Advertisement

மனம் – 19

“யது நீ இவ்வளோ எமோசன் ஆகக்கூடாது… இதெல்லாம் நமக்கு சகஜம்..” என்று தன்னால் இயன்ற அளவு யதுவீரை சமாதானம் செய்ய முயன்றார் அவனது கோச்..

“நோ ஜி… இதுல பொறுமையா போறதுக்கு எதுவுமில்ல.. இதெல்லாம் என்னோட பெர்சனல்.. ஈசியா அதப்பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்ல..” என்று யதுவீர் முறுக்கிக்கொண்டு நிற்க,

“யது.. உனக்கு இதெல்லாம் தெரியாதா என்ன.. இதைவிட பெரிய விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கு ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்ல.. எல்லாமே யூ க்னோ.. பட் இப்போ நீ இப்படி ரியாக்ட் பண்றதுதான் ஆச்சர்யமா இருக்கு…” என,

“இப்பவும் என்னை மட்டும் சொல்லிருந்தா கண்டிப்பா நான் ரியாக்ட் பண்ணிருக்க மாட்டேன் ஜி.. பட் லக்க்ஷி நேம் இதுல வந்திருக்கு.. ஷி இஸ் மை கேர்ள்.. அவளுக்கு இதெல்லாம் புதுசு.. அப்படியிருக்கப்போ…” என்றவனுக்கு சுத்தமாய் அவனது உணர்வுகளை கட்டுக்குள் வைக்கவே முடியவில்லை.

இதை லக்க்ஷனா எப்படி எடுத்துகொள்வாள், அவளது வீட்டில் என்ன நினைப்பர், அவளது சுற்றுவட்டாரத்தில் என்ன மாதிரியான பேச்சுக்கள் வரும். அவன் ஒரு இடத்தில் இருக்க, அவள் ஒரு இடத்தில் இருக்க, இதெல்லாம் எப்படி அவள் சமாளிப்பாள் என்று நினைக்க நினைக்க இன்னும் அவன் ஆத்திரம் கூடியது தான் நிஜம்..

“யதுவீர்.. உன்னோட பீலிங்க்ஸ் புரியுது.. இந்த மாதிரி நீயூஸ் வர்றது எவ்வளோ டென்சன் நமக்கு கொடுக்கும்னு போடுறவங்களுக்கு தெரியாது.. பட் இதை நம்ம பாசிடீவ்வா பார்க்கனும்…”

“ஹவ்??? எப்படி ஜி இதை பாசிடீவ்வா பார்க்க முடியும்.. நானும் லக்க்ஷியும் அவுட்டிங் போனா அது எங்களோட பெர்சனல்.. அதை எங்களுக்கே தெரியாம போட்டோ எடுத்தது மட்டுமில்லாம, இப்படி ஒரு நீயுஸ் போட்டிருக்காங்க.. அதை என்ன எதுன்னு யோசிக்காம இத்தனை மீடியா பீப்பில்ஸ் ஷேர் பண்ணிருக்காங்க.. அதைபத்தி டிஸ்கஸ் பண்ணிருக்காங்க.. இதை எப்படி நான் பாசிட்டீவ்வா எடுக்க முடியும்…” என்று யதுவீர் சொல்ல,

அவன் சொல்லும் ஒவ்வொரும் சொல்லிலும் நியாயம் இருந்தாலும், இப்படி இரண்டு மேட்ச்களில் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்துவிட்டு இப்போது ஏதாவது செய்தி வெளியிட்டாலோ, இல்லை பிரஸ் மீட் வைத்தாலோ அது தேவையில்லாத இன்னும் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று அவனின் குருவிற்கு தெரியாதா என்ன..

அதனைப் பொருட்டே அவர் யதுவீரை சமாதானம் செய்ய முயல, அவனோ லக்க்ஷனா பெயரை இதில் இழுக்கவும் எவ்வித சமாதானத்திற்கும் தயாராய் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது.

ஆனாலும் அவரது கடமையை அவர் சரியாய் செய்யவேண்டுமே..

“யது.. ரிலாக்ஸ்….” என்று சொல்லி சொல்லி அவனை அமர வைத்தவர்,

“லக்க்ஷனா கிட்ட பேசினயா?? அவளோட மைன்ட் செட் எப்படின்னு பாரு.. பிகாஸ் நீ ரியாக்ட் பண்ற ஒவ்வொரு விசயமும் இப்போ லக்க்ஷனாவையும் பாதிக்கும்..” என்று பொறுமையாகவே சொல்ல,

“ஓ… காட்…” என்று பல்லைக் கடித்தவன்,

“இனிமேதான் பேசணும்.. பேசிட்டு சொல்றேன் ஜி…” என்றான் பார்வையை எங்கோ பதித்து..

யதுவீர் இன்டர்நேசனல் ப்ளேயர் ஆவதற்கு முன்பிருந்தே யதுவீரை அவருக்குத் தெரியுமென்பதால், அவனது இந்த மாதிரியான ரியாக்சன்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி.. அவனைப் பார்த்து மெல்ல சிரித்துக்கொண்டவர்,

“ஓகே பர்ஸ்ட் லக்க்ஷனாகிட்ட பேசிட்டு தென் டிசைட் பண்ணு… பட் எதுவா இருந்தாலும் நெக்ஸ்ட் மேட்ச் கண்டிப்பா நம்ம ஒரு சக்சஸ் கொடுக்கிறோம்.. அதுக்கப்புறம் தான் எதுவும்…” என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டு செல்ல, யதுவீர் அமைதியாகவே இருந்தான்..

என்னவோ லக்க்ஷனாவிடம் அவனுக்குப் பேச அத்தனை தயக்கமாய் இருந்தது.. அவன் தான் ஒவ்வொன்றையும் ப்ளான் செய்து அவளை அழைத்துச் சென்றான்.. ஆனால் இதெல்லாம் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தானா என்ன?? இல்லையே..

எதற்குமே முதல் முறை என்று ஒன்று உள்ளது அல்லவா.. ஏற்கனவே இருவரின் பெயரும் இணைத்து முதலில் ஒரு செய்தி வெளிவந்து அதன் தாக்கத்தில் இருந்து வெளிவரவே அத்தனை பாடானது..

இப்போது இப்படியென்றால்?? யார் தான் பொறுப்பர்..

அதிலும் லக்க்ஷனா வீட்டில் என்ன மாதிரியான மனநிலை இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இதெல்லாம் போக முதலில் யாருக்கு அழைப்பது லக்க்ஷனாவிற்கா இல்லை அவளைப் பெற்றவர்களுக்கா என்று தெரியாமல் குழம்பித் தவித்திருக்க, சரியாய் அவனது அப்பா அழைத்துவிட்டார் அந்நேரம்..

“ஹா பப்பா…” என்று யதுவீர் நெற்றியைத் தடவிக்கொண்டே பேசத் தொடங்க,

“டோன்ட் வொர்ரி யது… நாங்க எல்லாம் உன்கூட இருக்கோம்.. நாங்க அங்க வரணுமா சொல்லு…” என,

“பப்பா.. நோ நோ.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்.. பட் லக்க்ஷி வீட்ல…” என்று தயங்கி இழுத்தான் யதுவீர்..

“ஹ்ம்ம் நாங்க பேசுறோம்.. நீ கவலைப்படாத யது.. நீயும் பேசிடு.. லேட் பண்ணாத..” என்று சொல்ல, அடுத்து கொஞ்ச நேரம் அப்படியே பேச்சு நீள, பூனமும் மகனோடு பேச, கொஞ்சம் கொஞ்சமாய் யதுவீர் இயல்பு நிலைக்கு திரும்பினான்..

“ஹ்ம்ம் ஓகே ம்மா…” என்று பேசிவிட்டு வைத்தவனுக்கு இப்போது மனதில் ஒரு தெளிவு வந்திருந்தது..

அடுத்து லக்க்ஷனாவிற்கு முதலில் அழைக்காமல் மீராவிற்கு அழைத்தான்.. ஒருவேளை நவநீதன் இங்கே இருந்திருந்தால் அவரிடம் பேசியிருப்பானோ என்னவோ இப்போது மீராவிடம் தானே பேச முடியும்..

“ஹலோ அன்ட்டி…” என்று ஆரம்பிதவனின் குரலில் அத்தனை தயக்கம்..

அது மீராவிற்கு புரியாமல் இருக்குமா என்ன??

“ஹா யது.. ஹவ் ஆர் யூ???” என்று கொஞ்சம் இயல்பாகவே பேச ஆரம்பித்தார்..

அவர்க்கும் நடந்த இந்த விஷயங்கள் அத்தனை பிடிக்கவில்லை தான்.. ஆனால் யதுவீர் லக்க்ஷனா காதல் விஷயத்தில் தங்களின் சம்மதம் தெரிவித்த போதே இது போன்ற விசயங்களுக்கு எல்லாம் தங்களை தயார் படுத்தி இருக்கவேண்டுமோ என்று இருந்தது அவருக்கு..

உண்மையும் அது தானே.. நாம் எப்படி இருந்தாலும் பேசுபவர்கள் பேசுவார்கள் ஆக அதற்கெல்லாம் நம்மை நாம் தானே தயார் செய்துகொள்ள வேண்டும்.

“யா பைன் ஆன்ட்டி…” என்று இழுத்தவன், “அது…” என்று அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் பேச்சை நிறுத்த,

“ஹ்ம்ம்.. யது… என்னால புரிஞ்சுக்க முடியுது.. இதுக்கெல்லாம் பார்ஸ்ட்டே எங்களை ரெடி பண்ணி வச்சிருக்கணும்.. பட் எல்லாமே எதிர்பார்த்து செய்ய முடியுமா என்ன?? சோ ஓகே.. இப்படியான ப்ராப்ளம்ஸ் பேஸ் பண்றது எல்லாம் இனி பழகிக்கலாம்.. நீ வொர்ரி பண்ணாத..” என,

“ஆன்ட்டி ரியலி ஐம் சாரி..” என்றான் உணர்ந்து..

“ஓ… இதுல நீ என்ன பண்ண யது??? லீவ் இட்.. இதுக்காக நீ பெருசா வொர்ரி பண்ணிக்காத.. விடு பாத்துக்கலாம்..” என்று அவனது நிலை புரிந்தே மீரா சொல்ல, அதுவே அவனுக்கு இன்னும் கஷ்டமாய் போனது..

ஒவ்வொரு முறையும் என்னவோ ஒன்று லக்க்ஷனா குடும்பத்தில் இருப்பவரிடம் மன்னிப்பு வேண்டியே நிற்பது போல் தோன்ற, அதெல்லாம் அவனுக்கு இன்னும் சங்கடத்தை கொடுத்தது..

“இல்ல ஆன்ட்டி.. அங்கிள் எதுவும்…” என்று சொல்லும் முன்னே,

“அவர்கிட்ட நான் பேசிட்டேன் யது… நாங்க எல்லாருமே ஓரளவு இதெல்லாம் அக்சப்ட் பண்ணிக்கிற மைன்ட் செட்டுக்கு வந்துட்டோம்..” என்று மீரா சொல்ல,

“ம்ம் தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்றவன் “லக்க்ஷி???” என்று அவளை கேட்க,

“அவ ஆபிஸ் போயிருக்கா யது.. இன்னிக்கு எங்களுக்குத் தான் லீவ்..” என்று மீரா சொல்ல,

“ஓகே ஆன்ட்டி ஈவ்னிங்  லக்க்ஷிக்கிட்ட பேசிக்கிறேன்..” என்று அழைப்பை முடிக்க, அப்போது தான் கொஞ்சமாவது அவனுக்கு நிம்மதியாய் இருந்தது..

ஆனாலும் இதை லக்க்ஷனா எப்படி எடுத்துகொண்டால் என்று தெரியும் வரைக்கும் மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும் அவனுக்கு.. ஆனால் இப்போது அவள் வேலையில் இருக்க, இப்போது அழைத்து பேசினாலும் அது சரியென படாது என்று பட, அடுத்து கொஞ்சம் தன் வேலையைப் பார்க்கக் கிளம்பினான்..

ஆனாலும் அடி மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது..

அங்கே லக்க்ஷனாவோ இயல்பாய் இருப்பது போலவே அலுவலகத்தில் காட்டிக்கொண்டாள்.. நடந்த விஷயங்கள் அவள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, ஆனால் மீராவும் பூனமும் அன்று சொன்ன தைரியமும் ஆறுதலும் அவளுக்கு ஒரு பலம் கொடுத்திருந்தது.

“ஓகே…இதெல்லாம் கடந்து போயிடனும்..” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் வெளியில் இதெல்லாம் பெரிதல்ல என்பதுபோல் காட்டிக்கொண்டாள்

ஆனால் அலுவலகத்தில் அவள் உள்ளே நுழைந்ததுமே, “ஹே லக்க்ஷி இதென்ன இப்படி வந்திருக்கு…” என்று ஒருசிலர் வந்து கேட்க,

“ம்ம் ஆமா.. டெல்லி போனப்போ நானும் யதுவும் எடுத்த போட்டோஸ் தானே…” என்று கூலாக கேட்டாள்…

ரூப்பா கூட கொஞ்சம் அவளை அதிர்ந்து தான் பார்த்தாள்.

“லக்க்ஷி.. அந்த நீயுஸ் எல்லாம்…” என்று இழுக்க,

“அதுக்கென்ன செய்ய முடியும் ரூப்ஸ்… யது ஸ்போர்ட்ஸ் பெர்சன்.. அப்போ இந்த மாதிரி காசிப்ஸ் எல்லாம் வரும்தானே.. நல்லவேளை என் போட்டோஸ் போட்டாங்க.. இதேது மிஸ்டேக்கனா வேற பொண்ணு போட்டோ போட்டிருந்தா.. கொஞ்சம் திங் பண்ணேன்…” என்று லக்க்ஷனா எதுவோ நகைச்சுவை சொல்வது போல் சொல்லி சிரிக்க,

‘இவ என்ன இப்படி ரியாக்ட் பண்றா??’ என்று மற்றவர்கள் தான் குழம்பிப்போய் பார்த்தனர்..

“லக்க்ஷி.. நிஜமாவே நீதான் பேசினியா???” என்று டேனியல் கேட்க,

“ஏன் டேனி… நான் அழுது.. டென்சன் ஆகி… இப்படி ஏதாவது நடக்கனும்னு நினைச்சியா???” என்றபடி லக்க்ஷனா உள்ளே நடக்க,

“பரவாயில்ல லக்க்ஷி.. நான் கூட என்னவோ நினைச்சேன்.. பட் நீ ரொம்ப தெளிவாதான் இருக்க..” என்று தீப்தி வந்து சொல்ல,

“தேங்க்ஸ் தீப்தி.. இது எங்க லைப்.. சோ நாங்கதானே தெளிவா இருக்கணும்.. ஒவ்வொரு விசயமும் இப்படி இப்படின்னு எல்லாருக்கும் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாதில்லையா..??” என்று லக்க்ஷனா கேட்டவிதத்தில் தீப்தி முகம் லேசாய் கருத்தாலும்

“யா தட்ஸ் குட்…” என்று தோள்களை குலுக்கிவிட்டு சென்றுவிட,

“லக்க்ஷி நிஜமாவே நீதானா இது???” என்று ஆச்சர்யமாய் கேட்டாள் ரூப்பா..

“யா இட்ஸ் மீ.. ஸ்போர்ட்ஸ்ல வெற்றி தோல்வி சகஜம்.. அது வெளிய இருந்து பாக்கிறவங்களுக்கு அதோட கஷ்டம் தெரியாது.. இந்த நீயுஸ் எல்லாம் எங்க லவ்க்கு வலு சேர்கிறதா நினைச்சுக்க வேண்டியது தான்…” என்று லக்க்ஷனா சொல்லிட,

“ஹ்ம்ம் நீ பொழச்சுப்ப டி..” என்று சொல்லிவிட்டு சென்றாள் ரூப்பா.

அனைவரும் சென்றபின் லக்க்ஷனா தன்னிருக்கையில் அமர்ந்திருக்க, அவளுக்கோ மனம் யதுவீரை நினைத்து வெகுவாய் கலங்கியது.. நிச்சயம் தனக்காக தன்னை எண்ணி யதுவீர் வருந்துவான் என்று நினைத்தாள்.

இந்த நேரத்தில் அவனிடம் பேசவும் முடியாது. அங்கு எந்த நிலையில் இருக்கிறானோ அது தெரியாமல் அழைத்திட முடியாது என்ன செய்யலாம் என்று யோசித்து அமர்ந்திருக்கையில்,

மீராவிடம் இருந்து அழைப்பு வந்திட “ம்மா…” என்று எடுத்து பேசினாள்.

மீரா யதுவீர் பேசியதை சொல்ல, லக்க்ஷனாவிற்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

“ஹ்ம்ம் ஓகே ம்மா.. இங்க எந்த ப்ராப்ளமும் இல்லை.. ஐ கேன் மேனேஜ்.. நான் ஈவ்னிங் வீட்டுக்கு வந்திட்டு தென் யதுக்கிட்ட பேசிக்கிறேன்…” என்றிட, மீராவும் நிம்மதியாய் அழைப்பைத் துண்டித்தார்..

யதுவீர் லக்க்ஷனா இருவரின் அன்றைய பொழுதுகள் அவரவர் வேலையில் செல்ல, இருவரின் மனதுமே ஒருவரோடு ஒருவர் பேசும் நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்க,

லக்க்ஷனா டேபிள் மீதிருந்த தொலைபேசி ஒலிக்க, அவளுக்குத் தெரியும் இந்த இணைப்பிற்கு அழைப்பது என்றாள் அவளது ஹெட் தான் அழைப்பார் என்று, ஆக எடுத்து

“சார் …” என்றவள்

“யா கம்மிங்…” என்று சொல்லி பேசி முடித்துவிட்டு,

‘இவர் என்ன கேட்க போறாரோ…’ என்று நினைத்துக்கொண்டே அவளின் ஹெட் அறைக்கு செல்ல, அங்கோ அவளின் ஹேட், மேனேஜர் மற்றும் இன்னும் சிலரும் இருந்தனர்..

“ஷி இஸ் லக்க்ஷனா..” என்று அவளின் ஹெட் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்கு அவளை அறிமுகம் செய்ய,

“யா வீ க்னோ… நெட்ல, பேப்பர்ல எல்லாம் பார்த்தோமோ..” என்று வந்திருந்தவர்களில் ஒருவர் சொல்லி,

“ஹலோ மேம்…” என,

உள்ளுக்குள்ளே அவரை பெரும் அர்ச்சனை செய்தாலும் “ஹலோ..” என்று புன்னகைத்தால்..

“லக்க்ஷனா இப்படி உட்காருங்க..” என்று மேனேஜர் ஒரு இருக்கையை காட்ட,

‘அட என்னடா இது புதுசா மரியாதை எல்லாம்..’ என்று எண்ணிக்கொண்டே கொஞ்சம் தயங்கியே தான் லக்க்ஷனா அமர்ந்தாள்..

“லக்க்ஷனா பார்ஸ்ட் உனக்கு ஒரு பெரியா தேங்க்ஸ் சொல்லணும்.. இன்னிக்கு உங்கனால நம்ம கம்பனிக்கு ஒரு பெரிய பிராஜெக்ட் கிடைச்சிருக்கு…” என்று அவளின் ஹெட் ஆரம்பிக்க,

‘என்னாலயா???’ என்று சந்தேகமாய் பார்த்தாள்..

“என்ன லக்க்ஷனா புரியலையா…??” என்ற மேனேஜர், “இவங்க பார்மா பீல்ட்ல தி டாப் மோஸ்ட் ப்ளேஸ்ல இருக்கவங்க…” என்று சொல்லி வந்திருந்தவர்களை காட்ட,

அவர்களை ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் மேனேஜரை காண,

“அவங்களே நம்ம கம்பனிக்கு தேடி வந்து ஒரு ப்ராஜக்ட் ஆஃபர் பண்ணிருக்காங்க..” என்றவருக்கு,

“ஓ.. தட்ஸ் குட்…” என்ற பதில் மட்டுமே கொடுத்தாள்..

“யா குட் ஒன்லி.. பட் அதுக்காக ஒரு சின்ன ப்ரபோசல் அவங்க ப்ளேஸ் பண்றாங்க…” என்று அவளின் ஹெட் சொன்னதும்,   

“என்ன ப்ரபோசல்???” என்று லக்க்ஷனா கேட்க,

“அது ஒரு சின்ன விசயம்தான்.. ரீசன்ட்டா இப்போ ஒரு லெக் பையின் ஸ்பெரே ரிலீஸ் பண்ண போறோம்.. அதுக்கான ஆட்ல Mr. யதுவீர் ஆக்ட் பண்ணா நல்லாருக்கும்… ஏன்னா இப்போ ஸ்போர்ட்ஸ் பீல்ட்ல ஹாட் ஆப் தி டாப்பிக் நீங்கதானே…” என்று வந்திருந்தவர்களில் ஒருவரே பேச,

லக்க்ஷனாவிற்கோ உள்ளே அப்படியொரு கோவம் கொழுந்துவிட்டு எரிந்தது. எதில் எதில் தான் பிசினஸ் பேசுவது என்று ஒரு வரைமுறை இல்லாமல் இப்படி வந்து பேசுபவர்களிடம் என்ன பதில் சொல்ல என்று சடுதியில் அவளால் சிந்திக்க முடியவில்லை,,

அமைதியாகவே இருந்தாள்.

“லக்க்ஷனா.. என்ன அமைதியா இருக்கீங்க.. இந்த ப்ராஜெக்ட் பண்ணா நம்ம கம்பனிக்கு எவ்வளோ பெரிய ப்ராபிட் வரும் தெரியுமா??” என்று அவள் மேனேஜர் ஆரம்பிக்கும் போதே,

“நான் யதுவீருக்கு பிஏவோ இல்லை மேனேஜரோ இல்லை சார்…” என்றாள் அழுத்தம் திருத்தமாய்..

லக்க்ஷனாவிடம் இருந்து இப்படியொரு பதிலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல, அனைவரின் முகத்திலும் ஒரு திடுக்கிடல் தெரிய,

“லக்க்ஷனா..” என்று அவளின் ஹெட் எதுவோ பேச வர, பேசாதே என்பதுபோல் பார்த்தவள்,

“நீங்க யதுவீர் கிட்ட இதைபத்தி பேசினீங்களா??” என்று நேரடியாக வந்தவர்களைப் பார்த்து கேட்க,

“யா மேம்.. மெயில் அனுப்பிருக்கோம்.. அவர் மேனேஜர்கிட்டவும் பேசிருக்கோம்.. பட் நீங்க இருக்கப்போ நாங்க ஈசியா வேலை முடிக்கத்தானே பாப்போம்…” என்று என்னவோ இந்த விஷயம் முடிந்தது போல் பேச, சடுதியில் லக்க்ஷனாவின் பார்வை மாறிவிட்டது..  

“ஏன் அப்படி???”

“என்ன மேம்… யதுவீர் பேமஸ் கபடி ப்ளேயர்.. நீங்க அவரோட பியான்ஷி.. அப்படியிருக்கப்போ இந்தமாதிரி பிசினஸ் மீட்டேல்லாம் நீங்க பழகிக்கணும்… இதெல்லாம் ஒரு வாய்ப்பு..” என,

“இந்த வாய்ப்பு நான் வேணாம் சொன்னா???” என்று அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டாள் லக்க்ஷனா..

சுற்றியிருக்கும் ஆண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, அந்த நேரத்தில் லக்க்ஷனா மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள். யதுவீர் இந்த விளம்பரத்தில் நடிப்பது நடிக்காமல் போவது அவனது விருப்பம்.

ஆனால் எதுவுமே அவளை முன்னிட்டு என்று இருக்க கூடாது.. என்று அவள் திண்ணமாய் நினைத்திட, அனைவரையும் தீர்க்கமாய் பார்த்தே அமர்ந்திருந்தாள்.

லக்க்ஷனாவின் பார்வையும் உடல் மொழியும் எதிரே இருப்பவர்களுக்கு என்ன உணர்த்தியதோ,

“நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு கண்டிப்பா நல்ல முடிவு சொல்றோம்…” என்று அவளின் மேனேஜர் வந்திருந்தவர்களை நோக்கி சொல்ல,

“நாங்களும் நல்ல முடிவைத்தான் எதிர்பார்க்கிறோம்…” என்று சொல்லி அவர்கள் கிளம்ப,

அடுத்த நொடி அந்த மேனேஜரும், ஹெட்டும் “என்ன லக்க்ஷனா இதெல்லாம்…” என்பதுபோல் பார்த்தனர்..

அவளும் அவர்களை அப்படியே பார்க்க, “என்ன லக்க்ஷனா… கொஞ்சம் பேமஸ் ஆகிட்டா எல்லாம் மறந்திடுமா?? நீங்க இங்க சாதாரண எம்ப்ளாயி தான்.. அதை மறக்கக்கூடாது….” என்று அவள் ஹெட் சொல்ல,

“சேம் திங்… நான் இங்க சாதாரண எம்ப்ளாயி தான்.. பின்ன எதுக்கு என்னை பிஸ்னஸ் டீலிங் பேச கூப்பிட்டீங்க…” என்றாள் அசால்ட்டாய்.

‘போடா டேய் நீயும் உன் வேலையும்…’ என்று லக்க்ஷனா எப்போதோ ஒரு முடிவில் நிற்க, போவது என்று முடிவான பிறகு நன்கு பேசிவிட்டு போவோமே என்ற நிலையில் இருந்தாள்..

“திஸ் இஸ் நாட் குட் லக்க்ஷனா.. இதெல்லாம் நமக்கு கிடைக்கிற வாய்ப்பு.. நம்ம யூட்டிலைஸ் பண்ணிக்கணும்… இது மட்டும் ஓகே ஆனா அதுக்கான கமிசனே உனக்கு எவ்வளவோ வரும்…” என்று மேனேஜர் பணத்தை முன் வைத்து அடுத்து பேச.

“சார்.. இப்பவும் சொல்றேன்.. இதுல யதுவீரோட முடிவுதான்.. ஆட்காக அவங்க யதுவீரைதான் காண்டாக்ட் பண்ணனும்.. சரி பண்ணிருக்காங்க.. அதுக்கான் பதில் யதுவீர் தான் சொல்லணும்.. அதைவிட்டு என்னை வச்சு இப்படி பேசுறது திஸ் இஸ் நாட் ஃபேர்..” என்று தலையை உலுக்க,

“அப்போ நம்ம கம்பனி வளர்ச்சிக்கு நீங்க ஹெல்ப் பண்ண போறதில்ல…” என்று சொல்லவும், வேகமாய் இருக்கையை விட்டு எழுந்தவள்,

“நான் இந்த கம்பனில இருக்க போறதே இல்லை… ரெசிக்னேசன் மெயில் பண்றேன்…” என்றுசொல்லி, அவளது கழுத்தில் இருந்த ஐடி கார்ட்டை கலட்டி அங்கிருத்த மேஜையில் வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.           

     

      

                            

                           

                   

               

Advertisement