Advertisement

பின் பவித்ரா நினைவு வர அவளுக்கு அழைத்து எல்லா விசயங்களையும் சொன்னவன் சஞ்சனா மற்றும் ராதா இருவரின் எண்களையும் அனுப்பி விட்டான்.

அன்று இரவே தன்னுடைய குடும்பத்தினரிடம் தோழியின்  திருமணத்துக்கு பேங்க்ளூர் செல்வதாக சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் அபியின் ஊருக்கு. ரவி தான் அவளை பத்திரமாக பஸ் ஏற்றி விட்டு சஞ்சனா மற்றும் ராதாவுக்கு அழைத்து தகவலும் சொல்லி விட்டான்.

அவர்களும் அருந்ததியிடம் “எங்க பிரண்டோட அக்கா நாளைக்கு காலைல வருவாங்க. ரெண்டு நாள் இங்க தான் இருப்பாங்க”, என்று சொல்லி விட்டனர். அருந்ததியும் சரி என்று விட்டுவிட்டாள். வடிவு குடும்பம் இங்கே இல்லை. இங்கே இருந்திருந்தால் யார் என்ன என்று துருவி இருப்பார்கள். அதனால் இருவரும் தப்பித்தார்கள்.

பேருந்து பயணத்தில் பவித்ராவும் அருந்ததியிடம் என்ன எல்லாம் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டே வந்தாள். ஆனால் என்ன ஆனாலும் அருந்ததியின் பெர்சனல் விசயங்களை மட்டும் பேசவே கூடாது, அது அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்ற முடிவில் இருந்தாள்.

அப்போது அவளை அழைத்தான் அபி. தன்னுடைய எண்ணங்களை உதறி தள்ளி விட்டு சிறு சிரிப்புடன் அவன் போனை எடுத்தவள் “சொல்லு அபி, வீட்டுக்கு வந்துட்டியா?”, என்று கேட்டாள்.

“நான் வந்துட்டேன். நீ எங்க இருக்க? ஒரு மாதிரி சத்தம் கேக்குது. நீ வீட்ல இல்லையா பவி?”

“அது நான் ஃபிரண்ட் கல்யாணத்துக்கு பேங்க்ளூர் போறேன்”

“பேங்க்ளூரா? அது யாரு? எந்த ஃபிரண்ட் எனக்கு தெரியாம?”, என்று கேட்க சட்டென்று பொய்ச் சொல்ல வராமல் “அதை ஏன் நீ கேக்குற?”, என்று கோபமாக கேட்டாள்.

“பவி, நான் கேக்க கூடாதா உன்னை?”

“இவ்வளவு நாள் கேக்கலாம் தான். ஆனா டைவர்ஸ் அப்ளை பண்ணின பிறகு எதுக்கு கேக்குற? நான் என்ன ஆனா உனக்கு என்னவாம்?”, என்று கேட்க பட்டென்று போனை வைத்து விட்டான்.

அவனைக் காயப் படுத்தி விட்டது புரிந்தாலும் வந்து சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். அவனும் போனை வைத்து விட்டு அதை தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

“இனி பவியைச் சொல்ல எனக்கு உரிமை இல்லையா? அவ எனக்கு யாரோவா? இல்லை இல்லை அவ என்னோட பவி”, என்று நினைக்க “டைவர்ஸ் ஆன அப்புறம் அவ உனக்கு யாரோ தான். அது மட்டுமில்லாம அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சு அவளை வாழ வைக்கப் போறேன்னு சொல்ற? அப்ப அவ எப்படி உன் பவி ஆவா?”, என்று கேட்டது மனசாட்சி.

“இல்லை இல்லை, அவ என்னோட பவி தான். அவ வேற கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டா”

“அப்புறம் எதுக்கு இந்த டைவர்ஸ்? அதுக்கு அவசியமே இல்லையே?”, என்று மனசாட்சி கேட்க “அதானே, நாங்க வாழுறோம் வாழலை அது ரெண்டாவது விஷயம். எங்க ரெண்டு பேர் வாழ்க்கைலயும் இன்னொரு ஆள் வரப் போறது இல்லைன்னு ஆன அப்புறம் நாங்க ஏன் பிரியனும்? எனக்கு பவி வேணும். கடைசி வரை. அவளே என்னை சகிச்சிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு அவ எனக்கு பொக்கிஷம். அதை தவற விட மாட்டேன்”, என்று எண்ணியவன் உடனே அவனது லாயருக்கு அழைத்தான்.

மனைவியைக் கொஞ்சிக் கொண்டிருந்தவர் போனை எடுத்து “சொல்லுங்க அபி”, என்று கேட்டார்.

“சார் பவிக்கு விவகாரத்துக் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. எங்களுக்கு எந்த கவுன்சிலிங்கும் வேண்டாம். எங்க கேஸை தள்ளுபடி செஞ்சிருங்க. எங்க கையெழுத்து போடணும்னு சொன்னா நான் போடுறேன்”, என்று சொல்லி போனை வைக்க திகைத்து அமர்ந்திருந்தார் லாயர்.

“ஏங்க வாங்க”, என்று மனைவி அழைக்க “அட போடி எனக்கு மூடே போச்சு. நான் பாத்தாலும் பாத்தேன், இப்படி ஒரு ஜோடியைப் பாக்கலை. கடைசி வரை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. இரு இன்னொரு ஆளையும் முடிய பிச்சிக்க வைப்போம்”, என்று சொல்லி பவித்ராவின் லாயரை அழைத்தார்.

“சொல்லு யா, என்ன இந்த நேரத்துல?”

“இந்த நேரத்துல தாண்ணே அந்த அபி கால் பண்ணி டைவர்ஸ் வேண்டாம்னு சொல்லச் சொல்றார்”

“நினைச்சேன், அன்னைக்கு கோர்ட்ல பாத்த தானே அவங்க நடந்துக் கிட்டதை? எப்படியோ நல்லா இருந்தா சரி தான். சரி நாளைக்கு கோர்ட்ல பாப்போம்”, என்று சொல்லி போனை வைத்தவர் பவித்ராவை அழைத்தார்.

“சொல்லுங்க சார்”

“வாழ்த்துக்கள் மா”

“சார்”

“உன் புருஷன் டைவர்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டானாம். நாளைக்கு கேஸ் தள்ளுபடி ஆகிரும். இனியாவது சந்தோஷமா வாழனும் சரியா?”, என்று கேட்க அவள் முகம் மட்டும் அல்லாமல் அகமும் மலர்ந்தது.

“சரி சார், தேங்க்ஸ்”, என்று சொல்லி போனை வைத்தவளுக்கு மனதுக்குள் அவ்வளவு சந்தோஷம். உடனேயே அபியைப் பார்க்க வேண்டும் போலவும் அவனை இறுக கட்டிக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது.

“கட்டிப் பிடிக்கப் போறியா? எப்படி? இவ்வளவு நாள் மாதிரியா? இல்லை அவனை உன் புருசன்னு நினைச்சு கட்டிப் பிடிக்கப் போறியா?”, என்று சரியான நேரத்தில் மனசாட்சி எடுத்துக் கொடுக்க ஒரு மாதிரி திகைத்துப் போனாள்.

அவனை இறுகக் கட்டிப் பிடிப்பது போல ஒரு காட்சி மனக் கண்ணில் விரிய அவளுக்குள் சில மாற்றம். ஒரு மாதிரி தடுமாறிப் போய் அமர்ந்திருந்தாள். முதல் முறையாக காதலும் அதைத் தாண்டிய உணர்வும் அவளை கிளர்ச்சி அடையச் செய்ய அவனைப் பற்றிய நினைவிலே சீட்டில் சாய்ந்தாள்.

அபிக்கும் அவளை அழைத்து டைவர்ஸ் கேன்சல் ஆனதைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனாலும் அவள் பேசியதில் எழுந்த கோபத்தில் பேசாமலே படுத்து விட்டான்.

அன்றைய நாள் அப்படி முடிய அடுத்த நாள் பவித்ரா தயக்கத்துடன் வீட்டுக்கு வர “வா மா”, என்று அன்பாக வரவேற்றனர் அருந்ததியும் ஜீவானந்தமும். “வாங்க”, என்று சந்தோஷமாக வரவேற்று அவளுக்கு இரு புறமும் நின்று கொண்டார்கள் ராதாவும் சஞ்சனாவும்.

“வணக்கம் ஆண்ட்டி, வணக்கம் அங்கிள்”, என்று கரம் குவித்தாள் பவித்ரா.

“உக்காரு மா. உன் பேர் என்ன?”, என்று அருந்ததி கேட்க “பபிதா”, என்றாள்.

“நல்ல பேர், ஆளும் ரொம்ப அழகா இருக்க. கண்டிப்பா உனக்கு இந்த வேலை கிடைக்கும். இது கிடைக்கலைன்னாலும் நம்ம கம்பெனில வேலை கிடைக்கும்”, என்று அருந்ததி சொல்ல சரி என்னும் விதமாக தலையசைத்தாள்.

உடனே அருந்ததியிடம் அபி பற்றி தங்கள் திருமணம் பற்றி எப்படி பேச என்று அவள் தடுமாற “குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு இன்டர்வியூக்கு போ மா. நாங்க ஆபீஸ் போயிட்டு வரோம்” என்று சொல்லி சென்று விட்டார்கள் அருந்ததியும் ஜீவானந்தமும்.

அவர்கள் சென்றதும் “அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. எங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்று சந்தோசமாக சொன்னாள் சஞ்சனா.

“எனக்கும் இந்த செல்ல நாத்தனாரை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்று சொன்ன பவித்ரா அவள் கன்னம் கிள்ளினாள்.

“அப்ப என்னைப் பிடிக்கலையாக்கா?”, என்று ராதா பாவமாக கேட்க “என்னோட தங்கச்சியை எனக்கு பிடிக்காம போகுமா? அது மட்டுமில்லாம எங்க ரவி மாமாவை வேற கல்யாணம் பண்ணிக்கப் போற?”, என்று கேட்டாள்.

“உண்மையா நடக்குமாக்கா? அவங்களுக்கு என்னைப் பிடிக்குமா?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள்.

“உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா? கண்டிப்பா உங்க கல்யாணம் நடக்கும். ஆனா அதுக்கு நீ நல்ல படியா படிச்சு முடி”

“கண்டிப்பாக்கா”

“சரி வாங்க அண்ணி, குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு ஊர் சுத்த போகலாம். நாங்க இன்னைக்கு லீவ் போட்டுட்டோம். அம்மா கேட்டா இண்டர்வியூக்கு போனோம்னு சொல்லிக்கலாம்”, என்று சொன்ன சஞ்சனா அவளுக்கான ரூமைக் காட்டினாள்.

அதே போல அவள் குளித்து முடித்து வந்ததும் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டார்கள். அபி பவித்ரா திருமணம் எப்படி நடந்தது என்றெல்லாம் கேட்டு பவித்ராவை கேள்வியாக கேட்க அதிகம் பேசும் பவித்ராவே பதில் சொல்ல தடுமாறினாள். கூடவே அபியின் மீதான அன்பும் அவனை நினைக்க நினைக்க இன்னும் அதிகமானது பவித்ராவுக்கு.

காதல் தொடரும்…..

Advertisement