Advertisement

மனம் – 14

லக்க்ஷனாவிற்கு ஒருவித மனநிலை என்றால், யதுவீருக்கு  வேறொரு விதமான மனநிலை.. இருவரது வாழ்வுமே முற்றிலும் வேறானவை.. வாழ்வு மட்டுமில்லை அவர்களின் அனைத்துமே வேறானவை… ஆக காதல் என்று ஒன்று வந்தாலும், கல்யாணம் என்ற முடிவில் இருந்தாலும் இடையில் நடக்கும் விசயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இடர்களும் தருவதாய் இருந்தது..

அதிலும் அவர்களின் திருமண விஷயம்…

நீலம் யதுவீர் வீட்டில் பேசியிருக்க, அவர்கள் வீட்டிலும் பெரியதாய் எந்தவித ஆட்சேபனையும் வைக்கவில்லை.. ஆனால் யதுவீரின் பெரியப்பாவின் மகனது திருமணம் இன்னும் இரண்டு மாதத்தில் இருக்க, அது முடியவும் யதுவீர் – லக்க்ஷனா திருமண தேதி குறிப்போம் என்றுவிட, நீலமும் சரியென்று வந்து மீராவிடம் சொன்னார்..   

மீராவிற்கும் இதற்குமேல் எதுவும் அழுத்தி சொல்ல முடியாது என்பதால் நீலம் சொன்னதற்கு சரியென்று சொன்னவர், வீட்டிற்கு வந்ததும் நவநீதனிடம் பேசினார்.. இதெல்லாம் லக்க்ஷனாவும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.

நவநீதன் என்ன சொன்னாரோ, “சரிங்க எதுன்னாலும் நீங்க வந்தப்புறம் பேசிக்கலாம்..” என்று மீரா வைத்துவிட,  

‘அப்பாடி இப்போதைக்கு எதுவும் முடிவு பண்ணிட மாட்டாங்க.. கொஞ்ச நாள் யதுவும் டென்சன் இல்லாம இருப்பான்.. இந்த டோர்னமென்ட் நல்லபடியா முடியட்டும் முதல்ல…’ என்று நினைத்துக்கொண்டவள் அதையே அவனிடம் பேசும் போதும் சொல்ல,

“ஓ.. ஆமால்ல.. தென் லக்க்ஷி.. நீ மும்பை வர்றது போல இருக்கும்…” என்றான் நிதானமாய்..

“மும்பைக்கா நானா???” என்று லக்க்ஷனா அதிர்ச்சியும் குழப்பமாகவும் கேட்க,

“எஸ்.. யூ அண்ட் யூ ஒன்லி…” என,

“யது.. என்ன லவ் அண்ட் லவ் ஒன்லி போல சொல்ற…” என்று லக்க்ஷனா சிரிக்க,

“ஹா ஹா அது நமக்குள்ள… பட் நிஜமா நீ மும்பை வருவ…” என்றான் என்னவோ அவள் இப்போதே மும்பைக்கு கிளம்பி நிற்பது போல..

“என்ன உளர்ற யது…??”

“ட்ரூ பேபி… என் கசின் மேரேஜ் வருதுல்ல.. நாங்க ஜாயின் ஃபேமிலி தானே..சோ உங்களை எல்லாம் வந்து இன்வைட் பண்ணுவாங்க.. அப்போ நீ வருவதான…”

“நீ வருவியா…??”

“அப்கோர்ஸ்… நான் இல்லாமயா??? ஐம் தி விவிஐபி…” என்று யதுவீர் அலைபேசியில் பேசியபடி டீ ஷர்ட் காலரை லேசாய் தூக்கிவிட்டுக்கொள்ள,

“தோடா…. இந்த நினைப்பு வேறயா..” என்று நக்கலடித்தாள் லக்க்ஷனா..

“ஹே… நீ வருவதானே… என்னோட பிரண்ட்ஸ் எல்லாரையும் உனக்கு இன்ட்ரோ செய்யணும் லக்க்ஷி..” என்று கொஞ்சம் சீரியசாய் யதுவீர் கேட்க, அவளுக்கோ இவன் புரிந்து தான் பேசுகிறானா என்றிருந்தது..    

லக்க்ஷனா அமைதியாய் இருப்பதை கண்டு, “லக்க்ஷி…” என்று யதுவீர் திரும்ப அழைக்க, வீடியோ காலில் தன் முகத்தை என்னவோ யோசனையாய் பார்த்து அவன் அழைப்பது புரிந்தாலும்,

“ம்ம் சொல்லு யது..” என்றாள் அவளும்..

“என்ன சைலன்ட் ஆகிட்ட….??”

“இல்ல நீ கேட்ட க்வஸ்டீன் புரிஞ்சு தான் கேட்டியான்னு திங் பண்ணேன்..”

“வொய்???”

“பின்ன நமக்கு என்கேஜ் ஆகிடுச்சு… மேரேஜுக்கு முன்னாடி அப்படியெல்லாம் அனுப்ப மாட்டாங்க…” என, அவள் சொன்ன பிறகே அவனுக்குப் புரிந்தது.

அவனுக்கு இந்த மாதிரி பழக்கங்கள் எல்லாம் புதிது என்பதால், தங்கள் முறையில் என்ன நடக்குமோ அதை வைத்து லக்க்ஷனா வருவாள் என்று யதுவீர் தானாகவே நினைத்துக்கொண்டான்..

அதிலும் மும்பையில் இதெல்லாம் இப்போது சகஜமாய் போனது… அத்தனை ஏன் ஷீலு கல்யாணத்திற்கே, இப்படி சிலர், தாங்கள் திருமணம் செய்யபோகும் பெண்ணையோ இல்லை மாப்பிள்ளையையோ இல்லை அவர்களின் மொத்த குடும்பத்தையுமே அழைத்து  வந்திருந்தனர்..

அதுபோலவே தான் மும்பையில் நடக்கப்போகும் அவன் பெரியப்பா மகனின்  திருமணத்திற்கு லக்க்ஷனாவும் வருவாள் என்று யதுவீர் கனவு காண,

அவளோ இப்படிச் சொல்ல, “அப்.. அப்போ நீ வரமுடியாதா…??” என்றான் மனதில் தோன்றிய சின்ன ஏமாற்றத்தை முகத்தில் காட்டாது. ஆனாலும் அது கொஞ்சம் அவனது குரலில் எட்டிப்பார்க்க,

“ஹ்ம்ம்… இங்க அலோ பண்ணமாட்டாங்க யது… இன்வைட் பண்ணினா, கண்டிப்பா அம்மா, அப்பா இங்கிருந்தா அப்பாவும் வருவார்…” என,

“ஓகே.. லீவ் இட்.. அப்போ பார்த்துக்கலாம்…” என்று அந்த பேச்சை யதுவீர் முடிக்க, இவளுக்கோ பொசுக்கென்று ஆனது..

யதுவீர் சொன்னதுமே லக்க்ஷனாவிற்கும் ஆசைதான்.. திருமணத்திற்கு முன் ஒருமுறை மும்பை செல்லவேண்டும் என்று.. திருமணமாகி செல்வது வேறு.. யதுவீரின் காதலியாய் அங்கே செல்வது வேறொரு உணர்வல்லவா.. ஆனால் இங்கே அவர்கள் பக்கத்து வழக்கத்தில் இந்த மாதிரி பழக்கமெல்லாம் இல்லையென்பதால் லக்க்ஷனா இப்படி சொன்னாள்.

ஆனாலும் காதல் கொண்ட மனமல்லவா,

“நீ வந்துதான் ஆகணும்…”

“எனக்காக நீ வரமாட்டியா..”

“நான் உன்னை எதிர்பார்ப்பேன் லக்க்ஷி…” என்றெல்லாம் சொல்வானோ என்றெல்லாம் எதிர்பார்க்க, யதுவீரோ சட்டென்று ‘லீவ் இட்…’ என்றதும் அவளுக்கு என்னவோ ஒரு ஏமாற்றமும் மனதில் சூழ்ந்தது நிஜம்தான்..

“ம்ம்ம்….” என்று உதட்டை பிதுக்கி, அவனைப் பார்க்க, அவனோ என்னவென்பது போல தலையை லேசாய் தூக்க,

“ஒண்ணுமில்ல யது.. என்ன இப்போ ஃப்ரீயா இருக்க… அதுவும் இந்த டைம்ல..” என்றாள், கொஞ்சம் பேச்சை மாற்றி..

“ஆப்ட்நூன் இருந்து கொஞ்சம் ப்ரீ தான் பேபி… பட் இன்னும் ஒன் ஹவர்ல ஒரு இன்டர்வியூ இருக்கு..” என,

“இன்டர்வியூவா??  லைவா???” என்றாள் வேகமாய்..

“நோ நோ.. பட் டூ டேஸ் கழிச்சு டெலிகாஸ்ட் பண்ணுவாங்க…” என்றவன்,

“ஓகே லக்க்ஷி டேக் கேர்… முடிஞ்சா நைட் பேசுறேன்..” என்றவன் பறக்கும் முத்தங்களை அங்கிருந்தே பறக்க விட,

“ஓகே யது… எப்போ டெலிகாஸ்ட்னு டைம் சொல்லிடு…” என்றபடி அவளும் கையை அசைக்க,

“சியூர் பேபி…” என்றவன் “ஹே லக்க்ஷி…” என்று வேகமாய் அழைக்கவும், அவளும் என்னவோ சொல்ல வருகிறான் என்று

“ஹா யது…” என்று சீரியசாக முகத்தை வைத்துக் கேட்க,

“லவ் யூ பேபி….” என்று சொல்லி லேசாய் கண்ணடித்து சிரித்தவனிடம் இன்னமும் காதல் கொண்டது அவள் மனம்..

“ஹா ஹா… லவ் யூ டூ…” என்றவள், “நல்லா இண்டர்வியூ அட்டென்ட் பண்ணு…” என,

“நான் என்ன ஜாப் இன்டர்வியூவா போறேன்…” என்று கிண்டலாய் பார்த்தான்..

“போடா டேய்.. உனக்கு சொன்னேன் பாரு..” என்று வழக்கமாய் மொக்கை வாங்கினாலும் அதெல்லாம் எனக்கான பாராட்டுக்கள் என்பதுபோலான முக பாவனையை காட்ட,

“ஹா ஹா… நைஸ் ரியாக்ஷன்… சொல்ல முடியாது.. உன்னைப் பத்தி கூட க்வஸ்டீன்ஸ் கேட்கலாம்…” என்றான் சிரித்தபடி..

“ரியல்லி.. என்னைப் பத்தியா…??? என்ன கேட்பாங்க…” என்று லக்க்ஷனா ஆவலாய் கேட்க,

“அது தெரியாது லக்க்ஷி.. வர்ற ஹோஸ்ட் பொருத்து.. ஜாலியான பெர்சன்னா ஜாலியா லவ் லைப் பத்தி எல்லாம் கேட்பாங்க…” என்றான் அவள் முகத்தில் தோன்றிய ஆவலை ரசித்தபடி..

“நீ என்ன சொல்வ???” என்று கண்களை விரித்து, லக்க்ஷனா கேட்க,

“ஹ்ம்ம்…” என்று வேண்டுமென்றே யோசனை செய்வது போல் செய்தவன், “சொல்லிக்கிறது போல ஒண்ணுமில்லைன்னு சொல்வேன்..” என,

“ஹா…” என்று முறைத்தவள், அவன் சிரிப்பதை கண்டு, “இன்டர்வியூ பார்த்திட்டு அப்புறம் வச்சுக்கிறேன் உன்னை..” என்று மிரட்ட,

“இட்ஸ் மை ப்ளசர் பேபி…” என்றவன், “ஓகே லக்க்ஷி… டைம் ஆச்சு…” என்று சொல்ல,

“பை பை… யது…” என்று இங்கிருந்தே கையசைத்து அவனுக்கு விடைகொடுக்க, அவனும் அதுபோலவே செய்ய அடுத்த நொடி இருவரின் முகமுமே அலைபேசி திரையில் இருந்து மறைந்திட, யதுவீரோ உற்சாகமாக  கிளம்பி இன்டர்வியூக்கு சென்றான்.

லக்க்ஷனாவிற்கும் யதுவீரோடு இத்தனை நேரம் பேசியதில் மனம் லேசாகிருக்க, சந்தோசமாகவே சுற்றிக்கொண்டு இருந்தாள்.. மீராவிற்குமே கூட லக்க்ஷனா இப்படி மகிழ்வாய் வீட்டில் வளைய வருவது சந்தோசமாக இருந்தது.. எது எப்படியோ மகளது வாழ்வு எவ்வித குழப்பமும் இல்லாது நல்லபடியாய் சென்றால் போதும் என்று இருக்க,

நவநீதனும் இன்னும் ஒரு மாதத்தில் இந்தியா வந்துவிடுவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.. அவர் ஒரு இடமும், இப்படி குடும்பம் ஒரு இடமாக வீட்டின் பொறுப்பும் பிள்ளைகள் பொறுப்பும் என்று எல்லாமே மீரா தோளில் சுமந்துகொண்டு இருக்க, இன்று நவநீதன் வருகிறேன் என்றதுமே அவருக்கு யானை பலம் வந்தது போல் இருந்தது.

அங்கே யதுவீருக்கோ, அவனுக்கு செல்லும் நாட்கள் எல்லாம் வழக்கம் போலவே சென்றது. ஆனால் இப்போது கூடுதலாய் சில பல பொறுப்புகள் தனக்கு வந்திருப்பதாக தோன்ற, சில விசயங்களில் இரண்டு குடும்பத்தையும் பேலன்ஸ் செய்து போகவேண்டியதாய் இருந்தது.

ஆனாலும் இதெல்லாம் ஒரு புதுவித அனுபவமாய் இருக்க, அனைத்தையுமே ரசித்து தான் செய்தான்.. அதிலும் நிர்மல் அவ்வபோது அவனிடம் பேசும்போதெல்லாம் ‘அண்ணா…’ என்றழைப்பதும் பின் மாற்றி ‘மாமா…’ என்பதுமாக இருக்க, யதுவீருக்கோ சிரிப்பாய் இருந்தது.

“டேய் உனக்கு எப்படி கூப்பிட வருதோ அப்படி கூப்பிடு…” என,

“அதெல்லாம் இல்ல மாமாதான் சொல்லணும்…” என்றாள் லக்க்ஷனா…

“ஏன்..?? நான் எப்படிவேனா கூப்பிடுவேன்…” என்று நிர்மல் யதுவீர் சப்போர்ட்டுக்கு இருக்கிறான் என்று லக்க்ஷனாவை பேச,

“அதெல்லாம் முடியாது மாமான்னு தான் கூப்பிடனும்..” என்றாள் பிடிவாதமாய் லக்க்ஷனா..

“ஹா ஹா சரி சரி நிர்மல் மாமான்னே கூப்பிடு நிர்மல்…” என்றவன், “லக்க்ஷி.. நாளைக்கு நைட் இன்டர்வியூ டெலிகாஸ்ட் பண்றாங்க..” என,

“ஓகே… பார்த்துடுவோம்..” என்று லக்க்ஷனா, சொல்வதற்கு முன் யதுவீர் சொல்ல, அவனும் சிரித்துக்கொண்டே விடைப்பெற்றான்.

லக்க்ஷனாவோ, எப்போதடா மறுநாள் வரும் என்று காத்திருக்க, யதுவீர் சொன்ன நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே டிவி முன் அமர்ந்துவிட்டாள்.

“ம்மா ஆனாலும் இவ ரொம்ப பண்றாம்மா…” என்று நிர்மல் கத்த,

“டேய் சண்டை போடாம இருக்க பாருங்க..” என்று மீராவும் வந்து அமர, “இன்னும் டைம் இருக்கும்மா.. இப்போவே போடுறா…” என்றவனை,

“டேய் நீங்கல்லாம் பார்த்தப்போ நான் எதுவும் சொன்னேனா..” என்று லக்க்ஷனா எகிற, இவர்களின் சண்டை முடிவதற்குள் இண்டர்வியூ டெலிகாஸ்ட் ஆகத் தொடங்கியது.

“ஹே போட்டாச்சு போட்டாச்சு….” என்றபடி லக்க்ஷனா அவள் கவனத்தை எல்லாம் டிவியில் வைக்க,

அழகாய், மாடர்னாய்.. கவர்ச்சியாய் உடையணிந்த நவநாகரீக நங்கை ஒருத்தி அழகாய் ஒயிலாய் நிகழ்ச்சியாய் தொகுத்து வழங்கத் தொடங்க,

“லெட்ஸ் வெல்கம் ஒன் ஆப் மை ஃபாவரைட் ஸ்போர்ட்ஸ் பெர்சன்.. இந்தியாஸ் தி மோஸ்ட் ஹான்ட்சம் கபடி ஹீரோ…. யதுவீர்….” என்று ஏற்ற இறக்கங்களுடன் பேசி அவனை வரவேற்க,

யதுவீர் ஸ்டைலாய் புன்னகைத்தபடி, சுற்றி அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு கையை ஆட்டியபடி வர, “வாவ் வாவ் வாவ் வெல்கம் யதுவீர் ஜி…” என்றபடி அவனிடம் ஒரு பூங்கொத்தை நீட்டியவள் அப்படியே அவனை அணைக்க, யதுவீரும் மரியாதை நிமித்தமாக அவளை தோளோடு அணைத்தவன், பின் இருக்கையில் அமர, இதெல்லாம் டிவியில் பார்த்த லக்க்ஷனாவிற்கோ கண்கள் வட்டமாய் விரிந்தது….

அவளது பார்வை எல்லாம் இப்போது யதுவீரிடம் இல்லை, அவனை பேட்டி எடுப்பவளிடம் இருக்க,

‘என்ன டிரஸ் இது.. இவளுக்கு பெருசா எல்லாம் போட முடியாதா…?? இப்படி கட்டிப் பிடிக்கிறா.. அவனும் ஒண்ணும் சொல்லாம சிரிச்சிட்டு இருக்கான்…’ என்று அவள் மனம் கடிய, அவளுக்கு காதில் இருந்து புகை வரவில்லை. மற்றபடி உள்ளே நன்றாக எரிந்தது..

வார்த்தைக்கு வார்த்தை அந்தப்பெண் ஹாண்ட்சம் ஹாண்ட்சம் என்று சொல்ல, லக்க்ஷனாவிற்கோ அத்தனை கடுப்பாய் இருந்தது..

‘டேய்… நீ அடுத்து போன் பேசுறப்போ இருக்கு..’ என்று யதுவீரையும் லக்க்ஷனா விட்டுவைக்கவில்லை..

மீராவிற்கு நன்றாய் மகளின் மனநிலை புரிய, கொஞ்சம் சிரிப்பாக கூட இருந்தது அவருக்கு.

“லக்க்ஷி இதெல்லாம் சகஜம் டி…” என்று எதுவோ சொல்லவர,

“நீ சும்மாயிரும்மா..” என்றவள், உர்ரென்றே அமர்ந்திருக்க,

“ம்மா என்னவோ புகையிற மாதிரி இருக்குல்ல..” என்று நிர்மல் கலாய்க்க, “டேய் சும்மாயிரு டா…” என்று மீரா அதட்ட, லக்க்ஷனாவோ அதெல்லாம் கவனிக்கும் எண்ணத்திலேயே இல்லை..

ஒருவழியாய் பேட்டி, யதுவீரின் சிறுவயது காலம், அவனது கபடி ஆர்வம், கல்லூரி காலம், பின் நேசனல் ப்ளேயர் ஆனது என்று எல்லாம் கடந்து கடைசியில் லக்க்ஷனாவை பற்றியும் கேள்வி வர, யதுவீரின் புன்னகையும் அத்தனை நேரம் இருந்த ஜோசும் கூடியதாகவே இருந்தது…

‘லக்க்ஷனா…’ என்றதுமே அவன் கண்ணில் தோன்றிய மின்னல், தவறாமல் லக்க்ஷனாவின் கண்களும் பட, அத்தனை நேரமிருந்த கடுப்பு மாறி, சுவாரஸ்யமாய் அமர்ந்திருந்தாள்..

அப்போது பார்த்து நிர்மல் என்னவோ சொல்லவர, “டேய் சும்மா இரு..” என்று அவனை அடக்கியவள், இருக்கையின்  நுனியில் வந்து அமர,

“ஓகே யதுவீர்.. டெல் மீ சம் வோர்ட்ஸ் அபௌட் லக்க்ஷனா…??” என்று அந்தப்பெண் கேட்க,

யதுவீரோ “நான் தான் லக்க்ஷி.. லக்க்ஷிதான் நான்…” என்று சிம்பிளாய் சொல்வது போல் சொல்லிட,

யதுவீர் சொன்ன இந்த ஒரு வரியில் லக்க்ஷனாவிற்கு குபீரென்று உடலில் உள்ள மொத்த ரத்தமும் இதயதில் பாய்வது போல் இருக்க, நிச்சயமாய் அவள் யதுவீரிடமிருந்து இப்படியான ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது அவளைப் பார்க்கும் யாருமே சொல்வர்.

மீராவிற்குமே மனதிற்குள் கொஞ்சம் பெருமையாய் தான் இருந்தது. நல்ல ஒருவனைத் தான் தன் மகள் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்று தோன்ற, என்னதான் யதுவீர் சிறு வயதில் இருந்து அவர் பார்த்து வளர்ந்தவன் என்றாலும், இப்போது தனக்கு வரப்போகும் மருமகனாய் அவன் மீது தனி மதிப்பே உருவானது.

நிர்மல் லக்க்ஷனாவை திரும்பித் திரும்பிப் பார்க்க, அவளோ அசையாது அமர்ந்திருக்க, “அக்கா…” என்று அவளை அழைக்க, அவளோ திரும்பவேயில்லை..

“அக்கா… ஷோ முடிஞ்சது…” என்று அவளை உசுப்ப, “என்னடா…” என்று நிமிர்ந்தவள், டிவியைப் பார்க்க, விளம்பரம் ஓடிக்கொண்டு இருந்தது.

“என்ன பாக்குற… ஷோ முடிஞ்சது.. கிளம்பு கிளம்பு…” என, மீரா எங்கே என்று பார்க்க,

“அம்மா அப்போவே தூங்க போயாச்சு… நானும் போறேன்..” என்றவன் டிவியை ஆப் செய்துவிட்டு போக, லக்க்ஷனா வேகமாய் யதுவீருக்கு அழைத்தாள்..

அந்தோ பரிதாபம், அவள் அழைத்த நேரத்தில் யதுவீர் கொஞ்சம் பிசியாகி இருக்க, அவனது அலைபேசி சைலன்ட் மோடில் இருந்தது.. லக்க்ஷனா மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள அழைப்பு எடுக்கபடாமலே போக,

“ஹ்ம்ம்…” என்று முகத்தை சுருக்கி அமர்ந்திருந்தவள், “லவ் யூ லாட் யது…” என்று டைப் செய்து, கூடவே நிறைய ஸ்மைலிக்களையும் போட்டு அவனுக்கு ஒரு மெசெஜை தட்டிவிட்டவள், தானும் உறங்கச் சென்றாள்..

என்னதான் உறங்கவேண்டும் என்று முடிவு செய்து சென்றாலும் உறக்கம் வந்தால் தானே உறங்க முடியும்.. யதுவீரை காணவேண்டும் போலவே அவளுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது..

‘யது உன்னை பார்க்கனும் போல இருக்கு…’ என்று தன் அலைபேசியில் இருந்த புகைப்படத்திடம் பேசியபடி இருந்தவள் எப்போது உறங்கினாள் என்பது அவளுக்குத் தெரியாது..

ஆனால் அவள் யதுவை பார்க்கவேண்டும் என்று நினைத்தது யாருக்கு கேட்டதோ என்னவோ அவள் அலுவலகத்திற்கு நன்றாய் கேட்டது போல், லக்க்ஷனாவிற்கு அடுத்த நான்கு நாளில் டெல்லி செல்லும் வாய்ப்பு கிட்டியது.                    

 

  

       

 

 

    

              

   

Advertisement