Advertisement

மயங்கினேன்.!கிறங்கினேன்.!
அத்தியாயம் ‌01
சென்னை – திருச்சி செல்லும் ஹைவேசில் அந்த நான்கு சக்கரம் வாகனம சீறி பாய்ந்து கொண்டிருந்தது.
அவனின் மனதிற்கு ஏற்ப அந்த வண்டியும் வேகமெடுத்து செல்ல ,ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடித்து ஓட்டியவன் மறுக்கையில் பீர் பாட்டிலை பிடித்து மொடா குடிக்காரன் போல் குடித்துக் கொண்டிருந்தான்.
அவனின் மனம் முழுவதும் உலையாக கொதித்து கொண்டிருந்தது. அதற்கு மருந்தாக அவனுக்கு பிடித்த பாடலை வண்டியில் இருந்த எஃபம் மூலம் ப்ளுடூத் கனெக்ட் செய்து கேட்டபடி பாடிக்கொண்டிருந்தான்.
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆ ஆ..
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் காதலே
எண்ணம் யாவும்
சொல்ல வா…
என்ற இளையராஜாவின் பாடலை வண்டியில் பாடியவாறே சோகத்தில் கரைந்து கொண்டிருந்தான் அவன். அதற்கு இணங்கவே வானமும் கூட இப்பவா அப்பாவா என்ற நிலையில் மின்னலடித்து மழை வரும் என்ற செய்தியை காட்டிக் கொண்டிருந்தது.
சில்லென்ற காற்று அவனின் தேகத்தை தீண்டி சென்று ,அவனின் ரணமான மனதில் மேலும் ரணம் சேர்த்து கொண்டிருந்தது.
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று நினைத்ததை சாதிக்க முடிந்த அவனால் ,தன் காதலில் தோல்வியுற்றதை எண்ணி எண்ணியே கண்ணீர் விட்டான் வெற்றி என்கிற வெற்றிமாறன்.
அனைவரையும் தன் காந்த குரலால் வசிய படுத்தியவனுக்கு, அவளை வசிய படுத்தும் வழி தெரியாமல் போய்விட ,அந்தோ பரிதாபம் இன்று அவனுக்கு காதல் தோல்வி என்ற நிலையில் நிற்கிறான்.
அதுமட்டுமின்றி இன்று காதல் தோல்வியால் துவண்டு போய் உள்ளவனுக்கு நாளை மறுநாள் அதாவது காதலர் தினத்தன்று அவனுக்கு திருமணம்.
 பெற்றோர்கள் திருமணத்தை பற்றி அவனிடம் பேசியபோது அவனுக்கு காதல் என்ற ஒன்று வரவே இல்லையே. அதனால் தாய் தந்தை திருமண பற்றின பேச்சினை எடுக்கும் போது ‘சரி பாருங்கள் ‘ என்றிருந்தான்.
என்று இவன் திருமணத்திற்கு சரி என்று கூறினானோ அன்று பிடித்தது அவனுக்கு ராகு கேது சனி எல்லாம். 
வாழ்வையே இந்த ஆறு மாதத்தில் அவள் சுரையாடி சென்றிருந்தாள். 
காதலிக்க நேரமில்லை காதலை பற்றிய எண்ணமில்லை காதல் என்ற வார்த்தையே அவன் நினைவில் இல்லாமல் இருந்தவனுக்கு ,காதல் பித்தனாக அவனை அழையவிட்டிருந்தாள் அவள் .
அவனின் எண்ணமும் மனமும் முழுவதும் அவள் !அவள் ! அவள் ! அவனின் இசை மட்டுமே. 
அவனின் குரலில் மீது அனைவரும் மயங்கி இருக்க ,அவனோ அவள் மீது காதல் பித்தனாக கிறங்கி போய் அழைகிறான் வெற்றி.
 வெற்றி என்பவன் பெயருக்கு ஏற்றாற்போல் தோல்வியில் இருந்தே வெற்றிக்கு முதல் படி எடுத்து வைத்து வெற்றியை பெற்றவன். தன் பேச்சினாலே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் திறன் கொண்ட இருபத்தியெட்டு வயதுடைய ஆண் அழகன்.
‘இசை ‘
‘இசை ‘
‘இசை ‘
அவனின் உதிரத்தில் இருந்த ஒவ்வொரு அணுக்களும் அவளின் பெயரை கொண்டே உடலில் பாய்ந்திட ,அவன் கண்கள் இரண்டும் காதலின் தோல்வியில் சிவப்பேறியது. அது காதலினாலா அல்லது முதன்முறை அவளால் குடியை நாடியதுனாலா என்று அவன் கண்கள் மட்டுமே அறிந்தது.
“ஏன்டி !இப்படி பண்ண.? நான் உனக்கு என்ன அவ்வளவு கேவலமா பொய்ட்டேன்னா ,இல்லை என் காதல் தான் உனக்கு அவ்வளவு கீழ்த்தரமா பொய்டுச்சா.? சொல்லு டி சொல்லு ” என்று மனதில் நிறைந்திருந்த அவளிடம் பொறுக்கமுடியாமல் கேட்க 
அவன் மனமோ ,என்ன சொல்லுவது என்று தெரியாமல் அமைதி காத்தது.
“என்ன அமைதியா இருக்க .? எப்போதும் அவளுக்காக என்கிட்ட பேசுவ தானே ,இன்னைக்கும் பேசு ஏன் சைலண்டா இருக்க.?” 
“உன்னால தான் நான் அவளை காதலிச்சேன். நீ மட்டும் வாய மூடிக்கிட்டு இருந்திருந்தா , நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்திருப்பேன். உன்னால ,உன்னால மட்டும் தான் இன்னைக்கு நான் காதல் தோல்வில நிக்கிறேன் ” என்றவன் வலது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை மொத்தமாக வாயில் சரிக்க துவங்கினான்.
“டேய்.! போதும் டா நீ குடிச்சது ” என மனச்சாட்சி அவன் முன் தோன்ற
“நான் அப்படி தான் குடிப்பேன் .நீ சொல்றதை எல்லாம் என்னால கேட்க முடியாது ” என முகத்தை திருப்பிக் கொண்டான்.
“வெற்றி உனக்கு இது பழக்கமில்லாத ஒன்னு டா. நான் சொல்றதை கேளு ” என்க 
“யூ..யூ…யூ உன்னால தான். நீ சொல்றதை கேட்டு தான் இதோ இதை குடிக்கிறேன். இது பத்தாதா உனக்கு ” என கோபமாக முரடன் போல் கத்தினான்.
மனச்சாட்சியால் எதுவும் பேசமுடியாமல் போய்விட ,அவன் வாய் தானாக மூடியது.
“ஏன் சார்.? இப்போ வாய மூடிக்கிட்டு இருக்கீங்க ?பேசுங்க எப்போதும் அவளுக்காக பேசிட்டே இருப்பீங்களே , இப்போ பேசுங்க ” என்று தென்னாவெட்டாக சொல்ல 
மனச்சாட்டியோ ,அவனுக்கு பயந்து அவனுக்குள்ளே சென்று ஒளிந்து கொண்டது.
‘சப்பா ஒரு நல்லது செய்ய போய் என்ன இவன் கிட்ட மாட்டி விட்டாளே ‘ என்ற கவுண்டரோடு மறைந்தது.
“ஹோ !பொய்ட்டியா . நீயும் பொய்ட்ட ,இதோ அவளும் நான் வேணாம்னு பொய்ட்டா ” என கண்ணீரோடு புலம்பினான்.
“எவ்வளோ ஆசை ஆசையா அவளை பார்க்க போனேன்னு தெரியுமா ,அவகிட்ட என்னோட காதலை சொல்லி அம்மா அப்பா கிட்ட சொல்லி நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு நினைச்சேன். ஆனா இப்போ பாரு அவ என்னைய வேணாம்னு சொல்லிட்டு பொய்ட்டா “கண்களில் நீர் வழிய பேசினான் வெற்றி.
‘எப்போது ,எப்போது பேசுவான் ‘என்று அவனுக்காய் லட்சக்கணக்கான பெண்கள் அவனின் குரலுக்காய் காத்திருக்க ,இன்றோ யாரும் இல்லா இடத்தில் தானாய் பேசிய படியே திருச்சியை நோக்கி வண்டியை ஓட்டிச் சென்றான்.
அவன் மூலை இப்போது ,எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவது தீவிரமான யோசனையில் இருக்க அவன் மனமோ ஏனோ மூலையோடு முரண்டு பிடித்தது.
அவனுக்கு புரியவில்லை ,இந்த மனம் ஏன் இப்படி சதி வேலை செய்கிறது என்று. அதனை அடக்க வழி தெரியாமல் ஸ்டேரிங்கில் அதனின் அழுத்தத்தை கொடுத்தான்.
அப்போது அவன் மொபைல் தன் இருப்பை காட்டி சத்தம் மிட்டது.
மூன்று முறைக்கு மேல் அழைப்பு அடித்து அனைந்திருக்க ,நான்காவது முறை அழைப்பில் அவனது கோபம் அதன் மீது திரும்பியது.
“பச் ,நானே காதல் தோல்வியில் இருக்கும் போது ,எனக்கு யார் கூப்பிடுறது ” என்று கடுகடுத்தவாறே அதனை உயிர்பித்தான்.
“ஹலோ..!”
“டேய் !போன் அடிச்சா எடுக்க முடியாதோ துறைக்கு ” என எதிர் முனையில் இருந்து குரல் வர
“ம்மா ” 
“இப்போ தான் தெரியுதோ ,அம்மான்னு ஒருத்தி உனக்கு இருக்கிறது “என கோபமாக பேச
“ம்மா “
“என்னடா ம்மா ம்மான்னு சொல்லிட்டு இருக்க.? உன்ன கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வர சொன்னா ,இதோ அதோன்னு ஒருநாள் முன்னாடி தான் கிளம்பி ‌இருக்க ” 
“…..”
“என்னடா அமைதியா இருக்க..?இங்க எல்லாரும் கல்யாண மாப்பிள்ளை எங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க . ஆனா நீ அமைதியா இருக்க”
“பச் ,இங்க கொஞ்சம் வேலை அதிகம் மா. அதான் வர முடியல ” 
“சரி பாத்து பத்திரமா வா டா . பஸ்ல வான்னு சொன்னா எங்க கேக்குற நீ. இப்போ நீ எங்க இருக்க..?” என அன்னை விஜயசாந்தி கேட்க 
‘ ஹான் ,காதல் தோல்வியில இருக்கேன் ‘ என மனம் கவுண்டர் கொடுக்க 
அதை அடக்கியவன் ,” வந்துட்டு இருக்கேன் மா .நீங்க வைங்க நாளைக்கு காலைல அங்க இருப்பேன் ” என சொல்லி மொபைலை வைத்து விட்டான்.
பரமசிவம் – விஜயசாந்தி தம்பதியருக்கு பிறந்தவர்கள் இரு புத்திரர்கள் . முதலாமவன் மணிமாறன் , கல்யாணம் முடிந்து அழகான அன்பான மனைவி பூங்கோதை அவனுக்காக இருக்கிறாள். அக்ரி படித்தவன் ஊரிலேயே இருந்து விவசாயம் செய்து வருகிறான்.
இரண்டாமவன் தான் நம் நாயகன் வெற்றிமாறன். பெயருக்கு ஒரு டிகிரி படித்தவன் ,ஏனோ தானோ என்று ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். கடந்த நான்கு வருடங்களாக தான் சென்னையில் உள்ள ஒரு பெரிய புகழ்பெற்ற எஃபமில் RJ வாக வேலை செய்கிறான்.
அவனுக்கு பிடித்தமான வேலை அவளை போலவே. அவனுக்குள் அவள் நுழைவதற்கு காரணமே இந்த ஆர்.ஜே வேலை தான்.
தினமும் இரண்டு நேரம் அவனின் நிகழ்ச்சி இருக்கும்.‌காலை ஏழு மணிக்கு ஒரு நிகழ்ச்சியும் ,இரவு ஒன்பது மணிக்கு ஒரு நிகழ்ச்சியும் என இரண்டு நிகழ்ச்சி அவன் வசம் இருந்தது.
வேலைக்கு சேர்ந்த முதலில் அவன் வெகுவாக தடுமாறி போனான். பின்னாளில் அவன் தடுமாற்றத்தின் காரணத்தை அறிந்து அதையே தனது பாஸ்ட்டிவாக மாற்றியிருந்தான் வெற்றிமாறன்.
அன்னையிடம் பேசிய பின்பு ,அவன் மனம் உலையாக கொதித்தது.
ஒரு பெண்ணை மனது முழுக்க சுமக்கிறவனுக்கு ,எப்படி இன்னொரு பெண்ணை தொட்டு தாலி கட்டுவது.
அது தான் தன் இசைக்கு  செய்யும் பச்ச துரோகம் அல்லவா. எப்படி என்னால் அதை செய்ய முடியும். 
அந்த பெண்ணோடு தான் இணைந்தால் ,அவளோட வாழ்க்கை நரகமாகிடுமே. அவளின் வாழ்வை தானே கெடுத்து விட்டது போல் அல்லவா போய்விடும். இது நடக்க கூடாது ,நடக்கவே கூடாது ‌.எப்பாடு பட்டாவது இத்திருமணத்தை தான் நிறுத்தியே ஆகவேண்டும் என்று தனக்கு தானே சபதம் எடுத்து கொண்டவன் தன்னை சமநிலை படுத்த முயன்றான் வெற்றிமாறன்.
அவனின் மனம் முழுவதும் இசையே நிறைந்திருக்க ,அவள் தன்னிடம் பேசியது எல்லாம் அவன் செவிகளில் தேனாய் விழுந்தது.
‘மாறா ‘ அவள் மட்டுமே அழைக்கும் ப்ரத்யோக அழைப்பு..
ஆறுமாதங்களுக்கு முன்பு தான் அவள் முதன் முதலாக பேசியது..
அழைப்பு ஏற்க்கப்பட்டதும் ,’ மாறா நான் உங்க வாய்ஸ்க்கு ரொம்ப பெரிய விசிறி ‘ என்றிருந்தாள்.
அதன்பின் தினமும் அவளது அழைப்பு இரண்டு நேரமும் தவறாமல் வந்துவிடும்.
காலை நிகழ்ச்சி தொடங்கியதும் அவளது அழைப்பு தான் முதலில் வரும்.
‘மாறா ! குட் மார்னிங் ‘ என்றதும் தான் பேச்சு நிகழ்ச்சியை நோக்கியே நகர்த்துவாள்.
இரவில் முடியும் போது அவளின் அழைப்பு இருக்கும்.
பேசி முடித்தபிறகு ,’ குட் நைட்டு மாறா ‘ என்பாள்.
தொடங்கிய புதிதில் அவனுக்கு இது சாதாரணமாக தான் இருந்தது.
ஆனால் அவளின் ‘மாறா ‘ என்ற அழைப்பு , அவனையும் அறியாமல் புத்துணர்வையூட்டும்.
எங்கும் எதிலும் அவளின் ப்ரத்யோக அழைப்பு மாறா அவனுக்குள் இடம் பெற்றிருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக அமைந்தது அவனுக்குள் இருக்கும் மனச்சாட்சியே..
அவளின் நினைவு துவங்கிய நேரம் இதழில் மெலிதாக புன்னகை பூத்திருக்க , இறுதியில் அவன் காதல் தோல்வியில் முடிந்தது நினைவில் வரவே பற்களை நறுநறுவென கடித்தவன் தன் கோபத்தை வண்டி ஓட்டுவதில் காண்பித்தான்.
அவனது கெட்ட நேரமோ என்னவோ அந்த இருட்டில் மழை வேற பெய்ய துவங்க ,அவன் காருக்கு முன்னாடி என்ன செல்கிறது என்று கூட தெரியாத அளவிற்கு அவன் கண்கள் போதையில் இருக்க , கண்களை தேய்த்த நொடி யாரோ நிற்பது தெரிய வேகத்தை குறைக்க முடியாமல் சடன் ப்ரேக் போட்டு நிறுத்த முயன்று தோற்று போய் அந்த நபரை உரசி சென்றது..

Advertisement