Advertisement

ஹரி,”தன் அம்மாவிடம் தன் நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் அம்மா அதற்குள் நீங்கள் உங்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு கோவில் மண்டபத்தில் வெயிட் பண்ணுங்க” என்று கூறினான்.

 அணு,” அவனை தரிசனம் பண்ணி விட்டு போடா” என்று கூறவும் அவன்,” அணுவை இரண்டு முறை சுற்றி வந்து விட்டு போயிட்டு வரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் அவனை “போடா போக்கிரி” என்று பொய்யாக முறைக்க அவன் “பாய் மாம்” என்று கூறி கிளம்பி விட்டான். 

அணுகா சென்று தரிசனம் செய்து விட்டு வந்து கோவில் மண்டபத்தில் அமர்ந்தாள்.

இங்கு காரை பார்க்கிங்கில் விட்டு விட்டு வருமாறு கவினிடம் கூறிவிட்டு ரேவதி கவியை அழைத்துக்கொண்டு கோவிலின் உள்ளே சென்றார்

அங்கு கவி,” கடவுளிடம் எங்களுக்கு நல்வழியை காட்டு என்று மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தாள்”. 

சிறிது நேரத்தில் கவினும் வந்து விட தாங்கள் கொண்டு வந்திருந்த சர்க்கரை பொங்கலை சாமிக்கு படைத்து விட்டு கவியிடம் பரிமாற கொடுத்தனர். 

அவளும் வாங்கிக்கொண்டு பரிமாற அனைவரும் வந்து வாங்கிக் கொண்டு சென்றனர். 

தன் அம்மாவிடம் விடை பெற்று வந்த ஹரி,” எழிலுக்கு கால் பண்ண அவள்  நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று பதில் வந்தது”. 

அவன் அருகில் இருந்த ரெஸ்டாரன்ட் ஒன்றின் முன் தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான்.

ஒரு நிமிடம் தன் கண்களை மூடி திறந்தவன் பின்னால் யாரோ சிரிக்கும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தான். 

அதேசமயம் அவனும் திரும்ப இருவரின் கண்களும் மகிழ்ச்சியில் விரிந்தன.  

ஹரி “டேய் அரவிந்த்” என்று கத்த அவனும் “டேய் ஹரி” என்று கத்திவிட்டு இருவரும் அணைத்துக் கொண்டனர்.

அதன்பிறகு அரவிந்த்,” அவனிடம் என்னடா நீ மட்டும் வந்திருக்க? ஆண்டி அங்கிள் எங்கேடா?” என்றான். 

பதிலுக்கு ,”அவனை ஹரி பார்த்த பார்வையில் நீ மட்டும் என்னவாம்!” என்ற கேள்வி இருக்க அரவிந்த் ,”அவனிடம் அம்மாவும் அப்பாவும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய் இருக்காங்க” 

“நான் யர்டா இருக்குனு போகல”

அதுக்குள்ள,” இந்த தடிமாடுங்க கால் பண்ணி இங்க வர சொல்லிட்டாங்க “என்று கூறிவிட்டு தன் நண்பர்களை ஹரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். 

ஹரி,” அவனிடம் எங்க வீட்டிலேயும் அந்தக் கோயிலுக்கு விஜயம் செய்து இருக்காங்க” என்றான். 

அப்போ,” சரி வாடா! போய் பார்க்கலாம்” 

“என்ன தான் கூத்து பண்ணிட்டு இருக்காங்க” என்று அரவிந்த் சொல்ல இருவரும் கிளம்பி கோயிலுக்கு வந்தனர்.

 அவர்கள் உள்ளே வந்து அனைவரையும் தேடவும் கவி காலியான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வரவும் சரியாய் இருந்தது. 

அவள் தொலைவில் வரும் போதே பார்த்து விட்ட அரவிந்த்,” அவளிடம் சென்று எப்போதிலிருந்து இந்த பிசினஸ் செய்ய ஆரம்பித்தாய்? கவி” என்று கேட்டான். 

அவள் அதற்கு பதிலேதும் சொல்லாமல் முறைக்கவும் அவன் அவளிடம்,” அம்மா எங்கே கவி ?” என்று கேட்க அவள் அதற்கு அழுகு காட்டி விட்டு ஓடி விட்டாள். 

எங்கே இந்த அரவிந்த் போறான் என்று அவனைத் தொடர்ந்து வந்த ஹரி,” கவியை பார்த்ததும் அங்கேயே நின்றுவிட்டான்

“கவியை எப்படி அரவிந்துக்கு தெரியும்?” என்று அவன் மனம் யோசிக்க ஆரம்பித்தது. 

“என்னடா பிடித்து வைத்த பிள்ளையாராட்டாம் நிற்கிற”? என்று அரவிந்த் அவனை உலுக்கியதும் அவனை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு,” யாருடா அவங்க?” என்றான் ஹரி. 

அப்போது அவர்களை கடந்து சில பெண்கள் சென்று கொண்டிருந்தனர். 

அவர்களை பார்த்த  அரவிந்த் ,”எனக்கெப்படி தெரியும்?” என்று கேட்க ஹரி அவனை முறைத்துவிட்டு,” அப்புறம் எப்படிடா இவ்வளவு நேரம் அவ கிட்ட கடலை போட்ட?” என்று கேட்கவும் தான் அவன் கேட்பது கவியை என்பது அவன் நினைவுக்கு வந்தது அரவிந்துக்கு. 

அவன் சிரித்துக்கொண்டே ,”ஆண்டியோட பொண்ணுடா”

ஆனா ,”ரொம்ப சைலன்ட் டைப் “

“சாரி உன்கிட்ட இன்ட்ரோ  கொடுக்கவே மறந்துட்டேன்” 

“இப்ப வாடா நான் அவகிட்ட உன்ன அறிமுகப்படுத்துகிறேன்” என்றவனிடம் 

“இல்லடா இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு தன் அம்மாவை தேடிச் சென்றான் ஹரி. 

அங்கு அவன் கண்ட காட்சியை அவனாலேயே நம்ப முடியவில்லை.

 ஹரியின் குடும்பமும் அரவிந்தின் குடும்பமும் உரையாடிக் கொண்டிருக்க எழில் அவர்களை கடந்து உள்ளே வந்துகொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்ததும் அவன் ஒரு தூணின் பின்னால் நின்று கொண்டான். 

அவள் அவனை கடந்து சென்றதும் அவன் அமைதியாய் அவள் பின்னால் சென்று கொண்டிருந்தான். 

அவள் பிரகாரத்தில் நின்று கடவுளை தரிசிக்கும் பொருட்டு கண்களை மூடிய சமயத்தில் அவன் அவளின் எதிரே நின்று கொண்டிருந்தான். 

அவள் கண்களைத் திறந்ததும் அவன் இப்போது கண்மூடி வணங்குவது போல் நின்று கொண்டிருந்தான். 

அர்ச்சனை தட்டை வாங்கிய எழில் மீண்டும் ஒருமுறை கடவுளை வேண்டிக் கொண்டு செல்ல யத்தனிக்கும் போது  தான் ஹரியை பார்த்தாள் அவள். 

வெளியில் சென்று அவனுக்காக காத்திருக்கவும் இங்கு நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான் ஹரி. 

அவனை பார்த்ததும் “ஹலோ ஹரி சார்” என்றாள் எழில் 

அவனும் “ஹாய் எழில்” என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்த குளக்கரையில் அமர்ந்தனர். 

“இன்னும் சில நிமிடங்களில் தன் வாழ்வில் வானிலை மாறப்போகிறது!” என்பதை அறியாதவனாய் அவன் மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தான் ஹரி. 

ப்போது பார்த்து அவன் மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்த்தவன் தன் அம்மா அழைப்பதைப் பார்த்து அவசரமாய்,” ஹலோ அம்மா” என்றான் 

மறுமுனையில் ,”எங்கேடா கண்ணா இருக்க?” என்று அவர் கேட்கவும் ,”சாரிமா இங்க ஒரு பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் போனதே தெரியல”

” நீங்க எங்க இருக்கீங்க?’ என்றான். 

அதற்கு அவர்,” நான் வீட்டுக்கு வந்துட்டேன் கண்ணா”

” அரவிந்த் என்ன வீட்ல விட்டுட்டு போனான்”. 

“நீ வந்ததும் அவனுக்கு கால் பண்ண சொன்னான்

” சரி வீட்டுக்கு சீக்கிரம் வந்துரு” என்று கூறி போனை வைத்தார். 

அவன் போனை வைத்துவிட்டு ,”அவளிடம் சாரி முக்கியமான கால்” என்றான். 

அதற்கு அவள் “இட்ஸ் ஓகே” என்று சொல்லிவிட்டு அவனிடம் ,”இன்று  உங்களிடம் ஒன்றை சொல்ல வேண்டுமென்றாள்”. 

“அவன் மனதில் சாரல் அடித்தது”

 அவன் கால்கள் வானில் சிறகுகள் இன்றி பறந்தன.

 மனமும் சீக்கிரம் சொல் அதற்காகத்தானே காத்திருக்கிறேன் என்றது.

 அவன் சிரித்துக்கொண்டே,” சொல் “என்றான் ஆவலோடு.

 அவளும் கொஞ்சம் நாணம் கலந்த சிரிப்புடன்,” எனக்கு எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது” என்றாள். 

இவ்வளவு நேரமும் சந்தோஷத்தில் துடித்துக் கொண்டிருந்த அவன் இதயம் இப்போது பூமியைத் தாங்குவது போல் பாரமானது. 

அவன் முகத்தில் குடிகொண்டிருந்த அனைத்து உணர்வுகளும் துடைத்துவிட்டு மரம்போல் அவன் அமர்ந்திருந்தான். 

அவளே தொடர்ந்து பேசினாள்.

“எனக்கு அவரைப் பிடிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது”

 ஆனால் அவர்,”என்னை மட்டுமே அவருக்கு பிடிக்கும்” என்று கூறும் போது “என்னையும் அறியாமல் என் இதயம் சந்தோஷப்பட்டதை என்னால் மறுக்க முடியவில்லை”.

 அவர் என் வீட்டில் வந்து பேசுவதற்கு முன்னே ஏற்கனவே என்னிடம் அவர் விருப்பத்தை கூறியிருந்ததால் என் சம்மதத்தை அவரிடம் தெரிவித்து விட்டேன். 

அதற்கப்புறம் சொல்லவே வேண்டாம். 

அனைவரும்  சேர்ந்து திருமண வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டனர் என்றாள் அவள். 

அவன் “வாழ்த்துக்கள்” என்றான் வராத புன்சிரிப்புடன். 

ஆனால் ஒரு விஷயம் ஹரி 

“நாம நேசிப்பதை விட 

மற்றவர்களால் நேசிக்கப்படுவது

 என்பது

 மிகவும் அபூர்வமானது 

அதே சமயம்

 இன்பம் ஆனதும் கூட”. 

அதில் கஷ்டங்களும் நிறைந்து தான் இருக்கும் 

ஆனால் அது அவர்களை வலுப்படுத்துமே தவிர பலவீனமாக்காது என்று அவள்  கூறவும் அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்து விட்டு,” டைமாச்சு வா கிளம்பலாம்” என்றான். 

அவள் அவனிடம் ,”ஒரு நண்பர் என்ற முறையில் நீங்கள் கண்டிப்பாய் எங்கள் திருமணத்திற்கு வர வேண்டும்”

“நானே உங்கள் வீட்டுக்கு நேரில் வந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அழைக்கிறேன்” என்றவளிடம் சிறு புன்னகையுடன் தலையசைத்தான் அவன்.

 பின்பு இருவரும் கிளம்பிவிட்டனர். 

வீட்டிற்கு வந்தவன் நேராய் தன் அறைக்குள் சென்று தன்னிடமிருந்த எழிலின் போட்டோவை எடுத்து கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு படுத்தவன் தான் இருந்த மன உளைச்சலில் அப்படியே தூங்கிவிட்டான். 

அனைவரும் வீட்டிற்கு வந்ததும்  அரவிந்த் அவர்களிடம் ,”அப்பா! கேஷ் வந்திருந்தான்”

 ஆனா,” உங்க கிட்ட கூட்டிட்டு வரர்துக்குள்ள வேற வேலையா போயிட்டான்” என்றவனை இடைமறித்து,” அவனை தவிர மத்தவங்க கிட்ட பேசிட்டு தான் வரோம் கண்ணா” என்றார் ரேவதி. 

இப்போது கவி அவனிடம் “ஹலோ சார் கேஷ் ஸ்வாமி தரிசனம்” அப்புறமா கிடைக்காதா என்ன? என்று கேட்டவளிடம்,” நீ என்னிடம் நன்றாக வாங்கிக் கொள்வாய் கவி”

 “அமைதியாய் போய்விடு” என்று அவன் கோபமாய் கூறவும் கவின்,” அவனிடம் இல்லனா மட்டும் அப்படியே அவளைப் புகழ்ந்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பியா காமெடி பண்ணாம வேற வேலைய பாரு” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே சேரன் வீட்டிற்குள் நுழைந்தார். 

“அவரைப் பார்த்ததும் ஓடிச்சென்று அப்பா என்று கட்டிக்கொண்டாள் கவி”. 

அவளை அணைத்துக் கொண்டு,” கவி ஏண்டா சோகமாய் தெரிகிறாய்?” என்றார் சேரன். 

“இப்போது தான் கோவிலில் இருந்து வந்தோம் அதாம்பா” என்றாள் அவள் அவசரமாக.

 பின்பு,” எப்போது பா ஊரிலிருந்து வந்தீர்கள்? என்று கேட்க,” மதியமே வந்து விட்டோம். உனக்கு கால் பண்ணா எடுக்கல”

“அதான் ஏதோ முக்கியமான வேலையில  இருக்கியோனு உன்னை டிஸ்டர்ப் பண்ணல”. 

“ஒருவேள நீ இங்க இருக்கலாம் என்று வந்தேன்” என்றார் சேரன். 

ரேவதி அவரை,” வாங்க அண்ணா!”

” என்ன உங்க அப்பா பொண்ணு  உரையாடல் முடிந்ததா?” என்று கேட்கவும் சிரித்துக்கொண்டே ,”முடிந்தது மா”

 சரி, “எங்கே என் செல்லம்” என்று தேட,” அவரின் பின்னால் இருந்து கண்களை மூடினான்” அரவிந்த். 

அவன் கைகளை வைத்தே கண்டுபிடித்த சேரன் வேண்டுமென்றே,” டேய்! கவின் என்னடா சின்னப்புள்ளை தனமா!” என்று அவர் கூறியதும்,”போங்க அங்கிள்!” என்று கூறிவிட்டு அரவிந்த் கைகளை எடுக்கவும் சிரித்துக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டார்.

 கவி அவரிடம்,”சரிப்பா நீங்கள் பேசிட்டு வாங்க” 

“நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்றவளிடம்,”நானும் வரேன் கவி” என்று அரவிந்த் கூறவும் “நீ எதுக்கு டா லூசு மாதிரி” என்றவளை மடக்கி,” எனக்கு ஒரு வேலை இருக்கிறது கவி பேபி” என்றான் அரவிந்த்.

“சரி வந்து தொலைடா”என்று கவி கூறவும் இருவரும் புறப்பட்டு சென்றனர். 

அவர்கள் சென்றதும்  ரேவதி மற்றும் கவினை அமரச் சொல்லி அவர்களிடம்,”கவி  நிச்சயதார்த்தம் பற்றி கூறினார் சேரன்”.

 முதலில் ரேவதி கோபித்துக் கொண்டாலும் பிறகு,” மாப்பிள்ளை யார்?” என்று கேட்டார். 

அதற்கு ,”ஹரிகேஷ் பேரு, மும்பையில வொர்க் பண்ணிட்டு இருந்தாராம்” 

இப்ப சென்னைக்கு மாற்றிகிட்டு வந்திருக்கிறார். 

அப்பா அம்மா பேரு கூட அணுகா கனிஷ் ரொம்ப அவசரமா நடந்திடுச்சி

 அதாம்மா உங்க கிட்ட கூட சொல்ல முடியலை என்று சேரன் கூறவும் கவின் அவரிடம்,” மாப்பிள்ளை பற்றி உங்களுக்கு ஏதேனும் டவுட் இருந்தா  காண்டாக்ட் ரேவதி கவின் அரவிந்த்” என்றார்.

“டேய்! என்னடா சொல்ற?” என்று சேரன் கேட்க,” அதற்கு ரேவதி எங்களுக்கு ஹரியை தெரியும்” 

“அரவிந்த் பிரண்டு தான் நல்ல பையனும் கூட” என்றார். 

பின்பு சேரன் அவர்களிடம் ,”நாங்க கேட்டதுக்கு கவி ஓகே சொல்லிட்டா இருந்தாலும் நீங்களும் பேசிப் பாருங்க” என்றவரிடம் ,”நாங்க பார்த்துக்குறோம்” என்றனர் இருவரும். 

சரி எனக் கூறிவிட்டு இரவு உணவையும் முடித்து கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினார் சேரன்.

 அங்கு அவரது வீட்டில் ஒரே அரட்டையும் கேலியுமாக இருந்தது.

 வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அரவிந்த் அவனது வேலை பற்றியும் அங்குள்ள பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே வந்தான். 

அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்ததும் தேவகி கவியிடம்,” எங்கேயாவது போகிறதா இருந்தா சொல்லிட்டு போக மாட்டியா?” என்று கண்டித்து விட்டு உள்ளே அனுப்பினார். 

பின்பு அவர் அரவிந்தின் பக்கம் திரும்பி,” என்னடா!  இப்படி  இளச்சி  போயிருக்க?”

” உன்னோட அம்மாவுக்கு இதவிட வேற என்னடா வேலை?”

சரி,” நீ கொஞ்ச நேரம் உட்காரு” என்று கூறி விட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

 மாடியில் உள்ள  தன் அறைக்குச் சென்றவளை பார்த்த அபியும் ஆக்ஷீவும் “என்னக்கா டல்லா இருக்க” என்றனர். 

அதற்கு அவள்,” கீழே போய்  பாருங்கள் தெரியும்” என்றாள்.

” ஏய்! அக்ஷீ என்னவாடி இருக்கும்?”  என்று அபி கேட்க,”எனக்கு மட்டும் என்னடி தெரியும் வா கீழ போய் பார்க்கலாம்” என்றாள் அக்ஷீ.

இருவரும் கீழே வரவும் அங்கு டிவி பார்த்துக்கொண்டிருந்த அரவிந்த் அவர்களைப் பார்த்து “ஹலோ சுட்டீஸ்” என்றான் 

அதற்கு இருவரும் ” ஹாய் அங்கிள்!  என்ன வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் சௌக்கியமா”? என்று கேட்கவும் “ஏய் அறுந்த வாலுங்களா ஒழுங்கா நில்லுங்க, இல்லனா கண்டிப்பா அடி விழும்” என்று கூறிக்கொண்டே அவர்களை துரத்த இருவரும் அவனுக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரத்திற்குப் பின் அவன் ஓட முடியாமல் நிற்கவும் மீண்டும் இருவரும் “என்ன அங்கிள் வயசாயிடுச்சா”? என்று கேட்டதுதான் அவன் ஒரே அடியாக தாவியதால் அக்ஷீவைப் பிடித்துவிட்டான்.

 அவள் காதை திருகிக்கொண்டே உங்க 2 பேர்கிட்டேயும் மாட்டிக்கிட்டு எந்த 2 பேர் கஷ்டப்பட போறாங்களோ? அந்தோ பரிதாபம்!!! என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே கரப்பான்பூச்சி ஒன்றை அவன் சட்டையினுள் போட்டுவிட்டாள் அபி. 

அவ்வளவுதான் அவன் அக்சுவை விட்டுவிட்டு “ராப் டான்ஸ்” ஆடத் தொடங்கி விட்டான். 

அவனுக்காக பாதாம் பால் எடுத்து வந்த தேவகி அவனைப் பார்த்துவிட்டு,” என்னடா டான்ஸ் இது? இதத்தான் மும்பையில் கத்துகிட்டியா?”  என்று கேட்கவும் அபியும் அக்ஷீவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அவன் ரெஸ்ட் ரூமிற்க்கு  ஓடவும் அவர்களை பார்த்து,” என்னடி ஆச்சு?” என்று கேட்டார் தேவகி. 

அக்சு அவன் போன திசையையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க,” அபி பால் டம்ளரை எடுத்து பாதி குடித்துவிட்டு மீதி அக்ஷீவிடம் கொடுத்தாள்”

 இருவரும் குடித்து விட்டு காலி டம்ளரை மைதா தண்ணீர் பால் பவுடர் மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் பண்ணி வைத்து விட்டு மேலே மட்டும் குங்கும பூவை தூவி வைத்துவிட்டனர். 

அவன் வெளியே வந்ததும்,” என்னடா ஆச்சு உனக்கு?” என்று தேவகி கேட்டதும்  சும்மா “டான்ஸ் பிராக்டிஸ்” ஆன்ட்டி என்றான் அவன். 

இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் உட்கார்ந்து இருப்பது தெரியவும் அவன் அவர்களை கண்களாலேயே முறைத்தான்

Advertisement