இந்த பணம் மட்டும் இல்லையென்றால்.. இந்த மனித இனமும் நல்லவர்களாக இருந்திருப்பார்கள்.. அன்பினை மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்திருப்பார்கள் போல. பணம் சொத்து.. காசு அந்தஸ்த்து.. என நாகரிகம் வளர்ந்ததும்.. அசட்டு துணிச்சல்.. அநியாயம்.. பொய்.. வஞ்சம் என வந்துவிட்டது கிளைநாகரிகம். இதெல்லாம் தவறு என தெரிந்தாலும் பழகிவிட்ட நமக்கு.. நெருடுகிறது பணமில்லாமல் வாழ.
லேகா கிளம்பியதெல்லாம் தெரிந்தாலும்.. ஷிவா, இன்னமும் அந்த டாகுமென்ட்டினையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு, சந்துருவின் செய்கைகள்தான் கண்ணில் பட்டது.. கருத்தில் பதிகிறது. மற்றது எல்லாம் நிகழ்வுகளாகவே தெரிகிறது. அதனால், சந்துரு உள்ளே வரும் வழியை பார்த்திருந்தான்.
சந்துரு வந்தான்..
வடிவேலு “லேகாவை நான் வீட்டுக்கு அனுப்ப சொல்லுகிறேன்.. டிரைவர் இருக்காங்க” என்றார்.
சந்துரு “இல்ல வேண்டாம், தீக்ஷி லேகா இருவரும் கிளம்பிவிட்டனர்” என சொல்லி ஷிவாவின் எதிரே அமர்ந்தான்.
வடிவேல் அமைதியானார், அவரால் ஏதும் சொல்ல முடியவில்லை.. எப்படி சமாளிப்பது என அமைதியானார்.
ஷிவா அதை பார்த்து எழுந்து நின்றான்.. நிதானமாகவே பேசினான்.. “உயில் எல்லாம் எதற்கு சந்துரு.. உனக்கு என்ன விருப்பன்னு சொல்லு.. பேசி முடிவெடுக்கலாம்” என்றான்.
சந்துரு ஒரு பெருமூச்சு விட்டு “இல்ல ஷிவா, நான் எதையும் இனி நம்ப முடியாதில்ல.. கண்டிப்பாக உயில் பார்க்கணும்.. நீங்களாக கொடுங்க.. இல்லையென்றால் சட்டபடி வாங்கவேண்டி வரும்” என்றான் அழுத்தமான குரலில்.
சுந்தரம், சந்துருவை ஆழமாக பார்த்தார்.. ‘ஏன் மாப்பிள்ளை அதிரவில்லை பதறவில்லை.. முன்பே எதிர்பார்த்தாரோ’ என அலசியது பார்வை.
ஷிவாவிற்கு, சந்துருவ் லேசில் விடமாட்டான் என தெரியுமே.. அதனால் “அப்பா.. வக்கீல் இருப்பாங்க.. வர சொல்லுங்க” என தலை கோதிக் கொண்டே அமர்ந்தான்.
ஷிவாவின் சார்பு வக்கீல் வந்தார்.. பொறுமையாக உயில் படித்தார் மீண்டும்.
அதாவது வெங்கடாசலம், வேலன் சிட்பண்ட் நிறுவனத்தில்.. தன்னுடைய 60% பங்கினை இரு பேரன்களுக்கும் சரிபாதி பகிர்ந்து கொடுத்திருந்தார். அடுத்து.. ஹம்சா டெக்ஸ்ட்டையில் பேத்திகள் இருவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டார். மற்றைய சொத்துக்கள் பெரியவர்களுக்கு என பிரித்துவிட்டார்.. தோட்டம் தன் இரு மருமகள்களுக்கு கொடுத்துவிட்டார். மகன்களுக்கு வாடகை வருமானம் உள்ள சொத்துகள் குடோன்கள் என பிரித்துவிட்டார் வெங்கடாசலம்.
சுந்தரம் வடிவேல் ஷிவா சந்துரு என நால்வரும்தான் அங்கே. சந்துருவிற்கு முழு சொத்துகளின் விவரங்களும் தெரிந்தது. ம்.. லேகா தீக்ஷி இருவருக்கும்.. சொத்துக்களாக ஏதுமில்லை.. அந்த கம்பெனி மட்டுமே. என்னமோ தாத்தா மனதில் இருந்திருக்கிறது என எண்ணிக் கொண்டு.. சந்துரு அமர்ந்திருந்தான்.
ஷிவா “சந்துரு, போதுமா.. இவ்வளவுதான். தாத்தா..” என சொல்ல வந்தவன் அமைதியாகிவிட்டான்.
இரண்டுநிமிடம் சென்று மீண்டும் “இது சாத்தியமில்ல தானே சேகர், க்கும்.. ஈக்குவல் ஷேர்ஸ் இருக்க முடியாதுதானே. உனக்கு வேறு சொத்துகள் தருகிறோம்.. உனக்கு இதை பார்க்கவும் முடியாதுதானே” என்றான் நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டு.
சந்துருவிற்கு என்னமோ போலானது.. “ஏன் ஷிவா, அப்படி சொல்றீங்க.. தாத்தா எங்களை மதித்து ஒன்று கொடுத்திருக்கிறார். அப்படி இதில் எனக்கு ஷேர்ஸ் இருப்பதால் என்ன செய்துவிடுவேன். என்னுடையது அப்படியே இருக்கட்டுமே. நாம் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம்.. நானும் கற்றுக் கொள்கிறேனே. நீங்கள்தான் சொல்லுவீர்களே எல்லாம் ஒரே குடும்பம் என” என சொல்லி வடிவேலுவை பார்த்தான்.
சுந்தரம் லேசாக புன்னகைத்தார்.
ஷிவாவிற்கு கோவமாக வந்தது.. ‘சேர்ந்து பார்ப்பதா.. நான் உருவாக்கியது’ என எண்ணிக் கொண்டே அமர்த்தலாகவே அமர்ந்திருந்தான்.
சந்துருவின் வக்கீல்கள் என இருவர் வந்தனர் இப்போது.. ஷிவா அப்போதும் அசராமல் அமர்ந்திருந்தான்..
இருவரும் சந்துருவின் சார்பாக மீண்டும் தாத்தாவின் உயில் படித்தனர்.
ஷிவா, எழுந்து வந்துவிட்டான்.. கான்பரன்ஸ் அறைக்கு வந்துவிட்டான். சந்துரு அவர்களோடு பேசு முடிவெடுக்கட்டும் என. ஏனெனில் யாராக இருந்தாலும் தெரியாத இடத்தில் வருமானம் வரும் சொத்தினை வாங்கிக் கொண்டு.. செல்வது உத்தமம் எனத்தான் ஆலோசனை சொல்லுவார்கள் என எண்ணம் ஷிவாவிற்கு, அதனால் கிளம்பினான் பேசவிட்டு.
அங்கே, வசந்தியின் அண்ணன்.. அதாவது, ஷிவாவின் தாய்மாமா இருந்தார்.. “என்ன ப்பா.. முதலிலேயே பேசி முடித்திருக்க வேண்டாமா?. எவ்வளோ பெரிய விஷயத்தினை இப்படி அமைதியா விட்டு வைச்சிருக்கீங்க..” என்றார் ஒன்றும் செய்ய முடியாதவராக.
ஷிவா “மாமா.. அதெல்லாம் சேகர் கொடுத்திடுவான்.. அதெல்லாம் அவன் பிரச்சனை செய்பவன் இல்லை. என்ன டெப்த்’தாக அனலைஸ் செய்பவன் அவ்வளவுதான். சரியாகிடும்.. எதோ வக்கீல்கிட்ட பேசிகிட்டு இருக்கான்.. ஏதாவது எதிர்பார்கள்.. இட்ஸ் ஆல்ரைட்.. லேகாவோட தம்பிதானே.. கொடுத்திடலாம். வொர்ரி பண்ணிக்காதீங்க” என்றான். சாதாரணமாகவே பதில் சொன்னான்.
அங்கிருந்த மற்றவர்களுக்கும்.. ஷிவாவின் பேச்சினை கேட்டதும்.. எளிதானதாகவே இருந்தது.
வசந்தி லதா இருவரும் அதிர்ந்துதான் இருந்தனர் இந்த செய்தி கேட்டு. அவரவரின் கணவன் யாரும் மனையாளை அருகே வரவில்லை.
இப்போது ஷிவாவினை பார்த்ததும்.. இவனும் நம்மிடம் சொல்லவில்லையே என அன்னைக்கு கோவம். வசந்தி “ஷிவா, என்ன டா சந்துருவிற்கும் இந்த தொழிலில் பங்கு கொடுத்திருக்காரா.. ஏன் டா.. சொல்லவேயில்ல, அதான் இத்தனை வருஷமா எட்டியே பார்க்காத தங்கச்சி பெண்ணை கட்டி வைச்சாரா.. உனக்கு “ என்றார் வசந்தி.
மகன் “ம்மா.. லேகா என் வைஃப். இதை பேசாத” என்றான்.
லதா மும்முரமாக “இல்ல க்கா.. பெண்ணை பார்க்கனும்ன்னு எத்தனை தரம் கேட்டார் மாமா.. ஆனால், இவங்க ரெண்டுபேரும்.. எப்படி சண்டை போட்டு மாமாவை உட்கார வைச்சாங்க.. இப்போ பாருங்க.. சொத்தினை எழுதி கொடுத்துட்டு போயிட்டார்.. மாமா.” என்றார். இரு பெண்களும்.. அர்த்தமாக பார்த்துக் கொண்டனர்.
வசந்தி “நீ கூட என்கிட்டே சொல்லவில்லையே டா” என்றார் மகனிடம், ஆதங்கமாக.
ஷிவா தலையை கையில் தாங்கி அமர்ந்துக் கொண்டான். உண்மைதான்.. அன்னையிடம் தானும் இந்த விஷயங்களை பற்றி பேசவில்லையே என இருந்தது. ‘சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்’ எனவும் எண்ணம் எழுந்தது.
தாய்மார்களின் கோவம் அவர்களுக்கு.. இப்படி இவர்கள் எடுக்கும் முக்கிய நிகழ்வுகள்.. ஏதும் தங்களுக்கு தெரியவில்லையே என.. இயலாமையில் ஒரு கோவம். இருவரும் ஷிவாவின் நிலை தெரியாமலே தங்களின் வருத்தத்தை கொட்டிக் கொண்டிருந்தனர்.
க்ரிஷ் வந்தான் “பாஸ்.. டைம் ஆச்சு.. லஞ்ச் எல்லோருக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.. சாப்பிடலாம்” என அழைத்தான்.
அங்கிருந்த உறவுகளோடு உண்பதற்கு சென்றான் ஷிவா.
சந்துரு, தன் வக்கீல்களோடு பிஸி. ஷிவா கொடுத்த சொத்துகளின் விவரம் என படித்து பார்த்து சந்துருவோடு அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
சுந்தரம் மாப்பிள்ளையோடு அமர்ந்திருந்தார். சந்துரு, ஒரு வார்த்தை கேட்க்கவில்லை ‘ஏன் மாமா இப்படி செய்தீர்கள்’ என. அவரும், இவர்கள் பேசும் பேச்சில் கலக்கவில்லை. பொறுமையாக அமர்ந்திருந்தார்.
வடிவேலு அடிக்கடி அந்த அறைக்கு வந்து.. நின்றார், பின் கிளம்பி சென்றார்.. இப்படியே இருந்தார்.
ஷிவா உண்டு முடித்து வந்தான்.. தன் அறைக்கு.
சந்துருவின் முகத்தில் எந்த பாவனையும் இல்லை.. வருத்தப்படுகிறனா பங்குகள் போகிறது என.. இல்லை சந்தோஷப்படுக்கிறானா சொத்துகள் வருகிறது என.. ஆராய்ச்சியில் இருந்தான் ஷிவா.
ஷிவா “என்ன சேகர்..” என ஆரம்பித்தான்.
சந்துருவின் முகம் லேகா கிளம்பியதும்.. எப்படி உணர்வுகளை துடைத்திருந்ததோ அப்படியே இருந்தது.
சந்துருவின் சார்பாக வக்கீல் பேச தொடங்கினார்.
“அதாவதுங்க.. இந்த பங்குகளை கொடுக்க.. சந்துரு ஒத்துக்கொள்ளவில்லை. அவரின் தாத்தா விருப்படி.. இந்த நிறுவனத்தில் பங்குகொள்ள விரும்புகிறார்.” என்றார்.
ஷிவா எழுந்துவிட்டான் கோவமாக.
வக்கீல் “அடுத்து என்ன செய்வது என நீங்கள் சொல்லுங்கள்.. பங்குகளை விட்டுத்தர முடியாது” என்றனர்.
வடிவேலு பெருமூச்சுவிட்டார்.
ஷிவா “நீ எதையும் யோசிக்கலை சேகர்.” என்றான்.
சந்துரு “நீங்க யோசிச்சிங்களா” என்றான்.
“அதனால்தான்.. இப்படி டபுள் மடங்கு சொத்து உனக்கு கொடுக்க ஒத்துகிட்டோம்” என்றான்.
சந்துரு “இல்ல.. இல்ல.. நீங்க சொத்துகளை மட்டுமே யோசித்து இருக்கீங்க. திருமணம் என்பதே.. இதை சுற்றிதான் நடந்திருக்கு. திருமணத்திற்கு முன் இப்படி எனக்கு பங்கு இருக்கு என தெரிந்திருந்தால்.. நானும் சமமாம இருந்திருப்பேன்.. இந்த நிறுவனத்தில். அதைதான் யோசிச்சிருக்கீங்க. என்னை உள்ளே விடகூடாதுன்னு யோசிச்சிருக்கீங்க.
இப்போது அக்காவிற்காக விட்டுகொடுத்திட்டு போய்டுவேன்னு நினைச்சி.. சத்தமில்லாமல் பொதுவில் சொல்லறீங்க.. எப்படி இருந்தாலும் உங்களை சுற்றியே நிறுவனம் இருக்க வேண்டுமென யோசிச்சிருக்கீங்க.. அதை மட்டுமே.. நல்லா யோசித்திருக்கீங்க.” என்றான் நிதானமாகவே. எத்தனைநாள் யோசித்திருப்பான் சந்துரு.. என்னமோ இருக்கிறது.. ஏன் வந்தார்கள் என எத்தனை யோசனை அவனுள். அதற்கெல்லாம் விடை கிடைக்கும் போது.. அஹ.. கரையே தெரியாமல்.. நடு கடலில் இருந்தவனுக்கு.. கரைகண்ட உற்சாகம் இருக்குமல்லவா.. அதை நோக்கி அவனின் ஆவி பாயுமல்லவா.
அதே நிதானத்தோடு “நான் உயில்படிதான் இருக்க விரும்புகிறேன். எனக்கு பங்குதாராக என்னவெல்லாம் உரிமை இருக்கோ.. அதிலெல்லாம் நான் கலந்துக் கொள்ளுவேன். முறையாக எல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்றான், அழுத்தமாக.
ஷிவாவிற்கு எரிச்சலானது.. அவனின் நிதானமும் அழுத்தமும்.. ஒன்றும் செய்யமுடியாத நிலை. சந்துருவாக.. லேகாவிற்கு என இறங்கிவருவான் எனதான் ஷிவாவின் எண்ணம். ஆனால், இப்படி அக்கா கிளம்பியதும் நிதானமாக பேசுவான் சந்துரு.. என எதிர்பார்க்கவில்லை. இப்படி தயவேயில்லாமல்.. என் பங்கினை கொடுக்க முடியாது என சொல்லுவான் எனவும் எதிர்பார்க்கவேயில்லை.
வடிவேலு “எப்படி இருந்தாலும் ஷிவாதான் மேனேஜிங் டிரைக்டர். என்னுடைய பங்கும் இதில் இருக்கு.. அவனின் தாய்மாமா பங்கும் இருக்கு. அதனால், நிர்வகிக்கும் பொறுப்பு அவனுக்கு இருக்கு. இதில் பெரிதாக நீ செய்ய ஒண்ணுமில்லை சந்துரு.” என்றார்.
சுந்தரம் “அண்ணா.. மாப்பிளை ஏதும் மறுப்பு சொல்லவில்லையே.. அவர் பங்கினை வைத்துக் கொள்கிறேன் என்கிறார்.. அவ்வளவுதான். ஷிவா சந்துரு இருவருக்கும்.. ஈக்குவல் ஷேர்ஸ் இருக்கு.. அதனால் இருவருமே முடிவெடுக்கட்டும்.. இருவருமே டிரைக்டர்ஸ்சாக இருக்கட்டுமே..” என்றார்.
ஷிவா சிரித்தான் நக்கலாக..
சுந்தரம் “என்ன ப்பா” என்றார்.
“என்ன சித்தப்பா.. பெண்ணை கொடுத்ததும் கட்சி மாறிட்டீங்க. இது நம்ம கம்பெனி. அத்தோட.. சந்துருவிற்கு என்ன தெரியும்.. கொடுத்த வேலையை செய்ய தெரியும்.. அவ்வளவுதான். இது கோடிகள் புழங்கும் இடம்.. இங்கெல்லாம் சும்மா.. யாருவேண்டுமானாலும்.. வந்து உட்கார்ந்திட முடியாது..” என்றான் சொடக்கிட்டு.
சுந்தரம் “ஷிவா, கொஞ்சம் நிதானமா பேசுப்பா.. எல்லாம் பழகிக் கொள்ளுவதுதான். உனக்கு வாய்ப்பு இருந்தது..” என பேச பேச..
வடிவேலு “சுந்தரம்.. உன் மாப்பிள்ளைக்கு சொல்லி.. கையெழுத்து போட சொல்லுவியா, அதைவிட்டு.. எதோ வியாக்கானம் பேசிகிட்டு இருக்க..” என்றார்.
சந்துரு “நீங்க என்ன வேணுமானாலும் பண்ணுங்க.. என் ஷேர்ஸ் நான் கொடுக்க முடியாது. எனக்கு வேலையிருக்கு.. நான் கிளம்புகிறேன்.. அடுத்து என்னவென.. என் வக்கீலிடம் சொல்லிடுங்க. பைய்..” என்றவன்.. தன் டாகுமென்ட் எடுத்துக் கொண்டு எழுந்தான்.
ஷிவா “ஷேகர், நாட்ஃப்பர்.. உன்னால் இதை மேனேஜ் செய்ய முடியாது. உன் சக்திக்கு மீறினது. அதிகமா ஆசைபடுற.. வேண்டாம் சந்துரு, நம்ம குடும்பம்.. இதில் நான் உன்மீது கடுமைகாட்ட கூடாதுன்னு பேசுகிறேன். இது விளையாட்டு கிடையாது. ‘பணம்..’ உன்னால் சமாளிக்க முடியாது. கொடுத்திடு.. இது என்னோடது, நான்தான் இவ்வளவு தூரம் காப்பாற்றி கொண்டு வந்திருக்கேன்.. இதை என்னால் யாருக்கும் ஷேர் செய்ய முடியாது. கொடுத்திடு..” என்றான் எச்சரிக்கும் விதமாக.. கடுமையாக பேசினான் ஷிவா.
சந்துரு “அஹ.. ஓ.. எப்போதும் முடிவு நீயே எடுக்க முடியாது ஷிவா. எனக்கு எது சரின்னு நான்தான் சொல்லனும். உனக்கு கொடுக்க முடியாது. உனக்கும் தாத்தா.. சொத்துதான். எனக்கும் தாத்தா சொத்துதான். நானும் லேன் செய்துக்குவேன். ம்..” என்றான்.
ஷிவா “அஹ.. எப்படி, ட்ரைணீயாக இருந்து.. டீம் லீட்’டாக மாறி.. இப்போது ப்ராஜெக்ட் மேனேஜராக எத்தனை வருஷம்.. ம்.. ஆருவருஷம், கரெக்ட்.. அப்படி மெதுவா கத்துகிட்டு.. அஹ.. கம்பெனி.. அவ்வளவுதான்..” என்றான்.. சூழல் சேரில் சூழன்றுக் கொண்டே..
சந்துரு சிலிர்த்துக் கொண்டான் இந்த தோரணையான பேச்சில்.. ‘இதென்ன பேச்சு.. என்னால் முடியாது என இவன் சொல்லுவது..’ என மூளை வேலையை ஆரம்பித்து.
இதுவரை.. மனம்மட்டுமே வேலை செய்தது.. ‘லேகா எந்த நிலையில் இருப்பாள்.. ஷிவா தனியாக வீடு வரட்டும்.. பேசலாம்.. பாதி பங்குகளை பொறுமையாக கொடுத்திடலாம்..’ என ஏதேதோ எண்ணியவன்.. ‘உன்னால் முடியாது’ என சொல்லவும்.. பற்றிக் கொண்டான்.. ஷிவாவின் சொல்லு, சந்துருவை கொன்றது.. “நான் செய்வேன்.. எண்ணி மூனே மாதத்தில்.. நான் பிஸினெஸ்.. கொண்டு வரேன். என்ன சிட்டு.. தானே. நான் கொண்டு வரேன்..” என்றான் திமிராக.
ஷிவா சிரித்தான் “அஹ.. என்ன.. வீட்டில் இருக்கும் லேடிஸ் போடுவாங்களே.. ஒன்லக் சிட்டு.. அதுன்னு நினைச்சிட்டியா.. ஷேகர்.” என சொல்லி எழுந்து.. தனது டேபிளின் மேல் சாய்ந்து நின்றான்.
சந்துரு எதிரே நின்றிருந்தான்.. ஷிவாவின் முகத்தில்.. கிண்டல் புன்னகைதான் “இது என்ன பிஸினெஸ்ன்னு தெரியுமா.” என சொல்லி.. தன் போனினை விரல்களுக்கு நடுவே சுற்றினான்.
“ம்.. இங்கே பணம்தான் முதலீடு.. பணம்தான் தொழிலாளி.. பணம்தான் கஸ்டமர். ம்.. நீ முதலில் பணம் கொடுக்கணும்.. அப்புறம்.. அவனை உன்கிட்ட வாங்க வைக்கணும்.. அப்புறம்.. அதில் நீ சம்பாதிக்கணும்.. அஹ.. என் கிளைன்ட் எல்லாம் பிலிம் பண்றவங்க.. ஜுவெல் ஷாப்.. மால்.. என பெரிய பிஸினெஸ் பண்றவங்க ஷேகர்.. இது கஷ்ட்டம்.” என சொல்லி.. அந்த டேபிள் மீதேறி அமர்ந்துக் கொண்டான்.
சந்துரு “அஹ.. இந்த வேலவன் சிட்பண்ட் அப்படின்னு விசிடிங் கார்டோடுதானே.. நீயும் முதலில் போன.. அப்புறம் என்ன ஷிவா. எப்படி இப்படி திமிராகவே பேசுற.. அஹ.. நானும் அதே கஸ்டமரினை கொண்டுவரேன்.. ம்.. “ என்றான்.
“அஹ.. ம்.. மூணு மாசம்.. மினிமம் 50 க்ரோ.. கொண்டு வா பேசிக்கலாம்” என்றான்.
சந்துரு “ஓகே.. வந்துட்டா.. உன் அப்பாவின் அத்தையின் பங்கு எனக்கு.. அதாவது சுந்தரம் மாமா.. அவர்கள் அத்தையின் பங்கும் எனக்கே.. வி ஹவே ஈக்குவல் ஷேர்ஸ். ம்.. ஓகேவா” என்றான்.
ஷிவா அதிர்ந்து போனான் இபோதுதான். 30% மட்டும் என நினைத்தால்.. 50% கேட்க்கிறான்.. என முதல்முறை கொஞ்சம் அதிர்ந்தான். ஆனாலும் நிறைய நம்பிக்கை.. ஒருவர்கூட.. இவனை நம்பி வாங்கவும் மாட்டார்கள் கொடுக்கவும் மாட்டர்கள்.. ஏது இவனிடம் பணம்.. என நம்பிக்கையாக “ம்.. பார்க்கலாம்” என்றான்.
சந்துரு “எல்லோரும்தான் சாட்சி.. நான் நாணயமானவன். என்னால் செய்ய முடியவில்லை என்றால்.. அப்படியே என்னுடைய பங்கினை கொடுத்துவிட்டு கிளம்பிடுவேன்.. அதே போல.. நான் பிஸினெஸ் கொண்டு வந்துவிட்டால்.. அவர் சொன்னது போல செய்திடனும்.. இதுக்கு நீங்கதான் சாட்சி. ஏன்னா.. இவரை நம்பவே மாட்டேன்.. அதனால் நீங்கள் எல்லோரும்தான் சாட்சி” என்றான்.
ஷிவா இந்த புதிய வார்த்தைகளில் ஆடித்தான் போனான்.. ‘நம்பமாட்டேன்’. கொஞ்சம் கொன்றது.. அவனை.