Advertisement

மனம் – 15

லக்க்ஷனா அன்று அலுவலகத்திற்கு சென்று தனது கேபினுள் நுழையும் போதே, “ஹே லக்க்ஷி வா வா…” என்று அவளை தனியே  இழுத்துக்கொண்டு சென்றாள் அவளது டீம் மேட்  ரூப்பா..

“ரூப்ஸ்.. என்ன இது….” என்று அவளை நிறுத்த முயற்சிக்க,

“வா வா.. செம நீயுஸ் ஒண்ணு வச்சிருக்கேன்…” என்று சொல்லியபடி எப்போதும் மீட்டிங் நடக்கும் ஹாலுக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் லக்க்ஷனாவை அமர வைக்க,

“அதை இங்க வச்சுதான் சொல்லணுமா.. கேபின்ல வச்சு சொல்லக்கூடாதா..” என்று சலித்தபடி லக்க்ஷனா அமர,

“சொல்லக்கூடாது.. ஏன்னா விஷயம் அப்படி… நாலுபேரு முன்னாடி நாமலும் கொஞ்சம் பெருமை பேசவேணாமா??” என்றவளை லக்க்ஷனா முறைக்க,

“ஓகே ஓகே கூல் லக்க்ஷி… உன் ஆள் இப்போ எங்க இருக்கார்.. டெல்லில தானே…” என்று ரூப்பா கேட்கவும்,

“ஆமா…” என்றாள், இதையேன் கேட்கிறாய் என்ற லுக்கில்..

“ஹ்ம்ம் குட்.. சரி இப்போ உனக்கு டெல்லி போக சான்ஸ் கிடைச்சா போவியா மாட்டியா??” என்று ரூப்பா அடுத்த கேள்விக்கு போக,

“ஏய்,.. மார்னிங்கே கடுப்பேத்தாம  போ ரூப்ஸ்…” என்று லக்க்ஷனா எழப் பார்க்க,

“ஹேய் லக்க்ஷி இரு இரு… நிஜமாத்தான் சொல்றேன்..” என்று அவளை நிறுத்தினாள் ரூப்பா..

“என்ன சொல்ற???!!!!!”

“ஆல் ஓவர் இந்தியால இருக்க நம்ம கம்பனி பிரான்ச்ஸ் மீட் எப்பவுமே இயர்லி ஒன்ஸ் நடக்குமே, சோ திஸ் இயர் டெல்லில.. நம்ம ஆபிஸ்ல இருந்து ரெண்டு டீம் போறோம்.. சிக்ஸ் மெம்பெர்ஸ்… அதுல நீயும் ஒருத்தி..” என்று ரூப்பா சொல்ல,

“வாட்????!!!!!!!!” என்று லக்க்ஷனா நம்பமாட்டாமல் கேட்க, 

“நிஜம் டி.. நம்ம டெல்லி போறோம்…. அங்க நீ யதுவ பாக்க போற…” என, லக்க்ஷனாவின் முகம் அப்படியே மலர்ந்துவிட்டது..

“ஹேய்….. நிஜமா நிஜமா???” என்று ரூப்பாவின் தோள்களை பற்றி உலுக்க,

“ஏய் ஏய் போதும் லக்க்ஷி… என் ஷோல்டர் அப்படியே வந்திட போகுது… என்ன மேடம் ஹேப்பியா…” என்று ரூப்பா கேட்க,

“பின்ன இல்லையா??” என்றவள், “எப்போ போறோம்..??”  என்றாள்..

“இந்த வீக்கென்ட்..”

“வீக்கென்ட்டா??? இன்னிக்கு தானே மண்டே….” என்று சோகமாய் இழுக்க,

“அடடா.. வேணும்னா இப்போவே ப்ளைட் டிக்கட் புக் பண்ணி தர சொல்லவா…” என்று ரூப்பா கிண்டல் அடிக்க,  

“ம்ம் சரி விடு..  யார் யார் போறோம்.. எத்தனை நாள்??  எங்க ஸ்டே???” என்று வரிசையாய் கேள்விகளை அடுக்க, இத்தனை நேரம் சிரித்தபடி நின்ற ரூப்பா இப்போது முறைக்க,

“என்னடி சொன்னா ஃபுல் டீடைல்ஸ் சொல்லணும்..” என்று காரியமாய் லக்க்ஷனா கேட்க,

“நேரம் டி… டெல்லி போறோம்னு தான் நீயுஸ் வந்தது.. இன்னும் ஃபுல் டீடைல்ஸ் வரல..” என்றதும் லக்க்ஷனாவின் முகம் உடனே வாட,

“இன்னிக்கு ஈவ்னிங்குள்ள வந்திடும்.. சோ பி ஹேப்பி…” என்று ரூப்பா சொல்லிவிட்டு செல்ல,

‘டெல்லி…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள், ‘யது ஐம் கம்மிங்…’ என்று மெல்ல சிரித்துக்கொள்ள,

‘யதுட்ட முதல்ல சொல்லணும்…’ என்று வேகமாய் தன் அலைபேசியை எடுத்தாள் அவனுக்கு அழைக்க.

நினைத்தது என்னவோ வேகமாய் யதுவீருக்கு சொல்லவேண்டும் என்று நினைத்துவிட்டாள் தான், ஆனால் உடனே அந்த எண்ணத்தையும் மாற்றிக்கொண்டாள்.

‘யது நீ மட்டும் தான் எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பியா.. ஏன் நான் கொடுக்கமாட்டேனா?? டெல்லில மீட் பண்ணுவோம்..’ என்று எண்ணிக்கொண்டவள் சந்தோசமாகவே தன் வேலைகளை பார்க்கச் சென்றாள்..

ரூப்பா சொன்னது போலவே, அன்று மாலை வீடு கிளம்பும் முன்னமே இவர்கள் டெல்லி செல்வதற்கான அணைத்து விபரமும் வந்துவிட, லக்க்ஷனாவோ அதெல்லாம் கேட்டு இன்னமும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அங்கே நடக்கும் மீட்டிங் இரண்டு நாட்கள் தான்.. அதன் பின் இரண்டு நாட்கள் சொந்த விடுமுறை கணக்கில் அங்கே இருந்து வரலாம்  அது அவரவர் விருப்பம் என்று ஆபிஸில் சொல்லிவிட, யாராவது இதை வேண்டாம் என்பார்களா என்ன..

சொந்த விடுமுறையோ இல்லை வேறெதுவுமோ இப்படியொரு வாய்ப்பு கிடைக்கையில் யாராக இருந்தாலும் அதை விடுவார்களா என்ன, ஆக லக்க்ஷனாவின் அலுவலகத்தில் ஆறு பேர் கொண்ட குழு தயாரானது டெல்லி செல்ல..

“என்ன லக்க்ஷி உன் ஆள் கிட்ட சொல்லிட்டியா??” என்று ரூப்பா கேட்டபடி அவளருகே கேப்பில் அமர,

“நோ ரூப்ஸ்.. சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லல….” என்று லக்க்ஷனா சொல்லும்போதே,

“லக்க்ஷி எங்களை எல்லாம் இன்ட்ரோ பண்ணுவியா???” என்றபடி அவர்களை திரும்பிப் பார்த்தான் டேனியல்..

“பின்ன இல்லையா.. கண்டிப்பா டேனியல்..” என்று லக்க்ஷனா சொல்லும் போதே,

“ஹே லக்க்ஷி நேத்து யதுவீர் இன்டர்வியூ பார்த்தேன்.. செம செம.. கண்டிப்பா லக்க்ஷி யு ஆர் லக்கி.. அவ்வளோ லவ் தெரிஞ்சது உன் ஹீரோ ஐஸ்ல..” என்று மற்றொருத்தி சொல்ல,

“அட.. அதென்ன.. நம்ம லக்க்ஷி கிடைக்க அவரும் தான் கொடுத்து வச்சிருக்கணும்..” என்று ரூப்பா லக்க்ஷனாவிற்கு சப்போர்ட் செய்ய,

பெருமிதமாய் புன்னகைத்தபடி லக்க்ஷனா அனைத்திற்கும் பதில் கூற, அலுவலகம் விட்டு வீடு வந்த சேரும் பொழுது எல்லாம் யதுவீர் பற்றிய பேச்சாகவே இருக்க, அவளுக்கு மனதில் அத்தனை இனிமையாக இருந்தது.

வீட்டிற்கு வந்தபிறகும் கூட அவளது மனநிலை அப்படியே இருக்க, “லக்க்ஷி எதுவும் குட் நீயுஸா… முகமே ஜொலிக்குது..” என்று மீரா கேட்க,

“எஸ் ம்மா… குட் நீயுஸ் தான்.. வர்ற வீக்கென்ட் டெல்லி போறோம்…” என்று சொல்லி விபரங்கள் சொல்ல,

அனைத்தும் கேட்ட மீராவோ “சோ டெல்லி ட்ரிப் உனக்கு அபிசியல் ட்ரிப் மட்டும்மில்லை.. அப்படியா???” என்று மகளின் முகத்தை ஆராய்ச்சியாய் பார்ப்பது போல் கேட்க,

“ம்மா… இப்போவே சொல்லிட்டேன்.. யதுட்ட யாருமே சொல்லக்கூடாது.. இட்ஸ் சர்ப்ரைஸ்… ஓகே வா..” என,

“நான் ஏன் டி சொல்ல போறேன்.. பட் லக்க்ஷி.. பார்த்து.. யது ஓட டைமிங்க்ஸ் பொருத்து எதுவும் டிசைட் பண்ணு  சரியா.. தேவையில்லாம வெளிய ரொம்ப அலையை வேணாம்.. கல்யாணம் முடியுற வரைக்கும் வேற எந்த பிரச்னையும் இருக்க கூடாது லக்க்ஷி…” என்று ஒரு அம்மாவாக எடுத்து சொல்ல,

“கண்டிப்பா ம்மா.. நான் பார்த்து நடந்துக்குவேன்.. டோன்ட் வொர்ரி…” என்றவள்,

“ம்மா நான் டெல்லி போறத நிர்மல்ட கூட சொல்லாத ப்ளீஸ்.. அவன் அப்படியே யதுட்ட உளறிடுவான்…” என்றாள் கெஞ்சலாய்..

“ஹா ஹா சரி.. பட் அவனுக்கா தெரிஞ்சு கேட்டா எனக்குத் தெரியாது..” என்றவர், “அப்பாட்டையும் ஒருவார்த்தை சொல்லிடு லக்க்ஷி…” என்றுவிட்டு தன் வேலைகளை பார்த்தார்..

லக்க்ஷனாவிற்கு டெல்லி கிளம்பும் நாள் வரைக்குமே ஒருவித படபடப்பாகவே இருந்தது.. முதல் முறையாய் தனியே செல்வது ஒருப்பக்கம் இருந்தாலும், அங்கே யதுவீரை சந்திக்கப் போவது என்பது மனதில் வேறொரு உணர்வை கொடுத்தது..

அதிலும் நடுவில் இந்த நான்கு நாட்களாய் அவனோடு பேசுகையில், எங்கே தன்னையும் அறியாமல் உளறிடுவோமோ என்று வெகுவாய் அவனோடு பேசுவதையே குறைத்திருந்தாள்.

அவன் கூட கேட்டான் “லக்க்ஷி.. ஏன் கால் அட்டென்ட் பண்ண மாற்ற???” என்று..

‘எல்லாத்தையும் விடாம கவனிப்பான்..’ என்று செல்லமாய் நொடித்தவள், “அப்படியெல்லாம் இல்ல யது.. கொஞ்சம் வொர்க் ஜாஸ்தி..” என்று மழுப்பினாள்.

“ஹ்ம்ம் ஓகே பேபி… ப்ரீயா இருக்கப்போ சொல்லு.. பேசலாம்…” என்று அவன் சொன்னாலும், அவனுக்கு அப்போது தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் மேட்ச் இருக்க, லக்க்ஷனாவிற்கும் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது..

‘ஜஸ்ட் டூ டேஸ் தான்.. அடுத்து யதுவை பார்க்க போறேனே…’ என்று எண்ணிக்கொண்டவள், இமைகளை ஆனந்தமாய் மூடித் திறக்க,

“ஒய் என்ன மேடம் இப்போவே ட்ரீம்ஸா??” என்று ரூப்பா கேட்க,

“ம்ம்ச் அப்படியெல்லாம் இல்ல.. ஆனா கொஞ்சம் டென்சனா இருக்கு…” என்ற லக்க்ஷனாவிடம்,

“எப்படி எப்படி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஓடுதா??” என்று ரூப்பா கேட்க, ஆனால் நிஜமாகவே லக்க்ஷனாவிற்கு அப்படித்தான் இருந்தது.

சென்னையிலிருந்து மாலை கிளம்பி, டெல்லி சென்று இறங்குகையில் இரவு ஆகிட, அவர்களுக்கு என்று ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டல் சென்று, உண்டுவிட்டு, அவர்களது அறை எங்கே என்று பார்த்து ஒருவழியாய் அவரவர் அறையில் தஞ்சம் புகுகையில் நேரம் ரொம்ப தாமதம் ஆகிவிட்டது..

பெண்கள் நால்வர், ஆண்கள் இருவர் என்று வந்திருக்க, மூன்று அறைகளில் இருவர் இருவராக தாங்கிக்கொள்ள, லக்க்ஷனா கட்டிலில் விழுந்ததும், முதலில் செய்தது யதுவீரிடம் இருந்து எதுவும் மெசேஜ் வந்திருக்கிறதா என்று..

மீரா இரண்டு முறை அழைத்திருக்க, யதுவீரும் இரண்டு முறை அழைத்திருந்தான், கிட்டத்தட்ட பத்துக்கும் மேலே மெசேஜ் வேறு.

‘ஓ… சாரி யது.. இட்ஸ் ஆள் பார் யூ..’ என்று எண்ணிக்கொண்டவள், அவனுக்கு ஒரு ‘குட் நைட்..’ மட்டும் அனுப்பிவிட்டு படுத்துவிட்டாள்..

ரூப்பாவோ அவளை கிண்டலாய் பார்த்து ‘எல்லாம் லவ் பண்ற வேலை…’ என்று சொல்ல,

“ச்சு.. சும்மா தூங்கு டி..” என்று அவளை அரட்டியவள், இந்த இரண்டு நாட்கள் மீட்டிங் எப்போதடா முடியும் என்று காத்திருந்தாள்.

‘டூ டேஸ் கொஞ்சம் பிசி யது.. மீட்டிங் இருக்கு..’ என்று அவன் கேட்பதற்கு முன்னதாகவே இவளே சொல்லிட,

‘ஓ.. ஓகே லக்க்ஷி.. எனக்குமே கூட கொஞ்சம் வொர்க்ஸ் ஜாஸ்தி தான்.. பிட்னஸ் ட்ரைனர் வேற ஒருத்தர்.. சோ அவர்க்கூட செட்டாக கொஞ்சம் டைம் இழுக்குது..’ என,

‘ஓகே யது.. ப்ரீ ஆகிட்டு பேசு.. நோ ப்ராப்ளம்..’ என்றவளை நினைத்து யதுவீருக்கு கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது..

இந்த ஒருவாரமாகவே அவள் சரியாக அலைபேசியில் பேசுவதுமில்லை, மெசேஜ் செய்தாலும் என்னவோ அவள் சரியாக செய்வது இல்லையோ என்றே தோன்றியது, எப்பொழுதும் யதுவீர் ஏதாவது சொன்னால், ‘ம்ம் போ எப்போ பார் உனக்கு இதே தான்.. என்கூட டைம் ஸ்பென்ட் பண்றதில்ல…’ என்று முகம் துக்குவாள், ஆனால் இப்போது அவளாகவே எல்லாம் சொல்ல, அவனுக்கு வித்தியாசமாய் போனது..

‘லக்க்ஷி எனி பிராப்ளம்..’ என்று அவனாக கேட்க,

‘இல்லையே அதெல்லாம் இல்லை…’ என்று வேகமாய் மறுக்க, ‘ம்ம் ஓகே …’ என்று மட்டும் சொல்லிக்கொண்டான்..

இரண்டு நாட்கள் இப்படியேதான் போனது.. ஒருவழியாய் லக்க்ஷனா வந்திருந்த மீட்டிங் நல்லபடியாய் முடிய, நாளை விடிந்ததும் முதலில் யதுவீரை பார்க்கவேண்டும் என்று நினைத்தபடி, தன் குழுவோடு அந்த மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வர,

“சோ லக்க்ஷி.. என்ன ப்ளான் நாளைக்கு…” என்று டேனியல் தெரிந்துகொண்டே கேட்க,

“தெரிஞ்சிட்டே கேட்கிற..” என்று ரூப்பா அவனை முறைக்க,

“நாளைக்கு போய் பார்ஸ்ட் யதுவீரை பார்க்கணும்.. தென் உங்களை எல்லாம் இன்ட்ரோ பண்றேன்… உங்களோட ப்ளான் என்ன ??” என்று அனைவரையும் பார்த்துக் கேட்க,

“பாத்தியா சந்தடி சாக்குல நம்மள கழட்டி விட்டுட்டா…” என்று கோரஸ் பாடியவர்கள்,

“டெல்லிய சுத்திப் பார்க்க போறோம்ன்னு பாட்டிட்டே ஊர் சுத்த வேண்டியதுதான்” என்று பேசியபடி நடந்து வர, இவர்கள் நடந்து வந்துகொண்டிருந்த அதே லாபியின் மறுபுறம் இருந்து யதுவீர் தன் குழுவினரோடு  நடந்து வந்துக்கொண்டிருக்க, கொஞ்ச நேரம் வரைக்குமே யாரும் யாரையும் கவனிக்கவில்லை..

அவரவர் பேச்சில் லயித்தபடி வந்துகொண்டு இருக்க, ரூப்பா தான் “லக்க்ஷி அங்க பாரு…” என்று அவளை கை பிடித்து, காட்ட, சரியாய் லக்க்ஷனா அவள் காட்டிய திசையை பார்த்த அதே நேரம் யதுவீரும் சாதாரணமாய் இந்தப் பார்க்க, அடுத்த நொடி இருவரின் கண்களுமே விரிந்து, கால்கள் அப்படியே தங்கள் நடையை நிறுத்திட,

‘யது….’ என்று அவளும்,

‘லக்க்ஷி…’ என்று அவனும்  சொல்லிக்கொள்ள, அந்த தருணம் சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தவளுக்கும் சர்ப்ரைஸாக அமைய, அப்படியே நின்றுவிட்டாள்.

உடன் வருபவர்களுக்கு இது அழகான வேடிக்கையல்லவா, யதுவீர் முதலில் தயங்கி நின்றவன், பின் இவளை நோக்கி வர,

“லக்க்ஷி போ…” என்று ரூப்பா அவளை உலுக்க, அதன் பின்னே லக்க்ஷனாவும் முன்னேறி செல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்குகையில், வேகமாய் எட்டிப்பிடித்து கட்டிக்கொண்டனர்.

“யது…!!!!!” என்று மகிழ்ச்சியாய் அவன் கைகளுக்குள் தஞ்சம் புக,

“லக்க்ஷி.. வாவ்… வாட் எ சர்ப்ரைஸ்….” என்று அவனது அணைப்பை இருக்கியவன், பின் விடுவித்து, அவளைப் பார்க்க,

“இது எனக்குமே சர்ப்ரைஸ் தான் யது…” என்றவள், அவள் நினைத்திருந்ததை சொல்ல,

“சோ இதான் நீ என்கிட்ட சரியா பேசலையா??” என்று கேட்டதும் சந்தோசமாகவே தலையை ஆட்டினாள்.

“சோ ஸ்வீட்…” என்று யதுவீர் மீண்டும் அவளை லேசாய் அணைக்க,

சுற்றி இருந்த இருவரின் குழுவினரும் “ஹேய்…” என்று கை தட்ட, “ஆகா…” என்றபடி இருவரும் விலக,

“லக்க்ஷி இன்ட்ரோ குடு…” என்று டேனியல் சைகை செய்ய, லக்க்ஷனா அனைவரையும் யதுவீருக்கு அறிமுகம் செய்ய,

யதுவீரின் அணியில் இருந்த சில புதிய வீரர்கள் “பய்யா…” என்று நாங்களும் இருக்கோம் என்று காட்ட, அவனும் அவர்களை லக்க்ஷனாவிற்கு அறிமுகம் செய்துவைக்க,  மரியாதை நிமித்தமாக அவர்கள் அவளை பாபி என்றழைக்க, லக்க்ஷனாவோ வானில் தான் பறந்தாள்.

மறுநாள் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்க, இப்போதே கண்டுவிட்ட சந்தோஷத்தில், லக்க்ஷனாவிற்கும் சரி, யதுவீருக்கும் சரி பிரிந்து செல்லவே மனம் வரவில்லை..

இருவருமே கைகளை கோர்த்தபடி அந்த பிரம்மாண்ட எழு நட்சத்திர ஹோட்டல் விட்டு வெளிவர, அவர்களோடு வந்தவர்களோ கொஞ்சம் தனிமை கொடுத்து முன்னே நடக்க, தரைதளம் வந்ததும் கபடி குழுவினருக்கான வேன் வந்திட, லக்க்ஷனாவோ பாவமாய் பார்த்துக்கொண்டு நின்றாள்..

யதுவீருக்கும் சங்கடமாய் இருந்தது.. எப்போதுமே அவளை கிளம்பும் நேரத்தில் தான் சந்திக்கிறோம் என்றிருக்க, ரொம்ப நாட்களுக்கு பிறகு நேரில் கண்ட்துமில்லாமல் அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே கிளம்ப வேண்டுமா என்றும் இருக்க,

“லக்க்ஷி…” என்று அவனும் அவளைப் பார்க்க, லக்க்ஷனா கொஞ்சம் புரிந்துகொண்டாள்..

“நத்திங் ப்ராப்ளம் யது.. நாளைக்கு மார்னிங் நானே உன்னை பார்க்க வர்றதா இருந்தேன்.. சோ நாளைக்கு மீட் பண்ணலாம்…” என,

“இப்போவே வாயேன்…” என்றான் யதுவீர்..

“என்னது…???!!!!” என்று லக்க்ஷனா கண்களை விரிக்க,

“எஸ் லக்க்ஷி.. நம்ம மீட் பண்ணி எத்தனை நாள் ஆச்சு.. என்னூட ரூம் பெருசு தான்.. ரெண்டு பேர் தாராளாமா ஸ்டே பண்ணலாம்…” என,

“அப்புறம்..” என்று அவள் தலையை ஆட்டிக் கேட்க,

“நிஜமாதான் லக்க்ஷி.. இதெல்லாம் ஒரு சான்ஸ்.. ப்ளீஸ் கம் வித் மீ…” என்று அவள் கரங்களை பிடித்து லேசாய் இழுப்பது போல் இழுத்தான்..

“யது… ஆர் யூ ப்ளேயிங்…” என்று லக்க்ஷனா, கொஞ்சம் அடக்கி வாசித்துக் கேட்க,

“நோ நோ… பட் ப்ளீஸ் கம் வித் மீ பேபி…” என்றான் திரும்ப..

“ஓ… காட்,, யது.. நீ போ.. என்ன பேச்சு இது.. உன் டீம் மேட்ஸ் எல்லாம் வெய்ட் பண்றாங்க…” என்று அவனை திரும்ப சொல்லி சொல்ல,

“ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று கெஞ்சிக்கொண்டு நின்றான் யதுவீர்..

சத்தியமாய் லக்க்ஷனாவிற்கு தர்மசங்கடமாய் போனது.. அவனோடு வந்தவர்கள் எல்லாம் அந்த வேனில் ஏறிட, அவளோடு வந்தவர்களோ ‘நீ பேசிட்டு வா…’ என்று கொஞ்சம் முன்னே சென்று அங்கிருந்த கார்டனில் இருந்தனர்..

இவனோ இப்படி செய்ய, லக்க்ஷனாவோ இந்த கொஞ்ச நேரத்தில் தவியாய் தவித்துப் போனாள்..

“லக்க்ஷி… லக்க்ஷி…” என்று சொல்லிக்கொண்டு யதுவீர் நிற்க,

“யது ப்ளீஸ்… நாளைக்கு ஃபுல் டே.. நம்ம ஸ்பென்ட் பண்ணலாம்..  இப்போ நீ போ..” என்று கண்களை உருட்டி மிரட்டி சொல்ல,

“ஹா ஹா பேபி… இந்த எக்ஸ்ப்ரசன் தான்.. ஐ லவ்ட் சோ மச்…” என்று அவள் கன்னத்தை தட்ட,

“அவளோ படவா ராஸ்கல்…” என்பதுபோல் பார்த்தாள்..

“ஹா ஹா ஹா ஓகே பை பேபி.. நாளைக்கு பார்ப்போம்…” என்றவன், அவளைக்கொண்டு போய் அவள் குழுவினரிடம் விட்டுவிட்டு, அவர்களிடமும் ஒருவார்த்தை பேசிவிட்டு வர, அவனுக்கான வேன் அங்கேயே வந்துவிட்டது..

லக்க்ஷனாவை திரும்ப திரும்ப பார்த்தபடி வேனில் யதுவீர் ஏற, “கேப்டன்…” என்ற சத்தம், வெளியே வர கேட்க, லேசாய் அசடு வழிந்தான் யதுவீர்..

அவனது கோச்சோ, “உன்னை இப்படி பார்க்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கு..” என்று அவன் தோளில் தட்ட, புன்னகையோடு தலையசைத்து அதை ஏற்றுக்கொண்டவனுக்கு, எப்போதடா நாளை வரும் என்று என்றிருந்தது..

அன்று இரவெல்லாம் யதுவீர் உறங்கவேயில்லை.. அடுத்து வரும் இரண்டு நாட்களும் அவனுக்கு ஃப்ரீ தான்.. ஆக அதை முழுதாய் லக்க்ஷனாவோடு கழிக்க எண்ணினான்.. அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதற்குள்ளேயே மனதில் ஆயிரம் கணக்குகள் போட்டுவிட்டான்..

லக்க்ஷனாவோ வேறெதுவும் நினைக்காது, யதுவீரைப் பார்த்ததை மட்டும் நினைத்தபடி அவளறையில் படுத்திருக்க,

“யதுவீர் சோ சிம்பிள் லக்க்ஷி…” என்று ரூப்பா சொன்னதற்கு,

“எஸ் …” என்று மட்டும் கூறியவள், அடுத்து ஒன்றும் பேசாமல் இருக்க, “ஹ்ம்ம் நீ ட்ரீம்ஸ்க்கு போ ம்மா…” என்ற ரூப்பா தன் உறக்கத்தை தொடங்கிட, அடுத்து கொஞ்ச நேரத்திலேயே யதுவீர் அழைத்துவிட்டான்..                          

வழக்கமான ஸ்வீட் நத்திங்க்ஸ் தான்.. கிட்டத்தட்ட நள்ளிரவு ஒரு மணிக்கு இருவரும் உறங்க, மறுநாள் காலையிலோ யதுவீறு ஐந்து மணிக்கே அழைத்துவிட்டான்..

உறக்கத்திலேயே “ஹலோ…” என,

“பேபி… கெட் ரெடி… ஜஸ்ட் ஹால்ப் ஹவர்ல அங்க இருப்பேன்…” என்றுமட்டும் சொல்லி யதுவீர் வைத்துவிட, அவளோ அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

‘ஹால்ப் ஹவரா…’ என்று நேரத்தை பார்க்க, அதுவோ ஐந்து என காட்ட,

‘இப்போவேவா…’ என்று நினைத்தபடி வேகவேகமாய் தயாரானவள், அடுத்து திரும்ப யதுவீர் அழைப்பதற்காக காத்திருக்க, சொன்னது போலவே அரைமணி நேரத்தில் அழைத்துவிட்டான்..

“கீழ பார்க்கிங்ல இருக்கேன்.. கம்மான்…” என,

அவளோ நன்றாய் உறங்கிக்கொண்டு இருந்த ரூப்பாவை எழுப்பி சொல்லிவிட்டு செல்ல, ரூப்பாவும் உறங்கியபடி ம்ம் ம்ம் என்று சொல்லி கையை ஆட்டி அனுப்பிவிட்டாள்..

 லக்க்ஷனா இதுவரைக்கும் நான்கைந்து முறை யதுவீரோடு காரில் பயணம் செய்திருக்கிறாள் தான்.. ஆனால் அதெல்லாம் சென்னையில்.. அதுவும் அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ.. ஆனால் இன்றோ முழுதாய் ஒரு நாள்.. அதுவும் அவனோடு.. முற்றிலும் வேறான இடத்தில் இதெல்லாம் நினைக்கையில் மூச்சடைத்து தான் போனது..     

பொழுது கூட இன்னும் சரியாய் புலரவில்லை, அந்த நேரத்தில் தனக்காக தயாராகி வந்தவளை யதுவீரின் கண்கள் காதலாய் தழுவ, காரில் லக்க்ஷனா ஏறியதுமே அவன் செய்த முதல் வேலை, அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டது தான்..

“லக்க்ஷி லக்க்ஷி…” என்று அவன் இதழ்கள் முணுமுணுக்க, முதல் முறையாய் அவனது அணைப்பில் ஒரு வித்தியாசம் அவளும் உணரச் செய்தாள்..

                                         

Advertisement