சந்துரு ‘வேலவன்’ வந்தான். சுந்தரம் முன்னதாகவே வந்துவிட்டார் மாப்பிள்ளையை எதிர்கொள்ள. சந்துரு எதிர்பார்க்கவில்லை.. யாருமேயில்லை என்ற யோசனையோடு வந்தவனுக்கு.. மாமனாரை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

இருவரும் முதலில் என்ன செய்யலாம் என பேசத் தொடங்கினர். 

மாலையில் சுந்தரம், தன் தொழில் வட்டத்தை  சந்துருவை அறிமுகம் செய்து வைத்தார். சந்துருவை அவர்களோடு நல்லவிதமாக பேச பழக.. நேரம் எடுத்துக் கொள்ள செய்தார்.

அந்த அலுவலகத்தில்தான் ஷிவா இருக்கிறான்.. ஆனால், ஒருமுறை கூட பார்க்கவேயில்லை.. சந்துருவை. அப்படியேதான் சந்துருவும்.

அந்த வாரத்தின் நடுவே.. ஒருநாள் காலை பதினோரு மணி இருக்கும்.. ஷிவா, சித்தூர் வீடு வந்தான். 

லேகா, கடைக்கு செல்லலாம் என கிளம்பிக் கொண்டிருந்தாள். வீட்டின் அழைப்புமணி அழைக்க.. இந்தநேரத்தில் யாரென லேகா கதவை திறக்க.. கணவன்.. சுவரில் சாய்ந்து நின்றிருந்தான்.. இரவு உடையில்.

இப்போது அவனை அழைத்து வந்த டிரைவர் “மேம்.. சார்’க்கு முடியலை.. ஹாஸ்ப்பிட்டல்தான் போகணும்ன்னு ஏறினார். ஆனால், இங்கே வர சொல்லிட்டார்.. காரில் ரொம்ப கஷ்ட்ட்பட்டார்.. உடனே பாருங்க” என்றான்.

லேகா கணவனை கைபிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.. நல்ல சூடு அன்றுபோல.. “என்னங்க.. இன்னமுமா உடம்பு சரியாகலை..” என கேட்டுக் கொண்டே நடந்தாள். ஆனால், ஷிவா ஏதும் பதில் சொல்லவில்லை.. மயங்கிவிட்டான்.

லேகா, டிரைவர் உதவியோடு.. மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். 

ஷிவாவிற்கு முதலுதவி செய்து.. மருத்துவர்கள் சோதனை செய்து.. என்னவென பார்க்க.. ப்ஃளூ ப்பீவெர்.. வ்வைட் செல்ஸ் மிக குறைந்துவிட்டது.. என தகவல். அதற்கான சிகிச்சைகள் தொடங்கி நடந்தது.

லேகா, வடிவேலுக்கு அழைக்க அவருக்கு அழைப்பு செல்லவில்லை.. வசந்தி லதா.. என அழைக்க.. அவர்களுக்கும் அழைப்பு செல்லவில்லை. 

அதற்குள் சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டனர். பணம் எல்லாம் லேகா கட்டிவிட்டாள். ஷிவா, அவளிடம் எல்லாம் கொடுத்துதான் வைத்திருந்தான் முன்பே. அதற்கெல்லாம் காத்திருக்கவில்லை லேகா. ஆனால், உறவுகளுக்கு காத்திருந்தாள். யாரும் அழைப்பினை ஏற்காமல் போனது வருத்தம்.

சுந்தரம் தான் லேகாவின் அழைப்பினை ஏற்று.. பேசினார்.

சுந்தரம் மாலை ஆகிற்று வருவதற்கு. அதன்பின்தான் சொன்னார் “அண்ணன், அமைச்சர் ஒருவரை பார்க்க.. நாகர்கோவில் சென்றிருக்கிறார்.. மகனின் தொழில் விஷயமாகத்தான். மீட்டிங்கில் இருந்ததில் போன் ஸ்விட்ச்ஆப். அண்ணி, லதா  இருவரும் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர் நேற்றுதான்.” என்றார்.

லேகா கேட்டுக் கொண்டாள். 

இரவு நேரம்தான் ஷிவாவை பார்க்க அனுமதித்திருந்தனர். 

முதலில் சுந்தரம்தான் ஷிவாவை பார்க்க வந்தார்.

ஷிவா மயக்கம் தெளிந்து இருந்தான்.. “யாருக்கும் சொல்லாதீங்க சித்தப்பா” என்றான் வேண்டுதலாக.

சுந்தரம் “ஏன் ஷிவா.. அப்பா திட்டுவார்” என்றார்.

“இல்ல அவருக்கு அங்க வேலை கெட்டிடும். அத்தோட.. எதுக்கு. இப்போ நான் ஒகேவாக இருக்கேன்.. சித்தப்பா ப்ளீஸ்” என்றான் வேண்டுதலான குரலில்.

லேகா, கண் நிறைய கண்ணீரோடு உள்ளே வந்தாள்.. 

ஷிவா, சித்தப்பாவை எட்டிக் கொண்டு மனையாளை பார்த்தான். விரல்களால் அருகில் அழைத்தான்.

சுந்தரம் “சரிப்பா.. நான் இங்கேதான் இருக்கேன் கூப்பிடு” என சொல்லிக் கிளம்பினார்.

தன்னருகே வந்த மனையாளை கண்ணெடுக்காமல் பார்த்தான்.. லேகா, கணவனை ஆராய்ந்தாள்.. ட்ரிப்ஸ் மட்டும் போட்டிருந்தனர்.. மற்றபடி.. காலையில் வந்த அசதி.. மூச்சுவிடுவதில் சிரமம்.. என ஏதுமில்லை.. ஆராய்ந்து அமைதியானாள்.. ‘பீவர்..’ என தோன்ற.. நெற்றியில் கைவைத்து பார்த்தாள்.. சூடு இல்லை.. அவளையறியாமலேயே ஒரு பெருமூச்சு எழுந்தது. 

ஷிவா “பயப்படாத.. இப்போ நல்லா இருக்கேன்.” என்றான்.

அவனே “உன்னிடம் வர கூடாதுன்னுதான் நினைத்தேன். ஆனால், தனியா ஹாஸ்பிட்டல் வர பயம்..” என சொல்லி எங்கோ பார்த்தான். முகத்தில் எப்போதுமில்லா அசதி.. ஓய்ந்திருந்தான்.. அப்படித்தான் பெண்ணுக்கு தோன்றியது.

மனையாளுக்கு  என்ன பேசுவதென தெரியவில்லை.. ‘வந்ததை சந்தோஷம் என எண்ணுவதா.. இல்லை, இப்படி உடலை காக்காமல் இருந்தவனை வைவதா’ என தெரியாமல் நின்றாள்.. சந்துரு அழைத்தான்.. இப்போது.

லேகா போனினை பார்க்க..

ஷிவா “வேண்டாம் யாரிடமும் சொல்லாத” என்றான், அவசரமாக.

அழைப்பு நின்று போனது. 

லேகா கண்களை துடைத்துக் கொண்டு.. “என் தம்பிகிட்ட எதுவாக இருந்தாலும் சொல்லிடுவேன்..” என்றாள், தன்னை மீட்டுக் கொண்டவளாக.

ஷிவா “இப்போ என்னோட லேகாவா இரு.. இதமட்டும் சொல்லாத” என்றான், அழுத்தமாக.

லேகாவிற்கு என்ன வார்த்தையிது என தோன்ற.. கணவனை முறைத்தாள்.

ஷிவா, கண்களை மூடிக் கொண்டான்.

லேகா வெளியே வந்து சந்துருவிடம் பேசி.. உண்டேன் என சொல்லி.. அழைப்பினை துண்டித்தாள்.

சுந்தரம் வந்தார் “சாப்பிட்டு வரலாமா லேகா” என்றார்.

பின் இருவரும் ‘என் அண்ணன்கிட்டவே சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டான்..’ என்றார். லேகா ‘நானும் சந்துருகிட்ட சொல்லலை மாமா.. ஏன் இவர் இப்படி இருக்கார்’ என பேசிக் கொண்டே இருவரும் உண்டு வந்தனர்.

ஷிவா, மனையாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் சொக்கியது.. ஆனாலும் மனையாளை பார்த்துக் கொண்டிருந்தான். லேகா, உண்டு வந்து சேர்ந்தாள், அறைக்கு.

சுந்தரம், வெளியே தனியாக அறை எடுத்துக் கொண்டார் தங்குவதற்கு அங்கே சென்றார்.

மனையாள் அறைக்கு வந்ததும்.. ஷிவா “சாப்பிட்டியா” என்றான்.

“ம்..” என்றாள்.

இருவரும் என்ன பேசுவது  என தெரியாமல் இருந்தனர்.

லேகாவிற்கு, கணவனிடம் பேசாமல் இருக்க கஷ்ட்டமாக இருந்தது.. அதனால், அவனின் உடல்நலம் பற்றி சொன்னாள்.. “ப்ளூ பீவர். வ்ஹிட் செல்ஸ் குறையுது. நாளையும் செக் பண்ணுவாங்க.. என்னாச்சு உங்களுக்கு. நல்லா சாப்பிட்டு உடம்பை பார்த்துக் கொள்பவர்தானே நீங்க.. என்னாச்சு.. கவுன்ட் குறையும் அளவு என்ன செய்தீங்க.. சாப்பிடலையா” என்றாள் இறுக்கமான குரலில்.

ஷிவா என்ன சொல்லுவது என தெரியாமல் மனையாளை பார்த்திருந்தான். ஷிவா, சரியாக உறங்கவில்லை.. உண்ணவுமில்லை. இந்த ஒருவாரம்.. அவனுக்கு என்னமோ நரகமாக இருந்தது. 

‘இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையை இந்த இரண்டு மாதங்கள் தன்னோடு வாழ்ந்தவள் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டாள்..’ என்ற நிலை அவனுக்கு. எதற்கும் அவள் வேண்டுமாக இருந்தது.. ஷிவாவிற்கு. அவனுக்கு அது புரிய.. பைய்த்தியம் ஆனான்.

வெளியே சொல்ல முடியவில்லை.. லேகா இல்லாமல்.. வீடு வர பிடிக்கவில்லை என எப்படி சொல்லுவது.. அவள் சமைக்கும் உணவுகள் இல்லாமல்.. அடுத்த வேலை உணவு இறங்கவில்லை தொண்டையில்.. என யாரிடம் சொல்லுவது, அவளிடம் பேசாமல் ஒருபொழுதினை கடத்த முடியவில்லை என்னால்.. என அவனுக்கு தெரிகிறது. ஆனால், அவளை அழைக்க பயம். தம்பிதான் வேண்டுமென நிற்கிறாள்.. நிற்பாள். ‘அழைத்து வரவில்லையே அன்று’ என நிறைய யோசனை.

இரவெல்லாம்.. லாப்பில் அமர்ந்து எல்லா கணக்குக்களையும் பார்த்தான். பழையது புதியது என பாரபட்சமே இல்லாமல். அந்த  அசத்தில் கண் மூடினால் உண்டு.. விடியலில் எழுந்தால்.. அவளின் சத்துமாவு கஞ்சிதான் நினைவு வருகிறது.. அதுதொட்டு அவளை தேடுகிறது மனது. ‘நீ இரண்டு மாதத்திற்கு முன்னாள் இப்படிதான் இருந்தாய்..’ என அறிவு எடுத்து சொல்ல.. என்ன செய்வான் ஷிவா.. தனக்குதானே போராடினான்.. தவித்து.. தோற்றப் போனான் ஷிவா. 

லேகா, எங்கோ பார்க்கும் கணவனை என்ன சொல்லுவது என எதியாமல் பேச்சினை நிறுத்திக் கொண்டாள்.

மனையாள் பேசாததால்.. திரும்பி பார்த்தான் ஷிவா. அவள், தன் ஷால் எடுத்து.. வைத்துவிட்டு.. உறங்க தயாரானாள்.

கணவன் “இங்க.. என்கிட்டே கொஞ்சம் வாயேன்” என்றான்.

மனையாள் அருகில் வர.. ஷிவா அவளின் கையெடுத்து தன் சிகையில் வைத்தான் “ப்ளீஸ்..” என்றான் நடுங்கும் குரலில்.

லேகாவின் காதல் மனம் உருகி போக.. இதமாக.. கதகதப்பான தன் கரம் கொண்டு.. நெற்றி தொடங்கி உச்சி வரை  வருடத் தொடங்கினால் பெண். தன்னவளை பார்த்துக் கொண்டே.. கண்மூடி உறங்கினான் ஷிவா. அவளின் அன்பு வேண்டும் அவனுக்கு.. இப்போது அதை முதல்முதலில் சொல்லியிருக்கிறான் தன்னவளிடம். 

“நீயில்லா நானும்..

நீலமில்லா வானம்..

மண்ண வந்துமுட்டும்..

இந்த நூலறுந்த பட்டம்..

காட்டாறா வாழ்ந்துட்டேன்..

என்ன திசை பார்த்து.. வழிமாத்து..

அடி உன்னைவிட்டா.. யாருமில்ல..”

லேகாவின் மனது கணவன் கேட்டதில் கரைய தொடங்கியிருந்தது.. லேகா உணர்ந்திருக்கிறாள் அவனின் அன்பினை.. ம்.. கொடுத்திடுவான் எதுவாக இருந்தாலும்.. ‘வேண்டுமா வாங்கிக்க.. போ.. சரி.. என எப்போதும் என்னை கட்டாயப்படுத்தாத அன்புதான் அவனுடையது. நிறைய சலுகைகள்.. கேள்வியே இல்லா ஒருநிலை.. அதில் அவனுடைய தேவை என ஏதுமிருந்ததாக உணர்த்தியதில்லை ஷிவா. எல்லாம் என் விருப்பம் எனதான் லேகா பழகியிருந்தாள்.. ஆனால், இது.. இன்று வேறு ஷிவா.. ஏதும் கேட்டாகாதவன் கேட்க்கிறான்.. அவனாக கேட்கிறான்.. காற்றாக அவளின் நேசம்.. அவனுக்குதான் என்றாலும்.. இது அவளின் உயிரை தீண்டுகிறது.. பெண் அவனின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

 

ஒருமாதம் முடிந்திருந்தது..

சந்துரு நேற்றோடு தன் வேலையை விட்டிருந்தான். இப்போது முழு நேரமாக வேலவன் அலுவலகம் செல்லத் தொடங்கிவிட்டான். அவனுக்கு வேலவன் சிட்பண்ட் முக்கியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது. லேகா வீட்டில் இருப்பதை அவன் கருத்திலேயே கொள்ளவில்லை. 

லேகா, கடைக்கு செல்ல தொடங்கிவிட்டாள். நாட்கள் கடந்துக் கொண்டிருக்கிறது.

சந்துரு, முதல்முதலாக ஒரு கிளைன்ட் கொண்டு வந்தான் அலுவலகத்திற்கு. பத்து கோடிக்கு.. வேலவன் பைனான்ஸ்.. உதவியை கேட்டார், அந்த நபர். சந்துருவின் முதல் கிளைன்ட். 

ஷிவா, அலுவலகம் வந்துவிட்டான். இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஷிவான்தான் அதில் கையெழுத்திட்டான்.. சந்துரு சுந்தரம் என இருவரும் இருந்தனர். வேலவன் பைனாசில்.. முதல் கிளைன்ட்டினை சந்துரு.. சார்பாக கொடுத்துவிட்டான் இன்று.

சுந்தரம் “பணம் நாம கொடுத்திடலாம் ஷிவா” என்றார். 

“இல்ல சித்தாப்பா.. இது முழுக்க முழுக்க.. வேலவன் சம்பந்தப்பட்டது.. நல்ல கிளைன்ட் முக்கியம். அதனால் நாமே செய்திடலாம்” என்றான் ஷிவா நல்ல விதமாக.

சந்துருவிற்கு ஷிவாவின் பேச்சு.. நிம்மதியை தந்தது. ‘மாமனாரிடமே எல்லாம் வாங்கிக் கொள்ளுகிறோமோ..’ என குற்றவுணர்வு கொஞ்சம் குறைந்தது சந்துருவிற்கு.

ஷிவா “வாழ்த்துகள் ஷேகர்” என்றான், நல்லவிதமாக. சந்துருவும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டான்.. அந்த நொடியை பார்க்க சுந்தம் மட்டுமே இருந்தார்.

இருவரும் அதன்பிறகு பேசிக் கொள்ளவில்லை.

சந்துரு இந்த நாளினை கொண்டாடினான். சித்தூர் வந்தான் இனிப்போடு. அக்காவிடம் இனிப்பு கொடுத்து.. தன் சாதனையை பகிர்ந்தான். லேகா வாழ்த்தினாள்.