“ம்.. அவங்க மூணுபேரும் மதியம் வரேன்னாங்க..” என்றார்.
தீஷி ஷிவாவிற்கு தண்ணீர் கொடுத்தாள்.. ஷிவா “எப்படி இருக்க தீக்ஷி” என்றான்.. வாழ்நாளில் முதல்முறை.. ஷிவா, தீக்ஷியிடம் இப்படி பேசுவது.. சுந்தரம் காதுகளிலும் இது விழுந்தது.. கேட்கவே நன்றாக இருந்தது.
தீக்ஷி “ம்.. நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க” என்றாள்.
சுந்தரம் அய்யாருக்கு தேவையான உதவிகள் செய்யத் தொடங்கினார்.. ரமேஷ், அங்கே நின்றார்.. கீழே அமர்ந்து.. அரிசி வாழக்காய் என ஏதேதோ வேலைகள் நடந்தது.
ஆனாலும், ஷிவா தீக்ஷியின் பேச்சுகள் இருவரின் காதிலும் விழுந்தது.
ஷிவா, மனையாளை எட்டி பார்த்துக் கொண்டே.. தீக்ஷிக்கு பதில் சொன்னான் “ம்.. நல்லா இருக்கேன்..” என்றான்.. மனதில் எதோ யோசனை போல.. சுதாரித்து.. “ நீ எப்படி படிக்கிற.. செகண்ட் இயர்தானே நீ” என்றான்.
கண்டிப்பாக லேகா அதை கலந்திருப்பாள் என தீக்ஷிக்கு அனுமானம்.. அதனால் கேட்டாள். ஷிவா தலையசைத்தான்.
தீக்ஷி கொண்டு வந்து கொடுத்தாள். மனையாள் வருவாளோ என சின்ன எதிர்பார்ப்பு.. தெரியும்.. வரமாட்டாள் என ஆனாலும் ஒரு நப்பாசையில் எட்டி பார்த்தான் கிட்செனை ஷிவா. பாவம் கண்ணுக்கெட்டும் தூரம்வரை.. மனையாளை காணவில்லை.
கஞ்சி வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு.. லேகாவின் அறைக்கு சென்றுவிட்டான், அவளின் கணவன்.
ஷிவா அறைக்குள் வந்ததும்.. லேசாக தன் பேன்ட் தளர்த்திக் கொண்டான்.. தன் சட்டையின் இரண்டு பட்டன்களை கழற்றிக் கொண்டு.. அப்படியே கட்டிலில் சாய்ந்தான். ஏசி ஆன் செய்துக் கொள்ளவில்லை.. ஏன் பேஃன் கூட போட்டுக் கொள்ளவில்லை.. அப்படியே சாய்ந்தான். மனதின் பெரிய பாரம்.. எதையும் கவனிக்கவிடாமல் செய்தது அவனை.
ஹாலில் இங்கே எல்லாம் நடந்தது.. ரமேஷ் சுந்தரம் இருவரும் ஷிவா குளித்து வருவான் என எதிர்பார்க்க.. அவனை காணவில்லை எனவும் ரமேஷ் “மாப்பிள்ளையை பாருப்பா” என்றார் மகனிடம்.
சந்துரு லேசாக கதவை திறந்துக் கொண்டு பார்க்க.. ஷிவா உறக்கத்தில் இருந்தான்.. நெற்றியின் வியர்வை.. காதோரம் வழிந்தது. சந்துரு பார்த்தான் அதை.. ‘என்னாச்சு.. இந்தாளுக்கு.. இப்படி இருக்கமாட்டாரே’ என எண்ணிக் கொண்டே, அவசமாக வந்து பேஃன்.. ஏசி.. என எல்லாம் ஆன் செய்து.. கதவினை மெதுவாக சாற்றிக் கொண்டு வெளியே வந்தான். ஷிவாவின் அசந்த உறக்கம்.. மைத்துணனை என்னமோ செய்தது. ஷிவாவின் பேச்சில்லா உலகத்தை, முதல்முறை.. சந்துரு அறிய முற்பட்டான்.
தந்தையிடம் “ஷிவா தூங்கறாங்க ப்பா, கண்டிப்பா அவர் வரணுமா” என்றான். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. ரமேஷ் “இல்லப்பா.. எழுப்பாதே” என்றுவிட்டார்.
லேகா “என்ன டா.. ஆச்சு, ஏதாவது முடியலையா.. பாரு” என்றாள்.
சந்துரு “ஒண்ணுமில்ல.. மோர்னிங்.. சீக்கிரம் எழுந்திருத்திருப்பார், அதான். நீ போய் பாரு” என்றான்.
லேகாவிற்கு, உள்ளே செல்ல மனதில்லை. அத்தோடு வேலையும் இருந்தது, அதனால் அப்படியே நின்றுக் கொண்டாள்.
திவசம் நல்லபடியாக முடிந்தது.. ரமேஷின் உறவுகள் வந்திருந்தனர்.. ரமேஷ் அவர்களோடு அமர்ந்து உண்டார். டைனிங் ஹாலில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர் பெண்கள். எல்லோரும் உண்டானர். உள்ளூர் உறவுகளில் ஆண்கள் கிளம்பினர்.
ஷிவா இன்னமும் எழுந்துக் கொள்ளவில்லை.
வடிவேலு வசந்தி இருவரும் தாமதமாகவே வந்தனர். ரமேஷ் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். லேகா வந்து வரவேற்றாள்.
தீக்ஷி தண்ணீர் கொடுத்து பேசிக் கொண்டிருந்தாள்.
க்ரிஷ் வந்தான் இப்போது. சந்துரு அழைத்திருந்தான் அவனை. அத்தோடு ஷிவா இருப்பதாலும் வந்தான்.
வடிவேலு மருமகளிடம் நன்றாக பேசினார். வசந்தி நலம் விசாரித்து அமைதியாகிவிட்டார். வடிவேலு, சந்துருவிடம் பேசவில்லை.. சந்துரு வரவேற்றதும்.. தலையசைத்தார் அவ்வளவுதான். அதன்பின் தீக்ஷியிடம் நன்றாக பேசினார்.
லேகா இவர்களை உண்பதற்கு அழைத்தாள்.
லேகா “சந்துரு தீக்ஷி” நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்.. அவர் லேட் ஆகும் போல எழுவதற்கு” என சொல்லி அழைத்தாள்.
சந்துரு “லேகா.. ஷிவா வரட்டும்.. நாங்க அவர்கூட சப்பிட்டுகிறோம்.. நீ இவர்களுக்கு பரிமாறு” என்றான்.
வடிவேலுவிற்கு அப்போதுதான் மகன் வந்ததே தெரிந்தது “ஷிவா இருக்கானா? சொல்லவேயில்லை” என்றுவிட்டார்.. அதிர்ந்து.
‘என்ன சொல்லனும்’ என சந்துருவிற்கு ஒரு கேள்வி எழ.. அவனோ மறையாமல் “என்ன சொல்லணும்.. மாமியார் திவசத்திற்கு.. அவர் வரமாட்டாரா” என்றான் அழுத்தமான குரலில்.
சட்டென சூழல்.. வெப்பமானது.. ரமேஷ் “இல்லை வடிவேலு.. அவர் காலையிலேயே வந்துவிட்டார். டயர்ட் போல.. தூங்கிட்டு இருக்கார்.. நானும் உங்களுக்கு தெரியும்ன்னு நினைச்சி ஏதும் பேசவில்லை..” என்றார்.
வசந்தி “வந்ததும்.. சொல்லியிருக்கலாம்.. ஷிவா இங்கதான் இருக்கான்னு.. கல்யாணத்திற்கு பிறகு.. எங்க நிலை இப்படிதான் இருக்கு.. எதுவாக இருந்தாலும் கேட்டு தெரிந்துக் கொள்ளுவது போலதான்.. இருக்கு. அவனுக்கு எதோ உடம்பு சரியில்லாமல் போயிடுச்சாம்.. எங்ககிட்ட சொல்லவேயில்ல.. நீங்களாகவே எல்லாம் முடிவேடுக்குறீங்க” என்றார் சின்ன குரலில்.. லேகாவை பார்த்துக் கொண்டே.
லேகாவிற்கு மாமியார் பேசியதில் குற்றவுணர்வானது.. கண்கள் கலங்கியது. சந்துரு லேகாவை பார்த்து முறைத்தான். அவள் நிமிரவேயில்லை.
ரமேஷ் அதிர்ந்தார் “அப்படியெல்லாம் எதுமில்லைம்மா.. என்ன உடம்பு சரியில்லை.. யாருக்கு” என்றார்.
சுந்தரம் என்ன செய்வது என தெரியாமல் “அது மச்சான்.. ஷிவாவிற்கு இரண்டுமாசம் முன்னாடி உடம்பு முடியலை.. அதை சொல்றாங்க” என்றார்.
ரமேஷ் ஏதும் புரியாமல் “எங்களுக்கு தெரியாதே ம்மா.. என்னாச்சு, ஷிவா மாப்பிள்ளைக்கா” என்றார்.
சுந்தரம் “ஒண்ணுமில்ல மச்சான்.. காய்ச்சல்..”என சமாதானமாக்க பார்க்க.
வசந்தி “என் பையனுக்கு புளூ பீவர்.. யாருக்குமே சொல்லாமல் உங்க பொண்ணு அவனை பார்த்திருக்கா.. ஒருவார்த்தை பெரியவங்களுக்கு சொல்ல வேண்டாமா?.. என்னமோ போங்க அண்ணா.. எதுவுமே சரியில்லை.. இவர் எவ்வளவு வருத்தப்படுறார் தெரியுமா” என தன் கணவனுக்கு சாதகமாக பேசியவர்.. மருமகளை முறைத்தார்.
ரமேஷ் ஏதும் புரியாமல்தான் இருக்கிறார் இப்போதும்.
சந்துரு “அப்பா.. ஷிவாவிற்கு உடம்பு முடியலை.. அவர் நேராக காரெடுத்துக் கொண்டு.. இங்கே வந்திருக்கார்.. லேகாவை பார்க்க. லேகாதான்.. ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கா.. அப்புறம் இவர்களுக்கு போன் செய்திருக்கா.. ஆனால், வசந்தி அத்தை டூர் போயிட்டாங்க.. லைன் போகலை. மாமா.. அமைச்சரை பார்க்க போயிருக்கார்.. எடுக்கலை. சுந்தரம் மாமாக்கு கூப்பிட்டிருக்கா.. அவர்தான் வந்து பார்த்து, இரண்டுநாள் அவர்கள் கூடவே இருந்து.. ஷிவாவை வீடு சேர்த்திருக்கார். போதுமா.. அத்தோடு அவங்க பையன்தான் யாரிடமும் சொல்லாதேன்னு சொல்லியிருக்கார்.. ம்..” என்றான் நக்கலாக.
சந்துரு “எது.. திருட்டுத்தனம்.. பையன் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்க அவரிடம்கூட சொல்லாமல் டூர் போயிட்டாங்க” என பேச பேச.. ரமேஷ் மகனை அதட்டினார் “டேய் சும்மா இருப்பா” என.
சுந்தரம் உண்ணத் தொடங்கிவிட்டார்.. அண்ணன் அண்ணியை எதிர்பார்க்கவில்லை.. அவர், காலையில் வந்துவிட்டார்.. பாவம் அவருக்கு பசி. அவரை பார்த்து க்ரிஷ் உண்ணத்தொடங்கிவிட்டான்.
வசந்திக்கு கோவம் வர.. எழுந்தார். சரியாக அந்த நேரம் ஷிவா வந்தான் அறையிலிருந்து. வசந்தி உண்ணவில்லை.. அதே நரம் இலையில் உணவு பரிமாறி இருந்தாள் லேகா.. அதனால் லேகா “அத்தை சப்ப்பிடுங்க அத்தை..” என.. ரமேஷ் “என்ன ம்மா.. சாப்பிட்டு பேசலாம்.. முதலில் சாப்பிடு” என இருவரும் ஒருசேர சொல்ல..
வடிவேலு “சாப்பிடு வசந்தி.. பேசிட்டுதானே இருக்கோம்.. சின் பசங்க விவரமில்லாமல் ஏதாவது பேசத்தான் செய்வாங்க.. சாப்பிடு முதலில்.. என் தங்கச்சி சாப்பாடு.. சாப்பிடு” என்றார் அதட்டலாக.. சந்துருவை சின்னபையன் என மட்டம் தட்டி.
சந்துரு “அதானே.. உண்மை எப்போதும் அப்படிதான்” என பேச..
ஷிவா எல்லோரும் இருக்கும் டைனிங் ஹால் வந்தான்.. குளித்து ஒரு வேட்டி டி-ஷர்ட்டில் வந்தான்.
ரமேஷ் “நான் முதலில் சாப்பிட்டேன் மாப்பிள்ளை. நீங்க சாப்பிடுங்க.. லேகா இலை போடும்மா” என்றார்.
தீக்ஷி லேகா இருவருக்கும் சந்துருவிடம் பார்வை சென்றது,
ஷிவா மனையாள் ‘உண்டாளா’ என அவள் முகம் பார்க்க.. அவளின் பார்வை.. தீக்ஷியை பார்க்க.. ஷிவா “தீக்ஷி சந்துரு நீ சாப்பிட்டீங்களா” என்றான், விளங்கிக் கொண்ட பார்வையாக.
தீக்ஷிக்கு ‘அப்பாடா’ என்றானது.. “இல்ல ண்ணா, அவர் உங்களுக்காகதான் வெயிட் பண்றாங்க” என்றாள்.
லேகாவின் முகம் தளர்ந்தது.. புன்னகை இல்லையென்றாலும்.. இறுக்கம் குறைந்து.. நால்வருக்கும் பரிமாறினாள் பெண்.
அதன்பின் ஷிவா.. சந்துரு தீக்ஷி என நால்வரும் அமர்ந்தனர். லேகா பரிமாறிக் கொண்டிருந்தாள்.
ஷிவா “நீயும் உட்காரு லேகா சாப்பிடலாம்” என்றான்.. அவளை கண்ணோடு பார்த்து.
மனையாள் தலையசைத்தாள்.
ஹாலில் பெரியவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.. ஷிவாவிற்கு உடல்நலமில்லாதது குறித்து.. சுந்தரம் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தார்.
ஷிவாவிற்கு, ஒருமாதிரி இருந்தது.. பெண்டாட்டியை பார்க்கமாட்டேன் பேசமாட்டேன்.. என்றவன் செய்யும் வேலையாயிது.. அதுவும்.. இந்த சந்துரு முன்னால்தான் பேச வேண்டுமா என இருந்தது.
பின் ‘அப்படிதான் டா.. பண்ணுவேன்..’ என தனக்குள் சொல்லிக் கொண்டு திடமானான்.
தன்னவளை பார்வையால் தொடர்ந்தான்.. பொறுமையாக தன் இலையில் பரிமாறிக் கொண்டிருந்தாள்.. அருகிலிருந்தவளின் வாசத்தை நாசியில் ஏற்றுக் கொண்டான்..
“உன்கைகள் கோர்த்து..
உன்னோடு போக..
என் நெஞ்சம்தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோளில் சாய்ந்து..
கண்மூடி வாழ..
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே..”
நிதானமாக உண்டான். தன்னவளின் சமையலை நீண்டநாட்கள் சென்று உண்பதால்.. ரசித்து.. உண்டான்.
அஹ.. ஷிவா “வடை நல்லா இருக்கு.. ரசம் ம்..” என ஒரு ஒரு வாய்க்கும்.. ஒரு பாராட்டு கொடுத்துக் கொண்டே உண்டான்.
லேகா, அவனின் வார்த்தையில்.. அவனின் ஏக்கம் உணர்ந்தாள்.. தொண்டை அடைத்தது துக்கமும் அன்பும்.