மனம் – 13

யதுவீர் அப்போது தான் உடற்பயிற்சி எல்லாம் முடித்து அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு திரும்பியிருந்தான்.. தினசரி வழக்கம் என்றாலும், ஒவ்வொரு புது சூழலும்.. ஒவ்வொரு புது இடமும்.. ஒவ்வொரு புது புது மேட்ச்களும் அவனுக்கும் ஒவ்வொரு பாடத்தை கற்றுகொடுப்பதாவே அவன் நினைத்துகொள்வான்..

புதிய வீர்களுடன் விளையாட நேர்கையில், புதியவர்கள்தானே என்று அலட்சியமாய் இருக்காமல், அவர்களை கூர்ந்து கவனிப்பான். எதுவும் தனித்துவம் தெரிகிறதா என்று பார்ப்பான்.. இல்லை திருத்தங்கள் தேவைப்பட்டால், தானாகவே சென்று சொல்வான்.. ‘இப்படி பண்ணா நல்லாருக்கும்..’ என்று.

அவனது அணியின் கேப்டன்  என்பதையும் தாண்டி, அவனது அணி வீரர்களோடு நல்லதொரு நட்பு கிடைத்ததற்கு இதெல்லாம் ஒரு காரணம்.. அவனை விட வயதில் பெரியவர்களும் இருந்தனர், ரொம்ப சின்னவர்களும் இருந்தனர்.. ஆக அனைவரிடமும் ஆளுமையையும் காட்ட வேண்டும் அன்பையும் காட்ட வேண்டும்.. கண்டிப்பை காட்டும் இடத்தில் அதையும் காட்டிட வேண்டும்..

ஆக மொத்தம் விளையாட்டுத் துறை என்று முடிவு செய்தபின்னே, அவனுக்கான பயிற்சி என்று முதலில் கொடுத்தது எந்த சூழலிலும் தன்னிலை இழக்காமல் இருப்பது தான்.. வெற்றி, தோல்வி, அவமானம், புகழ் என்று எது வந்தாலும் அனைத்தையும் ஒரே தட்டில் வைத்து கடந்து வந்துவிட வேண்டும் என்பதே..

இன்றுவரைக்கும் அவன் கடைபிடிப்பதும் அது தான்.. ஒருவேளை யதுவீரின் இந்த திடம் தான் லக்க்ஷனாவைப் பற்றி கொஞ்சம் கூர்ந்து சிந்திக்க வைத்ததோ என்னவோ..

ஆனால் எப்போதுமே சூழல் ஒன்றுபோலவே இருக்காது அல்லவா?? பருவங்கள் மாறுவதுபோல் சில புதிய சங்கதிகளும் வாழ்வில் நடந்தேறும் அல்லவா.. அதுவும் காதல் என்று ஒன்று வந்தபிறகு.. நாம் எதிர்பார்க்காத சிலதுகள் நடந்து தானே ஆகும்.

யதுவீருக்கும் அன்றைய தினம் அப்படித்தான் இருந்தது.. அவன் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடக்கவும் செய்தன.. உடற்பயிற்சி முடித்து வந்தவன், கொஞ்ச நேரம் அப்படியே ஸ்போர்ட்ஸ் மேகஸின்ஸில் பார்வையை ஓட்ட,

அவனது அறையில் இருந்த தொலைபேசி ஒலி எழுப்பியது…. ஹோட்டல் ரிசப்சனில் இருந்து தான் என்று நினைத்துக்கொண்டே “ஹலோ ???” என்றான்..

அந்தப்பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ, “ஓகே.. சென்ட் தெம்…” என்று விட்டு, ‘யாரா இருக்கும்???’ என்று யோசிக்க, யாராக இருந்தாலும் சரி என்று அவர்கள் வருவதற்குள் கொஞ்சம் பிரெஷாக எண்ணி, வேகமாய் முகத்தை கழுவி போட்டிருந்த டி ஷர்ட்டை மாத்திவிட்டு கொஞ்சம் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அவனது அறையின் காலிங் பெல் அடித்தது..

மெல்ல கதவை திறந்தவனை “ஹே யது பய்யா….” என்று வந்து கட்டிக்கொண்டாள்  ஷீலு..

“ஹேய் ஷீலு… வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்…” என்று சொல்லியபடி அவனும் லேசாய் அணைத்து விடுவிக்க,    

“ஹா ஹா உம்மீட் நகி கி பய்யா.. (எதிர்பார்கலைல பய்யா)…” என்றபடி ஷீலு அமர, யதுவீரோ அவளுக்கு பின்னே பார்த்தான் இவள் மட்டுமா வந்தாள் என்று..

“கார் பார்க் பண்ணிட்டு வருவார்..” என்று சொல்லி சிரித்தவள், “லக்க்ஷி தான் சொன்னா நீ டெல்லி வந்திருக்கேன்னு.. ஏன் எங்க வீட்டுக்கு வரமாட்டியா.. ஹோட்டல்ல ஸ்டே பண்ணிருக்க…” என்று ஷீலு முகத்தை தூக்கும் போதே,

“சாரி ஷீலு.. மும்பை போறப்போ கண்டிப்பா உன் வீட்டுக்கு வந்திட்டுத்தான் போவேன்.. டீல்..” என்று யதுவீர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, லேசாய் கதவை தட்டிவிட்டு ஷீலுவின் கணவன் தன்வீர் உள்ளே வர,

“ஹாய் தன்வீர்…” என்று அவனோடு கரங்களை குலுக்கியவன், அவர்களை உபசரிக்கும் விதமாய் “என்ன ஆர்டர் பண்ணட்டும்…” என்று கேட்க,

“அதெல்லாம் வேணாம் பய்யா.. ஜஸ்ட் ஒரு ஹால்ப் ஹவர்ல கிளம்பிடுவோம்.. ஒரு பங்சன் நெக்ஸ்ட் ஸ்ட்ரீட்ல இருக்க ரெசிடென்சில.. தென் லக்க்ஷி நீ இங்க இருக்க சொல்லவும் அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்..” என்று ஷீலு சொல்ல, அடுத்து அப்படியே பேச்சு தொடர்ந்தது..

அங்கே சுத்தி இங்கே சுத்தி பேச்சு யதுவீர், லக்க்ஷனாவின் திருமணத்தில் வந்து நிற்க,

“லக்க்ஷி வீட்ல கொஞ்சம் ஃபாஸ்ட்டா மேரேஜ் வச்சா நல்லதுன்னு பீல் பண்றாங்க போல…” என்று ஷீலு சொல்ல, இந்த விஷயம் யதுவீருக்கு முற்றிலும் புதிது.. முதல் நாள் இரவுகூட லக்க்ஷனாவோடு பேசினானே..

அவள் ஒன்றுமே இப்படி சொல்லவில்லையே என்று தோன்ற, ஒரு நாள் இரவில் இத்தனை நடந்து அது ஷீலு வரைக்கும் வந்திருக்குமா என்று யோசனையாய் இருந்தது..

“பய்யா.. என்ன திங்கிங்… மேரேஜ் டென்சனா??” என்று ஷீலு கேட்க,

“மேரேஜ்னாலே டென்சன்தான்…” என்று தன்வீர் சொல்ல, “கியா???!!!!!” என்று கேட்டபடி ஷீலு முறைக்க, யதுவீருக்கு சிரிப்பாய் இருந்தது..

இருவரையும் பார்த்து அவன் சிரித்துக்கொண்டு இருக்க, “பய்யா திஸ் இஸ் டூ மச்…” என்று ஷீலு முறைக்க, இம்முறை தன்வீரும் சிரிக்க, அப்போதைக்கு யதுவீர் அந்த விசயத்தை அப்படியே ஒதுக்கிவிட்டு அவர்களோடு பேசவேண்டிய நிலை..

ஆனால் உள்ளே ஒரு உறுத்தல் இருந்துகொண்டே தான் இருந்தது. ஷீலுவிற்கு தெரிந்திருக்கிறது என்றால், கண்டிப்பாய் லக்க்ஷனா தான் சொல்லியிருப்பாள். ஆனால் ஷீலுவிடம் சொன்னவள் தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று தோன்றிக்கொண்டே இருக்க, இவர்கள் கிளம்பியதும் லக்க்ஷனாவோடு பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்..

ஷீலுவும் தன்வீரும் சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் கிளம்பிட, கதவை அடைத்துவிட்டு வந்தவன், வேகமாய் அலைபேசியை எடுக்க, அவன் லக்க்ஷனாவிற்கு அழைப்பதற்குள், அவனது கோச் அழைத்துவிட்டார்..

“ஹா ஜி…” என்றவன், “ஜஸ்ட் பிஃப்டீன் மினிட்ஸ்..” என்று சொல்லிவிட்டு வைத்தவனுக்கு அப்படியே கிளம்பி செல்ல நேர்ந்தது..

லக்க்ஷனாவோடு பேசவேண்டும் என்றால், கொஞ்சம் நிதானமாக ரிலாக்ஸாக பேசவேண்டும் கிளம்பும் அவசரத்தில் எல்லாம் பேசக்கூடாது என்றிருக்க, வந்து பேசிக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு, வேகமாய் குளித்து கிளம்பிச் சென்றான்..

அங்கே போனாலோ, அவனது கோச்சும், அவனது மற்ற டீம் மேட்கள் ஒருசிலரும் இருக்க, மற்றவர்கள் வருவதற்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்க, பொதுவாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு யதுவீர் அங்கே அமர,

“ஒன் ஆட் சூட் யது.. இப்போதான் ஸ்பான்சர் கால் பண்ணார்.. டெல்லி டோர்னமென்ட் பேஸ் பண்ணி பைவ் மினிட்ஸ் ஆட் ப்ளஸ் அவங்க ப்ராடக்ட் ப்ரொமோட் பண்றதுபோல..” என,

“ஓ..” என்று கொஞ்சம் யோசித்தவன், “எங்க சூட்டிங்??” என்று கேட்க,  அவரும் இடத்தை சொல்ல, அடுத்து அதற்கான வேலைகள் ஆரம்பித்தன…

அனைத்தும் முடிந்து யதுவீரும் அவனது குழுவினரும் மீண்டும் தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வர, மாலை ஆகிவிட்டது.. அடுத்து கொஞ்ச நேரத்தில் ப்ராக்டிஸ் கிளம்பிடவேண்டும என்று யதுவீர் நினைத்துக்கொண்டு இருக்கும் போதே,

“ஓகே கைஸ்… ஒன் ஹவர்ல ப்ராக்டிஸ் வந்திடுங்க…” என்று கோச் சொல்லிவிட்டு செல்ல, யதுவீர் அறைக்கு வந்தவனோ தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க,

பூனம் அழைத்திருந்தார்.. பின் லக்க்ஷனாவும் இரண்டொரு முறை அழைத்திருந்தாள்.. அப்படியே கொஞ்ச நேரம் அலைபேசியை பார்த்தபடி இருந்தவன், முதலில் பூனம் எண்ணை அழுத்த, அவர் வழக்கமான நல விசாரிப்புகள் மட்டுமே பேச,

யதுவீருக்குத் தான் மனம் யோசனையாகவே இருந்தது.. “ஆவ்ர் குச் நஹி மாம்… (வேறொன்றுமில்லையே..)” என்று திரும்ப திரும்ப கேட்க, பூனமும் ஒன்றுமில்லை என்று சொல்லி வைத்தார்.

பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை ஒரே சிப்பில் காலி செய்தவன், அடுத்து லக்க்ஷனாவிற்கு அழைக்க, அவளோ முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவள் “யது…” என, அவளது அந்த ஒற்றை அழைப்பில் அத்தனை காதல் தெரிந்தது யதுவீருக்கு..

“லக்க்ஷி பேபி…” என்று யதுவீரும் மனதில் இருக்கும் யோசனைகளை எல்லாம் விடுத்தது அழைக்க,

“சார் பிசியா?? என்ன பண்ற??” என்று வழக்கமாய் விசாரிக்க, யதுவீரும் அன்றைய நடப்புகளை சொன்னவன், கடைசியாய்

“பேபி… மார்னிங் ஷீலு அண்ட் தன்வீர் வந்திருந்தாங்க..” என,

“வந்துட்டாளா…. நான் ஒரு ப்ளோல சொன்னேன் யது இஸ் தேர்னு.. அப்படியே எங்க என்னனு விசாரிச்சு லாஸ்ட்ல வந்து பார்க்கவும் செஞ்சிட்டாளா…” என்று லக்க்ஷனா ராகம் இழுத்து சொல்ல,

“ஹா ஹா.. பின்ன.. நான் அவளோட லவ்வபிள் பய்யா ஆச்சே…” என்று யதுவீர் விட்டுக்கொடுக்காமல் சொல்ல,

“ஆமாமா… ரெண்டுபேருக்கும் டெல்லிலையும் சென்னைலையும் ஒரு சிலை வச்சிடலாம்..” என்று லக்க்ஷனா விடாது கிண்டல் பேச, யதுவீருக்கு ஒருநொடியில் குழம்பித்தான் போனது மனது..

ஷீலு சொன்னது அப்போ என்ன?? லக்க்ஷனாவோ அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்பதுபோல் பேசிக்கொண்டிருக்க, இதை இவளிடம் கேட்டால் தான் சரிவரும் என்றெண்ணி

“லக்க்ஷி… வாட்ஸ் கோயிங் தேர்???” என்று கேட்டேவிட்டான்..

“ஹா.. என்ன?? என்ன யது??” என்று லக்க்ஷனா அவன் கேட்பது என்னவென்று புரியாமல் திரும்பக் கேட்க,

“ஹ்ம்ம் மார்னிங் ஷீலு வந்திருந்தாள்ள..” என்றவன் அவள் சொன்னவற்றை சொல்ல,

“ஓ…” என்று சொன்ன லக்க்ஷனா அதற்குமேல் எந்தபதிலும் சொல்லாமல் இருக்க,

“லக்க்ஷி…” என்றவனின் ஆழ்ந்த அழைப்பு, அவளை உசுப்பியது..

“ம்ம் யது…”

“எதுவும் பிராப்ளமா???”

“நோ நோ…”

“பின்னே.. ஷீலு இப்படி ஒரு விஷயம் சொல்றா.. பட் நீ அப்படி எதுவுமே இல்லைங்கிற போல இருக்க.. நீ சொல்லாம ஷீலுக்கு எப்படி இது தெரியும்..??” என்றவனின் குரலில் தெரிந்த ஒருவித குழப்பம், அவளுக்குப் புரிய,

“ஷ்… யது.. ரிலாக்ஸ்… ஒண்ணும் பிராப்ளம் எல்லாம் இல்லை…” என்று முதலில் அவளை சமாதானம் செய்தவள், மீராவிடம் உறவினர்கள் சொன்னதையும், பின் மீராவும் நீலமும் பேசியதையும் சொல்ல,

“ம்ம்…” என்று கேட்டவன், “இதெல்லாம் நீ என்கிட்ட தானே சொல்லிருக்கணும்.. ஷீலு சொல்லி தான் தெரிஞ்சுக்கனுமா..” என்றான் கொஞ்சம் கோவமாய்..

அவன் குரலில் தெரிந்த கோவம், அப்படியே யதுவீரின் கோப முகத்தை தன் கண் முன்னே தெரிய, லக்க்ஷனாவிற்கு அப்போது லேசாய் ஒரு புன்னகைதான் வந்தது.. அவள் மீது கொண்ட உரிமை கொடுத்த கோபமல்லவா இது… ஆக அவன் கோபம் கண்டு கொஞ்சம் இதமாகத் தான் இருந்தது.

“மை டியர் யது…. கொஞ்சம் ப்ரைன் யூஸ் பண்ணுங்க கேப்டன்… உன்கிட்டயே சொல்லாத ஒரு விசயத்த நான் வேற யார்கிட்ட சொல்லிருப்பேன்…” என்று அவள் கேட்டவிதத்தில், லேசாய் அவன் தலையில் தட்டிக்கொண்டவன்,

“ஹ்ம்ம்.. டக்குன்னு கோவம் வந்திடுச்சு…” என்றான் சமாளிப்பாய்..

“தெரியுது தெரியுது… நீலம் ஆன்ட்டி ஷீலுட்ட சொல்லிருப்பாங்க” என்றவள்,

“யது.. இதெல்லாம் வழக்கமா நடக்கிற விசயங்கள் தான்.. சோ நீ எதுவும் கன்பியுஸ் ஆகாத… மேட்ச்ல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு.. ஓகே வா..” என,

“ஹ்ம்ம் தட்ஸ் குட் பேபி…” என்றவன், “அங்கிள் என்ன சொல்றாரு??” என்றான்..

“அப்பாக்கு எப்படியும் ரிலீவ் ஆகி வர த்ரீ மந்த்ஸ் ஆகும் யது.. சோ மேரேஜ்னா அதுக்கு மேலதான்.. உன்னோட டைமிங்க்ஸ் பொருத்து தான்..” என்று சரியாய் அவனது சூழலை கணித்து சொல்ல,

“ஹ்ம்ம் லக்க்ஷி.. நெக்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் நானுமே மேட்சஸ்ல கமிட்டட்.. மேரேஜ் ஆச்சுன்னா அட்லீஸ்ட் ஒரு த்ரீ ஆர் ஃபோர் மன்த்ஸ் ஆது நம்ம மும்பைல ஒண்ணா இருக்கணும்…. இதெல்லாம் கால்குலேட் பண்ணா அட்லீஸ்ட்  ஒரு பைவ் மன்த்ஸ் கழிச்சு மேரேஜ் வச்சா ஐ பீல் வெரி பெட்டர்… அதுக்குள்ள நம்மளும் நிறைய நிறைய லவ் பண்ணிக்கலாம்…” என,

“ஓ.. அதுக்கப்புறம் லவ் பண்ண மாட்டியா???” என்றவளின் கேள்வி வந்த தினுசிலே அவள் அங்கே எப்படியான முக பாவனை வைத்திருப்பாள் என்பது யதுவீருக்கு நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது..

“பேபி இப்போ நீ இப்படிதானே இருக்க..” என்றவன் கொஞ்சம் அவன் மனதில் தோன்றிய லக்க்ஷனாவின் பாவனைகளை விளக்க,

ஏறக்குறைய அவன் சொன்னது சரியாய் இருக்கவும், “யது…!!!!” என்று ஆச்சர்யத்தில் கண்களை உருட்டினால் லக்க்ஷனா..

அதையும் அவன் சரியாய் சொல்ல, இருவருக்குமே அடுத்து சிரிப்புதான் வந்தது..    லக்க்ஷனாவிற்கு யதுவீரின்  மனநிலை நன்றாக புரிந்தது.. யாருக்குமே அவரவர் மனநிலை முக்கியம்தான். ஆனால் யதுவீரின் துறையிலோ அது ரொம்பவே முக்கியம்.

அதிலும் அவன் ஒரு அணியை தலைமை தாங்கி நிற்கிறான். ஆக வேறெதற்கும் அவனது கவனமோ இல்லை சிந்தனைகளோ சென்றிட கூடாது என்பது லக்க்ஷனாவிற்கு மிக நன்றாகவே தெரியும்.. ஆகையினால் தான் இதெல்லாம் யதுவீரிடம் அவள் சொல்லாமல் விட்டது. ஆனால் ஷீலு சொல்லிடுவாள் என்று யாருக்குத் தெரியும்..

இங்கே எதுவென்றாலும் சமாளித்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தவள், இதெல்லாம் பெரும் பிரச்சனை இல்லை என்று ஒருவழியாய் அவனை சமாதானம் செய்திட,

அதன் பின்னான பேச்சுக்கள் அவர்களுக்கு வழக்கமானதாய் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சலாய் மிஞ்சலாய் செல்ல, பேசிக்கொண்டே நேரம் பார்த்தவன்,

“லக்க்ஷி… சாரி சாரி பேபி.. இட்ஸ் கெட்டிங் லேட்.. ப்ராக்டிஸ் போகணும்…” என்று சொல்ல,

“ம்ம் ஓகே…” என்றாள் சுரத்தே இல்லாமல்..

“ப்ளீஸ் ப்ளீஸ்.. லக்க்ஷி.. நைட் வீடியோ கால் வர்றேன்…” என்று கொஞ்சம் அவளை ஐஸ் வைக்க,

“ம்ம் ம்ம் சரி.. இப்போ கிளம்பு…” என,

“கொஞ்சம் ஸ்மைல் பண்ணா என்ன??” என்றான் அவளை கடித்துவிடுவேன் என்ற பாவனையில்..

“ஈஈஈ…” என்று இளித்தவள், “போதுமா…” என,

“ஹா ஹா பேபி அப்படியே ஒரு செல்பி ப்ளீஸ்…” என்றவனை “போடா டேய் போடா…” என்று சொல்ல,

“ஹ்ம்ம்.. இட்ஸ் ஆல் மை டைம்..” என்று அவனும் சொல்ல..

“ஓகே நான் சொல்லிக்கொடுத்த போல ப்ராக்டிஸ் பண்ணு…”  என்று சொல்லிவிட்டு அவன் பதில் சொல்லுமுன்னே வைத்துவிட்டாள்..

“ஹா ஹா லவ்லி பேபி..” என்று அலைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தை நொடிப்பொழுதேனும் பார்த்தவன், அதற்கொரு முத்தமொன்றையும் கொடுத்துவிட்டு, குளிக்கச் சென்றான்..

யதுவீரோடு பேசிவிட்டு அலைபேசியை வைத்தவளுக்கோ இதை பற்றி மீராவிடம் பேசவேண்டும் என்று தோன்றியது…. அப்போது தான் ஆபிஸில் இருந்து வந்திருந்தாள்.. வழக்கத்தை விட இன்று சீக்கிரமே வந்திட, மீராவும் சரி, நிர்மலும் சரி இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை..

எப்போதடா வருவார்கள் என்று காத்திருக்க, கொஞ்ச நேரத்தில் அம்மாவும் மகனும் வந்து சேர்ந்தார்கள்.

“என்னம்மா இன்னிக்கு லேட்…” என்று லக்க்ஷனா விசாரித்துக்கொண்டே அவர் கையில் இருந்த பையை வாங்க,

“ஆனுவல் டே.. ஸ்போர்ட்ஸ் டே எல்லாம் வருதுல்ல லக்க்ஷி.. சோ மீட்டிங்.. இவனும் எனக்காக வெய்ட் பண்ணினான்..” என்றவர் உள்ளே வந்து அமர்ந்தபடி

“நீ என்ன சீக்கிரம் வந்திட்ட..” என,

“ஆமா ம்மா.. ஈவ்னிங் ஒரு கிளைன்ட் மீட்டிங்.. முடியவும் கிளம்பியாச்சு..” என்றவள், நிர்மல் எங்கே என்று பார்க்க, அவனோ உள்ளே அறையில் இருப்பது தெரிய,

“என்ன விஷயம் லக்க்ஷி…” என்று நேராக விசயத்திற்கு வந்திருந்தார் மீரா..

“இரும்மா உனக்கும் அவனுக்கும் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்றவள், சொன்னதை செய்ய,

“இனிமே காஃபி எல்லாம் குடிக்காதக்கா நல்லா மசாலா டீ.. ஏலக்கா டீன்னு வெரைட்டியா டீ குடி… அப்போதான் மும்பைக்கு போய் உனக்கு செட்டாகும்..” என்று நிர்மல் கிண்டல் செய்ய,

“உனக்கு போயி கொண்டுவந்தேன் பாரு.. போடா…” என்று அவன் தலையில் கொட்டிவிட்டு வெளியே வர,

“உனக்கு போயி சொன்னேன் பாரு..” என்று பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து அவள் மீது வீச, அதுவோ அவளைத் தாண்டி வந்து வெளியே விழுந்தது..

“ஆரம்பிச்சுட்டீங்களா??? கல்யாணம் ஆகப் போறவ போலவா டி பீகேவ் பண்ற நீ??” என்று மீரா திட்டிக்கொண்டே அந்த துண்டை எடுத்து மீண்டும் அறைக்குளே வைத்துவிட்டு வந்தவர்,

“சொல்லு லக்க்ஷி.. என்ன விஷயம்..” என,

“என் கல்யாணம் தான் ம்மா விஷயம்…” என்றவள், யதுவீர் சொன்னதையும், அவள் மனதில் இருப்பதையும் சொல்ல,

“என்ன லக்க்ஷி ரெண்டுபேரும்  இப்படி சொல்றீங்க???” என்று மீரா கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் கேட்டார்..

“ஏன்ம்மா அப்பா வர்றதுக்கு எப்படியும் த்ரீ மன்த்ஸ் ஆகுமே.. அப்படியே யது சொன்னதுபோல பார்த்தா மேற்கொண்டு டூ மன்த்ஸ் தானே..” என்றாள் லக்க்ஷனா.

“பார்க்கலாம் லக்க்ஷி.. ஏற்கனவே என்கேஜ்மென்ட் முடிஞ்சு டூ மன்த்ஸ் ஆச்சு.. இன்னும் பைவ் மன்த்ஸ்னா ஹ்ம்ம்…” என்று யோசித்தவர்,

“சரி பாப்போம்.. எதையுமே இப்போவே முடிவு பண்ண முடியாது.. நீலம் பூனம் கிட்ட பேசுறேன் சொல்லிருக்கா..” என,

“ம்ம் சரிம்மா..” என்றவள், யோசனையாய் அமர்ந்திருக்க,

“எதையுமே ரொம்ப லேட் பண்ண கூடாது லக்க்ஷி.. பெரியவங்க சொல்றதுல சில காரணங்களும் இருக்கும்..அதுனால இதெல்லாம் நீங்க பெருசு பண்ண கூடாது..” என்று மீரா சொல்ல,

“ம்ம் சரிம்மா..” என்றாள் அப்போதும்…

ஆனால் லக்க்ஷனாவின் மனமோ யதுவீர் வீட்டில் என்ன சொல்வார்களோ என்றே நினைத்துக்கொண்டு இருந்தது..