மனம்கொள்ள காத்திருந்தேன்!

10

ஷிவா, மனையாளோடு வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு. ஆனால், ஷிவாவின் அப்பார்ட்மென்ட் எதிர்பாராவிதமாக அத்தனை அலங்காரத்துடன் இருந்தது.

ஷிவா கதவினை திறந்ததும்.. அதிர்ந்துதான் போனான்.. தன் மனையாளிடம் கை நீட்டி அவளின் விரல்களை பற்றிக் கொண்டேதான் உள் நுழைந்தான்.. ஷிவாவின் வாழ்வில் இப்படி நிறைய செண்டிமெண்ட்கள் உண்டு. அவன் அதை உணர்ந்துக் கொண்டு.. பாதுகாத்துக் கொள்வான்.

லேகா “பூஜை ரூம் எங்க இருக்கு” என்றாள்.

ஷிவா, உறைந்திருந்தான்.. அவள் கேள்வியில் சுதாரித்து.. கைகாட்டினான். லேகா உள்ளே சென்று விளகேற்ற என பார்க்க.. சும்மா அகர்பத்தி மட்டும்தான் இருந்தது.. விளக்குகள் ஏதுமில்லை. எனவே, அதைமட்டும் ஏற்றி வைத்துவிட்டு.. வணங்கிவிட்டு வந்தாள்.

ஷிவா, கைகளை கட்டிக் கொண்டு அவளை வேடிக்கை பார்த்திருந்தான். பெண்ணவள் சுற்றிலும் பார்வையை ஓட்ட.. ஷிவா “வா, நான் சுற்றிக் காட்டுகிறேன்” என சொல்லி அவளை தன்னிரு கைகளில் தூக்கிக் கொண்டான். இருவரின் பார்வைகளும்.. அழகாக தேங்கி நின்றது மற்றவரின் விழிகளுக்குள்.

சொன்னது போலவே தன் வீட்டினை சுற்றிதான் காட்டினான்.. லேகா, சந்தோஷமாக அவனின் கழுத்தினை கட்டிக் கொண்டு.. வேடிக்கை பார்த்தாள். ஷிவாவின் அறையில் இருவரும் வந்து சேர்ந்தனர். சரியாக அந்த நேரம் சந்துரு அழைத்தான்.. லேகாவின் போனிற்கு.

அதில் இருவரும் கலைந்தனர். லேகாவை கீழே இறக்கிவிட்டான்.. “யாருடா இது.. விடியும் நேரத்திலும் விடமாட்டாங்க போலவே” என தலையை கோதிக் கொண்டே சொன்னான், ஷிவா.

லேகா “அப்பாவாகத்தான் இருக்கும்” என ஹாலில் இருந்த தன் கைப்பையினை..  திறந்து போனினை எடுத்தாள். சந்துரு அழைத்திருந்தான்.. லேகா “சந்துரு” என சொல்லிக் கொண்டே தம்பிக்கு திரும்ப அழைத்தாள்.

ஷிவா “அவனுக்குதான் கல்யாணம் ஆகிடுச்சில்ல.. ஏன் கூப்பிடுறான்” என எந்த பாவனையும் இல்லாமல் கேட்டான்.

பெண்ணவள் புன்னகைத்துக் கொண்டே போனினை காதில் வைத்திருந்தாள். சந்துரு எடுத்து “லேகு, ரீச் ஆகிட்டியா” என கேட்டான்.

ஷிவா முறைத்தான்.

லேகா “ம்.. நீ” என்க..

“நானும் ரீச் ஆகிடுவேன்.. பைய் டி” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டான் இங்கீதமாக.

சந்துரு தீக்ஷி இருவரும் தங்களின் வீடு வந்தனர். இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை இந்த திருமண நாட்களில் கூட.. எதோ மூன்றாம் மனிதர்கள் போல சேர்ந்திருந்தனர்தான். ஆனால், ஏதும் உரிமைக் கொண்டாடவில்லை.

சந்துருவிற்கு என்னமோ நிறைய கேள்விகள். அவள், அவனுள் குடைந்துக் கொண்டே இருந்தாள்.. ஏன் இத்தனைநாள் இவளை என்னோடு அனுப்பவில்லை.. ஏன் யாருமே அவளைபற்றி.. என்னிடம் பேசவில்லை.. திருமணம் எனதானே செய்து வைத்தனர்.. லேகாவின் திருமணத்திற்கு என எந்த பொறுப்பும் அவள் எடுத்துக் கொள்ளவில்லை. சரி, ஏன் அதை அவளுக்கு அவர்கள் வீட்டில் யாரும் சொல்லி தரவில்லை. என்ன நடக்கிறது.. என ஆயிரம் கேள்விகள். அதை தெரிந்துக் கொள்ளாமல் தலையே வெடித்தது, கணவனுக்கு. ஆனாலும், ஒருமுறை கூட அவளை அழைத்து பேசவில்லை.

சந்துருவிற்கு, அந்த குழப்பத்தினை இப்போது ஆராய நேரமில்லை.. நேரே அவரவர் முன்பே இருந்த அறைக்கு சென்றனர்.

மறுநாள் சந்துரு தீக்ஷி இருவரும் சித்தூர் கிளம்பினர். லேகாவை இவர்கள்தானே வரவேற்க வேண்டும்.. அதனால், கிளம்பினர். சந்துரு, அவள் செல்லுக்கு செய்தி அனுப்பினான்.. இரவு உறங்கும் முன். அதனால் காலையில் நேரமாக கிளம்பியிருந்தாள் பெண். இப்படிதான் இவர்களின் பேச்சுபழக்கம் இருந்தது.

ஷிவா லேகா வந்து சேர்ந்தனர். ஷிவா, லேகாவின் உறவுகளோடு நன்றாக பழகிக் கொண்டான். எல்லோர் வீட்டிற்கும் சென்று வந்தான்.. முதல் இரண்டுநாட்கள்.

சந்துரு தீக்ஷி தம்பதி அங்கேதான் இருந்தனர். சந்துருவின் அத்தை, வீட்டில் இருந்தார் இவர்களை கவனிக்க என. தீக்ஷிதா.. உண்பதற்கு வருவாள்.. பின் மேலே அறைக்கு சென்றிடுவாள். என்னமோ அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.. திருமணமாகி ஒருமாதம் ஆகபோகிறது. ஆனாலும் பழக முடியவில்லை. சந்துருவிடமும் அதே ஒதுக்கம்தான். அன்று, அவனின் அப்பார்ட்மென்டிலிருந்து அன்று கிளம்பி போனவள்தான்.. லேகாவின் திருமணத்திற்கென மட்டுமே.. இப்போது சித்தூர் வந்தாள். 

சந்துருவும் என்ன ஏது என ஒருவார்த்தை அவளை அழைத்து கேட்கவில்லை. இது என்ன உறவென தெரியவில்லை.

இன்று,

லேகா அத்தையோடு சேர்ந்து வேலைகளை பார்த்தாள். ஷிவா, ஹாலில் அமர்ந்து லாப்டாப்போடு, வேலைகளை கவனித்தான்.. போனில் பேசிக் கொண்டே. 

சந்துருவும் அப்படியே டைனிங் அறையில் டேபிளில் அமர்ந்து வேலைகளை பார்த்துக் கொண்டே ஷிவாவின் மேல் ஒருகண் வைத்திருந்தான். இருவரும் அதிகம் பேசுவதில்லை.. ஆனால், என்னமோ இருவரும் ஒருவரை ஒருவர் பிரியவும் இல்லை.. அஹ.. இது கள்ளகவிதையாகவே இருந்தது. 

லேகாவிற்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு, கணவன் தம்பி இருவரையும் கவனிக்க வேண்டும் என்பதில்தான் குறி.

காலை உணவு முடிந்து எல்லோரும்.. வேலையில் கவனமாக இருந்தனர். மணி பதினொன்று, வழக்கமாக டீ போடுவது போல.. லேகா டீ போட்டுக் கொண்டிருந்தாள் எல்லோருக்கும்.

தம்பியிடம் ஒன்று கொடுத்துவிட்டு.. தன் கணவனிடம் ஒன்று கொடுத்தாள்.. ஷிவாவின் டி-ஷர்ட்  நனைய.. நனைய.. கவனமாகியிருந்தான் லாப்டாப்பில். 

மனையாள் “என்னங்க இது.. இப்படி வேர்க்குது உங்களுக்கு” என்றாள் அதிர்ந்து.

ஷிவா புன்னகையோடு மனையாளை பார்த்து “ஏசி.. பழக்கம்.” என்றான்.

மனையாள் “நீங்க ரூமில் போய் ஏசி போட்டு வேலையை பாருங்க” என்றாள்.

ஷிவா “நீ போ.. நான் பார்த்துகிறேன்” என்றான் அலட்டாமல்.

ரமேஷ்.. தன் அக்காவிற்கு துணையாக கிட்செனில் எதோ செய்துக் கொண்டிருந்தவர் “ப்ஃபேன் அளவினை பெருசு பண்ணும்மா.. ஜன்னல் எல்லாம் திறந்திருக்கா பாரு” என்றார் கொஞ்சம் பரபரப்பாக.

சந்துரு எழுந்து வந்து நின்று பார்த்தான்.. பின் லேகா வர “பார்த்து BP இருக்க போகுது.. இப்படி ஸ்வெட் ஆகுது..” என்றான் இயல்பான கிண்டல் குரலில்.

ஷிவா அங்கிருந்தே இவர்கள் பேசுவதை பார்த்து “என்ன லேகா” என்றான்.

லேகா “ஒன்னுமில்லங்க.. இது அப்படிதான் உளரும்” என கணவனிடம் சொன்னவள் “சும்மா இருடா.. இவன் வேற..” என சொல்லிக் கொண்டே கிட்சென் சென்றாள்.

அத்தையும் லேகாவும் சமையலில் கவனமாகியிருந்தனர்.

இரண்டுமணி நேரம் கடந்திருக்கும்.. இப்போது, வாசலில் மணியடிக்கும் சத்தம்.. ஷிவா, ஹாலில் இருந்ததால்.. எழ எத்தனிக்க.

சந்துரு “நான் பார்க்கிறேங்க” என சொல்லி முன்னாள் வர.. ஷிவா அமர்ந்துக் கொண்டான்.

இப்போது க்ரிஷ் நின்றிருந்தான்.. கூடவே, பெரிய பார்சலை இறக்கியபடி இரண்டு நபர்கள் நின்றிருந்தனர்.

சந்துரு, க்ரிஷிடம் புன்னகையோடு வரவேற்பாக தலையசைத்தவன்.. “உள்ளே இருக்கார்” என ஷிவாவை காட்டிவிட்டு.. வந்திருந்த ஆட்களிடம் “யாருங்க” என தொடங்கினான்.

க்ரிஷ் “சந்துரு.. உள்ளே வாங்க சொல்றேன்” என்றவன்.. சந்துருவை உள்ளே அழைத்து சென்றான்.

க்ரிஷ் “ஷிவா, ஏசி வந்திடுச்சி” என்றான்.

சந்துரு அசந்து நின்றான்.. ஷிவா “மாமா..” என அழைத்தான், தன் மாமனாரை.

சந்துரு ஒன்றும் பேசமுடியாமல்.. நின்றான். சொல்லிவிட்டு வாங்கியிருக்கலாம் என அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. சந்துரு அமைதியாக சென்றான். அவனின் தந்தை, மாப்பிள்ளையின் அழைப்பினை ஏற்று வந்தார் ஹாலுக்கு.

இப்போது, ஏசியை பார்த்தவர்.. “என்ன மாப்பிள்ளை” என்றார்.

ஷிவா “மாமா ஏசி ஹாலுக்கு.” என்றான்.

ரமேஷ் “அதற்குள்ளா..” என சின்ன குரலில் சொல்லியவர்.. “சரி, அஹ.. மாப்பிள்ளை.. போட்டிடலாம்..” என்றவர்.. தன் கையிலிருந்த போனினை டீபாய் மேல் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

க்ரிஷ்  “அங்கிள் நீங்க இருங்க..” என்றவன் வேலை செய்ய எதுவாக.. வந்திருந்தவர்களோடு சேர்ந்து சோபா எல்லாம் நகர்த்தி வேலையை ஆரம்பித்தான்.

ஷிவா, தங்களின் அறைக்கு சென்றுவிட்டான்.

சந்துரு எங்கும்  செல்லாம் அங்கேயே அமர்ந்து வேலையை பார்த்தான். வீட்டில் யாருக்கும் ஏதும் பேச முடியவில்லை.

மதியம் தாமதமாகவே உண்டனர் எல்லோரும்.

ரமேஷ் நால்வரையும் பாகுபாடில்லாமல் கவனித்துக் கொண்டார். தன் பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி வீட்டில் இருப்பது, அத்தனை ஆனந்தமாக இருந்தது.. ஷிவாவின் இந்த செயல்களை எல்லாம் பெருமை பேசவும் இல்லை.. சிறுமைப்படுத்தவும் இல்லை. அதன்போக்கில் விட்டுவிட்டார்.

ஆனால், பிள்ளைகள் இங்கே பாகுபாடில்லாமல் இருப்பது சந்தோஷம் அவருக்கு.. தன் மனையாளை அடிக்கடி நினைத்துக் கொண்டார். ஷிவாவிடம் இந்த சமையல் உங்க அத்தை நன்றாக செய்வாள்.. இதேபோல.. பெரிய ஹால் வேண்டுமென அவள்தான் சொல்லி சொல்லி கட்டினோம்.. என நிறைய மனையாளை நினைந்தார்.. ரமேஷ். பிள்ளைகள் இருவரும் கூட.. அமைதியாகினர்.. தந்தையின் பேச்சில்.

தீக்ஷி, ஷிவா இருக்கும் நேரத்தில் உண்பதற்கு கூட வர தயங்கினாள். சந்துரு தன் அறைக்கு வந்து மனையாளை அழைத்தான் “திக்க்ஷி.. வா, எல்லோரும் நமக்காதான் வெயிட் பண்றாங்க வா.. சாப்பிட்டு வந்திடலாம்.. அப்படி ஒன்னும் உன் அண்ணன் உன்னை கடிச்சி தின்னுடமாட்டான்” என அவளின் முகத்தினை பார்க்காமல் சொல்லி அழைத்து சென்றான் உண்பதற்கு.

அங்கே சந்துரு லேகா இருவரும் தீக்ஷியை பார்த்து பார்த்து கவனிக்க வேண்டியதாக இருந்தது. ஷிவா தங்கையை திரும்பியும் பார்க்கவில்லை.. அவள் வந்ததும் ஒரு புன்னகை செய்தான் அவ்வளவுதான்.. மற்றபடி அவளை பார்க்கவேயில்லை.

நான்குநாட்கள் சித்தூரில் இருந்துவிட்டு, சென்னை கிளம்பினர் அவரவர் வேலையை பார்க்க.

லேகாவின் சென்னை வாழ்க்கை.. அமைதியாகவே தொடங்கியது. ஷிவா,  அலுவலகம் வந்து சேர்ந்தான். அவனுக்கு வேலை என்பது முக்கியம், வெளியூர் பயணங்களை தவிர்த்திருந்தான். இந்த நான்குநாட்கள் விடுமுறையே அவனை எதோ செய்திருக்க.. வேலையில் கவனமானான்.

ஹனிமூன் பற்றி யோசித்திருந்தான்.. ‘வரவிருக்கும்.. நம் ஆடிட்டிங் முடித்துவிட்டு.. நிம்மதியாக போகலாம்’ என மனையாளிடம் சொல்லி.. அவளையும் சம்மதிக்க வைத்திருந்தான்.

ஷிவா, மதியம் உணவிற்கு வீடு வந்தான். லேகா, தன் கடையை தாமரை அக்காவைத்தான் கவனிக்க சொல்லியிருந்தாள். வாரத்தில் இரண்டு நாட்கள் அங்கே சென்று கவனித்துக் கொண்டாள் லேகா.

ஷிவா, மாலையில் மனையாளோடு பீச்.. மால்.. தியேட்டர் என  சென்றான். 

சந்துரு தீக்ஷியோடு அப்பார்ட்மென்ட் வந்தான். எப்படி நடந்தது என தெரியவில்லை.. இருவரும் பேசாமலே வந்ததால்.. சந்துரு எந்த கேள்வியும் கேட்க்காமல் அவளை கூட்டி வந்துவிட்டான்.

மேலே வீட்டிற்கு வரவும் தீக்ஷிதான் கணவன் என்ன எண்ணுகிறான்.. என தனக்கு முன்னே சென்றவனை பார்த்தாள். ஆனால், சந்துரு அவளை திரும்பி பார்க்கவில்லை.. நேராக உள்ளே, தன்னுடைய அறைக்கு சென்றான்.

தீக்ஷி ஒரு நொடி நின்றாள்.. என்ன செய்வது என தெரியவில்லை.. கணவன் வாவென அழைக்கவில்லையே என உறுத்தியது பெண்ணுக்கு.

சந்துரு வெளியே வந்தான்.. மனையாள் அங்கேயே நிற்பதை பார்த்து.. ஒரு க்ஷ்ணம் நின்றான்.. ஆனாலும் ஒன்றும் கேட்க்காமல் கிட்சென் சென்றுவிட்டான்.

தீக்ஷி “சந்துரு, நாம சேர்ந்திருக்கனும்ன்னு.. அப்பா..” என தொடங்கவும்.. சந்துரு அவளை திரும்பி பார்த்தான்.. அவரின் விருப்பமா என முறைத்தான். 

பெண்ணவள் அதில் சுதாரித்தாலும் உண்மை அதுதானே.. என எண்ணி “இல்ல, நான் அப்பாகிட்ட சொன்னேன்.. முதலில் சொல்லிட்டேன். நீங்க என்கிட்டே பேசவேயில்ல.. இ..இதில் உங்களுக்கு இஷ்டமில்லையோன்னு.. யார்கிட்ட முதலில் சொல்வது.. என.. அதான்.. அப்பாகிட்ட” என தயங்கி நின்றாள்.. 

சந்துரு “நீ.. யாரு முதலில்” என்றான்.. தன் இருகைகளையும் தலையில் வைத்துக் கொண்டு. சந்துருவிற்கு, எல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணம்தான்.. மனையாள் என அருகிலிருப்பவளை பற்றி எதுமே தெரியாது என எப்படி இருப்பது.. அதனால்.. நிதானமாக பேசவேண்டிய விஷயத்தை.. மிகவும் நெருக்கடியான நேரத்தில் கேட்டு வைத்தான் கணவன்.

தீக்ஷிக்கு இந்த நேரடி கேள்வியில் விக்கித்து போனது. இவளிற்கு, இதெல்லாம் தெரியாது.. இப்படி சந்துருவிற்கு தன்னை பற்றி சொல்லாமல் திருமணம் செய்திருப்பார் என தெரியாது. அப்பாவிடம் கேட்டதும்தான் இதெல்லாம் தெரிந்தது. இப்படி கணவன் கேட்கவும்.. நேரம்காலம் தெரியாமல் இல்லை.. ஆனாலும் வந்து நின்றாள் அவனின் எதிரில்.

சின்ன கண்கள் அசதியின் இன்னமும் சின்னதாக இருந்தது.. முகத்தில் எந்த பாவனையும் இல்லை.. தலைமுடி.. அவளின் முதுகில் படந்திருக்கும்.. அதை இப்போது.. தூக்கி போனி போல போட்டிருக்க.. எப்போதும் இருக்கும் புன்னகை கூட தொலைந்திருக்க.. “சந்துரு.. நான்.. நீங்க என்ன நினைக்கிறீங்க.. என்கிட்டே என்ன கேட்கணுமோ கேளுங்க” என்றாள்.

சந்துரு அமர்ந்தான் சோபாவில்.. “ஏன் உன் வீட்டில் யாரும் உன்னை க..ண்டுக் கொள்வதில்லை” என்றான்.

தீக்ஷி “யாரு பேசலை..” என்றாள்.

சந்துரு தன்னருகே இடம் காட்டினான்.. அமருமாறு. தீக்ஷிக்கும் நிற்க முடியவில்லை. அமர்ந்தாள் அவனை பார்த்தபடி. 

“என்னை, ரொம்ப யோசிக்கவோ.. பேசவோ வைக்காத.. நீ யாரு.. குடும்பத்தில் ஒருத்திதானே நீ.. இல்லையா?” என்றான்.

தீக்ஷிக்கும் கணவனிடம் மறைக்கும் எண்ணமில்லை.. அவளுக்கு தன் கதையை தானே சொல்லுவதும் பிடிக்கவில்லை. யாராவது சொல்லியிருப்பார்கள் என எண்ணியவளுக்கு.. இப்படி தன் வாயாலேயே தன்கதையை சொல்லுவதை வெறுத்தாள்.. “நான்.. அப்பாவோட பொண்ணு. க்கும்.. அப்பா.. அப்பாவோட.. செகண்ட் வைப்தான் என்னோட அம்மா.. பேரு ஹேமலதா. அதனால், வீட்டில் என்னை யாருக்கும் பிடிக்காது.” என ஒருவழியாக சொல்லிவிட்டாள். கண்ணீர் என ஏதுமில்லை.. ஒரு வருத்தம்.. நிதர்சனைத்தை.. தான் ஏற்றுக் கொண்டதை.. சொல்லுபவளின் வலிதான் வார்த்தையில்.. முகத்தில்.

சந்துரு அதிர்ந்து போனான்.. “மாமாவிற்கு இரண்டாம் திருமணமா.. அப்படியா? அவங்க எங்க.. என்கிட்டே சொல்லலை” என்றான் விசாரனையானக் குரலில்.

தீக்ஷி  “அப்ஃபெர்.. க்கும்.. மேரேஜ்ன்னு இல்லை. அப்பாவிற்கு ஹம்சாவில் பொறுப்பெடுக்கும் போது உதவியாளராக என் அம்மாதான் இருந்தாங்களாம்.” என்றாள்.

என்னை ஏமாற்றிவிட்டார்கள்.. இதற்குதான் இந்த திருமணத்தை இத்தனை ஆர்வமாக அவசரமாக செய்தனரா.. முறை தவறி வந்தவளா.. என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால்.

தீக்ஷி “க்கும், அப்பாக்கு திருமணமாகி.. ஐந்து வருடம் குழந்தையில்லை. அப்போ என் அம்மாவோடு பழக்கமாகி.. நான் பிறந்தேன். அம்மா, ஒருமாதம் இருந்தவர்கள்.. எதோ விஷகாய்ச்சலில் இறந்து போயிட்டாங்களாம். அதன்பிறகு, என்னை தத்தெடுத்தேன்னு சொல்லி லதாம்மா கையில் என்னை கொடுத்தார்களாம்.” என்றவள் கணவனை ஏறிட்டு பார்த்தாள்.

சந்துரு தலை கிறுகிறுக்க அமர்ந்திருந்தான்.. இன்னுமும் என்ன இருக்கிறதோ என.

பெண்ணவள் தொடர்ந்தாள் “லதாம்மா என்னை நல்லா வளர்த்தார்கள் என்மேல பாசமா அக்கறையா அன்பாத்தான் இருந்தாங்கலாம்.. ஐந்து வயதுவரை. அதன்பின், யார் மூலமாகவோ நான்.. அப்பாவோட பொண்ணுன்னு தெரிய.. எல்லாம் மாறிடுச்சி.. லதாம்மா அழுது.. என்னை அடித்து.. அப்பாவையும் அடித்து வீட்டை விட்டு.. போயிட்டாங்களாம். நான் இருக்கும்வரை இங்கே வரமாட்டேன்னு.” என்றாள்.. எட்ன்ஹா பாவனையும் இல்லாத குரலில்.

சந்துருவிற்கு இது அதிர்ச்சியாகவும் பாவமாகவும் இருந்தது..

“அப்புறம்தான் தாத்தா பெரியப்பா அப்பா எல்லோருமாக சேர்ந்து என்னை போர்டிங் ஸ்கூல் போட்டார்கள். அதன்பின் என்னை தனியாக ஒரு வீடெடுத்து தங்க வைத்து பார்த்துக் கொண்டார்கள். பெரியப்பா அப்பா நல்லா பேசுவாங்க.. அம்மா பெரியம்மா பேசமாட்டாங்க. நானும் என்ன கேட்பது என தெரியாமல் அப்படியே இருந்துவிட்டேன். சாரி” என சொல்லி அமைதியானாள்.

சந்துரு, தனக்காக வருத்தப்படுவதா.. இல்லை அவளுக்காக வருத்தப்படுவதா என தெரியாமல் அமர்ந்திருந்தான்.

அதை பார்த்தவள் “அப்பா எல்லாம் சொல்லியிருப்பார்ன்னு நினைச்சிட்டேன். உங்களுக்கு எல்லாம் தெரிந்துதான் கல்யாணம் செய்துகிட்டீங்கன்னு நினைச்சிட்டேன்.. சாரி. என்னால் உங்கள் வாழ்க்கை பாதிக்கும்ன்னு நினைத்தால்.. நீங்க என்ன நிலையில் இருக்கீங்கன்னு தெரியலை.. சாரி எல்லாத்துக்கும்.” என்றவள் இரரண்டு நிமிடம் கணவனை பார்த்தால் ஏதும் செய்ய முடியாதவளாக.

சந்துரு இருகைகளையும் சோபாவின் மேல் விரித்து.. விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

தீக்ஷி தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

தீக்ஷி என்ன சொல்லுவது என தெரியாமல் தன் லக்கேஜ்ஜூடன் முன்பு தான் இருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.