Advertisement

அவள் 1:
 அதிகாலை விடியல் என்று சொல்ல ஆசை தான். ஆனால் என்ன விடிந்து சூரியனே காலை உணவை முடித்து இருக்கும் நேரமாகவும் இருக்கலாம். 
கடிகார முள்ளோ மணி ஏழு என்று கத்திக்கொண்டிருக்க சாவகாசமாய் எழுந்தமர்த்தாள் அவள். காற்று பதானிக்கியை அனைத்தவள் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். 
அவளும் சீக்கிரம் எழுந்து உதவ வேண்டும் என்ற எண்ணம் தான் ஆனால் உடலோ ஒத்துழைக்க மறுத்தது. உத்யோகம் ஒருபுறம் என்றால் அவள் ஆசை கனவு மறுபுறம். இரவுகளில் நீடிக்கும் நேரம் காலைவேளையை விழுங்கிவிடுகிறது.  அங்கே அவள் தாய் சமயலறையில் பரபரப்பாக சுற்றி சுழன்று வேலை செய்து கொண்டிருக்க என்ன சமையல் என்று நோட்டம் விட்டவள் சிறிது நேரம் அம்மாவிடம் செல்லம் கொஞ்சி விட்டு தன் காலைகடமைகளை முடித்துவிட்டு உத்யோகத்திற்கு ஏற்றவாறு உடையணிந்து தன் முகத்திற்க்கு சாயம் பூச ஆரமித்தாள். 
 அவள் அம்மாவிற்கு தான் ஏக வருத்தம் அரைத்த மஞ்சள் போன்ற சருமத்தில் கண்டதையும் பூசிக்கொண்டு திரிகிறாளே என்று. அவர்களுக்கு என்ன தெரியும் அலம்பிய முகத்துடன் வயதுப்பெண் வெளியே சென்றால் என்னென்ன கிண்டல்கள் தொடருகிறதென?
மேக்கப் செய்யாத பெண்கள் அபூர்வம் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் பொய் பூச்சும் அரைக்கிலோ மாவும் முகத்தில் இருந்தால் பிடிக்காது என்று சுற்றும் அனைவரும் இயர்கையாய் இருக்கும் எதுவும் ரசிப்பதில்லை. ஹே அதோ பாரு பருமுஞ்சி பார்வதி இவ முடியை பாரேன் எலிவால் கூட கொஞ்சம் தடியா இருக்கும்போல. இதுபோன்று ஏகவசனத்தில் கிண்டல் என்று பெயர் சூட்டி அடுத்தவர் மனதை புண்படுத்தி சந்தோஷம் கொள்ளும் மக்களே இங்கு அதிகம் என்று? தன் வேலையில் கவனமாய் இருந்தவள் ஜன்னல் வழி பின்வீட்டு ஆண் ஒருவன் உற்று உற்று நோக்கவே உக்கிரமானாள். 
அவன் எண்ணமோ அரைமணி நேரமா மேக்கப் போட நிற்கிறாளே என்று. அது அவன் முகத்தில் பிரதிபலித்து இருந்தாள் அசௌகர்யமாய் உணர்ந்து விலகிருப்பாளோ என்னமோ ஆனால் அவன் கண்கள் கள்ளத்தனத்தை பிரதிபலிக்க விடாமல் இவள் முறைக்க ஆரமித்தாள். அதில் அவன் தான் முகத்தை திருப்ப வேண்டியதாய் இருந்தது. காலையில் வெறும் பூஸ்ட்டை குடித்துவிட்டு அம்மா கட்டிக்கொடுத்த உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு தன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினாள்.
வழியெல்லாம் பெண்ணாகிய நீ என்னை முந்தி செல்கிறாயா என அவளை துரத்திக்கொண்டு வரும் ஆண் மக்களை பார்த்தாள் உதோட்டோரம் உதிர்க்கும் ஏளன சிரிப்புடன் பயணத்தை தொடர்ந்தாள்.
இது தினமும் நடக்கும் விடயம். ஆண்களின் பெண்களுக்கான இன்செக்கியுரிட்டி இதுபோன்ற சிலதில் எளிதில் கண்டறியல்லாம்.
கிளம்பியதே தாமதமாக தான் அடித்துபிடித்து மின்தூக்கியை அடைந்தால் உள்ளே இளித்தபடி ஆவளுடன் வேலை பார்க்கும் ஒருவன். 
“உங்க நம்பர் கிடைக்குமா?”
எந்தவித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் தலையை மட்டும் இடமும் வலமுமாக அழுத்தமாய் ஆட்டினாள்.
“ஒ….என் நம்பர் வேணுமா?”
இம்முறை ஒரு முறைப்புடன் இவள் வாய் திறக்குமுன்
“வேணாம் போயா, அதன?” 
வழிந்துக்கொண்டே அவன் கூற மீண்டும் அந்த ஏளன சிரிப்பு அவள் உதட்டில் வந்து ஒட்டிக்கொண்டது. பிரயாத்தனபட்டு அதை அடக்கியவள் அவள் தளம் வர வேகமாக வெளியேறி அவள் அறைக்குள் சென்று மறைந்தாள். அதுவரை இளித்துக்கொண்டு இருந்த அந்த கோட்டானோ முகத்தை இறுகிக்கொண்டு நல்லவன் வேஷத்தோடு தன் இடம் தேடி சென்றான்.
உள்ளே  ஒரு ஆறேழு பேர் அவர்கள் கள அலுவலர்கள் அமர்ந்து அரட்டையில் ஈடுபட்டு இருந்தனர், அவளிருக்கும் அறையில் தான் விற்பன  மேலாளர் கண்டபடி காது கூசிபோகும் அளவு யாரையோ கிழித்துக்கொண்டு இருந்தார்
‘உள்ளே நுழையும்போதேவா’ ஒருவகை ஆயாசத்துடன் போய் அவள் இருக்கையில் அமர்ந்தாள்.
அவள் வேலை பார்ப்பது ஒரு சிமென்ட் மொத்த விற்பனை மற்றும் சரக்கு லாரிகள் வைத்திருக்கும் தனியார் கம்பனியில் பார்பதற்க்கு சாதாரணமாக இருந்தாலும் இரண்டு பெரிய சிமென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து வெற்றிகரமாக தொழில் செய்து வருகின்றனர். இது இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள். அண்ணன் தம்பி என இருவர் சேர்ந்து நடத்திவரும் வெற்றிகரமான கோடி கணக்கில் லாபம் பார்க்கின்றனர். அதில் அவள் வேலை நிதியுதவியாளர். 
“சாரிம்மா am talking in sluming language, I know but I have no other choice. உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே” அவரே கேள்வி அவரே பதில்…!
உதட்டை இழுத்து சிரிப்பது போல் வைத்தவள் “பரவாயில்லை அது உங்கள் வேலை சார்” என்று கூறிவிட்டு அதற்குமேல் முடியாமல் வெளியேறிவிட்டாள். அவர் சூழ்நிலை அப்படி என்றாலும் ‘way of approach’யே அப்படிதான் என்று அறிந்தவள். மிக சில சமயம் தவிர ஒதுங்கியே இருப்பாள். பத்துமணி போல் அவளின் மேலாளர் வந்தார். மொத்த அலுவலகத்திலேயே சிறிது நம்ப கூடிய தன்மை உடையவர் அவளை பொறுத்தவரை.
பெரிதாக வேலை எதுவும் இல்லை என்றாலும் அந்த நாள் ஒருவழியாக முடிய சோர்ந்து போய் வீடு திரும்பினாள், ஒரே இடத்தில் திரையை வெறித்துக்கொண்டு விடாமல் வரும் தொலைபேசி அழைப்புகளை எடுத்துக்கொண்டு, சற்று அலுப்பான சோர்வு. “people handling” தான் அவள் வேலையில் அதிகம்.
வந்து சிறிது நேரம் அன்றைய நாளை பற்றி தன் தாயிடம் பேசியவள், தொலைகாட்சியில் அவள் அம்மா பார்த்துக்கொண்டு இருந்த நாடங்கங்களை காண முடியாமல் உட்காந்து இருந்தாள்.
அது என்னவோ 
ஒன்று, “ஒரு பெண்ணிற்காக இரண்டு ஆண்கள்”
அல்ல, “ ஒரு ஆணிற்காக இரண்டு பெண்கள்” அடித்துக்கொள்வதை விட வேறு எடுக்க தெரியாதோ என்று வெறுப்பு தான் தோன்றும் அவளுக்கு.
எட்டு மணியாக தோசை வார்க்க சென்றாள். அவள் அப்பாவிற்கு அவள் சுட்டால் தான் பிடிக்கும். பாசம் என்று தனியே ஏதுமில்லை அவளுக்கு அவள் பாட்டியின் பக்குவம் தோசை வார்ப்பதில். அதாவது ருசியாக முறுகலாக கமகமக்கும் தோசைகள் தட்டில் விழுவதில் ஆசை அவள் அப்பாவிற்கு. தோசை கடை முடிய அவள் அம்மா ஒழித்துபோட்ட பாத்திரங்களை தடுக்க தடுக்க அலம்பி வைத்தவள். ஏனோ காலை முதல் இரவு வரை உழைத்துக்கொண்டே இருக்கும் அம்மாவிற்கு அவளாலான உதவி. பின் வந்து கட்டிலில் விழுந்து அன்று தான் நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்த புத்தகத்தில் மூழ்கி போனாள். 
அவள் அம்மா வந்து கத்தும் வரை வைத்த கண் வாங்காமல் படித்துக்கொண்டு இருந்தவள் விளக்கை அணைத்துவிட்டு அடுத்ததாக  கைபேசியில் மூழ்கினாள். 
“கொஞ்சமாவது சீக்கிரம் தூங்கேன்டி, கண்ணுலாம் உள்ள போய் கரு கருனு ஆகி எப்படி வைத்திருக்க பாரு” பக்கத்தில் படுத்தபடி அவள் அம்மா திட்ட அது உரைத்தாலும் தூக்கம் வருவேனா என்று அடம்பிடிப்பதை சொல்ல முடியாமல் “ம்ம்ம்….ம்ம்…” என்று முனகியபடி போர்வைக்குள் சுருண்டால் கைபேசியை விடாமல்.

Advertisement