இறுதியாக போன் ஷிவா கைகளுக்கு வர.. “ஓகே.. அப்புறம் பேசுகிறேன் லேகா” என சொல்லி அழைப்பினை துண்டித்தான்.
லேகாதான் யோசனையோடு அமர்ந்தாள்.. என்ன நடக்கிறது என.
அந்த வார விடுமுறையில்.. சந்துரு தீக்ஷி இருவரும் சித்தூர் வந்தனர். மாலையில் கல்லூரி முடிந்ததும் கிளம்பி வந்துவிட்டனர். அதனால் கொஞ்சம் நேரமாக வீடு வந்துவிட்டனர்.
சந்துரு மேலே சென்று குளித்து வந்தான்.
தீக்ஷி.. அப்படியே அமர்ந்து டிவியில் எதோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்துரு “லேகா வர லேட் ஆகும்.. நாம சமைக்கலாமா” என அவளின் அருகில் வந்து அமர்ந்து.
தீக்ஷி “ம்.. ம்..” என்றாள்.
கணவன் அவளின் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டு.. “என்ன சமைக்கலாம்” என்றான்.
தீக்ஷி “சீக்கிரமா.. நூடூல்ஸ். ம்.. “ என்றாள்.
கணவன் அவளின் தலையை தன் தலையோடு முட்டி.. “அதற்கு பெயர் சமையல் இல்ல. அவசர சமையல். இப்போது உன்கூட சேர்ந்து நான் வ்ஹோல் மீள் சமைக்க போறேன் ம்.. சப்பாத்தி.. மஸ்ரூம் கிரேவி.. ம்..” என்றான்.
தீக்ஷி “லேட் ஆகும்.. எனக்கு தூங்கனும்” என்றாள்.
கணவன் “கும்பகர்ணி.. தனியா எப்போதும் தூங்கிட்டுதானே இருக்க.. கடைக்கு போய்ட்டு வரலாமா.. ம்.. வா” என சொல்லி அவளை கைபிடித்து எழுப்பிக் கொண்டு.. நடந்தான்.
தீக்ஷி அதன்பின் தொய்ந்து போகவில்லை.. கணவனிடம் பேசிக் கொண்டே வந்தாள்.. கல்லூரி கதைகள்.. தன் மார்க்ஸ்.. வீடு.. புதிதாக வாங்கிய ஸ்ணீக்கர்ஸ் வரை கதை பேசிக் கொண்டே இருந்தாள்.. நடந்தாள்.
கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு அதே பொடி நடையோடு வீடு திரும்பினர்.
சந்துரு காய்கறிகளை கட் செய்தான்.. தீக்ஷி மாவு தயார் செய்தாள். தீக்ஷியின் கைகள் வேலை செய்து.. ஆனால், வாய் மட்டும் பேசுவதை நிறுத்தவேயில்லை.
சந்துருதான் முன்பெல்லாம் அதிகம் பேசுவான்.. இப்போது கேட்டத் தொடங்கியிருக்கிறான். அவனுக்கு இந்த கலை கைவர பெறவில்லைதான்.. அவளை மட்டும் கவனித்து.. அவள் பேசுவதை கேட்ட முடியாமல் தடுமாறுகிறான்தான் சிலநேரம். ம்.. அவள் உதடுகள் அசைவையும்.. பாவனைகளை விளக்கும் போது.. தெறித்து விழும் அவளின் விழிகளையும் பார்க்க பார்க்க.. அவளின் குரல் மெலிதாகதான் காதில் கேட்க்கிறது அவனுக்கு. தானும் அவள் எது சொன்னாலும் அவளை பார்க்கும் ஆர்வத்தில் ‘ம்’ கொட்ட கூட மறந்துவிடுகிறான்.
இப்போதும் அப்படியே அவள் வாங்கிய ஸ்ணீக்க்ர்ஸ் பெருமையைத்தான் தொடக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்க.. கணவன் அதுதானே பேசுகிறாள் என எண்ணி அவளை ரசிக்கத் தொடங்கிவிட்டான். அதில் கணவனின் ம்.. இல்லாததால் நிமிர்ந்தாள் பெண் “சந்துரு.. கேட்ட்க்கிறீங்களா” என்றாள்.
சந்துரு வெங்காயம் கட் செய்வதில் ஆர்வமாயிருக்க.. மனையாளின் சத்தம்.. இப்போதுதான் அவனை உயிர்ப்பிக்க.. லேசாக விழித்தான்.
தீக்ஷி “நான் பேசும் போது என்னை கவனிங்கன்னு சொல்லிட்டே இருக்கேன்.. அந்த வெங்காயம்தான் முக்கயமா உங்களுக்கு” என்றாள்.
சந்துரு விவரமாக “என்னடி வேண்டும்.. அந்த பிராண்டட்’க்கு நீ கொடுக்கிற மார்கெட்டிங் கொஞ்சம் ஓவரா இருக்கு.. அதனால், டாபிக் மாற்று..” என்றான்.
தீக்ஷி முறைத்துக் கொண்டே.. “கனவு கண்டுக் கொண்டே இருப்பீங்களா.. நான் லேகா அண்ணி பற்றி பேசிட்டு இருக்கேன்.. பிரச்சனைதான் முடிஞ்சிடுச்சே.. இனி அண்ணியை அவங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா.. ம்.. அண்ணன் ட்ரீட் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்.. அண்ணிகிட்ட பேசுங்க.. நாம நாலுபேர் மட்டும்தான் போகணும்.. ம்.. புரியுதா.. அவங்க கொஞ்சம் பேசட்டும்.. ஏதாவது நடக்குதா பார்க்கலாம்.” என்றாள்.
கணவன் “இது எப்போ பேசின.. உன் அண்ணன் உனக்கு ட்ரீட் கொடுப்பான்.. வேணும்ன்னா அவனையே வந்து கூப்பிட்டு போக சொல்லு.. நான் ஏதும் பேசமாட்டேன், வரவும் மாட்டேன்” என்றான், கிண்டலாக.
தீக்ஷியும் அதே குரலில் “சரி நாங்க மூணுபேரும் போகிறோம்” என்றாள்.
சந்துரு “நான் இல்லாமல் போய்டுவியா நீ” என்றான்.
“ம்.. கண்டிப்பா போவேன்.. பாருங்க..” என்றாள்.
“உனக்கு, உன் அண்ணன் பேசினதும் கொஞ்சம் திமிர் வந்திடுச்சி.. புருஷனை மதிப்பதில்லை” என சொல்லிக் கொண்டே காய்கறிகளை எடுத்து வந்து அவளை ஒரு இடி.. இடித்தான்.
பெண்ணவள் “நாம நாளைக்கு போறோம்.. அண்ணிக்கிட்ட பேசனும் நீங்க” என்றாள் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு மிரட்டி.
சந்துரு “ம்.. பார்ப்போம்.. பார்ப்போம்..” என வேலையை தொடங்கினான்.
இருவரும் ‘என்ன செய்யலாம் ஷிவாவோடு வெளியே செல்ல..’ என பேசிக் கொண்டே உணவு சமைத்தனர்.
லேகா சற்று நேரத்தில் வந்துவிட்டாள்.
“சாரி தீக்ஷிம்மா.. லேட் ஆகிடுச்சி. அதற்குள் சமையல் ஆரம்பித்துவிட்டீர்களா.. தள்ளுங்க.. நான் சாப்பாத்தி போட்டு எடுக்கிறேன்.. ம்.. மூவ்” என்றாள்.
தீக்ஷி “அண்ணி.. வேண்டாம்.. இன்னிக்கு என் ட்டர்ன்.. நாளைக்கு உங்க ட்டர்ன் ஓகே” என்றாள்.
லேகா உண்ணத் தொடங்கினாள். சந்துரு தீக்ஷி இருவரும் எதோ பேசிக் கொண்டே இருந்தனர்.. கிட்செனில். அடிக்கடி சந்துரு சாப்பாத்தி எடுத்து வந்து அக்காவிற்கு பரிமாறினான். ஆனாலும் மனையாளோடுதான் நின்றான் அங்கே.
லேகாவிற்கு அன்று கணவன் சொன்னது நினைவில் வந்தது ‘நாமும் சரி செய்துக்கலாம்’ என்ற வார்த்தையும்தான். சந்தோஷமாகவே இருந்தது.. எல்லாம் சரியாகிவிட்டதா என. அன்றிருந்த குழப்பம் இல்லை.. இப்போது. கணவனின் வார்த்தையும்.. அவனின் அழைப்பும்.. அவளின் நினைவில் வந்தது.
சந்துரு தீக்ஷி இருவரும் அமைந்தனர் உண்பதற்கு.
லேகா கைகழுவி வந்து அமர்ந்தாள்.
தீக்ஷி கணவனிடம் “கேளூங்க” என சின்னதாக கணவனின் முழங்கையில் ஒரு இடி இடித்தாள்.
சந்துரு “லேகு.. ஷிவா ட்ரீட் கொடுக்கிறாம்..” என தொடங்க..
தீக்ஷி “அண்ணி, நான்தான் அண்ணன்கிட்ட ட்ரீட் கேட்டேன்.” என சொல்லி கணவனை முறைத்தாள். பின் “அண்ணன், கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்.. போலாம் அண்ணி.. அவர் நாலுபேரும் வந்தால் கொடுக்கிறேன்னு சொன்னாங்க.. வாங்க அண்ணி.. நாம் போயிட்டு வருவோம்.. நாளைக்கு ஓகே சொல்லவா” என்றாள்.. ஆவலாக.
லேகாவின் முகம் சின்ன மலர்ச்சியை காட்டியது.. ஆனாலும் “வேலையிருக்கு தீக்ஷி.. அத்தோட, நான் வந்தால் சரியாக இருக்காது..” என சொல்லி எழுந்து சென்றுவிட்டாள்.
மனதெல்லாம் படபடவென அடித்துள் கொண்டது லேகாவிற்கு. ஷிவா நானும் வந்தால்தான் ட்ரீட் கொடுப்பேன் என சொன்னதை கேட்க்க கேட்க்க.. ஆனந்தம். ஆனால், எதோ பதட்டம்.. சட்டென மனம் சாய்ந்திட்டதோ என பதட்டம்.. எப்படி அவரை எதிர்கொள்வது என பதட்டம். அதனால், வந்துவிட்டாள் தன் அறைக்கு.