Advertisement

4

அவளின் நெற்றியில் ஏதோ ஒரு ஸ்பரிச உணர்வு ஏற்பட திடுக்கென கண் விழித்தவள் எதிரில் மின்னியபடி சிரித்து கொண்டிருந்த ஷரவனை கண்டாள்.

“குட் மோர்னிங் மதிம்மா” என்றான் அவளின் தலையை கோதியபடி.

“குட் மோர்னிங். “ என்று மணியை பார்த்தவள்.

“ஐயோ ஷ்ரவன் மணி எட்டாச்சா? நான் எப்படி இவ்ளோ நேரம் தூங்கினேன்?” என்றவள் வேகமாய் எழ, “அவசரம் இல்லை மதி. எதுக்கு இப்போ டென்ஷன் ஆகற? நீ ஒழுங்கா தூங்கியே எத்தனை நாளாச்சு?” என்று அவளின் அருகில் வந்தவன்.

“நீ டென்ஷன் ஆககூடாதுன்னு தானே நான் உன்கூட இருக்கேன்.” என்று அவளின் செங்ககழுதினில் முகம் புதைக்க அந்த வெப்பகாற்று அவளை உலுக்கியது.

“ஷ்ரவன்..” என்று இழுத்தவள் வேகமாய் விலகினாள்.

“போ போய் பிரெஷ் ஆகிட்டு வா. நான் இங்கயே வெய்ட் பண்றேன்” என்று அங்கே அமர்ந்தான்.

“ஹும்ம் “ என்று உள்ளே சென்று குளித்துவிட்டு வந்தவள் அவனை கண்டதும் அப்படியே நின்றாள்.

“என்ன மதிம்மா?” என்றான் கனிவாய்.

“இல்ல… நான் ட்ரெஸ் எடுத்துட்டு போகலை., அதனால அதே ட்ரெஸ் போட்ருக்கேன். ட்ரெஸ் மாத்தனும்” என்று இழுத்தாள்.

“அப்டியா மாத்திக்க” என்றான் ஷ்ரவன் வெகு கேஷுவலாய்.

“ஷ்ரவன் நீ இங்க இருந்தா நான் எப்படி மாத்துறது?” என்று சிணுங்கினாள் மது.

“அதுக்கு? நான் என்ன பண்ணனும்?” என்று ஷ்ரவன் மேலும் அவளை சீண்ட.

“நான் உன்னை போக சொல்ல மாட்டேன். ஆனா, நீ அந்த பக்கம் திரும்பிக்க” என்றாள்.

“ஹ்ம்ம்… சரி… மதுகுட்டி சொல்லிட்டா அதுக்கு மறுப்பேது” என்று அவன் திரும்பிக்கொள்ள அவளும் உடையை வேகமாக மாற்றிகொண்டாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும், “போ உங்கப்பா தான் வந்துருக்கார்” என்று கைகாட்ட அவளும் சென்று திறந்தாள்.

“மதும்மா. நம்ம சொந்தகாரங்க எல்லோரும் உன்னை பார்க்க வந்துருக்காங்கடா. வாம்மா” என்றார்.

“அப்பா  நான் வரலை. அங்க வந்தா எல்லோரும் என்னை ஒரு மாதிரி பாக்கிறாங்க. ப்ளீஸ் நான் வரலை.” என்று கெஞ்சினாள்.

“மது அப்படி சொல்ல கூடாதுடா. வா வந்து சும்மா நின்னுட்டு வந்துடு” என்றார்.

“அப்பா“ என்று ஏதோ சொல்ல வாய்எடுக்க “மதிம்மா. அப்பா கூப்பிட்றார்ல போயிட்டு வா” என்றான் ஷ்ரவன்.

அவனின் குரல் அவளுக்கு மட்டும் தான் கேட்கும் என்பதால் அவள் அவனை நோக்க, ‘போ’ என்றான் சைகையில்.

‘சரி’ என்று தலை ஆட்டிவிட்டு வெளியே சென்றாள்.

வந்திருந்தோர் அனைவரும் அவளுக்கு பொட்டிட்டு பூவிட்டு புடவை சாத்தி ஒப்பாரி வைத்து அழுதனர்.

அவளையும் மீறி விழிகளில் நீர் வழிந்தபடி இருக்க, அவளுக்கு எதிரில் மீன்னியபடி கைகளை கட்டிக்கொண்டு புன்னகைத்தபடி நின்றிருந்தான் ஷ்ரவன்.

“நான் இங்க தான் இருக்கேன் உன்னை அழக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்ல எதுக்கு அழுகுர. அழக்கூடாது. இன்னொரு தடவை நீ அழுதன்னா அப்புறம் ..” என்று அவன் இதழினை மெதுவாய் வருடி அவள் இதழை காட்ட அவன் சொல்லவருவது புரிந்து தலைகுனிந்தாள்.

‘இதெல்லாம் எப்படி சாத்தியம்? நான் எதுக்கு ரியாக்ட் பண்ணணும். இங்க என் புருஷனோட உயிர் போயிடுச்சின்னு அழறாங்க அங்க அவரோட ஆன்மா என்னை அழக்கூடாதுன்னு என் பக்கத்துலையே இருந்து பார்ததுக்குறார்.’. கடவுளே இது எங்க போய் முடியபோகுது.’ என்று விழிகளை மூடினாள்.

இப்படியே நாட்கள் நகர ஷ்ரவன் அவளை விட்டு நகராமல் அவளுடனே இருந்தான்.

இதோ பதினாராம் நாள் காரியம் செய்ய எல்லோரும் கூடி இருந்தனர்.

பெண்கள் கூடி மதிக்கு முகம் முழுவதும் மஞ்சளிட்டு பெரிய குங்குமம் இட்டு. பட்டு புடவை கட்டி வைத்து நிற்க வைத்தனர்.

எல்லோரும் கட்டிபிடித்து அழ, தன்னையும் மீறி தலைசுழற்றியது மாடிக்கு.

“மதி“ என்று அவனின் குரல் கேட்க முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்.

“இவங்க என்ன வேணாலும் செஞ்சிட்டு போகட்டும்… நான் உன்கூட தான் இருப்பேன். ஞாபகம் வச்சிக்க மது” என்றான் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீரை துடைக்காமல்.

‘சரி‘ என்று தலையசைத்தாள் மதி.

எல்லோரும் ஏதோ ஏதோ அழுதபடி புடவையை போர்த்த என்ன நடக்கிறது என்று புரியாமல் சிலையென நடப்பது நடக்கட்டும் என்று அமர்ந்திருந்தாள் ஷன்மதி.

நடுஇரவில் ஒரு சில பெண்கள் எல்லோரையும் வெளியேற்றி அவர்கள் மட்டும் அழுதபடி அவளை அமரவைக்க அவள் விழிகளோ ஒரு நொடியு,ம ஷரவனை விட்டுவிலகாமல் இருந்தது.

‘ஷ்ரவன் எனக்கு பயமா இருக்கு. இங்க என்ன நடக்குது? இவங்க எதுக்காக என்னை இப்படி உக்கார வச்சிருக்காங்க? ஒண்ணுமே தெரியலை?” என்று புழுங்கினாள்.

விழியசைவால் அவளுக்கு தைரியம் கூறியவன். அவளின் அருகினில் அமர்ந்துகொண்டான்.

அழுதுகொண்டே அவளின் வளையல்களை உடைக்க ஆரம்பித்தனர் பெண்கள்.

விழிகளில் நீர் வழிய அதை பார்த்துகொண்டிருந்த ஷன்மதியின் தோள்களை அழுந்த பற்றினான் ஷ்ரவன்.

“மதிம்மா. சடங்குன்ற பேர்ல இவங்க ஏதோ செய்றாங்க. செய்துட்டு போகட்டும். சடங்குகளோ செய்கைகளோ எதுவும் நமக்கு நடுவுல வரமுடியாது மதிம்மா. ஐ லவ் யு டா” என்றான்.

அடுத்து என்ன நடக்க போகிறது என்று பயத்துடன் பார்த்துகொண்டிருந்தாள் ஷன்மதி.        

 

 .     

 

Advertisement