நால்வரும் மறுநாள் பெரிய ஹோட்டலில் சந்தித்தனர். தீக்ஷிதான் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தாள். omr ரோட்டில் உள்ள.. நட்சத்திர உணவகம்.. இரவு உணவிற்கு என ப்ஃபே புக் செய்திருந்தாள் நால்வருக்கும்.

மூவரும் சித்தூரிலிருந்து காரில் வந்துவிட்டனர். ஷிவா, வந்து சேர்ந்தான். சந்துரு லாப்பில் இரு பெண்களோடும் அமர்ந்திருக்க.. ஷிவா வந்தான் அப்போதுதான். சந்துரு தீக்ஷி இருவரும் எழுந்து நிற்க.. புன்னகையோடு தன் மனையாளை காணும் காதலிலும் அவனின் முகம் என்றுமில்லாமல் இன்று மலர்ந்து இருக்க.. வசீகரிக்கும் புன்னகையோடு சீரான வேகத்தில் இவர்களை நோக்கி வந்தான்.

எப்போதும் பார்ம்ளில்தான் இருப்பான். இன்று டிஷிர்ட் டெணீம் என படுகேஷ்வல் லூகில்.. வந்திருந்தான், ஷிவா. அவர்களின் அருகில் நெருங்கவும்.. பார்வை பெண்ணகளை வருடி.. பின் சந்துருவின் கண்களை சந்தித்து.. ஒரு புன்னகையோடு “வந்து ரொம்ப நேரமாச்சோ” என்ற ஒரு கேள்வியோடு நின்றான்.

சந்துரு “இல்ல, இப்போதான் வந்தோம்..” என்றான்.

தீக்ஷி “ஒன்ஸ் எகைன் கங்கராட்ஸ் அண்ணா.. இன்னிக்கு ரொம்ப கூலாகாக இருக்கீங்க” என்றாள்.

ஷிவா உதடுகள் விரித்து பற்கள் தெரிய புன்னகைத்தான்.. தன் கைகளை தேய்த்துக் கொண்டு “தேங்க்யூ.. போலாமா” என்றான்.

லேகா ஷிவா இருவருக்கும் இந்த் சின்னபிள்ளைகள் மத்தியில் பேச கூச்சமாகவே இருந்தது.. இப்போது ஷிவா முன்னே நடக்க.. லேகா அமைதியாக தீக்ஷியோடு நடந்தாள்.. சந்துரு வேறு வழியல்லாமல் ஷிவாவோடு நடக்க வேண்டியதாக இருந்தது.

ஷிவா “நேசத் வீக்எண்ட் ஆபீசில் ஒரு சின்ன கெட்டூகெதர் ஏற்பாடு பண்ணும் சந்துரு.. உங்களை எல்லோருக்கும் முறையாக இன்ட்ரோ கொடுக்கன்னும்.. க்ரிஷ் கிட்ட சொல்லனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்.. ம்..” என்றான்.

சந்துரு “எதுக்கு ஷிவா அதெல்லாம். இப்போ எல்லோருக்கும் என்னை தெரியும். நோ நீட்டாட்..” என்றான்.

“இல்ல, ஆபீசில் நிறைய டாக்ஸ் போகிறது இருக்கு சந்துரு. இதெல்லாம் ப்ரோபர்ராக செய்திடணும். கேபின் ஏற்பாடு செய்தாச்சு.. உங்களுக்கு. ஸ்டாப்ஸ் நீங்க பார்த்துக்கோங்க.. இதை பேஸ் ஆபீஸ் மாதிரி வைச்சிக்கோங்க. மத்தபடி.. உங்க வசதிப்படி செய்துகோங்க” என்றான்.

“ஆமாம்.. அதிகம் இந்த ஆபீசில் வேலையில்லை எனக்கு. நான் இப்போ சர்வீஸ் ஸ்டேஷன் பிளான் செய்துகிட்டு இருக்கேன்.. **ப்ரண்ட்.. எலெக்ட்ரிக் கார் டீலர்ஷிப் நம்மதான் எடுக்கிறோம். அதுக்கு பேசிட்டு இருக்கேன்.” என சொல்லி தன் போனெடுத்து ஒருவரின் புகைப்படம் காட்டினான்.. “பேசிட்டு இருக்கேன்.. மும்பை போகனும்” என தேதி சொல்லி பேச தொடங்கிவிட்டான்.. அந்த பிரண்டின் நிறை குறைகள் பற்றி.

ஷிவாவும் வந்த வேலையை மறந்து சந்துருவோடு கலந்துவிட்டான். கார் பற்றி பேசத் தொடங்கிவிட்டான். ஆண்கள் இருவரும் முன்புறம் பேசிக் கொண்டே நடந்துவிட்டனர்.

நால்வரும் பஃப்பே ஹால் வந்துவிட்டனர். ஆண்கள் இருவரும் திரும்பி பார்த்தனர். 

லேகா, கணவன் பார்ப்பது தெரிந்து வேறெங்கோ பார்க்க.. ஷிவா அவளைத்தான் பார்த்தான்.. அருகில் வருவாளா என. 

தீக்ஷி இப்போது சந்துருவை பார்த்து முறைக்க.. சந்துரு வந்த காரியத்தின் நோக்கம் உணர்ந்து.. தன் கைநீட்டினான் தன்னவளிடம் “திக்க்ஷி வா, நம்ம வேலையை பார்ப்போம்.. உன் அண்ணன் ட்ரீட் இன்னிக்கு.. மிச்சம் வைக்காமல் சாப்பிடனும்  வா வா..” என்றான் ஷிவாவை கிண்டல் செய்யும் புன்னகையோடு ஏறிட்டு. 

அதற்கு ஷிவா “ம்.. ம்.. நடத்து நடத்து” என்றான் இயல்பாக.. சந்துருவின் பேச்சுக்களுக்கு பழகியவனாக.

லேகா தீக்ஷி இருவருக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. அதிலும் லேகா, அசந்து பார்த்திருந்தாள். மூளை தயாராகியது.. புதிய நிகழ்வுகளை ஏற்க..

தீக்ஷி சந்துரு முன்னே நடக்க.. லேகா அவர்கள் பின்னே செல்ல முயல.. ஷிவா.. இப்போது இணைந்துக் கொண்டான் தன் மனையாளோடு.

சந்துரு தீக்ஷி இருவரும்.. ஸ்ட்டார்ஸ் என பேபிகார்ன் ப்ரை முதலில் இருக்க.. தொடங்கினர்.. தங்களின் ஆட்டத்தை.

தீக்ஷி “சந்துரு சூப்” என்றாள்.

“அதெல்லாம் சாப்பிட்டு சீரணமாக குடிப்பது.. நீ வா.. இங்க பாரு.. ப்ரான்..” என சொல்லி அவளை எடுத்த உடன் உணவு உண்ண அழைத்து சென்றுவிட்டான். தீக்ஷி பார்த்து பார்த்து.. தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டாள். சந்துரு எல்லாவற்றையும் சிறிது எடுத்து ஆராய்ந்து உண்டான்.

இங்கே லேகா என்ன செய்து என தெரியாமல் ஒரு ப்ளேட் எடுத்துக் கொண்டு நகர.. 

ஷிவா அவளின் அருகில் நெருங்கி “நீ எடுத்துடுட்டு வா..” என சொல்லி.. தனக்கென இரண்டு சூப் வகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தான்.

லேகா, கண்ணில்பட்டதை எடுத்துக் கொண்டு.. கணவனை எட்டி பார்த்துவிட்டு.. சந்துரு இருக்குமிட செல்ல தேடினாள்.. ஆனால், அந்த ஜோடியை காணவில்லை.. பொறுமையாக, கணவனின் எதிரே வந்து அமர்ந்தாள்.

ஷிவாவின் கண்கள்.. தன்னவளையேதான் பார்த்திருந்தது.. அவளின் தோற்றத்தை.. அவளின் படபடப்பை.. என எல்லாவற்றையும் ஆராய்ந்துகே கொண்டிருந்தது.. அவள் வந்து அமரவும்.. “எப்படி இருக்க..” என்றான், ஆழ்ந்த குரலில். பரபரவென அவளின் கைகளை பற்றிக் கொள்ள.. முடிந்தால் இப்போதே.. அவளை தன்னோடு கூட்டி செல்ல என அவனின் செல்கள் எல்லாம்.. வேகத்தில்தான் இருந்தது. ஆனாலும் அவனின் நிதானம் பிரயத்தனப்பட்டுக் கொண்டு.. இப்படி பேச வைத்துக் கொண்டிருந்தது அவனை.

இப்போது லேகாவிற்கு புரிகிறது.. எங்களின் வாழ்க்கையை நாங்களேதான் சரி செய்துக் கொள்ள வேண்டுமென. அதேநேரம் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்துவிட்டானே.. என ஆதங்கம்.. அதை சட்டென தூக்கியெறிய முடியவில்லை. ஒரு மன்னிப்பினை கூட வேண்டவில்லை.. தான் செய்தது சரியென வாதாடுவதாக எண்ணம்.

மனையாள் “ம்.. நல்லா இருக்கேன்..” என்றாள்.

“ம்.. இல்ல.. நீ நல்லா இல்லை.. பார்த்தாலே தெரியுது.. என்ன வேலை மட்டும்தான் செய்யுறீயா.. சாப்பிடுறீயா இல்லையா.. ட்ரெஸ் பிட்தாகவே இல்ல, தூங்குறீயா இல்லையா.. டார்க்ஸ்ர்குள்.. எப்படி இருக்குன்னு.. இங்கிருந்தே தெரியுது எனக்கு.. மேக்கப் போட்டிருக்க போல.. வேஸ்ட்.. எதுவும் எடுபடல.. அஹ.. எல்லாம் அப்படியே காட்டி கொடுக்குது. பொய் சொல்லாத லேகா.. நீ நல்லாவேயில்ல” என நிறுத்தி நிதானித்த வார்த்தைகளால்.

லேகாவிற்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை உதடுகளை கடித்துக் கொண்டு அழுகையை விழுங்கினாள்.

ஷிவா அவளின் இரண்டு ரொட்டிகள் மட்டும் இருந்த தட்டினை இப்போது பார்த்தான்.. அதை எடுத்துக் கொண்டே.. வேகமாக உணவுகள் இருக்குமிடம் சென்றான்.. இனிப்பு எடுத்து வந்து முதலில் அவளின் அருகில் வைத்தான் “சாப்பிடு வரேன்” என சொல்லி மீண்டும் உணவுகள் அவள் உண்ணும் வகைகளாக பார்த்து எடுத்து வந்து அவளின் எதிரில் வைத்தான். “எல்லாற்றையும் சாப்பிடனும் சொல்லிட்டேன்.. இனி உன்னை என்னால் தனியாவெல்லாம் விடமுடியாது. சாப்பிட்டுக் கொண்டே யோசி.. என்னோட வருவதை பற்றி..” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

தனக்கான உணவுகளை எடுத்துவர சென்றான் ஷிவா.

ஷிவா தன்னவளின் எதிரில் அமர்ந்தான்.. உண்டுக் கொண்டே “நிறைய யோசிக்காத லேகா.. எல்லாம் சரியாகிடுச்சிதானே.. என்னால் ஏற்பட்ட பிரச்சனை.. நானே சரி செய்துட்டேன்.” என சொல்லி தன்னவளின் முகம் பார்த்தான்.

லேகா யோசித்து “ஆனால், என்னோட வலிமட்டும் போகவேயில்லையே ஷிவா” என்றாள்.

கணவனின் பார்வை.. தடுமாறியது.

லேகா “நீங்களாக திட்டம் போட்டீங்க.. என்னையும் அவனையும் உள்ளே கொண்டு வந்தீங்க.. அதையும் நியாப்படுத்தீட்டீங்க. ஆறுதலுக்கு கூட ஒரு சாரி சொல்லவில்லை நீங்க. நீங்க இன்னமும் அதை தவறென்று எண்ணவேயில்லையா” என்றாள்.

கணவன் “லேகா என்னை பார்த்தால் அப்படி இருப்பது போலா இருக்கு. என்னை நீ இன்னுமா புரிஞ்சிக்கல..” என் சொல்லி அமைதியானான். அவனுக்கு இப்போதுதான் ‘சாரி’ சொல்லவில்லை என தோன்றியது. ம்.. சொல்லியிருக்க வேண்டுமோ.. அங்கேயே அப்போதே.. எல்லோரின் எதிரிலும்.. நான்தான் காரணம்.. அவள் கோவித்துக் கொண்டு செல்ல என.. அப்போதே சொல்லியிருக்க வேண்டுமோ.. எல்லாம் சையாகியிருக்குமோ.. யோசனை.

அதன்பின் பேச்சில்லை. இருவரும் எதிரெதிரே அமர்ந்துதான் உண்டனர்.. ஆனால், ஏதும் பேசிக் கொள்ளவில்லை. லேகாவிற்கு அதுவே இதமாக இருந்தது.. அழுகையை விடுத்து.. மெதுவாக உணவுகள் மேல் கவனம் செலுத்தினாள்.

தீக்ஷி சந்துரு இருவரும் தனி உலகில் இருந்தனர்.. அந்த அமைதியான ஹாலில் அவ்வபோது.. இந்த இருவரின் பேச்சும் சிரிப்பும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

இறுதியாக தீஷி.. எல்லா இனிப்பு வகைகளையும் உண்டுதான் வந்தாள்.

ஷிவா லேகா இருவரும் காத்திருந்தனர் அவர்களுக்காக.

நால்வரும் பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.

சந்துரு காரெடுக்க சென்றான்.

ஷிவா தன் சாவியை பணியாளிடம் கொடுத்துவிட்டான்.

ஷிவா தன்னவளையே பார்த்திருந்தான்.. அவளை விட்டு செல்ல மனதேயில்லை. லேகா தீக்ஷியோடு நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

கார் வந்துவிட்டது.. முன்புறம். பணியாளர் லாபியில் நின்றிருந்த ஷிவாவிடம் சாவி கொடுத்தார். அங்கேதான் மூவரும் காத்திருந்தனர்.

தீக்ஷி “அண்ணா, இரு ண்ணா.. அவர் வந்துடுவார்..” என்றாள்.

ஷிவா புன்னகைத்தான்.. அவனில்லாமல் கிளம்பிட மாட்டேன் என.. ஷிவா தன்னிரு கைகளை பாக்கெட்’டில் திணித்துக் கொண்டான்.. கைகள் தன்னவளை பற்றிக் கொள்ள.. தவிக்கிறது.. தன்னோடு அவளை கூட்டி செல்ல விழைகிறது. அதனால்.. நிதானிக்கிறான்.

லேகா நிற்க.. ஷிவா “வா, லேகா வீட்டுக்கு போலாம்” என்றான், தீக்ஷியின் எதிரிலேயே.

தீக்ஷி இரண்டடி பின்னால் சென்றாள்.

லேகாவின் சுவாசம் தப்பியது.. என்ன இது இப்படி அழைக்கிறார்.. என தடுமாறினாள்.. கணவனோ “அதான் அப்போவே சொன்னேனே.. சாப்பிட்டு முடித்ததும் என்னோடு வரவேண்டும் என.. ம்.. மறந்துட்டியா” என்றான்.. அவளுக்கு நினைவூட்டும் வகையில்.

லேகா கணவனை பார்ப்பதை விடுத்து தம்பியை தேடினாள்.

கணவனோ “இங்க பாரு.. வா போலாம்” என்றான் பிடிவாதமான  குரலில்.

மனையாள் கலவரமானாள் “அப்பா..வோடு வ..ரேன்” என தயங்க..

“போகும் போது அவரோடா போன.. என்கிட்டே சொல்லிட்டா போன.. அப்புறம் என்ன.. இது லாஸ்ட் சான்ஸ்.. என்னோட வந்திடு.. நான் திரும்பவும் கூப்பிட மாட்டேன்.. நிறைய பேசிட்டேன் அப்போவே.. வா போலாம்.. இது நாமே சரி செய்துக்கணும்.. அதான் நல்லது” என்றான், பிடிவாதம்.. அன்பு ஆளுமை.. என அழுத்தமான குரலில் வார்த்தைகள் தெறித்து சிதறியது..

லேகாவினால் அந்த குரலினை தாண்ட முடியும் என தோன்றவில்லை.. சூழலும் சரியாக இல்லாததால்.. நடுங்கினாள் பெண்.

இப்போது சந்துரூ காரெடுத்து வர.. ஷிவாவின் கார் பின்னால் தன் காரினை நிறுத்தி, பார்த்தான்.. யாரையும் ட்ரோபிங் ஏரியாவில் காணோம்.. உள்ளே வந்தான் சந்துரு.

ஷிவா தன் வலது கையால் தலை கோதிக் கொண்டு “இன்னும் என்ன பிரச்சனை..” என்றான்.

லேகாவிற்கு கணவன் செய்தது.. என்ன இருந்தாலும் தவறுதானே.. முன்பே சொல்லி.. திருமணம் செய்திருக்கலாமே என ஓடுகிறது உள்ளே.. இப்போது நிஜம்மாக! வேண்டி நிற்கும் கணவனும் கண்முன்னே நிற்க.. திணறுகிறாள் பெண்.

“என்னதான்டி வேண்டும் உனக்கு.. என்கூட வரணும்ன்னு எண்ணமில்லையா..” என நெற்றியை தட்டிக் கொண்டவன்.. “ஓ.. என்மேல்தான் இன்னமும் தப்புன்னு தோணுதா.. மன்னிக்கமாட்டியா” என்றான், சட்டென.

சொல்லிக் கொண்டே தன் டெணிம் பேன்ட்’டினை தன்னிரு கைகளால் மேல்நோக்கி இழுத்தவன்.. தன்னவள்முன் மண்டியிட்டான்.. சட்டென.. வலது காலினை முழுதாக மடக்கி.. இடது காலினை ஊன்றிக் கொண்டு
“சாரி போர் எவரிதிங்.. மன்னிச்சிடு.. இதுபோல இனி நடக்காது.. லேகா. டிரஸ்ட் மீ.. ஓன் லாஸ்ட் டைம்” என்றான். எந்த கூச்சமும் இல்லாமல்.. பகிரங்கமாக மண்டியிட்டான் தன்னவள்முன்.

சந்துரு அருகில் வந்தான்.. தீக்ஷி கணவனை கைபிடித்து நிறுத்தினாள்.

லேகா உறைந்து நின்றாள்.. சுற்றிலும் பார்க்க.. ஆங்காங்கே பணியாளர்கள்.. வருவோ போவோர் என வேடிக்கை பார்க்க.. இரண்டு மூன்று நபர்கள்  செல்போனில் படம் படித்துக் கொண்டிருக்க.. லேகா “ப்ளீஸ்.. எழுந்திடுங்க..” என்றாள் கண்ணில் நீரோடு. அங்கமெல்லாம் நடுங்குகிறது பெண்ணுக்கு.

காதலான இருவரின் கோவம்.. நீர்க்குமிழி போல.. ஆயுள்காலம் குறைவுதானே.. ஆரம்பத்தில் வண்ணங்கள் காட்டி.. அழகாக மின்னலாம். அன்பெனும் அதே காற்று.. சற்று வேகமாக அந்த குமிழியை உரச.. பட்டென.. உடையும் கோவக்குமிழிகள். அஹ.. உன்னை தவிர ஏதும் முக்கியமில்லை என மண்டியிடுபவன் முன்.. லேகாவின் கோவமும் உடைந்துவிட்டது.. அருகே வந்து “ஷிவா.. என்ன இது” என அவனின் முன் நின்றாள்.. “எழுந்துடுங்க.. எழுங்க..” என்றாள்.

ஷிவா “போலாமா” என்றான்.

மனையாளுக்கு புன்னகையும் கண்ணீரும் ஒருங்கே வந்தது இப்போது.. தலையசைப்பதை தவிர.. வேறு எண்ணமில்லை. 

 “உன்னோடு வாழ்ந்திடதானே..

நான் வாழ்கிறேன்..

உன் கையில் என்னை தந்து..

தோள் சாய்கிறேன்..

ஓ.. தோள் சாய்கிறேன்..”

ஷிவா எழுந்தான்.. தீக்ஷி அண்ணனிடம் வந்து “என்ன பன்றண்ணா.. வீட்டில் போய் காலில் விழுவதுதானே.. இதென்ன எல்லோரும் பார்க்குறாங்க” என.. புன்னகையோடு சின்ன குரலில் பேச.. ஷிவா.. மனையாளின் முகத்தினையே பார்த்திருந்தவன்.. அவளின் கைகளை பற்றிக் கொண்டான்.

“உன் அண்ணிதான் அசையமாட்டேங்கிறாளே.. வெயிட் பண்ணி பண்ணி தாத்தாவாகிடுவேன் போல.. ம்.. நீங்க சாரி சொல்லவேயில்லைன்னு சொன்னா.. அதான்..” என தீக்ஷிக்கு பதில் தந்தவன்.. மனையாளின் கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

சந்துரு.. போனில் வீடியோ எடுத்தவர்களிடம்.. சென்று, பேசிக் கொண்டிருந்தான்.. அதை டெலிட் செய்யும் படி.

சந்துரு வர.. ஷிவா “போலாமா சந்துரு” என்றான் ஒன்றுமே நடவாத பாவனையில். சந்துருவிற்கு என்ன நடக்கிறது என நெருடல்.. ஏதேனும் ஷிவா.. ‘கோவத்தில் செய்கிறானோ’ என எண்ணம்.. லேகாவின் கைபிடித்து.. இப்போது பொறுமையாக பேசுவதை பார்க்கவும்.. சந்துருவிற்கு  என்ன நடக்கிறது என பதைத்தது.

“ம்.. போலாம் மாம்ஸ்.. போலாம்” என்றான். ரகளையான சந்துரு அரண்டுவிட்டான் என அந்த குரலே எல்லோருக்கும் சொன்னது.

ஷிவா, மனையாளுக்கு காரின் கதவுகளை திறந்துவிட.. சந்துரு “மாம்ஸ், நீங்க ஏறுங்க..” என சொல்லி.. அவனின் இருப்பிட கதவுகளை திறந்துவிட்டான். 

ஷிவா மனையாள் ஏறியதும் கதவினை சாற்றிவிட்டு.. மறுபுறம் வந்தான்.. சந்துருவின் பேஸ்தடித்த முகத்தினை பார்க்க பார்க்க.. என்னமோ செய்ய.. “சந்துரு என்னாச்சு” என்றான்.

“மாம்ஸ் ஏறுங்க.. அப்புறம் பேசிக்கலாம்.. ம்.. கிளம்புங்க” என்றான் பதட்டமாகவே.

ஷிவா “ஹேய்.. உங்க க்கா, இப்படி ஷாக் கொடுக்கலைன்னா.. அசையமாட்டா சந்துரு” என்க.

“நீங்க கிளம்புங்க.. நான் கூப்பிடுறேன்” என்றான்.

ஷிவா புன்னகையோடுதான் காரில் ஏறினான்.. சந்துரு கதவினை சாற்ற.. கிளம்பினான் ஷிவா.

சந்துரு காரெடுத்தான்.. முகத்தில் இன்னமும் பதட்டம் குறையவில்லை. தீக்ஷி திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தால் கணவனை.

சற்று ஷிவாவின் காரினை துரத்திக் கொண்டே சென்றான் எனலாம். ஒருகட்டத்தில் கார் கண்ணிற்கு தப்ப.. சந்துரு நிதானமாக செலுத்தினான் காரினை.

தீக்ஷி “ஏன் இவ்வளவு டென்ஷன்” என்றாள்.

சந்துரு பேசவில்லை.. லேகாவை ஏதாவது திட்டுவானோ.. என யோசனைதான். ஷிவா பற்றி தெரியுமே.. எதையேனும் செய்து தக்க வைத்துக் கொள்பவன். அதை மனையாள் விஷயத்திலும் செய்கிறானோ.. இல்லை, உண்மையாகவே அன்பை எப்படி காட்டுவது என தெரியாமல் இப்படி யோசிக்காமல் செய்துவிட்டானோ என யோசனையோடுதான் சந்துருவின் டிரைவிங் இருக்கிறது.

தீக்ஷியின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.. ஆனால், கொஞ்சம் யோசனையிலிருந்து மீண்டுக் கொண்டான்.

தீக்ஷி மீண்டும் “என்னாச்சுங்க..” என்றாள்.

“உன் அண்ணனுக்கு எதையும் சாதரணமா செய்ய தெரியாதா.. எல்லாவற்றிலும் இப்படிதான் டெம்பர் கிரியேட் பண்ணுவானா.. கல்யாணத்திலும் இப்படிதான் எதையும் சொல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடுவது.. தொழில் என வந்தாலும்.. இப்படிதான்.. மூன்று மாதம் சுற்றவிட்டு செய்வது.. இப்போ லேகா விஷயத்திலும் இப்படிதான்.. எல்லோர் எதிரிலும் மண்டியிட்டு.. சீன க்ரீயேட் செய்து.. அஹ, என்னதான்டி பிரச்சனை அவனுக்கு.. எதையும்.. சாதரணமா செய்யவே கூடாதுன்னு வரம் வாங்கிட்டு வந்திருக்கான் போல.. அவளை என்ன டார்ச்சர் பண்ண போறானோ” என் சொல்ல சொல்ல..

தீக்ஷி “ச்ச.. என்ன இது.. அவர் எவ்வளோ ரொமாண்டிக்கா.. உன் அக்காவை கூட்டி போறார்.. ரசனையே இல்லாதவன்.. என்ன என்ன சொல்றீங்க.. சும்மா அமைதியா இருங்க.. எல்லாம் ஷிவா அண்ணா பார்த்துப்பார்.. அதுக்குதான் அவரை பால்லோ பண்றீங்களா.. அமைதியா நம்ம வீட்டுக்கு போங்க.. ஷிவா அண்ணா பார்த்துப்பாங்க..” என்றாள்.