ஷிவா, சூர்யநமஸ்காரம் செய்துக் கொண்டிருந்தான் அந்த பெரிய பால்கனியில்.
வசந்தியை.. வேலை செய்பவர் அழைத்து அமர வைத்தார்.
வசந்தி “பாலா” என் அழைத்துக் கொண்டே பால்கனிக்கு வந்தார்.
மகன் திரும்பி பார்த்துவிட்டு, தன் வேலையை தொடர்ந்தான். கொஞ்சம் சோர்ந்து போனார் வசந்தி. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்.. உள்ளே வந்து கிட்சென் பார்க்க தொடங்கினார்.
வேலை செய்பவர்.. தான் கொடுத்த சத்துமாவு அல்லாமல் வேறு எதோ பாணம் தயாரிக்க.. வசந்தி “என்ன அண்ணா இது” என்றார்.
அவரோ “இது லேகா மேம் கொடுத்தது.. தம்பிக்கு உடம்பு சரியில்லாமல் போனதிலிருந்து.. இதுதான் குடிக்க்னும்ன்னு சொல்லிட்டாங்க. காலையில் வெறும் வயிற்றில் செம்பருத்தி பூ.. டீ. இப்போ, ABC மால்ட்டாம்.. பீட்ரூட்.. மாதுளை ஆப்பிள் கேரட் என.. என ஏதேதோ சேர்த்து அரைத்து காயவைத்து கொடுத்திருக்கும்மா.. அப்போதான் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம்.” என்றார்.
வசந்தி பொறுமையாக “உடம்பு சரியில்லையா.. அவனுக்கா.. என்ன கோல்டா” என்றார்.
“இல்ல இல்லங்க.. இரண்டுநாள் ஹாஸ்ப்பிட்டலில் இருந்தாங்க தம்பி.. ரத்த செல்லோ எதோ குறைந்து விட்டதாம்” என்றார்.
வசந்தி “லேகா இங்க வந்தாளா” என்றார். மகனை பற்றி விசாரிக்காமல்.
“இல்லைங்க.. இதெல்லாம் க்ரிஷ் தம்பிகிட்ட கொடுத்துவிட்டாங்க.. எப்படி எந்த நேரத்தில் தம்பிக்கு கொடுக்கனும் என.. எனக்கு போன் செய்தாங்க” என்றார்.
வசந்தி “ம்.. என்கிட்டே யாருமே சொல்லலை” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
ஹாலில் வந்து அமர்ந்தார்.. டீபாய்மேல்.. தன்மகனும் மருமகளும் இருப்பது போல போட்டோ.. என்னமோ அவர் கண்களை உறுத்தியது. அதனை படுக்க வைத்தார்.
தான் மகனுக்கு என சுற்றுலா சென்ற இடத்தில் வாங்கிய பொருட்களை எடுத்து மேலே வைத்தார்.. தாய்லாந்த் கிரீன் டீ.. பாடிவாஷ்.. ஷாம்பூ.. என ஹார்கானிக் வகைகள் எல்லாம் எடுத்து வைத்தார்.
ஷிவா வந்தான்.. வேர்வை வாசத்தோடு.
வசந்தி “என்னாச்சு ஷிவா.. எதோ உடம்பு முடியலைன்னு சொல்றாங்க.. என்கிட்டே சொல்லவேயில்ல” என்றார்.
மகனோ “நான் என்ன சின்ன குழந்தையா.. சரியா சாப்பிடலை தூங்கலை.. டயர்ட்.. அதான் ரெண்டுநாள் ரெஸ்ட் எடுக்க ஹாஸ்ப்பிட்டல் போயிட்டு வந்தேன்” என.. அன்னை வாங்கி வந்த பொருட்களை நோட்டமிட்டபடி சொன்னான்.
வசந்தி “லேகா எப்படி அங்கே வந்தாள்.” என்றான்.
மகன் “ம்.. எனக்கு தனியாக ஹாஸ்ப்பிட்டல் போக சங்கடமாக இருந்தது அதான்.. அவளோடு போனேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
வசந்தி அதிர்ந்து பார்த்தார் மகனை.. சுயநினைவோடுதான் பேசுகிறானா என பார்த்தார். ஆக, இருவரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. என தீர்மானித்துக் கொண்டார்.
அன்னை “ஏன் உன்னை பார்த்துக்க இங்கே வர வேண்டியதுதானே..” என்றார்.
“யார்” என்றான்.
“அவதான் லேகா.. உன் பொண்டாட்டி” என்றார் நக்கலாக.
“நான் கூப்பிடலை..” என்றான்.
“டேய்.. தெளிவா சொல்லுடா” என்றார்.
“என்னம்மா.. நீங்க கிளம்புங்க” என்றவன் எழுந்து தனதறைக்கு சென்றான்.
அன்னை அப்படியே மகனை பார்த்திருந்தார்..
மகன் அலுவலகம் கிளம்பவும்.. தன் கணவருக்கு அழைத்து விவரம் கேட்டார். ஆனால், வடிவேலுவுக்கும் தெரியவில்லை.. மகன் மருத்துவமனையில் இருந்தது. இருவரும் மகனை நினைத்து எரிச்சலாகினர். பேசி இருவரும் வைத்தனர்.
வடிவேலு, அதிகம் படிக்கவில்லை. அதனால், இந்த பைனாஸ் நிறுவனத்தை நடத்த அவருக்கு.. இயலவில்லை. நபர்களை தெரியும். ஆனால், பண கணக்கு.. வட்டி அசல்.. லாபம்.. வரவு செலவு என எல்லாவற்றையும் மற்றொருவரிடம் நம்பி ஒப்படைத்து.. தான் தொழில் செய்யும் திறமை அவருக்கு இல்லை. அவர் யாரையும் அவ்வளவு எளிதில் நம்புவதில்லை. அதனால், தனக்கு கிடைக்காத தொழில்.. தன் படித்த தம்பிக்கும் கிடைக்க விடாமல்.. வேலவன் பக்கமே வரவிடாமல் செய்தார்.
அதற்காக சுந்தரத்தை, ஹம்சா டெக்ஸ்ட்டையில் பக்கம் திருப்பிவிட்டார். அதை தொடர்ந்து நடந்த நிகழ்வுகள்.. தீக்ஷி.. என அவரை எப்போதும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்.
வேலவன் என்பது வடிவேலுவின் கனவு. அதை தன்னால் அனுபவிக்க முடியவில்லை. அதனால் ஷிவாவை தவிர வேறுயாரும் அங்கே இருந்திட கூடாது என்பதில் அவர் திடமாக இருந்தார். மகனுக்கு சொல்லி சொல்லித்தான் வளர்த்தார்.. அதை கையாளும் வண்ணம். ஷிவாவும், அதன்படிதான் வளர்ந்தான். அதனால், ஷிவாவின் கனவு என்பது.. தந்தை கண்ட கனவின் மிச்சம்.
இப்போதுவரை மகனின் திறமை மேல் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால், திருமணம் ஆனது முதல்.. அவனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை பெற்றோர்க்கு. ஆனாலும், மகன் நன்றாக.. அந்த வேலவனை பற்றிக் கொண்டால் சரி என இருந்தார் வடிவேலு. அப்படியும் மகன் வேலவனின் பங்குகளை இப்படி சந்துருவிற்கு விட்டுவிடுவான் போல என கோவம். அதற்காகவே மகனை திட்டி பேசாமல் இருக்கிறார் வடிவேலு.
இப்போது, ஷிவாவிற்கு உடல்நலமில்லை என கேட்டதும்.. லேகாவோடு சமாதனமாக போகலாம்.. இல்லை வேறு திருமணம் செய்துக் கொள்ளலாம்.. எதற்கு இப்படி இருக்கிறான்.. எதையும் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறானே என பெற்றோருக்கு கோவம்.. வருத்தம்.
இருவரும் பொதுவாக ஏதும் ஷிவாவிடம் அதிகமாக பேசுவதில்லை இப்போதும் அப்படியே.. தங்களுக்குள் வருந்திக் கொண்டனர். வேலவனை விட்டிடக் கூடாது என வடிவேலு.. மனையாளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
!@!@!@!@!@!@!@!@!
தீக்ஷி, மறுநாள் கணவன் அலுவலகம் கிளம்பவும்.. தன் தந்தைக்கு அழைத்தாள்.. சுந்தரத்திற்கு.. மாப்பிள்ளையை எப்படியேனும் வெற்றிபெற வைக்க வேண்டுமன்ற எண்ணம்.. அதனால், தன் நண்பர்கள் தொழில்வட்டம் என அறிமுகம் செய்துவைத்து.. தன் பணத்தினையும் செலவு செய்து.. எல்லாம் செய்தார். ஆனால், இந்த குடி பழக்கம் என்பதை அவரும் அறிந்திருந்தார்.. போக போக.. மாப்பிள்ளையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார் என நம்பினார்.. இது, புதிது என்பதால்.. ஒரு மோகத்தில் மாப்பிள்ளை இப்படி இருக்கிறார் என எண்ணம். ஏதும் சொல்லவில்லை.
இப்போது பெண் அழைக்கவும் ஆனந்தமாக எடுத்தார் “தீக்ஷிம்மா.. என்ன டா, பரிட்சை முடிந்ததை சொல்லவேயில்ல.. உங்க அப்பார்ட்மென்ட் போய்ட்டீங்கலாம்.. காந்தியம்மா சொன்னாங்க” என்றார்.
பெண்ணவள் பொரிந்து தள்ளிவிட்டாள்.. “அவர் வேலையை விட்டுவிட்டாராம்.. என்னப்பா பண்றீங்கா.. லேகா அண்ணி தனியா இருக்காங்க.. எதோ பேசினாரான்னு விடாமல், அவரை இப்படி செய்ய வைச்சிருக்கீங்க” என்றாள்.
தந்தை அதிர்ந்து போனார் “அம்மாடி நான் எதோ செய்தேன்னு நினைக்காத.. நான் உதவுகிறேன். சந்துரு முதலில் ஆரம்பித்துவிட்டார். வேலவன் சென்றுவிட்டார் தானாக. அவராகத்தான் வேலையைவிட்டார்.. அவரை எப்படி தனியாக விடுவது, அதனால் நான் உதவுகிறேன் அவ்வளவுதான் டா. என்னாச்சு” என்றார்.
மகள் “அவர் லேட்நைட் வருகிறார் இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. அவருக்கு, ஹெல்ப் வேண்டாம் ப்பா. அண்ணன் அண்ணி இப்படி இருக்காங்க.. அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துங்க ப்பா.. பாருங்க” என்றாள்.
சுந்தரம் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.. பெண் எப்படி இப்படி பொறுப்பாக பேசுகிறாள் என.. பொறுமையாக மகளின் மனதறிய கேட்டார்.. “ஏன் ம்மா.. மாப்பிள்ளைக்கு வேலவன் வேண்டாம்மா ம்மா..” என.
“அப்பா.. எனக்கு அதெல்லாம் சொல்ல தெரியலை ப்பா.. ஆனால், நம்ம எல்லோரும் இப்படி சண்டையோடு இருப்பது வேண்டாம் ப்பா.. காலையில் எழுந்து வேலையை பார்த்து.. எல்லோரோடும் அமர்ந்து பேசி உணவு உண்டு என.. இயல்பான வாழ்க்கை போதும் ப்பா.. இப்படி ஒருவர் முகத்தை ஒரு பார்க்க தயங்குவது.. சண்டையிடுவது.. வேண்டாம் ப்பா. அதிலும் பணம் சொத்துக்காக.. இப்படி அண்ணனும் அண்ணியும் பிரிந்திருப்பது நல்லாவே இல்ல ப்பா.. நம்ம குடும்ப சாபமாப்பா.. இப்படி எல்லோரும் தனியே இருக்கணும் என்பது..” என்றாள்.