மனம்கொள்ள காத்திருந்தேன்

23

ஷிவா தன் மனைவிக்கு அழைத்தான் அப்போதே. ஆனால், பெண்ணவள் அந்த அழைப்பினையும் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் என நான்குமுறை அழைத்தான்.. பெண்ணவள் அங்கே போனினை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாலே தவிர.. கணவனின் அழைப்பினை ஏற்க.. அவளிடம் தெம்பில்லை. ம்..  ‘எனக்கு டிவோர்ஸ் வேண்டும்’ என வாய்மொழியாக சொல்ல அவளுக்கு தைரியமில்லை. அஹ. உண்மையை சொன்னால் அவளுக்கு பிடித்தமும் இல்லை.

ஷிவா அந்த செய்தியை மீண்டும் ஒருமுறை பார்த்து கசப்பாக புன்னகைத்துக் கொண்டான்.. ‘அஹ.. தலைமை வந்ததும் என் முதல் பரிசு இதுதானா..’ என தவிப்பாக எண்ணிக் கொண்டே.. திரையில் தெரிந்த தன்னவளின் கன்னங்களை வருடிய படியே அமர்ந்திருந்தான் தன் அலுவலக அறையில்.

ஷிவாவிற்கு, நெருக்கடியானது மனது.. என்னமோ.. ஓய்ந்து போனது.. ‘எதற்கு இதெல்லாம்’ என ஒரு எண்ணம் இப்போதே. யாரும் மகிழவில்லை.. என் பொறுப்பில்.. இந்த பதவியில் என மனம் ஆழ்ந்தது. எதோ கடனே என வாழ்த்து.. தந்தைகூட கோவத்தோடு வாழ்த்தினார்.. அன்னை இன்னமும் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.. லேகா ஹோ..’ என அலை அலையாக அழுத்தம். அவனால் மீளவே  முடியவில்லை.

தலை வலி.. ஷிவா, இண்டர்காம் வழியாக வந்த அழைப்பினை ஏற்று விவரம் கேட்டுக் கொண்டவன்.. பதில் பேசி முடித்தான். பின் இண்டர்காமில் அழைத்து.. தனக்கு சூடாக காபி கொண்டுவர பணித்தான். 

தனது யோசனையை தள்ளி வைத்து.. வேலையில் கவனமானான். 

இப்போது ஷிவாவின் கைபேசியில்  அழைப்பு.

எதோ அன்னவுன் நம்பர் என வர.. யோசனையோடு எடுத்தான் அந்த அழைப்பினை ஷிவா.

மென்மையான குரலில் தயங்கி தயங்கி “அண்ணா, நான் தீக்ஷி.” என்றது.

ஷிவாவின் முகம் இய்லபானது.. “ஓ.. சொல்லும்மா” என்றான்.

“கங்கராட்ஸ்..” என்றாள்.

ஷிவாவின் தலைவலி எங்கோ காணாமல் போனது சட்டென “தேங்க்ஸ் ம்மா..” என்றவன்.. காற்றினை முழுதாக சுவாசித்து நிமிர்ந்தான். அடுத்த பேச்சில்லை இருவரிடமும் நொடிகள் நீண்டது. 

ஷிவா அவளின் தயக்கத்தை உணர்ந்து தானே தொடர்ந்தான் “எப்படி இருக்க” என.

தீக்ஷி தயங்கி “ம்..” என்றாள். பின் “ அண்ணா, நீ விருப்பட்ட கார் சார்ஜ்ஜிங் ப்ராஜெக்ட்.. அதை அவருக்கு கொடுத்திருக்க.. ஏன் அண்ணா” என்றாள், ஷேக்கியான வாய்ஸ்.. பேசியே இருந்திடாத அண்ணனிடம்.. ஒரு பெரிய விஷத்தை பேசுவது அவளுக்கு சாதரணமாக இல்லை.

ஆனால், ஷிவா புன்னகையோடு “சந்துருவிற்கு என்னைவிட இதில் நல்ல நாலேஜ் இருக்கு தீக்ஷி.. அத்தோட இதில் நானும் பார்ட்னர் தானே. ஏன் உனக்கு இதில் விருப்பமில்லையா” என்றான்.. சாதரணமான குரலில்.

தெளிவாக குரலில் திடத்தினை கூட்டிக் கொண்டு “அப்படி இல்லை.. பெரியப்பா.. ஏதாவது சொல்ல கூடும்” என சொல்லி நிறுத்திக் கொண்டாள் தன் பேச்சினை.

ஷிவா “ ம்.. இது தொழில் தீக்ஷி.. எல்லோரையும் பார்க்க முடியாதில்ல.. எது ப்ரோபிட்டப்லோ அதைதானே செய்யணும். அப்போதானே ப்ரோபிட் சரியாக இருக்கும். ம்.. நீ ரொம்ப இதில் யோசிக்காத.. உன் படிப்பில் கான்ஸான்ரெட் செய்..” என்றான்.

“ம்.. தேங்க்ஸ் அண்ணா..” என்றாள்.

இருவருக்கும் நடுவில் அமைதி. ஷிவா, தானே உணர்ந்திருக்கவில்லை.. இவ்வளவு தீக்ஷியிடம் பேசுவோம் என.. சட்டென நிகழ்ந்திருந்தது.. அதில் சற்றே அமிழ்ந்திருந்தான்.

தீக்ஷி “சரி, எப்போ ட்ரீட் தரீங்க” என்றாள், சகஜமாக முயன்ற குரலில்.

ஷிவாவின் முகத்தில் இழையாக ஒரு புன்னகை.. “ம்.. போலாம். எப்போ வர” என்றான்.

தீக்ஷி “நாம மட்டும் எப்படி போறது.. நம்ம பார்ட்னர்ஸ் இல்லாமல்” என்றாள்.

ஷிவாவிற்கு.. லேகாவை காண விருப்பம் அதனால் இதை சாக்காக வைத்து பார்க்கலாம் என எண்ணினான். ஆனாலும் தீக்ஷி இவ்வளவு தெளிவாக யோசிக்கவும் “என்ன, ஏதாவது பிளான் பண்றீயா” என்றான்.

தீக்ஷி “என்ன என்ன ப்ளான்.. எதுக்கு ப்ளான்” என்றாள்.

ஷிவா ஏதும் பேசவில்லை.

தீக்ஷி “அதெல்லாம் அண்ணிகிட்ட நடக்காது. அவங்க தம்பி உண்மையை சொல்லி கூட்டிட்டு வந்தால் உண்டு.. என்னால், அவர்களை ஹன்ட்ல் பண்ண முடியாது அண்ணா, அதனால், நான் பிளான் ஏதும் போடவில்லை. ஆனால், நாலுபேரும் சேர்ந்து கண்டிப்ப்பா.. எங்காவது வெளியே போறோம்.. சீக்கிரமாக. ஓகே” என்றாள்.

ஷிவா “ம்.. ஒகே” என்றான் இலகுவான குரலில். மனைவியின் நினைவு மீண்டும் அவனை ஆக்கிரமிக்க தொடங்கியது.

தீக்ஷி “சரி அண்ணா நான் வைக்கிறேன்” என்றாள்.

ஷிவாவும் அழைப்பினை துண்டித்தான்.

இந்த அழைப்பினை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.. அத்தோடு இந்த நால்வரின் சந்திப்பினையும். நடக்கும் நடாக்காது என்பதைவிட.. தீக்ஷி எதோ செய்வாள்.. அதைவிட கேட்க்கவாது செய்கிறாள்.. நால்வரும் செல்லலாம் என.. என ஒரு புரிதல் வந்தது.. ஷிவாவிற்கு.

வேலைகலை ஆறுதலாக பார்க்கத் தொடங்கினான்.

இரவு வீடு வந்தான்.. ஷிவா.

ஆனந்தமோ ஆர்பரிப்போ இல்லை.. இந்த நாளில். வெறுமையாக இருந்தது மனது. அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டான். என்ன இருந்தாலும் நான்தானே வாழ்ந்தாக வேண்டும் என ஒரு எண்ணம் பெருமூச்சோடு எழ.. அசதியாக எழுந்தான்.

காரில் கேட்ட பாடல் நன்றாக இருக்க.. க்ரிஷ்ஷூடைய பென் டிரைவ் எடுத்து வந்துவிட்டான் வீட்டிற்கு.

நான்கு மொழிகளிலும் பாடல் இருந்தது.. கடந்த இரண்டு வாரமாக அலுவலகம் போக வர என கேட்டுக் கொண்டிருந்தான் அந்த பாடல்களை ஷிவா. பாடல்கள் அவனுக்கு பரீட்சையமில்லாத்வைதான். ஆனால், அவனின் சூழல்.. இந்த ரசனையை அவனுள் கொண்டு வந்து சேர்த்தது இந்த நாட்களில்.

இப்போது டிவியில் பென்டிரைவ்’வினை பிக்ஸ் செய்து.. அதனை ஒளிக்கவிட்டு.. தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்.

குளித்து.. தன் லாப்டாப் எடுத்து அமர்ந்து மெயில்ஸ் பார்த்து.. சிலதிற்கு பதில் தந்து என வேளையில் கவனமானான்.

பசி எடுக்க.. கிட்சென் வந்தான். ராகி தோசை. தக்காளி சட்னி. மனது மீண்டும் முருங்கை மரம் ஏற.. ம்.. அவளின் நினைவு தளும்பி நின்றது. அஹ.. அவளை மீட் பண்ணி பேசிவிடலாம். ஆனாலும் அவள் கேட்ட டிவோர்ஸ் என்றதில் சின்ன கோவம் இருக்கவே செய்கியது அவனுக்கு. அதை சட்டென கடக்க முடியவில்லை அவனால். ஒரு போன் செய்யவில்லை இன்னமும் என அந்த நினைவும் அதிகமாகியது. மனதை ஈர்ப்பிலிருந்து கோவத்திற்கு மாற்றி.. வைத்துக் கொண்டான். ம்.. அப்படிதான் நம்பினான் ஷிவா.

உண்டுக் கொண்டிருக்க.

“நான் தந்த மல்லிகையை..

நட்டாற்றி விட்டுவிட்டு..

அரளி பூ சூடி..

அழுதபடி போறவளே..” 

என்ற வாரிகள் காதில் விழ.. ஷிவா துவண்து போனான்.. ம்க்கூம்.. தள்ளி போடா கூடாது.. வீம்பில் இருக்கா.. கொஞ்சம் பேசிடனும்.. என எண்ணம். ஆனாலும், அவளுக்கு அழைப்பதா வேண்டாமா என யோசனை.

பால்கனியின் கண்ணாடி கதவுகளை திறந்து வைத்திருந்தான்.. குளிர்காற்று உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தது.. மெல்ல மெல்ல காதலாக அவளின் நினைவு அவனுள் வந்தது.. ‘இங்குதானே நானும் அவளும்.. கைபிடித்து நின்றிருந்தோம்.. இங்கேதான் அவள் என் மடிமீது அமர்ந்திருந்தாள்..’ என மனம் கனக்க செய்தது.

உணவு முடித்துக் கொண்டு.. பால்கனி சேரில் அமர்ந்தான். ஈசி சேர் அது.. சில நேரங்களில் ஷிவா நடு இரவில் வீடு திரும்புவான்.. ஏர்போர்ட்டிலிருந்து நேராக தானே காரெடுத்துக் கொண்டு வருவான். லேகா, விழித்திருப்பாள்.. இந்த சேரில் அமர்ந்தபடி. ஷிவாவிற்கு அந்த காத்திருப்பு எப்போதும் இதமாகவே இருந்தது. அவளுக்கான இனிப்புகளோடு.. அவளை அந்த ஏகாந்த நேரத்தில் தன்னுள் வாங்கிக் கொள்வான் இதமாக. இருவருக்கும் அந்த விடியல்.. காதலால் நிரம்பி இருக்கும்.

இப்போது அந்த நேரமெல்லாம் அவனின் மனக்கண்ணில் நிழலாட.. ஷிவாவின் கண்கள் கசிந்தது. 

இப்போது, வசந்தி அழைத்தார்.. மகனுக்கு. அவரும் இதுவரை வாழ்த்து சொல்லவில்லையே அதனால் அழைத்தார்.

ஷிவா அன்னையிடம் பேச தொடங்கினான்.

வசந்தி வாழ்த்துகள் சொன்னார்.. வேறு வேலவன் பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. “என் சித்தி சித்தப்பாவின் அறுபாதாவது திருமணவிழா.. உன்னை அழைக்க  நேரில் வருகிறேன் என்கிறான் சுதாகர்.. நீ காலையில் வீட்டில் இருப்பாய் என சொல்லியிருக்கிறேன்” என்றார்.

ஷிவா இருக்க வேண்டும் என சொன்னார் ‘சரி’ என்றான் மகனும். இருவரும் அழைப்பினை துண்டித்தனர்.

ஷிவா நேரம் பார்த்தான்.. மணி பத்து எனதான் இருந்தது. மனையாளுக்கு அழைக்கலாம் என அழைத்தான். அவள் அழைப்பினை ஏற்பாள் என அவன் எண்ணியிருக்கவில்லை.. ஆனால், லேகா அழைப்பினை ஏற்று “ஹலோ” என்றாள்.