சந்துரு, தீக்ஷியிடம் பேசிவிட்டு ‘திருமணம் வேண்டாம் என சொல்லவும்’ ரமேஷ்.. மகனை எந்த கேள்வியும் கேட்டக்கவில்லை. சுந்தரனிடம் அழைத்து அப்போதே சொல்லிவிட்டார்.
ஆனால், இரவு ஷிவா.. சந்துருவிற்கு அழைத்தான். புதிய எண். வடிவேலு முன்னமே சொல்லியிருந்தார்.. தன் மகனிடம் ‘அவன் எல்லா நேரத்தில் அழைப்பினை எடுக்கமாட்டான்.. வேலை முடித்து இந்த நேரத்தில் மட்டும்தான் அழைப்பினை ஏற்பான்’ என சொல்லியிருந்தார். அதன்படி பத்து மணிபோல்தான் அழைத்தான் ஷிவா.
சந்துரு அழைப்பினை ஏற்றான்.
ஷிவாவிற்கு, இந்த டீலினை முடித்தே ஆகவேண்டிய நிலை. தீக்ஷியை மற்ற இடத்தில் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள்.. அவளை எப்படி பார்ப்பார்கள், அத்தோடு அன்னையும் சித்தியும்.. பொறுப்பில்லாமல் இருக்க.. அவளை எப்படி வேறு இடத்தில் மணம் பேசுவது. அத்தோடு முக்கியமாக சந்துரு இல்லாமல் சில விஷயங்கள் செய்ய முடியாது எனும் போது.. சந்துருவை தவிர வேறு வழியை நாங்கள் யோசிக்க கூடாது எனும் போது.. ‘கொஞ்சம் அமைதியாக பேசு டா ஷிவா’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டுதான் பேச்சினை ஆரம்பித்தான் ஷிவபாலன்.
ஷிவா தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு ஆரம்பித்தான்.. நேராக விஷயம் சொன்னான் “சந்த்ரகேசர்.. லேகாவின் தம்பி.. என்ன விஷயம்ன்னா.. லேகாவை எனக்கு பிடிச்சிருக்கு. அவளுக்கும் அப்படியே. நீதான்.. உன்னால்தான்..” என சொல்லி அமைதியானான்.
சந்துரு “ஷிவா சர், நீங்க திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.. நான் என்ன செய்ய போறேன்” என்றான்.
ஷிவா “முடியாதே, தீக்ஷிக்கு இப்போதே திருமணம் முடியணுமாம். சந்துரு, எப்படி சொல்றது.. நீங்க எங்களுக்கு முக்கியம், ஐ மீன்.. ஹம்சா அத்தையுடைய பசங்கள் எங்களுக்கு முக்கியம்.. தாத்தா சொல்லிட்டே இருந்தார்.. ஹம்சா அத்தையை நாம கவனிக்கவேயில்லைன்னு.. அத்தோடு எங்களுக்கும் அப்போது சிலவிஷயங்கள் தெரியலை புரியலை. நீங்க ஏன் யோசிக்கிறீங்க.. சின்ன பெண்ணாக இருக்கிறாள்.. எப்படி? எனவா?” என நிறுத்தினான்.
சந்துருவின் அவசர குணம் வெளிப்பட்டு.. சின்ன பெண்ணாக இருந்தாள்.. நான் பொறுப்பெடுக்க மாட்டனா என சட்டென வீம்பும் கோவமும் வர.. “என்ன சொல்லவரீங்க.. பொறுப்பெடுத்துக்க மாட்டேன்னா” என்றான்.
ஷிவா “க்கும்.. இல்ல, அப்புறம் என்ன யோசனைங்க” என்றான்.
சந்துரு அமைதியானான்..
“எனக்கு தீக்ஷிதா நல்ல இடத்தில் திருமணமாகி போகனும். அத்தோடு அது தாத்தாவின் ஆசைப்படி.. அவர்களின் மகள் வீடாக இருக்கணும்.. இதை நீங்க புரிஞ்சிக்கவே இல்லையே ஷேகர். தாத்தாவின் ஆசை.. அதான் இப்படி உங்களையே சுற்றி வரோம்.. அத்தோடு எனக்கு லேகாவை பிடித்துவிட்டது.. தாத்தா ஆசைப்பட்டதால்.. அஹ.. நீயும் அப்படி இருப்பேன்னு இல்லைதான்.. ஆனால், சில சந்தர்ப்பம்.. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவைக்கும்.. அதில் ஒன்னும் தவறிருக்காது.. எப்போதும் பிடித்தததே நடக்கனும்ன்னா.. வாழ்க்கை போர் அடிக்கும்மில்ல.. என்ன இப்போ.. ” என்றான் அமர்த்தலாக.
சந்துரு இத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் இப்போது “க்கும்.. உங்களுக்கு தாத்தாவோட விருப்பத்தை நிறைவேற்றனும் குற்றயுணர்வு இருக்க கூடாது.. அதனால், ஏற்கலாம். ஆனால், எனக்கு என்ன.. பெனிபிட் இருக்க போகுது.. அத்தோடு எனக்கு இப்போது திருமணத்தில் விருப்பமில்லை எனும் போது” என்றான் கேள்வியாக.
ஷிவா, சந்துருவின் வார்த்தைகளை நன்கு உணர்ந்தான்.. இவனிடம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு.. ஆழ்ந்த குரலில் “கண்டிப்பா பெனிபிட் இருக்கு ஷேகர்.. தாத்தா விருப்படி செய்.. கண்டிப்பா இருக்கு ஷேகர்” என்றார்.
சந்துரு இரண்டுநிமிடம் எடுத்துக் கொண்டு “சரி உங்கள் வார்த்தையை நம்புகிறேன். ஏற்பாடு செய்ங்க” என்றான் நல்லவனாக.
ஷிவாவிற்கு, எப்படி இவனிடம் தங்களின் வேலையாகும் என கவலை வந்துவிட்டது. எப்படியோ திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதுவரை நிம்மதி.. பார்த்துக் கொள்ளலாம் எனதான் அந்த நிச்சய விழா.
ஆகிற்கு பத்துநாட்கள். நிச்சிய விழா முடிந்து லேகா மீண்டும் தம்பியிடம் விசாரித்தாள்.. “என்ன டா பேசினார்.. ஷிவா” என, ஆனால், வாய்திறக்கவில்லை சந்துரு. என்னமோ அமைதியாகிவிட்டான். நிறைய யோசனை அவனுள்.. எப்படி என்னுடைய வாழ்வு அமையும்.. லேகாவை உண்மையாகவே ஷிவா விருபுகிறேன் போல.. என நிறைய சோனைகள். அதிகம் யாரிடமும் பேசவில்லை அவன்.
திருமண வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. விரைவில் திருமண தேதி. அத்தோடு, குடும்பத்தில் முதல் திருமணம்.. உறவுகளுக்கு எப்படியோ.. வடிவேல், சுந்தரன்.. என இருவருக்கும் கொண்டாட்டம். அத்தோடு சொத்துகள் எங்கும் போகவில்லை என்பது இன்னமும் பெரிய கொண்டாட்டம். அதனால், எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக செய்ய தொடங்கினர்.
ஷிவா, ஷாப்பிங் பொறுப்பினை எடுத்துக் கொண்டான், ம்.. அன்னையும் சித்தியும் பெரிதாக ஆர்வம் காட்டாததால்.. லேகாவோடு நேரம் செலவழிக்க.. தான் ஷாப்பிங் செய்வதாக ஒப்புக் கொண்டான்.
வசந்தி தன் கணவரோடு, குலதெய்வம் கோவில் பத்திரிக்கை வைக்க என சென்றார் கடமையாக. ஆனால், லதா எதற்கும் அசையவில்லை.. இயல்புபோல வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்படியே ஷிவாவும் லேகாவும் சென்றுதான் பட்டு எடுத்தனர்.. ரமேஷ் ஏதும் சொல்லவில்லை.. ‘நிச்சயம் என முடிவாகிவிட்டது.. சென்றுவரட்டும்.. என் பெண் ஒன்றும் தெரியாதவள் அல்ல.. பார்த்துக் கொள்வாள்’ என அனுப்பி வைத்தார்.
லேகா, சந்துருவின் அப்பார்ட்மெண்டில் வந்து முதல்நாள் இரவே தங்கிக் கொண்டாள். நாளை, ஷிவாவும்.. லேகாவும் காஞ்சிபுரம் செல்வதாக ஏற்பாடு. சந்துருவை “நீ வா டா” என மீண்டும் அழைத்தாள், பெண்.
சந்துரு “அவளே வரலை.. அத்தோட, எனக்கு மீட்டிங் இருக்கு.. நீ போயிட்டு வா” என்றான்.
லேகா “நான் பேசுறேன் டா.. அவள் வந்தால் நீ வரீயா” என்றாள்.
சந்துரு துணிகளை எடுத்துக் கொண்டே “போ.. போய் தூங்கு, காலையில் சீக்கிரம் போகனும் லேகு..” என்றான் ஏதுமில்லா குரலில்.
லேகாவிற்கு ஏனோ அமைதியாய் இருக்கும் சந்துருவை பிடிக்கவில்லை.
தீக்ஷிக்கு அழைத்தால் அப்போதே.. முன்பே வரவில்லை என்றால் புடவை எடுக்க, தீக்ஷி. இப்போது சந்துருவின் பேச்சு செயல் எல்லாம் எதோ போலிருக்க.. மீண்டும் ஒருமுறை அழைத்தாள் தீக்ஷிக்கு.
லேகா, போன் செய்து.. “ஏன் தீக்ஷி,” என்றபோது.. சிரித்துக் கொண்டே குழந்தையென “அக்கா.. சாரி, அண்ணி.. அப்பா அண்ணிதான் கூப்பிடணும்ன்னு சொல்லியிருக்காங்க” என தொடங்கியவள் “எனக்கு சாரி கட்டவே தெரியாது அண்ணி. அத்தோடு, நீங்க எடுத்தால் ஒகே அண்ணி.. எனக்கு அதை பற்றி எதுவுமே தெரியாது.. ப்ளீஸ், நீங்களே வாங்கிடுங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்.. நாளைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு..” என்றாள் உதடுகளால் கெஞ்சி.. கண்களை சுருக்கிக் கொண்டு.
சந்துரு.. பால்கனியில் துணி காயவைத்துக் கொண்டிருந்தான். தீக்ஷியின் பேச்சுகள் அவன் காதில் விழுந்தது.. ஒன்றுமில்லா பாவம் அவனிடம். இப்போது லேகா தன்னை பார்ப்பதும் புரிகிறது. ஆனால், அவனால் தெளிவாக ஏதும் யோசிக்க முடியவில்லை. அமைதியாக வேலையை பார்த்தான்.
லேகாவின் கண்களுக்கு குழந்தையாகவே தெரிந்தாள் தீக்ஷி. சந்துருவை பார்த்தாள்.. தம்பி எப்படி கையாளுவான்.. இவளை என. சந்துருவின் சதா சிந்திக்கும் தன்மை.. திருத்தமாக வம்பிழுக்கும் பேச்சு.. என இருப்பவன் எப்படி இவளை கையாளுவான்.. சரியாக இவளிடம் கோவம் கொண்டு கத்த முடியுமா.. உரிமையாய் வம்பிழுக்க முடியுமா.. முகமே குழ்ந்தை என்றிருக்க.. பேச்சு அதை உறுதி செய்ய.. எப்படி அவன் சமாளிப்பான்.. என லேகாவிற்கு தன் உடனுடனேயே பிறந்தவனை பார்த்து.. சின்ன கவலை வந்தது.
சந்துரு, இன்னமும் அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையில் இருந்தான். இந்த அமைதி லேகாவை பயமுறுத்துகிறது. ஷிவா எதோ சொல்லியிருக்கிறான்.. புரிகிறது. தம்பிக்காக யோசித்த லேகா இப்போது முரணாக யோசித்தாள்.. ஷிவா நினைவு வந்ததும். ‘ஏன் தீக்ஷியை நெருங்கவில்லை.. பேசி பழகிக் கொள்ளவில்லை’ என தம்பிமேல் கேள்வி எப்பினாள் தன்னுள். ‘அழகாகத்தானே இருக்கிறாள்.. குழந்தையென பேசுகிறாள் என்ன பிரச்சனை..’ என யோசனை. காதலின் பிரச்சனையே.. காதலிக்கும் போது.. மற்றவரின் குறைகள் தெரியாததுதானே. அதுதான் இப்போது லேகாவிற்கு.
காலையில் ஷிவா, சந்துருவின் வீடு வந்தான். லேகா, மேலே வரும்படி அழைத்தாள்..
ஷிவா, மேலே வர.. லேகா வரவேற்றாள். சந்துரு கிளம்பிக் கொண்டிருந்தான்.. அறையிலிருந்து வெளியே வரவில்லை.
ஷிவா, சந்துருவின் வீட்டினை காண ஆவலோடு வந்தான். அவனிடம் ஏதாவது ஒரு குறையை காண வேண்டும் எனதான் வந்தான் இங்கு. சந்துரு, சரியாக இருப்பது போன்று எண்ணம் ஷிவாவிற்கு. லேகாவை பிடித்திருக்கிறது எனும் போதும் சரி.. இப்போது தீஷியை திருமணம் செய்ய ஒத்துக் கொண்ட போதும் சரி.. என்னமோ சரியாக பேசி.. தன் காரியத்தை நடத்திக் கொண்டதாக எண்ணம்.
அதனால், அவனிடம் இருக்கும் புத்திசாலி தனத்தினை.. ஆராய எண்ணம். அந்த நோக்கோடுதான் உள்ளே வந்தான்.
பால்கனியோடு கூடிய வீடு.. கண்களால் வீட்டை அளவிட்டபடி உள்ளே வந்தான் ஷிவா. 2BHA, பொருட்கள் எல்லாம் அதததன் இடத்தில் நேர்த்தியாக இருந்தது.
ஷிவா, முறுவலோடு.. தன்னவளை பார்த்தன்.. அழகான பர்ப்பிள் நிற.. சல்வார்.. ப்ரீ ஹேர்.. அன்று தான் வாங்கிக் கொடுத்த.. மூக்குத்தி. சின்ன கிரௌன் மாடலில்.. மேலே ஒரு சின்ன வைரம் வைத்தது போலிருக்கும் அந்த மூக்குத்தி அணிந்துக் கொண்டு.. புன்னகையோடு நின்றவளை பார்த்தவன் எழுந்து வந்து.. “ஹேய்.. நைஸ்..” என சொல்லி அந்த மூக்குத்தியை வாருடினான், தன் கூர் நாசியினால்.
லேகா “ஷ்.. சந்துரு” என்றாள்.
ஷிவா.. “ம்..” என சொல்லி தள்ளி வந்து, அமர்ந்தான்.
லேகா “சாப்பிடலாமா எடுத்து வைக்கிறேன்” என சொல்லி உள்ளே சென்றாள்..
ஷிவாவின் கண்கள் மீண்டும் வீட்டினை ஆராய்ந்தது.. அவனை பொறுத்தவரை.. இது சின்னதான வீடு. ஆனால், அவனின் ரசனையான கண்களுக்கு நேர்த்தியான வீடாக தெரிந்தது. சோபா.. டைன்னிங் டேபிள்.. அழகான க்ர்ட்டன்ஸ்.. சின்னதான பூஜையறை.. என ஒரு பொறுப்பான குடும்பஸ்த்தன் கையாளும் வீடாகவே இருந்தது. ஷிவா சந்துருவை மனதுள் மெச்சினான். ஆனால், மூளை.. ‘ரொம்ப சரியா இருக்கானே.. எப்படி சமாளிக்கிறது’ என தனக்குள் திட்டிக் கொண்டது.
சந்துரு, இப்போது அறையிலிருந்து வெளியே வந்தான்.. நேரே டைன்னிங் அறை சென்றான்.
லேகா சின்ன குரலில் “மாமாவை பார்த்தியா” என்றாள்.
சந்துரு “என்ன டி மாமா.. நிச்சயம் ஆகிடுச்சா என்ன” என்றான் ஏனோ எரிச்சலாக.
லேகா, அதிர்ந்து பார்க்க.. சந்துரு தணிந்தான்.
ஹாலுக்கு சென்று “வாங்க ஷிவா” என்றான் அவன் எதிரில் நின்று.
லேகா “சாப்பிடலாம் வாங்க” என்றாள் பொதுவாக.
இரு ஆண்களும் அமர்ந்தனர். லேகா உணவு பரிமாறினாள்.
ஷிவா மலர்ந்த முகத்தோடு.. அமர்ந்து உணவினை ருசித்தான்.. கண்கள் தன்னவளை மெச்சுதலாக மொய்த்தது.
லேகா தடுமாறினாள்.
ஷிவா.. “வா லேகா, நீயும் உட்கார்” என சொல்லி, தானே தட்டம் எடுத்து வைத்து பரிமாறினான்.
சந்துரு அவசரமாக உண்டுவிட்டு.. எழுந்து சென்றான்.
இருவரும் பேசிக் கொண்டே உண்டனர்.
சந்துரு “லேகா, நான் கிளம்புகிறேன்.. நீ போய்ட்டு கால் பண்ணு..” என்றான், தயாராகி நின்றான்.
ஷிவா “சந்துரு.. ஒரு காம்ப்ளிமென்ட்.. வீடு நல்லா இருக்கு..” என்றான்.
இருவரும் கிளம்பினர். ஷிவாவிற்கு, அலுவலக நேரம் தொடங்கியதும் அழைப்புகள் வந்துக் கொண்டே இருந்தது.
சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர் காஞ்சிபுரம். இவள் பார்த்து பார்த்து தீக்ஷி எடுக்க.. அவனோ, இவளுக்கு என புடவையை ஆராய்ந்து ஆராய்ந்து எடுத்தான்.
லேகா ‘முதலில் தீக்ஷிக்கு பாருங்க.. ஷிவா’ என சொல்லி சொல்லி அவனை கவனிக்க வைத்தாள். என்னமோ லேகாவின் மனதை ஷிவாவின் செய்கை இரண்டாமுறை தைத்தது. ‘ஷிவா ஏன் இப்படி இருக்கிறான்’ என.
எல்லோருக்கும் தேவையான உடுப்புகள் வாங்கித்தான் திரும்பினர்.
இரவு தாமதமாகும் என்பதால் உண்டுதான் வீடு வந்து சேர்த்தான் லேகாவினை, ஷிவா.
ஷிவா லேகா இருவரும் நிறைவாக இருந்தனர். ஓவ்வொரு வேலையையும் சேர்ந்தே செய்தனர். லேகா, தீக்ஷியின் உடைகள்.. அலங்காரம்.. என பொறுப்பெடுத்துக் கொண்டாள்.
தீக்ஷியின் வீட்டிற்கு நேரே சென்று.. அவளின் அளவு.. அவளின் விருப்பம் எல்லாம் கேட்டுக் கொண்டாள்.
ஷிவா, கார் ஒன்றினை டிரைவரோடு லேகாவிற்கு என ஏற்பாடு செய்திருந்தான். தந்தை வேலை விஷயமாக சென்றிடுவார்.. பத்திரிக்கை அழைப்புகள் எல்லாம்.. அவளும், அவளின் அத்தையும்தான் சென்று வைத்தனர். அதனால், கார் ஏற்பாடு செய்திருந்தான். இப்படி தேவையான எல்லாம் செய்து கொடுத்து அவளை காக்க தொடங்கிவிட்டான் ஷிவா.
விதியோ.. இல்லை, மனிதர்களின் மதியோ.. ஏற்பாடான.. சந்துரு தீக்ஷியின் திருமணம் இனிதாகவே நடந்தது.
பெரிய மண்டபத்தில்.. VVS இல்ல திருமணவிழா.. என பேனர். எங்கு பார்த்தாலும் உறவுகள்.. நண்பர்கள்.. தொழில்முறை நண்பர்கள்.. தங்களிடம் பணியாற்றுபவர்கள்.. என மனிதர்கள் நிறைந்த சூழல் அங்கே. முதல்நாள் இரவு நெடுநேரம் ஆனது.. வரவேற்பு முடிவதற்கு.
மறுநாள் காலையில் திருமணம். அட்சதைகளும்.. மலர்களும்.. வாழ்த்துகளும் அவர்கள்மேல் வந்து ஆசீர்வாத மழையாய் பொழிய சந்த்ரசேகர் தீக்ஷிதாவை.. தன் மனைவ்யாக்கிக் கொண்டான்.
ஆனால், இந்த மழை அவர்களை குளிர்விக்கவில்லை.. இது மழை.. ஆசீர்வாதம் என கூட உணரவில்லை அவர்கள். கடமை என நின்றனர். புத்தம் புது தம்பதிகள்.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எந்த உணர்வுகளும் இல்லாமல் நின்றனர்.
சந்துரு.. தீக்ஷியின் மென்பாதம் தொட்டு மெட்டி அணிவித்தான்.. லேகா, கண்கலங்க நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் உணர்வுகள் எல்லாம் கண்ணீர் வழியாக கரையை கடந்துக் கொண்டிருந்தது. அக்னியை வலம்வந்து.. மீண்டும் அமர்ந்து எதோ நடைமுறைகள் செய்துக் கொண்டிருந்தனர், தம்பதி.
லேகா, இப்போது தம்பியின் அருகே வந்து அமர்ந்தாள்.. “பட்ல்லு.. விஷ் யூ.. ஹாப்பி ஹாப்பி மேரீட் லைப் டா..” என்றாள் கண்ணீரோடு.
சந்துரு எந்த உணர்வும் இல்லாதவன்.. லேகுவை பார்த்ததும் புன்னகையோடு “ஹேய்.. அல்லுடா.. க்கும்.. அழாத.. ஹப்பியா இரு மோட்டு” என்றான்.
தீக்ஷி இவர்கள் பக்கம் பார்க்கலாமா வேண்டாமா என யோசனையோடு அமர்ந்திருந்தாள். அவளின் தந்தை வந்து அவளின் பக்கம் நின்றார். வேறு யாரும் அவளை அன்று போல.. நெருங்கவில்லை.
ஷிவாவிற்கு, விருந்தினர்களை உபசரிக்கவே நேரம் சரியாக இருந்தது. வடிவேலு வசந்தி.. பெண்ணை தாரைவார்த்து கொடுத்து.. முறைகள் எல்லாம் செய்துவிட்டு.. கீழே வந்துவிட்டனர்.
இப்போது, விருந்தினர்கள் எல்லோரும்.. மேடையை நோக்கி சென்றனர். மணமக்களின் அருகே.. பணியாளர்கள் நின்றுக் கொண்டு.. வந்த விருந்தினர்களை அறிமுகம் செய்தனர் தம்பதிக்கு. அவர்களோடு நின்று புகைப்படம் எடுக்க வைத்தனர். இப்படி எல்லாவற்றுக்கும் பணியாட்கள்.. அவர்களின் நெருங்கிய பணியாட்கள்தான் இருந்தனர். சந்துரு.. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அந்த ஷனத்தில் அவன் பொருந்தி.. சந்தோஷம் கொள்ளவில்லை.
விருந்து அமர்களப்பட்டது. திருமணவிழா இனிதாக நடந்தது.
மணமக்கள்.. இரவுதான் சித்தூர் வந்தனர்.
ஷிவா, வீட்டினை அலங்கரிக்க ஏற்பாடு செய்திருந்தான். அப்படியே உறவுகளுக்கு தங்குவதற்கும் ஏற்பாடும் செய்திருந்தான். எல்லா வேலைகளும் பார்த்துக் கொண்டான் ஷிவா. சந்துருவின் வீடு.. ஷிவாவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. எவர் கண்களுக்கும் எந்த குறையும் தெரியாதபடி.. எல்லா ஏற்பாடுகளும் செய்தான் ஷிவா.
தீக்ஷிக்குதான் இப்போது பயமானது. இரவு நெருங்க நெருங்க பெண்ணவளின் சின்ன கண்கள் முழுவதும் தண்ணீர் தளும்பி நிற்கிறது.. அழ கூடாது என கண்கள் மேலே மேலே பார்த்து ஊள்ளிழுக்கிறாள் பெண். பாவம் முடியவில்லை, காலையிலிருந்து நின்று.. சொன்னதை செய்து.. என அப்படியே சோர்ந்துதான் இருக்கிறாள். இப்போது முதலிரவு எனவும்.. இதுநாள் வரை இல்லாத ஒருபயம். ஏதும் கனவுகள் இல்லாதவள் அல்ல.. ஆனால், சந்துரு அந்த கனவுகளில் வரதாதால்.. ஒரு பயம்.
சிலருக்கு, உறவுகள் வேண்டும்.. கடமைக்காக. சிலருக்கு, அந்த உறவுகள் அர்த்தமாக வேண்டும்.. அன்பாக நிறைந்து வேண்டும். இதில் சந்துரு முதல்ரகம்.. தீக்ஷி இரண்டாம் ரகம். அது அவர்களுக்கு புரியவில்லை.. இனி புரியும்.