Advertisement

மாயவனோ !! தூயவனோ –  26

 “ மித்து… “

 “ம்ம் “

“ எழுந்திரி மித்து…. மழை ரொம்ப அடிக்கிது “

“ம்ம்ஹும் “

“ சொன்னா கேளு டி… எப்ப பாரு பிடிவாதம்.. “ என்று சற்றே மனோ அதட்டவும் அவன் மார்பில் சாய்ந்து இருந்த மித்ரா நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

“ என்ன பார்வை… வா உள்ள போகலாம்.. பாரு டிரஸ் எல்லாம் ஈரமா போயிடுச்சு.. “ என்று கூறியபடியே அவன் எழவும்..

“ ஹ்ம்ம் நீங்க எல்லாம் என்னதான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிங்களோ.. கொஞ்சம் கூட ரொமான்ஸ் பண்ணவே தெரியல “ என்று முனுமுனுத்தபடி எழுந்தாள்..

அவள் சொன்னது தெளிவாய் கேட்டாலும் “ என்ன டி அங்க முனுமுனுப்பு ??” என்றான் அவளை தன்னோடு இறுக்கியபடி..

“ இதுகொன்னும் கொறைச்சல் இல்லை “ என்று எண்ணிவிட்டு “ ஒண்ணுமில்லை “ என்று பதில் கூறினாள்..

“ எப்பையும் உனக்கு அறிவு கொஞ்சம் கம்மின்னு அப்பப்போ ப்ரூப் பண்ணுற மித்து” என்றான் மெல்ல நகைத்தபடி..

“ வாட் !!!!!”

“ ஆமா டி என் மக்கு பொண்டாட்டி “

“ ம்ம்ச் மனு.. வேண்டாம் என்னைய இப்படி வம்பு பண்ணுற வேலை எல்லாம் வேண்டாம் “

“ ஆமாமா எனக்கு வேற வேலையே இல்ல பாரு.. “ என்று இருவரும் வம்பளத்தப்படி தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.. மித்ராவிற்கு அப்பொழுது தான் உரைத்தது இத்தனை நேரம் அவர்களுக்குள் நடந்தது என்னவென்று..

“ச்சி இப்படியா பால்கனியில பண்ணுறது…” என்று நினைத்து முகம் சிவந்தாள்.. அவளது முகத்தையே பார்த்தபடி இருந்தவன்

“ ஹலோ ஹலோ மேடம்.. நடந்தது எதுக்கும் நான் பொறுப்பில்ல.. நான் சின்ன பையன்.. தனியா படுத்து இருந்தவனை நீ தான் வந்து மயக்கிட்ட “ என்று வேண்டுமென்றே வாயில் விரல் வைத்து கடித்தான்..

“ ச்சி… மனு “ என்று அவனை ஒரு அடி அடித்துவிட்டு வேகமாக குளியலறை நுழைந்துவிட்டாள்.. அவள் செல்வதையே பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டான்..

எத்தனை நாள், இந்த ஒரு பொழுதுக்காக ஏங்கி இருப்பான்…?? “ நீ எந்த நேரத்தில் எப்படி நடந்துப்பன்னு நினைச்சு பார்க்கவே முடியல மித்து “ என்று தானாக கூறிகொண்டான்..

அவள் குளித்து வேறு உடை மாற்றி வரவும் மனோவும் வேறு உடை மாற்றி வந்தான்.. பிறகு தான் நினைத்ததை அவளிடமே கேட்டான்..

“ உன்னைய புரிஞ்சுக்கவே முடியல மித்து “

“ ஏன் ??? “

“ ஆமா, நீ என்கிட்டே நெருங்கிட்ட, நம்ம காதல் ஜெயிக்க போகிறதுன்னு சந்தோசத்துல இருந்தப்போ சொல்லாம கொல்லாம இங்க இருந்து போயிட்ட.. இப்போ நானே எதிர்பார்க்காத நேரத்துல என்னோட கலந்துட்ட.. அதான் எனக்கே ஆச்சரியாம இருக்கு.. சொல் மித்து உன் மனசுல என்னதான் இருக்கு ??“               

அவனது தோள்களில் சாய்ந்து அமர்ந்தவள் சிறிது மௌனம் காத்தாள்.. அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல்

“ ஏன் மனு நிஜமவே நான் இங்க இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா ??? அதான் அம்மா கூட போக சொன்னிங்களா ??”

“ நான் என்ன கேட்கிறேன் இவள் என்ன கேட்கிறாள் “ என்று எண்ணியவன் ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டு “ ஹ்ம்ம் உனக்கு அப்படி தோணுதா ??” என்றான்

“ கேள்வி கேட்டா பதில் தான் சொல்லணும் மனு.. பதிலுக்கு கேள்வியே சொல்ல கூடாது..”

“ அதை யாரு சொல்லுறது.. “

“ நான் தான்.. நானே தான்.. சொல்லுங்க மனு.. நான் அம்மா கூட போயிருந்தா ??”

“ நீ போயிருக்க மாட்ட மித்து…” அவனை அதிர்ந்து பார்த்தவள் “ எப்படி சொல்றிங்க “

“அது அப்படி தான்… சில விசயங்கள் என் உள்ளுணர்வு சொல்லிடும்..”

“ ஓ !!”

“எஸ் மித்து.. உன்னைய முதல் தடவை பார்க்கும் போது, இவதாண்டா உனக்குன்னு பிறந்தவள்னு என் மனசு சொன்னது.. இப்போ அது உண்மையாகலையா என்ன ??” என்று கூறி அவள் விழிகளை பார்த்தான்..

மித்து புரிந்துகொண்டாள், மனோ அனைத்தையும் பேசி முடித்துவிட எண்ணுகிறான் என்று. ஆனாலும் அதை வெளிகாட்டாமல் “ எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு மனு..” என்றாள் அழுகையாய்..

“ வருத்தமா ??? ஏன் ??”

“ ம்ம்ச்.. நம்ம லவ் பண்ணி அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கலாம்.. ஹ்ம்ம் ஒரு த்ரில் இருக்கும்ல “ என்று கூறி சிரித்தவள், மனதில் ” என் கல்யாணமே த்ரில்லா தான் நடந்தது” என்று எண்ணிக்கொண்டாள்..

அவளை ஒரு பார்வை பார்த்து “ அதுக்கென்ன மித்து அதுக்கெல்லாம் சேர்த்து இப்போ, இனிமேல், இனி எப்பொழுதுமே லவ் பண்ணலாம்.. ஆனா இந்த த்ரில் தான் கொஞ்சம் இடிக்கிது “ என்றான்.

“ ஏனோ ??”

“ நம்ம கல்யாணம் நடந்ததே செம த்ரில் தான் மித்து.. இந்த நிமிஷம் வரைக்கும் எதிர் பார்க்காத விஷயங்கள் தான் நடந்து இருக்கு.. உன்னைய பார்த்த நிமிசத்துல இருந்து இப்போ வரைக்கும் “

“ ஹ்ம்ம் “

“ என்ன டி நான் கதையா சொல்லுறேன்.. ம்ம் சொல்லுற ??”                         

“ம்ம்ச் இல்ல மனு. நான் நினைச்சு பார்த்தேன்.. நம்ம வாழ்கை, நம்ம கல்யாணம், நம்ம காதல் இதெல்லாம்…”

“ இதெல்லாம் ????”

“ இதெல்லாம் மாயம் மந்திரம் போட்டது போல இருக்குதானே மனு… முதல் நாள் வரைக்கும் எனக்கு கல்யாணம்னு எனக்கே தெரியாது..”

“ ஏன் இந்த கல்யாணம்ன்னு இப்போ வரைக்கும் உனக்கு தெரியாதே மித்து.. அதை நான் சொல்லியிருக்கணுமோன்னு இப்போதான் தோணுது. ஒருவேளை சொல்லி இருந்தா நீ என்னைய விட்டு போயிருக்க மாட்டியோ என்னவோ மித்து.. அன்னைக்கு சாயங்காலம் அங்கே ரீனா வீட்டுல நீ இல்லைன்னு தெரிஞ்சதும்… “ என்று கூறிக்கொண்டே வந்தவன் அதற்குமேல் பேசமுடியாமல் அவளை இறுக அணைத்துகொண்டான்.

மித்ராவிற்கு புரிந்தது மனோ என்ன மாதிரியான ஒரு வேதனை அடைந்து இருப்பான் என்று..

“ ஐம் சாரி மனு.. ஆனா நான்.. நான்  “ என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை..

“ என்ன மித்து எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசுடா.. இதுக்குமேல நமக்குள்ள மறைக்க எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன் “ என்றான் இரு பொருள்பட..

அவனது வார்த்தைகளில் சற்றே முகம் சிவந்தவள் “ ம்ம் அப்படியா மனு.. அப்போ முதல்ல சொல்ல வேண்டியது நீங்க தானே.. நான் இல்லையே.. “ என்று கூறி அவன் முகம் பார்த்தாள்..

“ ஹ்ம்ம் அதுவும் சரிதான்.. ஆனா மித்து.. ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ நம்ம கல்யாணம் எந்த காரணத்திற்காக நடந்ததா இருந்தாலும் சரி நான் உன்னைய லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.. அதுல எந்த மாற்றமும் இல்லை.. எல்லாம் கேட்டு முடிஞ்சதும் மறுமடியும் நீ என்னைய விட்டு போயிட மனசளவில கூட நினைக்ககூடாது” என்றான் வேதனை நிரம்பிய குரலில்..

ஆனால் மித்ரா தான் நன்றாய் அறிவாலே, எதற்கு இப்படி ஒரு அவசரத்தில் அவர்கள் திருமணம் நடந்தது என்று.. அவனது வேதனை அவளை ஏனோ செய்தது..  தன்னிடமே தன் கணவன் விளக்கம் கூற வேண்டுமா ?? அப்படி ஒரு நிலையை நானே உருவாக்க வேண்டுமா ??

அவன் என்ன அந்நியனா ??? என்னவன அல்லவா ?? மீண்டும் பழையது அனைத்தையும் எண்ணி, அதை கோர்த்து என்னிடம் கூற அவனுக்கு மனதில் மீண்டும் வேதனை தானே எழும்.. வேண்டாம் வேண்டவே வேண்டாம். மனு என் கணவன். என்னால் அடைந்த வேதனை எல்லாம் போதும். அவன் என்னிடம் எதுவும் கூற வேண்டாம்.

அனைத்தையும் நானே அவனிடம் கூறுகிறேன் என்று எண்ணியவள்      மெல்ல “ மனு நம்ம கல்யாணம் என்ன காரணத்திற்காக நடந்ததோ அதே காரணத்திற்காக தான் நம் பிரிவும் நடந்தது “ என்று கூறி முடித்தாள்..

“ என்ன ???!!!!”

“ எஸ் மனு “

“ அப்.. அப்படின்னா.. உன்.. உனக்கு ???”

“ எனக்கு எல்லாம்  தெரியும் மனு “

“வாட்ட்ட் !!!!” அதிர்ந்தே விட்டான் மனோகரன்.. இத்தனை நாளாய் இவளை வேதனை படுத்துமென்று மறைத்து வைத்த ரகசியம்.. அவள் அறிந்தும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாள் என்றால் இதற்கு என்ன அர்த்தம். அவன் மனம் இன்னதென்று கூற முடியாமல் தவித்தது..

“ தெரிஞ்சும்.. நீ.. நீ ஏன் மித்து போன ??” ஆற்றமாட்டாமல் கேட்டான்..

“ நீங்க என்னைய லவ் பண்ணதுனால எனக்கு எந்த பிரச்சனையும் வந்துட கூடாதுன்னு அவசரமா கல்யாணம் பண்ணிங்க மனு.. நானும் உங்களை லவ் பண்ணேன்.. அதே காரணத்திற்காக தான் உங்களை விட்டும் போனேன் “ என்று கூறி அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்..

மனோகரனோ மிக பெரிய குழப்பத்தில் இருந்தான்.. அவனுக்கு மித்ரா கூறுவது தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.. காதலித்ததால் விட்டு பிரிந்தேன் என்றால் யாருக்கு என்ன விளங்கும். ஆனால் இவளிடம் இப்படி பேசினால் விஷயம் முழுவதும் வெளிவராது என்று தெரிந்த மனோ 

“ முதலில் அழுகையை நிறுத்து மித்து” என்றான் அழுத்தமாக..                

அவனது குரல் வேறுபாட்டை உணர்ந்த மித்ரா திகைத்தாள்.. “ என்.. என்ன மனு ??”

“ உனக்கு எப்படி எல்லாம் தெரியும் ?? யார் சொன்னா ??” கிட்ட தட்ட அவனது குரல் குற்றவாளியை விசாரிக்கும் அதிகாரி போல இருந்தது..

“ மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா “ என்று எண்ணியபடி அவளுக்கு எப்படி தெரியும் என்பதை கூறினாள்..

ஆனால் அவன் மனமோ அனைத்தும் தெரிந்தும் தன்னை தன் காதலை புரிந்துகொள்ளாமல் போனாளே என்றே எண்ணியது.. கேட்டாள் உன்மீது நான் கொண்ட காதலினால் தான் சென்றேன் என்றும் கூறுபவளை வித்தியாசமாக பார்த்தான். 

“ம்ம்.. அப்போ எல்லாம் தெரிஞ்சும் என்கிட்டே நீ ஏன் மித்து கேட்கலை ??? ஏன் மித்து ஏன் ??  என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா ???”

“ ஐயோ மனு !!! அப்படி மட்டும் சொல்லவேண்டாம்.. உங்களை நம்பாமல் தானா நான் இங்க இருந்தேன்… ப்ளீஸ் மனு நம்பிக்கை இல்லைன்னு மட்டும் சொல்லிடாதிங்க “

“பிறகு எதுக்கு டி என்னய விட்டு போன ???  பதில் சொல் “ என்று உறுமினான். அவள் மீது கொண்ட அதிக அக்கறையும் அன்புமே இப்பொழுது கோவமாக மாறியது அவனுக்கு ..

“ ஒருவேளை அந்த சுந்தர் கைகளில் இவள் சிக்கியிருந்தால் “ என்று நினைக்கும் பொழுதே மனோவிற்கு சர்வமும் நடுங்கியது.. அந்த நடுக்கமே மித்ராவின் மேல் இன்னும் கொவம்கொள்ள வைத்தது..

“ பதில் சொல்லுன்னு சொன்னேன் “ அவனது குரலும் முகமுமே மித்ராவிற்கு ஏனோ அச்சத்தை கொடுத்தது… சிறிது நேரம் முன்பு தன்னோடு கொஞ்சி குழவியவன் இப்பொழுது கோபத்தில் கர்ஜனை செய்கிறான். 

“ இல்லை மனு.. அது.. நான் போயிட்டா நீங்க.. நீங்க அந்த சுந்தர் மேல கவனம் செலுத்த மாட்டிங்க “ என்று அவள் கூறும் பொழுதே அவள் கன்னம் எறிந்த உணர்வு ஏற்பட்டது..

அடித்திருந்தான்… அடித்தேவிட்டான்.. இந்த அடி எதற்கு என்று கூட மித்ராவிற்கு புரியவில்லை. கன்னத்தில் கை வைத்து கண்ணீர் விழிகளோடு அவனை பார்த்தாள்..

“ ஏன் டி ஏன் ??? ஏன் இப்படி பண்ண ??? உன்னைய அவன்கிட்ட இருந்த காப்பாத்த நானும் உன் அப்பா அம்மாவும் என்ன பாடு பட்டோம் தெரியுமா ?? என்னயவிடு நீ இங்க இல்லைன்னு தெரிஞ்சதும் உன் அப்பா அம்மா என்ன துடிச்சிருபாங்க.. “

“ உனக்கு அதெல்லாம் யோசிக்க எங்க மூளை இருக்கு.. பெரிய இவளாட்டம் வெளிய போயிட்டா எல்லாம்   சரியாகிடுமா ??? அவனுங்க கையில நீ சிக்கியிருந்தா, நான் இத்தனை நாள் உனக்காக உன் பாதுகாப்பிற்காக பண்ணது எல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிருக்கும்.”

“ அதை கூட விடு, உன்.. உனக்கு எதாவது ஆகியிருந்தா ??” என்று கேட்கும் பொழுதே அவன் விழிகள் நிறைந்தது.. காதலிப்பதை விட காதலிக்கபடுவது இன்னும் சுகமாம். அந்த சுகத்தை மித்ரா இப்பொழுது உணர்ந்தாள்.. அவள் மனம் பேரானந்தம் கொண்டது..

“ இனி ஒரு தடவை இங்க இருந்து கிளம்பி பாரு.. உன் காலை உடைச்சு கிடப்பில போடுறேன் “ என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அவன் தோள்களில் சாய்ந்து இருந்தாள் மித்ரா..

“ ஒருவேளை தான் அடித்ததில் மயக்கம் எதுவும் போட்டுவிட்டாளோ “ என்று பதறி அவள் முகம் நிமிர்த்தினான். அவளோ புன்சிரிப்போடு அவனை பார்த்தாள்..

“ ஏன் டி நான் இங்க கோவமா பேசிட்டு இருக்கேன்.. நீ.. நீ என்னடான்னா சிரிக்கிற ??” என்று அதற்கும் கோவம் கொண்டான். அவளுக்கு என்னவோ அவனை பார்க்கும் பொழுது முரட்டு குழந்தை தான் நினைவு வந்தது.

மேலும் எதுவோ பேச வாய் திறந்தவனை தன் விரல் கொண்டு அவன் இதழ் அணைத்தாள்

“ போதும் மனு.. எல்லா கோபத்தையும் இன்னைக்கே கொட்டிட்டா அப்புறம் நம் வாழ் நாள் முழுக்க கோவப்பட கொஞ்சம் கோவம் வேனும்மில” என்று கூறுபவளை புரியாமல் பார்த்தான்.

மனோவின் மனமோ “ இவள் என்ன கிறுக்கா ??? அடிச்சிருக்கேன் இவ என்னைய கட்டிபிடிச்சு நிக்கிறா ??” என்று கேள்வி எழுப்பியது..

அவன் மனதை படித்தது போல “ ஆமா மனு நான் கிறுக்கு தான்.. உங்க மேல.. உங்க காதல் மேல.. ஆமா ஒத்துக்கிறேன் இங்க இருக்கும் போதே என் மனசுல உங்க மேல காதல் வந்திடிச்சு.. ஆனா அப்போ எனக்கு எந்த உண்மையும் தெரியாது..”

அப்போதான் வந்து நீங்க என்கிட்ட ஒரு மாசம் டைம் கேட்டிங்க. நானும் கேள்வியே கேட்காமல் சரி சொன்னேன், ஏன்னா எனக்கு அப்போ என்ன பிரச்னைன்னு கூட தெரியாது.. அந்த ஒரு மாசம் எப்படா முடியும்னு நான் ஒவ்வொரு நாளும் காத்து இருந்தேன்..”

“ உங்ககிட்ட எனக்கு எந்த விளக்கமும் தேவையானதா இல்லை.. எனக்கு எதுவும் தெரியவும் வேண்டாம்னு தான் இருந்தேன். அப்போதான் ஒருநாள் நீங்களும் திவாவும் பேசுனது என் காதுல விழுந்தது “

அவனது பார்வை மாற்றதை உணர்ந்து “ நான் ஒட்டு கேட்கலை மனு.. திவாவை பார்க்க வரும் போது நீங்க பேசுனது எனக்கு கேட்டது.. ஆனா அதிலிருந்தும் என்னால முழுசா எதையும் கண்டு பிடிக்க முடியலை..”

“ என்ன தான் தெரியவேண்டாம்னு நினைச்சாலும் மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகள்.. அப்போதான் ரூம் கிளீன் பண்ணும் போது அந்த அலமாரி கீ கிடைச்சது.. ஜஸ்ட் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் அதை ஓபன் பண்ணேன் மனு”

“ அப்.. அப்போதான் அந்த பைல்  பார்த்தேன். எல்லாம் படிச்சேன்… ஆனா மனு நான் நிச்சயமா இவ்வளோ பெரிய பிரச்சனை இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை மனு.. நான்.. நான் எப்படி துடிச்சேன் தெரியுமா ??”

“ என்… எனக்கு நல்லா தெரியும் நீங்க எப்படினாலும் என்னய காப்பாதிடுவிங்கன்னு.. ஆ.. ஆனா.. இதுல உங்களுக்கு ஒன்னுனா..???  இந்த கேள்வி என்னைய அப்படியே கொன்னு போட்டிடுச்சு மனு “

“ என்னைய விரும்புன ஒரே காரணத்திற்காக நீங்க இந்த ஆபத்துல சிக்க விட கூடாதுன்னு நான் நினைச்சேன் மனு.. நீங்களே சொல்லுங்க அந்த சுந்தருக்கு இதுக்கெல்லாம் பின்னாடி நீங்க தான் இருக்கீங்கன்னு தெரிஞ்சா என்ன ஆகும்.. ஐயோ கடவுளே.. என்னால கொஞ்சம் கூட நினைச்சு பார்க்வே முடியல மனு..”

“ கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்க மனு உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால, இங்க தம்பிங்கனால எல்லாம் தாங்க முடியுமா ?? அதான் உங்களை அந்த சுந்தர்கிட்ட இருந்து  உங்களை டைவர்ட் பண்ணத்தான் நான் கிளம்பினேன் மனு..”

“ என்னைய தேடுற நினைப்புல அந்த சுந்தரை நீங்க நெருங்க மாட்டிங்கன்னு நினைச்சேன் மனு.. அப்புறம் கொஞ்ச நாள் போனா எல்லாம் ஓரளவுக்கு சரியாகும்னு நினைச்சேன் மனு.. உங்க பார்வையில நான் பண்ணது தப்பு தான் மனு.. முட்டாள் தனம் தான்.. ஆனா ஒரே ஒரு நிமிஷம் என் மனசையும் நீங்க நினைச்சு பாருங்களேன்.. ப்ளீஸ்… எனக்கு மட்டும் உங்க மேல அக்கறை காதல் எல்லாம் இருக்க கூடாதா ?? ” என்றாள் இறைஞ்சளோடு..

மனோ புரிந்துகொண்டான்.. தன் மீது கொண்ட நேசத்தினால் இப்படி செய்து இருக்கிறாள் என்று.. ஆனாலும் ஏதாவது விபரீதம் நேர்ந்திருந்தால் ??? அவனால் அதை பற்றி மேலும் யோசிக்க கூட முடியவில்லை..

காதல் கொண்ட மனம் எந்த முட்டாள் தனத்தையும் சந்தோசமாய் செய்யுமாம்.. எப்பொழுதோ படித்தது இப்பொழுது அவனுக்கு நியாபகம் வந்தது.. “ நல்ல வேலை முழுதாய் என்னிடம் திரும்பிவிட்டாள் “ என்று எண்ணி நிம்மதி மூச்சு விட்டான்.. 

அவன் முகத்தையே பார்த்தபடி நின்றவளின் முகத்திலும் நிம்மதி.. அவள் முகத்தை கையில் ஏந்தி “ நம்ம வாழ்கையில இனிமே பிரிவே இல்ல மித்து” என்றான்.. அதை ஒரு புன்னகையோடு ஏற்றவள் “ மனு நான் ஒன்னு கேட்கவா ??” என்றாள்

என்னவென்பது போல பார்த்தான் “ உங்களுக்கு நிஜமாவே நான் இருந்த இடம் இத்தனை நாளா தெரியாதா ??? என்னால இந்த ஒரு விஷயத்தை மட்டும் நம்பவே முடியல பா “ என்று கேட்டாள் சலுகையாய்..

அவனோ அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாய் கொடுத்தான்.. “ ப்ளீஸ் மனு சொல்லுங்க.. உங்களுக்கு நான் இருந்த இடம் முன்னமே தெரியும் தானே.. பதில் சொல்லுங்க ??? நான் அந்த சுந்தருக்கு என்ன ஆச்சுன்னு கூட கேட்கமாட்டேன்.. ஆனா இதுக்கு பதில் சொல்லுங்க “ என்று சட்டையை பிடித்து சிறு குழந்தையாய் உலுக்கினாள்..

அவனும் பதில் கூற ஆரம்பித்தான். அவள் கேட்ட கேள்விக்கும் கேட்காத கேள்விக்கும்..                  

                  

                                       

             

வார்த்தைகள் வேண்டாம் நமக்குள்ளே

விழிகள் பேசும் பாசை போதும்..

விளக்கங்கள் வேண்டாம் நமக்குள்ளே

இதயம் இரண்டும் பேசிக்கொள்ளும்..

இனி கண்ணீர் வேண்டாம் 

நம் காதல் மட்டுமே போதும்..

அணைப்பது நீயாகினும்

அடிப்பது நீயாகினும்

நேசிப்பதும் நிந்திப்பதும்

நீயே ஆகினும்

காதலாகி கணிந்துருகுவேன்

உந்தன் கரங்களில்..

 

                      மாயம் தொடரும் 

 

           

        

    

         

             

Advertisement