அவன் கவனம் எங்கோ இருக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் நாளை அவன் அடைய போகும் சந்தோஷத்தை எண்ணி தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு “பேசிக்ஸ் முதல்ல சொல்றேன் பார்த்தி”, என்றாள்.

“ம்ம்”

“காலுக்கு கீழ இந்த மூணு கண்ட்ரோல் இருக்குல்ல? இதை வந்து ஏபிசின்னு சொல்லுவோம். அதாவது ஆக்சிலேட்டர் பிரேக் கிளச்,  இந்த வரிசையில இதை ஞாபகம் வச்சிக்கோங்க”, என்றவள் அவன் தன்னை பார்க்கவே இல்லை என்று தெரிந்ததும் “பார்த்தி.. பார்த்தி”, என்ற படி அவனை தொட்டு உழுக்கினாள்.

 “ஹான்”, என்று பதரிய படி அவளைப் பார்த்தான்.

அவன் கண்கள் வேறு லேசாக சிவந்திருக்க அவளுக்கு பாவமாக போனது. காரை அணைத்து விட்டு அவனை திரும்பிப் பார்த்தவள் “இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?”, என்றாள்.

“நீ தான் பிரச்சனை? உண்மையிலே உனக்கு என்னை பிடிக்கலையா மங்கை? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

“உங்களை பிடிக்கலைன்னு யார் சொன்னா? ஆனா காதல் எல்லாம் இல்லையே?”

“பொய் சொல்ற? காதல் இல்லாமலா எனக்கு ஸ்பெஷலா கிளாஸ் எடுக்க வந்திருக்க? இல்லைன்னா என்னை நம்பி நைட் கிளாஸ் எடுக்க ஒத்துக்குவியா? வேற யாராவது ஆம்பளைங்களுக்கு நீ கிளாஸ் எடுப்பியா?”

“இதுல என்ன இருக்கு பார்த்தி? உங்களை எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும்? அது மட்டும் இல்லாம நான் உங்களுக்கு கிளாஸ் எடுக்கும் போது இதே இடத்துல அருண் அண்ணன் இன்னொரு கிளைன்ட்க்கு கிளாஸ் எடுப்பாங்க? அதனால எனக்கு என்ன பயம்?”

“ஓஹோ, அப்ப எனக்கு கிளாஸ் எடுக்கும் போதும் உன் சேப்ட்டி பாத்து தான் முடிவு பண்ணிருக்க? நான் கூட என் மேல இருக்குற காதலாலயும் நம்பிக்கையாலயும் தான்னு நினைச்சேன் மங்கை. கரெக்ட் தான் என் மேல எல்லாம் உனக்கு எப்படி காதல் வரும்? எப்படி நம்பிக்கை வரும்? நான் எதுக்குமே யூஸ் இல்லாதவன். என்னை யாருக்குமே பிடிக்காது. அதான் எங்க அம்மாவும் என்னை விட்டு போயிருச்சு. அப்பா அன்பும் எனக்கு கிடைக்கலை. பிடிச்ச படிப்பு கூட கிடைக்கலை. ஏதோ உன் புண்ணியத்துல வேலை கிடைச்சிருக்கு. இல்லைன்னா அதுவும் இல்லை. நான் எல்லாம் பிறந்ததே வேஸ்ட் “, என்று அவன் விரக்தியின் உச்சத்தில் புலம்பிக் கொண்டிருக்க அவளோ அதிர்ந்து போனாள்.

அவளுக்கு அவன் சந்தோஷம் தானே வேண்டும்? அதை தவிர வேறு எதுவும் இல்லையே? அதனால் இதற்கு மேல் அவனை பேச விட்டால் மனதளவில் பாதிக்கப் படுவான் என்று எண்ணியவள் “பார்த்தி, இங்க பாருங்க என்னைப் பாருங்க”, என்றாள். அவனோ அவளைப் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் கண்கள் கலங்கி இருந்தது. அவன் நிலை பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தாலும் அவன் கண்களில் இருந்த கண்ணீர் தனக்கானது என்றதில் அவளுக்கு பெருமையே.

அவன் அப்போதும் அசையவே இல்லை என்றதும் அவன் கன்னத்தை இரண்டு பக்கமும் பற்றி தன்னைப் பார்க்க வைத்தாள். அவளை அவ்வளவு அருகில் பார்த்தவன் “எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு உன்னைத் தவிர வேற யாரும் வேண்டாம். நான் இப்ப வீட்ல என்ன சொல்லட்டும்?”, என்று கேட்டான்.

“இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்லட்டா? எனக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க. பிளீஸ்”, என்றவள் சிறு குழந்தையிடம் சொல்வது போல சமாதானமாக சொல்ல இது வரை அடக்கி இருந்த அவன் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அப்படியே அவள் கைகளில் கொட்ட அவள் முன்பு அழுவது பிடிக்காமல் அவள் கையை தட்டி விட்ட படி திரும்பி அமர்ந்தான்.

“பார்த்தி நான் சொல்றதைக் கேளுங்க”, என்ற படி மீண்டும் அவன் கன்னம் பற்றியவள் “சரி நாளைக்கு எல்லாம் வேண்டாம். இப்பவே சொல்றேன். எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ண சம்மதம் போதுமா?”, என்றாள்.

அவன் திகைப்பாக அவளைப் பார்க்க “நான் உண்மையா தான் சொல்றேன். நீங்களும் வீட்ல போய் கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு சொல்லுங்க. ஏன்னா உங்களுக்கு பாத்துருக்குற பொண்ணு நான் தான்”, என்றாள்.

“என்னது?”, என்று அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

“ஆமா நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பேசுறாங்க. நான் வீட்ல சம்மதம் சொல்லிட்டேன். நீங்களும் சொல்லிருங்க”, என்று சொல்லி சிரிக்க அவனுக்குள்ளும் அவ்வளவு சந்தோஷம்.

“மங்கை நீ நிஜமா தான் சொல்றியா?”

“ஆமா, எங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்லிப் பாருங்க, அப்பா தெரியும் இந்த மங்கை யாருன்னு? எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை மட்டும் தான் பிடிக்கும். ஒரு மார்கமா பாத்து பாத்தே என் மனசுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. நானும் வேற யாருன்னா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிருப்பேன். மாப்பிள்ளை நீங்கன்னு சொன்னதும் என்னால எப்படி மறுக்க முடியும்?”, என்று சொல்ல இப்போது அவன் பார்வை தனக்குறியவள் மீது ரசனையாக மாறியது. இது வரை இருந்த கவலை மேகம் எல்லாம் அவனுக்கு மாயமாக போனது போல இருந்தது.

அவன் பார்வை மாறியதை கண்டு “சரி சரி அதெல்லாம் அப்புறம், இப்ப கிளாஸ் கவனிங்க”, என்று சொல்லியவள் காரின் பாகங்களை விளக்க அவன் கவனம் முழுக்க அவள் முகத்தில் மட்டுமே இருந்தது.

“பார்த்தி இப்படி பாத்தா எப்படி? எனக்கு ஒரு மாதிரி இருக்கு. கிளாஸ் ஸ்டார்ட் பண்ணனும்?”, என்று சொன்னவளின் குரல் சிணுங்கியது.

“இன்னைக்கு ஒரு நாள் விட்டுறேன். பிளீஸ். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னால வண்டி மேல எல்லாம் கவனத்தை வைக்க முடியாது”, என்றவன் கவனம் முழுக்க அவள் மீது மட்டுமே.

“அதுக்குன்னு இப்படியே பாத்துட்டு இருப்பீங்களா? எனக்கு ஒரு மாதிரி இருக்கு”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள்.

“எனக்கு எல்லமே கனவு மாதிரி இருக்கு? உண்மையிலே நீ என்னை லவ் பண்ணுறியா?”

“அப்படி தான் தோணுது”, என்றவள் சிரித்தாள்.

“மங்கை நான் உன்னை ஒரு தடவை கிள்ளி பாத்துக்கட்டா? இது கனவு இல்லைன்னு எனக்கு தெரியணும்”

“அதை கிள்ளி தான் பாத்து தெரிஞ்சிக்கணும்னு இல்லை”, என்றவள் அடுத்த நொடி அவன் மார்பில் லேசாக சாய்ந்து கொண்டாள்.

“மங்கை”, என்றவன் திகைப்பாக அழைத்தான். அவளை வாறி அணைக்க கூட அவன் கைகள் தயங்கியது. அந்த அளவுக்கு பேரதிர்ச்சி என்று கூட சொல்லலாம்.

அவன் அப்படியே இருக்க அவளும் சிறு கூச்சத்துடன் அவனை விட்டு விலக “ஏய் அப்படியே இரு”, என்றான் அவசரமாக. அது மட்டும் இல்லாமல் இப்போது அவளை இழுத்து அனைத்து வேறு கொல்ல “இன்னைக்கு கிளாஸ் படிச்சா மாதிரி தான்”, என்றவள் இந்த முறை கொஞ்சம் அழுத்தமாகவே அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

“இன்னைக்கு ஒரு நாள் விட்டறேன். என்னை இந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடு”, என்றவன் அவளை இன்னும் இழுத்து அணைத்துக் கொள்ள ஆழ்ந்த அமைதி அந்த இடத்தில்.

இருவரின் இதயத் துடிப்பு மட்டுமே அங்கே கேட்க இருவருக்கும் அந்த தனிமையும் அமைதியும் பிடித்துப் போனது.

“எவ்வளவு நேரம் இப்படியே இருக்க?”, என்று கேட்ட படி அவள் விலகி அமர போக அவளை விலக விடாமல் தடுத்தவன் அவளை தன்னுடைய மார்பில் சாய வைத்த படியே “மங்கை நான் ஒண்ணு சொன்னா கோப பட மாட்ட தானே?”, என்றான்.

“என்ன?”

“நீ அவ்வளவு அழகு. நீ எனக்கே எனக்குனு நினைக்கும் போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கு டி”

“ஏது டி யா?”, என்ற படி விலகினாள்.

“ஆமா தனக்கு மட்டுமே சொந்தமானவனு வரும் போது ஆம்பளைங்களுக்கு அப்படி தான் உரிமையா கூப்பிட தோணும். ஏன் நான் அப்படிக் கூப்பிடக் கூடாதா?”, என்று சவாலாகவே கேட்டான்.

அவள் எப்படி கூப்பிட வேண்டாம் என்று சொல்வாள்? அந்த டி என்ற ஒற்றை வார்த்தை அவள் அடிவயிற்றில் சில மின்னல்களைப் பூக்க வைத்தது.

ஏதோ கனவில் இருப்பவள் போல அவள் அமைதியாக இருக்க “மங்கை”, என்றான்.

“ம்ம்”

“இன்னும் என்னால நடக்குறதை நம்ப முடியலை. ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கவா?”, என்று கேட்க சிறு வெட்கமும் திகைப்பும் வந்தாலும் அவனை முறைத்து வைத்தாள்.

அவன் இப்படி அனுமதி கேட்காமல் செயலாற்றி இருந்தால் அவள் அதற்கு இசைந்து தான் இருப்பாள். ஆனால் அவன் அனுமதி கேட்கவும் முறைத்தாள்.

“சரி சரி நான் ஒண்ணும் கேக்கலை. விடு. சரி நீ கிளாஸ் பத்தி சொல்லு. அப்ப தான் என் கவனம் மாறும். இல்லைன்னா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருப்பேன்”, என்றான்.

அவளும் சிரித்த படி அவனுக்கு முதனிலை பாடங்களை சொல்லிக் கொடுக்க அவனும் கவனமாக கேட்டுக் கொண்டான். அடுத்த அரை மணி நேரம் சிட்டாக பறக்க கிளாஸ் முடிந்ததும் அவர்களது வீட்டின் அருகிலே காரை நிறுத்தினாள்.

அவளை விட்டு நீங்க முடியாதவனாக அவன் அவளையே ஏக்கமாக பார்க்க “என்ன பார்வை? இறங்குங்க”, என்றாள்.

“உன்னை விட்டு போறதுனாலே கஷ்டமா இருக்கு டி. இவ்வளவு நாள் கூட இப்படி இல்லை. இன்னைக்கு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு”

“அதுக்குனு உங்களை கூடவே வச்சிட்டா நான் அடுத்தவங்களுக்கு கிளாஸ் எடுப்பேன். ஒழுங்கா போய் சாப்பிட்டுட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க”

“சரி சரி போறேன், ரொம்ப தான்”, என்ற படி அவன் கார் கதவில் கையை வைக்க அடுத்த நொடி அவன் கையைப் பற்றி இழுத்தவள் அவன் என்ன என்று உணரும் போதே அவன் முகத்தை திருப்பி அவன் கன்னத்தில் தன்னுடைய இதழைப் பதித்தாள்.

தொடரும்..