Advertisement

மனம் – 21

இரண்டு மாதங்கள் கழித்து….

அதிகாலை சுபவேளை, மங்கள வாத்தியங்கள் முழங்கிக்கொண்டு இருக்க, பலவித மலர்களால் அலங்கரிக்கபட்டிருந்த அந்த திருமண மண்டபம் வந்திருந்த விருந்தினர்களாலும், நண்பர்களாலும் நிரம்பி வழிந்தது..

பாதிக்குமேலே லக்க்ஷனாவின் பக்கத்து ஆட்கள் இருக்க, யதுவீரின் நெருங்கிய சொந்தகளும், அவனது நண்பர்களும் இருக்க, ஒருவித கலவையான பேச்சொலி மண்டபத்தை நிறைத்துக்கொண்டு இருக்க,

அங்கே மணமேடையில் யதுவீர் லக்க்ஷனாவின் வரவிற்காக காத்துக்கொண்டு இருந்தான். சென்னையில் நடக்கும் திருமணம் முழுக்க முழுக்க தமிழ் முறைப்படி நடக்க, யதுவீருக்கு இது முற்றிலும் புதிய அனுபவம். என்னதான் சிறுவயதில் இருந்து இங்கேயே வளர்ந்திருந்தாலும், இந்தமாதிரியான திருமணங்களை அவன் ஒருசில முறை பார்த்திருந்தாலும் இப்போது அவனே மாபிள்ளையாய் அமர்ந்திருக்க, முதலில் அவனுக்கு இந்த வேட்டியை கட்டி அமர்ந்திருக்கவே முடியவில்லை..

என்னவோ அவிழ்ந்து விடுமோ என்ற சந்தேகம் அவனுள் இருந்துகொண்டே இருந்தது. எதிரே ஹோமம் வேறு வளர்ந்துகொண்டு இருக்க, அய்யர் சொல்வது முக்கால்வாசி அவனுக்குப் புரியவில்லை.

இரண்டு முறைப்படி திருமணம் என்று சொன்னதுமே வேகமாய் தலையை ஆட்டியது யதுவீர் தான்.. லக்க்ஷனா கூட சொன்னாள்,

“யது யோசிக்காம எதுவும் சொல்லாத.. வேணும்னா கோவில்ல வச்சு மேரேஜ் பண்ணிட்டு ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்.. தென் கிரேன்ட்டா ரிசப்ஷன் வச்சுக்கலாம்..” என்று..

ஆனால் அவனோ “நோ நோ லக்க்ஷி.. நம்ம மேரேஜ்ல எதுவுமே மிஸ் ஆச்சுன்னு இருக்கவே கூடாது.. சோ கண்டிப்பா ரெண்டு சைட் மேறேஜும் நடக்கும்…” என்று யதுவீர் உறுதியாய் சொல்லிட,

‘சரி அதற்குமேல் உன்பாடு..’ என்று லக்க்ஷனா விட்டுவிட்டாள்.

அவளுக்குமே இதெல்லாம் சந்தோசமில்லாமல் இருக்குமா என்ன?? யதுவீருக்காகத் தான் பார்த்தாள்.. அவனே சம்மதம் சொல்லிட அதன்பின் என்ன என்று இருந்துவிட்டாள்.  

ஆனால் யதுவீருக்கு சொல்லும் போது இருந்த சுலபம் இப்போது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை.. இருந்தாலும் எல்லாமே எங்களுக்காக நானும் என் லக்க்ஷியும் வாழப்போகும் வாழ்விற்காக என்று நினைத்தவன்,  ‘லக்க்ஷி கம் சூன்…’ என்று அவளை வெகுவாய் எதிர்பார்த்தான்..

யதுவீர் அருகே நிர்மல் இருக்க,  “நிர்மல் லக்க்ஷி எப்போ வருவா??” என்று மெல்ல அவன் காதை கடிக்க, நிர்மலோ அவனது முகத்தை கிண்டலாய் பார்க்க,

“டேய் உடனே கிண்டலா பார்க்காத.. வேட்டி கட்டி ஐ கான்ட் சிட்.. கண்ணெல்லாம் எரியுது வேற…” என்று பாவமாய் யதுவீர் சொல்ல, நிர்மலுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

“என்னடா சிரிக்கிற.. ப்ளீஸ்..” என்று யதுவீர் கண்களை சுருக்க,

“சரி நான் அம்மாட்ட சொல்றேன்..” என்று நிர்மல் எழப் போக, “ஹே நோ நோ.. இட்ஸ் ஓகே நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்..” என்று வேகமாய் அவனைப் பிடித்து யதுவீர் நிறுத்தி வைத்தான்.

அதற்குள் மீரா இதனைப் பார்த்தவர் “எதுவும் வேணுமா..” என்று கேட்க,

“நத்திங் ஆன்ட்டி…” என்று யதுவீர் சொல்ல, “அக்கா எப்போ வருவான்னு கேட்டாங்கம்மா..” என்றான் நிர்மல்..

மீராவிற்கும் இதெல்லாம் புரியாதா என்ன?? என்னதான் தெரிந்தவர்கள் பழகியவர்கள் என்றாலும் முற்றிலும் வேறான பழக்கவழக்கங்கள் சம்பிரதயங்கள், ஆக கொஞ்ச நேரம் என்றாலும் அது கொஞ்சம் சிரமமாய் தான் இருக்கும் என்று..

“பொண்ண கூப்பிடலாங்களா??” என்று அய்யரிடம் கேட்க, அவரோ இரண்டு நிமிடம் என்று சைகை செய்ய, சரியென்று தலையைசத்து மீரா நின்றிருக்க,   நவநீதன் வந்தவர் “எல்லாம் சரியாதானே இருக்கு.. எதுவும் பிரச்சனையில்லையே..” என்று ஒரு தந்தையாய் கேட்க,  

“ஒண்ணுமில்ல…” என்று மீரா சிரித்த முகமாய் சொல்ல,

“பொண்ண அழைச்சுட்டு வாங்கோ…” என்று அய்யர் சொன்னதும், அவர்கள் பக்கத்து பெண்கள் சிலரும், ஷீலுவும் லக்க்ஷனாவை அழைத்து வந்தனர்..

லக்க்ஷனாவிற்கு மனம் எத்தனை நிறைந்து இருந்தது என்று அவள் மட்டுமே அரிவாள். நடக்காவே நடக்காது இது எனக்கு வேண்டாம் என்று தன்னை தானே கஷ்டப்படுதிக்கொண்டு மனதில் வளர்த்த காதல், இன்று அனைவரின் சம்மதத்தோடு யாரை காதலித்தாலோ அவனுக்கே மனைவியாகும் தருணம்..

நினைத்து பார்க்கவே பெருமிதமாய் இருந்தது.. இதற்கு கண்டிப்பாய் அவள் அவளது பெற்றோர்களுக்குத் தான் நன்றி சொல்லிட வேண்டும்.. எத்தனை பேர் பிள்ளைகளின் காதல் விசயத்தில் சரியானதொரு முடிவை எடுக்கிறார்கள்.. ஆனால் மீராவும், நவநீதனும் எடுத்தனர் என்றால்

அதைவிட பூனமும் அவர் கணவரும்.. யதுவீருக்காக என்றில்லாமல் முற்றிலும் லக்க்ஷனாவிற்காக என்றல்லவா இருந்தார்கள்.. இப்படியான பெற்றோரும், புகுந்த வீடும் கிடைக்க லக்க்ஷனா கொடுத்துத் தான் வைத்திருக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாய் யதுவீர்..

எது வந்தாலும் என் காதல் மாறாது.. நீ என்னவள்.. நான் உன்னவன்.. இதில் மாற்றமில்லை.. என்று ஆரம்பத்தில் என்று திடமாய் திண்ணமாய் இருந்து இதோ இப்போது திருமணமும் செய்துகொள்ள போகிறான்..

மனதில் நிறைந்த காதலோடு அவனருகே வந்தமர, அடுத்த சில நொடிகளிலேயே கெட்டிமேளம் கொட்ட, யதுவீர் லக்க்ஷனாவின் கழுத்தில் மஞ்சள் சரடில் கோர்க்கப்பட்டிருந்த பொன் தாலியை கட்ட, லக்க்ஷனாவும் தலை குனிந்து அதனை ஏற்றுகொண்டாள்.

 

“கன்னிகா தானம் பண்ணுங்கோ…” என்று அய்யர் இருவரின் பெற்றோரையும் அழைக்க, நவநீதனும் மீராவும் லக்க்ஷனாவை தாரைவார்த்து கொடுத்தனர் யதுவீரின் பெற்றோரிடம்..

அடுத்து அடுத்து நடக்கவேண்டிய சம்பிரதாயங்கள் எல்லாம் சொல்லி வைத்தார்போல் அழகாய் நடந்தேறிட, யதுவீர் – லக்க்ஷனா திருமணம் சென்னையில் அழகாய் அருமையாய் நடந்தேறியது..

அன்று மாலையே மணமக்கள் மும்பை கிளம்ப வேண்டியதாய் இருக்க, நாளை மறுநாள் அங்கே மும்பையில் யதுவீர் குடும்ப முறைப்படி அங்கே ஒரு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதுவும் அவர்கள் குடும்பத்தில் திருமணம் வீட்டில் தான் செய்வது வழக்கமென்பதால், யதுவீரின் பூர்வீக வீட்டில் அவர்களின் திருமண ஏற்பாடு நடந்துகொண்டு இருந்தது..

மீராவும் நிர்மலும் மறுநாள் மும்பை கிளம்புவதாய் இருக்க, லக்க்ஷனா இப்போது யதுவீரின் வீட்டாட்களோடு கிளம்ப வேண்டும் என்றதும், அத்தனை நேரம் இல்லாத ஒரு பயமும் கலக்கமும் வந்து அவளை சூழ்ந்துகொள்ள,

“ம்மா…” என்று மீராவை கட்டிக்கொண்டாள்.

“லக்க்ஷி. நாளைக்கு இந்நேரம் நாங்க அங்க இருப்போம்.. உன்கூட ஷீலு நீலம் எல்லாம் இருப்பாங்க.. அப்புறம் என்ன.. இது நீ ஆசைப்பட்ட லைப்..” என்று மீரா தைரியம் சொன்னாலும், ஒரு அன்னையாய் அவர் மனதிலும் ஒரு சின்ன பயம் எட்டிப் பார்த்தது தான்.. 

நவநீதன் “நல்லா பார்த்துக்கோ யது..” என்று கொஞ்சம் கரகரத்த குரலில்  சொல்ல,

“லக்க்ஷி என்னோட லைப் அங்கிள்..” என்று சொல்லி ஆதரவாய் அவரின் கரங்களை பற்றிகொண்டான் யதுவீர்.

பூனம் வந்து மீராவிற்கு தைரியம் சொல்ல, அடுத்து அப்படியே அனைவரும் கிளம்ப, ப்ளைட்டில் தான் அனைவரும் மும்பை கிளம்புவது என்பதால் அன்றைய இரவே அனைவரும் அங்கே சென்றுவிட்டனர்,,

அங்கே சென்றாலோ ஏற்கனவே வீடு நிறைய ஆட்கள் இருக்க, லக்க்ஷனாவிற்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது..

யார் யாரோ வந்து பேசினார்கள். நல்லவேளை அவளுக்கு ஹிந்தி தெரியும். அந்த மட்டும் தப்பித்தாள். இல்லை இன்னும் முழித்து நின்றிருப்பாள். அங்கே சென்று முதல் கொஞ்ச நேரம் யதுவீர் அவளோடு இருந்தான்.

அதன்பின் ஆளே காணவில்லை.. அவர்கள் பக்கத்து சம்பிரதாயம் நாளை இருந்து தான் ஆரம்பிக்கும் என்பதால் இருவருக்கும் தனி தனி அறைதான் கொடுத்திருந்தார்கள்..

லக்க்ஷனாவின் துணைக்கு ஷீலு தாங்கிக்கொள்ள, யதுவீரோ எந்த அறையில் இருக்கிறான் என்றுகூட லக்க்ஷனாவிற்கு தெரியவில்லை.. ஷீலு கொஞ்ச நேரம் அவளோடு பேசியபடி இருந்தவள், உறங்கிட,

இவளுக்கோ அன்று தான் திருமணம் முடிந்திருக்க, புது இடமாய் வேறு இருக்கவும் உறக்கமே வரவில்லை..

போட்டிருந்த கனமான நகைகளை எல்லாம் கழட்டிவிட்டு, அன்று கட்டியிருந்த புது தாலி மட்டும் அவள் கழுத்தில் மின்னிக்கொண்டு இருக்க, எளிமையான இரவு உடையில் தான் லக்க்ஷனா இருந்தாள்..

உறக்கம் வருவேனா என்றிருக்க, கொஞ்சம் நேரம் எழுந்து அமர்ந்தவள், யதுவீருக்கு அழைக்கலாமா என்று எண்ணி அதையும் கைவிட்டாள். அவனோடு யார் இருக்கிறார்களோ இந்நேரம் அழைத்தால் என்ன நினைப்பார்களோ என்றிருக்க, வெளியே நல்ல க்ளைமேட் இருப்பதாய் தோன்ற, மெல்ல எழுந்து பால்கனிக்கு சென்றாள்..

மும்பை… இதுவரைக்கு அவள் அங்கு வந்ததில்லை.. முதல் முறையாய் யதுவீரின் மனைவியை அந்த மாநகரத்தில் கால் வைத்திருக்கிறாள். அந்த எண்ணமே அவளுள் ஒரு ஏகாந்தம் கொடுக்க, க்ரில் மீது கைவைத்து தூரத்தில் தெரியும் சாலையில் பளீரிடும் விளக்குகளை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்க,

“ஐ க்னோ.. யு வில் கம் கியர்…” என்றபடி யதுவீர் அவளை பின்னிருந்தே அணைக்க,

“ஹே..” என்று கத்த போனவள், அவன்தான் என்று உணர்ந்து அப்படியே அவன்மீது பின்னேயே சாய்ந்துகொள்ள,

“லக்க்ஷி பேபி…” என்று மெல்ல அவள் காதருகே யதுவீர் அழைக்க,

“ம்ம்.. நீ தூங்கலையா??” என்றாள்.

“தூக்கம் எப்படி வரும்???”

“ம்ம் எஸ்..” என்றவள் அவன் கரங்களை இன்னும் தன்னோடு இறுக்கிக்கொள்ள,

“சோ பேபி நீ Mrs.யதுவீர்…” என்றபடி அவள் கழுத்தோரம் யதுவீர் மெல்ல முத்தமிட

“இதெல்லாம் இப்போ நாட் அளவுட்… எல்லாமே இன்னொரு கல்யாணம் முடிஞ்சப்புறம்..” என்று அவன் முகத்தை தள்ளியவள்,

“நீ Mr. லக்க்ஷனாவா??” என,

“வொய் நாட்.. கண்டிப்பா.. யார் கேட்டாலும் அப்படியும் சொல்லலாம்…” என்றான் கொஞ்சம் கூட  தயங்காமல்..

“ஹா ஹா நீ சொன்னாலும் சொல்வ..” என்றவள், அவன் புறம் நேரே திரும்பி, அவனது கரத்தினை தன் இடையோடு சேர்த்து அணைத்தவள்

“தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் யது…” என, அவன் கண்களில் மெல்லிய கோவம் எட்டிப் பார்க்க,

“நீ கோவிச்சாலும் இது சொல்வேன்…” என்று பிடிவாதமாய் சொல்ல,

“எனக்கு இதெல்லாம் வேண்டாம்…” என்று பிகு செய்தான் அவனும்..

“வேறென்ன வேணும்…”

“பைவ் இயர்ஸ் நீ சொல்லாம விட்ட லவ்வுக்கும் சேர்த்து வச்சு என்னை லவ் பண்ணு போதும்..” என்று கண்களை சிமிட்டி சொல்ல,

“பண்ணிட்டா போச்சு…” என்று லக்க்ஷனாவும் தலையை ஆட்டி சொல்ல, அந்த இரவு நேரத்தில் அவர்களின் காதல் பேச்சுக்கள் கொஞ்சமல்ல பெரும் சுகமாய் தான் இருந்தது இருவருக்கும்..

எப்போது அவரவர் அறைக்கு சென்றனர் என்று இருவருக்கும் தெரியாது.. வந்து கட்டிலில் விழுந்தாலும் உறக்கமில்லாமல் போக, யதுவீரோ கண்களை மூடியவனுக்கு டெல்லி மேட்ச் முடிந்த தருணம் தான் நினைவில் வந்தது..

டெல்லி மேட்ச் முடிந்ததும் அவரவர் அவரவர் வீடு திரும்ப, யதுவீர் நேராக சென்னை தான் வந்தான்.. ஏற்கனவே அவன் வீட்டில் சொல்லிவிட்டு தான் கிளம்பியிருந்தான். ஆனால் லக்க்ஷனாவிடம் சொல்லவில்லை..

என்னவோ அவள் வேலையை விட்டுவிட்டேன் என்று சொன்னதில் இருந்து அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றிக்கொண்டு இருக்க, இனி எவனோ என்னவோ எழுதட்டும், படம் பிடித்து போட்டாலும் சரி, இது எங்கள் வாழ்க்கை அதனை நாங்கள் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்ற எண்ணம் அவனுக்கு ஒரு தெளிவை கொடுத்திருக்க, நேராக சென்னை வந்துவிட்டான்..

லக்க்ஷனா தான் வீட்டில் இருக்கிறாளே,.. மீராவும் நிர்மலும் அப்போது தான் பள்ளிக்கூடம் சென்றிருக்க, வீட்டை உள்ளே பூட்டிக்கொண்டு உள்ளே மீரா சொல்லிவிட்டு சென்றிருந்த வேலையை செய்தபடி இருக்க, வீட்டின் காலிங் பெல் அடிக்கவும் கதவு பக்கத்து ஜென்னல் வழியே எட்டிப் பார்த்தவள்,

யாரென்று சரியாய் தெரியாமல் கதவை திறக்க, எதிரே நின்றவனை பார்த்து கண்கள் தானாக விரிய, “யது….!!!!!!” என்று சொன்னவள், அப்படியே ஒரு குதி குதித்து அவனை இறுக கட்டிக்கொள்ள,

“லக்க்ஷி…” என்றவனும் அவளை அணைத்துக்கொள்ள,

“வாட் எ சர்ப்ரைஸ் யது.. சொல்லவேயில்ல…” என்றவளுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை அவன்தானா என்று..

உள்ளே வந்தவன், ரிலாக்ஸாக சோபாவில் அமர, “சொல்லவேயில்ல…” என்று மறுபடியும் அவனிடம் கேட்க,

“உன்னை பார்க்கனும் போல இருந்தது லக்க்ஷி சோ சடன்னா டிசைட் பண்ணேன்..” என, வேகமாய் வந்து அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

அவனும் அவளை லேசாய் அனைத்தது போல் அமர்ந்துகொள்ள, “இப்பவும் நம்ப முடியலை யது…” என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க,

“ஹ்ம்ம்..” என்றவன், “லக்க்ஷி நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்..” என, அவனை புரியாமல் பார்த்தாள் லக்க்ஷனா..

“எஸ் பேபி.. நான்தான் சொன்னேன் கொஞ்சம் டைம் வேணும்னு.. பட்.. இப்போ அந்த டைம் நாட் நீட்னு தோணுது.. நீ என்ன சொல்ற.. கல்யாணம் பண்ணிக்கலாமா??” என,

அவள் என்ன சொல்வாள்.. வேண்டாம் என்பாளா..?? அப்படித்தான் சொல்லிடவும் அவளால் முடியுமா என்ன??

“ம்ம் பண்ணிக்கலாம்…” என்று சம்மதமாய் தலையை ஆட்ட, வழக்கமாய் அவனிடம் நெற்றி முத்தம் ஒன்றை கொடுத்தவன்,

“ஓகே பேபி நான் கிளம்புறேன்.. ஈவினிங் ஆன்ட்டி வந்ததும் சொல்லு ஐ வில் கம்…” என்று கிளம்ப,

“ஹே என்ன இரு.. சாப்பிட்டு போ…” என்று லக்க்ஷனா அவனைத் தடுக்க,

“நோ நோ… இட்ஸ் நாட் எ ரைட் டைம்.. ரூம் புக் பண்ணிட்டு தான் வந்தேன்.. ஈவினிங் வந்து சாப்பிடுறேன்…” என்றவன் அவள் சொல்ல சொல்ல கிளம்பியும் விட்டான்..

இதென்னடா மேஜிக் போல வந்தான், பேசினான் கிளம்பினான் என்று அவள் கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருக்க, அவளுக்கு அவனது கண்யம் எண்ணி பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை..

“யது…..” என்று சொல்லி அவனை எண்ணி ரசித்தவள், பின் மீராவிற்கு அவரின் இடைவேளை நேரம் பார்த்து அழைத்து விசயத்தை சொல்ல,

“ஓகே நான் பேசிக்கிறேன்…” என்றவர் யதுவீருக்கு அழைக்க, அவனும் மாலை வருவதாய் சொல்லிவிட்டான்..

மாலை நேரம் யார் எதிர்பார்த்தார்களோ இல்லையோ நிர்மல் வெகுவாய் எதிர்பார்த்தான்.. பின்னே இத்தனை நாளாய் அவனுக்கு மண்டை காய்ந்தது. எப்போதடா யதுவீர் வருவான் என்று எதிர்பார்த்திருக்க, ஒருவழியாய் அவனும் வந்துவிட்டான்.

வழக்கமான  நல விசாரிப்புகள், பேச்சுக்கள் என்று கொஞ்ச நேரம் கழிய, லக்க்ஷனா மும்புரமாய் யதுவீருக்கு சமைத்துக்கொண்டு இருந்தாள்.

மீராவும், யதுவீரும் திருமண விஷயம் பேசிக்கொண்டு இருக்க, நவநீதனும் அழைத்து அவனோடு பேச, மும்பைக்கு அவனது பெரியப்பா மகன் திருமணத்திற்கு வருகையில் இரு வீட்டாரும் பேசி தேதி குறிப்பதாய் முடிவாகவும், நிர்மலோ கேட்பதா வேண்டாமா என்று பார்த்துகொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரம் யதுவீர் பேசிக்கொண்டு இருந்தவன் “ஆன்ட்டி நிர்மல் கூட கொஞ்சம் வெளிய போயிட்டு வரட்டுமா???” என,

“ஓ.. போயிட்டு வாங்க..” என்று மீராவும் சொல்ல, நிர்மலோ கொஞ்சம் யோசனையாகவே தான் கிளம்பினான்..

ஆனால் ஒரு ஒருமணி நேரம் கழித்து வீட்டிற்கு இருவரும் திரும்பி வர நிர்மல் முகத்தில் அப்படியொரு சந்தோசம் பொங்கி வழிந்தது.. அவன் கையில் ஒரு ஹாக்கி பேட் இருக்க,

“என்னடா இது…” என்று மீரா கேட்க, லக்க்ஷனாவும் என்னதிது என்று இருவரையும் பார்க்க,

“ம்மா இந்தியன் டீம் ஹாக்கி கேப்டைன பார்த்தேன் ம்மா… செம ஹேப்பி.. எதிர்பார்க்கவேயில்லை.. அவர் ஆட்டோகிராப் போட்ட பேட் இது…” என்று தன் கரங்களில் இருந்த ஹாக்கி பேட்டை நிர்மல் காட்ட,

“ஹே சூப்பர்…” என்று லக்க்ஷனா சொல்லி, யதுவீரைப் பார்க்க, அவனோ நிர்மலின் சந்தோசத்தை பார்த்து புன்னகைத்து நின்றிருந்தான்.

“நிர்மலுக்கு ஹாக்கி பிடிக்கும்னு தெரியும் ஆன்ட்டி.. ஹாக்கி டீம் கேப்டன் எனக்கு பிரன்ட்… திஸ் மன்த் இங்க இருப்பார்னு தெரியும்.. சோ நிர்மலுக்கு இன்ட்ரோ கொடுதேன்…” என்று சாதாரணமாய் சொல்ல, நிர்மலோ இன்னும் அந்த சந்தோஷத்தில் இருந்து வெளிவரவில்லை.

அடுத்து கொஞ்ச நேரம் யதுவீருக்கும், லக்க்ஷனாவிற்கு தனிமை கொடுத்து மீராவும் நிர்மலும் தனியே செல்ல,

“யது.. யது.. ஸ்வீட் சர்ப்ரைஸ்… நிர்மல் சரி ஹேப்பில இருப்பான்…” என்று லக்க்ஷனா சந்தோஷத்தில் குதிக்க,

“அப்போ நீ பேபி??” என்று கேட்டவனுக்கு, அவளிட்ட முத்தங்களே இன்னமும் இப்போதும் அவனுக்கு இனித்தது..

சொன்னது போலவே நவநீதன் அடுத்த மாதம் இந்தியா வந்துவிட, யதுவீரின் வீட்டினரும் வந்து அங்கே அவனின் பெரியப்பா மகன் திருமணத்திற்கு அழைத்துவிட்டு செல்ல, மீராவும் நவநீதனும் தான் சென்றனர்..

லக்க்ஷனா நானும் வரட்டுமா என்றெல்லாம் கேட்கவில்லை. அவளுக்குத் தெரியும் மீரா சம்மதிக்க மாட்டார் என்று.. யதுவீரும் வேண்டாம் என்ருவிட்டதால் அவள் பெரிதாய் ஒன்றும் வருந்தவில்லை..  

திருமண தேதி குறித்தும், யதுவீர் வேகமாய் அவளுக்கு அழைத்து சொல்லிட, லக்க்ஷனா “யது லவ் யூ லவ் யூ சோ மச்…” என்று சொன்னது இப்போதும் அவன் மனதில் எதிரொலித்தது.     

“லக்க்ஷி பேபி…” என்று சொல்லிக்கொண்டவன் கண்களை திறக்கையில் பொழுது புலர்ந்திருக்க, அப்போது தான் நினைவில் வந்தது திருமணமே முடிந்து தாங்கள் மும்பை வந்திருக்கிறோம் என்று.

“யது…..” என்று பூனம் அழைக்க வந்திட, அடுத்து அடுத்து அவர்களின் வழக்கப்படி சம்பிரதாயங்கள் தொடங்கின.

முதல் நாள் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நலங்கு ஏற்பாடு ஆகியிருக்க, அதுவும் சிறப்பாகவே நடக்க, லக்க்ஷனா வீட்டினரும் அங்கே வந்துவிட்டனர்.. அதன் பின் என்ன ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

லக்க்ஷனாவிற்கு அங்கே நடப்பது எல்லாம் அவளுக்கும் புதிதாய் தான் இருந்தது. ஷீலுவின் வீட்டில் அவளது திருமணத்தில் இதெல்லாம் பார்த்திருக்கிறாள் தான் இருந்தாலும், அந்த உடையில் அந்த அலங்காரத்தில் தன்னை பொருத்தி கண்ணாடி பார்க்கையில் அவளுக்கு அவளின் தோற்றமே வித்தியாசமாய் தோன்ற,

அவள் கழுத்தில் மஞ்சள் தாலியோடு கருகமணியும் குடியேறியிருக்க, தன்னையே இப்படி அப்படி திருப்பி கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்..

அவர்களுக்கான அறையில் தான் லக்க்ஷனா இருந்தாள்.. முதலில் நீ போ என்று அனுப்பியிருந்தார்கள்.. யதுவீர் எப்போது வருவான் என்று கொஞ்சம் ஆவலாகவும் ஆசையாகவும் காத்திருந்தவள், தான் தன் தோற்றத்தை தானே கண்ணாடியில் கண்டுகொண்டு இருந்தது..  

அந்த நேரத்தில் சரியாய்  “ஹா ஹா…” என்ற சிரிப்பு சத்தம் கேட்க, யாரடா என்று திரும்பிப் பார்க்க, யதுவீர் தான்.. தலையில் சூட்டியிருந்த தலைப்பாகையை கழட்டிக்கொண்டு இருந்தான். 

“என்ன என்ன சிரிப்பு???” என்றபடி லக்க்ஷனா அவனருகே வர,

“நீ கண்ணாடி பார்த்தல்ல பேபி தட்ஸ் வொய்..” என்றவனை முறைத்தாள்.

“அதுக்கேன் சிரிச்ச.. சிரிக்கிற மாதிரி ஏதுமில்லையே.. மேரேஜ் அப்போவும் அப்படித்தான் சிரிச்ச..” என்று லக்க்ஷனா சொல்ல,

“ஓ.. கண்டுபிடிச்சிட்டியா..” என்றவன் அவளருகே வந்து, அவளை ஒருமுறை முழுதாய் பார்வையிட்டு,

“இந்த ட்ரெஸ்ல யு லுக் சோ டிப்ரன்ட் அண்ட் ஃபன்னி…” என,

“என்ன என்ன?? என்ன சொன்ன??” என்று லக்க்ஷனா கண்களை உருட்டி மிரட்டி கேட்க, 

“நோ நோ லக்க்ஷி… இந்த ட்ரெஸ் போட்டு நீ நடந்து வர்றபோ.. கொஞ்சம் டக் வாக் போல இருந்ததா அதான்…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை..

“என்ன சொன்ன டக்கா நானா?? யது…” என்று பல்லைக் கடித்தவள், அவன் கழட்டி வைத்திருந்த தலைப்பாகையை கொண்டு அவனை அடிக்கத் துவங்க,

“ஹே பேபி பேபி  நோ நோ..” என்றவன், அவளை தடுக்கத் தொடங்க, அவர்களின் காதல் கபடி அங்கே தொடங்கியது..      

         

                                     

Advertisement