மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

9

தீக்ஷி, சந்துரு இருவரும் சந்துருவின் அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தனர்.  நிம்மதியாக இருந்தது, அந்த பெரிய கூட்டத்திடமிருந்து விடைபெற்று வந்தது. ‘இனி.. என்னுடைய உலகத்திற்குள் நான் போகலாம்’ என எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தாள் பெண்.

சந்துரு, பெரிய லக்கேஜ் ஒன்றினை எடுத்துக் கொண்டு அவளை தாண்டி சென்றுக் கொண்டே “உள்ளே வா திக்க்ஷி..” என்றான்.

சின்ன புன்கையோடு.. உள்ளே வந்தாள். சந்துரு தன் அறைக்கு லக்கேஜ்ஜோடு செல்ல.. தீக்ஷி எங்கு செல்வது என தயங்கி நிற்கவில்லை.. “வேற ரூம் இருக்கா” என  சும்மா கேட்டு, அங்கிருந்த மற்றொரு அறைக்கு சென்றுவிட்டாள்.

சந்துரு.. அவள் அங்கே சென்றதும்.. தன் அறையிலிருந்து வெளியே வந்து நின்று பார்த்தான். தடுக்க தோன்றவில்லை.

இருவரும் சற்று நேரத்தில்.. பிரெஷ்ஷப்பாகி வெளியே வந்தனர். சந்துரு பால் வாங்கி வரவென வெளியே சென்றான்.

பெண்ணவள்.. டிவி பார்த்து அமர்ந்தாள்.

இருவரும் காபி குடித்தனர். இரவு உணவு உண்டுதான் கிளம்பினர். மணி பதினொன்று.. தீக்ஷி பால் வேண்டம் என்க.. இருவருக்கும் காபி கலந்தான் சந்துரு.

சந்துருவிற்கு அவளிடம் கேட்க்க நிறைய இருந்தது.. முதலில் “நீ நாளைக்கு எப்போது கிளம்பனும்” என்றான்.

தீக்ஷி “ம்.. நாளைக்கு காலேஜ் போகனும்.. என்னை இயலிமோர்னிங் வீட்டில் விட்டுடுங்க” என்றவள் காபி கப்போடு எழுந்துக்  கிட்சென் சென்றாள்.

சந்துரு மனதில் ‘என்னது வீடா.. எதோ ஹாஸ்ட்டலாக இருக்கும்ன்னு நினைத்தேன்’ என எண்ணிக் கொண்டான். ஏதும் அவளிடம் கேட்கவில்லை.

அவள் தூரமாக சென்றதை உணர்ந்து “ம்.. எப்போ லண்டன் போற” என்றான், தன் கைகளை மேலே நீட்டி நெட்டி எடுத்துக் கொண்டே.

தீக்ஷி திரும்பி கணவனை பார்த்தாள்.. அதைபற்றி இன்னும் அவள் யோசிக்கவில்லை.. அன்று, தான் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறான் என பார்த்தாள்.

சந்துரு.. அவள் நிற்கவும் “முறைக்கிறீயா” என்றான் சிரித்துக் கொண்டே.

தீக்ஷி இல்லை என தலையசைத்தாள்.

சந்துரு “இல்ல.. என்னை கல்யாணம் செய்துகிட்டதே லண்டன் போகத்தானே.. அதான் கேட்டேன்.. கல்யாணம் முடிந்துவிட்டதே.. எப்போது போறேன்னு.. அதுக்குதான் சண்டை ஏதும் போட்டியா.. உங்க வீட்டில் யாருமே உன்னோடு பேசலை..” என்றபடி எழுந்து.. நின்றான்.. ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே. இவனுக்கு எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.. இவனின் புத்தி.. எல்லாவற்றையும் ஆராய்ந்துக் கொண்டே இருந்திருக்க.. எப்படி கேட்பது என எண்ணி.. இப்படி எதார்த்தம் போல கேட்டான் கணவன். அவனின் பொறுமை.. இவ்வளவு தூரம் இருந்ததே அதிகம் தானே.

தீக்ஷிக்கும் அதே ஆராய்ச்சி பார்வை ‘இவருக்கு என்ன ஒன்னும் தெரியாதா.. இல்லை தெரிந்துக் கொண்டே கேட்கிறாரா.. நிச்சயத்திலேயே தெரிந்தருக்கணும்.. அத்தோட அத்தை பையன்னா.. என்னை பற்றி எல்லோரும் சொல்லியிருப்பாங்களே.. எதுக்கு கேட்க்கிறார்’ என எண்ணிக் கொண்டே “என்னை பார்த்தால் சண்டை போட்டமாதிரியா தெரியுது” என்றாள், கப்பினை கழுவி முடித்து.. அதை மேலே வைத்துக் கொண்டே திரும்பி நின்றபடி கேட்டால் பெண்.

சந்துரு அவளையே பார்த்தான்.. கொடியென இடை.. சின்ன டாப்.. நைட் பேன்ட் என அணிந்துக் கொண்டு.. சட்டென அவள் திரும்பி நிற்கவும்.. கொஞ்சம் அழகை ரசித்துவிட்ட கள்வனாக.. சட்டென நிமிர்ந்தவன்  ‘இந்த குழந்தை முகம் சண்டையிட்டிருக்காது’ என தனக்குள் சத்தியம் செய்துக் கொண்டு.. இரண்டடி தன் அறைநோக்கி சென்றான். பின் திரும்பி “கேட்க்க மறந்துட்டேன்.. நான் இப்போது நான்கு நாட்கள் லீவ் போட்டிருக்கேன்.. லேகாவின் திருமணத்திற்கு என.. அப்புறம் கல்யாணத்தின் போது ஒருவாரம் லீவ்.. நீ எப்படி காலேஜ் போற.. இங்கிருந்து போகிறாயா.. அடுத்து என்ன” என்றான் ரசனை விளையாட்டு.. என  எல்லாவற்றையும்.. தூக்கி தூரமாக வைத்துவிட்டு.. இதுநாள் வரை தங்களை பற்றி பேசாத விஷயங்களை கேட்டான் கணவன்.

தீக்ஷிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.. “அப்பாகிட்ட கேட்கனும்.. எனக்கு என்ன தெரியும்” என்றாள்.

சந்துரு ஹாலில் நின்றிருந்த அவளின் அருகே வந்து நின்றான்.. “இனி, நம்மோட வாழ்க்கையில் நாமதான் முடிவெடுக்கணும்.. அப்பா.. அண்ணன்.. என யாரும் உனக்காக முடிவெடுக்க கூடாது. ம்.. நீ யோசித்து உனக்கு எது வசதி.. எது பிடிக்குதுன்னு சொல்லு.. நீ மட்டும் யோசித்து சொல்லு. அப்புறம்.. சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம்..” என்றான் கைகளை தன் நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டு.. திடமான குரலில் சொன்னான் கணவன்.

தீக்ஷி கணவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.. அவன் பேசி முடிக்கவும்தான் இமைகொட்டி.. கணவனை பார்த்தவள்.. லேசாக தன்னை உலுக்கிக் கொண்டு “அவ்வளவுதானே.. நானே சொல்றேன். அதுக்கு எதுக்கு இப்போ.. எதோ பழைய வில்..லன்.. மாதிரி.. அடிக் குரலில் பேசுறீங்க” என  சொல்லி பேச்சினை நிறுத்திக் கொண்டாள், அவனின் ஊடுருவும் பார்வையில்.

சந்துரு அவளின் வில்லன் என்ற வார்த்தையில் அழுத்தமாக ‘எப்படி அப்படி சொல்லலாம்’ என பார்த்தவன் “நான் வில்லன்.. உன் வீட்டில் இருக்கிறவங்க எல்லாம் உன்னை ஆசையாய் பார்த்தாங்க பாரு.. அவங்க எல்லாம் ஹீரோ. அதிலும் உன் அண்ணன், உன் பக்கத்தில் கூட வரலை.. எதோ வசந்தா அத்தை கூட்டி வந்தாங்க போட்டோ எடுக்கவென, அதனால் வந்தான்..ர். அவன் நல்லவன்.. நான் வில்லன்.” என அப்படியே கைகளை கட்டிக் கொண்டு அவளிடம் பொறுமையாக விவாதிக்க தொடங்கினான். என்ன செய்தாலும்.. அவனின் குணம் வந்துவிட்டது.

தீக்ஷிக்கு, இயலாமையில் ஒரு வேகம் வர “அதுக்கு என்ன இப்போ.. நீங்களும் வேண்டுமானால்.. அப்படியே இருங்கள்.. யாரு கேட்க்க போகிறார்கள்..” என்றவள் அவனை கடந்து அறைக்கு சென்றாள்.

சந்துரு “திக்க்ஷி.. நில்லு.. பேசும் போது ஓடாத” என்றான்.

தீக்ஷி அங்கிருந்தே “எனக்கு தூக்கம் வருது.. குட் நைட்” என்றவள்.. அறையின் கதவினை அடித்து சாற்றினாள்.

சந்துரு ஏமாற்றத்தினை உணர்ந்தான்.

ஷிவா, லேகா குடும்பத்தினரை ஊருக்கு அனுப்பிவிட்டு இப்போதுதான் தன் அறைக்கு வந்தான். இந்த வீட்டிற்கு வந்தே வெகுநாட்கள் ஆகிவிட்டது.. என எண்ணிக் கொண்டே தன் அறையின் கதவினை திறந்தான். அவனின் அறை எபோதும் போல சுகந்தமான மணத்தோடு அவனை வரவேற்றது. அப்படியே படுக்கையில் சாய்ந்துக் கொண்டான் ஷிவா.

வசந்தி, மகனை கவனித்துக் கொள்வதில் குறையே வைக்கமாட்டார். அப்படியே இப்போதும் உறங்கும் முன் வந்து ஷிவாவை பார்த்து பேசிவிட்டு சென்றார்.

சுந்தரன், விழா நடைபெற்ற இடத்திலேயே அமர்ந்துக் கொண்டிருந்தார்.

லதா, தன் பெற்றோர் உடன் பிறந்தோரை.. உறங்க அனுப்பிவிட்டு கணவரை தேடி வந்தார். சுந்தரன் இயல்பாக மனையாளை பார்த்து புன்னகைத்தார்.

லதா “இனியாவது நிம்மதியாக இருப்பீங்களா” என்றார்.

சுந்தரன் “ம்.. உண்மையாகவே நிம்மதியா இருக்கு.. சந்துரு சிரித்த முகமாக இருக்கார். “ என்றவர்.. நிறைவாக ஒருமூச்சினை இழுத்துவிட்டு.. இன்னும் எதோ பேச எத்தனிக்க..

லதா முகத்தினை அந்தபக்கம் திருப்பவும், கணவர் “அஹ.. நீ சொல்லு.. சாப்பிட்டியா, அத்தை படுத்துட்டாங்களா.. மச்சான் தூங்க போயிட்டாரா.. நைட் கச்சேரி வேண்டும்ன்னு கேட்டார்.. எங்க காணோம்” என வினவத் தொடங்கினார். அன்பின் கோணங்கள்.. அத்தனையையும் அறிந்தவர் சுந்தரம். அதனால், பக்குவமாக கையாண்டார் லதாவை.

காலையில் இருவருக்கும் புதிதாக விடிந்தது. தீக்ஷி முன்பே எழுந்துக் கொண்டாள். ஹாட் வாட்டர் குடித்துவிட்டு.. தன்னுடைய மோர்னிங் ரொட்டீன் செய்ய தொடங்கினாள்.. சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது அவளின் வழக்கம் அதை தொடங்கினாள் தன் அறையில்.

எல்லாம் முடித்து ஹாலுக்கு வந்தாள்.. அப்போதும் சந்துரு எழுந்து வந்திருக்கவில்லை.. தானே பால் எடுத்து காபி போடத் தொடங்கினாள். அவள் சின்ன சின்ன வேலைகள் செய்வாள்.. முழு சமையல் என தெரியாது.. காபி போடுவதற்கு.. தோசை ஊற்றுவதற்கு.. நூடுல்ஸ் செய்வதற்கு என தெரியும்.

தீக்ஷி நேரம் பார்க்க.. மணி ஏழாகவில்லை.. கணவனை எழுப்பலாமா வேண்டாமா என எண்ணம். யோசனையோடு குளிக்கச் சென்றாள்.

குளித்து கிளம்பி வந்தாள்.. ஹாலில் கணவன் இல்லை. அதனால், டாக்ஸி புக் செய்துக் கொண்டு.. பால் அரைடம்ப்ளர் அப்படியே குடித்துவிட்டு எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்ப.. கணவன், தன் அறை கதவினை திறந்துக் கொண்டு வெளியே வந்தான்.

மனையாள் சாவியோடு.. நிற்பதைத்தான் பார்த்தான். இரண்டு நிமிடம்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. அது அர்த்தமாக இருந்ததா.. என தெரியவில்லை.. அதை அவர்களே உணரவில்லை. பார்வைகள் மட்டும் இரண்டு நிமிடம் நீடித்தது.

மனையாள் “சாரி.. உங்களுக்கு அலைச்சல்.. அதான் எழுப்பவில்லை.” என்றாள்.

சந்துருவிற்கு, தான் எழவில்லை என வருத்தம் இருந்தாலும்.. தன்னிடம் எதுவுமே சொல்லாமல் கூட கிளம்பத் தயாராகிவிட்டவளை.. பார்க்க.. இதென்ன உறவு.. என்ற கேள்விதான் எழுந்தது அவனுள். ஏதும் பேசவில்லை.. அவளின் பேச்சினை கேட்பது போல.. தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டு.. பின் “பத்திரமா போ.. முடிந்தால்.. வீடு போயிட்டு, ஒரு மேசேஜ் பண்ணு” என்றவன்.. கிட்சேன் செல்ல எத்தனித்தவன் “லக்கேஜ்.. எடுத்து போக நான் வரவா.. இல்ல” என சொல்லி நிறுத்திக் கேட்டான்.

பெண்ணவளுக்கும்.. கணவனின் ஒன்னுமில்லா பாவனையில்.. மனம் கனக்க.. “இல்ல, வேண்டாம்.. நான் போய்டுவேன்” என்றவள்.. “பைய்..” என சொல்லி விடைபெற்று கிளம்பினாள்.

சந்துரு கிட்சென் சென்றான் தன் வேலையை பார்க்க.

ஷிவபாலன் சந்த்ரலேகாவின் திருமணத்திற்கு என வேலைகள் தொடங்கியது. சந்துரு ஒருவாரம் லீவ் எடுத்துக் கொண்டு தன் ஊரூக்கு  வந்தான் வேலைகளை கவனிக்க.

பெண் வீட்டில் திருமணம் என்பதால்.. சந்துரு எல்லா வேலைகளையும் பார்த்தான்.. ஷிவா, எப்படி ஆடம்பரமாக செய்திருந்தான் என உணர்ந்திருந்தானே.. அதனால், எல்லாவற்றையும் தன் தந்தையோடு அருகிலிருந்து கவனித்துக் கொண்டான்.

லேகாவின் திருமணம் கோவிலில் நடக்க வேண்டும் என ஹம்சா, வேண்டிக் கொண்டதால்.. ரமேஷின் குலதெய்வக் கோவிலில் திருமணம் நடந்தது.

ஷிவா, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக தயாராகி வந்திருந்தான். சித்தூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைக்கோவில் அது. அதனால், ஆறுமணிக்கு எல்லோரும் வந்து சேர்ந்தனர் கோவிலுக்கு.

லேகா, காரிலிருந்து இறங்கியது முதல் முழு டென்ஷனில் இருந்தாள். எல்லோரும் அவளுக்கு தெரிந்தவர்கள்தான், ஆனால், திருமணம் எனும் போது வரும் பதட்டத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.  சந்துரு தீக்ஷி இருவரும் அவளின் காரில்தான் வந்தனர்.

சந்துரு, ஷிவா வீட்டு மனிதர்களை வரவேற்க என.. தந்தையோடு சென்றுவிட்டான். தீக்ஷி லேகா இருவரும்தான் பொறுமையாக பேசிக்  கொண்டே உள்ளே வந்தனர்.

ஷிவா, பிரகாரத்தில் அமர்ந்திருந்தான். லேகாவை பார்த்ததும்.. மனது இதமானது. ஆனால், முகத்தில் அதை காட்டவில்லை.

சற்று நேரத்தில் ஆரம்பமானது மணவிழா. மணமக்கள் இருவரும் நாலுகால் மண்டபத்தில் அமர்ந்தனர். அந்தணர் வேதம் ஓதி.. மாங்கள்யத்தினை எடுத்து.. ஷிவா கையில் கொடுத்தார்.

ஷிவா நிதானமாக லேகாவின் கழுத்தில் அதனை சாற்றி.. தனக்குரியவளாக்கிக் கொண்டான். அட்சதைகள் கெட்டிமேளம்.. வாழ்த்துகள் என அவர்களின் மனம் போல பொழிந்தது.. ஆசீர்வாதங்கள்.

ஷிவா, கண்ணீர் நிறைந்த அவளின் கண்ணெதிரே.. தன் வலக்கையினை நீட்டினான். பெண்ணவள் புரிந்துக் கொண்டு.. கண்களை துடைத்துக் கொண்டு.. கணவனின் கையினை பற்றிக் கொள்ள.. ஷிவா, பாந்தமாக சில்லென பெண்ணவளின் கைகளை பற்றிக் கொண்டு அக்னியை வலம்வந்தான்.

பெண்ணவளின் கண்கள் இன்னமும் லேசாக கசிந்துக் கொண்டிருந்தது.. ஆனந்தம்.. வருத்தமும் சேர்ந்த கலவையான உணர்வு பெண்ணுக்கு.. கண்ணீர் என்னமோ நிற்கவேயில்லை.

ஷிவா, குனிந்து.. அவளின் மென்பாதம் பற்றி.. மெட்டியிட்டான்.. புன்னகையோடும் கண்ணீரோடும்.. குனிந்து கணவனை பார்த்து புன்னகைத்தாள்.. பெண். ஷிவா அந்த புன்னகையை உள்வாங்கி  “வெல்கம் மை பர்சனல் பார்ட்னர்..” என்றான். மனையாள் விரிந்து மலர்ந்து புன்னகைத்து.. கண்களை துடைத்துக் கொண்டாள்.

ஷிவா, எழுந்து அவளின் கைபற்றிக் கொண்டு மீண்டும் மேடையில் அமர்ந்தான். இன்னமும் ஏதேதோ சடங்குகள் நடந்தது.

காலை உணவு என கோவில் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மதியமாக வரவேற்பு நடக்கவிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர் எல்லோரும்.

ஷிவா, பெரிய ஹோட்டலில் வரவேற்பு வேண்டும் என்று முன்பே சொல்லிவிட்டான். சந்துரு, அதைதான் திட்டிக் கொண்டே ஏற்பாடு செய்தான். பெரிய மண்டபமாக பார்க்கலாம்.. அலங்காரம் எல்லாம் செய்துக் கொள்ளலாம் என்றால், கேட்கவில்லை.. இந்த ஹோட்டலில்தான் வேண்டும் வரவேற்பு என ஷிவா பிடிவாதம்.

சிட்டியின் மத்தியில்.. ஹோட்டல். ட்ராபிக்.. அதற்கான பல்லோஅப்ஸ் என.. நிறைய மெனக்கெடல்கள் இருந்தது. வடிவேலுதான் இதெல்லாம் சந்துருவோடு சென்று ஏற்பாடு செய்தார். சந்துரு அவரின் கூடவே சென்று.. மனிதர்களை பழகிக் கொண்டான். அதில் நிறைய வருத்தம் சந்துருக்கு. ஆனாலும், திருப்தியாக விழாவினை ஏற்பாடு செய்து நடத்தினான்.

சந்த்ரலேகா, தானே வடிவமைத்த தாமரை பூ வண்ணம் கொண்ட லெகங்காவில்.. தேவையான ஒப்பனைகள் மட்டுமே.. கழுத்தில் மஞ்சள்சரடு.. உச்சி நெற்றியில் குங்குமம்.. தன்னவனின் கைப்பற்றிக் கொண்டு.. இளவரசி என முன்னாள் வர.. ஷிவா, மெரூன் வண்ண சூட் அணிந்து அவளின் ஒருஅடி பின்னில் மன்னென்ன ஆளுமையோடு மேடை நோக்கி வந்தனர் இருவரும். கண்களை சட்டென அவர்கள் மேலிருந்து எடுத்துவிட முடியாது யாராலும்.. இதுதான் சரியான ஜோடி.. என பார்ப்பவர்கள் மனதுல்லாவது ஒருமுறை சொல்லிடுவர்.

ஷிவாவின் தொழில்முறையாளர்கள் எல்லோரும் வந்திருந்தனர் குடும்பத்தோடு. நிறைய வடநாட்டினர்.. இருந்தனர். ஷிவா, பொறுமையாக எல்லோரையும் அறிமுகம் செய்தான்.. சந்துருவிற்கு.. அருகில் ஆட்கள் நின்றது போல.. இங்கே இல்லை. ஷிவாதான் ஒவ்வொருவரையும் புன்னகையோடு, கைகுலுக்கி.. கட்டி அனைத்து.. சிலரிடம் ஆசீர்வாதம்  வாங்கி என முறையாக வரவேற்று.. மனையாளிடம் பொறுமையாக அறிமுகம் செய்தான். மேலும் அவனின் மொழி ஆளுமை.. மனையாளை மேலும் அவன் மேல் பித்தாக்கியது.. தெலுங்கு.. ஹிந்தி.. இங்கிலீஷ்.. என எல்லா மொழியும் பேசினான். இவளிடம் சிலநேரம் விருந்தினரும் தெலுங்கு எனில்.. அழகாக விவரித்தான்.. அவரின் பின்புலம் பற்றி. நேரம் சென்றதே தெரியவில்லை பெண்ணுக்கு.

தாமதமாகவே இரவு உணவு உண்டனர். ஷிவாவின் முகத்தில் எந்த அலுப்பும் சலிப்பும் தெரியவேயில்லை. லேகா அமர்ந்து உண்ணவும்தான் தன் கால்களின் வலியை உணர்ந்தாள். அவளால் சரியாக உண்ண முடியவில்லை.. அப்படியே படுத்து உறங்கினால் போதும் என்றிருந்தது. மணி பனிரெண்டினை தொட்டுக் கொண்டிருந்தது.

சந்துரு தமக்கையின் அருகில் வந்து.. அவனின் அணிமணிகளை பின்னிலிருந்து.. சற்று தளர்த்த தொடங்கினான். கை வளையல்களை தானே உருவினான்.

ஷிவா “பேபி.. முடியலையா” என்றான்.. சந்துருவிற்கே கேட்க்காத குரலில்.

லேகா முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு “இல்ல.. கொஞ்சம் டிஸ்ட்ரப் ஆகிறது. அதான்..” என்றாள்.. கணவனின் பிரகாசமான முகத்தினை.. வாட வைக்க மனதில்லை பெண்ணுக்கு.

ஷிவா பக்கவாட்டில் திரும்பி மனையாளை பார்த்தான் ‘உண்மையா’ எனும் விதமாக.. பின் “நாம அப்பார்ட்மென்ட்தான் போறோம்.. ஓகே.. நோ பார்மாலிட்டீஸ்..” என்றான், பின் புருவம் உயர்த்தி.. “மோர்னிங் பொறுமையாக” என்றான் இன்னும் ரகசிய குரலில்.

லேகாவின் முகம் வெட்கத்தில் இன்னமும் ஒளிர்ந்தது.

சந்துரு ஷிவா பேசத் தொடங்கியதும் நகர்ந்து தள்ளி வந்துவிட்டான்.. அவளின் அருகிலேயே போகவில்லை.

இப்போது, சுந்தரன் அவனின் சித்தப்பா வந்து.. “கிளம்பலாம் சீக்கிரம் சாப்பிடுங்க ப்பா” என்றார்.

சற்று நேரத்தில்.. சந்துரு தீக்ஷி முன்னால்.. ஒரு காரில் செல்ல.. புதுமண மக்கள்.. அலங்கரிக்கப்பட்ட காரில் அழகாக வந்தனர்.