மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

19

சந்துரு, வேலவன் வந்தான் தினமும். அக்கௌன்ட்ஸ்.. மார்க்கெடிங்.. பைனான்ஸ் என எல்லா இடத்திலும் சந்துருவிற்கு என ஒரு சீட் இருந்தது. அந்த அலுவலகத்தில் ஒருவனாக சந்துரு மாறினான். முழுநேரமும் இங்கேதான் வேலை என அமர்ந்திருந்தான்.

மார்கெட்டின் டீம்மோடு செல்லுவான்.. மார்க்கெடிங் செய்வதற்கு. அக்கௌன்ட்ஸ் பார்ப்பான்.. இன்டெர்ன்வுடன் அமர்ந்து.. இப்படி வேலைகளையும் கற்றுக் கொண்டான். அதனால் நிறைய நேரம் அலுவலகத்தில் இருந்தான். 

ஒருநாள், மாலை நேரம்.. சந்துரு அலுவலகத்தில் அமர்ந்து பழைய கணக்குளை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஷிவா பொறுப்பெடுத்துக் கொண்ட வருடம் முதல்.. உள்ள கணக்குள் இல்லை..  அந்த அக்கௌன்ட்சை ஆஃக்ஸ்சஸ் செய்ய பர்மீட் இல்லாமல் போனது. சந்துரு, அங்கிருந்த சீனியர்களின் விவரம் கேட்டான். ஷிவாவிடம்தான் பாஸ்வோர்ட் இருக்கிறது என்றனர்.

சந்துரு க்ரிஷ்ஷிடம் வினவ.. க்ரிஷ் ‘கேட்டு சொல்லுகிறேன்’ என பதில் தந்தான்.

மறுநாள் க்ரிஷ் நேரில் வந்தான்.. சந்துரு அலுவலகத்தில் இருந்த அறைக்கு.

சந்துரு புன்னகைக்க.. க்ரிஷ் “குட்மார்னிங் பாஸ்” என்றான்.

“அஹ.. என்ன இது.. சந்துருன்னுதானே கூப்பிடுவ க்ரிஷ்” என்றான்.

“அது பழக்கதோஷம்.. பாஸ். ஆனாலும், நீங்களும் பாஸ்தானே.” என்றான்.

“உன் பாஸ் காதில் கேட்டார் அவ்வளவுதான் நீ” என்றான்.. புன்னகையோடு.

கிரீஷ் “சே ச்சே என் பாஸ்.. அவ்வளவு கெட்டவர் எல்லாம் இல்லை. அவர் உங்ககூட சண்டை போட்டுக்கு இருக்கார்ன்னு நினைக்கிறீங்களா” என்றான்.

சந்துரு “இல்ல, நான்தான் அவர்கூட சண்டை போடுறேன்” என விளையாட்டாக உண்மையை ஒத்துக் கொண்டான்.

க்ரிஷ் “அப்படி இல்ல.. உங்களுக்கானத்தை நீங்க கேட்க்குறீங்க.. அவ்வளவுதான்” என்றான்.

சந்துரு அதிசையமாக பார்த்தான் இவனை. இவன் என்னதான் சொல்ல வருகிறான் என.

க்ரிஷ் “ ம்.. பாஸ் கால் எதுவும் எடுக்கமாட்டார். நைட் பேசும் போது விஷயம் சொல்லிட்டேன்.. பார்ப்போம் என்ன சொல்லுகிறார் என..” என்றான்.

சந்துரு “ம்.. நம்மோட அக்கௌன்டஸ் எல்லாம் சரியாக மெயின்டன் ஆகுது. ஆனால், ஷிவா எப்படி இப்படி நார்த்தில் தைரியமாக பைனான்ஸ் பண்ணுகிறார்.” என்றான்.

க்ரிஷ் “ம்.. பாதில் லீகல்தான் சந்துரு. பெரிய அமௌன்ட்தான் கொஞ்சம் இல்லீகல். லீகலாக செய்வது கஷ்ட்டம். அதேநேரம் நெருங்கிய அவரின் நட்பு வட்டம்.. அதனுடைய தொடர்புகள் என்பதால்.. கொடுக்கல்வாங்கல் இருக்கிறது. ஷிவ்தோஸ்த் அங்கே. இத்தனை திட்டங்கள்.. அதன் பலன்கள் என நிறைய ரிட்டன்ஸ் கொடுக்க.. இந்த வேலை தேவையாக இருக்கு.” என்றான்.

சந்துரு “முன்பு எப்படி இருந்தது” என்றான்.

“தாத்தா இருந்த போது.. முறையான பேங்க் அக்கௌன்ட்ஸ்.. அளவான ரிட்டன்ஸ். ஆனால், இப்போது மார்கெட் வேறு மாதிரி இருக்கே. அதனால், நாமும் அதற்கு தகுந்தார் போல ஓடவேண்டி இருக்கு..” என சொல்லிக் கொண்டிருந்தான்.

சந்துரு “ம்.. ஷிவாவின் கோர்ட்த் அதிகம்தான். எப்படி சாத்தியம்’ன்னு யோசனையாகவே இருக்கு.. பழைய கணக்குள் எல்லாம்.. சும்மா 60 கோடிகளில் தான் இருக்கு.. ஆனால், அடுத்த இரண்டு வருடம்.. கொஞ்சம் பூஸ்ட் ஆச்சு.. ம்.. சென்ற மூன்று வருட கணக்கினை இன்னும் நான் பார்க்கலை.. எப்படி இன்வெஸ்ட் பண்ணுகிறார் என.. ஷேஸ்ர்ஸ் எல்லாம் சரியான தேர்வு.. அந்த இரண்டு வருடங்களில்..” என்றான் மெச்சுதலாக.

க்ரிஷ் “ம்.. அவரால் அனலைஸ் செய்ய முடியும்.. பாருங்களேன்..” என சொல்லி.. ஒரு சார்ட் காட்டினான்.. தன்னுடைய போனில். “லாஸ்ட் த்ரீ மன்த் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் டீடைல்ஸ்.. இந்த மன்த் என்டில்.. சேன்ஞ் செய்வார். அஹ.. அதேபோல.. அவருடைய கிளைன்ட் டீட்டெயில்ஸ் எல்லாம் பக்கா சீக்ரெட்.” என்றான் கண்ணடித்து.

சந்துரு தாடையில் கை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தவன்.. நிமிர்ந்தான் “ப்பா.. ரசிகர் மன்றம் வைப்ப போலிருக்கே” என்றான்.

க்ரிஷ் “ம்.. போர் அடிச்சிட்டேனோ..” என்றான் புன்னகையோடு.

“ஹேய்.. ஜஸ்ட் கிட்டிங்” என்றவன்.. தன் கையிலிருந்த.. க்ரிஷ் காட்டிய.. அவர்களின் லிஸ்ட்.. மற்றும் ஷிவாவின் விவரங்கள் என எல்லாம் பார்க்கத் தொடங்கினான்.

கண்கள் விரியக் கூடாது என நினைத்துக் கொண்டு.. அதனை பார்த்தாலும். கண்கள் அவனையும் அறியாமல் சற்று அகலமானது. ஸ்மார்ட்.. என அவனின் உதடுகளுக்குள் சொல்லிக் கொண்டான்.

க்ரிஷ் கிளம்பினான்.

சந்துரு, ஷிவாவினை தேட தொடங்கினான். அவனின் சோசியல் மீடிய.. அலுவலகத்தில் அவனின் நிலை.. என கொஞ்சம் மெனெக்கெட்டு தேடத் தொடங்கினான்.

மாலையில் மாமனார் அழைக்க.. அவரோடு க்ளஃப் சென்றான்.

இரவு தாமதமாகத்தான் வீடு வருகிறான் இப்போதெல்லாம். யாரும் அவனை கேட்ப்பாரில்லை. கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது சந்துருவிற்கு. இப்படி யாரின் பேச்சினையும் கேட்டு வேலை செய்ய வேண்டியதில்லை என்பது.. நோ ஹுர்ரி பர்ரி என்பது.. இரவு கட்டுபாடற்ற.. விருந்து.. விளையாட்டு என.. சந்தோஷமாகவே உணர்ந்தான்.

சித்தூர் செல்லவேயில்லை.. மனையாளுக்கும் பரீட்சை. அத்தோடு தானும் பிசி என எங்கும் செல்லவில்லை அவன். 

மறுநாள் அலுவலகம் வந்தான். க்ரிஷ் இருக்குமிடம் சென்றான் சந்துரு.. ஷிவாவின் ரூம். 

க்ரிஷ் “வாங்க பாஸ்..” என சொல்லி எழுந்தான்.. “இந்த லாப் எடுத்துக்கோங்க.. இது பாஸ்சினது..” என சொல்லி.. ஒரு மெசெஜ் அனுப்பினான் சந்துருவிற்கு. “அதில் பாஸ்வோர்ட் இருக்கு பாஸ்” என்றான்.

சந்துரு “என்னது.. உங்க பாஸ்.. லாப் எல்லாம் கொடுக்கிறார்.. எனக்குன்னு சொல்லிட்டியா” என்றான் சந்தேக குரலில்.

க்ரிஷ் “பாஸ் இப்போ நீங்கதான் மிஸ்பிபெஹவ் பண்றீங்க” என்றான், புன்னகையோடு..

சந்துரு “கேட்டுக்கனுமில்ல.. “ என்றான் அதே நக்கலாக.

மதியம் வரை.. ஷிவாவின் லாப் குடைந்து எடுத்துவிட்டான், அங்கேயே அமர்ந்து. முதலில் கணக்குகள்.. வேலன் பற்றிய தகவல்கள் என்தான் பார்த்தான்.

பின் ஷிவா, ஆரம்பித்த காலத்தில் வந்த ஈமெயில் முதல், அவன் நேற்று சந்தித்த கிளின்டடுகளின்  மெயில் வரை பார்த்துவிட்டான்.. டேட்டாஸ் எல்லாம் பார்த்தான்.. அப்போதுதான் எலெக்ட்ரிக் கார்க்ளுக்களுக்கான ப்ரஜெக்ட் பார்த்தான்.

க்ரிஷ்’ஷிடம் கேட்டான் “நாம இதை பண்ண போகிறோமா” என.

க்ரிஷ் “ஆமாம் சந்துரு, இன்னமும் மூன்று மாதத்தில் திருச்சி பைபாஸில்.. முதல் ப்பங்கு ஆரம்பிக்க போகிறோம்.. அமைச்சர் வரை அழைப்பு சென்றிருக்கிறது..” என்றான்.

சந்துரு இன்னமும் ஏதேதோ விவரம் கேட்டான் “எத்தனை பாயிண்ட்.. எப்படி.. ஆட்டோமேட்டிக் சரியாக வருமா.. எப்படி “ என்றான்.

க்ரிஷ் “சந்துரு, ஈவினிங் நான் அங்கேதான் போறேன்.. வரிங்களா?.. எனக்கு இதிலெல்லாம் இண்டரஸ்ட் இல்லை.. பாஸ்.. தான் போக முடியாததில், என்னை ஒரு விசிட் அடிக்க சொன்னார்.. வரீங்களா? உங்கள் டெளவுட்ஸ் எல்லாம் அங்கே இருக்கும் எஞ்சினியரிடம் கேளுங்கள்.. வாங்க, நான் தனியாகத்தான் போகிறேன்..” என்றான்.

சந்துருவிற்கு தவிர்க்கத் தோன்றவில்லை. ஆர்வமாக “வருகிறேன்” என்றான். 

மாலையில் இருவரும் கிளம்பினர்.

சந்துரு எலெக்ட்ரிக் கார் பற்றி நிறைய பேசினான். என்னமோ அதில் தொலைந்து போனான்.. க்ரிஷ் நல்ல லிசனராக இருந்தான் இப்போது. சந்துருவிற்கு பேச வாய் வலிக்காதே.. அதிலும் தனக்கான டாபிக் எனும்போது நிறுத்தவேயில்லை. இரண்டுமணி நேர பயணத்தில் இடம் வந்து சேர்ந்தனர்.

சந்துரு அங்கேயும்.. விவரம் கேட்டான்.. விசாரித்து.. தெரிந்துக் கொண்டான்.

க்ரிஷ், சந்துரு.. அந்த நபர்களிடம் பேசுவதை வீடியோ எடுத்து ஷிவாவிற்கு அனுப்பிவைத்தான்.

இரவு தாமதமாகவே வீடு வந்தான் சந்துரு. ஆனால், இன்று எந்த விளையாட்டிலும் சேந்துக் கொள்ளாமல் வீடு வந்தான். மனது அவனுக்கு அதிலேயே நின்றது.. இரவில் யோசனை முழுவதும்.. சென்றுவந்த இடத்திலேயே நின்றது.

மறுநாள் அலுவலகம் வந்தான்.. அந்த எலெக்ட்ரிக் சார்ஜ்ஜிங் பற்றிய கோப்புகளை எடுத்து பார்க்கத் தொடங்கினான்.

சந்துருவின் கவனம்.. கொஞ்சம் புதியதின் மேல் பதியத் தொடங்கியது.

!@!@!@!@!@!@!