Advertisement

இப்போது சேரன் வரவும் அவரை கவனிக்கச் சென்றுவிட்டார் தேவகி. 

டேபிள்மேல் இருந்த பால் தம்ளரை பார்த்தவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குடிக்க வாய்க்கு எடுத்துச் செல்லவும் அபி அவனிடம்,”எங்களுக்கும் கொஞ்சம் தரீயா அரவிந்த் எங்களுக்கு பாதாம் மில்க் ரொம்ப பிடிக்கும்!” என்றாள்.

 அதற்கு அவன்,” ஒரு டிராப் கூட கிடைக்காது” என சொல்லி விட்டு வேகமாய் குடிக்க ஆரம்பித்தான்.

ஒரு வாய் கூட வைத்திருக்க மாட்டான்.

 ஆனால்,”அதற்குள் மீண்டும் அவன் வாஷ்பேஷன் நோக்கி ஓட வேண்டியதாயிற்று”. 

கீழே வந்து கொண்டிருந்த கவி அவன் ஓடுவதை பார்த்ததும் சிரித்துக்கொண்டே தன் தங்கைகளிடம் வந்தாள்.

அவள் காதில் நடந்தவற்றை அபி கூறவும் சிரித்துவிட்டு இருந்தாலும் இது “ரொம்ப ஓவர் டி” என்றாள் கவி. 

அதற்கு அக்சு அதெல்லாம் ஒன்னும் ஓவர் இல்லை.

” உன்னோட மூடக் கெடுத்தாங்க இல்ல, அதுக்குத்தான் இந்த பனிஷ்மென்ட்” என்றாள்.

 அதற்கு கவி,” ஐயோ நான் சொன்னது அம்மாவை தான்!”.

 “இவனை எதுக்கு இப்படி பண்ணீங்க?” என்று கேட்கவும்,” நான் தானே இளிச்சவாயன்” அதான் வேற ஒன்னும் இல்லை என்றான் அரவிந்த். 

பின்பு அபியின் பக்கம் திரும்பி,” சரி, கவிக்கு உன்னோட மாமா ஏதாவது கஷ்டம் கொடுத்தா என்ன செய்வதாக உத்தேசம்?” என்றான். 

அதற்கு அவள்,” அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது” என்றாள். 

“ரொம்ப சப்போர்ட் தான் உன்னோட அத்தானுக்கு” என்று கூறிக்கொண்டே கவியை பார்க்கவும் அவள் தரையில் காலின் கட்டை விரலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். 

அவன் தன் பாக்கெட்டிலிருந்து “2 டெய்ரி மில்க் சாக்லெட்டை” கொடுக்க இருவரும் அவன் முகத்தை உற்றுப் பார்த்தனர்.

 அவன்,” ஓகே! வேணாம்னா சரி” என சொல்லிவிட்டு பிரிப்பது போல் பாவ்லா செய்யவும் இருவரும் ஆளுக்கு ஒன்றை பிடுங்கிக் கொண்டனர். 

அவன் கவியிடம்,” மாடியில் சிறிது நேரம் பேசி விட்டு வரலாம் வா” என்று அழைத்துக் கொண்டு சென்றான்.

 அவன் மாடியில் உள்ள ஊஞ்சலில் அவளை அமரச் செய்துவிட்டு ஊஞ்சலை ஆட்டி கொண்டிருந்தான்.

 சிறிது நேரம் கழித்து அவளாகவே அரவிந்த் என்றதும் அவள் முன்னால் வந்து நின்றான். 

அவள் தலையைக் கவிழ்ந்துகொண்டே அவர் ஹரிகேஷ் போனவாரம்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது என்று ஒருவாறு திணறி கூறி முடித்தாள். 

அவன் அவளிடம் அவளின் கைகளை பிடித்து “கங்கிராட்ஸ் கவி அப்புறம் உன் ஆளு எப்படி? என்னோட ரேஞ்சுக்கு வருவாங்களா உன்னோட அவர்?”  என்றான். 

அவ்வளவுதான் அவன் முதுகில் இரண்டு சாத்திவிட்டு உன்னை விட அவர் ரொம்ப “ஹேண்ட்சம் ஸ்மார்ட் கியூட் சைலன்ட்” என்று கூறிக்கொண்டே போனவளை நிறுத்தி,” சரி எங்கெல்லாம் ஊர்சுத்தினீங்க?” என்று கேட்டான். 

அதற்கு அவள் எங்கும் போகவில்லை என்று கூறவும் விசித்திரமாய் அவளைப் பார்த்தான் அரவிந்த். 

பிறகு,” சரி நாளை நாம் இருவரும் உன் அவரை சந்தித்து வருவதாக சொல்லிவிடு”

“வா, இப்போது போய் தூங்க செல்லலாம்”  என்றான்.

 அவன் அவளுக்கு  குட் நைட்  சொல்லிவிட்டு கீழே போய் விட்டான்.

 அவள் தான் யோசித்துக்கொண்டே நின்றிருந்தாள். 

இதுவரை அவனிடம் அவள் போனில் பேசியது இல்லை.

 அப்புறம் எப்படி அவனை வெளியில் அழைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

 அதே சமயம் அவளின் மொபைலை எடுத்துக்கொண்டு அபி ஓடிவந்தாள். 

அக்கா உனக்கு போன் கால் என்று கூறி அவளிடம் கொடுத்தாள் அபி.

 அவள்,” ஹலோ” என்றதும் சிறு இடைவெளி விட்டு,” நான் ஹரிகேஷ் பேசுகிறேன்” என்றான் அவன். 

“அவள் சொல்லுங்க” என்று கூறவும் ,$நாளை உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?”  என்று கேட்டான் ஹரி. 

அதற்கு அவள் இல்லை என்று கூறவும்,” சரி ஓகே! நாளைக்கு நீ  அசென்டாஸ் வந்துவிடு” 

“டைமிங் நீயே சொல்லு”  என்றவனிடம் 8.30 என்றாள் கவி. 

அவன் சரி நாளைக்கு பார்க்கலாம் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அபி போனை வாங்கி “ஹலோ அத்தான் எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா இதெல்லாம் ரொம்ப அநியாயம்” என்றாள்.

 அவனும் சிரித்துக் கொண்டே பேசலாமே ஆனா அதுக்கு முன்னாடி உங்க அக்கா பர்மிஷன்  கொடுக்கணுமே என்றான். 

சரி “பொழச்சி போங்க” என சொல்லிவிட்டு அக்கா உங்க கிட்ட பேசணுமாம் அத்தான் என்று கூறி கவியிடம் கொடுத்துவிட்டு அவள்  கன்னத்தையும் கிள்ள அவள்,”ஹா” என்று கத்திவிட்டாள். 

அவ்வளவுதான்!!!

“என்ன ஆச்சு கவி?”  என்று ஹரி கேட்கவும் உதட்டை கடித்துக்கொண்டு ஒன்றும் இல்லை என்றாள். 

அவனும் சரி நீ சொல்ல வந்ததை சொல்லு என்று கேட்கவும் அது  என்னோட பிரண்டு உங்களை பார்த்து பேசணுமாம் என்றாள் கவி. 

அதற்கு அவன் ,”சரி நாளைக்கு நீ வரும்போது அவங்களையும் கூட்டி கொண்டு வா” என்று கூறவும் “தேங்க்ஸ்” என்று கூறினாள் கவி.

 “ஓகே பாய்” என்று கூறி போனை வைத்துவிட்டான் ஹரி. 

அவனை பொறுத்தவரை எப்படியாவது கவியிடம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான் அவன். 

ஆனால் விதியின் எண்ணம் வேறாய் இருக்க நம்மால் என்ன செய்ய முடியும்!

அடுத்த நாள் காலை சரியாய் 8.25 க்கு அரவிந்தும் கவிநிலவும் அந்த ஹோட்டலின் உள்ளே அமர்ந்திருந்தனர். 

வெளியிலிருந்து பார்த்தால் அரவிந்தின் முதுகுப்புறம் மட்டுமே தெரியும் படி அவன் அமர்ந்திருந்தான். 

8.31 ஆக ஒரு நொடி இருக்கும் போது புயல் போல் உள்ளே வந்தான் ஹரி. 

அவன் அரவிந்தை பார்த்ததும் மகிழ்ச்சியாய்,” டேய்! மச்சான்” என்று கைகுலுக்கவும் கவிக்கு இன்ப அதிர்ச்சி அதேபோல்தான் அரவிந்த்துக்கும் இருந்தது. 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவள் பதுமையாய் அமர்ந்திருந்தாள். 

அரவிந்த அவனிடம் “ஹரி நீ ரொம்ப லக்கிடா” இல்லனா இப்படி ஒரு அடாவடி பொண்ணு உனக்கு கிடைப்பாளா? என்று கேட்கவும் ஹரி தன்னையும் மீறி சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தான். 

அவள் நாணத்துடன் தலை கவிழவும் அவள் அவனுக்கு  அதிசயமாய் தெரிந்தாள். 

அரவிந்த் வேண்டுமென்றே போன் பேசுவது போல் நழுவி விடவும் கவி உள்ளுக்குள் படபடப்பாய் உணர்ந்தாள். 

அவன் அமைதியாய் அவளையே பார்க்கவும் அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பது போல் திரும்பிக் கொண்டே இருந்தாள். 

ப்போதே அவள் மன டைரியில் எழுதத் தொடங்கிவிட்டாள்.

உன்னைப் பார்க்கையில்

 ஊமையாகி போகும்

 என் மனதை

 எப்படி தெரிவிப்பேன் உனக்கு?

 தென்றலும் தூது செல்ல மறுக்கிறதே

 தேடியதில் கிடைத்த பதில் 

நீயாய் என்னை அறிவாய் என்று 

ஆனால் 

எப்போது ???

அதுவரை அமைதி காக்குமா? என் மனம்” 

அவன் சிறிது நேரம் கழித்து,” உனக்கு என்னை பிடித்திருக்கிறதா?” என்று கேட்கவும் அதிர்ந்து அவனின் கண்களை சந்தித்த அவளின் பார்வையில் “இன்னுமா உனக்குப் புரியவில்லை”? என்ற கேள்வி இருக்கவும் அவன் அமைதியாய் நான் வேறு ஒருத்தியை காதலித்தவன் என்றாலும் பிடிக்குமா? என்று கேட்டான். 

அவ்வளவுதான் அவள் கண்கள் கலங்கிவிட்டன. 

தன்னை சரிப்படுத்திக் கொண்டு,” இல்லை எனக்கு பிடிக்காது” என்றாள். 

ஆனால்,”அவள் அவனை காதலிக்கவில்லை அப்படி இருந்தாலும் இதுதான் உன் முடிவா” என்றான். 

அவள் சற்று யோசித்துவிட்டு,” ஓர் இடத்தில் நாம் ஒரு செடியை நட்டு வளர்க்கிறோம் ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த செடியை எடுத்து விட்டு வேறொரு செடியை நடுகிறோம் என்றால், இப்போது நீங்கள் அந்த இடத்தை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும் ?” என்று கேட்டாள். 

அவன் சிரித்துக்கொண்டே,” அழகான கேள்விதான்” என்று கூறிவிட்டு,” அந்த செடி வளரும் வரை தான் பழைய செடியின் நினைவு உன் மனதில் இருக்கும் அது வளர வளர அந்தப் பழைய செடியின் நினைவுகள் அழிந்து விடும்”  என்றான். 

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க,” அவன் தன் லவ் ஸ்டோரியை கூறினான்”.

அவள் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

பின்பு அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

அரவிந்த் கையில் மூன்று ஐஸ் க்ரீம்கள்  உடன் வரவும் அவசரமாய் தன் கண்களை துடைத்துக் கொண்டாள் கவி. 

அவன் இருவரிடமும் கொடுத்துவிட்டு,” என்ன ரொமான்ஸ்  எல்லாம் முடிஞ்சதா?” என்று ஹரியைப் பார்த்து கேட்கவும் அவன் சிரித்தான். 

அவ்வளவுதான் இப்போது கவி அவனை முறைத்தாள். 

மூவரும் பேசிக்கொண்டே வெளிவர அரவிந்த் அவர்களை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து வந்தான். 

அவனிடம் மறுக்க முடியாமல் கவியும் உள்ளுக்குள் அழுது கொண்டே வெளியில் சுனாமியை அடக்கிய கடல் போல் தன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். 

அரவிந்தின் வீட்டில் அவர்களுக்கு அமர்க்களமான வரவேற்பு. 

அனைவரும் விருந்து வேலையில் மூழ்கி விட இருவரும் தனிமையில் இருந்தனர். 

அவன் பார்வையை சந்திக்க முடியாமல் எழுந்து தோட்டத்திற்குள் புகுந்தாள். 

அரவிந்திற்கு பறவைகள் என்றால் விருப்பம் என்பதால் அவர்கள் தோட்டத்தில் ஆங்காங்கே கூண்டுகளில் கிளிகள் புறாக்கள் முயல்கள் வாத்து கோழி நாய் பூனை பசு கன்று ஆடு என அந்த இடமே தனி சொர்க்கமாக இருந்தது. 

அவள் பசுவை நோக்கி சென்று மாட்டு கொட்டிலை திறக்கவும் ம்மா…. என்று கூறி தன் வரவேற்பை அளித்தது. 

பசுவின் அருகில் படுத்திருந்த அவள் மேல் இடித்துக்கொண்டே இருக்க அதை மெல்ல வருடி கொடுத்து விட்டு வெளியில் வந்த அவளுக்கு மனம் லேசானது போன்ற உணர்வு. 

அருகில் இருந்த மர ஊஞ்சலில் அமர்ந்து கண்களை மூடி அவள் அப்படியே உறங்கிவிட்டாள். 

ரேவதி கவியை தேடவும் நான் அழைத்து வருகிறேன் ஆன்டி என்று கூறி விட்டு அவளைத் தேடிக்கொண்டு வந்தவன் கண்களில் ஊஞ்சலில் அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்த அவளைக் கண்டதும்,” அந்த காலத்து ளவரசிகள் நந்தவனத்தில் இருப்பது போல் தோன்றியது”. 

ஆனால் அடுத்த நிமிடமே,

என்னால் தானே உனக்கு நீ உன்னையே வருத்திக் கொள்கிறாய்

 என்னை மன்னித்து விடு என் இனியவளே என்று மானசீகமாய் மன்னிப்பு கேட்டுவிட்டு,

 நீ என்னுடையவள் 

உன்னை பிரிந்து

 நான் இருப்பது 

என்பது 

இனிமேல் சாத்தியமில்லை

 என்று உணரும்

 இந்த நிமிடம் முதல்

 உன்னை உனக்காகவே நேசிக்கிறேன்

 என்று தனக்குள் கூறிக் கொண்டு அவளின் அருகில் சென்று,” கவி என அழைத்தான்“.

அவனது குரல் ஓசை கேட்டதனாலோ என்னவோ அவளுக்கு உடனே விழிப்பு வந்து விட்டது. 

அவள் அமைதியாய் கண்ணை கசக்கிக் கொண்டு அவனை பார்க்கவும் ,” அத்தை சாப்பிட கூப்பிட்டாங்க வா போகலாம்” என்றான்.

அவள் முன்னே போகவும் இவன் பின்னே போய்க்கொண்டிருந்த அவன் வீட்டை நெருங்கும் சமயத்தில் அவளின் அருகில் நடந்தான்.

அங்கு அனைவரும் அவர்களுக்காக காத்திருக்கவும் ஹரி அவர்களிடம் தோட்டம் அருமையாய் இருந்தது. 

அதான் சுத்தி பாக்க  லேட் ஆயிடுச்சு என்று கூறியவனைத் தன் பார்வையால் கட்டுப்படுத்த முயன்றாள் கவி 

ஆனால் அவன் அதைக் கண்டு கொள்பவனாகவே தெரியவில்லை. 

அதற்கு அரவிந்த் ஹரியிடம்  நானாவது பரவாயில்லை 

உங்க ஆள் வீட்டை சுற்றி ஒரே பூச்செடிகளை நட்டு வச்சிருக்காங்க அதுக்கு என்ன சொல்றீங்க என்றவனிடம் “தேவதை வாழும் வீடு அல்லவா” என்று கூறவும் கவிக்கு புரை ஏறி விட்டது. 

ரேவதி அவளை அழைத்துச் சென்று ஏதோ செய்யவும் தான் அவளுக்கு சரியானது. 

அதுவரை ஹரி சாப்பாட்டைப் பிசைந்து கொண்டு அவள் போன திசையை பார்க்க அரவிந்த் தன் தந்தையை பார்த்து சிரித்தான். 

சிறிது நேரம் கழித்து அவளும் வந்து விட அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு அவர்களை வழி அனுப்பினர்.

அவனே அவளை அவள் வீட்டில் விட்டு விடுவதாக கூறியதால் யாரும் அவர்களுடன் வரவில்லை. 

அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு அவனின் மாமியார் மாமனாரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான் ஹரி. 

ஆனால் கவி மட்டும் திண்ணையில் அமர்ந்து கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். 

கவி உள்ளே வந்து படு என்ற அன்னையின் குரல் கேட்டு நிமிர்ந்தவள் ,”அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு வரேன்”

.”நீங்க போய் படுங்க”  என்றாள் கெஞ்சலாக. 

சரி என எதுவும் பேசாமல் சேரனும் தன் மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார். 

வீட்டை சுற்றிலும் அவள் நட்டு வைத்திருந்த மலர்களின் நறுமணத்தில் தன் நினைவுகளில் மூழ்கிப் போனாள் அவள். 

அவளுக்கு அதிகமாய் காதல் மீது நம்பிக்கை கிடையாது தான். 

ஆனால் ,”தன்னுடைய அவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றவள்”. 

என்ன தான் தன்னை தன் குடும்பத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாலும் முடியாமல் போகவே தனக்குத்தானே யோசித்த அவளுக்கு அப்போதுதான் அந்த பதில் கிடைத்தது.

Advertisement