மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

12

சுந்தரம் விஷயம் தெரிந்ததும்.. உடனே, லேகாவிற்கு அழைத்தார்.. “என்னம்மா ஆச்சு” என்றார்.

லேகா அப்படியேதான் “எப்படி நீங்கள் சொல்லாமல் மறைக்கலாம்” என கோவமாகவே பேசினாள்.

லதா “என்னவாம் அதுக்கு.. வாழமாட்டானாமா” என்றார்.

லேகாவின் காதுகளில் அப்படியே விழுந்தது. சுந்தரம் லதாவை முறைத்துவிட்டு சற்று தள்ளி வந்தார்.

லேகா “அஹ.. உங்களுக்கு எல்லாம் அவர்கள்தான் சரி மாமா.. எப்படி பேசுறாங்க.. ஆனால் சந்துரு, தீக்ஷியை ஒரு வார்த்தை சொல்லவில்லை. இதுக்கு நீங்க என்ன பண்ண போறீங்க மாமா..” என்றாள், சட்டதிட்டமாக.

சுந்தரம் நொந்துக் கொண்டார்.

லேகாவும் ஏசிவிட்டு அழைப்பினை துண்டித்தாள்.

மறுநாள் மாலையில் எல்லோரும் சந்துரு வீட்டில் இருந்தனர்.

ரமேஷ் மகனை பார்க்க என ஞாயிறு காலையில் சந்துரு வீடு வந்தார். தீக்ஷி, தன் வீட்டில் இருந்தாள். அவள் மதியம்தான் வருவாள். சந்துரு கதவினை திறந்துவிட்டு, வாங்க என தலையசைத்தோடு சரி.. உறங்க சென்றுவிட்டான்.

ரமேஷ் பால் எடுத்து தானே காபி கலந்து குடித்துவிட்டு.. குளித்து.. காலை உணவு என உப்புமா செய்யத் தொடங்கினார்.

சந்துரு எழுந்து வந்து தந்தையிடம் பேசவில்லை.. அவர் சமைத்ததையும் உண்ணவில்லை. வெளியே சென்றுவிட்டான்.

 மதியம் மூன்றுமணிக்கு தீக்ஷி வந்து சேர்ந்தாள்.. அவர் ஹாலில் சோபாவில் உறங்குவதை பார்த்து.. முதலில் திகைத்தாள்.. ‘மாமா வந்திருக்காங்க.. சொல்லவேயில்ல’ என. பின் சத்தமில்லாமல் தன் அறைக்கு சென்றாள்.

தீக்ஷிக்கு எதுவுமே தெரியாது. அவளிடம் பேச கூடியவர்கள் சுந்தரம்  லேகா மட்டுமே. இருவரும் விஷயம் தெரிந்ததிலிருந்து அழைக்கவில்லை.

ரமேஷ் விழிக்கவும்.. தீக்ஷி அறையிலிருந்து வந்து “வாங்க மாமா” என்றாள்.

தீக்ஷிக்கு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. ரமேஷ் தானே “டீ போடவா ம்மா” என்றார்.

தீக்ஷி “நான் டீ போடுவேன் மாமா” என சொல்லி.. டீ போட்டாள்.

ரமேஷ் “படிப்பு எப்படி போகுதும்மா.. எப்படி ரெண்டு பேரும் சாப்பிடுறீங்க..” என கேட்டுக் கொண்டிருந்தார்.

சந்துவிற்கு, லேகா தாங்கள் வருவது பற்றி அழைத்து சொல்லியிருந்தாள்.

வசந்தி வடிவேல்.. சுந்தரம் லேகா என தனி தனியாக சந்துருவின் வீடு வந்தனர்.  

ரமேஷ்க்கு தெரியும், அதனால் இன்முகமாக வரவேற்றார் எல்லோரையும்.

தீக்ஷி அதிர்ந்து போய் எல்லோரையும் பார்த்து கலக்கமாக புன்னகைத்தாள். அவள் மனதில் ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தது.

லேகா வந்தாள்.. நேரே எல்லோரையும் புன்னகையோடு வரவேற்று.. நேராக கிட்சேன் சென்றாள்.. தீக்ஷி பின்னாலேயே சென்றாள்.. எல்லோருக்கும் அவள் கையில் தண்ணீர் கொடுத்துவிட்டாள் லேகா. தீக்ஷி கொடுத்தாள்.

அடுத்து காபி போட தொடங்கினாள் லேகா.

சுந்தரம் “எங்கம்மா.. மாப்பிள்ளை” என்றார் மகளிடம்.

தீக்ஷி விழித்தாள்.

ரமேஷ் “தீக்ஷி இப்போதான் வந்தாள், அவன் வேலையிருக்குன்னு காலையில் ஆபீஸ் போயிட்டான் சுந்தரம்.  இப்போ வந்திடுவான்” என்றார்.

சுந்தரம் “உட்காரும்மா” என சொல்லி மகளை தன்னருகே அமர்த்திக் கொண்டார்.. ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார் சின்ன குரலில். மற்றவர்களுக்கு என்ன பேசுவதென தெரியாமல்.. ரமேஷ் வடிவேல்.. வசந்தி என மூவரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.

லேகா காபி கொடுத்தாள் எல்லோருக்கும்.

சந்துரு வந்து சேர்ந்தான்..

சுந்தரம் எழுந்து நின்று.. “மாப்பிள்ளை வாங்க.. எப்படி இருக்கீங்க” என்றார் மரியாதையாக. பெண்ணை பெற்றவரின் நிலை சந்துருவிற்கும் லேகாவிற்கும் புரிய இருவரும் “என்ன மாமா இது உட்காருங்க..” என்றனர் ஒருசேர.

சுந்தரம் “மாப்பிள்ளை மன்னிச்சிடுங்க.. நாங்கள் உங்களை மதிக்காமல் இல்லை” என தழுதழுத்தார்.

சந்துரு “மாமா.. நீங்க இவ்வளவு எமோஷனாக வேண்டாம். இது எதோ என்னை.. நான் உங்களை கஷ்ட்டபடுத்து போலாகுது.. நான் வருத்தபட்டு கேட்டேன் அவ்வளவுதான்” என்றான்.

தீக்ஷிக்கு, என்னவென இப்போதுதான் புரியத் தொடங்கியது. தந்தையின் கைபற்றி “என்ன ப்பா.. ஆச்சு, அவர் என்ன சொன்னார்.. நீங்க ஏன் ப்பா.. சாரி சொல்றீங்க” என்றாள்.

வடிவேலு “தீக்ஷி இரும்மா..” என்றவர்.

சந்துவிடம் திரும்பி “சந்துரு மாப்பிள்ளை. நாங்களே மறக்கனும்ன்னு நினைக்கிறோம். இது எங்களோட போகட்டும்ன்னு.. உங்ககிட்ட  சொல்லலை. உங்க அப்பா.. சுந்தரம் நானு எல்லோரும் அப்படிதான் நினைச்சோம். அவள் எங்கள் வாரிசு. உனக்கு இதில் மாற்றுகருத்தே வேண்டாம். அவளை ஏதும் சொல்லிடாதேப்பா.. இது எண்களின் தவறு..” என பேச பேச.. லேகா இடைமறித்தாள்.

“மாமா.. சந்துரு தீக்ஷியை எதுமே சொல்லையே. அவனுக்கு கோவம் எல்லாம்.. எங்க அப்பா மேல.. உங்கள் மேலே எல்லாம்தான்” என்றாள்.

தீக்ஷி, கணவனை அடிகண்களால் பார்த்தாள்.. ‘என்கிட்டே கேட்க்கவில்லை.. எல்லோரிடமும் கேட்டிருக்கிறார்.. ம்..’ என ஒருமாதிரி சங்கடமாக இருந்தது பெண்ணுக்கு. தன்னை நிமிர்ந்தே பார்க்கவில்லை பேசவில்லை.. இப்போது அப்பா பெரியப்பா என எல்லோரும் வந்திருக்கிறார்கள்.. மன்னிப்பு என.. என்ன இது’ என அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டாள்.

சந்துருவிற்கு மனையாள் தன்னை பார்ப்பது.. உறுத்துகிறது.. அவனின் கழுத்தில். லேசாக தன் பார்வையை திரும்பினான் அவள்புறம்.. மின்மினி என நீர் இழையோடு.. சின்ன கண்கள் மின்னியது. சந்துரு நொடிகளில் தன் பார்வையை திருப்பிக் கொண்டு.. தன் தலையை கோத்திக் கொண்டான். ஆனாலும் இன்னமும் அவனை உறுத்துகிறது அந்த பார்வை.

இப்போது சந்துரு “வேறு ஏதாவது.. பேசலாம், போதும் இந்த டாபிக்..” என்றவன். லேசாக மனையாள்புறம் பார்வையை திருப்ப.. அவளோ இப்போதுதான் தன் தந்தையின் அருகே அமர்ந்தாள்.. தன்னை பார்க்கவில்லை.. என உணர்ந்து தந்தையோடு அமர்ந்தான், சந்த்ரசேகர்.

லேகா “மாமா.. அவனுக்கு, அவன் பெண்டாட்டி சங்கடப்பட கூடாது. அவளை பற்றி எல்லாம் தனக்கு தெரிந்திருக்கனும்ன்னு நினைக்கிறான். அதனால் நாம பேசவேண்டி இருக்கிறது அவ்வளவுதான்.” என்றாள்.

சுந்தரம் “சரிதான் ம்மா.. இதெல்லாம் சொல்லியிருக்கணும். ஆனால், சந்துரு அன்று இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் தானே இருந்தார். என் பெண்ணை சந்துருவிற்கு கொடுக்க எண்ணினேன்னு அதனால் பயந்து சொல்லலை. உன் அப்பாவையும் கோவிக்காத்தீங்க.. அவரிடமும் நாங்கள்தான் ஏதும் சொல்லிக் கொள்ள வேண்ட்மாம்ன்னு சொன்னோம்..” என சொல்லி அண்ணனை பார்த்தார்.

ரமேஷ் “அது இல்லாப்பா.. நானும் இவனுக்கு எல்லாம் சொல்லித்தான் கல்யாணம் செய்யனும்ன்னு நினைக்கலை.. அவனுக்கு தீக்ஷியை பிடித்திருக்கனும்ன்னு நினைச்சி சொல்லை.. அதைதானே லேகாவிடமும் சொன்னேன். இதில் ரகசியமென ஏதுமில்லை ப்பா” என்றார் மகனிடம்.

சந்ததுரு “இல்லப்பா.. சொல்லியிருந்தால்.. நான் வேண்டாம்ன்னு சொல்லியிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா” என்றான்.

வடிவேலு இடைமறித்தார் “இல்ல மாப்பிள்ளை பழசை பேச வேண்டாம். ரமேஷ் எந்தவகையிலும் இதற்கு பொறுப்பு கிடையாதுப்பா.. விடுப்பா” என்றார்.

சற்று அமைதி.

வடிவேலு முடிவுரை எழுதினார் “லேகா சந்துரு.. நாமெல்லாம் ஒரே குடும்பம்.. குடும்ப சிக்கல்கள் நிறைய வரும்.. போகும். எதுவாக இருந்தாலும் இப்படி பேசி தீர்த்திடனும் ம்மா.. மாப்பிள்ளை என்ன சந்தோஷமா.. எல்லாம் நல்லபடியாக முடிந்ததா.. நாங்க கிளம்புகிறோம்..” என்றார்.

ரமேஷ் “அதெப்படி.. வாங்க, எல்லோரும் சாப்பிட்டு போலாம்.. என்னம்மா.. எதோ ஹோட்டலில் டேபிள் புக் செய்ய்கிறேன்னு சொன்ன..” என்றார் மகளிடம்.

சந்துரு “ம்.. புக் செய்திருக்கேன் ப்பா.. மாமா போலாம்மா மாமா..” என தன் மாமனாரை பார்த்து வினவினான் மருமகன்.. மனைவியை பார்த்தான் அப்படியே கடைகண்களால்.

சுந்தரம் விரிந்த புன்னகையை தனதாக்கிக் கொண்டு “மாப்பிள்ளை போலாங்க.. அண்ணா அண்ணி சாப்பிட்டு போய்டலாம்.. முதல்முறை வீட்டிற்கு எல்லோரும் வந்திருக்கோம்.. என்ன அண்ணி” என சந்தோஷமாக வினவினார்.

வசந்தி வேறுவழியே இல்லாமல் தலையசைத்தார்.. வடிவேலுவும் அப்படியே “ம்.. கண்டிப்பா, மருமகளே.. ஷிவா எப்படிம்மா” என்றார்.

லேகா “அவரை வர சொல்லியிருக்கேன் மாமா.. கண்டிப்பா வருவார்.. நான் போன் செய்து சொல்லிட்டு வரேன்..” என்றாள்.

வடிவேலு புன்னகைத்தார்.

லேகா “தீக்ஷி கிளம்புடா..” என்றாள்.

தீக்ஷிக்கு தந்தையை பார்த்த சந்தோஷம் இருந்ததே தவிர.. என்னமோ குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள். லேகா சொல்லவும்.. சரியென.. தன் அறைக்கு சென்றாள்.

சுந்தரம், சந்துருவிடம் வந்து.. தீக்ஷியின் படிப்பு.. எப்படி அவளை தாங்கள் வீடு கொண்டு வந்தோம்.. தன் தந்தை என்ன சொன்னார்.. லதாவின் பிடிவாதம்.. என நடந்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தார். தன் பெண் உணர்ந்த தனிமையையும் சொன்னார்.. “யாருமே இல்லாமல்.. தனியான ஹாஸ்ட்டல் வாழ்க்கை.. பிறந்தநாள் தீபாவளி என்றாலும் அவள் வீடு வரமாட்டாள்.. லதாவிற்கு பிடிக்கவில்லை. லதாவை கஷ்ட்டப்படுத்த கூடாதுன்னு விட்டுட்டோம். அவள் வயதுக்கு வந்ததை கூட.. எங்களால் கொண்டாட முடியவில்லை. பெண் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொண்டாள். என்னுடைய குற்றம் அவளை பாதித்தது.. இனி அப்படி நடக்க கூடாதுன்னுதான்.. அவளை பற்றியதை சொல்லாமல் விட்டேன். உங்களுக்கு அவளை.. பிடிக்கவில்லை அப்படின்னு.. இல்ல, என் மேல் கோவம் ஏதாவது.. இருக்கா மாப்பிள்ளை” என்றார் திணறும் குரலில்.

சந்துரு “மாமா.. தீக்ஷி நீங்கள் நினைப்பது போல என்னோடு நல்லவிதமாக இருப்பாள்.. அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். ஆனாலும், நீங்கள் என்னிடம் சொல்லாமல் விட்டது தவறு.. இப்போதுதான் அதை நீங்கள் பேசியிருக்கிறீர்கள்.. ம்.. எனக்கும் புரியுது. நம்புங்க, எல்லாம் சரியாகிடும்.. வேறு ஏதும்.. இதேபோல இருந்தால் சொல்லிடுங்க மாமா.. அஹ.. அப்புறம் எனக்கு தெரியவந்தால் அவ்வளவுதான்” என விளையாட்டாகவே.. அவரை சமாதானம் செய்தான்.

சுந்தரம் நொடிநேரம் அசந்து நின்றார்.. பின் சந்துருவின் புன்னகை பார்த்து.. இலகுவாகி மாப்பிள்ளையோடு இணைந்து புன்னகைத்தார். கொஞ்சம் அரண்டு போயிருந்தார்.. இந்த இரண்டுநாளில் சுந்தரம். பெண்ணினை ஒளித்து மறைத்து.. வளர்த்தாகிவிட்டது.. முறையாவும் திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது. இனி அவளுக்ககான அங்கீகாரம் கிடைத்திடும் எனும் நேரத்தில் பிரச்சனை. அதனால் அரண்டுவிட்டார். அதனால், மாப்பிள்ளையின் மனநிலையை கணிக்க முடியாமல் திணறினார்.. இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி.

தீக்ஷி தயாராகி வந்தாள்.. எல்லோருமாக உணவகம் சென்றனர். 

லேகா, டிரைவரோடு காரில் வந்திருந்தாள்.. அதனால், சுந்தரம் அவள் ரமேஷ் மூவரும் அந்த  காரில் வந்தனர். வசந்தி வடிவேலுவும் ஒரு கார். சந்துருவும் தீக்ஷியும் இயல்பாக அவர்கள் காரில் வந்தனர்.

தீக்ஷி, கணவன் ‘இதை நீ ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை’ எனதான் கோவம் கொள்ளுவான் எனத்தான் எதிர்பார்த்தாள். ஆனால், இப்படி பேசாமல் இருப்பான், தன்னை வால்யூ செய்யாமல் இருப்பான் என அவள் யோசிக்கவேயில்லை. அந்தவகையில் கணவன் மேல் ஏமாற்றம் வந்தது. மெதுவாக மலர இருந்த நம்பிக்கை.. அவன்மேல் மலராமல் வாடியே போனது. ஒருமாதிரி ஏமாற்றத்தில் அமர்ந்திருந்தாள். 

சந்துருவிற்கு என்னவென ஆரம்பிப்பது என அவனுக்கு யோசனை. அவளை முற்றிலும் தவிர்த்துவிட்டேனே என சற்று.. தயக்கம். அதனால் இருவரும் அமைதியாகவே வந்து சேர்ந்தனர் ஹோட்டலுக்கு.

ஷிவாதான் இந்த உணவகத்தினை ரெபர் செய்தான் லேகாவிற்கு.. நட்சத்திர அந்தஸ்து உணவகம். க்ரிஷிடம் புக் செய்ய சொல்லியிருந்தாள், லேகா. 

இப்படியான இந்த வாரலாற்று சிறப்புமிக்க இரவு விருந்து தொடங்கியது.

ஷிவா முன்பே வந்து அமர்ந்திருந்தான். ஷிவா, எல்லோரையும் வரவேற்றான் ஒருதலையசைப்போடு.. தீக்ஷியை பார்த்ததும் மனையாள் சொல்லியது நினைவில் இருக்க ஷிவா “தீக்ஷிதா வா.. வாங்க சேகர்.. இதோ இங்கே உட்காருங்க” என இடம் காட்டி பேசினான்.

வசந்தி புருவம் உயர்த்தினார்.. மகனின் விசாரிப்பில். வடிவேலு ‘பிழைக்க தெரிந்தவன் என்புள்ள’ என எண்ணிக் கொண்டே.. மனையாளை பார்த்தார், அவரோ அதிர்ந்து நிற்க.. வடிவேலு  கண்களை மூடி திறந்து.. சமிக்கை செய்து மனையாளோடு அமர்ந்தார்.

சந்துரு “வாங்க ஷிவா, எப்படி இருக்கீங்க.. வீட்டிற்கு வந்திருக்கலாம்” என்றான்.

லேகா, கணவனின் அருகே வந்து நின்றுக் கொண்டாள். 

ஷிவா “இல்ல.. நேராக ஏர்போர்ட்டிலிருந்து வரேன்.. சந்துரு.  இன்னொருதரம் கண்டிப்பாக வரேன்.”  என புன்னகையோடு பதில் சொன்னான்.

சந்துரு தீக்ஷி இருவரும் அருகருகே அமர்த்தப்பட்டனர். அவர்கள்தான் மோஸ்ட்வாண்டட் இப்போதும். உணவுகளை ஆர்டர் செய்து மெதுவாக பேசிக் கொண்டே உண்ணத் தொடங்கினர். உணவுகள்தான் காலியாகத் தொடங்கியது. பேச்சுகள் மட்டும் எதோ கடனே என வந்தது.

லேகாதான் எல்லாவற்றுக்கும் பாலாமாக நின்றாள்.. வசந்தி வாய் திறக்கமாட்டேன் என்றிருந்தார். தீக்ஷிக்கு நடப்பதெல்லாம் என்னவென கிரகிக்க முடியவில்லை. ஷிவா, பட்டும் படாமல் நிற்பவன்.. சந்துரு, இப்போதுதான் சமாதானமகியிருக்கிறான்.. அவனுக்கு தீக்ஷியை எப்படி இனி எதிர்கொள்ள போகிறேன் என்ற யோசனை.. அதனால் லேகாதான் “தீக்ஷி.. உனக்கு கிளாஸ் எல்லாம் எப்படி போகுது.” என தொடங்கி “ஏன் சுந்தரம் மாமா.. இப்படி பேசவேமாட்டேன்ற பிள்ளையை எப்படி வக்கீலுக்கு படிக்க வைக்கிறீங்க.. பாவம் கிளைன்ட் எல்லாம்” என பகடியாக பேசினாள். லேகாவின் குரல்தான் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஷிவா, அன்ஈசியாக உணர்ந்தான்.. லேகாவின் இந்த முயற்சியை பார்த்து.   ‘எனக்கென்ன’ என இருப்பவன் அவள் அவஸ்த்தைப் படுவதை பார்த்து வாய் திறந்தான் “சித்தப்பாவிற்கு தீக்ஷி என்ன கேட்க்கிறாலோ அதை செய்ய வேண்டும் என எண்ணம். அத்தோட, அவள் கிரிமினல் லா இல்ல.. கம்பெனி லாதான் படிக்கிறாள்.. ம்..” என்றான்.

மனையாளோ சின்ன குரலில் “பாருடா.. தங்கச்சி என்ன படிக்கிறான்னு தெரியுமா” என்றாள்.

கணவன் “ம்.. கண்டிப்பாக, உன் தம்பி கூட என்ன ப்ராஜக்ட்’ல வொர்க் பன்றான்னும் தெரியும்.. “ என சொல்லி நிறுத்த.

லேகா.. கணவனை புருவம் உயர்த்தி பார்த்தாள்.

அப்படியே வடிவேல் “வருங்காலத்தில் நம்ம கம்பெனிக்கு கூட தேவைதானேம்மா..” என்றார்.

இப்படியே பேச்சுகள் வளர்ந்தது.. ஆனால், சந்துரு தீக்ஷி இருவரும் வாய் திறக்கவில்லை எங்கும்.

தீக்ஷிக்கு, கணவனோடு இத்தனைநாள் பழகியதில் இல்லாத தயக்கம்.. இப்போது அவன் அருகில் அமர்ந்திருப்பதில்.. ‘கணவன் மேல் எழுந்த இயல்பான நம்பிக்கையும் நகந்திருக்க..  என்ன யோசிப்பது.. கணவனை என கலங்கிய மனதாகவே அமர்ந்திருந்தாள். என்ன செய்வதென புரியாமல் அமர்ந்து உண்டாள்.

உண்டு முடித்து எல்லோரும் டெசர்ட் என உண்ணத் தொடங்க.. லேகா கணவனின் நல்ல மூட் பார்த்து “ஷிவா.. இது நம்ம ட்ரீட்..” என கணவனை நன்றாக மாட்டிவிட்டு கண்சிமிட்டி சிரித்தாள்.

சந்துரு “லேகா.. இது சரியில்ல.. இது என் ட்ரீட். ஷிவா, நெஸ்ட் டைம்.. நீங்க. இது என்னோட.. க்கும்.. நான் கொடுத்திடுறேன்” என சொல்லி புன்னகைத்தான்.

யாரும் ஏதும் மறுக்கவில்லை. லேகா “ஒகே.. எனக்கு பிஸ்தா ஐஸ்கிரீம் பார்சல்.. ஏங்க, இங்க பார்சல் எல்லாம் உண்டுதானே” என்றாள்.. கணவனிடம் திரும்பி சந்தேகம் கேட்டுவிட்டு.. சந்துருவினை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. கிண்டல் குரலில்.

ஷிவா விழிவிரித்து பார்த்தான்.

சந்துரு புன்னகையோடு “ம்.. எவ்வளோ வேணுமோ வாங்கிக்கோ.. ஆனால், அடுத்த டர்ன் வருமில்ல.. நாங்க லாரியில் வாங்குவோம்.. இன்னும் ஆர்டர் பன்னு” என்றான், அதே கிண்டல் குரலில்.

ஷிவா சட்டென அதிர்ந்து போனான். 

லேகா “நாங்க உங்களை மாதிரி பட்டிகாட்டான் கிடையாது. டீசன்ட் பெல்லோஸ். இது போதும். கடன்காரன்.. எத்தனை வருஷம் வேலை பார்க்குறான்.. எனக்கு ஒருநாள்.. ஹோட்டலில் வாங்கிக் கொடுத்திருக்கானா.. தீக்ஷி எதிரே எண்ணமாக சீன் போடுறான் பாருங்க” என கணவனிடம் புலம்பினாள், சத்தமாக.

பின்தான் சந்துரு பேசவும் ஷிவாவிற்கு, புரிந்தது தன் தாடையை வருடி தன்னைத்தானே சமாளித்தான். ‘ஹப்பாடா இது உடன்பிறப்பு பஞ்சாயத்து, டீல் செய்துக்குவாங்க.. பிரச்சனை நமக்கில்லை..’ என புன்னகைத்தான்.. நிம்மதியாக.

எல்லோரிடமும் சின்ன புன்னகை.. சட்டென.

இடம் இந்த நொடியில்தான் பொலிவானது.. சுந்தரம் மகளிடம் “தீக்ஷிம்மா.. நல்லா சாப்பிடுடா” என சொல்லிக் கொண்டிருந்தார்.

வடிவேலு “ஷிவா.. நெக்ஸ்ட் வீக் மீட்டிங் பற்றி சொல்லிடு டா..” என்றார் மகனிடம்.

ஷிவா “ம்.. ப்பா” என்றவன் 

“சந்துரு தீக்ஷி.. நெக்ஸ்ட் வெட்ன்ஸ்டே மீட்டிங் ஒன்னு இருக்கு, நம்ம கம்பெனியில். தாத்தா இறந்தபிறகு.. ஏதும் மீட்டிங் வைக்கலை. நம்ம ஷேர் ஹோல்டேர்ஸ் எல்லோரும்தான்.. மீட்டிங்கில். அடுத்த டிராக்டர் பற்றி பேச.. அதாவது.. மேனஜ்மென்ட் பற்றி பேச. நம்ம கம்பெனியை பற்றி இன்னும் நிறைய தெரிந்துக் கொள்ள.. வாங்க சந்துரு. மற்றது, மீட்டிங்கில். அதானல் எல்லோரும் கண்டிப்பாக வரனும்.” என அழைத்தான் சந்துருவின் அருகில் வந்து.

சந்துரு “ஷிவா, இது ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங்தானே.. நான் எதுக்கு. தீக்ஷி வரணுமா” என்றான்.

ஷிவாவிற்கு சட்டென என்ன சொல்லுவதென தெரியவில்லை.. ஆனாலும் “இல்ல.. நீங்க நம்ம குடும்பத்தில் ஒருத்தர். நாங்களே இப்படி இரண்டு மூணு வருஷத்திற்கு ஒருதரம்தான் மீட்டிங் வைப்போம். வாங்க.. சந்துரு. கண்டிப்பா வரணும்.. உங்களுக்கும் வேலையிருக்கு அங்கே” என்றான்.

சந்துரு புன்னகைத்தான்.

ஷிவா சந்துருவிடம் விடைபெறும் நோக்கில் கைகொடுத்தான்.. “நான் அப்புறமாக கூப்பிடுறேன்.. பேசலாம்.. இப்போ கிளம்பலாம்” என்றான்.

எல்லோரும் புன்னகையோடு விடைபெற்று கிளம்பினர்.