Advertisement

மனம் – 18

விளையாட்டுத் துறையில் இருக்கும் வீரர்களுக்கு அடி படுவதும், ரத்த காயங்கள் ஏற்படுவதும் சகஜமே. ஆனால் அதை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கு சங்கடமல்லவா.

அங்கே யதுவீருக்கு முகத்தில் அடிபட்டு நாசியில் இருந்து ரத்தம் கொட்ட, மும்பையில் இதனை பார்த்துக்கொண்டு இருந்த பூனம் எத்தனை பதறினாரோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் லக்க்ஷனா பதறிவிட்டாள்.

“அச்சோ.. அம்மா…” என்று இருக்கையில் இருந்து லக்க்ஷனா எழுந்துவிட, அங்கேயோ உடனே யதுவீரை மருத்துவ உதவிக்கு அழைத்து சென்றிட, கொஞ்ச நேரத்தில் மேட்சும் முடிந்துவிட்டது..

யதுவீரின் அணி தோல்வியை தழுவ, அனைவருக்குமே ஒரு சோகமும் வந்து ஒட்டிக்கொண்டது..

லக்க்ஷனாவிற்கோ உடனே யதுவீரை பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்றிருக்க, அவனுக்கு அங்கிருக்கும் சூழல் எல்லாம் புத்தியில் உறைக்காது, வேகமாய் அவனுக்கு அழைக்க முயல, அவனது அலைபேசி அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தது.

அவனது அலைபேசி அவனது அறையில் இருக்கும் என்றெல்லாம் அவளுக்கு அப்போது யோசிக்கும் நிலையில் இல்லை.. திரும்ப திரும்ப அழைத்துப் பார்க்க, அவள் கண்களில் இருந்தோ கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

இப்படியான ஒரு சூழல் அவளுக்கு புதிது அல்லவா.. ஆக அதை நேரலையில் பார்க்கவும் மனம் மிகவும் தவித்துப் போனது அவளுக்கு.

“லக்க்ஷி.. லக்க்ஷி.. கொஞ்சம் ரிலாக்ஸா இரு…” என்று மீரா எத்தனை சமாதானம் செய்தும் அவள் மனம் அடங்குவதாய் இல்லை..

“ம்மா பார்த்தியா எவ்வளோ ரத்தம்.. யது ஷர்ட் எல்லாம் ப்ளட் ம்மா…” என்று கசங்கிய குரலில் சொன்னவள், மீண்டும் அலைபேசியை எடுக்க, மீராவோ பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் வேகமாய் அவள் கரங்களில் இருந்த அலைபேசியை பிடுங்கி வைத்தார்…

“ம்மா…!!!!!”

“என்னடி….??? இப்போ எதுக்கு இவ்வளோ ரியாக்ட் பண்ற… ஸ்போர்ட்ஸ்னா இதெல்லாம் இருக்கும்.. இதுக்கே இவ்வளோ நீ உணர்ச்சிவசப் பட்டா நாளைக்கு இதைவிட பெரிய பிராப்ளம் எல்லாம் வரும் அப்போ என்ன செய்வ.. யதுவீர கபடியே விளையாட வேணாம் சொல்வியா…” என்று கொஞ்சம் குரலை உயர்த்தித் தான் பேசினார் மீரா..

நிர்மலோ டிவியை அமர்த்திவிட்டு, பாவமாய் இருவரையும் பார்க்க,

“நிர்மல் நீ போய் தூங்கு.. இல்ல படி.. உள்ள போ…” என்று மீரா அவனை அனுப்ப,

“ஆமா என்னை மட்டும் உள்ள உள்ள போ சொல்வீங்க…” என்று முனங்கியபடி எழுந்து உள்ளே சென்றான்..

அவன் சென்றதும் “சொல்லு லக்க்ஷி இப்போ ஏன் இவ்வளோ ரியாக்ட் பண்ற..??” என்று மீரா திரும்ப கேட்க,

“என்னம்மா இப்படி கேட்கிற… நீ பார்த்த தானே எவ்வளோ ப்ளட்னு.. அவனுக்கு எவ்வளோ வலிக்கும்…” என்று சொன்னவளுக்கு மீண்டும் அழுகை முட்ட,

“முதல்ல எல்லாத்துக்கும் இப்படி அழறத நிறுத்து லக்க்ஷி.. எப்போ பார் என்ன அழுகை உடனே வந்திடுது உனக்கு..  தைரியமா இருக்க வேணாமா…” என்று மீரா அதட்ட,

“எப்படிம்மா.. அது..” என்று லக்க்ஷனா ஆரம்பிக்கும் போதே,

“இங்க வா இப்படி உட்கார்…” என்று அவளை அமர வைத்தவர்,

“லைப்ல எப்பவும் கஷ்டமான சூழல் வராதுன்னு நினைக்கவே கூடாது.. எப்பவும் எதுக்கும் தயாரா இருக்கனும்.. சரி ஒத்துக்கிறேன் யதுக்கு அடிபட்டது கஷ்டம் தான்.. அதோட வருத்தம் எனக்கும் இருக்குதான்.. ஆனா இதுக்கே நீ இவ்வளோ ரியாக்ட் பண்ண நாளைக்கு என்னென்னவோ பிராப்லம்ஸ் எல்லாம் வரும்..

நீதான் அவனுக்கு சப்போர்ட் பண்ணி நிக்கணும். அதைவிட்டு உனக்கே ஒரு ஆள் வேணும் போல சமாதானம் செய்ய.. இப்படியிருந்தா யது எப்படி போய் விளையாடுவான்.. அவனுக்குத் தெரியாதா கேம்ல எப்படி நம்மளை ஸேப் பண்ணிக்கனும்னு..” என்று மீரா எடுத்து சொல்ல,

என்ன சொன்னாலும் லக்க்ஷனாவிற்கு யதுவீரின் குரலையாவது கேட்கவேண்டும் போல் இருந்தது.

“இல்லம்மா ஒன் டைம் யதுக்கிட்ட பேசணும்…” என்று ஆரம்பிக்க,

“பேசலாம்.. ஆனா யது இப்போ ஹாஸ்பிட்டல் போயிருப்பான்ல.. அது கொஞ்சம் கூட தெரியாதா உனக்கு…” என,

“ம்ம்…” என்று மட்டும் சொன்னவள் மௌனமாய் அமர்ந்திருக்க, அடுத்த கொஞ்ச நேரத்தில் அவளின் அலைபேசி சத்தம் எழுப்பியது.

அதுவோ மீராவின் கரங்களில் இருக்க வேகமாய் லக்க்ஷனா மீராவைப் பார்க்க அவரோ அலைபேசியை பார்த்துவிட்டு “பூனம்..” என்று சொல்லி,

“இரு நான் பேசிட்டு தர்றேன்…” என்றவர்  “ஹலோ…” என்றார்..

அந்தப்பக்கம் பூனம் என்ன சொன்னாரோ, மீரா “ஹா.. ஓகே ஓகே.. லக்க்ஷி தான் டென்சன் ஆகிட்டா.. இப்போதான் அவளுக்கும் எடுத்து சொல்லிட்டு இருந்தேன்..” என,  லக்க்ஷனாவோ மீராவின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.  

“இதோ தர்றேன்,…” என்ற மீரா அலைபேசியை லக்க்ஷனா முன் நீட்ட,

“கொஞ்சம் அமைதியா பேசு…” என்று வாயசைக்க, ‘சரியென்று..’ தலையை ஆட்டியவள்,

“ஹலோ ஆன்ட்டி…” என்றாள் கொஞ்சம் தன் அழுகையை மட்டுபடுத்தி..

“லக்க்ஷி… பேட்டி… நீ எதுவும் கவலைப் படவேணாம்.. இதெல்லாம் ஸ்போர்ட்ஸ் ல சகஜம்தான்.. ஒகே வா…”

“ஹ்ம்ம் ஓகே ஆன்ட்டி…” என்றவள் குரலில் சுரத்தே இல்லாது இருக்க,

“லக்க்ஷி ஸ்டார்டிங்ல எனக்கும் ரொம்ப வருத்தமா பயமா தான் இருக்கும்.. ஆனா நம்ம இப்படி இருந்தோம்னா தென் யது எப்படி தைரியமா இருப்பான்.. நம்மதான் அவனோட பலம் தைரியமே.. சோ பி போல்ட்… நேத்து நைட் தான் பேசினான்.. உன் அப்பா இந்தியா வரவும் சீக்கிரம் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணனும்னு சொன்னான்..” என்று சொல்லி பூனம் லேசாய் சிரிக்க,

அப்போது தான் அவளுக்கு நினைவில் வந்தது, யது ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா…’ என்று கேட்டது..

அவன் சும்மா கேட்கவில்லை என்று இப்போது தெரிய, அவளையும் அறியாது இதழில் ஒரு சிறு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள “ம்ம் ஆன்ட்டி..” என்று மட்டும் லக்க்ஷனா சொல்ல,

“இதெல்லாம் சின்ன பிராப்ளம் லக்க்ஷி.. இதைவிட நம்ம எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும்.. சோ எதையுமே நம்ம பாஸிடிவ் அப்ரோச் செய்யணும்..” என்று தன் அனுபவத்தை கூட, கொஞ்சம் கொஞ்சமாய் லக்க்ஷனாவின் மனம் சமாதானம் அடைந்தது..

“ம்ம் ஓகே ஆன்ட்டி…” என்று சமத்தாய் தலையை லக்க்ஷனா ஆட்ட,

“ஓகே.. யது ரூம் வந்திட்டா அவனே கால் பண்ணுவான்.. சோ யூ டோன்ட் வொர்ரி…” என்றவர் “மீராட்ட குடு..” என, மௌனமாய் அலைபேசியை மீராவிடம் நீட்டினாள்.

“ஹலோ பூனம்….” என்று மீண்டும் மீரா பேச்சைத் தொடங்க, பூனம் யதுவீர் லக்க்ஷனா திருமணம் பற்றி பேசினார்..

“ரொம்ப சந்தோசம் பூனம்.. நானுமே இதை பேசணும்னு தான் நினைச்சேன்.. ஆனா லக்க்ஷி அப்பா வராம என்ன பேசுறதுன்னு தான் தயக்கம்..” என்று மீரா சொல்லும் போதே,

லக்க்ஷனாவிற்கு  அப்போது தான் புரிந்தது மீராவின் மௌனத்திற்கு இது தான் காரணம் என்று.

மீரா பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள், அவர் பேசி முடிக்கவும் “ம்மா என்னை நினைச்சு கவலைப் படுறியா..” என்றாள்..

அவளை ஒரு பார்வை பார்த்தவர், “வீட்ல பொம்பள பிள்ளைங்க இருந்தா பெத்தவங்களுக்கு கவலை இல்லாம இருக்குமா லக்க்ஷி.. உன் கல்யாணம் முடியுற வரைக்கும் எனக்கு ஒரு டென்சன் இருந்திட்டு தான் இருக்கும்.. இதுவரைக்கும் உன் அப்பா இல்லாம தான் எத்தனையோ சூழ்நிலையை கடந்து வந்திருக்கேன்..

ஆனா பசங்க லைப்ன்னு வர்றபோ அவர் இங்க இருக்கணும் இல்லையா.. ஆனா அவரே இங்க வரப்போறேன்ன்னு சொன்னது எனக்கு அவ்வளோ நிம்மதியா இருக்கு.. இன்னும் எத்தனை வருசத்துக்கு அவர் ஒரு இடம் நம்ம ஒரு இடம்னு இருக்கிறது…” என்றவரை பார்த்து முதல் முறையாய் லக்க்ஷனாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது..

மீராவும் சரி, பூனமும் சரி எந்த மாதிரி சூழலிலும் பொறுமையாகவே இருக்கிறார்கள்.. நிதானமாக பேசுகிறார்கள்.. தன்மையாய் எடுத்து சொல்கிறார்கள்.. அது அவர்கள் வயதிற்கான அனுபவமா இல்லை வாழ்க்கை பாடம் கற்று கொடுத்ததா தெரியவில்லை ஆனால் லக்க்ஷனா மனத்தில் அந்த நேரத்தில் ஒரு திடம்..

இனி என்ன நடந்தாலும் தான் திடமாய் இருக்கவேண்டும். சட்டென்று கலங்கிட கூடாது என்று.. தன் மனநிலை அப்படியே யதுவீரிடம் ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்று அவளுக்கு இப்போது நன்றாகவே புரிய,  தீப்தி பேசியது கூட அவளுக்கு இப்போது பெரிதாய் தெரியவில்லை. 

“ம்ம்ம் அம்மா…” என்றவள் அவரை வந்து கட்டிக்கொண்டாள்,

“நீங்க எல்லாம் ஸ்ட்ராங் மதர்…”  என்றவளை பார்த்து,

“ஹா ஹா முதல்ல ஸ்ட்ராங் வுமன்… அப்போதான் ஸ்ட்ராங் மதரா இருக்க முடியும்…” என்றார் மீரா..

“இனிமே நானும் ஸ்ட்ராங்கா தான் இருப்பேன்…” என்று சொல்லி லக்க்ஷனா புன்னகைக்க,

“ஹ்ம்ம் நான் அத்தனை சொல்லியும் கேட்காதவ, பூனம் சொன்னதும் மட்டும் கேட்கிற..” என்று வேண்டுமென்றே மீரா சீண்ட,

“ம்மா….” என்று கண்களை திரட்டி முறைத்தவள், மீண்டும் சிரிக்க,

“தட்ஸ் குட் லக்க்ஷி.. இப்போ போய் நீ நிம்மதியா தூங்கு…” என்று மகளை அனுப்பி வைத்தார்..

மீராவிற்குமே இப்போது கொஞ்சம் நிம்மதிதான்.. பூனம் திருமண பேச்சு பேசவும்.. அதுவும் யதுவீரே சொல்லிருக்கிறான் என்று தெரியவும் மனம் இன்னமும் நிம்மதியாய் போனது.. நவநீதன் இந்தியா வந்ததுமே முதலில் இவர்களின் திருமணத்தை நல்லபடியாய் செய்திட வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

அங்கே யதுவீருக்கோ மருத்துவ சிக்கிச்சை நடந்துகொண்டு இருக்க, அவன் மனதிலோ எளிதாய் ஜெயிக்க வேண்டிய மேட்சில் இப்படி தோற்கும் நிலை வந்ததே என்று சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது..

மருத்துவர்களோ சிகிச்சை முடித்து, கண்டிப்பாய் யதுவீர் இரண்டு நாட்கள் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று சொல்லிட, அவனுக்கோ நாளை மறுநாள் இருக்கும் மேட்ச் கண் முன்னே வந்தது.

அடுத்து வரும் இரண்டு மேட்ச்களில் கட்டாய வெற்றிபெற்றால் தான் இந்த தொடரை யதுவீரின் அணி வென்றிட முடியும்..

இந்த மேட்சில் தோற்றதும், யதுவீருக்கு இப்படியானதும் கண்டிப்பாய் வீரர்கள் மனதில் ஒரு சிறு பாதிப்பை கொடுத்திருக்கும்.. அவன் அவர்களுக்கு கேப்டன் மட்டுமில்லை நல்லதொரு வழிகாட்டியும் கூட.

ஆக யதுவீர் அறைக்கு திரும்பியதுமே, அனைவரும் அவனைப் பார்க்க வர, புதிதாய் களத்தில் இறக்கப்பட்ட வீரனோ

“சாரி பய்யா…” என்று நிஜமாகவே வருந்தி சொல்ல,

“ஹே இட்ஸ் ஓகே..” என்று யதுவீர் சமாதானம் செய்ய, அவனால் அப்போது சரியாய் பேசக்கூட முடியவில்லை..

கோச் தான் மிகவும் வருந்திவிட்டார்… அவரைப் பார்த்து யதுவீர் சமாதானமாய் புன்னகைக்க,

“கண்டிப்பா டூ டேஸ் ரெஸ்ட் எடுக்கணும் யது..” என்றவரிடம்,

“டே ஆப்டர் டுமாரோ மேட்ச் இருக்கே…” என்றான்..

“மேட்ச் இப்போன்னு இல்ல அடுத்து அடுத்து நிறைய இருக்கும்..” என்றவர் “இப்போ உன் ஹெல்த் தான் முக்கியம்..” என,

“ஹா ஹா ஜி.. இதைவிட பெரிய அடியெல்லாம் பட்டிருக்கு அப்போவெல்லாம் அடுத்த மேட்ச்ல நான் சூப்பர் டென் க்ராஸ் பண்ணிருக்கேன்..” என்று யது சிரித்தான்.

வில் பவர் யதுவீருக்கு நிறையவே ஜாஸ்தி.. ஆக இதெல்லாம் தூசு என்ற எண்ணம் அவனுக்கு.. இப்போது கொஞ்சம் வலி மட்டுப்பட்டு இருந்தது.. நாளை ஒருநாள் முழுக்க ஓய்வில் இருந்துவிட்டு, நாளை மறுநாள் காலையில் இருந்து தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்..

அடுத்து கொஞ்ச நேரத்தில் அனைவரும் “டேக் கேர் சொல்லி..” அவரவர் அறைக்கு கிளம்பிட, அவர்கள் சென்றதும் பூனம் அழைக்கவும் சரியாய் இருந்தது..

அவரோடு பேசியவன் அடுத்து பார்க்க, லக்க்ஷனா பலமுறை அழைத்திருப்பது தெரியவும்,

“லக்க்ஷி…” என்று சொல்லிக்கொண்டவன், அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்த்து வீடியோ கால் அழைத்தான்..

அவன் அழைப்பான் என்றே காத்திருந்தாளோ என்னவோ உடனே எடுத்துவிட, லக்க்ஷனாவின் பார்வை வேகமாய் யதுவீரின் முகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு பார்க்க,

அவனால் இயல்பாய் பேசமுடியாது போனாலும் கொஞ்சம் கொஞ்சம் பேசினான்..

“நீ பேசாத யது..” என்று லக்க்ஷனா சொல்ல,

அவனோ எங்கே அழுவாளோ, வருந்திப் பேசுவாளோ இவளை தேற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் அழைத்திருந்தான்.

ஆனால் லக்க்ஷனாவோ திடமாய் பேச, யதுவீருக்கு கொஞ்சம் ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது..

“என்ன பாக்குற.. அழுவேன்னா?? வொய் சுட் ஐ க்ரை???” என்று கேள்வி கேட்டவளை, புருவம் உயர்த்தி ஒரு புன்னகையோடு பார்க்க,

“நான் இனிமே எதுக்குமே அழ மாட்டேன்  யது.. அம்மாவும் ஆன்ட்டியும் அவ்வளோ அட்வைஸ் பண்ணாங்க..” என்று எடுத்து சொல்ல,

“ஓ…” என்று இதழை மட்டும் யதுவீர் குவிக்க,

“எஸ் யது.. ஆனா இப்போ உன்ன நேர்ல பாக்கணும் போல இருக்கு.. உன்ன கவனிச்சுக்கணும் போல இருக்கு…” எனும்போது அவளையும் அறியாது முகம் வாடித்தான் போனது.

“இன்னும் கொஞ்ச நாள் லக்க்ஷி…” என்று யதுவீர் சமாதானமாய் மெல்ல பேச,

“ஷ்…” என்று வாயில் விரல் வைத்தவள், “நீ பேசாத சொன்னேன்ல..” என்று செல்லமாய் மிரட்டினாள்.

“ஹா ஹா…” என்று யதுவீர் நெஞ்சை பிடித்து சிரிக்க,

“ஹேய் இப்போ ஏன் டா சிரிக்கிற.. நல்லா விழுந்து வச்சிட்டு வந்துட்டு சிரிக்கிற..” என்று லக்க்ஷனா எகிற,

அவனோ வாயை மூடிக்கொண்டு பவ்யமாய் அவளைப் பார்க்க, “ஹா இனிமே இப்படித்தான் இருக்கணும்..” என்றவள் நேரத்தை பார்த்து

“ஓகே யது நீ தூங்கு ரெஸ்ட் எடு… டேப்லட்ஸ் எல்லாம் போட்டியா…??” என அவனோ ஆம் என்று தலையை ஆட்டினான்..

“நாளைக்கு புல்லா ரெஸ்ட் எடு…” என

“ம்ம்..” என்று தலையை ஆட்டினான்..

“அடுத்து மேட்ச் ப்ளே பண்ணுவியா??” என்று லக்க்ஷனா கேட்கவும்,

“ஆம்…” என்று யதுவீர் சொன்னதும், கொஞ்சம் அதிர்ச்சியாய் அவள் பார்க்க,

“டோன்ட் வொர்ரி பேபி.. ஐ வில் டேக் கேர் மை ஸெல்ப்…” என்று யது மெதுவாய் சொல்ல,

“ம்ம்ம் அடுத்த மேட்ச் கண்டிப்பா வின் பண்ணனும் யது…” என்று அவனுக்கு வாழ்த்துக்களை சொல்லி, பேசி முடிக்கையில் இருவருக்குமே மனம் நிம்மதியாய் உணர்ந்தது..

லக்க்ஷனாவின் மனதிலோ யதுவீர் பற்றிய சிந்தனை இருக்க, யதுவீர் மனதிலோ அன்றைய மேட்சும் அடுத்து வரப்போகும் மேட்சும் மனதில் வந்து போக, நிறைய நேரம் யோசனை செய்தபடி படுத்திருந்தான்.

ஆனால் என்னதான் ஒவ்வொன்றும் யோசித்து, பல திட்டங்கள் போட்டு, நாம் செய்தாலும் அனைத்தும் நாம் நினைப்பது போல் நடக்குமா என்ன?? காலமும் நேரமும் கை கொடுக்க வேண்டுமல்லவா..

ஆக அடுத்து வந்த மேட்சில் கோச் வேண்டாமென்று சொல்லியும் யதுவீர் பங்குகொள்ள, அவனது பொறுப்பை அவன் சிறப்பாகவே செய்தாலும், அணியில் இருக்கும் மற்றவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலும் அன்றைய மேட்சிலும் யதுவீரின் அணி தோல்வியை தழுவியது..

கடந்த மேட்ச் தோல்வியைக் கூட ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாய் ஏற்றுகொள்ள, இம்முறை அடிபட்டும் கூட யதுவீர் களத்தில் இறங்குகையில் அத்தனை ஆரவாரம் செய்து உற்சாகமாகவே இருந்தனர்..

விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் தான்.. அதற்கு ஏற்ப தான் விளையாடுபவர்களின் மனநிலை இருக்கும். ஆனால் அதனை பார்த்துகொண்டு இருக்கும் பார்வையாளர்களின் மனநிலை தான் எப்போது எப்படி மாறும் என்று சொல்லிட முடியாது..

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், தோற்றால் தரையில் போட்டு மிதிப்பதுமாய் கருத்துக்கள் சொல்வதும், தேவையில்லாத வார்த்தை பிரயோகங்கள் செய்வதுமாய் இருப்பர்.

அவர்களுக்கு அந்த பொழுது அவர்களின் உணர்வுகளின் வடிகாலாய் இப்படி செயல்பட்டுவிட்டு அடுத்து தங்கள் வேலையை பார்க்கக் சென்றுவிடுவர், ஆனால் சம்பந்தப்பட்ட வீரர்களும் சரி அவர்களின் குடும்பத்தினரும் சரி, அதனை எல்லாம் கடந்து வருவது அத்தனை எளிதான காரியமல்ல அல்லவா..

டீம் செலேக்சன் சரியில்லை.. கேப்டன் சரியான முடிவை எடுக்காது போனார்.. கடைசி நேரத்தில் இப்படியான சொதப்பல்கள் செய்யலாமா?? என்பதுபோலான பேச்செல்லாம் வர, அந்த பொழுதை யதுவீரின் அணியினர் மௌனமாகத் தான் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது..

ஆனால் அனைத்திற்கும் மேலாய், யாருமே எதிர்பாராத விதமாய் ‘காதல் போதையில் கபடியில் சறுக்குகிறாரா யதுவீர்…’ என்ற தலைப்பில்

டெல்லியில் லக்க்ஷனாவும், யதுவீரும் சேர்ந்து வெளியில் சென்றபோது அவர்களுக்கே தெரியாத சில புகைப்படங்கள் வேறு வெளிவந்திருந்தன.

இருவரும் கோவிலில் இருந்து வெளி வருவது போலவும், ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படங்களும் கடைசியில் ஏர் போர்ட்டில் லக்க்ஷனாவும் யதுவீரும் அணைத்தபடி நின்றிருந்ததும், என்று இன்னும் பல புகைப்படங்கள் வர, யதுவீருக்கு பொறுமை பறந்திருந்தது.              

           

                     

               

                                       

          

           

Advertisement