Advertisement

மனம் – 10

நிச்சயதார்த்த தேதி முடிவாகி, நெருங்கிய உறவுகள் ஒருசிலருக்கும் கூட அழைப்பு வைத்தாகி விட்டது.. லக்க்ஷனாவின் வீட்டிலேயே சிம்பிளாய் நிச்சயமும், பின் மூன்றோ இல்லை நான்கு மாதம் கழித்து நவநீதன் இந்தியா திரும்பியதும் திருமணத் தேதி குறித்து, சென்னையில் திருமணமும், மும்பையில் ரிசப்சனும் நடத்துவதாக முடிவு செய்யப் பட்டிருந்தது..

நெருங்கிய வட்டத்தில் அழைக்கையில் கொஞ்சம் பேச்சுக்களும் விசாரிப்புகள் ஒருமாதிரி வந்ததுதான்..

‘அப்போ நெட்ல வந்தது எல்லாம் உண்மையா.. அதுனால தான் இவ்வளோ அவசரமா நிச்சயம் வைக்கிறீங்களா…’

‘இதெல்லாம் ஒத்து வருமா.. ஆயிரம் சொன்னாலும் நம்ம ஆளுங்கல்ல கொடுக்கிற மாதிரி வருமா???’

‘என்னவோ பாத்து பண்ணுங்க.. இந்த காலத்துல இதெல்லாம் சகஜமா போச்சு..’

என்பதுபோலான ஏச்சு பேச்சுக்கள் வர, ஆரம்பத்தில் பெரியவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும், பின், ஒரேதாய் சொல்லிவிட்டார்கள்.

‘பிள்ளைகளின் விருப்பப்படி வாழ்க்கை அமைத்துத் தருகிறோம்..’ என்று பேச்சை முடித்துவிட்டனர்.    

பெரியவர்கள் இத்தனை முடிவுகள் எடுத்திருந்தாலும், சிறியவர்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருந்ததாக இல்லை.. யதுவீர் அங்கே வந்து சென்ற பிறகும் கூட லக்க்ஷனா அவளாக அவனிடம் பேசவும் முயற்சிக்கவில்லை, அழைக்கவுமில்லை..

‘சொல் சொல் என்றானே.. என்னிடம் கேட்காமல் திருமணம் வரைக்கும் கொண்டுவந்து விட்டானே..’ என்பது ஒருபுறம் இருந்தாலும்,

‘ஒருவேளை இப்படியெல்லாம் செய்தி வந்ததனால் தானோ என்னவோ யதுவீர் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறான்..’ என்பதும் அவள் மனதில் தோன்றி அவ்வப்போது வதைத்துக்கொண்டு இருந்தது..

ஆனால் யதுவீரோ ‘இப்போவாது பேசுறாளா?? இவ்வளோ தூரம் வந்தும் ஒருவார்த்தை கேட்கல.. என்னை கேட்காம ஏன்டா இப்படி பண்ண அப்படின்னு ஒரு சண்டைக் கூட போடல…’ என்று எண்ணிக்கொள்ள இருவருக்குமே அடுத்து அவரவர் வேலைகள் அவர்களை இழுத்துக்கொண்டது..

யதுவீருக்கோ அடுத்து யாரிடமும் பேசும் நேரமும் இல்லை.. ப்ராக்டிஸ்.. கோச்சிங்.. மேட்ச் என்று அடுத்தடுத்து அவனுக்கு நாட்கள் சரியாக செல்ல,  அங்கே லக்க்ஷனா வீட்டிலோ, முதல் இரண்டொரு நாள்,  நவநீதன் மகளிடம் சரியாக பேசாமல் இருக்க, அவளுக்கு எப்படியோ போனது,

“ப்பா… இப்போ கூட நான் யதுக்கிட்ட பேசலப்பா.. உங்களுக்குப் பிடிக்கலைன்னா வேணாம்.. இந்த போட்டோஸ் வந்ததுனால தான் இந்த கல்யாணம்னா வேணவே வேணாம் ப்பா.. ப்ளீஸ் நீங்க எப்பவும் போல இருங்க…”   என்ற மகளிடம் அதற்குமேல் அவரால் முகம் திருப்ப முடியவில்லை..

‘என்ன பேச்சு இது..’ என்று மீரா கூட முறைக்க, நவநீதனோ ‘பார்த்தியா என் பொண்ணு எப்படின்னு..’ என்று மனைவியை பெருமிதமாய் பார்த்தவர்,

“நீ எதுவும் நினைக்காம சந்தோசமா இரு… மேரேஜ்க்கு முன்னாடி வர இந்த டைம் ரொம்ப ப்ரீசியஸ்.. மிஸ் பண்ணிடாத..” என்று மகிழ்ச்சியாக பேசிய தந்தையை

“தேங்க்ஸ் ப்பா…” என்று கட்டிக்கொண்டாள்.

அதன் பின் ஒருநாள் மாலை அங்கே நீலம், பூனம், ஷீலு மற்றும் அவள் கணவன் எல்லாம் வந்திருக்க, லக்க்ஷனா அப்போது தான் அலுவலகம் விட்டு வந்தாள்.

அவள் உள்ளே நுழையும் போதே ஷீலு வந்து “டூ ஹாப்பி டி” என்றபடி அவளைக் கட்டிக்கொள்ள, மற்றவர்கள் முன்னிலையில் லக்க்ஷனாவிற்கு கொஞ்சம் கூச்சமாய் தான் போனது..

வந்திருந்தவர்களை வரவேற்றபடி கொஞ்சம் தயங்கியே அங்கே நிற்க, “ம்மா.. பிடிக்காது பிடிக்காது சொல்லியே பய்யாவ  கரக்ட் பண்ணிட்டா…” என்று ஷீலு சொல்ல,

‘இவளுக்கு எப்படி தெரியும்..’ என்பதுபோல் லக்க்ஷனா பார்க்க, “நான் தான் சொன்னேன் லக்க்ஷி..” என்றார் மீரா..

அது இன்னும் சங்கடமாய் போனது லக்க்ஷனாவிற்கு..

‘அவன்கிட்ட கூட நான் இன்னும் எதுவும் சொல்லல… அம்மா எல்லார்கிட்டவும் சொல்லிட்டாங்களே…’ என்று அசடு வழிந்து தான் நின்றிருந்தாள் லக்க்ஷனா.   

பூனம் அவளிடம் வந்தவர் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு, “இப்போதான் சந்தோசமா இருக்கு லக்க்ஷி… எங்க இந்த பிராப்ளம்னால இந்த கல்யாணமா அப்படின்னு யதுக்கிட்ட கேட்டப்போ இதைவிட லக்க்ஷிய அசிங்கப்படுத்த வேற காரணம் இருக்காதுன்னு சொல்லிட்டான்.. அவளை எனக்கு பிடிச்சிருக்கு பேசுங்க.. அவ இல்லாட்டின்னு சொன்னவன் அடுத்து அப்படியே எழுந்து போயிட்டான்..

ஒருவேளை இங்க, இந்த பிரச்சனைனால தான் இந்த கல்யாணத்துக்கு சரி சொன்னாங்கலோன்னு நினைச்சேன்.. ஆனா உன் மனசுலயும் அவன்மேல பாசமிருக்கப்போ கண்டிப்பா என்ன பிரச்சனை வந்தாலும் அதெல்லாம் ஒண்ணுமேயில்லைன்னு ஆகிடும்..” என்று மனம் நிறைவாய் சொன்னவரின் பேச்சு லக்க்ஷனாவின் மனதிற்குள் வேறுவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியது..

முதல் விஷயம் யதுவீர் எதனால் இந்த திருமண முடிவை எடுத்தான் என்பது.. கண்டிப்பாக நடந்த பிரச்னைகளுக்காக இல்லை என்பதே அவளுக்கு மனதில் சொல்லொணாத சந்தோசத்தை கொடுத்தது என்றால்,

அடுத்து பூனம் கூறியது ‘அவளை எனக்கு பிடிச்சிருக்கு..’ என்று யதுவீர் கூறியதாய் சொன்னது, அவளது இதயத்தை மனம் மயக்கும் மலர்களை கொண்டு பூச்செரிய தான் செய்தது.

‘அப்.. அப்போ யதுக்கும் என்னை பிடிக்குமா…’ எனும்போதே அவனை அப்போதே காணவேணும் போல இருக்க, அப்போதே பேசவேணும் போல இருக்க, இத்தனை பேர் இருக்கையில் எதையும் செய்ய முடியாமல்,

‘எல்லாரும் வந்திருக்காங்க.. இவனும் வந்தா என்ன..’ என்று லேசாய் அவனை குறைபட்ட மனதோடு  அப்படியே நிற்க,

“போ லக்க்ஷி… போய் டிரஸ் மாத்திட்டு பிரெஷ் ஆகிட்டு வா…” என்று நீலம் சொல்ல, மீராவும் போ என்பதுபோல் தலையை ஆட்ட, அவளறைக்கு வந்தவள், வேகமாய் அலைபேசியை எடுத்து யதுவீருக்குத் தான் அழைத்தாள்.

அந்த நேரத்தில் லக்க்ஷனாவிற்கு வேறெதுவும் எண்ண தோன்றவில்லை. அவள் மனதில் இருப்பதை சொல்லாமலே, அவனாகவே அவள் மீது விருப்பம் கொண்டு இதெல்லாம் செய்திருக்கிறான் என்பதே அவளுக்கு வேறு எதையும் நினைக்கவிடாமல் செய்தது..

யதுவீர் மட்டுமே நினைவில் இருக்க, அவனுக்கு அழைத்துவிட்டாள். ஆனால் அழைப்பு சென்றுகொண்டே இருந்ததே தவிர, அவன் எடுப்பதாய் தெரியவில்லை..

‘டேய் போன் எடு…’ என்று தனக்கு தானே முணுமுணுத்துக்கொள்ள, ம்ம்ஹும் அந்தப்பக்கம் இருந்து எந்தவித பதிலும் இல்லாமல் போக,

“லக்க்ஷி… கொஞ்சம் சீக்கிரம் ரெடியாகி வெளிய வா…” என்று மீரா கதவருகே வந்து சொல்வது கேட்க,

“இதோம்மா.. பைவ் மினிட்ஸ்..” என்றவள், அலைபேசியை தூக்கி மெத்தையில் போட்டுவிட்டு, வேகமாய் தயாராகி வெளியே வந்தாள்.

என்னவோ என்றும் இல்லாத பதற்றம் வந்து இன்று ஒட்டிக்கொள்ள, வெளியே இருப்பவர்கள் எல்லாம் தான் சிறு வயதில் இருந்து பார்த்து பழகியவர்கள் என்று நன்கு அவளுக்குப் புரிந்தாலும், அவர்கள் எல்லாம் யதுவீர் வீட்டாட்கள் என்றதும் கொஞ்சம் பதற்றமாகவே தான் அறையை விட்டு வெளியே போனாள்..

“என்ன இவ்வளோ சீக்கிரம் ரெடியாகிட்ட…” என்று ஷீலு கிண்டலடிக்க, பேச்சும் அப்படியே வளர்ந்தது..

நேரம் செல்ல செல்ல யதுவீர் வருவானோ வருவானோ என்றே அவள் மனம் எதிர்பார்க்க, கடைசிவரைக்கும் வரவேயில்லை.. மனதில் லேசாய் ஏமாற்றம் பரவ, அது அவளது முகத்திலும் தெரிய,

“யது மேட்ச் டைம் அப்போ யார்கிட்டயும் பேசவும் மாட்டான் எங்கயும் போகவும் மாட்டான்…” என்று பூனம் இயல்பாய் சொல்வது போல் சொல்ல, அவர் தனக்குத் தான் சொல்கிறார் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது லக்க்ஷனாவிற்கு.

ஒருவழியாய் அனைவரும் கிளம்புகையில், ஷீலு மட்டும் கொஞ்சம் பின் தாங்கி “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நைட் டென்னோ கிளாக் ஸ்போர்ட்ஸ் சேனல் பாரு..” என்று அவள் காதில் சொல்லிவிட்டு சென்றாள்..

‘சர்ப்ரைஸா…’ என்று யோசித்தவளுக்கு, அன்றைய தினம் அவனுக்கு மேட்ச் இருப்பது தெரிய,

‘என்ன செய்ய போறான்…’ என்று  இரவு பத்து மணிக்காக காத்திருந்தாள்..

இத்தனை நேரம் வேகமாய் சென்ற பொழுதுகள் எல்லாம், இப்போ மெல்ல மெல்ல அடிப் பிரத்ச்சணம் செய்வது போல் சென்றுகொண்டு இருக்க, பத்து மணி வருவதற்குள் பத்து ஆண்டுகள் முடிவது போல் இருந்தது அவளுக்கு..

அனைவரும் சென்றதுமே, வேகமாய் டிவி முன் வந்து அமர்ந்தவள், ஸ்போர்ட்ஸ் சேனல் வைக்க, நிர்மலோ “கபடி மேட்சுக்கு இன்னும்  டைம் இருக்குக்கா..” என்று சொல்லியபடி அவளிடம் இருந்து ரிமோட்டை வாங்க,

“ம்ம்ச் போடா.. இத்தனை நாள் நீ பார்த்தப்போ நான் சொன்னேனா…” என்று சண்டையிட,

“ம்மா இவளைப் பாரும்மா…” என்று நிர்மல் கத்த, மீராவோ “என்ன லக்க்ஷி நீ அப்பவும் இதெல்லாம் பார்க்க மாட்டியே.. பின்ன என்ன..??” என்று தெரிந்தே வம்பிழுத்தார்.

“ம்மா…” என்று பல்லைக் கடித்து முறைக்க, நவநீதனோ “நீ பாரு லக்க்ஷி…” என்று சொல்லி அங்கேயே அமர்ந்துகொள்ள, அதுவும் அவளுக்கு சங்கடமாய் இருந்தது..

“ப்பா.. இந்நேரம் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வர்றேன்னு மாடில நடப்பீங்கல்ல.. போங்க போய் நடந்துட்டு வாங்க…” என்று அவரையும் விரட்ட,  மீராவிற்கோ மகளது மனநிலை நன்றாகவே புரிந்தது..

“அவளைக் கொஞ்சம் ப்ரீயா விடுங்க..” என்று கணவருக்கு சைகை செய்தவர், “நிர்மல் நீ ரூம்ல இருக்க டிவில பாரு…” என்று மகனை அனுப்ப, லக்க்ஷனாவோ இதெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.

கடிகாரத்தையும், டிவியையும் மாறி மாறி பார்த்தபடி இருக்க, நேரலை லைவ் தொடங்கியது.. முதல்முறையாக யதுவீர் ஆடும் ஆட்டம் பார்க்கிறாள்.. இதுநாள் வரைக்கும் பார்த்ததில்லை.. இதோ இதே சென்னையில்தான் மற்றொரு இடத்தில் மேட்ச் நடக்கிறது..

சொல்லப்போனால் இவள் நேரிலேயே சென்றிருக்கலாம்.. ஆசை இருந்தது தான்.. ஆனால் அவனாக எதுவும் பேசாத பொழுது தானாக எப்படிக் கேட்பது என்று சங்கடமாய் இருந்தது..

ஒரு மணி நேரம் ஆட்டம்.. யப்பா.. அங்கே நேரடியாய் பார்ப்பவர்களுக்கு எத்தனை பதற்றம் இருக்குமோ, இல்லை களத்தில் நின்று ஆடுபவர்களுக்கு எத்தனை டென்சன் இருக்குமோ அதற்கெலாம் மேலாய் லக்க்ஷனாவிற்கு இருந்தது..

ஒவ்வொரு முறை யதுவீர் ரெய்ட் சென்று பாயின்ட் எடுக்கையில் எல்லாம் அத்தனை ஆர்பரித்தாள். எதிரணியினரிடம் சிலநேரம் அவன் சிக்க நேர்கையில், ‘ஐயோ…’ என்று கவலையுற்றாள்.

முதல்முறை என்பதால் அவளுக்கு இதெல்லாம் புதிதாய் இருந்தது.. இத்தனை விழுகிறானே வலிக்காதா என்று தோன்றியது..

‘இதென்ன இப்படி பிடிச்சு தள்ளுறான்…’ என்று அவளுக்கு அவளே கேட்டுகொண்டாள்..

இறுதி சுற்று.. அதுவும் மேட்ச் முடிய இன்னும் ஒரு நொடியே இருக்க, ‘வின் பண்ணிடனும் வின் பண்ணிடனும்…’ என்று லக்க்ஷனா கண்களை மூடி கடவுளை வேண்டியபடி இருக்க,

அங்கே டிவியில் கேட்ட சத்தத்தில் என்னவென்று கண்களைத் திறந்துப் பார்த்தால், யதுவீரின் அணி வென்றிருந்தது.. அவனது டீம் மேட்கள் அனைவரும் அவனை கட்டியணைத்து, வாழ்த்து சொல்ல, சுற்றி இருந்த கூட்டம் எல்லாம்  ‘யதுவீர்… யதுவீர்…’ என்று கோஷம் எழுப்ப, அங்கே அவனுக்கு எப்படி இருந்ததோ, இங்கே இவளுக்கு புல்லரித்தது..

‘ஒருவேளை இது தான் சர்ப்ரைஸோ…’ என்று எண்ணியவளின் கண்கள் கடிகாரத்தைப் பார்க்க, அதுவோ பத்தாக இன்னும் ஐந்து நிமிடம் என்று காட்டியது..

‘இன்னும் பத்து நிமிசமா…’ என்று லக்க்ஷனா காத்திருக்க, அடுத்து கபடி மேட்ச்சில் பரிசுகள் வழங்கினர்.. அதனை தொடர்ந்து அப்படியே ப்ரெஸ் மீட்..

யதுவீர் அவனது கோச்சோடு அமர்ந்திருக்க, முதல் நான்கைந்து கேள்விகள் கபடியைப் பற்றியதாய் இருக்க, அடுத்த கேள்வி லக்க்ஷனாவைப் பற்றியதாய் இருந்தது..

லக்க்ஷனா என்ற பெயர் பொதுவாய் வெளிய வரவில்லை.. அவளது புகைப்படம் மட்டுமே வந்திருக்க, கேள்வி கேட்டவருக்கு அவளது பெயர் தெரியவில்லை..

‘சார்… நெட்ல வந்தது எல்லாம் உண்மையா.. சென்னை பொண்ணதான் நீங்க மேரேஜ் பண்ண போறீங்களா???’ என்று கேள்வி கேட்க, யதுவீர் முகத்தில் சட்டென்று ஒரு மென்னகை.. கண்ணில் ஒரு சின்ன பளிச்சிடல்..

‘யா.. ஷி இஸ் லக்க்ஷனா நவநீதன்.. மை லவ்…’ என்று அவன் கூலாக சொல்ல, இங்க லக்க்ஷனாவிற்கோ உடலும் மனதும் ஜில்லென்று ஆகிவிட்டது..

கண்களை இமைக்கக் கூட தோன்றாமல், லேசாக வாய் பிளந்து லக்க்ஷனா அப்படியே அமர்ந்திருக்க, அங்கே யதுவீரிடம் அடுத்த கேள்வி கேட்கப்பட்டது…

‘உங்க லவ் லைப் பத்தி சொல்லுங்களேன்….’ என்று கேட்டதுமே யதுவீரின் முகத்தில் இருந்த சின்ன புன்னகை மறைந்து ‘ஹா ஹா..’ என்றே சிரித்துவிட்டான்..

“சாரி…” என்று கைகளை உயர்த்தியவன், “லவ் லைவ்… ஹ்ம்ம்.. என்ன சொல்ல.. இன்னும் ஸ்டார்ட் ஆகவேயில்ல..  இப்போவரைக்கும் நாங்க ப்ரொபோஸ் பண்ணிக்கவேயில்லை.. ஆனா என்கேஜ்மென்ட் டேட் பிக்ஸ் ஆகிடுச்சு..” என்றவன் தேதியை சொல்ல,

‘இப்படி மானத்தை வாங்குறானே…’ என்று நினைத்தது வேறாருமில்லை லக்க்ஷனாவே..

அங்கே ப்ரெஸ் மீட் இடத்திலோ சுற்றிலும் கொஞ்சம் அமைதி.. என்னடா சொல்கிறான் இவன் என்று.. சுற்றிலும் அனைவரின் முகத்தையும் பார்த்த யதுவீர்,

“ஹ்ம்ம் இதை நான் சொல்லணும்னு அவசியமே இல்லை.. பட் சொல்லித்தான் ஆகணும்…. ஐம் எ ஸ்போர்ட்ஸ் பெர்சன்.. சோ நிறைய பேருக்கு என்னை தெரிஞ்சிருக்கும்.. பட் லக்க்ஷனா அப்படியில்ல.. நடந்த இத்தனை இஸ்யூஸ் எங்களுக்கு நல்லவிதமா முடிஞ்சிருந்தாலும், அது நல்ல விசயமில்ல… நெட் இருக்கு.. சோசியல் மீடியால என்னவேணா போஸ்ட் பண்ணலாம் அப்படிங்கிறதுனால நம்ம எதுவேணா பண்ணாலாம்னு மீனிங் இல்ல..

வீ ஆல் பீபில் ஹேவ் சம் பப்ளிக் ரெஸ்பான்ஸ்பிலிட்டி….. எங்களுக்கு நடத்த இந்த பிரச்சனை நாங்க ஹேண்டில் பண்ண விதமே வேற.. பட் இதே போல எல்லார் லைஃப்லயும் நடக்கும்னு சொல்ல முடியாது.. சோ ஒன் கைண்ட் ரெக்வஸ்ட் சோசியல் மீடியால இதுபோல பண்றவங்க, இதேபோல அவங்க பேமிலில இருக்கிறவங்களுக்கு நடந்தா என்னாகும்னு யோசிங்க…” என்று சொல்ல, கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது..

அவன் சொல்வதும் உண்மைதானே, வாய் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசலாம் என்று அர்த்தமில்லையே.. அதுபோலவே இதுவும்.. எதிலுமே நமது சமுக அக்கறையும் பொறுப்பும் சற்று சிந்தித்து செய்தால், ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கம் பின் பற்றினால் நடக்கும் குற்றங்கள் எத்தனையோ குறையுமே..

‘எனி க்வஸ்டீன்ஸ்…’ என்று யதுவீர் சுற்றி பார்வையை செலுத்திக் கேட்க,

“சார்.. இதுவரைக்கும் நீங்க ப்ரொபோஸ் பண்ணதில்லை சொல்றீங்க.. அப்கோர்ஸ் அவங்களும் தான்..  வொய் நாட் யு டேக் திஸ் அஸ் எ சான்ஸ்..??” என்று சற்றே குறும்புக்கார பத்திரிக்கையாளர் கேட்க, யதுவீரின் முகம் கொஞ்சம் செம்மை பூசியது..

‘அட என்னதிது..’ என்று லக்க்ஷனா பார்த்திருக்க, லேசாய் தோளை குலுக்கி சிரித்துக்கொண்ட யதுவீர்,

என்னவோ லக்க்ஷனா அங்கே நேரில் இருப்பது நேருக்கு நேராய் பார்த்தவன், “லக்க்ஷி பேபி.. ஐ லவ் யு…” என்று சொல்ல, சுற்றி கரகோஷமும்  வாழ்த்து ஒலிகளும் காதை பிளக்க,

அங்கே வீட்டிலும் கூட கேட்டது.. லக்க்ஷனா திரும்பிப் பார்க்க, அவளது மொத்த குடும்பமும் அங்கேதான் நின்றிருந்தது..

லக்க்ஷனாவிற்கோ கண்களில் கண்ணீர்.. அவளது மனம் என்ன மாதிரி ஒரு உணர்வை உணர்கிறது என்று அவளால் சொல்லவே முடியவில்லை.. டிவி முன் அமர்ந்திருந்தவள், அப்படியே முகத்தை மூடி அழத் தொடங்கிட,

நவநீதன் பதறி வந்தவர் “லக்க்ஷி என்னடா இது..” என்று சமாதானம் செய்ய முயல,

மீராவோ “விடுங்க கொஞ்சம் அழட்டும்.. அவ மனசுல இருக்கிறது எல்லாம் வெளிய கரைஞ்சு போகட்டும்…” என்று சொல்ல,

லக்க்ஷனா நிமிர்ந்தவள், “ம்மா அவன பாரேன்…” என்று சொல்லி டிவியை காட்ட, அங்கே நேரலை முடிந்திருந்தது..

“ஹா ஹா.. எப்படி லக்க்ஷி யதுவோட சர்ப்ரைஸ்…” என்று மீரா கேட்க,

“அப்.. அப்போ இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா…” என்றாள் வேகமாய் முகத்தை துடைத்து..

“எங்கக்கிட்ட லக்க்ஷனா நேம் சொல்லப்போறேன்னு கேட்டிட்டு தான் யது ப்ரெஸ் மீட் அரேஜ் பண்ணதே…” என்று நவநீதன் சொல்ல,

“ஓ.. அப்போ இருக்கட்டும்.. எல்லாருக்கும் சொல்றான்.. ஊருக்கே மேடை போட்டு சொல்லிட்டான்.. ஆனா என்கிட்ட சொல்லல…” என்று ஒரு குழந்தை பிடிவாதம் லக்க்ஷனா பிடிக்க,

“இதுக்கு நாங்க ஆள் இல்லம்மா… அது உன் பாடு.. யது பாடு.. இப்போ நாங்க தூங்கப் போறோம்..” என்று அனைவரும் கழண்டு விட,

“போங்க போங்க.. இருக்கு அவனுக்கு..” என்று சொல்லியபடி அவளும் அறைக்குள் நுழைந்துகொண்டாள்..

அவனோடு பேசவேண்டும் என்பதுபோய் ‘இரு உன்னை பார்த்துக்கிறேன்..’ என்று சொல்லிக்கொண்டவள், எங்கே அவனே அழைத்துவிடுவானோ என்று அலைபேசியையும் ஆஃப் செய்துவிட்டு படுத்துவிட்டாள்.               

    

                          

                

     

     

 

Advertisement