Advertisement

   மாயவனோ !! தூயவனோ – 28

 “ஷ்ஷ்!! மித்து அமைதியா இரு “ என்று மிக மெதுவாக கூறியபடி மித்ராவை தனக்கு அருகில் நிறுத்தி கொண்டான் மனோ..

“என்ன மனு ??? என்னவோ சத்தம் கேட்கிறது ??”

“ மித்து தைரியமா இரு. என்ன நடந்தாலும் உன்கூட உனக்கு துணையா நான் இருக்கேன் “ என்று அவளது கைகளை பற்றினான்.. மித்ராவிற்கு ஏதோ திகில் படம் பார்ப்பது போல இருந்தது..

ஆனால் மனோகரனின் முகமோ எந்த ஒரு உணர்வையும் வெளிபடுத்தாமல்  இருந்தது.. வெளியே இன்னும் சத்தம் அதிகமாக கேட்டது.. சில பல ஆட்கள் நடக்கும் சத்தம்.. நெருங்கி வரும் காலடி ஓசை..

“ யாராக இருக்கும் ???” என்ற யோசனையோடு மித்ரா மனோவை நோக்கினாள்.

“ மனு “ என்று விளித்தவளை ஒற்றை பார்வையால் அடக்கினான்.. வீட்டின் பின் பக்கம் குதித்து வேகமாக ஆட்கள் உள்ளே வரும் சத்தம் கேட்டது.. மித்ராவின் இதய துடிப்போ எகிறியது.. ஆனால் மனோவின் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை..

மித்ரா தன்னை சுற்றி நடப்பது புரியாமல் உறைந்து போய் நின்றாள்.. வீட்டின் கதவு படக்கென்று உடைக்கப்பட்டு உள்ளே அடியாட்கள் போல ஒரு பத்து பேர் நுழைந்தனர்.. உள்ளே நுழைந்தது மட்டுமில்லாமல் இவர்கள் இருவையும் சுற்றி வேறு நின்றுகொண்டனர்.. அனைவரின் கையிலும் துப்பாக்கி.. மனோவோ அசையாமல் நின்றான்..

“ என்ன நடக்கிறது இங்கே ??? எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுன்னு நினைச்சா இது என்ன புதுசா.. அய்யோ இவனுங்க யாருக்கு எதிரின்னு தெரியலையே.. “ என்று யோசனையுடன் கணவன் முகம் பார்த்தாள்.

மனோகரனோ வேறு யாரையோ எதிர்பார்த்து இருப்பது போல தோன்றியது..

“ அட ராமா வந்தவனுங்க போதாதா ??? இன்னும் யாரை தேடுறான்..” என்று யோசிக்கும் போதே காலை விந்தி விந்தி நடந்தபடி ஒருவன் உள்ளே வந்தான்.. வந்தவனுக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும்..

“ என்னடா சுத்தி வலைச்சுட்டிங்களா???? அவனை சுட்டு தள்ளிட்டு அவளை தூக்கிடலாமா ???” என்று வில்லத்தனமாக சிரித்தபடி வந்தான்.

“ யாரிவன் “ என்பது போல பார்த்தாள் மித்ரா.. அவள் பார்வையை உணர்ந்த மனோ மெல்ல குனிந்து “ மித்து நல்லா பார்த்துக்கோ இவன் தான் உன்னைய கல்யாணம் செய்யனும்னு துடியா துடிச்ச சுந்தர் “ என்றான் நக்கலாக..

“ என்ன !!!!!“ என்று வியந்தவள் தன் கணவன் முகத்தில் ஒரு சிரிப்பை காணவும் “ இந்த ரணகலத்துல கூட இவனுக்கு ஒரு குதுகலமா ???” என்று எண்ணினாள்..

சுந்தரின் பார்வையோ மித்ராவை தொட்டு மீண்டது.. அங்கிருந்த நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்து

 “ என்ன தம்பி மனோகரா ??? சௌக்கியமா ??? என்ன அப்படி ஒரு பார்வை ??? செத்து போனவன் எப்படிடா உயிரோட வந்திருக்கானேன்னு தானே பார்க்கிற ??”

“ நான் சுந்தர் டா.. நீ சத்தமே இல்லாம என்னைய துரத்தி வருவ??? என் கனவை எல்லாம் பாழாக்கி, என் எல்லா தொழிலையும் ஒண்ணுமில்லாம செய்வ, ஆனா இதை எல்லாம் பார்த்துட்டு நான் சும்மா அப்படியே செத்துடுவேன்னு நினைச்சியா… ஹா ஹா ஹா பார்த்தியா… இது உன் இடம்.. எப்படி வந்து சுத்தி வளைச்சேன் பார்த்தியா.. ஹா ஹா  பாரு டா.. “

“இனி உன்னால எதுவும் செய்ய முடியாது… எப்படி எப்படி எனக்கே தெரியாம எல்லாம் செய்வ, ஆனா நான் என் எதிரி யாருன்னு கூட தெரியாம சாவேன்னு நினைச்சியா??? என்னை என்ன முட்டாள்ன்னு நினைச்சியா டா… அன்னிக்கு கார்ல எரிஞ்சு சாம்பலானது நான் இல்லை.. ஏற்கனவே செத்த ஒருத்தன் “    

“ முட்டாள் நான் இல்லைடா.. நீங்க எல்லாரும் தான்.. என்னைய மோப்பம் பிடிச்சுட்டாங்கன்னு தெரிந்த அடுத்த நிமிசமே நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.. அதை நீங்களும் நம்பி என் படத்துக்கு மாலை போட்டு எல்லாம் முடிஞ்சதுன்னு நிம்மதியா இருந்திங்க.. ஆனா நான் என் நேரத்திற்காக காத்து இருந்தேன் டா.. மீனுக்கு காத்திருக்க கொக்கு மாதிரி”         

“எங்கப்பன் கிட்ட போய் உண்மை எல்லாம் சொல்லி எனக்கு கட்டம் கட்டுனா நான் அப்படியே அடங்கி ஒடுங்கிடுவேன்னு இருந்தியா??? டேய் டேய்… சிறுக சிறுக நான் முன்னேறி வந்தேன் டா.. எவ்வளோ பெரிய தொழில் சாம்ராஜ்யம் தெரியுமா ??? உனக்கென்னடா வந்ததது??? உனக்கு தான் எக்கச்சக்கமா பணம் இருக்குல??? அப்புறம் என்ன ??? “ என்று கர்ஜித்தான் சுந்தர்..

ஆனால் இத்தனை பேச்சுக்களுக்கும் மனோவிடம் பதிலேதும் இல்லை.. சுந்தரையும் அவனோடு வந்த ஆட்களையும் பார்த்து கொண்டு இருந்தான்.. ஆனால் மித்ராவோ நடுங்கி போய் இருந்தாள்..

“ கடவுளே என்ன இது??? இன்னும் எதுவும் முடியலையா ??? இவன் என்ன பக்கம் பக்கமா வசனம் பேசுறான்.. ஆனா மனு என்ன ஒண்ணுமே பதில் சொல்லாம இருக்கான் “ என்று திறுதிறுவென முழித்தாள்..

அவளை கண்ட சுந்தர் “ என்ன மித்ரா பாப்பா.. அப்படி பாக்குற??? ஓ !!! இப்போதானே என்னை நீ நேரில் பார்க்கிற ??? ஹ்ம்ம் என்ன பண்ணுறது ராசாத்தி… எப்பையோ நீ என் வீட்டுக்கு மகாலட்சுமியா வந்திருக்கணும்.. ஆனா இவன், இந்த மனோகரன் இருக்கானே.. எல்லாம் இவனால வந்தது… பாரு இப்படி துப்பாக்கி முனையில் நிக்க வேண்டிய சூழ்நிலை”

“ என்ன டா அமைதியா நிக்கிற ??? அதுசரி இனிமேல் நீ அமைதியா தான் இருக்கனும்.. நீ கூட நினைக்கலாம் உயிர் பிழைச்ச இவன் ஏன் இத்தனை நாள் விட்டு இப்ப வந்திருக்கான்னு.. உன் பொண்டாட்டி வீட்டை விட்டு போனது, நீ அவளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ணது எல்லாம் எல்லாமே எனக்கு தெரியும் ராசா.. ஆனா நான் ஏன் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன் தெரியுமா “

“ நாம அசை படுற எந்த ஒரு பொருளுமே கைக்கு கிடைச்ச அடுத்த நிமிஷம் பறிப்போர கொடுமை இருக்கே அது தான் பெரிய கஷ்டம். உன் பொண்டாட்டி இங்க வந்து, ஹப்பா இனிமே நிம்மதியா இருக்கலாம்னு நீங்க நினைக்கும் பொழுது எப்படி வந்து நுழைஞ்சேன் பார்த்தியா  ” என்று கூறியபடி  மெல்ல மித்ராவிடம் வந்தான். அவளோதன் கணவனை இன்னும் நெருங்கி நின்றாள்..

மனதிற்குள் “ மனு ஏதாவது செய்யேன் “ என்று மருகினாள்.. சுந்தரின் பார்வை மித்ராமேல் இருப்பதை உணர்ந்த மனோ கண்ணிமைக்கும் நேரத்தில் சுந்தரை தன் பக்கம் இழுத்து, தன் சட்டையின் பின்னே வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுந்தரின் நெற்றி பொட்டில் வைத்தான்..

இதை யாரும் எதிர் பார்கவில்லை.. அதிலும் மித்ரா, இப்பொழுது மிகவும் அதிர்ந்து போனாள்..

“ மனு… இவ்வளோ நேரமா துப்பாக்கிய வச்சுக்கிட்டு தான் என்கிட்டே கொஞ்சிட்டு இருந்தான??? அட கடவுளே இது தான் துப்பாக்கி முனையில் காதல் பண்ணுறதா ???” என்று யோசித்தாள்.

இவள் இப்படி யோசித்து கொண்டிருக்க அங்கே சுந்தரோ மனோகரனின் பிடியில் இருந்து திமிறிக்கொண்டு இருந்தான்.. சுற்றி இருந்த அடியாட்கள் அனைவரும் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கி கொண்டு இருந்தனர்..

மனோவோ “ கிட்ட வந்திங்க தேவையே இல்லாம நீங்களும் குண்டடி பட்டு சாவிங்க “ என்று கத்தினான். 

“ டேய் என்னடா பார்த்துக்கிட்டு இருக்கீங்க ??? வந்து பிடிங்கடா இவனை.. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, இவனை இன்னைக்கு சும்மா விட கூடாது  “ என்று சுந்தர் அரட்டல் போடவும், வேகமாய் அடியாட்கள் முன்னேறவும் மனோ “ பிரண்ட்ஸ் “ என்று ஒரு குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது..  

அடுத்த நொடி, நொடி என்று கூட கூற முடியாது, அத்தனை துரிதமாக  அவ்வீட்டில் இருந்த அறையின்னுளும் இருந்து துப்பாக்கி ஏந்திய ஆட்கள் வேகமாய் வெளியே வந்தனர்..

“ இவனுங்க எல்லாம் எங்கிருந்து வந்தானுங்க ??? எல்லாரும் உள்ளே தான் இருந்தாங்களா ?? ஆகா !!!! அப்போ இதை எல்லாம் எதிர்பார்த்து தான் இந்த மனு என்னைய இங்கே கூட்டி வந்தானா ??”

என்ன நடக்கிறது என்று யோசிக்கும் நேரத்தில் அங்கே துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் பறந்தான.. மித்ராவோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல் இமைக்க மறந்து நின்று இருந்தாள்.  அடுத்த சில நிமிடங்களின் அனைத்தும் மனோவின் கட்டுபாட்டுக்குள் வந்தது..

மனோ பிரண்ட்ஸ் என்று அழைத்ததும் உள்ளிருந்து வந்தவர்கள் எல்லாம் புலனாய்வு துறை ஆட்கள்.. அனைவரும் ஒன்று கூடி தான் மிக தெளிவாய் ஒரு திட்டம் தீட்டி இருந்தனர்.. அவர்களின் பிடியில் சுந்தரின் ஆட்களை அனைவரும் தினறிக்கொண்டு இருந்தனர்..

அடி பொறுக்காமல் குய்யோ முறையோ என்று கத்தியபடி இருந்தவர்களை வெளியே இழுத்து செல்லவும் காவல் துறை வாகனம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.. அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி அதில் ஏற்றினர். காவல் துறை அதிகாரியுடன் குமாரும் வந்தான்..

“ என்ன டா எல்லாம் ஓகே தானே “ என்று கேட்டபடி உள்ளே வந்தவனை பார்த்து மனோ “ ஆமா டா.. எல்லாம் பக்கா “ என்று கூறியபடி சுந்தரை ஒரு நாற்காலியில் தள்ளினான்..

“ மச்சி இவன் கூட நானும் என் பொண்டாட்டியும் கொஞ்சம் பேசணுமே “ என்று மனோ கூறவும் குமார் சிரித்தபடி “ ஆசை தீர பேசு மனோ… “ கூறிவிட்டு வெளியே சென்றான்.

“ எப்படி எப்படி நீ எங்களை சுத்தி வளைச்சு பிடிச்சியா ??? ஹா ஹா ஹா அய்யோ … சத்தியமா என்னால சிரிப்பை அடக்க முடியலை.. உன்னைய என் இடத்திற்கு  வரவச்சு, நாங்க தான் டா உன்னைய வளைச்சு பிடிச்சிருகோம்.. அறிவு கெட்டவனே “

“ நான் கூட நீ செத்துபோயிட்டேனு தான் நினைச்சேன்.. ஆனா மனசுல ஏதோ ஒரு எண்ணம்.. இன்னும் கொஞ்சம் தீவிரமா கவனிக்கும் போது தான் தெரிந்தது நீ சாகலைன்னு.. “

“ நீயும் வெளிய வருவ வருவன்னு பார்த்தா, நீயோ வெளிய வர வெட்கப்பட்டு போயி வீட்டுக்குள்ளையே இருந்த.. ஆமா ஒரு தனி வீடுக்குள்ள போயிருந்தா உன்னைய யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்களா என்ன ??? நீ எங்களை ஆள் போட்டு வாட்ச் பண்ணுறது எல்லாம் தெரியும்..”

“ நீ வெளிய வரணும்ங்கிற ஒரே காரணத்துக்காக தான் என் வீட்டில் இருந்த அத்தனை பாதுகாப்பையும் எடுத்தேன். அப்பையும் நீ வரல.. சரி ஒரு வேலை என் பொண்டாட்டி இங்க வந்தா தான் நீயும் வெளிய வருவன்னு நினைச்சு எல்லாம் பண்ணா, நாய் மாதிரி மோப்பம் பிடிச்சிட்டு இதோ வந்து இப்படி பரிதாபமா மாட்டிக்கிட்டையே சுந்தர் “ என்று அவனிடம் கூறிக்கொண்டு இருந்த மனோவை திகைத்து போய் இருவர் பார்த்தனர்.

ஒருவன் சுந்தர், இன்னொரு ஆள் மனோவின் தர்ம பத்தினி மித்ரா.. “ அடப்பாவி புருசா….. இதெல்லாம் தெரிஞ்சு தான் என்னைய இங்க கூட்டி வந்திங்களா ??? பறந்த தோட்டாவில் ஒன்னு உங்க மேலையோ, என் மேலையோ பட்டிருந்தா என்னவாகியிருக்கும் ??? டேய் மனு ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான் ” என்று மனதில் கருவினாள்..

ஆனால் சுந்தரோ அடிபட்ட புலியாக சீறிக்கொண்டு இருந்தான் “ டேய் வேண்டாம்.. நான் யாருன்னு தெரியாம என்கிட்டே மோதுற.. உனக்கு என்னைய பத்தி சரியா தெரியலை “

“ அடடா நீ என்ன லூசா.. உன்னைய எல்லாம் இப்படி உட்கார வச்சு பேசுறதே பெருசு.. போனா போகுதேன்னு உனக்கு மரியாதையை குடுத்தா நீ ரொம்ப பேசுற” என்று கூறியபடி நின்றிருந்த மனோ சுந்தர் அமர்திருந்த நாற்காலியை காலால் எத்தி தள்ளினான்..

“ அம்மா !!!!” என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தான் சுந்தர்..

“ ம்ம் அப்படி தான் கை கட்டி கீழே உட்கார்.. உனக்கு இதுவே பெருசு… ஏன் டா உனக்கெல்லாம் அறிவே இல்லையா.. அது சரி நீ பெத்த பொன்னையே விற்க துணிஞ்சவன் தானே, உன்கிட்ட இந்த கேள்வி கேட்டது என் தப்பு தான்.. டேய் உன்னைய நான் சும்மா பிடிக்கலை, கிட்டத்தட்ட ஆறு மாசமா தூக்கமில்லாம யோசிச்சு யோசிச்சு உன்னைய நெருங்கினா நீ செத்தது போல நடிப்ப, அதை நாங்க நம்பனும்.. என்னைய என்ன உன்னை மாதிரின்னு நினைச்சியா ???  ” என்று கூறிய படி

“ மித்து டியர் “ என்று அழைத்தான்.. அவளிடம் இருந்து பதில் இல்லை.. துப்பாக்கியை சுந்தரின் பக்கம் நீட்டியபடி தன் மனைவியை நோக்கினான் அவளோ சுவரோடு சுவராக ஒட்டி நின்றிருந்தாள்..

“ அட என்ன டியர் இப்படி பயந்து போய் நின்னுருக்க?? இவனை பார்த்து எல்லாம் நம்ம பயப்படகூடாது மா… இங்க வா.. ம்ம்ச் சும்மா வா மித்து “ என்று அழைக்கவும் மித்ரா முடியாது என்பதற்கு அடையாளமாக தலையை உருட்டினாள்..

“ பாரு டா நாயே நல்லா பாரு.. என் பொண்டாட்டி உனக்கு கேட்குதா ??? உன் முகத்தை கண்ணாடியில் பார்த்தது இல்லையா.. என் பொண்டாட்டி உங்கிட்ட வரவே பயந்து போய் இருக்கா.. இவளை போய் நீ என்ன பண்ண நினைச்சிருந்த “ என்று கூறியபடி அவனை ஒரு அரை விட்டான் மனோ..

“ டேய் வேண்டாம் டா.. அடிக்கிர வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம் “ என்று அவன் சொல்லும் போதே காவல் துறை ஆட்கள் வந்து அவனை கொத்தாக பிடித்தனர்..

குமார் “ இவன் என்னடா ரொம்ப படம் பார்ப்பான் போல இருக்கே.. எவ்வளோ அடிச்சாலும் வசனம் பேசுறது மட்டும் குறையவே இல்லை “ என்று கூறியபடி சிரித்தான்..

“ஆமா டா ரொம்ப பேசுறான்… என்ன மித்துவை விட்டு ஒரு அடி குடுக்கலாம்னு பார்த்தா அவ கிட்ட கூட வரலை “ என்று கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே சுந்தர் தன்னை பிடித்தவர்களிடம் இருந்து திமிறி ஓடினான்…

“ டேய் அங்க பாரு “ என்று மனோ முன்னேறும் பொழுதே அந்த சம்பவம் நிகழ்ந்தது.. வேகமாய் ஓடிய சுந்தர் தனக்கெதிரே என்ன வருகிறது என்று கூட  அறியாமல் ஓடும் நேரம் அங்கே வேகமாய் வந்த மற்றொரு காவல் வண்டியில் மோதி கீழே விழுந்தான்..

மோதிய வேகத்தில் விழுந்தவன் அப்படியே அசைவின்றி கீழே விழுந்து கிடந்தான்.. தலையில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது.. சத்தம் கேட்டு வெளியே எட்டி பார்த்த மித்ரா அதிர்ந்து நின்றாள்..

மனோகரன் மற்றும் குமார் இருவரையும் சற்று தள்ளியே நிற்க சொல்லிவிட்டு அங்கிருந்த புலனாய்வு துறையினரும், காவல் துறை ஆட்களும் சுந்தரை பரிசோதித்தனர்..

இறுதியில் “ ஹி இஸ் டெட்” என்று கூறவுமே மனோ அருகில் சென்று பார்த்தான்.. அவன் மனமோ சொல்ல முடியாத ஒரு உணர்வை பிரதிபளித்தது. “ நாம் இவனுக்கு தண்டனை வாங்கி தர நினைக்க, விதி அவனுக்கு வேறு மாதிரி ஒரு தண்டனையை கொடுத்து விட்டது ” என்று எண்ணினான்..

“ சார் உங்க ஒத்துழைப்பிற்கு ரொம்ப தேங்க்ஸ்.. மேற்கொண்டு இதை நாங்க டீல் பண்ணிக்கிறோம். நீங்க வந்து பேசிக் பார்மாலிட்டி மட்டும் முடிங்க போதும்” என்று கூறிவிட்டு அனைவரும் சுந்தரின் உடலை தூக்கி வண்டியில் போட்டு நகர்ந்தனர்..

குமார் “ மனோ நீ மித்ரா கூட இரு, இல்லை உங்க வீட்டுக்கு போங்க இப்போ. நான் இவங்க கூட போய் என்ன செய்யணுமோ பண்ணுறேன். நீ கொஞ்சம் ப்ரீ ஆன பிறகு வா.. முதல்ல இங்க நடந்த எல்லாத்தையும் மினிஸ்டருக்கு சொல்லணும். பாவம் டா நல்ல மனுஷன் “ என்று கூறவும் மனோ சரியென தலை அசைத்தான்..

குமாரும் செல்லவும் வீட்டிற்குள் சென்றவன் “ ஹப்பா போர்களம் போல இருக்கு..” என்று எண்ணிக்கொண்டே அமைச்சர் தர்மதுரைக்கு அழைத்து விஷயத்தை கூறினான்..

அனைத்தையும் கேட்ட மனிதர் ஆடித்தான் போனார்.. இருக்காத எத்தனை ஆசையாய் சீராட்டி பாராட்டி அவனை பெற்று வளர்த்தார்.. வயோதிகமுன் முதுமையும் அவரை இன்னும் கலங்க வைத்தது.. ஆனாலும் தேற்றிக்கொண்டு

“ ஹ்ம்ம் வாழ்க்கை இது தான் தம்பி.. எந்த நேரத்தில் எப்போ நம்ம முடிவு இருக்கும்னு நமக்கு தெரியாது.. ஆனா வாழுற ஒவ்வொரு நிமிசமும் பயனுள்ளதா, நேர்மையா, உண்மையா வாழ்ந்து முடிக்கணும்.. என் மகனும் என்னை மாதிரியே இருப்பான்னு நினைச்சது என் தப்பு.”

“ அவனை கவனிக்காம விட்டது என் தப்பு. அவனால எத்தனையோ பேர் வாழ்க்கை ஒன்னுமில்லாம போயிருக்கு.. நல்ல வேலை மித்ரா உங்க மனைவியா அமைஞ்சது.. இல்லை பாவம் அந்த பொண்ணு வாழ்க்கை என்ன ஆகிருக்குமோ.. “ என்று கூறும் பொழுதே அவர் குரல் உடைந்தது..

என்ன இருந்தாலும் பெற்ற மனம் அல்லவா.. மலை போல நம்பி இருந்த மகன் இப்படி ஒரு கேடுகேட்டவனாய் இருப்பான் என்று அவர் கண்டாரா ?? இல்லை இப்படி ஒரு சாவு வரும் என்று அவர் நினைத்தாரா ??

“ சரி தம்பி லீகலா என்ன பண்ணணுமோ அதை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க இனிமேலாவது உங்க வாழ்கையை சந்தோசமா வாழுங்க..” என்று கூறி தொடர்பை துண்டித்தார்..

விஷயம் அறிந்த நளினாவோ ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை.. இந்த பாழாய் போனவனோடு வாழ்ந்த வாழ்க்கையில் நளினாவிற்கு கண்ணில் நீர் கூட வற்றிவிட்டது.. செய்தியை கேள்விபட்டதும் ஒரு சிறு அதிர்வு, அதன் பிறகு எதுவும், எந்த உணர்வும் அவள் முகம் பிரதிபலிக்கவில்லை..

கட்டிலில் தளர்ந்து போய் படுத்துகிடந்த தன் மகளிடம் சென்று அமர்ந்து விட்டாள். நளினாவின் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகிறது என்று அவளுக்கே புரியவில்லை.. சசுந்தர் அன்றே இறந்து விட்டான் என்று இருந்தவளுக்கு அவன் உயிரோடு இருக்கும் தகவலும் எந்த மாற்றத்தையும் தரவில்லை..

நளினாவை பொறுத்தவரை தன் கணவன் உயிரோடு இருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்றே..செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் எல்லாம் ஏற்கனவே செய்து முடித்தாயிற்று.. இனி செய்வதற்கு எதுவும் இல்லை. அழுவதற்கும் எதுவும் இல்லை.. அவளுக்கு இப்பொழுது இருக்கும் பெரும் நிம்மதி அவள் மகள் காவேரி எந்த பிரச்சனையும் இல்லாமல் தப்பிவிட்டாள். சிறு காயங்கள் தவிர வேறு எதுவும் இல்லை..

ஆனால் அந்த இளம் குருத்தின் மனம் என்ன பாடுபட்டு இருக்கும்.. ??? “ என் மகளுக்கு நான் எப்படி தைரியம் சொல்வேன் ???? அவளுக்கு வாழ்க்கை மேல இருக்கிற நம்பிக்கையே போயிடுச்சே.. பெத்த அப்பனே தன்னை இப்படி ஒரு அதலபாதாளத்தில் தள்ள பார்த்தா அவள் யாரை தான் நம்புவாள் இனி ???”

இப்படி பட்ட கேள்விகளே நளினாவின் மனதை ஆக்கிரமித்தன.. தன் மகளின் தலையை ஆதுரமாக தடவியபடி அமர்ந்து விட்டாள்.. “ வாழ்கை இனியாவது எனக்கும் என் மகளுக்கு ஒரு விடிவை தரட்டும் ஆண்டவா “ என்ற பிரார்த்தனையோடு.

பெற்ற கடனுக்காக அமைச்சரே அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் முன் நின்று முடித்தார்.. இத்தனை காலம் அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி அப்பழுக்கில்லாமல் நடந்து, நேர்மையானவர், நல்ல மனிதர் என்றெல்லாம் பெயரெடுத்தவர் இன்று தன் மகனின் செயலால் தலை குனிந்து நின்றார்..

ஆனாலும் ஏதோ ஒரு திடம் அவர் மனதுள் வாழ்வில் இதுவும் கடந்து போகும் என்று. இனி தன் பேத்தி, மற்றும் மருமகள் வாழ்கயையாவது சரி செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

இதெல்லாம் இப்படி அன்டந்து கொண்டிருக்க மனோவோ அங்கே மித்ராவை சமாதனம் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்..

“ டி மித்து ப்ளீஸ் டி… வலிக்கிறது டி “ என்று மனோ அலறுவதற்கு காரணம் அவனது மனைவியே.. சரமாரியாக அவனை தோள்களில் அடித்துக்கொண்டு இருந்தாள்..

“ அப்போ அப்போ உங்களுக்கு முன்னமே அவன் சாகலைன்னு தெரியும் அப்படிதானே “

“ ஆமாம்… டி ப்ளீஸ் கில்லாத”

“ அப்போ தெரிஞ்சும் என்னைய அங்க இருக்க ஏன் விட்டிங்க ??? இதுல என்னைய வைச்சு தான் பிளானே போட்டு இருக்கீங்க இல்லையா ??? பறந்த தோட்டாலா ஒன்னு உங்கமேலையோ இல்ல என் மேலையோ பட்டு இருந்தா என்ன ஆகியிருக்கும் “

“ அதெல்லாம் ஒன்னும் ஆகாது “ என்றான் திட்டவட்டமாய்.. அவனது உறுதியான பதிலை கண்டு

“ அதெப்படி அவ்வளோ உறுதியா சொல்றிங்க ???”

“ அது.. அது வந்து மித்து.. நான், அப்புறம் அந்த ஆபீசர்ஸ் எல்லாம் இங்க ப்ராக்டிஸ் பண்ணுனோம்”

“ என்ன ப்ராக்டிஸ்ஸா??? புரியலை “

“ அதான் டி, சுந்தர இங்க வருவான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.. அப்படியே இல்லைனாலும் அவனை இங்க வரவச்சு இருப்போம். சோ, அவன் வந்தா எப்படி எப்படி நடந்துக்கணும்னு இங்க ஒரு ரிகர்சல் பார்த்தோம் “ என்றான் மனோ சாதரணமாக..

“ என்ன ரிகர்சல் பார்த்திங்களா ??? டேய் எல்லாம் டான்ஸ் ப்ரோக்ராமா பண்ண போறீங்க ரிகர்சல் பார்க்க. அதுசரி பயத்துல நின்னவ நான்தானே.. ச்சே.. எல்லாம் பிராட்.. ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லி கூப்பிட்டு வந்திருக்கலாம்ல..”

“ அடடா மித்து பேபி.. உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல மா.. நீ வேற லைப்ல த்ரில் இல்லன்னு சொல்லிட்டு இருந்தியா அதான் கொஞ்சம் உனக்கும் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு. அதுவும் இல்லாம உன்கிட்ட சொல்லி இருந்தா நீ பயதுலையே எல்லாத்தையும் சொதப்பி இருப்ப “

“ என்ன பார்க்கிற.. துப்பாக்கி முனையில அவனை நிக்க வச்சிருக்கேன், அப்பகூட பல்லி மாதிரி சுவத்துல போய் ஒட்டிகிட்ட.. வந்து அவனை நாலு சாத்து சாத்தி இருக்கலாம்ல “

மனோகரன் கூறியதை கேட்டு மித்ராவின் முகத்தில் ஒரு சிறு புன்னகை ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் “ ஹ்ம்ம் மனு என்னை பொறுத்தவரை அந்த, அவன் சுந்தர் எல்லாம் ஒரு மனித பிறவியே கிடையாது.. அப்படி இருக்கும் போது நான் அவனை என் கையால தொட்டு அடிக்கனுமா ?? சொல்லுங்க..”                            

 “ ஹ்ம்ம் நீ சொல்லுறதும் சரிதான் மித்து.. ச்சி ச்சி அவன் எல்லாம் ஒரு மனுசன்.. என்னமா ஆடுனான்.. இப்போ பாரு அவன் எதிர் பார்க்காத நேரத்தில் அவன் உயர் அவனுக்கே இல்லாம போயிடுச்சு.. எத்தனை பேரோட உயிரை எல்லாம் இவன் விலை பேசியிருப்பான்.. இப்போ இவனே இப்படி செத்துட்டான்.” என்று அவன் கூறும் பொழுதே மித்ரா அங்கே சுற்றும் முற்றும் கவனித்தாள்..

மனோ நினைத்தது போல அவ்விடம் போர் களமாகத்தான் காட்சி அளித்தது.. அவளது பார்வையை உணர்ந்த மனோ

“ சரி மித்து இங்க நம்ம இருக்க வேண்டாம்.. கிளம்பலாம் “ என்று கூறவும் விலுக்கென்று திரும்பி முறைத்தாள்.           

“ என்ன மித்து ??” என்று கேட்கவும் பதிலேதும் சொல்லாமல் கைகளை கட்டி அமர்ந்தே விட்டாள்.

“ ஏன் டி  இப்படி இடுத்தம் பண்ணுற ??? வா வீட்டுக்கு போகலாம் .. கிளம்பு டி.. இங்க பாரு இந்த இடமே எப்படி இருக்குன்னு”

அவனை முறைத்தவள் “ எப்படி இருக்கு ??? நானா இங்க எல்லாத்தையும் இழுத்து போட்டேன்.. துப்பாக்கி வச்சு நானா எல்லாரையும் சுட்டு தள்ளுனேன்.. எனக்கு அதெல்லாம் தெரியாது, நான் வர முடியாது “

“ இப்படி சொன்னா எப்படி மித்து.. சரி சரி முறைக்காத. இரு இரு கிளீன் பண்ண வீட்டில் இருந்து யாரையாவது வர சொல்றேன் “

“ ஏன் ?? உங்களுக்கு கை இல்லையா ??? சுட மட்டும் தெரிஞ்சது, இழுத்து போட்ட எல்லாத்தையும் சுத்தம் பண்ண தெரியாதா??? ஒரு வாரம் இங்க இருக்கலாம்னு தானே கூட்டி வந்திங்க.. நான் இங்க இருந்து நகர மாட்டேன் “ என்று மீண்டும் அழுத்தமாய் அமர்ந்துக்கொண்டாள்..

“ என்ன நானா ??? நான் இதை எல்லாம் கிளீன் செய்யனுமா ?? ஒய் எந்திரி டி.. கிளம்பு “ என்று அவள் கைகள் பிடித்து இழுத்தான். ஆனால் அவனால் இழுக்க மட்டுமே முடிந்தது..

“ ஷ்ஷ்!! அத்தனை பேரையும் ஒருத்தனா சமாளிக்க முடிஞ்சது.. ஆனா இவ ஒருத்திய சமாளிக்க முடியலையே “ என்று புலம்பியபடி “ மித்து “ என்றான்..

“ என்ன “

“ ப்ளீஸ்… டி  “

“ ம்ம் எல்லா பிளானும் பக்காவா போட்டேன்னு பெருமையா சொல்லிட்டு இருந்திங்களே, இது தான் உங்க பிளான்ல லாஸ்ட் ஒன், சோ நீங்க தான் கிளீன் செய்யணும், எனக்கு நடந்தது எல்லாம் பார்த்து தலை வலியா இருக்கு. நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் “ என்று கூறியபடி உள்ளே சென்றுவிட்டாள்..

அத்தனை நபர்களை மிக சுலபமாக சரி கட்டியவன், இன்று தான் தாலி கட்டிய மனைவியை சரிகட்ட முடியாமல் திகைத்து நின்றான் ஒரு சிறு புன்னகையோடு …                        

என்னென்ன சாகசம் செய்தாய்

என்னை உன்னவளாக்க..

தடைகள் பல வந்தாலும்

தகர்த்தெறிந்து தடம் பதித்தாய்

என் நெஞ்சில்…

காதலோடு கரம் கோர்த்து                                                        

கண்களோடு உறவாடி

உன் மடிமீது தலை சாய

வரம் வாங்கி வந்தவள்

நான் தானே…

       

                     மாயம் – தொடரும்.                                        

     

   

 

Advertisement