Advertisement

     மாயவனோ !! தூயவனோ !! – 24

 “ என்னா கண்ணு சொல்லுற ??? நீ சொல்லுறது எல்லாம் நிஜமா ?? எல்லாம் சினிமாவில பாக்குறது மாதிரி இருக்கு.. உன் நிஜ பெயரு மித்ரா வா ??” என்று தன் வாயில் கை வைத்து அதிசையித்தார் தனம்..

“ ஆமாம் கா.. முதல்ல நீங்க என்னைய மன்னிக்கணும்.. நான் யாரு என்னன்னு தெரியாமையே, எனக்கு உங்க வீட்டுல இடம் குடுத்திங்க.. நான் உங்ககிட்டயாவது உண்மைய சொல்லி இருக்கனும். ஆனா மதர் தான் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் சொன்னாங்க கா”

அவள் குரலிலும் முகத்திலுமே மனதில் அவள் எத்தனை வேதனைகளை சுமந்து கொண்டு இருக்கிறாள் என்று தனம் புரிந்து கொண்டார்.. மேலும் போட்டு அவளை வாட்ட விரும்பாமல்

 “ ஹ்ம்ம் சரி விடு கண்ணு.. நடந்தது நடந்திடுச்சு.. நானும் உன் புருஷன் வெளிநாடுல இருக்கிறதா நினைச்சு இத்தனை நாள் என்ன என்னவோ பேசிட்டேன். அப்போ எல்லாம் உன் மனசு என்ன வேதனை பட்டு இருக்கும்னு இப்போதான் புரியுது..”

“ ஆனா ஒன்னு கண்ணு அந்த சுந்தருக்கு நல்ல சாவே வராது.. வாழ வேண்டிய பிள்ளைங்களை இப்படி படுத்தி எடுத்து வச்சு இருக்கானே.. ஆனா நீ எதுவும் கவலை படமா இரு கண்ணு… உன் புருசனுக்கு எதுவும் ஆகாது.    ” என்று பெரியமனுசியாய் அவளுக்கு ஆறுதல் கூறினார்..

தன்னை திட்டுவார், இத்தனை நாள் உண்மையை மறைத்ததற்கு கடிந்துகொள்வார் என்றெல்லாம் நினைத்து இருந்த மித்ராவிற்கு தனத்தின் இந்த பேச்சு அதிர்ச்சியை குடுத்தது..

 “ ஹ்ம்ம் எனக்கு மத்தவங்களை பத்தி எல்லாம் கவலை இல்லைக்கா.. என் மனுக்கு மட்டும் எதுவும் ஆக கூடாது அவ்வளோதான். ஆனா அக்கா உங்களுக்கு என் மேல கோவமே இல்லையா ?? “ என்று வினவினாள்..

“ ஹ்ம்ம் கோவப்பட்டு என்ன கண்ணு ஆகபோகுது.. உன்னைய விட சின்ன வயசுல நான் நிறைய கஷ்டத்தை பார்த்து இருக்கேன்.. கோவத்துனால எதுவும் செய்ய முடியாது கண்ணு.. அன்பால தான் அரவணைக்கணும்.. இப்போ நான் உன் மேல கோவப்பட்டா உன் மனசு இன்னும் வேதனை தானே படும். பாவம் நீயே புருஷனை விட்டு பிரிஞ்சு வந்து இருக்க “  என்று ஆதரவாய் அவர் கூறவும் அவர் மடியில் தலை சாய்ந்துகொண்டாள்..

“ ஹ்ம்ம்.. தேங்க்ஸ் கா.. எனக்கு மனசுக்குள்ள ரொம்ப உறுத்தலா இருந்தது. அதான் உங்க கிட்ட எல்லாம் சொன்னேன்.. இப்போ தான் மனசுக்கு கொஞ்சம் ப்ரீயா இருக்கு கா.. என்னைய சரியா புரிஞ்சுகிட்டிங்களே.. எனக்கு அது போதும் “

“ அடடா… விடு கண்ணு.. சூழ்நிலை ஒவ்வொருத்தருக்கும் ஒருமாதிரி அமையும். அதுல இருந்து நம்ம நிறைய விஷயங்கள் கத்துக்கலாம்.. ஆனா நம்ம என்ன கத்துக்கிறோம்னு தான் முக்கியம்.. நான் என் வாழ்கையில படிச்ச ஒரு பாடம், எல்லா மனுசங்க மேலயும் அன்பு காட்டனும். பலனை எதிர்பார்க்காம உதவி செய்யனும் அவ்வளோதான்..”

தனத்தின் இந்த வார்த்தைகள் மித்ராவின் மனதில் சிறு தெம்பை குடுத்தது.. அவள் மனதில் தனத்தின் மேல் இருந்த மதிப்பீடு இன்னும் உயர்ந்தது.

“ மனோ கூட இப்படிதானே என்கிட்டே எதையும் எதிர்பார்க்காம தானே எல்லாம் செஞ்சான். ஆனா நானா அவனுக்கு என்ன குடுத்தேன்.. அவன் நிம்மதியை பறிச்சிட்டு வந்துட்டேன் “ என்று எண்ணியவள் கண்களில் கண்ணீர்.

“ ஆரம்பிச்சுட்டியா ?? ஹ்ம்ம் இப்படி எப்ப பாரு அழுதுகிட்டே இருந்தா என்ன கண்ணு அர்த்தம் ?? இங்க பாரு.. மனசை தேத்திக்க.. நடக்குறது எல்லாம் நல்லதுக்குனு நம்பிக்கை வை. அந்த நம்பிக்கையே ஒருநாள் உன் புருஷன் கிட்ட உன்னைய சேர்த்து வைக்கும்.. ” என்று ஆறுதல் கூறினார்..

“ சரி சரி நீ இப்படியே இருந்தா சரிபட மாட்ட.. வா வா ஸ்கூல்க்கு போகலாம். நாளைக்கு கேம்பிற்கு எல்லாம் வருவாங்க..  எல்லா ஏற்பாடும் செய்யணும்..”

“ ஆமா கா.. மறந்தே போயிட்டேன்.. மதர் போன் செஞ்சு இருந்தாங்க.. நம்மலை  வர சொன்னங்க.. “ என்று கூறியபடியே மித்ரா எழுந்து நிற்க,

“ நல்ல பொண்ணு.. இப்பவாது சொன்னியே.. புருஷனை நினைச்சிட்டா வேற எதுவும் சிந்தனை இல்லை..  “ என்று தனம் கேலி செய்ய மித்ராவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது..

மதியம் இரண்டு மணி வரைக்கும் வேலை நெட்டி முறித்தது.. தனம், மித்ரா, மதர், பிறகு இன்னும் இரண்டு வேலை ஆட்கள் என அனைவரும் சேர்ந்து வேலைகளை செய்தனர்..

யாரும் இல்லாத நேரத்தில் தனம் மீரா என்று அழைக்காமல் மித்ரா என்று அழைப்பதை பார்த்தே மதர் புரிந்துகொண்டார்..

“ என்ன தனம் எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சா?? “

“ ஆமா மதர்.. காலையில தான் இந்த மீரா… இல்ல இல்ல மித்ரா பொண்ணு எல்லாம் சொல்லுச்சு.. பாவம்.. அதுவும் என்ன செய்யும்.. புருசனுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு இப்படி பண்ணிடுச்சு..”

“ எல்லாம் சரி தான் தனம், ஆனா ரெண்டு பேருமே வாழ வேண்டிய வயசு.. நான் சொல்லி பார்த்துட்டேன்.. ஆனா மித்ரா கேட்கிற மாதிரி இல்ல.. ஒரு தரம் மித்ரா ஹஸ்பன்ட் கிட்ட பேசுனா எல்லாம் சரியாய் போகும்னு என் எண்ணம்..”

“ நீங்க சொல்லுறதும் சரிதான் மதர். ஆனா மித்ரா கண்ணு ரொம்ப மனசு நொந்து போயி இருக்கா… அதான் நான் கடிசா கூட பேசுறது இல்ல… “

“ ஹ்ம்ம் ரெண்டு பேருக்குள்ளையும் பாசம் வந்திடுச்சா ?? நல்லது தான்.. ஆனா நீ இதுல அவ வாழ்க்கைய பார்க்கணும்.. முடிஞ்சா நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லு “ என்று கூறியபடி சென்று விட்டார்..

“ நான் சொல்லி இந்த மித்ரா பொண்ணு கேட்குமா என்ன ??” என்று யோசனையில் வேலையை தொடர்ந்தார்..

மித்ராவும் பார்த்துகொண்டு தான் இருந்தாள் மதரும், தனமும் பேசுவதை.. அவள் உள் மனமோ தன்னை பற்றி தான் பேசுவார்களோ என்று கேட்டது.. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வேலையில் கவனம் செலுத்தினாள்..

“ மித்ரா கண்ணு போகலாமா ??? நாளைக்கு வேகமா வந்திடனுமாம்.. கேம்பிற்கு வரவங்க எல்லாம் இன்னிக்கு ராத்திரி கிளம்பி நாளைக்கு விடிய வந்திடுவாங்கலாம்.. “ என்று கூறியபடி மித்ராவை அழைத்துக்கொண்டு தன் இல்லம் நோக்கி நடந்தார் தனம்..

சிறிது நாட்களாகவே மித்ராவின் மனம் மிகுந்த சஞ்சலம் அடைந்தது.. அது இன்னது என்று அவளால் விளக்க முடியவில்லை. அந்த சஞ்சலமே இன்று தனத்திடம் தன்னை பற்றிய உண்மைகளை கூற வைத்தன.. இது தான் என்று கூற முடியாத ஒரு அழுத்தம் நெஞ்சை பிடித்து இறுக்குவது போல இருந்தது..

“ மனு… ஐம் ரியலி சாரி.. உங்களை விட்டு எப்படியாவது இருக்க பழகிடணும்னு தான் வந்தேன்.. ஆனா என் வைராக்கியம் தோற்றது.. என் மனசு இப்போ எல்லாம் ரொம்ப பலவீனமா இருக்கே.. நான் என்ன செய்யட்டும்.. நீங்க நிஜமாவே என்னைய வெறுத்துட்டிங்கலா ??” என்று எங்கோ இருக்கும் மனோவிற்கு மனதில் பேசி கொண்டு இருந்தாள்..

இப்படி இவள் வயலூரில் இருந்து புலம்புவது அங்கே மனோவிற்கு கேட்டதோ என்னவோ இறைவனுக்கு கேட்டது.. விதி மெல்ல மித்ராவை பார்த்து புன்னகைதுக்கொண்டது.

மித்ராவின் அறையில் விளக்கு எறிவதை கண்ட தனம் “ இந்தா கண்ணு இன்னும் தூங்கலையா ??? சீக்கிரம் படுத்து தூங்கு நாளைக்கு வேகமா போகணும் “ என்று அதட்டவும் தன் நினைவுகளை விடுத்து கண்கள் மூடி கொண்டாள்..

ஆதவன் அழகாய் தன் கரங்களை விரித்து பூமி பெண்ணை அணைத்துகொண்டான்..  சிலு சிலுவென்ற காற்று ஜென்னல் பக்கம் எட்டி பார்க்க, இனிய உறக்கத்தில் இருந்தாள் மித்ரா.. அவளது கனவிலும் கற்பனையிலும் அவளது கணவனே நிறைந்து இருந்தான்..  

தனம் வந்து இரு முறை மித்ராவை எட்டி பார்த்தார்.. மூன்றாவது முறை மெல்ல “ மித்ரா கண்ணு… எழுந்திரி மா.. வேகமா போகணுமே.. நான் சமையல் எல்லாம் முடிச்சுட்டேன் “ என்று எழுப்பவும் அடித்து பிடித்து எழுந்தாள் மித்ரா..

“ சாரி கா.. நான் இதோ இதோ பத்து நிமிஷத்தில ரெடி ஆகிடுறேன்
என்று குளியறைக்குள் ஓடினாள்..

மதர் மிகவும் பரபரப்பாக காணப்பட்டார்..  மி.. மீரா “ எல்லாம் ரெடியா ??”

“ ஆமாம் மதர்”

“ ரூம்ஸ் எல்லாம் சுத்தமா தானே இருக்கு.. பாத்ரூம் எல்லம் நீட்டா இருக்கு தானே.. “

“ நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன் மதர்.. சரியா தான் இருக்கு.”

“ குட்.. இன்னும் பத்து நிமிஷத்தில் எல்லாரும் வந்திடுவாங்க.. மொத்தம் முப்பது பேர் வராங்க. எல்லாருமே நமக்கு டொனேசன் குடுக்கிற குடும்பத்தை சேர்ந்த பசங்க தான்.. ஆனாலும் வருசா வருஷம் கேம்ப் வருவாங்க.. நல்லபடியா கவனிச்சு அனுப்பனும் “என்று கூறியபடி நடந்தார்   

“ சரி மதர்.. நான் போயி இன்னொரு தரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்திட்டு வரேன் “

“ வேண்டாம்.. நான் போயி பார்கிறேன்.. நீ வரவங்களை ரீசிவ் பண்ணு.. “

“ சரிங்க மதர்..”

ஆர்பாட்டமாக, ஆரவாரத்துடன் வந்து நின்றது ஒரு சுற்றுலா பேருந்து.. பேருந்தின் சத்தத்தை கேட்டு மித்ரா வேகமாக வாயிலுக்கு சென்றாள்.. இன்ன பிற ஆசிரியைகளும் உடன் சென்றனர்..

ஒவ்வொரு நபராக கீழே இறங்கி கொண்டு இருந்தனர்.. அணைத்து வயதினரும் கலந்து இருந்தனர்.. அதிலும் கல்லூரி மாணவர்களே அதிகம். குழுவாகவோ, இல்லை குடும்பத்தில் இருவாரகவோ வந்து இருந்தனர்..

இப்படியாக வந்தவர்களை வரவேற்று இன்முகத்துடன் உள்ளே அனுப்பிக்கொண்டு இருந்தாள்.. ஆனால் கடைசியாக இறங்கிய இருவர்களை கண்டு மித்ரா திகைத்து நின்றாள்.

இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது திகைத்த பார்வையிலேயே தெரிந்தது.. வந்தது வேறு யாருமில்லை கிருபாவும் பிரபாவும் தான்..

“ கடவுளே.. இவங்கரெண்டு பேரும் எப்படி இங்க வந்தாங்க.. ஒருவேளை இது மதர் ஓட வேலையா இருக்குமோ ?? இல்லை இல்லை… தனம் அக்கா மத்ர்கிட்ட ஏதாவது சொல்லி இருப்பாங்களோ??” என்று யோசித்தவள் ஒரு நிமிடத்தில் தன்னை சுதாரித்து கொண்டாள்..

“ இவனுங்க ரெண்டு பெரும் என்னைய பார்க்குறதுக்கு முன்னாடி நான் வீட்டுக்கு போயிடனுமே..” என்று அவசரமாக உள்ளே திரும்பவும்

“ மேம் ஒரு நிமிஷம் “ என்ற குரல் அழைத்தது..  ஆனால் அது காதில் விளுவாதது போல நடையை கூட்டினாள்.. “மேம் உங்களை தான்.. ஒரு நிமிஷம் “

“ கடவுளே என்னைய ஏன் இவ்வளோ சோதனை பண்ணுற ?? யாராய் இருக்கும்” என்ற யோசனையோடு திரும்பினாள் மித்ரா..  ஆனால் அழைத்தது வேறு யாரோ..

ஒரு பெருமூச்சை விட்டு “ சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேண்டும் ??”

“ இல்ல மேம் எங்களோட ரூம் கீ உங்ககிட்ட இருக்குன்னு சொன்னாங்க.. அதான் “

“ ஓ !!! சாரி சாரி.. இதோ என்கூட வாங்க “ என்று கூறியபடி நடந்தவளின் பார்வை பிரபாவையும் கிருபாவையும் தேடியது.. “ எங்க போனானுங்க??? ஒருவேளை உள்ளே போயிட்டானுன்களோ ??”

“ இதோ.. இது உங்களுக்கான ரூம்.. சரியா இன்னும் ஒரு மணி நேரத்தில் ப்ரேக் பாஸ்ட் ரெடியா இருக்கும்..” என்று சிரித்தபடி பதில் கூறிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகண்டு வந்தாள்..

ஆனால் அவள் அறியவில்லை மித்ராவை பிரபாவும் கிருபாவும் பார்த்ததும், உடனே அவர்கள் அண்ணனுக்கு தெரிவித்ததும்..

“ எங்க போனாங்க ?? என்னைய பார்கிறதுக்கு முன்ன நான் வீட்டுக்கு போகணுமே ” என்று யோசித்தபடி நடந்தவள் எதிரே வந்தவர்களை கவனிக்கவில்லை.. இடித்துக்கொண்டு “ சாரி சாரி “ என்று நிமிர்ந்தவள் மீண்டும் அதிர்ந்தாள்..

யாரை தேடிக்கொண்டு வந்தாலோ அவர்களே எதிரில் நின்று இருந்தனர்.. “ பிரபா !!! கிருபா !!!” என்றாள் திகைத்து..

கிருபா கோவமாக முறைக்க சிறுவன் பிரபாவோ “ அண்ணி “ என்று கைகளை பிடித்துக்கொண்டான்.. இப்பொழுதுதான் தன்னை கண்டுள்ளனர் என்று எண்ணி மித்ரா

 “ பிரபா, கிருபா… நீ.. நீங்க எங்கடா இங்க ?? “ என்று அதிர்ச்சியாய் வினவியவள் சட்டென்று இருவரின் கைகளையும் பிடித்து தன் தலைமேல் வைத்து “ நான்.. நான் இங்க இருக்கிறதை உங்க அண்ணன்கிட்ட சொல்ல கூடாது. இது என் மேல் சத்தியம் “ என்றாள் தீவிரமாக..

உடன் பிறப்புகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒரு பார்த்துவிட்டு பொதுவாக தலையை ஆட்டினார்..

“ அண்ணி எப்படி இருக்கீங்க ??” என்று தன் கோவம் விடுத்தது வாயை திறந்தான் கிருபா..

“ நான்.. ம்ம்ச் அதை எல்லாம் விடு கிருபா.. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க ?? உன்.. உங்க அண்ணன்?? அவங்களுக்கு எதுவும் ஆகலையே.. நல்லா தானே இருக்காங்க ??” என்று தவிப்போடும், கண்ணீரோடும் கேட்பவளை இருவருமே பரிதாபமாக பார்த்தனர்..

“ டேய் என்னடா இப்படி பதில் சொல்லமா இருந்தா என்ன அர்த்தம்?? உங்க அண்ணன்.. மனு எப்படி இருக்காங்க ???” என்று அதட்டினாள்

“ அண்ணன் தானே நல்லா இருக்காங்க.. ரீனா தான் அண்ணனை நல்லா பார்த்துக்கிறா “ என்று வேண்டும்மென்றே ஒரு இடைச்சொருகளை சொருகினான் கிருபா..

“என்ன ரீனாவா ??”

“ ஆமா அண்ணி!!! நீங்க அவங்க வீட்டுல இருந்து தானே கிளம்பி போனிங்க… அதான் தப்பு பண்ணதுக்கு பிராயசித்தமா ரீனா இப்போ அண்ணனை கவனிக்கிற பொறுப்பை ஏத்துக்கிட்டா “ பிரபாவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.. அதன் பிறகு கிருபாவின் பார்வையை கண்டு அமைதியாகி விட்டான்..

“ ஓ !! “

“ சரி விடுங்க அண்ணி.. உங்களுக்கு அண்ணனை பிடிக்கல.. அதுனால கிளம்பி வந்துட்டிங்க.. இனியென்ன செய்ய முடியும்.. முதல்ல எங்களுக்கு கூட ரீனாவை பிடிக்காம தான் இருந்தது. ஆனா இப்போ நாங்களே அவளை ஏதுக்கலையா ??? சோ நீங்க கவலையே படவேண்டாம் அண்ணி.. உங்களை பார்த்ததையோ உங்ககிட்ட பேசுனதையோ நாங்க மூச்சுக்கூட விடமாட்டோம். இல்லடா பிரபா “

“ ஆமா அண்ணி… நீங்க கவலையே படவேண்டாம்.. இங்க நிம்மதியா இருங்க.. என்.. எனக்கு பாடம் கூட இப்போ எல்லாம் ரீனா தான் சொல்லி குடுக்கிறா.. எவ்வளோ பொறுமையா சொல்லி தரா தெரியுமா ??? திவா கூட இப்போ ரீனாகிட்ட நல்லபடியா பேசுறான்.. அதைவிட மனோ அண்ணா தான்..   ” என்று இருவரும் மாற்றி மாற்றி ரீனா புராணம் பாட மித்ராவிற்கு அய்யோ என்று இருந்தது..

அவளது உணர்வுகள் அவளுக்கு புரியவில்லை.. கோவம், ஆத்திரம், பொறாமை                                                         அழுகை, என அனைத்தும் மாறி மாறி தோன்றின.. அவளது முகத்தை பார்த்த இருவரும் ரகசியமாய் புன்னகைத்து கொண்டனர்.  

பதில் எதுவும் கூறாமல் இருவரையும் மாற்றி மாற்றி மிரண்டு போய் பார்த்தபடி இருந்தாள். “ விடுங்க அண்ணி… எதுக்கும்  டென்சன் வேண்டாம். இங்க நாங்க கேம்பிற்கு தான் வந்தோம், வந்த இடத்துல உங்களை பார்த்தோம், அவ்வளோதான்.. திவா வேற டெல்லி போயிட்டான் மீட்டிங்க்கு. ரீனா நல்லபடியா அண்ணனை கவனிக்கிறேன்னு சொல்லி தான் எங்களை அனுப்பி வைத்தாள் “ என்று மெல்ல மெல்ல இடியை இறக்கினான் கிருபா..

“ என்ன ??? “

“ அட ஆமாம் அண்ணி.. இனிமே அண்ணனும் உங்களை தொல்லை செய்யமாட்டார். அதான் எல்லாத்தையும் தெளிவா லெட்டர்ல எழுதி இருந்திங்களே.. சோ நீங்க இங்க நிம்மதியா இருக்கலாம் அண்ணி..” என்று தெளிவாக பேசும் கிருபாவை வலி நிறைந்த பார்வையோடு பார்த்துவிட்டு நகர்ந்து போனாள் மித்ரா..

“ மனு… என் மனு.. நான்.. இனிமே என்ன செய்றது ??? மனு.. நான் உங்க நல்லதுக்காக தானே வந்தேன்.. நோ.. யார் வந்தாலும் என்னைய போல உங்களையும் உங்க குடும்பத்தையும் கவனிக்க முடியாது மனு… அந்த லெட்டர்ல இருந்ததை நீங்களும் நம்பிட்டிங்களா மனு ??? ஐயோ !!!” என்று தன் மன குமுறல்களை வெளியே காட்டவும் முடியாமல் உள்ளே விழுங்கவும் முடியாமல் தவித்து இருந்தாள்..

“ என்ன கண்ணு மித்ரா… அங்க எல்லாம் சாப்பிட வந்துட்டாங்க.. நீ என்ன இங்க தனியா நின்னுட்டு இருக்க ?? “

“ ஹா !! ஒண்ணுமில்ல கா.. சும்… சும்மா தான்.. எல்லாரும் சாப்பிட வந்துட்டாங்களா ??”

“ ம்ம்.. என்னானு இப்போ சொல்லு.. நீ ஒண்ணுமில்லன்னு சொன்னாலே அதுல ஆயிரம் இருக்கும்னு எனக்கு தெரியாத என்ன??”

“அது வந்து கா.. அது “

“ அடடா…. இப்போ சொல்ல போறியா இல்லையா ??”

“ அது அவரோட தம்பிங்க ரெண்டு பேரும் கேம்பிற்கு வந்து இருக்காங்க.. அதான் “

“ அட… நிஜமாவா.. பாத்தியா.. காலையில தானே சொன்னேன் நம்பிக்கை வையின்னு.. இப்போ பாரு.. இனியென்ன.. போ போயி உன் கொளுந்தனுங்க கிட்ட பேசு.. அடுத்து உன் புருஷனை வர சொல்லு “

“ இல்ல கா.. அது அது நடக்காது..”

“ ஏன் ???”

“ நான்.. நான்.. அவரை வெறுத்து வெளிய வரது மாதிரி லெட்டர் எழுதி வச்சிட்டு கிளம்பி வந்தேன்.. எல்லாரும் அதை தான் உண்மையின்னு நம்பிட்டு இருக்காங்க.. “

“ அடிப்பாவி மகளே !!! இப்படியா உன் வாழ்கையில நீயே நெருப்பு வாரி போடுவ ??? இங்க பாரு மித்ரா எல்லாருக்கும் ரெண்டாவது வாய்ப்பு கிடைக்காது. ஆனா உனக்கு இப்போ கிடைச்சு இருக்கு.. ஒழுங்கா நீ உன் வீட்டு ஆளுங்களோட பேசி நல்ல படியா வாழ்கை நடத்த பாரு.. “

….

“ என்ன அமைதியா நிக்கிற.. இப்போ நீ பேசுறியா ?? இல்ல நான் போயி அந்த பசங்க கிட்ட பேசவா ??” என்று அதட்டவும்

“ அய்யோ அக்கா அப்படி மட்டும் ஏதாவது பண்ணிட வேண்டாம்.. ப்ளீஸ்.. அங்க.. அங்க.. அவர் நல்லா தான் இருக்கார்.. நான் அவங்ககிட்ட இப்ப பேசிட்டு தான் வரேன்.. ஆனா அக்கா இப்ப நீங்க மட்டும் இப்படி ஏதாவது பண்ணுனா நான்.. நான்… இங்க இருந்தும் கிளம்பிடுவேன்.. இது சத்தியம் “
என்று சற்றே திடமாக மித்ரா கூறவும் தனத்திற்கு இதற்கு மேல் என்ன கூறுவது என்று தெரியவில்லை..

இங்கிருந்தும் இவள் கிளம்பி விட்டால் என்ன செய்வது என்று யோசித்தார். பதில் எதுவும் கூறாமல் “ இது உன் வாழ்க்கை பார்த்து நடந்துக்கோ “ என்று மட்டும் கூறி சென்று விட்டார்..

ஆனால் மித்ராவின் மனமோ அமைதி இல்லாமல் தவித்தது.. “ கடவுளே இந்த விஷயம் மதர்க்கு தெரிய கூடாது. சும்மாவே என்னைய ஊருக்கு போக சொல்லிட்டு இருக்காங்க. இதுல கிருபாவும் பிரபாவும் இங்க வந்து இருக்கிறது தெரிஞ்சா அவ்வளோதான்..” என்று இறைவனை துணைக்கு அழைத்துக்கொண்டு தன் வேலையை தொடர சென்றாள்..

“ டேய் கிருபா , நீ ஏன் டா அண்ணி கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொன்ன. பாரு அண்ணி எவ்வளோ டென்சன் ஆகிட்டாங்க.. ஏன் டா பொய் சொன்ன ??” என்று எகிறி கொண்டு இருந்தான் பிரபா…. “

“ ஹா ஹா டேய் தம்பி பையா !!! இதுக்கு தான் நீ இன்னும் வளரனும்… அண்ணி என்ன எழுதி இருந்தாங்க லெட்டர்ல ??? அண்ணன் மேல வெருப்பா எழுதி இருந்தாங்க.. ஆனா இப்போ பாரு ரீனா அங்க இருக்கான்னு சும்மா ஒரு பிட்ட போட்டதும் எப்படி முகம் மாறிச்சு.. இதுவே போதாதா அண்ணன் மேல அண்ணிக்கு வெறுப்பு இல்லைன்னு.. அதான் சும்மா அப்படி சொன்னேன்..”

“ ஆனா அண்ணி அதை நிஜம்னு நம்பி வேற ஏதாவது முடிவு எடுத்துட்டா என்ன டா செய்யுறது ??”

“ அதெல்லாம் எடுக்கமாட்டாங்க டா.. அண்ணன் தான் இப்படி பேச சொன்னதே.. அண்ணி கிட்ட நம்ம ஊருக்கு வாங்க, அப்படி இப்படின்னு சொன்னா என்ன செய்வாங்க நாளைக்கே கிளம்பி வேற எங்கயாவது போயிருப்பாங்க. ஆனா இப்படி பேசுனா தான் வேற வழி இல்லாம இங்க இருப்பாங்க”

“ம்ம்ம் “

“ அதுமட்டும் இல்ல.. முன்ன விட அண்ணனை பத்தி ஓயாம நினைப்பு வரும்.. சும்மாவே அந்த ரீனாவ அண்ணிக்கு பிடிக்காது.. இதுல அவ வேற அண்ணன் கூட இருக்கான்னு சொல்லிட்டோம்ல, அடுத்து பாரு அண்ணி சரியாய் தூங்க கூட முடியாது.. நீ வேணா பாரு டா கேம்ப் முடிஞ்சு போகும்போது நம்ம எல்லாம் ஒண்ணா தான் போவோம்.”

“ ஓ !! இதுல இவ்வளோ விசயம் இருக்கா டா.. அப்போ சரி.. அடுத்து நாம் என்ன செய்யணும் ??”

“ அண்ணிகிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம். நாம் கேம்பிற்கு வந்த வேலைய மட்டும் செய்யலாம்.. அவங்ககிட்ட ஜஸ்ட் மூணாவது மனுசங்க மாதிரி நடந்துக்கிட்டாலே போதும்.. “

“ ஹ்ம்ம் சரி டா.. ஆனா நான் சொதப்பாம இருக்கனும்.. ஏன்னா அண்ணி ரெண்டு வார்த்தை பாசமா பேசுனாலே நான் உண்மைய எல்லாம் சொல்லிடுவேன்..” என்றான் பரிதாபமாக பிரபா..

“ அடேய் அடேய் அப்படி மட்டும் பண்ணிடாதடா… அப்புறம் இத்தனை நாள் நம்ம அண்ணிய தேடுனது எல்லாம் வீணா போயிடும்.. அதுனால தான் நம்ம கொஞ்சம் வீராப்பா இருக்கனும்.. ஒரு ரெண்டு நாளைக்கு டா “ என்று தம்பியை சரிகட்டினான் கிருபா..

மித்ராவிற்கு மிகவும் சோர்வாய் இருந்தது.. உடலில் சோர்வு இல்லையென்றாலும் மனதில் இருக்கும் பாரமே உடலையும் போட்டு படுத்தியது..  சிலு சிலுவென்ற கற்று வீச,  இரவை வெறித்தபடி படுத்து இருந்தாள் மித்ரா..

கண்கள் மூடினால் மனோவும் ரீனாவுமே வந்தனர்.. “ மனு… என்னைய மறந்துட்டிங்களா ?? ஐயோ நான் உண்மை தெரிஞ்சதுனால தான் வந்தேன்னு உங்ககிட்ட எப்படி சொல்லுறது.. நான் உங்களை வெறுக்களை மனு… “ என்று உருப்போட்டப்டி இருந்தாள்..

உறக்கம் அவளோட உரத்து சண்டையிட்டு காத தூரம் ஓடிவிட்டது.. தன் எதிர்காலத்தை எண்ணி முதல் முறையாக அஞ்சினால்.. “ மதர்க்கு மட்டும் தெரிஞ்சா அவ்வளோ தான் இவங்கலோடவே சேர்த்து என்னைய அனுப்பிடுவாங்க.. தனம் அக்கா வேற இப்போ கோவமா இருக்காங்களே.. “

“ நல்ல வேலை இந்த பசங்க கிட்ட சத்தியம் வாங்கிட்டேன்.. இல்ல மனுகிட்ட முதல் வேலையா சொல்லி இருப்பானுங்க.. என்ன நடந்தாலும் சரி, இதுக்குமேலயாவது மனு நிம்மதியா இருக்கட்டும்.. நான் மறுபடியும் அவங்க வாழ்கையில வந்து குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் “ என்று தன் போக்கில் சிந்திதவள் எப்படியோ உறங்கியும் போனாள்..

காலையில் சீக்கிரம் முழிக்கவேண்டும் என்று அலாரம் வைத்து இருந்தவள், அலாரத்தின் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள்..

“ அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா ??? ஹ்ம்ம் “ என்று கண்களை தேய்த்தபடி கண் திறக்காமல் மனோவின் புகை படத்தை தலையணை அருகில் கை வைத்து தேடினாள்.. ஆனலவல் கைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை..

“ இங்க தானே இருக்கும் எப்பயும்.. ஹ்ம்ம் முதல்ல மனு முகத்தை பார்த்தா தான் எனக்கு பொழுதே விடியும் “ என்று கூறியபடி கண்களை மூடியாவரே மீண்டும் துலாவினாள்.. ஒன்றும் கிட்டவில்லை..

“ ம்ம்ச்.. எங்க போச்சு “ என்று கண் திறந்தவள் அதிர்ந்து விழித்தாள்.. புகைப்படத்தை தேடியவளுக்கு நிஜமாகவே காட்சி கொடுத்தான் மனு.. மனோகரன்.. அவள் கணவன்…

“ ஹா !!!!!” என்று திறந்த வாய் மூடவில்லை மித்ராவிற்கு… கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்து இருந்தான் மனோ.. இவள் விழிப்பதற்காகவே காத்திருந்தவன் போல இமைக்காமல் அமர்ந்து இருந்தான்..

கண்கள் சிவந்து, முகம் கறுத்து இருந்ததே நன்றாய் பறைசாற்றியது இரவெல்லாம் இவன் உறங்கவில்லை என்று..

தான் காண்பது கனவா நினைவா என்றே மித்ராவிற்கு புரியவில்லை.. இமைக்க மறந்தாள்.. இதயம் கூட ஒரு நொடி நின்று பின் துடித்தது.. “ மனு !!!” என்று அவள் வாய் முனுமுனுத்தது..

“ மித்ரா கண்ணு.. உனக்கு லீவுன்னு மதர் இப்பதான் சொல்லிவிட்டங்க.. சமையல் எல்லாம் செஞ்சு வச்சுட்டேன்.. எல்லாருக்கும் போட்டு குடுத்துட்டு, நீயும் சாப்பிடு. நான் கிளம்புறேன் “ என்று கூறிக்கொண்டே தனம் கிளம்பிவிட்டார்.

அப்பொழுது தான் கவனித்தாள் கிருபாவும் பிரபாவும் மனோவிற்கு பின்னால் நின்று இருந்தனர்.. அவர்களை ஒரு முறை முறைத்தாள்.. “ நான் என்ன சொன்னேன், நீங்கள் என்ன செய்து உள்ளீர்கள்” என்று

“ ஹி ஹி ஹி அண்ணி, நீங்க எங்ககிட்ட சத்தியம் வாங்குறதுக்கு முன்னவே நாங்க அண்ணனுக்கு போன் பண்ணிட்டோம்.. இல்லடா பிரபா “ என்று கிருபா இழுக்கவும்

“ஆமாம் அண்ணி.. “ என்று ஒத்து ஊதினான் பிரபா..

“ சரி டா பிரபா.. நம்ம கேம்பிற்கு தானே வந்தோம்.. வா அங்க போகலாம்.. இனிமே நமக்கு இங்க எந்த வேலையும் இல்ல “

“ டா டா அண்ணி.. டா டா அண்ணா “  என்று இருவரும் சென்று விட்டனர்.. வீட்டில் மனோ, மித்ராவை தவிர வேறு யாரும் இல்லை..

 

 

 

 

 

 

 

கண்கள் இமைக்க மறந்தேன்

உன்னை கண்டதாலா ???

நெஞ்சம் துடிக்குமோசை கேட்கிறதே

உன்னை கண்டதாலா ???

மாயவனே, என் தூயவனே

மீண்டும் வந்தாயா ??

என்னை மீட்டுக்கொண்டு போக…

 

                           மாயம் – தொடரும்                   

                                       

         

 

                                                                

                                        

   

 

Advertisement