போட்டோ எடுப்பவர் அவர்களை அத்தனை நெருக்கமாக வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவனது அருகாமையில் அவள் மனம் தடுமாறிப் போனது. அவனுக்கோ தன்னை அவளது மென் தேகம் உரசிச் செல்ல அந்த பரிசம் அவனுக்குள் மோகத் தீயை லேசாக பற்ற வைத்தது.

அவள் தலையில் இருந்த மல்லிகை வாசம் வேறு அவனை கிறங்கடித்தது. புகைப்படம் எடுப்பவர் இன்னும் நெருங்கச் சொல்ல இது தான் சாக்கென்று அவளை இடையோடு வளைத்து தன்னை நோக்கி இழுத்திருந்தான். கயலும் அங்கிருந்து சென்றிருந்தாள்.

அவனது இரண்டு கரங்களும் அவள் வெற்றிடையில் பதிய அவனது தாடை அவள் கழுத்தில் பதிந்தது. அவனது காது மடல் அவள் கன்னத்தை வேறு உரசி தீ மூட்ட “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”, என்று கோபமாக கேட்க முயன்றாள்.

            “அவங்க தான் போஸ் கொடுக்கச் சொன்னாங்க?”, என்று நல்ல பிள்ளை போல சொன்னவன் அவளை மேலும் இருக்க அவள் என்ன ஆவாளாம்?

அவன் கரம் அவள் வெற்றிடையில் பதிந்திருப்பதே ஒரு அவஸ்தையைக் கொடுக்க அவனது நெருக்கம் அவளை விதிர்விதிர்க்க வைத்தது.

புகைபடம் வேறு வேற லெவலில் வந்து கொண்டிருக்க போட்டோ கிராபருக்கே போதும் என்று சொல்ல மனதில்லை. அவர் முன்னால் அவனை தடுக்க முடியாமல் அவள் தடுமாறிக் கொண்டிருக்க அவளது தடுமாற்றதை ரசித்தான் பார்த்திபன்.

“போட்டோ எடுத்தது போதும்ன்னு சொல்லுங்க”, என்று அவள் குரல் கிசுகிசுப்பாக வர அதற்கு மேல் அவளை கஷ்ட படுத்த மனதில்லாமல் அவளை விட்டு விலகி நின்றவன் அவள் இடையில் இருந்த கரங்களையும் விலக்கிக் கொண்டான்.

அது அவளுக்கு எதுவோ மாதிரி இருக்க அவனோ அவளைப் பார்க்காமல் “அண்ணே போட்டோஸ் போதும். ரொம்ப டயர்டா இருக்கு. நீங்களும் சாப்பிட்டு கிளம்புங்க, பணம் ஜிபே பண்ணிறேன்”, என்றான்.

            “சரி தம்பி”, என்றவர் அங்கிருந்து சென்று விட்டார். இருவர் மட்டுமே அங்கு நின்றார்கள். ஜில்லென்ற காற்று அவர்கள் மேனி தீண்ட ஆழ்ந்த மௌனமே அங்கு நிலவியது.

            “என்னோட அருகாமை உனக்கு அன்கம்பர்ட்டபிளா இருக்கா மங்கை? மன்னிச்சிக்கோ. இனி கிட்ட வரலை”, என்றவன் அவள் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.

கடைசி படி வரை சென்றவனுக்கு ஏனோ அவளை அப்படியே விட்டுச் செல்ல மனதில்லை. அவள் உணர்வுகளும் அவனுக்கு புரிந்தது. எதற்காக அந்த கோபம் என்றும் அவனுக்கு தெரியும். அப்படி இருக்க தான் கொஞ்சம் அதிகமாக சீண்டி விட்டோம் என்று புரிந்தது.

அதனால் மீண்டும் மேலே செல்ல அவளோ கண்களில் நீர் வழிய அவன் போன பாதையை பார்த்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்தவன் திகைத்த படி அவளை நெருங்க அவளோ அவனை முறைத்து விட்டு அங்கிருந்து செல்லப் பார்த்தாள்.

அவள் கையைப் பற்றியவன் “மங்கை சாரி”, என்றான்.

            “என்ன சாரி? எதுக்கு எடுத்தாலும் சாரி. கஷ்ட படற மாதிரி பேசுவீங்க? கல்யாணமே வேண்டாம்னு சொல்லுவீங்க? இப்ப அவன் முன்னாடி குளோசா நிப்பீங்க? நான் எதுவுமே சொல்லக் கூடாது அப்படி தானே?”, என்று கேட்கும் போதே அவள் கண்கள் மேலும் கலங்க “ஏய் அழாத டி பிளீஸ்”, என்றான். அவளுக்கு இன்னும் அந்த கோபம் இருப்பது புரிந்தது.

            அவள் அமைதியாக இருக்க “உன்னை வேண்டாம்னு நான் மனசார சொன்னேன்னு நம்புறியா? எவ்வளவு வலில சொல்லிருப்பேன்? நீ என்னோட உயிர் மங்கை”, என்று சொல்ல கொஞ்சம் சமாதானமானாள்.

            அவன் மேலும் ஏதோ பேச போக “சரி போதும் உங்க சமாதானம். வாங்க கீழே போகலாம்”, என்று சொல்லி அழைத்துச் சென்று விட்டாள். ஆனால் அவள் கோபம் முழுதாக போக வில்லை என்று அவனுக்கு புரிந்தது. போச்சுடா என்று தலையில் கை வைத்துக் கொண்டான். இறங்கி வந்த சாமியை மீண்டும் மலை ஏற்றி விட்டது புரிந்தது.

அவனை தனது அறையில் இருக்க வைத்தவள் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு அங்கிருந்து செல்லப் போக “சாரி கல்யாண நாள் அதுவுமா உன்னை அழ வச்சிட்டேன்”, என்றான்.

            “அதான் கல்யாணம் முடிஞ்சிருச்சே. அந்த சந்தோஷம் போதும். உங்க சாரி எனக்கு தேவையில்லை”, என்று சொல்லி விட்டு சென்று விட அவனும் சிறு சிரிப்புடன் குளிக்கச் சென்றான். “இப்ப தான் சமாதானம் ஆகி இருந்தா. போச்சு எல்லாம் கெடுத்துகிட்டேன். அடேய் பார்த்திபா நைட் குள்ள கோபம் போயிருமா?”, என்று அவனே கேட்டுக் கொண்டான்.

            குளித்து முடித்து வந்தவன் வெளியே வந்து  நந்து மற்றும் கவினுடன் சிரித்த படி பேசிக் கொண்டிருக்க            அவன் அப்படி பேசியதில் அவளின் பெற்றவர்களுக்கு மனம் குளிர்ந்து போனது. ஏற்கனவே அவனைப் பற்றி தெரிந்தாலும் மகள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று முழுதாக நம்பினார்கள் பெற்றவர்கள்.

அவளும் அவனை காதலாக பார்த்தாள். அவளது பார்வையில் வழிந்த நேசத்தைப் பார்த்தவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

பார்த்திபன் பேச்சில் அனைவரின் மனமும் நிறைந்து போனது. மாப்பிள்ளை முருக்கை காட்டாமல் அந்த வீட்டில் இருக்கும் ஒருவனாக அவன் நடந்து கொள்ள பெண்ணைப் பெற்றவர்களுக்கு வேறு என்ன வேண்டுமாம்?

            மாலை மங்கி இரவும் வந்தது. மங்கையின் அறையை அலங்கரித்தான் நந்தன். அவனிடம் யாரும் சொல்ல வில்லை தான். ஆனால் அவனாக தான் அதைச் செய்தான்.

            லேசாக அலங்காரம் செய்து தன்னுடைய அறையிலே அமர்ந்திருந்தாள் மங்கை. வெளியே சேதுவும் சந்திரனும்  அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அங்கே தான் பார்த்திபனும் இருந்தான்.

            “என்னங்க நேரம் ஆச்சு”, என்று கோமளம் சந்திரனிடம் குரல் கொடுக்க “சரி சம்பந்தி அப்ப தூங்க போகலாம்”, என்று எழுந்து கொண்டார் சந்திரன். ‘

            “உங்களுக்கு தூக்கம் வருதா? கொஞ்ச நேரம் இருக்கலாமே?”, என்று சொன்னார் சேது. உண்மையிலே சந்திரனுக்கு தூக்கம் வரவில்லை தான். ஆனால் அனைவரும் சென்றால் தானே பார்த்திபன் செல்வான். இப்போது என்ன செய்ய என்று சந்திரன் தயங்க கோமளம் அவரை முறைத்துப் பயர்த்தாள்.

அதைப் பார்த்தக்கூ விட்டு “பார்த்தி ரூமுக்கு போ. மங்கை உன்னை தேடுவா”, என்று சேது சொல்ல “சரிப்பா, குட் நைட் ரெண்டு பேருக்கும்”, என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்று விட்டான்.

அவன் சென்றதும் நிம்மதியாக அமர்ந்த சந்திரன் சேதுவிடம் கதை பேச ஆரம்பித்தார். பார்த்திபன் அறைக்குள் வந்த போது அழகு பதுமை என அமர்ந்திருந்தாள் மங்கை.

அறைக்குள் வந்து கதவை தாழிட்டு விட்டு அந்த கதவிலே சாய்ந்து அமர்ந்து அவளைப் பார்வையிட்டான் பார்த்திபன். “இவரோட”, என்று எண்ணிய மங்கை சிறு கூச்சத்துடன் எழுந்து அன்னை கொடுத்து விட்ட பாலை டம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.

அதை அவள் கை பற்றி வாங்கியவன் சிவந்த அவள் முகத்தைப் பார்த்த படியே பருகினான். அவன் பார்வையில் மயங்கியவள் அடுத்து என்ன செயலாற்ற என்று தெரியாமல் இருந்தாள். அவன் தன்னை நெருங்கினால் தன்னால் சத்தியமாக விலக முடியாது என்று அவளுக்கே தெரியும். ஆனாலும் இன்றே வாழ்க்கையை ஆரம்பிக்க அவளுக்கு எதுவோ ஒரு தயக்கம் இருந்தது.