசம் அவளை இப்போத தன்னவளாக்க தூண்டியது..
 ஸ்ரீயின் நிலையோ சொல்லவே வேண்டியதில்லை… கணவன்தான் முத்தமிடுவான் என்பது தெரியும் ஆனால் முத்தமிட்டால் இப்படி ஆகும் என்று தெரியவில்லை.. அவள் நெஞ்சு படபடவென அடிக்க வயிற்றிற்குள் ஏதோ ஒரு உணர்வு இன்னும் இன்னும் இந்த இதழ் முத்தம் வேண்டும் என்பது போல இது தவறா தவறில்லையா என்ற குழப்பமும் கூடவே வந்திருந்தது..
 
வெளியில் பேச்சுக் குரல் கேட்ட மனமே இல்லாமல் பிரிந்தவன் அவளை விட்டு சற்று விலகி சோபாவில் போய் அமர ஸ்ரீக்குத்தான் தன் நிலையை அடைய முடியவில்லை.. ஒரு மாதிரி முழிக்கவும் அவளை பார்த்தவனுக்கு முத்தத்துக்கு இப்படி ஒரு ரியாக்ஷனா சிரிப்பு தாங்கவில்லை… புன்னகையை வாய்க்குள் கட்டுப்படுத்தியவன் தலையை அழுந்த கோதி தன்னை நிலைக்கு கொண்டு வந்தான்.

Advertisement