Advertisement

மாயவனோ !! தூயவனோ –  23

மித்ராவிற்கு தான் எடுத்த முடிவை எப்படி செயல்படுத்துவது என்று ஒரு யோசனையும் தோன்றவில்லை.. மூளையை போட்டு கசங்கி பிழிந்தாலும் “என்ன செய்வது??”  என்ற கேள்வியே அவளிடம் தொக்கி நின்றது.

அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது நாளைதான் ரீனா வீட்டிற்கு விருந்துக்கு வருவதாக மனோகரன் கூறி இருந்தான்.. இந்த வாய்பை எப்படியாவது தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்..

தங்கள் அறையில் சாய்ந்து கண்கள் மூடி அமர்ந்து இருந்தான் மனோ. அவனது யோசனை எலலம் நாளை அமைச்சரை சந்திப்பது நல்ல படியாக முடியவேண்டும் என்று இருந்தது..  கண்கள் மூடி ஏதோ தவத்தில் இருப்பவனை அழைக்க வாய் திறந்தவள் அழைக்காமல் அப்படியே நின்றாள்..

கண்களிலேயே மனோவை படம் பிடித்து இதயத்தில் பதித்து கொண்டாள்.. இனி எப்பொழுது மனோவை இத்தனை நெருக்கமாக பார்க்க முடியும் என்ற எண்ணம் தோன்றவும் மித்ராவின் கண்கள் நீரை சுரந்தன.

ஏனோ அவளுக்கு அவன் தோள்களில் சாய்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. சத்தம் எழுப்பாமல் மனோகரனின் அருகில் அமர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்..

அவளது அருகாமையில் திடுக்கிட்டு விழித்தவன் ஒரு நிமிடம் மித்ராவை ஆச்சரியமாய் பார்த்து, பின் மெல்ல புன்னகைதான்.. அவனது புன்னகையை பார்த்து மனதில் ரசித்தவள் ஏதும் கூறாமல் அவனது கரங்களை இறுக பற்றிக்கொண்டு மீண்டும் சாய்ந்தும் கொண்டாள். வார்த்தைகள் அங்கே இடம் பெறவில்லை.. மௌனமே ஆட்சி புரிந்தது.. ஆனால் இதயம் இரண்டும் பேசிக்கொண்டன..

மனு “ இன்னும் ஒரே நாள் தான் மித்து… எல்லாமே சரியாக போகுது.. அப்புறம் நம்ம வாழ்கையில சந்தோசம் மட்டும் தான் “ என்று எண்ணினான்.

மித்ரவோ “ இன்னும் ஒரே ஒரு நாள் தான் மனு.. உங்களுக்கு என்னால இருக்கிற பிரச்சனை எல்லாம் தீர.. நாளை இருந்து நீங்க எந்த ஓட்டமும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்..” என்று எண்ணினாள்..

மனோவிற்கு மித்ராவின் மனதில்,  அனைத்து உண்மைகளும் தெரியும் முன்பே காதல் வந்துவிட்டதை எண்ணி மிகுந்த ஆனந்தம் கொண்டான். எங்கே கேட்டால் முரண்டு பிடிப்பாளோ என்றெண்ணி அமைதியாக இருந்தான்..  அவன் மனதில் “ இன்னும் என்ன ஒரு நாள் தானே “ என்ற எண்ணம்..

அங்கே நிலவிய அமைதியை கலைத்து “ மனு “ என்று அழைத்தாள்…

“ம்ம் “

“ நாளைக்கு என்ன நாள் நியாபகம் இருக்கா ???”

இதை கேட்டு தூக்கி வாரி போட்டது மனுவிற்கு “ தெரிந்துவிட்டதோ ??” என்று எண்ணியவன் அதை வெளிக்காட்டாது “ என்ன நாள் மித்து ??” என்றான்.

அவன் திடுக்கிடலை உணர்ந்தாலும் “ ஹ்ம்ம் ரீனா வீட்டுக்கு விருந்துக்கு போகுற நாள் “என்றாள் மித்ரா..

“ ஓ !! மை காட்…” என்று தலையில் அடித்துக்கொண்டான். அவனையே என்ன என்பது போல பார்த்து வைத்தாள் மித்ரா..

“நான் மறந்தே போனேன் மித்து.. ஒரு முக்கியமான மீட்டிங்கு அரேன்ஜ் பண்ணி இருக்கேன்.. மிஸ் பண்ணவே முடியாதே.. ஆனா நிர்மலா ஆன்ட்டிகிட்டயும்  எதுவும் காரணம் சொல்ல முடியாது. ஏற்கனவே கோவமா இருக்காங்க “ என்றான் சற்றே ஒரு மாதிரி குரலில்..

“ இப்ப என்ன மனு.. விருந்துக்கு போயிட்டு, நீங்க மீட்டிங் போங்க.. வெரி சிம்பிள் “ என்று தோல்களை குலுக்கினாள்..

“ம்ம் இல்லை மித்து.. “ என்று இழுத்தவன் சிறு யோசனைக்கு பின் நிர்மலாவிற்கு அழைத்தான் “  ஹலோ ஆன்ட்டி”

…..

“ ஆமாம் ஆன்ட்டி  நியாபகம் இருக்கு.. அதை மறக்க முடியுமா ??”

…..

“ கண்டிப்பா ஆன்ட்டி.. மித்ரா இல்லாமையா ??? அப்புறம் ஒரு சின்ன விஷயம்“

….

“ அது.. அது வந்து நாளைக்கு மாலை தானே வரோம்னு சொன்னோம் , அதுல ஒரு சின்ன மாற்றம் “

“நோ …நோ … ஆன்ட்டி.. கண்டிப்பா நாங்க வருவோம் ஆனா மதியம் லஞ்ச்க்கு வரோமே.. “

“ இல்லை ஆன்ட்டி.. உங்களுக்கு எதுக்கு சிரமம்.. மதியம் வந்தா கொஞ்ச நேரம் சேர்த்து ஸ்பென்ட் பண்ணலாம்.. அதான்..”

“ ஓகே ஆன்ட்டி.. சியூர்..” என்று கூறி அலைபேசியை அனைத்தான்.

“ ஹப்பா !!! ஒருவழியா ப்ரோப்ளம் சால்வ்ட்.. மதியம் விருந்து, சாயங்காலம் மீட்டிங் எப்படி” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான்..

மித்ராவும் மெல்ல சிரித்தபடி “ம்ம் பயங்கரம் “ என்றாள் சற்றே நக்கலாக. மனோவிற்கு மித்ராவின் அருகாமை ஏனோ செய்தது.. அவளிடம் இன்னும் நெருங்க அவன் மனம் துடித்தது.. ஆனால் இன்னொரு மனமோ பொறுமை பொறுமை என்று கத்தி கூப்பாடு போட்டது..

மித்ராவிற்கு இந்த இரவே விடியாமல் போய் விடாதா என்று இருந்தது.. அவனும் அவளுமான இந்த தனிமை இப்படியே நீளாதா என்று இறைவனை வேண்டினாள்.. அவள் பார்வையோ மனோவை தவிர வேறு எதிலும் பதியவில்லை..

காலையில் இருந்து மித்ராவின் நடவடிக்கையில் பெருத்த மாற்றத்தை உணர்ந்த மனோ அவளும் காதலை சொல்ல முடியாமல் தவிக்கின்றாலோ என்று நினைத்தான்.. மீண்டும் அவளை இழுத்து அணைத்தபடி அமர்ந்து இருந்தான்.. மித்ராவிற்கு மனோ இன்னும் முன்னேறினால் கூட நன்றாய் இருக்கும் என்பது போல இருந்தது..

அடுத்த நொடியே அவளது எண்ணத்தை எண்ணி வெட்கம் வந்து மனதிற்குள் “ச்சி “ என்று எண்ணிக்கொண்டாள்.. மனதில் நினைக்கிறேன் என்று வாய் விட்டும் கூறி இருந்தால் போல “ என்ன மித்து ச்சி ??” என்றான் மனோ.. அவனுக்கு புரிந்தே இருந்தது..

“ ஹா.. அது.. அது.. ஒன்னுமில்லையே “ என்று பட படத்தால் அகப்பட்டு கொண்ட பதற்றத்தில்.. இன்னும் இறுக்கமாக அணைத்தபடி “ ஒன்னும்ம்ம்ம்மே இல்லையா ??” என்றான் அந்த ம்மில் அழுத்தம் குடுத்து..

“ ம்ம்ச்.. என்ன மனு இது.. உன்னைய தொட்டு பேசக்கூடாது சொல்லி இருக்கேனா இல்லையா ??” என்று கேட்டபடி விலகி படுத்தாள்..

“ இது என்ன டா கொடுமையா இருக்கு.. இவளா வந்தா, சாஞ்சா.. நான் பிடிச்சா மட்டும் தள்ளிட்டு போறா “ என்று வாய்விட்டே கிண்டலாக கூறினான்..

“ ஹா ஆமாம்.. நானா தானே வந்தேன்.. அதான் நானா விலகி படுத்து இருக்கேன்.. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?? “ என்றாள் தலையணையில் முகத்தை மறைத்தபடி..

மனோவிற்கு அத்தனை நேரம் மனதில் இருந்த பாரம் எல்லாம் குறைந்து உற்சாகம் ஊறி கொண்டு இருந்தது.. “ அது சரி சாஞ்சது என் மேல மா “ என்றான் அவனும் அவள் அருகில் படுத்து..

“ ம்ம் சரி சரி அதான் நான் தள்ளி படுத்துட்டேன்ல அப்புறம் என்ன?? நிம்மதியா தூங்குங்க. சும்மா பேசி கடுப்ப கிளப்பாம” வார்த்தைக்கு வார்த்தை மல்லு கட்டுபவளை மனோ சும்மா விடுவானா ???

“ ஹேய் என்னடி??? “ என்று அவளை தன் பக்கம் திருப்பினான்.. இதை எதிர்பார்த்தே இருந்தவள் போல வாகாக மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்தாள்..

“சரியான பிராடு டி நீ “ என்றான் மனு..

“ நீங்க  என்ன வேணா சொல்லிக்கோங்க  “

“ அதானே.. மேடம் யாரு இடியே விழுந்தாலும் நான் இப்படிதான் இருப்பேன்னு இருக்கிறவங்க தானே.. “ என்றான் கேலியாக. அவன் என்னவோ சாதரணமாக தான் கூறினான்.. விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் மித்ரா..

அவள் பார்வையின் பேதம் உணர்ந்தவன் “ ஹேய் என்ன மித்து.. நான்.. நான் சும்மா தான் சொன்னேன் டா “ என்று கூறி அவள் கூந்தலை வருடினான்..

“ம்ம் “ அவள் பதிலேதும் கூறவில்லை.. மீண்டும் அங்கே மௌனம் கோலோச்சியது.. இருவருக்குமே ஏனோ இந்த நெருக்கம், மௌனம் தேவை பட்டது.. மேலும் மேலும் இறுக அணைத்தான். அவளும் நெருங்கி நெருங்கி அவனை ஒண்டினாள்..

மித்ராவின் அருகாமை தந்த நிம்மதியில் மனோ எந்த குழப்பமும் சஞ்சலமும் இல்லாம கண் உறங்கினான்.. அவனுக்கு நிம்மதியை குடுத்தவளோ தன் நிம்மதியாய் தொலைத்து துடித்தாள்.. இறுக அணைத்து படுத்து இருந்தவனை அவன் உறக்கம் கலையாதவாறு விலக்கி படுக்க வைத்தாள்..

மித்ராவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை.. எங்கே சத்தம் போட்டு அழுதால் மனோ விழித்து விடுவானோ என்று பயந்து குளியலறைக்குள் நுழைந்து வெகு நேரம் அழுது தீர்த்தாள்..

அவள் மனதின் ஒவ்வொரு மூலையும் மனோவிற்காக ஏங்கியது.  இப்படி பட்ட ஒருவனை எப்படி விலகி செல்வேன்?? என்னவென்று கூறி விலகி செல்வேன்?? கடவுளே.. என்று அழுது தீர்த்தாள்.. பின் ஒரு முடிவிற்கு வந்தவளாய் சென்று படுத்து கொண்டாள். ஆனால் உறக்கம் தான் சிறிதும் இல்லை.. மனோவின் மார்பில் முகம் வைத்து படுத்து பார்த்தாள்.. அவன் இதயத்தின் துடிப்பு மட்டும் கேட்டபடி இருந்தது..

அந்த இதய துடிப்பயே பற்றாக பற்றி கண்களை இறுக மூடி உறங்கிவிட்டாள்.. விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று யாரும் அறிய முடியாது.. ஆனால் மித்ராவோ தான் என்ன செய்யவேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்து இருந்தாள்..

மனோவின் உல்லாச பார்வை மித்ராவை தொடர்ந்தபடி இருந்தது. அதை கண்டும் காணாதபடி மித்ரா தன் வேலையை கவனித்துகொண்டு இருந்தாள்.. “ மித்து ஒரு, ஒரு மணி போல ரெடியா இரு. நான் வந்து உன்னைய கூப்பிட்டு போறேன் “ என்று கூறிவிட்டு மனோ அலுவலகம் சென்றுவிட்டான்.

வீட்டில் மற்ற  அனைவரும் கிளம்பி சென்றுவிட்டனர். நிதானமாக ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தாள் மித்ரா.. நெஞ்சை கசக்கி பிழிவது போல இருந்தது.. அண்ணி என்று பாசமாக ஓடி வரும் பிரபா, தோழியிடம் வம்பு செய்வது போல பேசும் கிருபா, ஒரு சகோதரியை போல நடத்தும் திவா.. இதற்கெல்லாம் மேலாக மனோ…

நினைக்க நினைக்க தன் விதியை நொந்தாள்.. காதலித்து கல்யாணம் செய்தாலும், அவள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து கண்ணியம் காக்கும் கணவன், தன் உயிரை பணையம் வைத்து அவள் உயிர் காக்க போராடுபவன்.. கண் இமைக்கும் நொடியில் மாயமாய் வந்தான், தூய அன்பினாலும், கண்ணியமான நடத்தையாலும் தன்னை தூயவன் என்று கூறாமல் உணரவைத்தான்.. காதலை கண்களால் மட்டுமே கூறி இதயத்தை களவாடினான். ஆனால் இப்பொழுது தானே  இப்படி அவனை காயப்படுத்தி செல்லும் சூழலை உருவாக்கிவிட்டான் என்று எண்ணி வேதனை பட்டாள்..

இந்த வீட்டிற்கு வந்த இரண்டாம் நாள் மனோ வீட்டின் சாவி கொத்தை மித்ராவிடம் ஒப்படைத்தான். “ மித்து.. இனிமே இது உன் ராஜ்ஜியம்.. இங்க நீ என்ன செய்யனும்னு நினைக்கிறயோ தாரளாம செய்யலாம். கூப்பிட்டா உடனே வந்து நிக்க வேலை ஆட்கள் இருக்காங்க. எல்லாருமே நம்பிக்கையான ஆளுங்க. இந்த வீட்டோட மூத்த மருமகளா அம்மா தான் நிர்வாகம் பண்ணுனாங்க. அவங்களுக்கு அப்புறம் நீ..” என்று அவன் சாவி கொத்தை மித்ராவின் கைகளில் வைத்தான்..

திகைத்து போய் பார்த்தபடி நின்று இருந்தாள் மித்ரா.. அதெல்லாம் இப்பொழுதான் நடந்தது போல இருந்தது.. ஆனால் இரண்டு மாதங்கள் முழுதாய் முடிந்துவிட்டது..

சாவிகொத்தை எடுத்து பூஜை அறையில் வைத்தாள்.. அதன் கீழே ஒரு கடிதமும் எழுதி வைத்தாள் மித்ரா. தன் மனதில் இருக்கும் காதலை எல்லாம் கூறிவிட தான் அவள் நினைத்தாள். ஆனால் எங்கே தன் எண்ணங்களே மனோவிற்கு எதிரியாய் அமைந்துவிடும் என்று பயந்து, கஷ்டப்பட்டு வெறுப்பாக எழுதுவது போல எழுதிவைத்தால்..

“ என்னால் இன்னும் பொறுத்துக்கொள்ள முடியாது.. உங்களோடான என் வாழ்வு, முதலில் இது என்னமாதிரி ஒரு வாழ்க்கை என்றே எனக்கு புரியவில்லை.. இத்தனை நாள் பொறுத்தேன்.. ஆனால் இனி அது முடியாது.. சகித்து கொண்டு இருந்தேன் உங்கள் பார்வையையும், பேச்சையும், பிதற்றல்களையும்.. நேரம் வர காத்திருந்தேன்.. நேரம் வந்து விட்டது. கிளம்புகிறேன். என்னை தேடுவது என்பது வீண் முயற்சி. என் பெற்றோர்களிடம் கூறிவிடுங்கள்.. “ என்று மிகவும் யோசித்து, வார்த்தைகளை தேடி தேடி எழுதினாள்..

கண்ணீர் அருவியாய் அந்த காகிதத்தை நினைத்தது.. முயன்றும் கூட இதை வெறுப்பாக செய்ய முடியவில்லை.. “ இது என் வீடு, நான் வாழ வந்த இல்லம். என்னை முழுதாய் நம்பி ஏற்றுக்கொண்ட உறவுகள்.. “ என்று மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தாள்.

முதல் நாள் மனோ தன் குடும்பத்தினரின் படத்திற்கு முன் நிற்கவைத்து விளக்கு ஏற்ற கூறியது இப்பொழுதும் அவள் மனதில் காட்சிகளாய் வந்து போனது. அந்த புகைப்படத்தை பார்த்து மனோ மனமுறுக வேண்டியபடி கூறிய வார்த்தைகள் பசுமரத்து ஆணி போல அல்லவா இன்னும் அவள் மனதில் நிற்கிறது..

அவளும் அந்த புகைப்படத்தின் முன் சென்று நின்றாள்.. “ என்னைய எல்லாரும் தயவு செய்து மன்னிச்சிடுங்க.. மனோ என்னைய மனசார விரும்பி தான் இங்க என்னைய கல்யாணம் பண்ணி கூட்டி வந்தாங்க. ஆனால் என்னால ஒரு நாள் கூட மனுவிற்கு நிம்மதி இல்லைன்னு இப்போ தான் புரிஞ்சுக்கிட்டேன்..”

“ அதுவும் இல்லாம மனுவ நம்பி மூணு தம்பிங்க இருக்காங்க. அவருக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவங்க எல்லாம் என்ன செய்வாங்க.. பாதியில் வந்த நான் பாதியில் போறது தான் நல்லது. எனக்கு இதை தவிர வேற வழி தெரியலை. ஏன்னா மனுவை நான் ரொம்ப நேசிக்கிறேன்.. விரும்புறேன்… உயிரை விட மேலா நினைக்கிறேன். அதுனால தான் எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் பரவாயில்லன்னு இப்போ ஒரேடியாய் இங்க இருந்து கிளம்ப போறேன்..”

“ இறைவனோட கலந்திட்ட நீங்க எல்லாம் தான் துணையா இருந்து கடைசிவரைக்கும் இந்த குடும்பத்தை காப்பாத்தனும்.. மனுக்கு மனசு திடத்தை நீங்க எல்லாரும் தான் தரனும் “ என்று இன்னும் அவள் பாட்டிற்கு தன் போக்கில் பேசி கொண்டு இருந்தாள் அந்த படத்திற்கு முன் நின்று மனதிற்குள்.

சிறிது நேரம் அப்படியே இருந்தவள் இன் வேகமாக கண்களை துடைத்துக்கொண்டு  அறைக்குள் விரைந்தாள். ஒரு பெரிய கை பைக்குள் மனோவின் புகைப்படம்,  தன் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து வைத்தாள்.. ஆனால் அவள் மனதில் “ எங்கே செல்வது.. எங்கே செல்வதானாலும் ட்ரெஸ் வேணுமே.. மனுக்கு தெரியாம ட்ரெஸ் எப்படி எடுத்து வைக்கிறது?? “ என்ற சந்தேகம் நீடித்துக்கொண்டே இருந்தது..

அவள் எண்ணம் இறைவனுக்கு கேட்டது போல.. கண்டேன் கண்டேன் என்று ரீனா வந்து சேர்ந்தாள்.. வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்டு மித்ராவும் வேகமாய் கை பையை தன் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தாள்..

“ ஹாய் மித்ரா.. என்ன இன்னும் ரெடி ஆகாம இருக்க ??” என்று கேட்டபடி வந்தாள்.. வார்த்தைகள் என்னவோ சாதாரணமாய் இருந்தாலும் பார்வை எப்பொழுது மித்ராவை எடை போட்ட படி இருந்தது ரீனாவிற்கு..

“ வா ரீனா… ஒரு மணிக்கு தான் ரெடியா இருக்க சொன்னார் மனு.. உட்கார்.. என்ன இந்த பக்கம் திடீர்ன்னு “

“ அது ஒண்ணுமில்ல மித்ரா ட்ரெஸ் அல்டெர் பண்ண வந்தேன்.. அப்படியே இங்க  வந்துட்டு போகலாம்னு வந்தேன். என்ன பண்ணுறது முன்ன எல்லாம் எப்பயும் இங்க தான் இருப்பேன்.. ஹ்ம்ம் “ என்று பெருமூச்சு விட்டாள்.

“ ஓ!! சரி ட்ரெஸ் அல்டர் பண்ணிட்டயா ? ஜூஸ் கொண்டு வர சொல்லவா “ என்று கேட்டபடி பொன்னியை அழைத்தாள்..

“ ஹ்ம்ம் ஜில்லுனு கொண்டு வர சொல்லு.. எங்க டைலர் வெளிய போயி இருக்கானாம்.. வீட்டுக்கு போகும் போது தான் இருந்து அல்டெர் பண்ணி வாங்கிட்டு போகணும்” என்று ரீனா கூறாவும் மித்ராவின் மூளை வேகமாக வேலை செய்தது..

தானே சென்று ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள்.. “ ரீனா ஒரு சின்ன ஹெல்ப்.. செய்வியா ??” என்றாள் தன்மையாக..

“ ஹெல்ப்பா!!!! என்ன மித்ரா விளையாடுறையா ? உன் கண்ணசைவுல சொன்னாலே மனோ அதை தலையால செய்வாரே.. அதைவிட்டு என்கிட்டே இப்படி கேட்கிற??” என்றாள் நக்கலாக..

“எல்லாம் என் நேரம் டி “ என்று நினைத்துகொண்டு “ நீ சொல்றதும் சரி தான் ரீனா.. ஆனா மனோக்கு லேடீஸ் ட்ரெஸ் பத்தி என்ன தெரியும்?? அதுவும் இல்லாம உனக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் சூப்பர்ன்னு பார்த்தாலே தெரியுதே “

“ ஹ்ம்ம் சரி சரி சொல்லு..”

“அது ஒண்ணுமில்ல ரீனா என் ட்ரெஸ்ஸும் கொஞ்சம் அல்டெர் செய்யணும். அதான்.. இங்க இந்த ஏரியால எங்க நல்லா இருக்கும்னு எனக்கு தெரியல. அதான் உங்கிட்ட கேட்கிறேன்.. இதுகூட செய்யமாட்டியா ???”

“ அடடா.. சரி ரொம்ப பீலிங்கா பேசாதா.. இந்த பேச்சை பார்த்து தான் மனோ மயங்கிட்டாறு போல.. என்ன செய்யணும் சொல்லு “ என்று பிகு செய்தால் ரீனா..

“ என் ட்ரெஸ் சிலது கொடுக்கிறேன்.. கொஞ்சம் சைஸ் மட்டும் மாத்தனும். அவ்வளோதான்.. நீ உன் டிரஸ் சரி செய்யும் போது இதையும் பண்ணிகோடு ரீனா. நான் உங்க வீட்டுக்கு வரும் போது வாங்கிக்கிறேன்” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்து..

ரீனாவும் போனால் போகிறது என்பது போல தலையை ஆட்டவும் வேகமாக அறைக்குள் சென்று தனக்கு தேவையான சில உடைகளை எடுத்துக்கொண்டு வந்தாள்.. “ ஹப்பா ஒரு பிரச்சனை தீர்ந்தது.. ஆனா எங்க போறது?? எப்படி போறது..  “ என்று யோசித்தபடி அவளிடம் துணிகளை கொடுத்தாள்..

“ சரி சரி நீயும் மனோவும் சீக்கிரம் வந்து சேருங்க “ என்று கூறிவிட்டு நகர்ந்தாள் ரீனா..

“ டிரஸ் ப்ரோப்ளம் சால்வ்ட்.. இனி சர்ட்டிபிகேட்டை எல்லாம் எடுத்தும் வச்சாச்சு.. ஆனா எங்க போறது.?? எங்கனாலும் சரி இந்த ஊருல இருந்து ரொம்ப தூரம் போயிடனும். கையில இருக்க பணம் செலவு ஆகுறதுக்குள்ள வேலை வேற தேடனும்..” என்று அடுக்கடுக்காய் சிந்தனைகள் அவள் மனதில்.

மனதில் இருந்த சோகமும், வருத்தமும், சிந்தனைகளும் அவளை சோர்வடைய செய்தான.. ஆனாலும் தன்னை திடப்படுதிக்கொண்டாள்.. “ இல்ல மித்ரா.. நீ சோர்ந்து போக கூடாது.. இது தான் மனுவை தடுக்க ஒரே வழி.. யோசி நல்லா யோசி உனக்கு ஏதாவது நல்ல வழி கிடைக்கும் “ என்று உருப்போட்டாள்..

நேரத்தை பார்த்தாள் மணி ஒன்றாக இன்னும் சிறிது நேரமே இருந்தது.. “ மனு வேற வந்திடுவாங்களே..” என்று அரக்க பறக்க கிளம்பினாள். அவள் கிளம்பி முடிக்கவும் மனோ வரவும் சரியாய் இருந்தது..

“ ஒரு பை மினிட்ஸ் மித்து பிரெஷ் அப் ஆகிடுறேன் “ என்று கூறியவாறு அவனும் தயாரானான்.. முதல் நாள் பொழுது விடியும் முன்னே இங்க வரும் பொழுது மனோவோடு காரில் வந்தாள் தனியாக.. அதன் பின் அன்று ஒரு நாள் கோவிலுக்கு செல்லும் பொழுது.. இப்பொழுது கடைசியாக மூன்றாவது முறை..

பெரிய கை பையோடு நின்ற மித்ராவை ஆச்சரியமாக பார்த்தான் மனோ.. “ என்ன மித்து இவ்வளோ பெரிய பேக் ?? “ என்றான்

“ ஏன்.. இப்ப இது மாதிரி போடுறது தான் பேசன்” என்று கூறியவாறு பையை இறுக பிடித்தாள்..

“ ஓ !! நல்ல பேசன்… உள்ள ரெண்டு பேரே உட்காரலாம் போல.. ஒருவேலை அங்க ரீன வீட்டுல இருந்து ஏதாவது சுருட்டிட்டு வரலாம்னு இருக்கியோ  “ என்று நகைத்தபடி அழைத்து சென்றான்.. தன் கணவனின் நிழலை தன் நிழலாக்கி அவனோடு சென்றாள் மித்ரா..

“ வாங்க வாங்க.. இப்பயாவது வர வழி தெரிஞ்சதே..” என்ற குத்தலோடு வரவேற்றார் நிர்மலா.. ரீனாவோ “ மன்னோ… “ என்ற கொஞ்சளோடு அவனை தொற்றி கொண்டாள்.. மித்ராவிற்கு உள்ளே கனன்றது.. அவளை பார்த்து “ ஹாய் “ என்று மட்டும் கூறி வைத்தாள் ரீனா..

“ ஹாய் ரீனா “ என்று கூறியபடியே அவளது கை பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்தாள் மித்ரா. மனோவிற்கு மனைவியின் எண்ணம் நன்றாகவே புரிந்தது.. மனதில் நகைத்துக் கொண்டான்.

“ ஹ்ம்ம் மித்ரா நீ குடுத்த டிரஸ் எல்லாம் ரெடி “ என்றாள் ரீனா.. மித்ராவிற்கு ஐயோவென்று இருந்தது.. இந்த மனோ முன்னால இவள் இப்படி போட்டு உடைக்க வேண்டும் என்று எண்ணினாள்..

“ என்ன ட்ரெஸ்??” என்றான்  மனோ ஒரு மாதிரி குரலில். அவனுக்கு பதில் அளிக்க ரீனா வாய் திறக்கும்முன்

“ அது ஒண்ணுமில்ல மனு, என் டிரஸ் தான். காலையில ரீனா நம்ம வீட்டுக்கு வந்து இருந்தா. அவ ட்ரெஸ் எல்லாம் அல்டர் பண்ண வந்தாளாம். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்தா. அதா நானும் என் டிரெஸ்ஸை குடுத்து விட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன் போல “ என்றாள் அவசரமாக கணவனின் கரங்களை பற்றி..

“ ஓ !! நல்ல வேலை மித்து.. நீ இதை வச்சு நம்ம கிருபாவை எதுவும் கிண்டல் பண்ணாம இருந்தையே.. இல்லாட்டி அவன் அழுது இருப்பான் “ என்று பாவம் போல கூறினான்.

தங்கள் வீட்டு விருந்துக்கு வந்துவிட்டு தங்களிடம் பேசாமல் கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள்ளே பேசி கொள்வது தாய் மகள் இருவருக்குமே சற்று கடுப்பாக இருந்தது..

“ மன்னோ… என்ன இது நாங்களும் இருக்கோம் “ என்று சிறுபிள்ளை போல கொஞ்சினால் ரீனா.. மனோ பதில் கூறும்முன், “ ரீனா உன் ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் வீட்டுக்கு போகும் போது ட்ரெஸ் எல்லாம் வாங்கிக்கிறேன் “என்று பதில் உரைத்தாள் மித்ரா. மனோவை தன்னிடம் பேசவிடாமல் மித்ரா தடுப்பது போல இருந்தது. அவளை சற்றே கடுப்பேற்ற      பழைய ஆல்பங்களை எல்லாம் எடுத்து வந்தாள்.

“ மித்ரா நீ இதை எல்லாம் கண்டிப்பா பாக்கணும் “ என்று அனைத்தையும் கடை விரித்தாள்.. மனோவிற்கு திக்கென்று ஆனது.. ஏனெனில் அந்த அல்பங்களில் இருக்கும் அணைத்து புகை படங்களிலும் ரீனா மனோவின் அருகில் தான் இருப்பாள். அவன் தோள்களில் சாய்ந்து, கைகளை பிடித்து, இல்லை அவனை பார்த்தபடி இப்படி ஏதாவது ஒரு போஸில் தான் இருப்பாள்..

“ போச்சு..!! இனி இதை பார்த்து இவ என்ன தாண்டவம் ஆட போறாளோ “ என்று எண்ணினான் மனோ..

ஆனால் மித்ராவிற்கு அதெல்லாம் மனதில் எதுவும் பதியவில்லை.. அவள் எண்ணமெல்லாம் மனோவை இங்கு இருந்து எப்படியாவது சிறிது நேரம் வெளியேற்றவேண்டும். அதன் பின் தன் திட்டத்தை செயல் படுத்தவேண்டும்.. இது மட்டுமே அவள் சிந்தனையாய் இருந்தது.

அந்த புகை படங்களை எல்லாம் பார்த்து மித்ரா மனம் சஞ்சலம் அடையும் என்று எதிர் பார்த்து இருந்த ரீனாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல மித்ராவின் பார்வை இருந்ததை பார்த்து மனோ நிம்மதி அடைந்தான்.

இப்படியே சிறிது நேரம் பேசி கொண்டு இருந்துவிட்டு அனைவரும் உண்ண சென்றனர், நிர்மலா “ மனோ எல்லாமே உனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் தான்.. எல்லாம் ரீனா தான் பண்ணுனா.. “ என்று கூறியவாரே பரிமாறினார்.

மித்ரா “ இவளா ??!! இவளே ஊர் சுத்திட்டு இப்பதான் வந்து இருக்கா.. இவ மனுவுக்காக சமையல் செய்தாளா ?? எல்லாம் நேரம் டா சாமி “ என்று கருவிக்கொண்டே உண்டாள்.. மனோ பொத்தாம் பொதுவாக தலையை உருட்டினான் ரீனா பேசுவதற்கெல்லாம்.

அனைவரும் உண்டு முடித்துவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். மித்ராவின் இதயமோ வேகமாக துடித்தது.. “ ஹோ !!! மனு  ப்ளீஸ் கொஞ்சம் வெளிய போயிட்டு வாயேன்… ஏன் இப்படி பண்ணுற ??? கடவுளே எனக்கு கொஞ்சம் நல்ல வழி காட்டு சாமி “ என்று வேண்டினாள்.

அவள் வேண்டிக்கொண்டு இருக்கும் அதே நேரம் மனோவின் அலைபேசி அழைத்தது..  “ ஹலோ  சொல்லுங்க…” என்று பேசியவனின் முகம் உடனே மாறியது..

“ எப்படி ஆச்சு.. சரி சரி.. நான் உடனே அங்க வரேன்.. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்.. முதல்ல என்ன பார்மாலிட்டி இருக்கோ அதெல்லாம் முடிங்க..” என்று கூறியபடி எழுந்து நின்றான்..

மித்ராவோ மனோ கிளம்ப போகும் தருணத்தை எதிர்நோக்கி நின்றாள்.. “ ஆன்ட்டி சாரி ஆன்ட்டி. அங்க பாக்டோரில கொஞ்சம் ப்ரோப்ளம். நான் உடனே போகணும். மித்து நீயும் கிளம்பு உன்னைய வீட்டுல விட்டிட்டு போறேன் “

“ ஹ்ம்ம் இது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல மனோ.. வந்து முழுசா ஒரு மணி நேரம் கூட இருக்கல. இதுவே உன் அங்கிள் இருந்தா இப்படி நடந்துப்பியா???”

“ ஐயோ ஆன்ட்டி.. ப்ளீஸ்.. நான் கொஞ்ச நேரம் சேர்த்து இருக்கணும்னு தான் மதியம் வந்ததே. பட் இது நாங்களே எதிர்பார்க்காத ஒன்னு.. சோ ப்ளீஸ் ” என்று கூறியபடி மித்ராவை பார்த்தான்..

“ அவளை என்ன பாக்குற, முக்கியமான வேலைன்னா நீ கிளம்பு. மித்ரா இங்க இருக்கட்டும்.. சாயங்காலம் வந்து அழைச்சுக்கிட்டு போ “ என்றார் நிர்மலா கட்டளையாக கூறி மித்ராவின் நெஞ்சில் பாலை வார்த்தார்..

“ நோ நோ  ஆன்ட்டி.. மித்ராக்கு அங்க நிறைய வேலை இருக்கு.. கிளம்பு மித்து.. என்ன நின்னு வேடிக்கை பார்க்கிற.?? “ என்றான். அவளோ திரும்பி நிர்மலாவை பார்த்தாள்.

ரீனா “ மன்னோ… நாங்க ஒன்னும் உங்க  மனைவியை கடிச்சு தின்னுற மாட்டோம். நீங்க கிளம்பி உங்க வேலைய பார்க்க போங்க. மித்ரா நீ இரு. சாயங்காலம் போகலாம்..”

மித்ராவோ என்ன சொல்வது என்று தெரியாமல் இரண்டு பக்கமும் பார்த்தபடி நின்று இருந்தாள்.. மனோவிற்கு இத்தனை நாள் இவளை பாதுகாத்தோம். இன்று ஒரு நாள். ஒரே ஒரு நாள், இன்று மட்டும் மித்ராவை கவனமாக இருக்க வைத்துவிட்டாள் போதும் என்று தோன்றியது..

“ இல்ல.. ஆன்ட்டி.. அவள் என் கூட வரட்டும் “ என்று பிடிவாதமாய் இருந்தான். நிர்மலாவும் சற்றும் விட்டு குடுக்கவில்லை. இறுதியில் மனோ  மித்ராவை தனியாக் அழைத்து “ மித்து நீ இங்க இருக்கியா ??” என்றான், ஆனால் அவன் குரலோ வந்துவிடேன் என்று கூறியது.

“ நான் என்னைய பார்த்துக்கிறேன் மனு. நீங்க போயிட்டு வாங்க..”

“ இல்ல மித்து… சரி விடு.. கொஞ்சம் நேரம் மட்டும் தான் நான் அங்க போயிட்டு திவா இல்ல மருது ரெண்டு பேருல யாரையாவது அனுப்பி வைக்கிறேன். அவங்க வந்து கூப்பிட்டா மட்டும் தான் நீ இங்க இருந்து கிளம்பனும். அப்படி இல்லாட்டி எத்தனை நேரம்னாலும் நானே வருவேன் சரியா.. பாத்து இரு டா “ என்று கூறி அவள் தலையை தடவினான்..

அவன் கரிசனத்தை கண்டு மனம் கலங்கியது.. ஆனாலும் வெளி கட்டாமல் “ நீங்க எதுக்கும் பயப்படவேண்டாம். என்னைய நான் பார்த்துப்பேன்.. எனக்கு எதுவும் ஆகாது மனு” என்று விடை கொடுத்தாள் மித்ரா..

மனோ திரும்பி பார்த்து கொண்டே சென்றான்.. மித்ரா அவன் செல்வதையே பார்த்தபடி நின்று இருந்தாள். இதை எல்லாம்சற்று தொலைவில் இருந்து பார்த்த ரீனாவும் நிர்மலாவும் மனதில் கடு கடுத்தனர்.

இருவரும் மனோ மித்ராவை பற்றி பொரிந்து தள்ளி கொண்டு இருந்தனர் மித்ரா உள்ளே வரவும் ரீனா பேச்சை மாற்றும் பொருட்டு, “ அம்மா நான் வரும் போது மதர் சுப்பீரியரை பார்த்தேன் “ என்று ஏதோ கூறிக்கொண்டு இருந்தாள்..

இது தனக்கு தேவை இல்லாத பேச்சு என்று எண்ணி மித்ரா தன் யோசனையில் இருந்தாள்.. “ அப்படியா ??? என்ன சொன்னங்க மதர் ??” என்று வினவினர் நிர்மலா.

“ அம்மா அவங்களுக்கு என்னைய பார்த்தா எப்படி இருக்கும்னே தெரியல மா.. என்னைய போய் ஒரு தொண்டு நிறுவனம் நடத்துற ஸ்கூல்ல வேலைக்கு போக சொல்லுறாங்க. அதுவும் எங்கயோ வயலூர்ல இருக்கிற ஸ்கூல்லாம்.. அங்க போனாலாவது என் நடவடிக்கை எல்லாம் மாறுமாம். என்ன கொழுப்பு பாத்திங்களா மா.. நான் ஏன் அங்க போகணும்..” என்று தன் தாயிடம் கொஞ்சி கொண்டு இருந்தாள்.

மித்ராவின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது.. சாதரணமாக கேட்பது போல “ என்ன சொல்லுற ரீனா ??” என்று வினவினாள். மீண்டும் ரீனா ஒரு முராரி பாடினாள்..

நிர்மலாவோ “ சரி விடு ரீனா.. “ என்று சமாதானம் செய்தார்.. “ என்ன விடுன்னு ஈஸியா சொல்லிட்டிங்க மா.. ஆனா அந்த மதர் விசிடிங் கார்டு எல்லாம் குடுத்து, கண்டிப்பா போ சொல்றாங்க “ என்றபடி அந்த கார்டை தூக்கி போட்டாள்..

ஆகா பழம் நழுவி பாலில் விழுகிறதே என்று எண்ணினாள் மித்ரா. மற்ற யாரும் அறியமால் அந்த கார்டை எடுத்து தன் கைப்பையில் பத்திரம் செய்து கொண்டாள்.

சிறிது நேரம் இருந்தவள், பின் வேலை இருக்கிறது, தலை வலிக்கிறது, அது இது என்று கூறி தன் துணிகளை வாங்கி கிளம்பிவிட்டாள். ரீனா உடன் வருகிறேன் என்று கூறியதற்கும் வேண்டாம் என்று பிடிவதாமாய் மறுத்துவிட்டாள்.

“ பஸ் மாறியாவது போயிடனும் “ என்று எண்ணிக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டாள்..

“ என்ன டி இது.. இந்த மித்ரா இங்க இருப்பா அவளை நல்லா குழப்பி விடலாம்னு பார்த்தா இப்படி கால்ல சுடு தண்ணி கொட்டினது மாதிரி கிளம்பிட்டா “ என்று முகம் நொடித்தார் நிர்மலா..

“ விடுங்கம்மா” என்று மகள் பதில் அளித்தாள்..

 

மன்னித்து விடு மன்னவனே..

காதலில் கலந்துவிட நாம் நினைக்க

விதியோ விலக்கி வைக்க துடிக்கிறது..

இது நீ செய்த பாவமோ ??

நான் செய்த குற்றமோ ??

இல்லை நம் காதல் வாங்கி வந்த வரமோ ??

                               மாயம் – தொடரும்                              

                                                                                                

 

                          

       

                 

                                                                                   

           

                                       

                

Advertisement