Advertisement

                       மாயவனோ !! தூயவனோ – 27

மித்ரா இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று மனோகரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. அவளையே பார்த்தபடி இருந்தான்.. அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் போனாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளி

“ என்ன மனு நான் தான் கேட்கிறேனே.. இத்தனை நாள் நான் இருந்த இடம் தெரியாதுன்னு நீங்க சொன்னா அது கொஞ்சம் கூட நம்புவது மாதிரி இல்லையே “ என்று தன புருவம் உயர்த்தினாள்..

மனோ ஒரு புன்னகை புரிந்து “ ம்ம்… உன் கேள்வி எல்லாம் சரிதான் மித்து. ஆனா கேள்வி கேட்கிற நேரம் தான் சரியில்லை.. இப்போ மணி என்ன தெரியுமா நாடு ராத்திரி மூணு.. இந்நேரம் முழிச்சு இப்படி கேள்வி பதில் செசன் நடத்துறது நீயாதான் இருக்கனும்..” என்றான்

“ ஹலோ ஹலோ சார்… முதல்ல ஆரம்பித்தது நீங்க தான். நான் இல்லை சரியா.. சரி ரொம்ப வெட்கப்படுரிங்களே , ஒரு வேலை ஸ்டார்டிங் ப்ரோப்லேம்  போலன்னு நானா தான் ஒரு ஒரு ஸ்டெப் முன்ன வைக்கிறேன் எல்லாத்திலையும் “ என்றாள் அந்த எல்லாத்திலையும் சற்று அழுத்தம் கொடுத்து..

அவனுக்கு புரிந்தது.. தன் கூச்சம் விட்டு, வெட்கம் விலக்கி, மனதில் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் தேவையில்லை என்று முடிவு எடுத்து, தன் கணவனின் காதல் மட்டுமே போதும் என்று அவள் தானே அவனை நெருங்கினாள்..

மனோ நினைத்துகொண்டான் “ இனி ஆயுள் முழுவதும் இதை சொல்லியே இவள் கேலி செய்வாள் “ என்று                   

“ என்ன பதிலையே காணோம் ??”

“ ஹ்ம்ம் ஒண்ணுமில்ல மித்து.. இப்போ நேரம் ரொம்ப ஆயுடுச்சு.. தூங்கலாம் சரியா.. தென் காலையில நம்ம ஒரு இடத்துக்கு போறோம்.. சோ சீக்கிரம் எழுந்து ரெடி ஆகணும் “ என்று கூறி அவன் படுத்தான்..

“ம்ம்ச்.. உங்களுக்கே இதே வேலையா போச்சு.. சரி நாளைக்கு எங்க போறோம் அதையாவது சொல்லுங்க “ என்று மனைவியாய் அவனிடம் வயாடினாள்..

“ அது தான் உனக்கே நாளைக்கு தெரியுமே.. சோ இப்போ பேசாம தூங்கு “ என்று அவளை இழுத்து தன் மீது சரித்து கொண்டான்..

“ம்ம்ச் மனு.. திஸ் இஸ் டூ மச்.. கல்யாணம் ஆனப்ப தான் என்கிட்டே எதுவும் சொல்லாம இருந்திங்க.. இப்போ தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சே.. இப்போ கூட எங்க போறோம்னு சொல்ல கூடாதா ??? ” சிணுங்கினாள்..

“ ம்ம்ம் “ என்று யோசித்தவன் “ சொல்ல கூடாது “ என்றான் ரகசியமாய்..

“ம்ம்ச் “

“ என்ன டி நீ… பேசாம தூங்கு.. நீ குடுத்த போதையில என்னால கண்ணு கூட திறக்க முடியல பாரு “ என்ற படி அவளை இறுக்கி அணைத்தவன் மேற்கொண்டு அவளை பேச விடவில்லை..

“ இதுக்கு மட்டும் நேரம் ஆகலையா “ என்று முனுமுனுத்தவள் அவனுள் மூழ்கி போனாள்..

தன் காதருகில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்கவும் அடித்து பிடித்து எழுந்து பார்த்தாள் மித்ரா. அவள் முன்னே மனோ வெளியே கிளம்புவதற்கு தயாராய் நின்று இருந்தான்.. தன் இனிய தூக்கம் கலைந்த கடுப்பில் அவனை பார்த்து முறைத்தாள்.. ஆனாலும் ஏனோ அவளுக்கு எழ மனமில்லை..

“சரியான கும்பகர்னி போல டி நீ.. இவ்வளோ நேரம் எழுப்பியும் கொஞ்சம் கூட அசையாம படுத்து இருக்க. நேத்தே சொன்னேன்ல சீக்கிரம் கிளம்பனும்னு.. கம்மான்.. கெட் அப்..” என்று கைகளை நீட்டினான்..

“ம்ம்ஹு ம்ம்ஹு மனு இன்னும் ஒரு பத்தே பத்து நிமிஷம் “ என்று மீண்டும் படுத்தவளை மனோ குண்டு கட்டாக தூக்கி குளியல் அறையில் விட்டான்..

“ ஒழுங்கா குளிச்சிட்டு வா.. உள்ள நின்னு ஏதா அடம் பண்ண அப்புறம் நானே குளிப்பாட்டிருவேன்” என்று மிரட்டிவிட்டு செல்பவனை முறைத்து பார்த்தாள்..

“ திமிர்.. திமிர்.. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் எல்லாம் திமிர்.. ரொம்ப அடாவடித்தனம் கூடி போயிருச்சு “ என்று அவனை செல்லமாக கடிந்தபடி குளித்து முடித்து வெளியே வந்தாள்..

“ சீக்கிரம் சீக்கிரம் மித்து “ என்று அவன் அவசரம் தாங்க முடியாமல் ஏனோ தானோ என்று கிளம்பினாள்.. அவள் அமைதியாக இருப்பதை பார்த்த மனோ

“  மித்து டியர்.. இத்தனை நாள் பொறுத்த, இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டியா ?? உன்கிட்ட சொல்லாம நான் யார் கிட்ட சொல்வேன் சொல்லு “ என்று அவளை சமாதானம் செய்தபடி வண்டியில் ஏறினான்..

“ ம்ம்ம் என்னவோ நீங்க சொல்றிங்க அதை நானும் கேட்டுக்கிறேன். ஆனா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை மனு..   ” என்று முகம் திருப்பி அமர்ந்தாள்..

“ சரி சரி நல்ல பொண்ணுல சிரிச்சுக்கிட்டே வா.. நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல இப்போதான் நிம்மதியா வெளிய போறோம் “ என்று அவன் கூறவும், மித்ரவிற்கும் மனம் சிறிது இளகியது..

“ ம்ம் “ என்று கூறி அவனிடம் வேறு எதுவும் பேசாமல் வந்தாள்..

மனோ  தன் வண்டியை சென்று நிறுத்திய இடம்  திருமணம் முடிந்து முதல் நாள் மித்ரா வந்த அந்த பண்ணை வீடு.. அப்பொழுதே அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அப்பொழுது அதை எல்லாம் ரசிக்கும் சூழ்நிலையில் இல்லை..

ஆனால் இன்று தன் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து முதல் முதலாய் தன் கணவனோடு வந்து இருக்கிறாள். இந்த எண்ணமே அவள் மனதில் மகிழ்ச்சியை தந்தது..

“ மனு “ என்று அவனை பார்த்து சந்தோசமாய் சிரித்தாள்..

“ ஹ்ம்ம்.. இப்போ உனக்கு சந்தோசமா மித்து…  வீட்டிலையே எங்க போறோம்னு சொல்லி இருந்தா உனக்கு இவ்வளோ ஹாப்பி வந்திருக்குமா ?? எப்படி என் சர்ப்ரைஸ் ???“  என்று அவனும் மகிழ்ச்சியாய் கேள்வி கேட்டான்..

“ ஹ்ம்ம் நான் இதை கொஞ்சம் கூட, இங்க வருவோம்னு நான் நினைக்கலை மனு.. முதல் தடவ இங்க வந்தபோதே எனக்கு இந்த வீடு, இந்த இடம் எல்லாம் ரொம்ப பிடிச்சது.. ஆனா என்னைய மருது அண்ணன் வெளிய நின்னு பார்க்க கூட விடலை.. “

“ ஹ்ம்ம் எல்லாத்துக்கும் சாரி மித்து..” என்றான் ஒரு மாதிரி குரலில்..

“ ம்ம்ச் என்ன மனு… நமக்குள்ள நோ சாரி நோ தேங்க்ஸ்.. இப்போ நான் தாங்க்ஸ் சொன்னேனா இங்க என்னை கூட்டி வந்ததுக்கு இல்லைல “

மனோவிற்கு அப்பொழுதுதான் புரிந்தது, மித்ரா தன்னை மிகவும்.. மிகவும் விரும்புகிறாள் என்று.. எல்லை கடந்த நேசம், எந்த விதமான பேதங்களும் மனதில் இல்லாமல் தன் இணையோடு கலக்க துடிக்கும் அளவு காதல்..

“ ம்ம் சரி மித்து.. இனிமே நமக்குள்ள நோ தேங்க்ஸ்.. நோ சாரி… சரி இப்படியே எவ்வளோ நேரம் இங்க வெளிய நின்னு பார்த்துக்கிட்டு இருக்க போற ?? உள்ள போகலாம் வா “

“ என்ன மனு.. இப்போ பாருங்க இப்பதான் செடி எல்லாம் நல்லா வளர்ந்து இருக்கு.. கொஞ்ச நேரம் பார்க்க விடுங்க மனு.. அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவிங்க “ என்று சிணுங்கினாள்..

“ அடடா… மித்து… நம்ம இங்க தான் ஒரு.. ஒரு வாரம் இருக்க போறோம்.. நல்லா ஜாலியா.. ப்ரீயா… “ என்றான் அவளை பார்த்து கண் சிமிட்டி..

“ ஹா!!!! நிஜமாவா மனு.. உங்.. உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா என்ன ??? ஒரு வாரம்.. ஏழு நாள்.. அடேங்கப்பா… “  என்று வாய் பிளந்தாள்..

“ போதும் உள்ள பூச்சி போயிட போகுது,.. இப்போ உள்ள போகலம்.. ஒருவாரமும் நிதானமா தோட்டத்தை ரசிக்கலாம்.. என்ன ” என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றான்..

அந்த பண்ணை வீடு மிகவும் சுத்தமாக இருந்தது.. அவர்கள் அங்கே ஒரு வாரத்திற்கு தங்குவதற்கான அனைத்து பொருட்களும் இருந்தன.. காய்கறிகள் கூட புதிதாய் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது.. இதை எல்லாம் பார்த்த மித்ரா மனோவை திகைத்து பார்த்தாள்..

“ என்ன மித்து அப்படி பாக்குற.. நீ உன் அப்பா அம்மா கூட போகாம இருக்கும் பொழுதே உன்னைய இங்க கூட்டி வரணும்னு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.. “

“ ஹ்ம்ம் இங்க வந்து நம்ம ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி, அதுக்கப்புறம் தான் நம்ம வாழ்க்கையோட அடுத்த நிலைக்கு போகணும்னு நான் இருந்தேன்.. ஆனா மேடம் எங்க இதுக்கெல்லாம் விட்டிங்க ??”

“ ஹப்ப்பா என்ன அதிரடி.. நல்ல வேலை நமக்குள்ள அடிதடி நடக்கலை.. ஆனா எப்படி மித்து உனக்கு என்கிட்டே எந்த விளக்கமும் கேட்காம என்கூட.. என் கூட.. உன்னால சேர முடிஞ்சது??? ” என்று அவள் கண்களை பார்த்து வினவினான்..

 மெல்ல ஒரு புன்னகை புரிந்து “ ஹ்ம்ம் உண்மையான காதலுக்கு வார்த்தைகளும், விளக்கங்களும் தேவை இல்லை மனு.. ஒரு பார்வை, போதும்.. நீங்க என்கிட்ட கேள்வி கேட்டிங்களா?? கேள்வி கேட்டா என்னைய கூட்டி வந்திங்க இல்லையே.. எதுவும் கேட்காமல் தானே வயலூர்ல இருந்து கூப்பிட்டு வந்திங்க.. அப்போ உங்க காதல் மட்டும் பெரிசு. என் காதல் மட்டும் சின்னதா ??” என்று வேண்டுமென்றே அவளை சீண்டினாள்…

அவள் முதலில் கூறிய வார்த்தைகள் எல்லாம் மனோவின் மனதில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.. இதை.. இதை தானே எதிர் பார்த்தான் அவன்.. அவன் எப்படி மித்ராவிடம் காதல் கொண்டானோ, அதே போல் அவளும் தன்னை நேசிக்க வேண்டும் என்று தானே எதிர்பார்த்தான்.. இப்பொழுது நிகழ்ந்து இருப்பதும் அது தானே..

அவள் மனோகரனிடம் எதையும் எதிர்பார்க்காமல் தானே தன்னை ஒப்படைத்தாள்..  இதை எல்லாம் நினைக்கும் பொழுது மனோவின் மனம் தன் மனைவியின் காதலை எண்ணி பெருமிதம் கொண்டது.. ஆனால் அதை வெளி காட்டாமல்

“ அடடா மித்து.. நம்ம ரெண்டு பெரும் கணவன் மனைவி.. இதுல உன் காதல், என் காதல்னு ஏன் பிரிச்சு பேசுற ??? நம்ம காதல் டி “ என்று அவனை தன்னோடு சேர்த்து இறுக்கினான்..

“சரி சரி போதும்.. நம்ம காதல் தான்.. நான் இல்லைனு சொல்லல.. நேத்து நான் ஒரு கேள்வி கேட்டேன் மனு.. நீங்க இன்னும் அதுக்கான பதில் சொல்லல..”

“ ஹ்ம்ம் விடமாட்டியே… சரி இப்படி வா.. இப்படி வந்து உட்கார் மித்து.. “ என்று கூறி ஒரு சிறு அமைதி காத்தான்.. “ ஹ்ம்ம் உனக்கு முழுசா சொன்னாதான் மித்து புரியும்.. ஆனா நீ என்னைய சரியா புரிஞ்சுக்கணும் “ என்று கூறியவன் மேற்கொண்டு பேச ஆரம்பித்தான்..

“ அன்னிக்கு உன்னைய ரீனா வீட்டுல விட்டு போகவே மனசு இல்ல மித்து.. இத்தனை நாள் பாதுகாத்து வச்சிட்டு கடைசி நேரத்துல உன்கூட என்னால இருக்க முடியலை.. ஆனா நான் அன்னிக்கு போயே ஆக வேண்டிய நிலைமை.. ஆபிஸ்ல இருந்து போன் வரவும் எனக்கு முதலில் என்ன செய்யுறதுன்னே தெரியல மித்து.. திவாக்கு போன் பண்ணி அவன் வேலை முடிஞ்சதும்  உன்னைய பத்திரமா கூட்டி வர சொன்னேன் ”

“அங்க போய் பார்த்தா அந்த வாரம் அனுப்ப வேண்டிய எல்லா டெலிவெரி பொருளும் பாதியில நிக்கிது.. அப்புறம் ஒரு வழியா வோர்கர்ஸ் கிட்ட மூணு ஸிப்ட்கு பேசி முடிச்சு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு கொஞ்சம் வந்து உட்கார்ந்தா, மினிஸ்டரை பார்க்க போகணும் நேரம் ஆச்சுன்னு குமார் போன் பண்ணுனான்..”

“ சரின்னு வீட்டுக்கு போயி அங்க இருக்கிற எவிடன்ஸ் பேப்பர் எல்லாம் எடுத்துட்டு நானும் குமாரும் அமைச்சரை பார்க்க போனோம். அவர்கிட்ட போய் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு கூட எங்களுக்கு தெரியலை. ஆனாலும் மனசுல ஒரு திடம்.. இவ்வளோ தூரம் வந்துட்டோம் எப்படியாவது அவனை அந்த சுந்தரை பிடிச்சுடனும்னு..”

“ நாங்க சொல்லுறதை எல்லாம் கேட்க கேட்க அந்த அமைச்சர்க்கு ரொம்ப ஆச்சரியம்.. முதல்ல நம்ப கூட இல்லை.. ஆனா எங்க கிட்ட இருக்குற எல்லா ஆதாரமும் உண்மைன்னு அவர் நம்புன அப்புறம் தான் எங்க வார்த்தையை நம்ப ஆரம்பிச்சாரு.. அதுக்கு அந்த மாணிக்கமும் உதவினான். அதுக்கு அப்புறம் அவரே போலிஸ் கிட்ட பேசினாரு. ஒரு தனி படையே அமைச்சு அந்த சுந்தரை அவனுக்கு தெரியாம பாலோ பண்ணுனாங்க.. ”

“ கடைசியா அவர் பேத்தி, அதான் அந்த சுந்தரோட பொண்ணு காவேரி, அந்த பொன்னையே அவன் அந்த வெளிநாட்டு கும்பலுக்கு பலி குடுக்க போறான்னு தெரிஞ்ச உடனே அவர்னால தாங்க முடியல. இவ்வளோ பெரிய பதவியில் இருந்தும், தன் வீட்டில், தன் குடும்பத்தில், தன் மகன் செய்யும் அக்கிரமம்மே என் கண்ணனுக்கு தெரியாம போயிடுச்சேன்னு ரொம்ப வருத்த பட்டாரு.. ரெண்டு நாள்ல கையும் களவுமா அவனை பிடிக்க ஏற்பாடு பண்ணிட்டு ஒரு நிம்மதியோட வெளிய  வந்தா திவா கிட்ட இருந்து போன் “

“ அண்ணா அண்ணிய இங்க காணோம்.. அவங்க அப்பவே கிளம்பி போயிட்டாங்கன்னு ரீனாவும் ஆன்ட்டியும் சொல்றாங்கண்ணா..” என்று பதறினான்..

மனோவிற்கு இதை கேட்டதும் இதய துடிப்பே நின்றுவிட்டது.. “ என்.. என்னடா திவா சொல்லுற ??? நல்லா கேட்டியா ?? நீ.. நீ அங்கேயே இரு திவா “ என்று கூறியவன் அடுத்த இருபது நிமிடத்தில் அங்கே இருந்தான்.. வரும் வழியிலேயே மாணிக்கத்திற்கு அழைத்து மித்ராவை அந்த சுந்தர் ஏதாவது கடத்திவிட்டானா என்று விசாரித்தான். அவன் இல்லை என்று கூறவும் மனத்தில் மனோகரனின் மனதில் ஒரு சிறு நிம்மதி.  

ரீனாவும் நிர்மலாவும் கைகளை பிசைந்தபடி நின்று இருந்தனர்.. அவர்களின் மனமோ “ படுபாவி போனது தான் போனா அவங்க வீட்டில இருந்தபடி போயிருக்க கூடாதா ??  இனி அந்த மனோ வேற வந்து கேள்வி மேல கேள்வி கேட்பானே “ என்று எண்ணினர்..

புயல் வேகத்தில் மனோ உள்ளே வந்தான்.. திவா அவனிடம் நடந்ததை கூறவும் நேராக தாய்க்கும் மகளுக்கும் அருகில் நின்றான்.. “ உண்மைய சொல்லுங்க.. மித்து எங்க ???” என்று கர்ஜித்தான்..

இருவரும் திவாவிடம் என்ன கூறினரோ அதையே வார்த்தை மாறாமல் கூறினர்.. “ அண்ணா இவங்ககிட்ட கேட்டு எந்த பிரயோஜனமுன் இல்லை.. திரும்ப திரும்ப இதே தான் சொல்லுறாங்க.. ஒன்னு இவங்க அண்ணியை ஏதாவது சொல்லி விரட்டி இருக்கனும், இல்லை “ என்று மேற்கொண்டு கூற வந்த தம்பியை தன் பார்வையால் அடக்கினான்..

“ இல்லை திவா நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை.. இப்போ தான் விசாரிச்சேன்..  சரி உண்மையை சொல்லுங்க என் பொண்டாட்டி எங்க ?? நீங்க மட்டும் எதுவும் இப்போ சொல்லலைனா அப்புறம் அங்கிள்காக கூட பார்க்க மாட்டேன்.. உண்டு இல்லைன்னு செய்திடுவேன் “ என்று மிரட்டவும் ரீனா நடுங்கி போனாள்..

ஆனால்  நிர்மலா தன் தைரியத்தை மீட்டுகொண்டு “ மனோ சும்மா நீ சொன்னதையே சொல்லாதே.. எங்க பதில் இது தான். உன் பொண்டாட்டி ஏற்கனவே வெளியே போற ஏற்பாடோட தான் வந்திருப்பா போல.. அதான் நீ போன கொஞ்ச நேரத்திலேயே இங்க இருந்து அது இதுன்னு சாக்கு போக்கு சொல்லி கிளம்பிட்டா”

“ நம்புற மாதிரி இல்லையே நீங்க சொல்லுறது “

“ நீ நம்புனாலும் நம்பலைனாலும் இது தான் உண்மை.. இங்க பாரு நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு.. உங்க கல்யாணம் ஆச்சு.. நல்ல மனசோட விருந்துக்கு கூப்பிட்ட இப்படி எல்லாம் நடக்கும்ன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.. அப்பா சாமி உங்க சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம். என் மகளுக்கு ஒரு பள்ளிகூடத்துல வேலை கிடைச்சு இருக்கு. நாங்க ஊரை விட்டே கூட போயிடுறோம் “ என்று பொரிந்து தள்ளினார்..

இதை கேட்ட அண்ணன் தம்பி இருவருக்குமே அதிர்ச்சி “ என்ன பள்ளிகூடத்தில் வேலையா.. அதுவும் ரீனாவிற்க்கா??”

“ ஏன் ஏன் அவளுக்கு வேலை கிடைக்காதா ?? எங்க சர்ச்சில் இருக்கும் மதர் சிபாரிசின் பேருல வேலை கிடைச்சிருக்கு.. இப்போ வரைக்கும் அங்க வேண்டாம்னு தான் நினைச்சோம்.. ஆனா எப்போ எங்க மேலேயே உங்களுக்கு சந்தேகமோ இனி உங்க உறவே வேண்டாம் “ என்று நியாயவாதி போல பேசினார் நிர்மலா..

ஆனாலும் ஆண்கள் இருவரின் பார்வையும் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டியது. அதை உணர்ந்த நிர்மலா

“ ஏய் ரீனா.. நான் சொன்னா நம்ப மாட்டாங்க.. அந்த விசிடிங் கார்ட் எடுத்து காட்டு. வேணும்னா அந்த ஸ்கூல்க்கே கூட போன் பண்ணி கேட்கட்டும் “ என்று தன் தாய் கூறவும் ரீனா தான் தூக்கி எறிந்த கார்டை தேடினாள். அனால் அதுஅங்கு இருந்தால் தானே அவள் கையில் கிடைக்கும்..

“ அம்மா இந்த பக்கம் தான் மா தூக்கி போட்டேன் ஆனா காணோமே “ என்று கூறவும் மனோவின் மனதில் பொறி தட்டியது.. ஆனால் வெளியே காட்டமல் அவர்களை விசாரிப்பது போல எங்கே பள்ளிக்கூடம், என்ன இடம் அது இதென்று விசாரித்துக்கொண்டு

“ ஹ்ம்ம் சரி இப்போ நான் போறேன், ஆனா ஏதாவது விவரம் வேணுமின்னா கண்டிப்பா வருவேன் “ என்று போலிஸ் போல கூறி சென்றான்.. ஆனால் திவாவோ

“அண்ணா என்ன இப்படியே இவங்களை சும்மா விட்டு போறதா??” என்று வினவவும்

“ விடு திவா இவங்களுக்கு அந்த அளவிற்கு எல்லாம் தைரியம் இல்லை.. நம்ம வேற முயற்சி தான் செய்யணும் “ என்று கூறிவிட்டு குமாருக்கு அழைத்து பேசினான்..

கிருபாவும் பிரபாவும் சந்தோசமாக காத்திருந்தனர். அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தங்கள் அண்ணியை அண்ணன் அழைத்து வரபோகிறான் என்று. ஆனால் மனோவும் திவாவும் வந்து வியஷத்தை கூறவும் இருவருமே அதிர்ந்தனர். வீட்டிற்கு சென்ற பின் மித்ரா ஏதாவது எழுதி வைத்து இருக்கிறாளா என்றே மனோ முதலில் தேடினான்..   

பொன்னியை அழைத்து விசாரித்தான்.. வெகு நேரமாய் பூஜை அறையில் மித்ரா இருந்தாள் என்று பொன்னி கூறவும் பூஜை அறைக்கு விரைந்தான்.. அங்கே சாவி கொத்தின் கீழே அவள் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது.. கைகள் நடுங்க அதை எடுத்து படிதான்..

முதலில் அதில் இருந்த எதுவும் எதுவுமே அவன் மனதில் பதியவில்லை. ஆனால் அவன் உள் மனம் கூறியது இதில் வேறு எதுவோ இருக்கிறது என்று.. மீண்டும் மீண்டும் அக்கடிதத்தை படித்தான்.. ஏதோ புரிந்தது போல இருந்தது..

அக்கடிதத்தில் இருந்த கண்ணீர் துளிகளின் அச்சு அவனுக்கு இவ்வெழுதுக்களின் பின்னால் இருக்கும் விசயத்தை உணர்த்தியது.. ஆனாலும் தன்னவள் தன்னை விட்டு சென்று விட்டாள் என்ற துயரே அவனை போட்டு அழுத்தியது.. தன் அண்ணனை தேடி வந்த தம்பிகள் அவனது இறுகிய முகம் கண்டு அதிர்ந்து நின்றனர்..

கையில் இருக்கும் கடிதம் நழுவியது கூட தெரியாமல் மனோகரன் சோர்வுடன் தன் அறைக்கு சென்றான்.. அக்கடிதத்தை எடுத்து படித்த மற்ற மூவரும் எங்கே தன் அண்ணனிடம் போய் ஏதாவது கேள்வி கேட்டால் அவன் மனம் இன்னும் நோகுமோ என்று எண்ணி அமைதி காத்தனர்..

மனோவிற்கு என்ன செய்யவேண்டும் என்று முதலில் எதுவுமே தோன்றவில்லை.. அப்படியே சிலையென அமர்ந்து இருந்தான்..  அவன் மனமோ

“ மித்ரா போனால் என்ன நீ ஆரம்பித்த வேலையை முழுவதும் முடிக்க வேண்டும். அவள் பாதுகாப்பிற்கு நீ தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் அவளது பெற்றோர் வெளிநாட்டில் இருகின்றனர்.. அவள் போனாலும் நீ உன் கடைமையை செய் “ என்று கட்டளை இட்டது..

அடுத்த நொடியே மனோகரன் தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான்.. சில நொடிகளே அவன் யோசித்தது.. அதன் பின் தன் அலைபேசியில் யார் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசினான்.. இறுதியில் வயலூரில் இருக்கும் பள்ளிகூடத்தின் மதர் எண்ணை விசாரித்து  கண்டுபிடித்தான்.. உடனே அவருக்கு அழைத்து

“ ஹலோ மதர் “ என்று ஆரம்பித்து தன்னை அறிமுகபடுத்தி கொண்டான்.

“ மதர் முதல்ல என்னைய மன்னிக்கணும்.. நான்.. நான் இந்த நேரத்தில் உங்களை கூப்பிட்டு தொல்லை பண்ணிட்டேன். ஆனா எனக்கு வேறு வழியில்லை அதான் “ என்று ஆரம்பித்து சுருக்கமாக நடந்த அனைத்தையும் கூறினான்..

இறுதியில் “ மதர், என்னோட கடைசி நம்பிக்கை நீங்க தான்.. நாளைக்கு காலையில் என் மனைவி மித்ரா உங்களை சந்திக்க வருவாங்க.. அவளுக்கு வேலை இல்லையில்லைன்னு மட்டும் சொல்லி அனுப்பிடாதிங்க இந்த சூழ்நிலையில் மித்ரா இங்க இருந்தா அவ உயிருக்கே கூட ஆபத்தா இருக்கும்..”

….

“ அதுனால மதர் நானே அங்க வந்து அழைச்சுக்கிட்டு போற வரைக்கும் மித்ரா அங்க இருக்கட்டும்.. “

….

“ரொம்ப நன்றி மதர்.. அவளுக்கு தங்க ஒரு பாதுகாப்பான இடம் மட்டும் ஏற்பாடு பண்ணுங்க மதர். அவளோட மித்த பாதுகாப்பு எல்லாம் என்னோட பொறுப்பு.. மித்ராவுக்கே தெரியாம இப்போ மித்ராக்கு ரெண்டு பேர் அவளோட அங்கே வந்துகிட்டு இருக்காங்க.. சோ மித்ரா அங்க இருக்கிற வரைக்கும் அவளுக்கு எந்த பிரச்சனையும் வராது “ என்று கூறி பேசி முடித்தான்..

அனைத்தும் முடித்து கட்டிலில் விழுந்தவனுக்கு உடலும் மனதும் சோர்ந்து போயின.. தன் மனைவியை பற்றி வேறு எதுவும் வேறு யாரிடமும் அவன் கூறவில்லை. அவ்வளோ ஏன் தன் தம்பிகளிடம் கூட மித்ராவிற்கு தான் இத்தனை ஏற்பாடுகள் செய்து இருப்பதை கூறவில்லை..

அவனை பொறுத்தவரையில் அவள் மனம் தெளிய வேண்டும். அவள் மனதில் என்ன குழப்பம் இருந்தாலும், ஒரு வேலை அவள் எழுதி  வைத்திருப்பது போலவே வெறுப்பு இருந்தாலும், இந்த பிரிவு அவள் மனக்குமுறலை எல்லாம் நீக்கி அவன் மீது மித்ரா கொண்ட காதல் மட்டுமே நிரூபணம் ஆகவேண்டும் என்று எண்ணினான்.

இதை அனைத்தையும் கேட்ட மித்ரா அதிர்ச்சி, ஆச்சரியம் என அணைத்து உணர்வுகளையும் கலந்து கட்டி தன் முகத்தில் பிரதிபலித்தாள்..

“ என் .. என்ன மனு.. என்ன சொல்றிங்க ?? அப்.. அப்போ நான் அங்க போறதுக்கு முன்னமே என்னைய பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டிங்களா ??? “ என்று வாய் பிளந்தவளை பார்த்து ஆம் என்பது போல தலை ஆட்டினான்..

“ அப்போ நீங்க பேசினதுனால தான் மதர் எனக்கு வேலை குடுத்தாங்களா ??? எல்லாம்.. எல்லாமே உங்க ஏற்பாடு தானா ??” என்ற கேள்விக்கும் அவன் அதே போல தலையசைத்தான்.. இதை கேட்டவள் சிறு நொடியில் அவன் மார்பில் சராமாரியாக அடித்தாள்..

“ அப்புறம்.. ஏன் டா.. ஏன் அங்கேயே என்னைய இருக்கவிட்ட ??? நான் எப்படி எல்லாம் தவிச்சு இருப்பேன் தெரியுமா ?? ஒவ்வொரு நிமிசமும் எப்படி துடிச்சேன் தெரியுமா “ என்று கூறியபடி அடித்தவளை தன்பலம் கொண்டு அடக்கினான்.

“ ஸ்ஸ்ஸ்.. என்ன டி நீ இப்படி சாத்துற … முன்னாடியே தெரிஞ்சா அந்த சுந்தரை உன் கையாள நாலு அடி வாங்க வச்சிருப்பேனே “ என்று சிரித்தவன்தன் கைகளுக்குள் அவளை நிறுத்தினான்

“ முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ மித்து பிரிவு என்பது நீ எடுத்த முடிவு. அது தற்காலிகமா இல்லை நிரந்தரமா அப்படின்னு எல்லாம் எனக்கு தெரியாது.. ஆனா அதுக்காக நான் என் கடைமையில் இருந்து விலக முடியாதே, அதான் உன் பாதுகாப்பிற்கு ஏற்பாடு பண்ணேன்.  “

“ அப்புறம் தவிச்சேன் துடிச்சேன்னு சொன்னியே, ஏன் டி நான் மட்டும் இங்க நிம்மதியாவா இருந்தேன்.. என்னைய பொறுத்தவரைக்கும் உனக்கு ஒரு தெளிவு கிடைக்கணும்னு நினைச்சேன்.. அதுக்கான அவகாசம் தான் இது.. அங்க உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு இங்க தகவல் வந்துகிட்டே இருக்கும் மித்து.. நீ ரொம்ப வருத்தபடுறன்னு மதர் சொன்னாங்க. ”

“ அப்புறம் ஒன்னு நானா வந்து கூப்பிட்டா  நீ வரமாட்ட, அதுனால தான் கிருபா பிரபாவ அங்க அனுப்பினேன்.. ஆனா மேடம் சத்தியம் வாங்கி  அவங்க கைய கட்டி போட நினைச்ச.. ஹ்ம்ம் நீ அங்க இருந்து நகர மாட்டன்னு தெரியவும் தான் நானே வந்தேன்.. ஆனா மித்து சும்மா சொல்ல கூடாது கண்ணு முழிச்சு என்னை ஒரு பார்வை பார்த்த பாரு.. ஹா ஹா ஹா “ என்று சிரித்தான்.

ஆனால் மித்ராவோ இன்னும் பிரமிப்பு மாறாமல் அப்படியே அவன் முகத்தை மட்டும் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் அமைதியாக.. மனோவின் ஒவ்வொரு செயலும் சிந்தனையும், தனக்காக என்று என்னும் பொழுதே அவள் மனம் தன் கணவனை எண்ணி கர்வம் கொண்டது..

“ என்ன மித்து “ என்று அவளை உசுப்பினான்..

“ மனு “ என்று அவனை அணைத்துக்கொண்டாள்..

“ என்னால.. என்னால தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் இல்லையா மனு.. எப்படி மனு நீங்க மட்டும் இப்படி எல்லாம் “ என்று கூறியவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை… அவன் மார்பில் அமைதியாக ஒண்டினாள்..

“ என்ன  மித்து இதுக்கே இப்படி ரியாக்ட் பண்ணுனா, இன்னும் முழுசா சொன்னா என்ன செய்வ?? ஹ்ம்ம் இன்னும் உனக்கு அந்த சுந்தருக்கு என்ன ஆச்சுன்னு தெரியாதே “

“ போதும் மனு.. எனக்கு இதுவே போதும்.. அவன்.. அவனுக்கு என்ன ஆனா எனக்கு என்ன ??? என் மனு கூட இப்போ நான் இருக்கேன்.. எனக்கு அதுவே போதும்.. “ என்று கூருபவளிடம் எதுவோ கூற வாய் திறந்தான்..

ஆனால் தட தடவென்ற ஏதோ சத்தம் கேட்டு அமைதியானான். அவன் காதுகளும் மூளையும் கூர்மை அடைந்தது.. என்ன நடக்கிறது என்று புரியாமல் மித்ரா திகைத்தாள்… 

                            

என் நிழலும் நீயும் வேறில்லை..

உன்னோடு இருந்தாலும்

விலகி சென்றாலும்

உடன் வருவதில் உனக்கு                                                                      

நிகர் யாரும் இல்லை..

என் கண்களின் இமை போலே

என் இதயத்தின் இனிமை நீ..                                                      

             

                              மாயம்-தொடரும்

Advertisement