மனம்கொள்ள காத்திருந்தேன்!

11

சந்துருவிற்கு அந்த இரவு, மார்கழியில் வரும் ஏகாதசி தின இரவானது. தந்தையின் மேல் கோவமாக வந்தது.. இது தெரியாமல் இருக்குமா உண்மையாகவே தெரிந்து என்னிடம் மறைத்தாரா.. என கேள்வி. ஆனால், அவன் அறிவினால் உணர்ந்தது.. அப்பாவிற்கு தெரிந்திருக்கும் என.

ஆத்திரமாக வந்தது.. தந்தையின் மேல். கண்டிப்பாக தெரிந்திருக்கும் என நேரம் ஆக ஆக.. அதன் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தவன் திடமாக நம்பினான்.

ஹாலில் அமர்ந்திருந்தவன் இன்றும் அங்கும் நடக்கத் தொடங்கினான்.. தீக்ஷியை பற்றி யோசிக்க முடியவில்லை அவனால்.

தீக்ஷி, கணவனை அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டாள். அவன் அமர்ந்திருந்த கோலம் அவள் மனதை பதைபதைத்தது. ‘என்னை இவருக்கும் பிடிக்கவில்லை’ என அவளின் உள்மனம் சொன்னது அந்த நேரத்தில். 

காரெடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.. சற்று தூரமாக. ‘எப்படி என்னிடம் சொல்லாமல் மறைக்கலாம்.. இதற்குதான் இத்தனை அவரசமான திருமணமா?..’ என அவனால் ஏற்கவே முடியவில்லை.  அத்தோடு, தந்தையின் மேலும் வெறுப்பாக வந்தது. என்னவென அவரிடம்  விசாரிக்க கூட மனமில்லை. வெறுத்துவிட்டான்.. எல்லாம் தெரிந்தும் என்னிடம் ஏதும் சொல்லவில்லை அவர் என.

சந்துரு, தீக்ஷிதா வீட்டில் இருக்கிறாள் என அவன் வீடு வரவில்லை. காலையில் நண்பன் ஒருவன் இருக்கும் அப்பார்மென்ட் சென்றுவிட்டான். என்னமோ அவளை எதிர்கொள்ள பிடிக்கவில்லை அவனுக்கு.

லேகாவிடம் அவனுக்கு எந்த சந்தேகமும் கோவமும் இல்லை.. அவளுக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக சொல்லியிருப்பாள் என திடமாக நம்பினான். ஆனால், தந்தையை மன்னிக்க முடியவில்லை அவனால்.

தீக்ஷி, காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள். எழுந்ததும் கணவன் நினைவுதான் வந்தது.. ‘வீடு வந்திருப்பாரா’ என. முதல்முறையாக.. அக்கறையாக ‘அவர் என்ன செய்கிறார் தெரியலையே’ என விழித்ததும் ஒருவர்மேல் அக்கறை வந்தது அவள் வாழ்வில் இதுவே இரண்டாம்முறை. முதல்முறை.. ‘அம்மா என்ன பண்றாங்க காணோம்’ என தேடியிருக்கிறாள். இது விவரம் தெரிந்து எந்த விதத்திலும் தன்னை கவனித்துக் கொள்ளாதவனின் மேல் வந்த அக்கறை. 

தீக்ஷி, ஒரு பெருமூச்சோடு எழுந்து.. காலை வேலைகளை முடித்துக் கொண்டு.. மெதுவாக  கதவினைத் திறந்து வந்து பார்க்க.. ஹாலில் கணவன் இல்லை. அவனின் அறைக்கு சென்று பார்க்க அங்கேயும் அவள் கணவன் இல்லை. மனது லேசாக வாடி போனது.

தீக்ஷிக்கு என்ன செய்வதென தெரியவில்லை.. சற்று நேரம் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். ‘அம்மாக்கும் என்னை பிடிக்கலை.. வசந்திம்மா.. பெரியப்பா.. அண்ணன்.. இப்போது இவர். அஹ.. இந்த புறக்கணிப்பும் பாராமுகமும் எனக்கு புதிதில்லை.. ஆனால்,  என்னமோ வலிக்கிறது..’ என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

வயிறு பசித்தது. எழுந்து சென்று பால் நூடுல்ஸ் என செய்யத் தொடங்கினாள். அங்கே என்றால் அவளுக்கு சமைப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். இங்கே இவளேதான் செய்துக் கொள்ள வேண்டியிருந்தது. காலை உணவினை முடித்துவிட்டு.. மீண்டும் சற்று நேரம் தூங்கி எழுந்தாள்.

அவளின்  தந்தை அழைத்தார், தீக்ஷியை. அதில் விழித்தவள் தந்தையோடு பேசத் தொடங்கினாள். கணவனிடம் பேசியது பற்றி ஏதும் சொல்லவில்லை பெண். 

‘லக்கேஜ் எல்லாம் எப்போது எடுக்கிறாய்’ என கேட்டார் தந்தை.. பெண்ணுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.. ‘நான் பிளான் செய்துக்கிறேன் ப்பா’ என்றாள்.

தந்தை “ஏன் ம்மா.. வேலைக்கு ஆள் பார்க்கவா” என்றார்.

பெண் “இருங்கப்பா.. அவரிடம் கேட்டு சொல்லுகிறேன்” என்றாள்.

தந்தைக்கு நிறைந்து போனது.. கணவனிடம் கேட்க்கிறேன் என சொன்னது.

சுந்தரத்திற்கு, பெண்.. தன் பேச்சினை கேட்டு.. கணவனோடு சேர்ந்து வாழ்வதில் சந்தோஷம்.  ‘இரண்டுநாளில் வந்து பார்க்கிறேன்’ என சொல்லி அழைப்பினை துண்டித்தார்.

தீக்ஷி தன் வேலைகலை முடித்துக் கொண்டு.. வெளியே வர. கணவன் வந்திருக்கவில்லை.

சமைக்கணுமா எனதான் இருந்தது பெண்ணுக்கு. தன்னால் முடியாது என அவளுக்கே தெரிய.. ஆர்டர் செய்துக் கொண்டாள் மதிய உணவினை. 

உண்டுவிட்டு படிக்க என.. லேப்டாப் எடுத்து அமர்ந்தாள். டிவி ஏன் சும்மா இருக்கிறது என அதையும் ஆன் செய்து வைத்துக் கொண்டாள்.. எதோ படத்தினை OTTயில் போட்டுவிட்டவள்.. படிக்கவும் படம் பார்க்கவும் தொடங்கினாள்.

கதவினை திறந்துக் கொண்டு.. உள்ளே வந்தான் சந்துரு.

பெண்ணவள் அவன் வருவதையே பார்த்திருந்தாள். சந்துரு அவளை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.. தன் அறைக்கு சென்றுவிட்டான்.

சந்துரு ‘இவள் இருக்கமாட்டாள்.. கிளம்பியிருப்பாள்’ என எண்ணி வீடு வந்தான். இங்கே இவள் இருப்பதை பார்த்து அதிர்ந்துதான் போனான். ஏதும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே வந்துவிட்டான்.

ஆனால், அவளை பார்க்க பிடிக்கவில்லை ‘எதுக்கு இங்க இருக்கா இவ’ என எண்ணிக் கொண்டே குளிக்க சென்றான்.

குளித்து வந்தான். காலையிலிருந்து உண்ணவில்லை. இப்போதும்  உணவு என ஏதும் வாங்கவில்லை.. ஆர்டர் செய்தான். தன் அறையிலேயே லாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான்.

உணவுகளை வாங்கி உண்டான். திரும்ப தன் அறைக்கு சென்றுவிட்டான் சந்துரு. தீக்ஷியும் ஹாலில் இல்லை. அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்.

இதுவே தொடர்ந்தது.

லேகா அடிக்கடி தம்பிக்கு அழைத்தாள். தீக்ஷிக்கும் அழைத்து பேசினாள். தீக்ஷி, சந்துருவோடு இருப்பது மிகவும் திருப்தி அவளுக்கு. இருவரும் பேசி பழகட்டும் என ஒருமுறை அழைத்து பேசி வைத்திடுவாள்.. ஏதும் கேட்டுக் கொண்டதில்லை.

லேகா, இந்த வாரவிடுமுறை தினத்திற்கு, இரண்டுநாள் முன்னதாக அழைத்தாள். தீக்ஷி வெள்ளியன்று என்றால்.. இரவு தன் வீட்டில் இருந்துக் கொண்டு.. ஞாயிற்றுக் கிழமைதான் சந்துரு வீடு வருவாள். ஏதேனும் நண்பர்களோடு நேரம் செலவிடுவது.. விளையாடுவது மால் போவது என தீக்ஷி தன் இயல்பு போல நேரத்தினை செலவழித்தாள், வார இறுதி நாட்களில்.

இன்று லேகா, தீக்ஷிக்கு வீடியோ காலில் அழைத்தாள். சந்துரு வீடியோ அழைப்பினை ஏற்கவில்லை. தீக்ஷி ஏற்று பேசினாள். லேகாவிற்கு.. ஏனோ இப்போது சந்தேகம்.. என்ன இது என்னுடைய அறையாகிற்றே என. ஒரே அறையில் இல்லையா இவர்கள் இருவரும் என சந்தேகம். தீக்ஷியிடம் “என்ன இந்த ரூமில் இருக்க டா” என்றாள்.

தீக்ஷி “நான் படிச்சிட்டு இருக்கேன் அண்ணி” என்றாள் வெள்ளந்தியாக.

லேகாவிற்கு ம்.. சரிதானே என தோன்ற… “அவன் இன்னமும் வரவில்லையா.. என்ன டிபன்” என்றாள்.

தீக்ஷி “ம்.. அவர் சாப்பிட்டு வந்திடுவார்.. எனக்கு, சப்பாத்தி கொடுத்துவிட்டிருக்காங்க.. மணியக்கா” என்றாள்.

லேகாவிற்கு, என்ன இது.. என எண்ணம். ‘சந்துரு வெளியில் சாப்பிடுகிறானா.. இவளுக்கு சமைக்க முடியவில்லை என்றால்.. ஆட்களை ஏற்பாடு செய்திருப்போமே.. இல்லை, இப்போது போல.. இருவருக்கும் சேர்த்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே.. என்னவாகிற்று..’ என யோசனை. 

லேகாவிற்கு திருமணமாகி சிலநாட்கள்தான் ஆகிற்று. பொறுப்பாகவே எல்லோரையும் பார்த்துக் கொள்ளுகிறாள். தன்னுடைய வேலை.. பெரியவர்கள்.. ஷிவா என எல்லோரையும் சரியாகவே கையாண்டதில்.. சந்துருவை கவனிக்கவில்லையோ என எண்ணம் வந்துவிட்டது. குழப்பமான மனநிலையில் சந்துருவிற்கு அழைத்தாள் பெண்.

சந்துரு இன்னமும் வீடு வந்திருக்கவில்லை. சந்துரு, காரில் வந்துக் கொண்டிருந்தான்.. லேகா அழைக்கவும், ஸ்பீக்கரில் ஆன் செய்து பேசத் தொடங்கினான்.

லேகா “என்ன டா.. இன்னமும் வீடு போகலையா” என்றாள்.

சந்துரு “ஏன் என்ன வேணும் உனக்கு” என்றான்.. என்னமோ குரலில் துள்ளலில்லை.. எப்போதும் இருக்கும் கேலி கிண்டல் கூட இல்லை.

லேகா “தீக்ஷி இருக்காடா.. நீ தனியாளு இல்லையே.. கொஞ்சம் முன்னாடியே போய் ரெண்டுபேரும் சேர்ந்து ஏதாவது சமைத்து சாப்பிடுவதுதானே..” என்றாள்.

சந்துரு “லேகா.. என்கிட்டே நீ உண்மையை பேசுவீயா” என்றான்.

லேகா “என்ன டா.. ஆச்சு, சொல்லு” என்றாள்.

சந்துரு “உன் புருஷன்.. சரியான ஆளு டி” என்றான் கோவமாக.

லேகா புன்னைத்தாள்.. ‘இதுங்க ரெண்டும்..’ என சலித்துக் கொண்டே “அவர் என்னடா செய்தார்.. சமைக்க கூடாதுன்னு சொல்லிட்டாரா” என்றாள், கிண்டல் குரலில்.

சந்துரு “என்னை வாழ்வே விட கூடாதுன்னு முடிவெடுத்துட்டார்.” என்றான் விரக்தியான குரலில்.

“டேய்.. வாயை மூடு” என்றாள்.

 “லேகா, உனக்கு தீக்ஷி பற்றி தெரியுமா” என்றான்.