Advertisement

மனம் – 11

ஈசிஆர் சாலையில் யதுவீரின் கார் பறந்து கொண்டு இருந்தது.. உள்ளத்தில் இருக்கும் சந்தோசமும், அவன் முகத்திலும் தெரிய, எதோ ஒரு ஹிந்தி பாடலை ஹம் செய்தபடி காரை செலுத்திக்கொண்டு இருந்தான். அவனருகே லக்க்ஷனா.. அவன் முகத்தில் இருந்த மகிழ்விற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் அவள் முகமும் சந்தோஷத்தில் ஜொலித்துக்கொண்டு இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்புதான்  இருவருக்கும் நிச்சயம் முடிந்திருந்தது.. சிம்பிளாய் லக்க்ஷனா வீட்டிலேயே வைக்கலாம் என்று முடிவு செய்திருக்க, யதுவீரின் டீம் மேட்ஸோ நாங்கள் இல்லாமலா?? என்று கேட்க, பின் யதுவீர் தங்கியிருக்கும் ஹோட்டல் ஹாலிலேயே நிச்சயதார்த்தம் என்று முடிவானது..  

யதுவீர் ஒவ்வொன்றையும் இரு வீட்டு பெரியவர்களிடம் கேட்டு கேட்டு தான் செய்தான். என்ன ஒரு சிறு பிசகு கூட நேர்ந்து அது பிரச்னைகளை கிளப்பிடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான். ஆக ஒவ்வொன்றையும் அவன் வீட்டிலும், லக்க்ஷனா வீட்டிலும் கேட்டு கேட்டு செய்ய, அங்கே லக்க்ஷனாவோ ‘எல்லார்கிட்டயும் பேசுறான் என்கிட்ட பேச மட்டும் இவனுக்கு டைம் இருக்காது’ என்று பொரிந்துகொண்டு இருந்தாள்..

அன்று யதுவீர் ப்ரெஸ்மீட்டில் அவனது காதலை தெரிவித்த பிறகு, லக்க்ஷனாவிற்கு மனதில் சந்தோசமாகவே இருந்தாலும், இத்தனை ஆண்டுகள் நடக்குமா நடக்காதா என்று தெரியாமல், அவளாகவே நடக்காது என்று முடிவு கட்டி அவனை மறக்கவும் முடியாது நினைக்காமல் இருக்கவும் முடியாது தனக்குள்ளே பல போராட்டங்களை நிகழ்த்திக்கொண்டு இருந்தவளுக்கு,

இன்று அவனோ சுலபமாய்,  ‘எஸ் ஷி இஸ் மை லவ்…’ என்று சொல்லி, உடனே திருமணத்திற்கும் இரு வீடுகளில் பேசி சம்மதம் வாங்கிவிட்டால், உடனே அனைத்தையும் விட்டு அப்படியே அவனோடு உருகிட வேண்டுமா என்றிருக்க,

அவனுக்கோ ‘இவ்வளோ பண்றேன்.. ஒருவார்த்தை கூட இப்போவரைக்கும் சொல்றாளா??’ என்று இருந்தது..

அன்றைய இரவு மேட்ச் முடிந்து, ப்ரெஸ் மீட் முடிந்து, இன்ன பிற வேலைகள் எல்லாம் முடிந்து அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு யதுவீர் வரும் போது, நள்ளிரவு பன்னிரண்டு மணி..

உடலில் அசதி இருந்தாலும், அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல் மனம் அத்தனை உற்சாகமாய் இருந்தது..

‘நான் பேசியதை லக்க்ஷனா பார்த்திருப்பாளா..?? என்ன நினைத்திருப்பாள்..???’ என்று எண்ணியவன் வேகமாய் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்..

அவன் நினைத்தது போலவே லக்க்ஷனா அழைத்திருந்தாள்.. ஆனால் அதில் நேரத்தைப் பார்த்தவனுக்கு, நேரலை மேட்ச் தொடங்குவதற்கு முன்பேயே, அவன் ப்ரெஸ் மீட்டில் தன் காதலை சொல்வதற்கு முன்னேயே அழைத்திருக்கிறாள் என்று தெரியவும் ரொம்ப ரொம்ப சந்தோசமாகி போக, 

‘பேபி நீயாவே கால் பண்ணிருக்கியா??’ என்றவன் லேசாக விசில் ஒன்றை அடித்தபடி, அவளுக்கு அழைக்க, ‘ஸ்விட்ச் ஆஃப்…’ என்று பதிவு செய்யப்பட குரல் பேச,

‘ஸ்விட்ச் ஆஃப்பா… பட் வொய்???’ என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொண்டவன், வேகமாய் மீராவிற்கு அழைக்க கிளம்ப, அப்போது தான் நள்ளிரவு என்பது புத்தியில் உரைத்து,

‘ஷ்.. ஓகே.. மார்னிங் பார்த்துப்போம்..’ என்றவன் பின் ஃபிரெஷ் ஆகி வந்து படுத்தான்..

எப்போதுமே மேட்ச்சின் தினம் படுத்ததுமே உறக்கம் வந்துவிடும். ஆனால் இன்றோ.. கண்களை மூடினாலும், உறக்கம் வருவதாய் தெரியவில்லை.. மனம் ஒருநிலையில் இல்லாது எதோ பரவசமாய் இருந்தது.. புரண்டு புரண்டு படுத்தும் அவனால் ஒன்றும் முடியாமல் போக,

‘ஓ.. காட்.. எப்படித்தான் இத்தனை வருசமா லக்க்ஷி எல்லாத்தையும் டாலரேட் பண்ணாலோ.. எனக்கு ஒன் டேக்கே இப்படி இருக்கு…’ என்று சொல்லிக்கொண்டவன் கொஞ்ச நேரம் எழுந்து போய் பால்கனியில் நின்றிருந்தான்.

கடல் காற்று அந்த இரவு நேரத்தில் ஜில்லென்று வீசிக்கொண்டு இருந்தது.. மிஞ்சிப் போனால் இன்னும் நான்கோ ஐந்தோ நாட்கள் தான்.. பின் கிளம்பிடுவான்.. இரண்டு நாளில் ஒரே ஒரு மேட்ச் மட்டும் இருக்கிறது.. அதில் வென்றுவிட்டால், பிறகு டெல்லியில் தான் அடுத்த சுற்று,  ஆக மேட்ச் முடித்து, அதற்கு மறுநாள் இங்கே நிச்சயதார்த்தம்  என்று முடிவாகியிருக்க, அதற்குள் லக்க்ஷனாவிடம் பேசிடலாம் என்று அவனாகவே நினைத்துக்கொண்டான்.. எப்போதடா பொழுது விடியும் என்று காத்திருந்தான்..

பொழுதும் விடிந்தது.. லக்க்ஷனாவும் மறுநாள் வழக்கம் போல அலுவலகம் கிளம்ப, அப்போது தான் அவளுக்கும் நினைவு வந்தது முதல் நாள் தான் அலைபேசியை ஆஃப் செய்து வைத்தது..

‘ஷ்… மறந்தே போயிட்டேன்..’ என்று ஆன் செய்து பார்க்க, அதில் யதுவீர் அழைத்ததற்கான மெசேஜ் வந்திருந்தது..

அதைப் பார்த்தவளோ ‘லக்க்ஷி உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லை டி.. பாரு அவனே வந்து கால் பண்ணிருக்கான்.. நீ ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்ட..’ என்றெண்ணியவள், கிளம்பிக்கொண்டே அவனுக்கு அழைக்க, இந்த முறை அவன் அழைப்பை ஏற்கவில்லை..

ஆபிஸ் கேப்பில் போகும் போது அழைப்போம் என்றிருந்தவளுக்கோ, கேப்பில் ஏறியதுமே அங்கிருந்தவர்களின் வாழ்த்துக்களுக்கும், கேலிக்கும் கிண்டலுக்கும் பதில் சொல்லி சமாளிக்கவே நேரம் சரியாய் இருக்க, அப்போதும் பேச முடியவில்லை..

சரி அடுத்து அவனாவது அழைப்பான் என்று பார்த்தால், அதுவும் இல்லாமல் போக, நேரத்தை பார்ப்பதும், அலைபேசியைப் பார்ப்பதுமாக இருந்தவளுக்கு இந்த உணர்வுகள் முற்றிலும் புதிதாய் இருந்தது..

இத்தனை நாள் காதலை உள்ளே வைத்து வைத்து மருகியவள், இன்று அதனை வெளிப்படுத்த நேரம் பார்க்க, நேரமோ அவளின் கையில் சிக்காமல் போக்குக் காட்ட, ஒருவழியாய் யதுவீரே அழைத்தான் அதுவும் அன்றைய நாள் முடியும் போது.. கிட்டத்தட்ட லக்க்ஷனா பாதி தூக்கத்தில் இருக்கும் போது..

நல்லவேளை கண்ணை மூடிக்கொண்டே அழைப்பை ஏற்றதால், பேசினால், அழைப்பது அவனென்று தெரிந்திருந்தால் கண்டிப்பாய் மீண்டும் அலைபேசியை அமர்த்தி வைத்திருந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. 

“ஹலோ…” என்ற அவளது குரலே நான் உறங்கிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல,

“லக்க்ஷி தூக்கமா…” என்று ஆழ்ந்து உரைத்த அவனது குரலோ, அவளுக்கு திடுக்கிடலுடன் சேர்த்து ஒரு சிலிர்ப்பையும் கொடுத்தது..

‘யது…’ என்று அவளே சொல்லிக்கொண்டவள், கண்களை முழுதாய் திறந்து தன் அலைபேசியையே ஒருமுறை பார்த்துக்கொள்ள, அவனது எண் தான் என்றதும்,

“ம்ம் சார்க்கு இப்போதான் கால் பண்ண டைம் கிடைச்சதா..” என்றாள் தன் சந்தோசத்தை கொஞ்சம் மறைத்து,

இருந்தாலும் அவளது குரலில் இப்போது எட்டி பார்க்கும் உல்லாசம் அவனுக்கு எட்டாமல் இருக்குமா என்ன,      

“அன்னிக்கு நீ கால் பண்ணப்போ நான் டிஸ்கசன்ல இருந்தேன்..  தென் கொஞ்சம் பிசி… அதான் அப்போ உடனே கால் பண்ண முடியலை….” என,

“ஓ.. அவ்வளோ பெரிய அப்படக்கரா நீ..” என்றாள் கிண்டலாய்..

“அடிப்பாவி..” என்று சிரித்தவன், வேறு ஏதாவது பேசியிருக்கலாம், “ஹவ் இஸ் மை சர்ப்ரைஸ்??” என்று கேட்க,

அத்தனை நேரம் நல்லபடியாய் பேசியவள், அவன் இப்படிக் கேட்டதும் “போடா..” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட,

அவனோ “வாட்..” என்று அதிர்ந்தவன், மீண்டும் அழைத்தான்..

“லக்க்ஷி வாட் ஹேப்பான்..”

“என்ன ஹேப்பன்… உன்னை மாதிரி தான் சர்ப்ரைஸ் கொடுக்கணும்…. என்கிட்ட சொல்றதை விட்டுட்டு ஊருக்கே சொல்லு..” என்று கடிய,

“ஹா ஹா…” என்று சிரித்தவன், “நீ மட்டும் என்கிட்ட சொன்னியா??” என்றான் ஏக்கமாய்..

அவன் குரலில் இருந்தே அவனது எண்ணத்தை யூகித்தவள், “அதுக்குனு இப்படித்தான் லைவ்ல சொல்வாங்களா.. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா??” என,

“எப்படி இருந்தது?? டெல் மீ..” என்றவன், “லக்க்ஷி நிறைய பேர் லவ் பண்றாங்க.. பட் எத்தனை பேருக்கு இந்த சான்ஸ் கிடைக்கும் சொல்லு…” என, அதுவும் அவளுக்கு அந்த நேரத்தில் சரியாகவே தான் தெரிந்தது.

சொல்லப்போனால் யதுவீர் ப்ரெஸ் மீட்டில் வைத்து அவனது காதலை வெளிப்படுத்திய தருணம் லக்க்ஷனாவின் உணர்வுகள் அவளுக்குத் தானே தெரியும். சந்தோஷத்தில் கண்ணீர் அல்லவா வடித்தாள்..

“லக்க்ஷி என்ன சைலன்ட் ஆகிட்ட..” என,

“யது.. உன்ன பாக்கணும் போல இருக்கு..” என்றாள் அவளது உணர்வுகளை மறைக்காது..

“என்னது???!!” என்று அவன் திரும்பக் கேட்க,

“எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு யது…” என்றாள் அவளும் திரும்ப.

“இப்போ சொன்னா எப்படி??” என்றவன் நேரத்தைப் பார்க்க,

“ம்ம் சரி விடு..” என்றவள், “யது…” என்று மீண்டும் அழைக்க,

“டெல் மீ பேபி…” என்றான்..

“ம்ம் சாரி…”

“எதுக்கு..”

“இல்ல.. நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்.. ரியலி சாரி.. பட் எதுவுமே நான் பர்பஸா பண்ணல யது…” எனும்போதே அவளுக்கு குரல் நடுங்க.

“ஹேய் பேபி…” என்று கொஞ்சம் பதறியவன், “அதெல்லாம் விடேன் லக்க்ஷி..” என்றான்..

“எப்படி எப்படி விட சொல்ற யது.. பைவ் இயர்ஸ் யது…” எனும்போதே,

“லக்க்ஷி ஐ லவ் யூ..” என்றுசொல்லி அவள் பேச்சை நிறுத்தியிருந்தான்..

“யது…!!!!!”

“ஹ்ம்ம் உன்ன சொல்லு சொல்லுனு படுத்திட்டு இருந்தேன்ல.. பட் இப்போ நான் சொல்றேன்.. ஐ லவ் யூ.. டூ டேஸ்ல உன் மனசுல இருக்கிறத உன்னை சொல்ல வைக்கிறேன்னு எனக்கு நானே சேலஞ் பண்ணிக்கிட்டேன்.. பட் லக்க்ஷி நான் என்கிட்டயே தோத்துப் போயிட்டேன்.. பிகாஸ் ஆப் யூ.. உன்னோட லவ்.. நீ ஹேட் யூ சொன்னப்போ கஷ்டமா இருந்தது.. பட் நெக்ஸ்ட் திங் பண்றப்போ உன்னோட லவ் தான் அதுல தெரிஞ்சது…” எனும்போதே,

“யது ஐ ஹேட் யூ…” என்றாள் லக்க்ஷனா..

“ஹா ஹா லக்க்ஷி.. ஒன்ஸ் மோர் ப்ளீஸ்..” என ,

“ஹேட் யூ ஹேட் யூ..” என்றவள், “ம்ம்ச் போடா..” என்று செல்லம் கொஞ்சிக்கொள்ள,

“ஹ்ம்ம் இப்போவாது சொல்லேன்…” என்றான் யதுவீர் சலுகையாய்..

“இப்படியெல்லாம் கேட்டா சொல்ல முடியாது.. நானே சொல்வேன்.. அப்போ கேட்டுக்கோ..” என,

“சொல்லாட்டி விடமாட்டேன்..” என்றான் வில்லன் குரலில்..

“விடாத…” என்றவளும் அடுத்து பேச, இருவரும் என்ன பேசினார்கள் என்று இப்போது கேட்டால் இருவருக்குமே தெரியாது…

கண் மூடி கண் திறக்கும் நேரம் போல, அடுத்து வந்த நாட்களும் நகர்ந்திட, இதோ அவர்களின் என்கேஜ்மென்ட்டும் அழகாய் முடிந்திருக்க,

“அங்கிள்.. இதுவரைக்கும் நானும் லக்க்ஷியும் தனியா பேசிக்கவே சான்ஸ் கிடைக்கல.. சோ.. கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போறேனே..” என்று வந்து முன் நின்றவனிடம் நவநீதனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கொஞ்சம் திணறித்தான் போனார்..

லக்க்ஷனாவும் என்னதிது என்று பார்க்க, நவநீதனோ மகள் முகத்தையும் ஒரு பார்வை பார்த்தவர், “ம்ம் ஓகே..” என்று மட்டும் சொல்ல, இதோ அவளை அழைத்துக்கொண்டே வந்துவிட்டான்..

மனதில் இதெல்லாம் ஓட, “உனக்கு ரொம்ப தைரியம் யது….” என்று லக்க்ஷனா சொல்ல,

“பின்ன.. ஹேட் யூ சொன்னவளையே மேரேஜ் பண்ண போறேனே…” என்றான் ஸ்டைலாய்..

“நீ இதையே சொன்னா.. தென் நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்..” என்று லக்க்ஷனா பிகு செய்ய,

“தென் டூ குட்.. நீ சொல்லாம போற ஒவ்வொரு நாளும் மேரேஜ் தள்ளிப் போயிட்டே இருக்கும்..” என்றான் அவனோ இலகுவாய்..

“என்னது…” என்று லக்க்ஷனா கண்களை விரிக்க, அவனும் அவளைப் போல் கண்களை விரித்து காட்டியவன் “எஸ் கண்டிப்பா.. நீ உன் லவ்வ சொல்லாத வரைக்கும் இப்படியே நம்ம லவ் டைம் போயிட்டே இருக்கும்.. மேரேஜ் டைம் லேட்டாகிட்டே இருக்கும்..” என்றவன்,

“ஏன் லக்க்ஷி.. இப்போ என்ன மேரேஜூக்கு அவசரம்.. நம்ம கிட்ஸ் ஸ்கூல் போகவும் கூட அவங்க முன்னாடி மேரேஜ் பண்ணிக்கலாம்….” என்று அவளைப் பார்க்க,

“என்னது…!!!!” என்று இப்போது அதிர்ந்து பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

“என்ன பேச்சு பேசுற..” என்று சிரித்தபடி அவளை அடிக்க, “ஹப்ப்பா….” என்று சந்தோசமாய் ஆழ்ந்த மூச்சை வெளிவிட்டான் யதுவீர்..

லக்க்ஷனாவிற்கு அதே போன்றதொரு உணர்வு தான்.. இத்தனை வருடங்களாய் நடக்காது என்று அவளே எண்ணி, யதுவீர் மீதான அன்பைக் கூட இயல்பாய் வெளிப்படுத்த முடியாமல், தனக்கு தானே பல கட்டுபாடுகளை விதித்து, அதை மீறவும் முடியாது, அதனுள்ளேயும் இருக்க முடியாது தவித்து திணறி நிற்கையில்,

மூன்றே நாளில் திருமணம் வரைக்கும் பேசி, இதோ இன்று அதற்கான முதல் படியாய் நிச்சயமும் செய்து, இப்போதும் கூட உன் காதலை சொல்லேன் என்று கேட்டுக்கொண்டு இருப்பவனை என்ன செய்தால் தகும்.. காதல் செய்தால் மட்டுமே தகும் என்று தோன்ற,

யதுவீர் அவள் பக்கம் திரும்பும் முன்னேயே வேகமாய் அவன் கன்னத்தில் இதழ் பதித்து விலகியிருந்தாள் லக்க்ஷனா..    

“ஹேய் பேபி…” என்று அதிர்ந்தவன், அவளைப் பார்க்க, அவளோ இதழில் பொங்கும் புன்னகையோடு இரு புருவங்களையும் தூக்கி அவனைப் பார்க்க,

“நீ இருக்கியே…” என்றவன், ஒருகையால் அவளை அணைத்த வாக்கில் அடுத்து காரை ஓட்ட, அவளோ வாகாய் அவன் மீது சாய்ந்து கொண்டாள்..

“இப்படியே டிரைவ் போயிட்டே இருக்கலாம்…” என,

“ம்ம் போலாமே.. அப்படியே உன்னை மும்பைக்கு கடத்திட்டு போயிடுறேன்..” என்றான் அவனும்..

“ஹா ஹா இதுக்கு பேர் கடத்தலா..” என்று சிரிக்க, சாய்ந்திருந்தவளின் நெற்றி மட்டுமே அவனுக்கு வாகாய் இருக்கவும், அவன் பங்கிற்கு அங்கே இதழ் ஒற்றியவன்,

“மொத்தமா ஒன் டே கடத்தலாம்.. பட் இப்போ டிரைவ் மட்டும்..” என,

“ம்ம்..” என்றவள், கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு, அவன் இத்தனை நாள் சொல் சொல் என்று அவளிடம் கேட்ட விஷயங்களை இப்போது அவளாகவே சொன்னாள்..

காரை மெதுவாகவே ஒட்டிக்கொண்டு வந்தவன், லக்க்ஷனா தன் மனதில் இருந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டே வரவும், ஒருநேரத்தில் சாலையோரத்தில் அவனையும் அறியாமலே காரை நிறுத்தியிருந்தான்..

லக்க்ஷனா பேசி முடித்திருக்க, யதுவீரின் அணைப்பு இறுகியிருந்தது.. இருவருமே விலகவில்லை.. இருவரின் மனம் ஒருவித அமைதியை உணர, கொஞ்ச நேரத்தில் அவனாகவே தான்  “லக்க்ஷி..” என்றழைக்க,

“ம்ம்..” என்று நிமிர்ந்தவள் நெற்றியும் மீண்டும் இதழ் பதித்தான்.. இம்முறை அழுத்தமாய்.. அப்படியே அவள் தலையில் முகம் வைத்து அழுத்திக்கொள்ள,

“தேங்க்ஸ் எ லாட் லக்க்ஷி…. அன் கண்டிசனல் லவ்.. என்னை ஹர்ட் பண்ணிட்டேன்னு சொல்ற.. பட் இது உனக்கு எவ்வளோ கஷ்டமா இருந்திருக்கும்னு இப்போ புரியுது பேபி…” என,

“ஹ்ம்ம் இப்போ சொல்லு ஐ லவ் யூ சொல்லணுமா.. ஹேட் யூ சொல்லணுமா..” என்று லக்க்ஷனா கொஞ்சம் குறும்பாய் கேட்க,

“நீ ஹேட் சொன்னாலும் லவ் யூன்னு தான் அர்த்தம்…” என்றான் அவனும் சிரித்தபடி..

“ம்ம் பட் யது.. ட்ரூலி.. நீ ப்ரெஸ் மீட்ல ப்ரொபோஸ் பண்ணியா.. அப்படியே பிளாட் ஆகிட்டேன்…”

“அஹா… அப்போதான் பிளாட் ஆனியா லக்க்ஷி…. ஐ திங்.. அதுக்குமுன்னாடி சோ லாங் அகோ.. உன் மனசு அல்ரடி கொஞ்சம் பிளாட் ஆகிடுச்சுன்னு..” என்று யதுவீர் சொல்ல,

“ஹா ஹா…” என்று சிரித்தவள், அப்போது தான் நியாபகம் வந்தவளாய்  “ஹே நீ சொல்லவேயில்லை உன்னோட லவ்ஸ் பத்தி… ஐ லவ் யூ சொல்லிட்டா போதுமா..” என்றாள் மிரட்டலாய்..           

“ஓ காட்.. இப்படியெல்லாம் எக்ஸ்ப்ரஸன் காட்டாத.. பயந்திட போறேன்..” என்றவன், “நான் ஹேட் யூ சொல்லி எல்லாம் லவ் பண்ணல.. ஸ்ட்ரைட்டா லவ் யூ சொல்லி தான் லவ் பண்றேன்…” என,

“நீ இதை விடவே மாட்டியா யது…” என்று அவள் அவனிடம் இருந்து விலகும் போதே,

“லக்க்ஷி.. பேபி.. டூ யூ ஸ்டில் ஹேட்டிங் மீ…” என்றான் அன்று கேட்டது போலவே..

அவன் சொன்ன விதத்தில் லக்க்ஷனாவிற்கு சிரிப்பு வந்திட, “போடா…” என்றவள், “லவ் யூ டூ…” என்று சொல்லி மீண்டும் யதுவீர் கன்னத்தில் இதழ் பதிக்க..

“ஹா ஹா லவ் யூ டூ டூ பேபி…” என்றவன் மீண்டும் ஒரு படலை ஹம் செய்தபடி காரை கிளப்ப, மெல்லிய சாரலும் அவர்களோடு தொற்றிக்கொண்டது..

இருவரின் வாழ்க்கை பயணத்திற்கான கடவுளின் ஆசிதான் இந்த சாரலோ என்றிருக்க, காதல் மழை எப்போதுமே அவர்களை அரவணைத்துக்கொள்ள தயாராகவே இருந்தது.. 

                          


                 

          

    

            

 

 

Advertisement